பப்புமாவின் பெயர் சூட்டும் விழா தனக்கு தெரிந்திருக்க வில்லையே என்று வருந்திய பிரணாவ்
” சொன்னால் தானே அம்மா தெரியும்?????” என்று முணுமுணுக்க
அதில் மகனை முறைத்தவர் தொடர்ந்தார்…..
” அதற்கு நீ பேசினால் தானேபா முடியும் ….
உதி அழைத்தால் எனில் எடுத்து பேச போகிறாயா ????
அப்போதும் சம்மந்தி முறையாக அழைப்பு விடுக்க இன்று யசோதா போனில் இருந்து கூப்பிட்டாராம்
நீ தான் எடுக்கவில்லையாம்!!!!”
” ம்மா…. இது ஒரு பிரச்சனையா????
ஆஃபிஸில் பிஸியாக இருந்தேன் !!!
வீட்டிற்கு வந்து யசோம்மாவிடம் பேசி கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன் “
அப்போது “என்ன நினைத்திருந்தாய் பிரணாவ்??????” என்று கேட்டபடி அறையிலிருந்து கதிரேசன் வெளி வரவும்
” நாளை உதியின் ‘பப்பு’ ஃபங்ஷனிற்கு செயினும் புதிய டிரெஸ்ஸும் வாங்கி வர நினைத்திருந்தானாம்!!!
அதை தான் பிரணாவ் சொல்லி கொண்டிருந்தான்!!” காஞ்சனா சமாளிக்க
” மதியம் பேரனோடு நீ போய் வாங்கி வந்தேன் என்றாய் ?????” என்றார் கதிரேசன்…
” மாமன் முறைக்கு பப்புமா-விற்கு
பிரணாவ் வாங்க ஆசை பட மாட்டானா????” மறைமுகமாக மகனுக்கு கொட்டு வைத்தவர்
” ஆஃபிஸில் பிஸியாக இருந்தானாம் ” என்றார்….
” ஆமாமாம்…. இன்று கொஞ்சம் வேலை ஜாஸ்தி தான்….
ரகுவும் கூட மாலையே விழாவிற்கான ஏற்பாடை கவனிக்க சம்மந்தி வீட்டிற்கு சென்றுவிட்டான்!!! ” கதிரேசன் கூற கேட்டு
” எல்லா வேலையையும் பெரியவர்களே இழுத்து போட்டு செய்யுங்கள் ….
ஏன் இவனை சம்மந்தி வீட்டிற்கு போக சொல்லி இருக்கலாம் அல்லவா????” அப்போதாவது மகனிற்கு வீட்டு நடப்பு தெரியுமே என்று காஞ்சனா ஆதங்கப்பட்டார்….
” இதென்ன வம்பாக போச்சு ???? ரகு அவன் பேத்திக்கு செய்ய கிளம்பும் போது நான் எப்படி தடுப்பேன் !!!” என்று கூறியவர்
” ஏன் நாளை துரை அங்கு வருவார் தானே ????
இல்லை இன்னும் உதியோடு பேசாமல் இங்கேயே இருந்து கொள்ளும் ஐடியாவில் இருக்கிறாரா????
அப்போதும் பிரணாவை மனதில் வைத்து கொண்டு தான்
உதி ‘கொஞ்ச நாள் கழித்து புண்ணியதானம் செய்யலாம் என்றேன் பெரியப்பா !!!!
யுகி தான் பிடிவாதமாக குறித்த நாள் கணக்கில் நாளையே பெயர் வைத்து விடலாம் என்கிறார்’
என்றாள்….
இவன் வராவிட்டால் அவள் உடைந்து போவாள் !!!
யார் கை காலையும் வலுக்கட்டாயமாக கட்டி இழுத்து போக முடியாது…..
அவரவர் இஷ்டம் !!!
என்று கூறி விட்டு சென்று விட்டார் கதிரேசன்….
“தயவுசெய்து பிரச்சனை செய்யாது உன் பிடிவாதத்தை விட்டு நாளை உதி வீட்டிற்கு வந்துவிடு பிரணாவ் !!!”
என்று மட்டும் கூறி விட்டு கணவன் பின்னோடு காஞ்சனா செல்லவும் மாடி ஏறலானான் பிரணாவ்…
அங்கு எப்போதும் தன் பேச்சினை கேட்டு நாணத்தினால் சிவக்கும் கன்னங்கள் இன்று அழுகையினால் வாடி வதங்கியிருக்க கணவன் வந்த அறிகுறி கூட தெரியாமல் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவளின் தாடை தொட்டு நிமிர்த்தி
அதில் இன்னம் சிவப்பு நிற வண்ணத்தை அப்பி கொண்டது மிளிர்ந்தது அவள் கன்னம் ……
” ஐயே இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் அழகாய் தெரிந்தாய்டி பஜாரி…. அதற்குள் இப்படி அழுமூஞ்சி ஆகிவிட்டாயே ????”
திட்டுவாள் என்று எதிர்பார்த்து அவன் கூற
மனைவியோ உடலை மட்டும் அந்த அறையில் வீற்றிருக்க செய்துவிட்டு
சிந்தனையை தொலைத்திருக்கவும்
பார்வையை மீண்டும் தரைக்கு தாரைவார்த்து அமர்ந்திருந்தாள்….
” என்னை பாருடி பஜாரி !!!!
அம்மா கூறியது எதுவும் உன்னை கஷ்டபடுத்……..” அவன் பேச
ஆரம்பிக்கவும்
” எனக்கு தெரியும் பிரணாவ்… அவர்கள் சோட்டுவின் நன்மைக்காக தான் கூறினார்கள் என்பது !!!” என்றாள் அவசரமாக….
” மை பிரிலியண்ட் கேர்ள்!!!! அப்புறமும் என்ன????”
” ஒன்றுமில்லையே!!!” நான் சோட்டுவை தூங்க வைக்கிறேன் ” என்று சாதாரணமாக கூறி எழ முயன்ற போதும் அவள் அனுமதியின்றி ஒரு சொட்டு நீர் வெளிவந்துவிட
எழுந்தவன் அவளை தன் புறம் திருப்பி மென்மையாக அணைத்து அவள் தலையில் தன் கன்னம் பதிக்கவும்
விம்மி வெடித்தாள்….
” நான் நல்ல அம்மா இல்லையா பிரணாவ்????
தாய்ப்பால் கொடுத்தால் தான் நல்ல அம்மாவா?????”
” நீ தான்டி பஜாரி இந்த உலகத்திலேயே பெஸ்ட் அம்மா ….” அவள் முதுகை தடவி கொடுத்தவாறு அவன் கூறியதில் சமன் அடைந்தவள்
” நிஜமாகவா?????” சிறு பிள்ளையாக அவன் முகம் நோக்கி கேட்க
” சத்தியமாக…..
நீ பெஸ்ட் மம்மி என்று தெரியும்!!! ஆனால் இப்போது பெஸ்ட் வைஃபா என்று டெஸ்ட் பண்ணி பார்த்துவிடலாமா?????” அவளது முகம் நோக்கி குனிய
பிரணாவை முந்தி கொண்டு அவள் அன்னை கன்னத்திற்கு ” ஹவ்வா!!!!!” வழங்கியிருந்தான் அவள் பெஸ்ட் பையன்…..
மகனின் செயலை ரசித்தவன் ” அப்பாவிற்கு ஒன்று கொடுடா !!!!”
ஆசையாக கேட்க
“நானநான!!!!” இல்லையில்லை என்பது போல் திருப்பி கொண்டான்….
அதில் பிரணாவின் முகம் வாடி போக ” நீ கொடுக்காவிட்டால் போடா!!!!
நான் கொடுப்பேன் !!!”
என்றபடி எக்கி கணவனின் கன்னத்தில் தன் ரோஜா மொட்டிதழ்களை பதித்திருந்தாள் அவன் பஜாரி….
மனைவியின் முத்தத்தில் திளைத்தவன் புன்னகை முகமாக அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு
” அழுதுவிடாதேடா ப்ளீஸ்!!!!” என்று கெஞ்சி மகனின் நுனி மூக்கையும் லேசாக தொட்டு விட்டு கையை உருவி கொண்டான் ….
தந்தை சொல் கேட்ட புத்திரனாக அழுகாதிருந்த போதும் தூக்கம் வந்தவனாய் சோட்டு கண்ணை கசக்க
மைத்ரேயி அவனை மெத்தையில் கிடத்தி தானும் படுத்து கொண்டாள் ….
அவர்கள் அருகில் அப்படியே படுக்க போனவனிடம் ” டிரெஸ் மாற்றி விட்டு படு பிரணாவ்…
பெட் டர்ட்டி ஆகி விடும்!!!!” மைத்ரேயி வினவ
” மாற்றாவிட்டாலும் இன்று டர்ட்டி ஆக தான்டி போகிறது !!!!” சரசமாக உரையாடியவனை பார்க்க முடியாமல் தலையணையில் முகம் புதைத்து
” போடா !!!!!” என்றிருந்தாள் அவன் பஜாரி….
அதை கண்டு சிரித்தபடியே தனது நைட் பேண்ட்டை எடுத்து கொண்டு வெளியேறியவன்
அடுத்த பத்தாவது நிமிடத்தில் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்திருந்தான்….
மகன் தூங்கியிருக்க “நானே கீழே வந்திருப்பேனே???!!!” என்றவள் எழுந்தமரவும்
” காலையில் தைராய்டு டாப்லெட் போட்டாயாடி பஜாரி???? இல்லை டிமிக்கி கொடுத்தாயா????” என்று கேட்டபடியே தோசையை பிய்க்கலானான்…
” நீ தான் ஊட்டிவிடாமல் தூங்கி கொண்டிருந்தாயே!!!! பிறகு எப்படி நான் போடுவேனாம்?????” உதட்டை பிதுக்கியபடி அவன் கையிலிருந்த தோசையை வாங்கி கொண்டவளை
” டாக்டராடி நீ??? ” என்று முறைத்தவன்
” நாளை உனக்கு அப்படி சீக்கிரமாக போக வேண்டி இருந்தால் தயவு செய்து என்னை எழுப்பு!!!!” என்று நொந்து கொண்டான்….
” எப்படியெப்படி உன் அலார்ம் கிளாக்
போலவா??????”
அவள் கேட்டதும் திடுக்கிட்டவனாய் தன் மனைவியை பிரணாவ் ஏறிட
” நான் கேட்கவில்லைபா….. பாதி தூரம் கேட்டதுமே தூக்கி போட்டு உடைத்துவிடலாம் என்று தோன்றிவிட்டது….
சமத்து பிள்ளையாக அங்கேயே வைத்துவிட்டவன்!!! பார்…” என்று அலார்ம் கிளாக்கை கைகாட்ட
அசடுவழிந்தவன் ” நீ போட்டு உடைந்திருந்தாலும் தப்பில்லைடி பஜாரி….
அதுதான் என்னை எழுப்ப நீ வந்துவிட்டாயே!!!” என்று கண் சிமிட்டினான்….
” ஐயோ நான் வரவில்லைபா இந்த விளையாட்டிற்கு…. காலையில் உன்னை எழுப்பி பார்த்து முடியாது போய்தான் ஸ்டிக் பேட் ஒட்டிவிட்டு சென்றிருந்தேன்….
அதையாவது எடுத்து படித்தாயா????”
என்று திரும்பி பார்க்க அது அவள் ஒட்டிய இடத்திலேயே வீற்றிருக்கவும்
” எழுந்ததும் உன் கண் முன்னாடி இருக்கும் இதை கூட பார்க்க மாட்டாயா ????” என்று அவள் இடுப்பில் கை வைத்து மிரட்ட
” பார்க்கவில்லையேடி!!! இரு இப்போது பார்க்கிறேன் …. அத்தானிற்கு அப்படி என்ன லவ் நோட் எழுதி வைத்திருக்கிறாய் என்று !!” தன்னவளை வம்பிழுத்திருந்தான் பிரணாவ்…
” ஹான்…. சுரைக்காய்க்கு உப்பில்லை என்று எழுதியிருந்தேன்!!! அதை இப்போது ஒன்றும் நீ படிக்க தேவையில்லை ” அவனுக்கு முன்னே பாய்ந்து சென்று அதனை கைபற்றியவளை நெருங்கியவன்
” இந்தா கடைசி வாய் !!!” என்று அவளுக்கு ஊட்டி முடித்து
அவள் முந்நெற்றியில் முத்தம் பதித்ததோடு
” இதை தானேடி பஜாரி கேட்டிருந்தாய்????
எப்படி உன் அத்தான் கரெக்டா கொடுத்தானா??????” என்றான்….
படித்துவிட்டானோ????????
என்றவளுக்கு பேச்சு எழாமல் போகவும்
” என்னடி பஜாரி தப்பாக கொடுத்து விட்டேனா????? இப்போது கரெக்டா?????”
மீண்டும் அவள் நெற்றியில் பிரணாவ் முத்தம் பதிக்க
கணவனின் முத்தத்தையும் பேச்சையும் ரசித்தாள்.
” இதுவும் தப்பு தான் !!!!” என்று முறைத்தபடியே தன்னுள் சிரிக்கவும்
” அப்போது இங்கேயே வெயிட் பண்ணு கை கழுவிவிட்டு வந்து கரெட்காக கொடுக்கிறேன்!!! ” என்று அறையை
விட்டு நகர
அவளுள் தோன்றிய குறுகுறுப்பு அவளை அங்கு நிற்கவிடாது செய்ய