Advertisement

” சோட்டுவை பெற்றவள் நான் இல்லை!!!!!!!”

தன் காதில் ஒலித்த மனைவியின் வாக்கியம் உண்மை என்று நம்புவதற்கே பிரணாவிற்கு ஒரு முழு நிமிடம் தேவைபட்டது…..

“என்ன சொன்னாய்????????” அவள் மீது கோர்த்திருந்த கைகளை பிரித்தபடி பிரணாவ் அதிர

உதிதாவையும் யுகனையும் விடுத்து

கிட்டதட்ட அதே உச்சக்கட்ட அதிர்வை சுமந்து தான் நின்றிருந்தனர் குடும்பத்தினர்…..

கணவனின் கண்களில் தெரிந்த கண நேர வெறுப்பை கண்டு கொண்டவள்

” சோட்டு என் அக்கா சுமத்ரேயியின் பையன்…. ஆனால் ….. ஆனால் இதை நான் சத்தியமாக வேண்டுமென்றே மறைக்கவில்லை பிரண…..”

தன்னிலை விளக்கம் கூறியவளடத்தில்

” ச்ச்சி!!!!!!!” ஒற்றை அருவருப்பான சொல் உதிர்த்து அவளை அதே இடத்தில் புதைத்து விட்டு திரும்பி சென்றிருந்தான் பிரணாவ்…..

அவளது நிலை அங்குள்ள அனைவருக்குமே பச்சாதாபத்தை ஏற்படுத்த

உதிதா தன் தம்பியிடம் விரைந்தாள்…..

” ப்ளீஸ் தயவுசெய்து இதில் நீ தலையிடாதே உதிக்கா!!!!!” என்று தமக்கையை அமர்த்தியவன்

இனி யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்!!!! ரீதியில் அவசரமாக அந்த

இடத்தினை விட்டு அகன்றிருந்தான்…..

இன்னும் கணவன் பாய்ச்சிய ஈயத்திலிருந்து வெளிவராதவளை யுகன் பிடித்து உலுக்கியபடி

” என்னை பாரு மைத்தி!!!!” என்று கத்த

உதிதா அவள் பங்கிற்கு ” பிரணாவ் பற்றி தெரியுமல்லவா?????

சரியாகிவிடும் மைத்தி !!!!” என்று ஆறுதல் மொழி உதிர்க்கவும்

” பிரணாவ் பற்றி தெரிந்ததால் தான் உதிஅண்ணி அப்படியே பிசைகிறது……

என் பையனும் அங்கு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான்…..

பிரணாவும் இப்படி கைவிட்டுவிட்டால் நாங்கள் எங்கு உதிஅண்ணி போவோம்????

ஒருவேளை என் பையனுக்கு ஏதாவது ஆனால் நானும் அவனோடு…..”

உணர்ச்சியின் பிடியில் தத்தளித்தாள் ……

” என்ன பேசுகிறாய் மைத்தி??????

சோட்டுவிற்கு எதுவும் ஆகாது…..

நான் போய் மாப்புவிடம் பேசி அழைத்து வருகிறேன்…. நான் சொன்னால் கண்டிப்பாக புரிந்து கொள்வான் !!!!”

யுகன் நகர

” வேண்டாம் அண்ணா!!!! இதில் என் தப்பும் இருக்கிறது…. ஆரம்பத்தில் எப்படியோ???????

ஆனால் பிரணாவ் பற்றி தெரிந்தபிறகாவது நான் சொல்லி இருக்க வேண்டும்…….

பிரணாவிடம் இதை பற்றி நீங்கள் பேச கூடாது….

என் விதி படி என்ன எழுதியிருக்கோ அப்படியே நடந்து விட்டு போகட்டும்…..

இத்தனை நாட்கள் எனக்கும் என் பையனுக்கும் ஒரு பாதுகாப்பான அடைக்கலம் கிடைத்ததெனில் அது உங்களால் தான்!!!!!” என்று கையெடுத்து

கும்பிட்டவளின் மன வேதனை

காஞ்சனாவை பலமாக தாக்கியது……..

தாய்ப்பால் கொடுக்கவில்லை என்று ஏசினோமே????

ஒரு வார்த்தை உண்மையை கக்கியிருந்தால் அப்போதே வாயடைத்து போயிருப்பேனே!!!!

அவள் அப்படி திருப்பி கொடுக்காததற்கு காரணம் அவள் அக்கா மகனை தன் மகனாக பாவித்ததால் தானே?????

இவளை விட சிறந்த அன்னை உலகில் உண்டோ???????

இத்தனை நாட்களாக மருமகளாக வந்து பேசட்டுமே என்று கௌரவம் பார்த்தவர் இன்று அவளது நிலை பொறுக்க மாட்டாமல்

” மைத்தி மா இங்கே வாடா!!!!” என்றபடி தன் கைகளை விரிக்க

அன்னைமடி தேடிய மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய்

” அத்த்த்த்த்த்த்த்த்த்தை!!!!!!!!!!!!!!!!!!”

ஓடிச்சென்று அவரை கட்டிபிடித்து

ஓ!!!! வென்று வெடித்து அழலானாள் மைத்ரேயி…..

அவளது அழுகை அங்கிருந்தோர் அனைவரையும் கரைக்க யசோதாவின் கண்களில் தன் மருமகளின் விழிநீருக்கு போட்டியாக கண்ணீர் சுரந்த போதும்

பிரணாவ் தன் பையனாக இல்லாததால் தன்னிடம் மைத்ரேயிக்கு  இப்படி ஒரு பந்தம் இயற்கையாக ஏற்படவில்லையோ?????

என்பது நெருஞ்சி முள்ளாக குத்தியது …..

இனியும் மைத்ரேயி பேசாது போனாலும்

யசோதா அவராக வழிய சென்று பேச தான் போகிறார்….

அஃது அவரது இயல்பு என்பதால் தனக்குள் ஏற்பட்ட வேதனையை அப்படியே குழி தோண்டி புதைத்தும் கொண்டவர்

விம்மி அழுதவளின் தோளை வருடி கொடுக்க தவறவில்லை…..

அப்படி அழுதவள் இடையிடையே காஞ்சனாவிடம் ” நான் … நான் வேண்டுமென்றே மறை… மறைக்கவில்லை அத்தை…..

நாங்கள் நம் வீட்டிற்கு வந்த முதல் நாள்…

உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்கு தெரியும்….

அப்போதே பிரணாவை சோட்டு கையிலேந்தி என் பையன் என்றானா?????

இந்த அங்கீகாரம் என் வயிற்றிலிருந்து  வந்திருந்தால் மட்டும் தான் சோட்டுவிற்கு

நம் வீட்டில்  கிட்டும் என்று எண்ணி விட்டேன் அத்தை……

அந்த பயத்தில் தான் அன்றிரவே உதிஅண்ணிக்கு அழைத்து நானாக கூறும்வரை சோட்டு என் அக்காவின் பையன் என்பதை தெரிவிக்க வேண்டாம் என்றேன் ….

நான் செய்தது தப்பு தான் அத்தை…..” என்று கூற

” இல்லைடாமா நீ செய்தது தப்பே இல்லை …..

உன் இடத்தில் யார் இருந்திருந்தாலும் இதை தான் கூறியிருப்பார்கள்!!!!”

என்றிருந்தார் காஞ்சனா…..

” ஆனால் அத்தை பிரணாவ் கண்டிப்பாக இதற்கு என்னை மன்னிக்க மாட்டான்  !!!”

நின்ற அழுகை மீண்டும் பெருக்கெடுக்க கூறியவளிடத்தில்

” மன்னிக்காமல் எங்கேடா போவான்…..

விரைவில் அவனாக உன்னிடம் வந்து பேசுவான் பார்!!!!” காஞ்சனா மருமகளின் தலைகோதி கூறும் போதே

வெளி வந்த டாக்டர்

” கம்மான் மைத்ரேயி ….. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இப்போதே போன் மேரோ டெஸ்ட் எடுத்து பார்ப்போம்…. யாருடையது மேட்ச் ஆகிறதோ?????

இன்று மாலையே ஆப்பரேஷனிற்கு ஏற்பாடு செய்து விடலாம்”

என்று கூற

” எந்த இடத்தில் டெஸ்ட் எடுப்பார்கள் டாக்டர்?????????” எங்கிருந்தோ குதித்தவனாக வினவியிருந்தான் பிரணாவ்…..

மைத்ரேயி அவளது போன் மேரோ

கண்டிப்பாக சோட்டுவிற்கு மேட்ச் ஆகாது என்று நம்பினாள் ……

காரணம் அவளது ரத்தபிரிவும் சுமித்ரேயி உடையதுமே சமமாக இருக்காத பட்சத்தில்

இது சாத்தியமில்லை என்று அறிவாள்….

வீட்டில் எப்போதும் அக்கா தங்கை இருவரும் இருதுருவங்கள்…..

மைத்ரேயி கொஞ்சம் அடாவடி பஜாரியாக சுற்றினாள் எனில் சுமித்ரேயி எப்போதுமே அமைதி கொடியை தன் தலையில் சுமந்தவாறு திரிவாள்……

தமிழ்வாணன் தன் இருபெண்களிடத்தும் பாகுபாடு காட்டாது தான் வளர்த்தார்….

எவ்வளவிற்கு எவ்வளவு பெரியவளிடம் அமைதியாக உரையாடுவாறோ அதே அளவிற்கு ஈடுகொடுத்து சின்னவளின் சேட்டைகளை ரசித்து அவள் இடும் தோப்புக்கரணம் போன்ற கட்டளைகளை நிறைவேற்றாமல் விட மாட்டார்…….

ஸ்ரீதீப் மைத்ரேயியை பிடித்திருக்கிறது கல்யாணம் செய்து கொடுங்கள் என்று கேட்டது தமிழ்வாணனிற்கு மிகவு‌ம் பிடித்துவிட

பெரியவளை வைத்து கொண்டு சின்னவளுக்கு மணமுடிக்க விரும்பாது தான் ஒரு வருடம் மைத்ரேயியின் படிப்பினை காரணம் காட்டி தள்ளிவைத்தார்…..

அன்றே இளையவளிடம் “நம் வீட்டில் சீக்கிரம் டும்டும்டும் சத்தம் கேட்க போகிறது ரேயி கண்ணா!!!” என்றவர்

 வரன்களை தேட ஆரம்பித்துவிட்டார்…

” நான் வரவில்லை என்றால் என்ன டாடி????

அதுதான் சுமி இருக்கிறாளே உங்கள் பிஸினஸ் வாரிசாக!!!! “

பள்ளி படிப்பை முடிக்கும் முன்னரே மைத்ரேயி திட்டவட்டமாக கூறிவிட்டதால்

தந்தையின் பிஸினஸை பார்க்க தொடங்கியிருந்த சுமித்ரேயி

” மாப்பிள்ளை பார்க்கலாமாடா சுமிகண்ணா?????”

என்று கேட்டதற்கு

” ஒரு சிக்ஸ் மன்த்ஸ் கொடுங்கள் டாடி…. இப்போது தான் படிப்படியாக நம் பிஸினஸை கற்று கொள்கிறேன்….

திருமணம் முடித்த பிறகும் கூட எனக்கு வேலை போட்டு கொடுத்து விடுங்கள் டாடி!!!!!! “

தனது ஆசையை

கோரிக்கையாக தான் முன் வைத்திருந்தாள் சுமித்ரேயி…..

அதற்கு அடுத்த நாள் இரவு தான் ஸ்ரீதீப் ட்ரீட் கொடுத்ததும்…..

பிரதீப் தனயனை பழிவாங்க மைத்ரேயியின் வீட்டிற்கு சென்றதும்….

ட்ரீட்டை முடித்து விட்டு வீடு திரும்பியிருந்த மைத்ரேயி

 அப்போது இருதினங்களுக்கு முன் கல்லூரி மாடியிலிருந்து விழுந்து மருத்துவமனையில் அடிபட்டிருந்தவனுக்கு பி நெகட்டிவ்  ரத்தம் தேவை படுகின்றது என்று போன் வரவும் தந்தையை கூட்டி கொண்டு சென்றுவிட்டாள்…..

அம்மாணவனின் நிலை கொஞ்சம் கிரிட்டிக்கலாக இருக்கிறது என்று கூறவும்

மைத்ரேயி அன்று இரவு மருத்துவமனையிலேயே தங்கி விடுவதாக கூறியதோடு

” சுமி வீட்டில் தனியாக இருப்பாள்…. நீங்கள் கிளம்புங்கள் டாடி !!!” என்றும் வலியுறுத்த

தன் அண்ணனை பற்றி அறிந்து வைத்திருந்த

ஸ்ரீதீப்பும் கூட மருத்துவமனைக்கு வந்ததோடு

” நீங்கள் கிளம்புங்கள் மாமா  ….. நான் மைத்தி கூட இருக்கிறேன்… ” என்று அனுப்பி வைத்தான்….

முழு போதையை ஏற்றி கொண்ட பிரதீப் மைத்ரேயியின் வீட்டை அடைந்ததும் தான் கொண்டு வந்திருந்த எத்தனால் இன்ஹேலரை பயன்படுத்தி சுமித்ரேயியிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டான்….

அந்த பாதிப்பு சுமித்ரேயியை மன ரீதியாக பாதித்துவிடவும் வீட்டிலேயே இருக்க தொடங்கிவிட

தனக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்த அக்காளிற்கு அன்னையாகி போனாள் மைத்ரேயி…..

அவளுள் வளர்ந்த கருவையே ஆறு மாதத்திற்கு பிறகு வயிறு மேடிட்டதும் தான் தெரிந்து கொண்ட மைத்ரேயி

அதன்பிறகு தான் அதற்குண்டான சிகிச்சைகளை மேற்கொள்ள தொடங்கினாள்  …..

அதிக மன அழுத்தத்தால் சுமித்ரேயி உயிர்வாழ பிடிக்காது பாய்சன் சாப்பிட்டுவிட அன்று மதியமே வீடு திரும்பியிருந்த மைத்ரேயி தன் தமக்கையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டாள்  …

ஆனால் அதன்பிறகு கல்லூரிக்கே போகாது தன் தமக்கையை அடை காத்தும் கூட பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலின் பொருட்டு அவளை இழந்து நின்றாள் !!!

இனி தனக்கு எல்லாம் சோட்டு தான் என்று முடிவெடுத்தவள்

அவன் பெற்றவளின் ஆசிபடி அவள் விரும்பிய தந்தை பிஸினஸை வளர்ந்து பெரியவனாகி கைபற்ற வேண்டும் என்று தீர்க்கமாக எண்ணினாள்…..

அப்படிபட்ட மகனிற்கு தன்னுடைய எலும்பு மஜ்ஜை ஒத்து போகாது என்று தெரிந்து உடைந்தவள்

இப்போது பிரணாவ் வந்து டாக்டரிடம் போன் மேரோ டெஸ்டிற்கு சம்மதம் சொல்லவும் அவளுள் ஆயிரம் யாரை பலம் உண்டானது….

பிரணாவிற்கும் சோட்டுவிற்குமான பந்தம் கடவுளின் சித்தம்!!!!

என்று நன்கு அறிந்திருந்தவள் அவனது கண்டிப்பாக பொருந்தும்  என்று உறுதியாக நம்பினாள்   …..

அதன்பொருட்டு கணவனிடம் எதுவும் பேசாமலேயே அவளும் பரிசோதனை மேற்கொள்ள

அடுத்த அரை மணி நேரத்தில் அவளது நம்பிக்கையை சுக்கு நூறாக கிழித்தபடி ரிப்போர்ட்டை அவளது கையில் சேர்த்திருந்தார் மருத்துவர்….

அவள் தொண்டை வரண்டு போக அவளது குரலையும் சேர்த்து பிரணாவ் கத்தியிருந்தான்…..

” இப்போது என்ன டாக்டர் செய்வது ????????” கண்ணீர் தத்தளிக்க தெறித்த அவனது கேள்வியில்

” சொல்வதற்கு கஷ்டமாக தான் இருக்கிறது…. ஒரு வாரத்திற்குள் ஆப்பரேஷன் செய்தாக வேண்டிய நிலை!!!!!

இந்தியாவில் எல்லா இடங்களிலும் குழந்தையின் ரிப்போர்ட்டை அனுப்பி கேட்டு பார்க்கலாம்….

அமெரிக்காவில் மாயோ கிளினிக் எலும்பு மஜ்ஜைக்கு பெயர் போன மருத்துவமனை…..

அங்கும் கூட சொல்லி பார்க்கலாம்!!!!

அமௌண்ட் தான்…..”

” பணம் பற்றி கவலையில்லை டாக்டர்….. எனக்கு என் பையன் வேண்டும்!!!!” கொஞ்சம் சக்தியை திரட்டி மைத்ரேயி பேச ஆரம்பிப்பதற்குள்

பிரணாவ் பறந்திருந்தான்

அமெரிக்காவிற்கு!!!!

தனது மைந்தனுக்காக…..

பிரணாவ் வெளிநாடு சென்ற விசயம் யுகன் மூலமாக குடும்பத்தினருக்கு அறியப்பட

ஐ.சி.யு.வே கதி என்று கிடந்தாள் அன்னையானவள்……

பக்கம் பக்கமாக உறவினர் கூறிய ஆறுதல்கள் அவள் கருத்தில் பதியவில்லை…..

உடையவனின் ‘நான் இருக்கிறேன் அல்லவாடி பஜாரி!!!!!’ என்னும் வாக்கியத்தை தாங்கிய ஒற்றை பார்வை போதுமே அவளை இந்த இக்கட்டான சூழ்நிலையை திடமாக எதிர்கொள்ள!!!!!!

அன்றிரவு ஐசியு கதவினையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் முன் ஒரு தட்டை எடுத்து கொண்டு வந்தார் யசோதா…..

” கொஞ்சமாவது சாப்பிடு மைத்தி….

 உன் பையனை பார்க்க தெம்பு வேண்டாமா?????” யசோதா கூறியதற்கு

” ப்ச் எனக்கு வேண்டாம் ப்ளீஸ்!!!!” என்றவளின் மீது அவருக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு கோபம்?????

” உன் அத்தை தான் இந்த பிளேட்டினை எடுத்து கொண்டு வந்தார்…. நான் தான் வழியில்

 ‘ நீங்கள் சாப்பிடுங்கள் அக்கா … நான் மைத்திக்கு கொண்டு போய் கொடுக்கிறேன் என்று வாங்கி வந்தேன்….

அது தப்பு என்று இப்போது புரிகிறது…

நான் போய் உன் அத்தையிடமே கொடுத்து விடுகிறேன்!!!!!” என்று

எழ

அவரது மடியில் முகம் புதைத்தவள்

” என்னால் முடியவில்லை யசோத்தை…..

என் பையன் இப்படி கிடக்கும் போது என் தொண்டைக்குள் சாப்பாடு இறங்காது… ப்ளீஸ் யசோத்தை!!!!”

அவள் கணவன் குறிப்பிடுவது போல் பெயரோடு உறவையும் சேர்த்து அழைத்தவளையே பிரமிப்பாக பார்த்தவருக்கு

இன்னொரு விசயமும் தெள்ளத்தெளிவாக புரிந்தது….

இந்த அழைப்பு இப்போது திடீரென உண்டான புதிய முயற்சி அல்ல…..

காலம்காலமாக சரளமாக அவள் நாவில் சுருண்டு கிடந்த அழைப்பின் தாக்கம்!!!!!!

அவள் சொன்னதை சட்டை செய்யாமல்

” இப்போது என்னை எப்படி அழைத்தாய்???????”

யசோதா கேட்ட விதத்தில் அவர் மடியிலிருந்து எழுந்தவள்

அவர் முகம் பார்த்து கூறலானாள்…..

” சாரி யசோத்தை…. இத்தனை நாட்களாக மனதுள் கூறியபடியே கூப்பிட்டுவிட்டேன்!!!!

நான் உங்களை அப்படி அழைக்க கூடாதா?????

எனக்கு அந்த உரிமை இல்லையா?????”

மைத்ரேயி கேட்ட விதத்தில்

” என்னை தவிர உங்களை அப்படி குறிப்பிடுவதற்கு யார் இருக்கிறார்கள்?????” எனும் உரிமையுணர்வே கொட்டி கிடந்தது…..

” நீ அப்படி கூப்பிட மாட்டாயா என்று தானே இத்தனை நாட்கள் நான் ஏங்கி போனதே????”

யசோதாவும் மருமகளுக்கு ஈடாக பதில் கொடுக்க

” என்னை மன்னித்து விடுங்கள் யசோத்தை….. எனக்கும் ஆசை தான்…

உங்களிடம் எப்போது பேசினாலும் ‘யசோத்தை’ எனும் அழைப்பை மட்டும் முழுங்கிவிடுவேன்…..

அத்தை என்னை ஏற்று கொள்ளாமல் இருக்கும் போது உங்களை மட்டும் அப்படி கூப்பிட்டால் அது அவர்களுக்கு

மரியாதையாக இருக்காது அல்லவா யசோத்தை????

அதிலும் நம் குடும்பத்தில் நீங்கள் இருவரும் வேறு வேறில்லை என்னும் போது ??????”

இந்த வயதிலும் இப்படி பக்குவமாக யோசித்து நடந்து கொண்டவளின் விளக்கத்தில் யசோதா வாயடைத்து போக

அவர் அனுமதியை எதிர்பார்க்கமலேயே சின்ன மாமியாரை கட்டி கொண்டாள் மருமகள்….

” எனக்கு உங்களை தான் யசோத்தை ரொம்ப பிடிக்கும் …..

என் பையனை காட்டிலும் ….

ஏன் பிரணாவை விட!!!!!

நான் என் அம்மாவை பார்த்ததில்லை…..

ஆனால் நம் வீட்டிற்கு வந்ததும் நீங்கள் மனமார வாழ்த்தி எடுத்த ஆரத்தியில்

உங்கள் முகத்தில் தான் என் அன்னையை பார்த்தேன் …..

என் அக்கா சுமி எனக்கு  அம்மாவாக அவ்வபோது நடந்து கொண்டாலும் அவளிடம் நான் போட்டிக்கு தான் நிற்பேன்!!!!

” ஒழுங்காக நடந்து கொள்டி  ….. நீயெல்லாம் உன் மாமியார் உதைத்தால் தான் வழிக்கு வருவாய் !!!!!!”

ஓராயிரம் முறையாவது சுமி சொல்லியிருப்பாள்…..

ஒவ்வொரு முறையும் சளைக்காது நானும் சொல்வேன்….

” அது எனக்கும் என் அம்மாவிற்கும் இருக்கும் பிராப்ளம்….. நாங்களே சரி செய்து கொள்வோம்!!!! ” என்று ……

உங்களை பார்த்ததுமே என் சொற்கள் உண்மையான விந்தையை அறிந்தும்

கொண்டேன்…..

அதிலும் அன்று ஒருநாள் சோட்டுவிற்கு நான் பால் ஆத்தி கொடுக்காத போது நீங்கள் வந்து அவனை வாங்கி கொடுத்தீர்களே!!!!!

நியாபகம் இருக்கிறதா யசோத்தை!!!!!

அன்றும் இதே போல் உங்கள் தோள் சாய்ந்து அழ துடித்தேன்……

இதெல்லாம் இருக்கட்டும் யசோத்தை…..

உதிஅண்ணி சாப்பிடாமல் மயங்கி விழுந்தார்களே…..

அப்போது

விது உங்களிடம் வந்து ‘என்ன யசோத்தை ஆனது ???’ என்றாள் பாருங்கள்!!!!!!!

சத்தியமாக சொல்கிறேன்……. பிரணாவ் விதுவை காதலித்தான் என்று தெரிந்ததை விட அது எனக்கு அதிக வலி கொடுத்தது…….

நீங்கள் என்னுடைய யசோத்தை!!!!!

நான் உங்களை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்!!!!!” என்று மைத்ரேயி தன் மனதை வெளிகாட்டவும் யசோதாவிற்கு புல்லரித்து போனது…..

இளையவளை உச்சி முகர்ந்த யசோதா வார்த்தைகள் பஞ்சமாகி மைத்ரேயியின் கன்னத்தில் முத்தமிட அதில் அவள் கணவனின் நினைவு எழ பெற்றவளாய் தன்

யசோத்தையிடமிருந்து தன்னை பிரித்து

” ஆனால் பிரணாவ் மட்டும் என்னுடன் இனி பேசவே மாட்டான் யசோத்தை !!!!”

என்றாள் குளமான கண்களுடனே…..

” பேசாமல் என்ன பண்ணுவானாம்??????”

என்ற பிரணாவின் யசோம்மாவிற்கும் தெரியாது

இனி அவரது செல்ல புத்திரன்

மனைவி என்றொருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து விட போகிறான் என்பது!!!!

Advertisement