அதில் காரை ஓட்டி கொண்டிருந்த யுகன் திரும்பி தன் மனைவியை பார்க்க உதிதாவும் தன் கணவனை தான் பார்த்திருந்தாள்….
அவர்கள் பார்வையில் ” அப்படியெனில் மைத்தி இன்னும் உண்மையை பிரணாவிடம் கூறவில்லையா??????????”
எனும் செய்தி பொதிந்திருந்தது….
அதிவிரைவாக வண்டியை
செலுத்தியதில் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கேர் மருத்துவமனையை எட்டியிருக்க மனைவியின் கரத்தில் படுத்திருந்த மகனை தூக்கி கொண்டு உள்ளே ஒடினான் பிரணாவ் ..
எமர்ஜென்சி வார்டில் டாக்டர்கள் சோட்டுவை பரிசோதித்து கொண்டிருக்க அடுத்த பத்து நிமிடங்களில் மொத்த குடும்பமும் வரிசையாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்….
பக்கத்து பிளாக்கிலிருந்த விதுல்யா தன் அண்ணா கவின் மற்றும் அண்ணி பிரணிதாவை அங்கு பார்த்துவிட்டு விரைய மைத்ரேயியின் நிலைகண்டு திடுக்கிட்டவளாக
” என்ன ஆச்சு மைத்தி????” என்றாள்…..
அப்போது சோட்டுவை பரிசோதித்துவிட்டு வெளியே வந்த மருத்துவர்
” குழந்தையின் அம்மா அப்பா???????”
என்று கேட்கவும்
பிரணாவ் முந்திகொண்டு ” சொல்லுங்க டாக்டர்!!!!!!” என்று பதற
“கொஞ்சம் ரூமிற்குள் வாங்க !!” என்றபடி அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்….
அவர் அப்படி சொன்னது அனைவருக்குமே ஒரு வித பதற்றத்தை உண்டு பண்ண
டாக்டர் சொல்ல கூடாத எதையாவது சொல்லிவிடுவாரோ என்று அஞ்சியவளின் கால்கள் நகர மறுக்க
” நான் இருக்கிறேன் அல்லவா???
சோட்டுவிற்கு எதுவும் ஆகாதுடி பஜாரி!!!!”
மனைவிக்கு ஆறுதலளித்து கூட்டி போனான்…..
அப்போது நர்ஸ் வந்து கொடுத்து சென்ற சில ரிப்போர்ட்களை ஆராய்ந்த டாக்டர்
மைத்ரேயியை ஒருதரம் கூர்ந்து பார்த்துவிட்டு
,”நீங்கள் டாக்டர். மிஸஸ். மைத்ரேயி தானே?????” என்றவர்
“அப்போது நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் !!!” என்று விட்டு தொடர்ந்தார்….
” பேபியின் பிளட்டில் உள்ள ரெட் பிளட் செல் அப்படியே ரேன்டமா டிக்ரீஸ் ஆகியிருக்கு!!!
பிளேட்லட்ஸ் லெவலும் டபுள்யு.பி.சி லெவலும் கூட நியூ வா புரொட்யூஸ் ஆகாமல் நின்றுபோய் இருக்கிறது …..
இப்படி மூன்று மேஜர் பிளட் செல்ஸும் அட் எ டைம்ல ஃபங்ஷன ரெட்யூஸ் பண்ணினதால் ஒருவேளை……”
” போன் மேரோ விற்கு ரிலேட்டட் ஆக இருக்குமா டாக்டர் ??????” கிட்டதட்ட எழுந்துவிட்டாள் மைத்ரேயி …..
” மைத்ரேயி லிஸன்…. இப்போது இருக்கும் நவீன டெக்னாலஜியில் அனைத்துமே சுலபமாக்கப்பட்டிருக்கிறது ……
கேஸ் கொஞ்சம் சீரியஸாக இருப்பதால் எய்தர் யுவர்ஸ் ஆர் யுவர் ஹஸ்பண்ட்’ஸ்
யாருடையது மேட்ச் ஆக இருக்கும் என்பதை இன்றே டெஸ்ட் செய்து
டிரான்ஸ்பிளான்டேஷனிற்கு ஏற்பாடு செய்து விடலாம் !!!!!”
என்று கூறவும் அங்கு நிற்க முடியாது டாக்டரின் அறையை விட்டே ஓடியிருந்தாள் மைத்ரேயி…..
டாக்டர் கூறியது முழுவதுமாக புரியாத போதும் தந்தை அல்லது தாயின் உடல் உறுப்பை கொண்டு சோட்டுவை மீட்டு விடலாம் என்று நம்பிக்கை விதைத்திருப்பது மட்டும் பிரணாவிற்கு
விளங்க
போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்!!!
பற்றி மேலும் சில தகவல்களை கேட்டு அறிந்து கொண்ட பிரணாவ் மனைவியிடம் விரைந்தான் …..
அறையை விட்டு வெளியே ஓடி சென்றவள் முகத்தை புதைத்து வெடித்து அழுக ஆரம்பிக்கவும் குடும்பத்தினர் அனைவரது உடம்புமே சில்லிட்டு போனது….
காஞ்சனாவிற்குமே மருமகளின் இந்நிலை பொறுக்கமாட்டாது போக
யசோதாவின் கண்களோ நீரை சொறிய ஆரம்பித்து விட்டது…..
தேவகி அவர் பங்கிற்கு ” என்னடாம்மா????? சோட்டுவிற்கு ஒன்றும் ஆகாது !!!!
நாம் கும்பிடும் பரமேஸ்வரன் துணை
நிற்பான் ” என்று ஆறுதல் அளிக்க
அப்போது டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்த பிரணாவை காணவும் எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பியது….
மனைவியிடம் நேரே வந்தவன் அவள் அழுகையை துடைத்து அவள் கரங்களை கோர்த்து ” இங்கே பாருடி பஜாரி…. உனக்கு தெரியாதது எதுவுமில்லை …. நீ டொனேட் பண்ணு ..
ஏதாவது சைட் எஃபெக்ட்ஸ் உண்டானால் உன்னை பார்த்து கொள்ள நான் இருக்கிறேன் !!!
இதனால் நமக்கு அடுத்த குழந்தை பிறக்காது போனாலும் சரி!!!!!
நமக்கு சோட்டு போதும்….
என் பையனை தயவு செய்து காப்பாற்றி கொடுடி!!!!” தைரியமாக ஆரம்பித்தவன் கலக்கத்தோடு முடிக்க