Advertisement

யுகன் பிரணாவை வரவேற்காது உள்ளே சென்றுவிடவும்

கணவனின் நிலை உணர்ந்து அவன் கை பற்றிய மைத்ரேயி

” ஃபீல் பண்ணாதே பிரணாவ்.. ப்ளீஸ்!!! ” என்று அவன் நேற்று தனக்கு கூறிய அதே வாக்கியத்தை கூற

தன் முகத்தை விநாடியில் சகஜமாக்கியவன்

” ஹோய் நான் எதற்காகடி பஜாரி ஃபீல் பண்ண போகிறேன்….

என்னை நாலு சாத்து சாத்துவதற்கு கூட மாம்ஸிற்கு உரிமை இருக்கிறது ….

அதேபோல்  என் யுகி மாம்ஸ் வீட்டிற்கு  அவர் கூப்பிட்டால் தான் உள்ளே போக வேண்டும் எனும் கட்டாயம் எனக்கில்லை…

நீ வா நாம் போகலாம்!!!!”

அவள் கைபிடித்து உள்ளே அழைத்து சென்றான்….

அதற்குள் தேவகி விசயத்தை கூறி கார்த்திகேயன் வரவேற்பறைக்கு பிரணாவை அழைக்க விரைய

பிரணாவ் உள்ளே வருவதை கண்டு திருப்தியானவராக

” சாரி மாப்பிள்ளை…. யுகி அழைக்காததற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் !!!” என்று கூறவும்

” என்ன மாமா இது????

என் மனைவியை உங்கள் பொண்ணாக ஏற்று கொண்டதில் ரொம்ப ரொம்ப சந்தோசம் தான் ….

அதற்காக இவ்வளவு மரியாதை மன்னிப்பு எல்லாம் வேண்டாம் மாமா ..

நான் எப்போதும் உதிக்காவின் தம்பியாக தான் இங்கு வருவேன்!!!

நான் மாம்ஸிடம் பேசுகிறேன்…

நீங்கள் ஃபீல் பண்ணாதீர்கள் மாமா !!!”

என்றான் பிரணாவ்….

அவனது பேச்சில் மகிழ்ந்தவர் கணவன் மனைவி இருவர் தலையிலும் கைவைத்து ” நீங்கள் இரண்டு பேரும் நல்லா இருக்கணும்!!” என்று வாழ்த்த

” தேங்க்ஸ் அப்பா !!!” என்றாள் மைத்ரேயி பூரிப்புடன் …..

அப்போது அங்கு தன் மகளை கையிலேந்தியபடி வந்த யுகன்

” இந்தா பிடி!!!!!!” எனவும்

பிரணாவின் கரங்கள் அவன் கட்டளையின்றியே நீண்டன….

அவசர அவசரமாக அறைக்கு வந்து ” ஃபீட் பண்ணிவிட்டாயா அம்மு !!!!” என்று கேட்டபடி மகளை கணவன் தூக்கி வெளியே செல்லவும்

” என்னாச்சு யுகி !!! இன்னும் பப்புவிற்கு பாவாடை சட்டை மாற்றவில்லை …

எங்கு தூக்கி போகிறீர்கள்?????” என்று யுகனின் பின்னே ஓடி வந்தவள்

முன் ஹாலில் தன் தனயனை காணவும் அப்படியே நின்றுவிட்டாள்…..

அப்படி யுகன் மகளோடு வந்ததுமே கார்த்திகேயன் சிறியவர்கள் பிரச்சனையை அவர்களே சீர் செய்து கொள்ளட்டும் என்று அவர்களுக்கு இடமளித்து விட்டு நகர்ந்து கொண்டார் …..

மகளை தன் மாப்புவின் கையில் ஒப்படைத்த யுகன்

” உனக்கு உன் உதிக்கா மீது கோபம் என்றால் ???

அவளிடம் எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் பேசாமல் இரு!!!

எனக்கும் சேர்த்து உன் தண்டனையை கொடு….

மனமார ஏற்று கொள்கிறேன்….

ஆனால் என் மகளின் மீது உன் கோபத்தை காண்பித்து அவளை ஒதுக்க உனக்கு எந்தவித உரிமையும் இல்லை !!!

மாமனை பகைத்து கொண்டு பிறப்பெடுக்கும் அளவிற்கு அவள் எந்த தப்பும் செய்துவிட வில்லை …..” ஆதங்கம் தெறிக்க நிதர்சனத்தை எடுத்துரைத்தவன்

அதற்கு மேல் பேசினால் கண்டிப்பாக

பிரணாவின் மனம் நோகடிக்கப்படும் என்பதை உணர்ந்து உள்ளே சென்றுவிட்டான்……

தன் மகளை எங்கு இறக்கிவிட்டுவிடுவானோ என்று அஞ்சிய உதிதா அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கண்ணீர் சொட்ட சொட்ட திரும்பி ஓடியதை கண்டு கொண்ட

மைத்ரேயி

” உதிஅண்ணி !!!!” என்று குரல் கொடுத்தபடி அவளை சமாதானம் செய்ய

தன் வேக நடைகளை முன்வைக்க

” ப்ளீஸ்டி பஜாரி… நீயும் போய்விடாதே !!!

எனக்கு பப்புமாவை ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை !!!!!” என்று திணறினான் பிரணாவ்….

” நல்லாதான் பிரணாவ் பிடித்திருக்கிறாய் !!!” என்றுகூறியபடியே கணவனின் கைகள் வாகாக குட்டி மருமகளை  பற்றி கொள்ளும்படி உதவி செய்தவள்

அடுத்த நொடியே உதிதாவை காண விரைந்துவிட்டாள்……

இப்போது பிரணாவும் அவன் மருமகளும் மட்டும் அந்த விசாலமான ஏ.சி அறையில்!!!

முதன் முதலாக ஒருமாத குழந்தையை அதுவும் தன் உதிக்காவின் பப்புமாவை கையில் ஏந்தியவனின் மனம் படபடப்பாக உணர்ந்து வியர்த்து கொட்டிய போதும்

 தன் உதிக்காவின் உதிரத்திலிருந்து உதித்திருந்தவள் எனும் நினைப்பே

உண்டான நடுக்கத்தை மறைத்து

பிரணாவை குனிந்து அப்பிஞ்சு கால்களுக்கு தன் முதல் முத்தத்தை பதிக்க செய்ததோடு ” சாரி பப்புமா!!!!” என்ற யாசிப்பையும் அவனிடமிருந்து வெளி கொண்டு வந்திருந்தது…..

ஆனால் தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் சேர்த்து வழங்க கூடியவனின் ஒருமாத கால புறக்கணிப்பு

யுகனின்  இளவரிசியை சிலிர்த்து எழ செய்ய

தாய்மாமனை திட்டி தீர்க்க ” குவா குவா!!!!” என்று அழ ஆரம்பித்தாள்….

இத்தனை நாட்களில் மகனின் அழுகையிலேயே உடைந்து போயிருந்தவன் இப்போது மருமகளின்

சிணுங்களை தாங்கி கொள்ள இயலாதவனாக

” பப்புமா ப்ளீஸ்டா சாரிடா அழுகாதீர்கள்!!!!!” என்று இறைஞ்சினான்….

பிரணி அக்காவின் புதல்வன் ஆதிரன் பிறந்த புதிதில் அழும் சமயங்களில் அம்மாவும் யசோம்மாவும் லாவகமாக தோளில் சுமத்தி ஆட்டுவார்களே!!!

என்பது நினைவிற்கு வர அவசரமாக தன் அம்மாவிடம் சென்று

” பப்புமாவை பிடியுங்கள் அம்மா ….. முதலில் அழுகையை நிறுத்துங்கள்!!!” என்று பதற

காஞ்சனாவோ யுகனை நோக்கினார் …..

இதுவே சாதாரணமாக பப்பு அழுதால் எனில் அவள் குரல் கேட்டதுமே பெரியவர்கள் ஓடி சென்று பிரணாவிடம் இருந்து வாங்கி அவள் அழுகையை

நிறுத்த உதவியிருப்பர்….

இன்றோ யுகன் அவ்வளவு இறுக்கமாக தன் மகளை ஒப்படைக்கவும் அவன் அனுமதியின்றி குழந்தையை கைபற்ற அங்கு நின்ற பெரியவர்கள் அனைவருமே தயங்கினர்….

அப்போது விழாவிற்காக தன் கணவன் கவின் மற்றும் மகன் ஆதிரனோடு உள்ளே நுழைந்த  பிரணிதாவை கண்டவன்

அவளிடம் விரைந்து ” உனக்கு தான் பாப்பாவை தூக்க தெரியும் அல்லவா ???

வாங்கி அழுகையை நிறுத்து பிரணிக்கா!!!” கிட்டதட்ட கத்தினான் பிரணாவ்….

அவன் சத்தத்தில் உதிதாவும் மைத்ரேயியும் அறையிலிருந்து வெளிவர

அங்கு நிற்பவர் யாவர் முகமும் சரியில்லாததை கண்டு கொண்ட பிரணிதா

குழந்தையை இப்போது வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று தெரியாத போதும் !!!!!!

குழந்தையின் அழுகை அவளை வேறு சிந்திக்க விடாது முதன்மையாக நிற்க கண்டு

 தன் கைகளை நீட்டி இருந்தாள்………

மறு நொடி பிரணிதாவிடமிருந்து பப்புவை வாங்கியிருந்த காஞ்சனா அவளை தன் தோளில் கிடத்தி அழுகையை நிறுத்த செய்ய

அவள் அழுகை ஓயும் வரை அங்கேயே நின்றான் பிரணாவ்….

ஏனோ தன் மகள் முகத்தினையே பார்த்திருந்தவனை காணவும் உதிதாவிற்கு அப்படியொரு அழுகை வர வேகமாக தன்னறைக்குள் திரும்பிவிட்டாள்……

மைத்ரேயியும் யுகனும் அவள் பின்னோடு ” உதிஅண்ணி !! அம்மு !! ” என்று

கூப்பிட்டபடி செல்ல அவசரமாக அவள் அறைக்குள் நுழைந்திருந்தான்  பிரணாவ்…

” நான் சொன்னால் கேட்க மாட்டாய் அம்மு…. பார் உன் ஸ்வீட் ஹார்ட்டே வந்துவிட்டான் !!!” கணவன் சொல் கேட்டு நம்பமாட்டாமல் தன் கண்களை விரித்தபடி நிமிர்ந்தவள்

அங்கு உள்ளே வந்தவனை காணவும்  தடுமாறி நிற்க

தமக்கையின் முகம் பிரதிபலித்த நம்பிக்கையின்மையை படித்தவனோ

ஓடி சென்று தன் உதிக்காவை இறுக்கி கட்டி கொண்டு

” சாரி உதிக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்று அவள் தோள்வளைவில் முகம் புதைத்து விம்மி அழ

யுகன் வெளியே உள்ளவர்களுக்கு

கேட்காத வண்ணம் அறைக்கதவை சாத்தி வைத்தான்…..

அக்கா தம்பிக்கு இடையே நிற்பது ஒருமாதிரி அசௌகர்யமாக பட வெளியே செல்ல எத்தனித்தவளை

” இங்கேயே நில்லு மைத்தி….”

அவளும் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறாள் என்று  அவள் கரம் பிடித்து தடுத்து நிறுத்தினான் யுகன் ….

“நான் தான் பிரணாவ் சாரி சொல்ல வேண்டும் !!!!!

என் சுயநலத்திற்காக உன் விருப்பம் பற்றி கேட்காமல் உன்னை கட்டாய படுத்தினேன்!!!” உதிதா கூற கேட்டு

அவள் முகம் பார்த்தவன் ” இத்தனை நாட்கள் மைத்தியை திருமணம் செய்து கொண்டதால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன் என்று நினைத்தாயா உதிக்கா??????????????”

என்றவன் அவள் பதிலுக்காக காத்திராமல் தொடர்ந்தான்…..

” என் லைஃபில் எல்லாமே எனக்கு பெஸ்ட்டாக கிடைக்க வேண்டும் என்று தான் நீ நினைப்பாய்…..

அப்படி மைத்தியை எனக்கு கட்டி வைக்கிறாய் எனில் அதற்கு தகுந்த காரணமில்லாமல் இருக்காது என்று எனக்கு தெரியும் உதிக்கா!!!!!

ஆனால் அப்போதிற்கு ஒரு கோபம்…….

திடுதிப்பென கல்யாணம் என்றால்????

 அதுவும் அன்றைய மனநிலைக்கு விதுவை நான் நேசிக்காது போயிருந்தாலும் !!!!!

என்னுள் எழுந்த ஆற்றாமையை நான் யாரிடம் காண்பிப்பேன்?????

நீயே சொல் உதிக்கா?????

நீ தானே எனக்கு எல்லாம்!!!!

அப்படிபட்ட என்னை உனக்கு முழுதாக தெரிந்தும் ஏன் என்னிடம் நீ கடத்தப்பட்ட விசயத்தை மறைத்தாய்??????”

என்றதும் திடுக்கிட்டவளாக உதிதா விசுக்கென நிமிர்ந்து கணவனை ஏறிட

” மாம்ஸை பார்க்காதே…. மாம்ஸ் எதை பற்றியும் என்னிடம் சொல்லவில்லை!!!!!!”

என்றிருந்தான் பிரணாவ்……

“இப்போது கடத்தப்பட்டிருக்கும் செய்தி பிரணாவிற்கு மட்டும் தெரிந்துவிட கூடாது கடவுளே !!!!”

ஒரு பாழடைந்த தியேட்டருக்குள் தள்ளபட்டதும் உதிதாவின் வாய் முணுமுணுக்க

” ஏன் யார் அது?????” என்றாள் மைத்ரேயி ….

” என் தம்பி !!!!!!” உதிதா கூறக்கேட்டு

“ஏன் ரொம்ப பயந்த சுபாவம்

உள்ளவனா?????” என்று சந்தேகம் கேட்டிருந்தாள் இளையவள்….

அதில் தன்னிலை மறந்து சிரித்தவளாக ” என்னை கடத்திவிட்டான் என்று தெரிந்தால் வரும் கோபத்திற்கு அவன் இந்த பிரதீப்பை கொலை செய்தாலும் ஆச்சர்யத்திற்கில்லை!!!!

என் ஸ்வீட் ஹார்ட்!!!!!

என் மீது கொள்ளை பாசத்தை வைத்திருப்பவன்!!!!” என்று உதிதா அன்று கூறியது இன்று நினைவு தட்ட

இவ்விசயத்தை உதிஅண்ணி  மறைத்தாள் என்பதற்காக தான்  இத்தனை நாட்கள் அவளிடம் பேசாமல் இருந்தானா??????

மலைத்து போய் நின்றாள் மைத்ரேயி….

உதிதாவும் அதையே தான் கேட்டிருந்தாள்!!!!

” நீ கோபப்படுவாய் அதை காட்டிலும் வருத்தப்படுவாய் என்று தான் பிரணாவ் மறைத்தேன்!!!

மறைத்தது தப்பு தான் …..

அதற்காகவா எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாய்??????”

அழுகை வழிந்தோட கேட்டவளின் கண்ணீரை துடைத்தவன்

“திருமணம் முடிந்த அடுத்த நாளே அந்த பிரதீப் ஜாமீனில் வெளிவந்துவிட்டான் என்று மாம்ஸ் மும்பைக்கு திரும்பினாரே நியாபகம் இருக்கிறதா????

அன்று மாம்ஸ் கூட நானும் சென்றேன்….

எங்கள் வரவை தெரிந்து கொண்ட பிரதீப் மும்பைக்குள் நுழைந்ததும் ஆள் வைத்து எங்களையும் கடத்தி உன்னையையும் மைத்தியையும் அடைத்து வைத்திருந்த அதே தியேட்டரில் பூட்டி வைத்தான்!!!”

என்று பிரணாவ் பேசி சென்றதை அவன் தோளில் கை வைத்து தடுக்க பார்த்தான் யுகன்…..

” ப்ளீஸ் மாம்ஸ்…. தப்பு செய்து விட்டேன்!!! அதை மறைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?????

நான் பேசி கொள்கிறேனே!!!” எனவும்

யுகன் பிரணாவை பேச வழிவிட்ட போதும் அவன் அருகிலேயே தான் நின்றான் துணையாக…..

” கைகளை பின்பக்கமாக கட்டி அடைத்து வைத்த கொஞ்ச நேரத்திலேயே எங்கள் முன் வந்து நின்ற பிரதீப்

‘ வாடா கலெக்டரு!!!!!

உன்னை பார்த்த நொடியில் போட்டுவிட தான் நினைத்திருந்தேன்….

ஆனால் அப்படி எந்த வலியையும்

சுமக்காமல் உன்னை சாகவிட இப்போது  மனம் இடம் கொடுக்கவில்லை….

உன்னை அடித்தே கொல்ல போகிறேன்!!!”

என்று தாக்க விழைகையில்

பிரணாவை கண்டு விட்டு

” இவன் யாருடா?????” என்றிருந்தான்….

” ஏர்போர்ட்டில் கூட வந்தான் அண்ணா!!!!”

ஒருவன் பதிலளிக்க  இன்னொருவன்

” இவன் தான் அண்ணா அண்ணியை கல்யாணம் செய்தவன்…. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது!!!” என்று கூறினான்…..

” ஓ!!!!! புது மாப்பிள்ளையா?????

எப்போது அவள் கழுத்தில் தாலி கட்டினாயோ அப்போதே அவள் எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்……

ஆனால் எனக்கு என் பையன் வேண்டும்!!!!

அவனை நீயாக என்னிடத்தில் ஒப்படைத்தாயெனில் உனக்கு எந்த சேதாரமும் இல்லாமல் தப்பிப்பாய்!!!”

என்ற வசனத்தை பிரணாவிற்கு வழங்கிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் யுகனிடம் திரும்பி

” இந்த இடத்தை அரும்பாடுபட்டு தேடி கண்டுபிடித்து உன் பொண்டாட்டியை மீட்டாய்…..

இப்போது உனக்கே இங்கு சங்கு ஊதும்படி ஆயிற்று!!!!” என்று யுகனை நெருங்குகையில்

” என்ன மாம்ஸ் சொல்கிறான் இவன் ?????

உதிக்காவை என்ன செய்தான்????”

ரத்தம் கொதிக்க கத்தியிருந்தான் பிரணாவ் …

” ஓ!!! மாமன் மச்சன்களாடா நீங்க????”

எகத்தாளமாக சிரித்த பிரதீப்

” உன் அக்கா வா அவள் ????

சும்மா சொல்ல கூடாது !!!!!

வயிற்றை தள்ளி கொண்டு வந்த சமயத்திலும் நச்சுனு இருந்தாள்…..

அந்த மைத்ரேயியை திருமணம் செய்யும் வரையில் எவளையும் தொட வேண்டாம் என்றிருந்தேன்!!!

அவளை நீ கொத்தி கொண்டதால் இவனை(யுகனை) போட்டு தள்ளிய பின் நான் உன் அக்காவை நிரந்தரமாக வைத்….

………”

பிரதீப்பின் தரம்கெட்ட பேச்சினை முடிக்கவிடாமல் கைகட்டினை அறுத்து கொண்டு அவன் வாயை உடைத்திருந்தான் பிரணாவ்…..

அங்கு கூட இருந்த ஐவரையும் யுகனின் உதவி இல்லாமலேயே தன்னந்தனியாக வெளுத்து கட்டியவன்

 சரமாரியாக பிரதீப்பை தாக்கியதில் அவன் உடம்பில் உயிரை மட்டும் விட்டு வைத்து

” நீயே போய் தற்கொலை பண்ணி கொள்!!!! அடுத்த முறை உன்னை பார்த்தால் நான் கொல்ல மாட்டேன்….  ஆனால் அதைவிட மிச்சமாக அலங்கோலமாக திரிவாய்!!!!” என்று எச்சரித்து விட்டு யுகனை விடுவித்து கொண்டு புறப்பட்டுவிட்டான்……

அன்று இரவு போதை மருந்தினை உட்கொண்ட பிரதீப் ஏற்பட்ட அவமானம் பொறுக்க மாட்டாது பிரணாவை பழி வாங்கும் நோக்கத்தில் தன் சாவிற்கு காரணமானவனின் பெயரை போலீஸிற்கு அனுப்பி விட்டு வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்தும் கொண்டேன் …

பிரணாவின் நல்ல நேரம் அப்போதைய மும்பை கமிஷனராக இருந்த அத்விக்கின்

கையில் பிரதீப்பின் சாட்சி கடிதம் கிடைத்திருந்தது….

பிரதீப் தற்கொலை செய்து கொண்ட மறுநிமிடமே யுகன் பிரணாவை அத்விக்கிடம் ஒப்படைத்திருக்க

 என்.கே வின் வக்கீலை விலைக்கு வாங்கி தந்திரமாக  என்.கே விற்கு தெரியாதபடி அந்த கேஸை நகர்த்த முடிவெடுத்தான் அத்விக்….

ஒருதனிபட்ட நீதிமன்றம் மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பிரணாவ் மும்பை கமிஷனர் ஆஃபிஸில் வந்து கையெழுத்திட்டு செல்வதற்கு கோரவும்

வீட்டில் மாதத்தில் முதல் வாரம் டெல்லிக்கு போவதாக கூறி கொண்டு தவறாமல் மும்பைக்கு வந்துவிடுவான் பிரணாவ்….

ஆனால் இவை எதிலும் ஸ்ரீதீப் தன் மூக்கினை நுழைக்காததாலும்

என்.கே விற்கு தெரிந்தால் கண்டிப்பாக பிரணாவிற்கு பிரச்சனை என்பதாலும்

பிரதீப் கூடவே சுற்றி திரியும் அவனது அல்லக்கைகள் சிலரையும் வெவ்வேறு கேஸில் கைது செய்திருந்தான் அத்விக்…..

எவ்வளவு பெரிய அயோக்யன் என்றாலும் ஒருவன் உயிர் போவதற்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று மருகிய பிரணாவ் இந்த கேஸ் முடியும்வரையிலுமே தன் உதிக்காவிடமிருந்தும் பப்புமாவிடமிருந்தும் தள்ளி நிற்க முடிவெடுத்தான் …..

” நீயே சொல்லு உதிக்கா செய்த பாவத்தை முழுதாக துடைக்க முடியாத போதும் அதன் கறை என் மீது எஞ்சியிருக்க

எந்த முகத்தை வைத்து கொண்டு என்

பப்புமாவை பார்ப்பேன்?????

அதிலும் பப்புமா பிறந்த அன்று எங்கு என் அழுக்கு அவளையும் தொட்டுவிடுமோ என்று அஞ்சியே மருத்துவமனையை விட்டு ஓடி போயிருந்தேன்!!!!!

நீ சொல்லு உதிக்கா…..

கோபத்தில் நான் செய்தது தப்பு என்று உனக்கு தெரிந்தால்

என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்று கொள்கிறேன் !!!!” என்று குனிந்து நின்றவனின்

தலை நிமிர்த்தி ” ஸ்வீட் ஹார்ட்!!!!!

நீ செய்தது கொஞ்சம் கூட தப்பே இல்லை…..

உன்னிடத்தில் எந்தவொரு சராசரி மனிதன் இருந்தாலும் இதை தான் செய்திருப்பான்!!!”

உதிதா தன் தனயனின் தலை கோதி ஆறுதல் மொழி உதிர்க்க

” ஏன் அம்மு!!!!! அந்த இடத்தில் நானும்

தான் இருந்தேன்…. அப்போது நான் சராசரி ஆளில்லை என்கிறாயா?????”

என்று ஒரு மாதிரி இறுக்க நிலையை தளர்த்த கேட்டிருந்தான் யுகன்…..

” அன்று உங்கள் கையை கட்டியவனுக்கு நான் காவடி தான் தூக்க வேண்டும்….

இல்லையெனில் அந்த பிரதீப் பேசிய பேச்சிற்கு உங்கள் கை கட்டினை மட்டும் எளிதாக அவிழ்க்க முடிந்திருந்தால் நீங்கள் விட்டிருக்கும் ஒரு குத்திலேயே அவன் செத்துஇருப்பான்!!!”

” கிரேட் அம்மு நீ!!!!

அன்று நிஜமாகவே என்னால் கட்டினை கழற்ற முடியவில்லை….

இல்லையெனில் இந்நேரம் என் மாப்புகூட சேர்ந்து நானும் மாதாமாதம் மும்பை டிரிப் கிளம்பியிருக்கலாம்!!!!”

” கிளம்புவீர்கள்  கிளம்புவீர்கள்

கொடுங்கோல் ஆட்சியாளரே!!!!!!” அவள் குச்சியில்லாத டீச்சர் அம்மாவாக மிரட்டவும் சிரித்தவன்

” வா மாப்பு உன் உதிக்கா குச்சியை எடுப்பதற்குள் நாம் எஸ்கேப் ஆகிவிடலாம்!!!!!!” பிரணாவை அழைக்க அவன் பார்வையோ எதையோ யோசித்தபடி தரைநோக்கியவளிடத்தில் நிலைத்திருந்தது….

கண்களால் இருவரையும் ஜாடை காட்டிவிட்டு ” வா அம்மு போகலாம்!!!!!!” என்று உதிதாவை யுகன் அறையை விட்டு அழைத்து செல்லவும்

தன் மனைவியின் புறம் திரும்பிய பிரணாவ்

” எனக்கு தெரியும்டி பஜாரி இது உனக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்று!!!!

என்ன தான் நியாயமான காரணம்

கூறினாலும் பிரதீப் இறந்தது என்னால் தான்….

நான் இந்த விசயத்தை வேண்டுமென்றே உன்னிடம் மறைக்கவில்லை …..

அதுவும் நீ என்னிடம் எதையாவது மறைத்தால் எப்படி நான் வேதனையடைவேனோ அதைவிட பன்மடங்கு கஷ்டபட்டு தான் சொல்லாமல் விடுத்திருந்தேன்…..

அப்போதும் நமக்குள்ளான உறவை கோர்ட் கேஸ் முடிந்த பிறகே தொடங்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் …..

ஆனால் நாள் ஆக ஆக உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு அது முடியாத காரியமாகி போனது!!!!

உதிக்காவிடம் கூறியதையே தான் உன்னிடமும் கூறுகிறேன்!!!!!

எனக்கு நீ என்ன தண்டனை

கொடுத்தாலும் நிச்சயம் நான் அதை மனமார ஏற்று கொள்வேன் ” மைத்ரையியின்  நிழலையும் நெருங்காது தீர்க்கமாக கேட்டு நின்றவனை

ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவனது பஜாரி…..

Advertisement