Advertisement

மிஸஸ் .மைத்ரேயி பிரணாவின்  அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை

அந்நேரத்தில்  எதிர்பார்க்காத மைத்ரேயி

 எழுந்து நிற்க

கதவருகில் நின்றபடியே “தேங்க்ஸ்!!!!”  என்றிருந்தாள் விதுல்யா …..

” இதில் தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கிறது?????

நம் கடமையை தானே செய்தேன்!!!!”   கூற கேட்டு வெளியேற எத்தனித்தவளை

“ஒரு நிமிடம் !!!!!” என்று தடுத்து நிறுத்தி இருந்தாள் மைத்ரேயி ….

 அதில் விதுல்யாவின் கால்கள் நகர

மறுத்திருந்த போதும்

மைத்ரேயியை பார்க்கும் துணிவின்றி திரும்பியே தான் நின்றாள்  …..

 விதுல்யாவின் நிலை புரிந்து

 ‘எதுவும் பேச முடியாது’ என்று தெரிந்தே

பாதி தூரம் வரை சென்று விட்டவள்

தன் கால்களுக்கு அணை போட்டு

 ” ஐ அம் சாரி !!!!!” என்றாள்  மைத்ரேயி….

 அதில் பட்டென்று  திரும்பிய விதுல்யா

 தன் அருகே வரை வந்து விட்ட மைத்ரேயியை கண்டு தன்னை கட்டுபடுத்த முடியாத வண்ணம் வேகமாய் ஓடி சென்று அவளை அணைத்து கொண்டாள்……

மேலும்

 ” நீ ஏன் மைத்தி சாரி சொல்கிறாய்????”

என்று கேட்டுவிட்டு வேறு எதுவும் பேச முடியாமல் வழிந்த கண்ணீரை மறைக்க அவ்வறையை விட்டு ஓடி மறைந்தாள்…..

  இந்த இடி மழையில் எப்படி காரை ஓட்டி வருவாள் என்று தன்னவளை அழைத்து செல்ல மருத்துவமனைக்கு வந்திருந்த பிரணாவின்  விழிகளுக்கு

மனைவியின் ‘சாரி’ உறுத்த

அப்படியே வெளியே நின்று கொண்டான்….

 அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை…..

ஸ்ரீதீப்பை பார்த்ததும் அவனுள் பொங்கும் உணர்ச்சிக்கு அப்படியே எதிர்மறையாக மைத்ரேயி  விதுல்யாவிடம் நடந்து கொள்ளும் விதம் !!!!

முதலில் இவள் எதற்காக சாரி சொல்ல வேண்டும்????? என்ற கேள்வியை

மனைவியிடத்தில் கேட்க நினைத்தவன்

 அவளது அறைக்குள் நுழையும்போது மற்றொருவனும் ஓடிவந்து பிரணாவோடு  சேர்ந்து கொண்டான்….

அப்புதியவனின் முகம் நோக்கிய  பிரணாவ்

“நிதிஷ் அண்ணா நீங்களா??????”  என்று கேட்ட

அதே சமயத்தில் நிதிஷும் “பிரணாவ்!!!!”  என்றிருந்தான்…..

 நிதிஷ் பிரணாவ் இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயமானவர்களோ ஆச்சரியமாய் மைத்ரேயி பார்த்து நிற்க

”  இந்நேரத்தில் நீ… நீயும் டாக்டரை பார்க்க வந்தாயா பிரணாவ் ????  யாருக்கு என்ன????” என்றான் நிதீஷ்…

 அதில் மென்னகை பூத்தவன் ” ஷி இஸ் மை வைஃப் !!!!” என்று மைத்ரேயியை நிதிஷிற்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு

 ” மைத்தி… இவர் நிதிஷ்…. உதிக்காவின் கிளாஸ் மேட் ….. ஒரே ஸ்கூல்!!!”  என்று மட்டும் தன் மனைவியிடத்தில் விளக்கம் கூறினான் பிரணாவ் ….

நிதிஷ்  உதிதாவை காதலித்தை மறைத்து!!!

 மைத்ரேயியிடம் திரும்பிய நிதிஷ் ” ‘அப்பா இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் ‘  என்று நீங்கள் சொல்லவும் தான் எனக்கு உயிரே வந்தது டாக்டர்….

 என்னால் நேற்று இங்கு வர முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன்!!!!

 அதிலும் நான் எப்போது போன் செய்த

போதும் மறுக்காமல் அதை ஏற்று பொறுமையாக பதில் அளித்தீர்கள்!!!!

இவை அனைத்தையும் ‘நன்றி’ என்று ஒரு வார்த்தையை மட்டும் உங்களிடம் சொல்லி என் நன்றி கடனை செலுத்தி விட முடியாது டாக்டர்!!!!

” என்று கையெடுத்துக் கும்பிட்டான் நிதிஷ்….

 ” அவள் கடமையை தானே செய்தாள்…. விடுங்க அண்ணா!!!!”  என்றபடி கூப்பிய கரங்களை இறக்கிவிட்ட பிரணாவ்

”  நேற்று உங்கள் அப்பா பற்றியும் நீங்கள் போன் செய்தது பற்றியும் கூறினாள்…. ஆனால் எனக்குத்தான் அது நீங்கள் என்று ஸ்ட்ரைக் ஆகவில்லை ” என்றான்…

 பிறகு தந்தை குறித்து சில விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட நிதிஷ் கிளம்பும் சமயத்தில்

” நான் வரும்போது இப்போது ஒரு பெண் இங்கிருந்து அழுது கொண்டே வெளியே ஓடினார்களே???!!!

 அவர்களுக்கும் இல்லை அப்பெண்ணை சார்ந்தவர் எவருக்கும் இதய சம்பந்தபட்ட  பிரச்சனையா??????”  என்றான் விதுல்யாவை குறித்து….

” சாரி சார்….. இட்ஸ் அவர் பர்ஸனல்!!!!” என்று மைத்ரேயி கூறவும்

“ஓ…… சாரி ஃபார் தி டிரபுள்!!!!”  என்று தானும் கேட்டு கொண்டு வெளியேறிவிட்டான் நிதிஷ் ….

அவன் சென்ற பிறகு தன்னையே பார்த்திருந்த கணவனிடம் ‘என்ன???’ என்பது போல் மைத்ரேயி தலையசைக்க

” எதற்காகடி பஜாரி ‘சாரி’ கேட்டாய்??

என்றான் பிரணாவ்…

” பின்னே ஒருவரிடம் பதில் கூற முடியாத போது எப்படி சொல்வதாம்???

 அதிலும் அவர் கலெக்டர் எனும் பட்சத்தில்!!!!

 அவர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா????

நிதிஷ் கலெக்டர் என்றதும் இவரை யுகி அண்ணாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ என்று நினைத்தேன்???

 ஆனால் இப்படி உனக்கும்

உதிஅண்ணிக்கும் ஃபிரெண்ட் என்று தெரியவில்லை!!!!!”  என்று பேசிக் கொண்டு சென்றவளிடம்

” நான் அதைக் கேட்கவில்லை…. விதுவிடம் ஏன் சாரி கேட்டாய்?????”  என்றான்….

 அதில் அப்படியே அவள் முகம் மாறி போக

” வேறு என்ன என்னை கேட்க சொல்கிறாய்??????

 இவ்வுலகிலேயே தெரிந்தோ தெரியாமலோ நான் ஒருவருக்கு துரோகம் செய்து இருந்தால் அது விதுவிற்கு மட்டும்தான்…….

 ஸ்ரீதீப்பிடம் கூட நான் இப்படி மன்னிப்பு கேட்டது இல்லை!!!!

 அவனுக்கும் எனக்கும் ஒத்து வராது என்று தெரிந்ததும் அதை எடுத்துரைக்க தான்  முயன்றேன்….

 ஆனால் நீ உண்மையாக விதுவை நேசித்து இருக்கிறாய்!!!!!!

 இந்த துரோகம் நம்மை சும்மா விடாது பிரணாவ்!!!!!”

 கண்ணீர்  தெறிக்க அவள் படபடக்க வாயடைத்துப் போய் நின்றான்

பிரணாவ்….

உடனே கணவனின் முகம் பிரதிபலித்த அதிர்ச்சியில் அவனை நோகடித்து விட்டோமே என வருந்தியவள்

” சாரி பிரணாவ் !!!! நான் வேண்டும் என்றே அப்படி கூறவில்லை…..”

 என்று அவன் கை பற்ற

தன் மேல் படர்ந்த ஜில்லட்ட கைகளை பிடித்து வெளியே இழுத்து சென்றான் பிரணாவ்…..

அவன் முகத்தில் பொதிந்திருந்த செய்தியை தெரிந்து கொள்ள தவறியவள்

” பிரணாவ் நில்லு!!!!! ஏன் இப்படி வேகமாக ஓடுகிறாய்?????”

அவள் கைகளை உருவிகொள்ளாது அவன் பின்னோடு சென்றபடி மைத்ரேயி வினவ

மருத்துவமனை முன் வாயிலில்

நின்றவன் அவள் கையை விடுத்து கொட்டும் மழையில் அவளை பார்த்தபடியே கால்களை பின் வைக்க

அதில்

” என்ன பண்ணுகிறாய் பிரணாவ்????

முதலில் இங்கு வா!!!!” என்று கிட்டத்தட்ட கத்தினாள் மைத்ரேயி …

ஆனால் மறுப்பாக தலையசைத்தவனோ அவளுக்கு மிச்சமாக குரலை உயர்த்தி இருந்தான் ……….

” எனக்கு மழையில் நனைய ரொம்ப பிடிக்கும்டி பஜாரி!!!!

சின்ன வயதில் அப்பா எவ்வளவு திட்டினாலும் கேட்க மாட்டேன்…..

அப்புறம் நாள் ஆக ஆக ‘ என்ன இது இன்னும் சின்ன பிள்ளையாக????’ எனும் கேள்வி என்னுள்ளே எழ

இச்சந்தோசத்தை அனுபவிக்கும் வாய்ப்பை நானே தடை செய்தும்

கொண்டேன்…..

அப்படி பல வருடம் கழித்து இன்று என்னை மழையில் நிறுத்தியிருக்கிறாய்!!!!

வேண்டாம் வராதே!!!!”

என்று முன்னேறியவளை தடை செய்தவன்

” நான் பேசி கொள்கிறேன்….

உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு அது முடியாது…….

இத்தனை நாட்களாக நனையும் சமயம் உண்டாகும் உவகை அனைத்தையும் இன்று மனம் சுக்குநூறாக இழந்திருக்க மாறாக   என்னுள் ஒரு பரவசத்தை ஏற்படுத்திவிட்டாயடி என் பஜாரி பொண்ணே !!!! “

இவனுக்கு என்ன ஆனது என்று பிரமித்து பார்த்தவளை நேராக பார்த்து கூவினான்

பிரணாவ்….

சிறு மழை துளியை கையிலேந்திய வண்ணம்

 ” இவ்வுலகத்திலேயே புனிதமானது மழை நீர் என்று எண்ணி இருந்தேன்

உன் மனதை படிக்கும் வரை!!!!

வெட்டும் மின்னலின் ஒளிகீற்றிற்கு மேலாக உன் வதனத்தின் பொலிவு ஜொலித்து மிளிர

போரொலி  இடியை அவ்வபோது உன்  இதழ்பிரியா மௌனம் வென்று விட

மழையினும் மேன்மையானவள் நீ என்று கண்டுகொண்டேன்!!!!

நின் மனதை கொள்ளை கொண்ட கர்வம் துளியுமின்றி பன்மடங்கு ஏங்கி போனவனாய்

நம் உறவை ‘காதல்’ எனும் பந்தத்தில் திணிக்க விழையாது யாசிக்கிறேன்……”

என்றவன் தன் மனதை கண்களில் தேக்கி

விடை தெரிந்தும் அவள் பதில் வேண்டி பதின் மாணவனாக

“என்னை ஏற்று கொள்வாயாடி பஜாரி????”

என்றான் இடியோடு கூடிய பெரும் சத்தம் எழுப்பி……

அவன் காதல் மொழிகளில் அவள் வார்த்தைகள் சிக்கி கொள்ள பாய்ந்து சென்று கணவனை கட்டி கொண்டாள் அவனவள்…..

அவளை அப்படியே தூக்கி கொட்டி தீர்க்கும் மழைக்கு நிகராக தட்டாமாலை சுற்றவும்

அவளை இறக்கிவிட்ட நொடியில்

அவன் முகம் பற்றி கணக்கில்லா முத்தங்களை பரிசளித்திருந்தாள் அவன் பஜாரி….

மனைவியின் இதழொற்றலில் திளைத்தவன்

எங்கு தன் கண் காது மூக்கு கன்னங்களில் மாற்றி மாற்றி கதை பேசும் ரோஜா மொட்டிதழ்களுக்கு வலிக்குமோ

என்று

தன் அதரம் கொண்டு அவற்றிற்கு மருந்திட ஆரம்பித்தான் அவள் கள்வன்….

அக்காட்சியை கண்டு களிக்க விருந்தினராய் வந்து

 கண்சிமிட்டிய மின்னலையும்

கைதட்டிய இடியையும்

அவர்கள் பொருட்படுத்தாது தங்கள் பணியில் மூழ்கியிருக்க

வரவேற்காத காரணம் கொண்டு விருந்தினர்கள் பெய்த மழையையும் சேர்த்து கூட்டி போய்விட

அதன்பின்னும் கூட மனமே இல்லாமல் தான் தன்னவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான் பிரணாவ்…..

அப்போதும் மயக்கம் தெளியாதவள்

அவனது முதுகினை இறுக்கி பிணைந்த கரங்களை பிரிக்காது அவன் மார்பில் முகம் புதைக்க

” வீட்டிற்கு போகலாம்டி பஜாரி!!!!!!!!!” என்றான் அவள் காது மடல்களில் முத்தம் பதித்து….

அதில் சுயநினைவு பெற்று விலக நினைத்தவளை துளியும் அசைய அனுமதிக்காதவன் அவளை அப்படியே  தூக்கி பகானி நின்ற இடத்திற்கு சென்றவன்

” சாவி எங்கேடி பஜாரி ????” என்று கேட்க

மைத்ரேயினால் பதில் கூற தன் விழிகளை திறக்க முடியாதபடி வெட்கம்

வந்து சூழ

சிவந்த இதழ்களையும்  திறக்க முயற்சிக்காது அவன் கரங்களிலேயே தான் தஞ்சம் அடைந்திருந்தாள்……

அவளது மந்தக நிலை அவனை மொத்தமாக ஆட்கொள்ள உடனே அவளை மெதுவாக இறக்கி விட்டவன்

” டூ செக்கண்ட் டி பஜாரி !!!!” என்று மருத்துவமனைக்குள்  ஓடினான்..

அவளறைக்கு சென்று அங்கிருந்த சாவியை கைபற்றியவன்

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவள் முன் விரைந்திருந்தான்….

மழையில் நனைந்து பழக்கமில்லாதவளுக்கு குளிர் பிறக்க

கார் கதவினை திறந்து அவளை உள்ளே தள்ளியவன் சுற்றி வந்து

டிரைவர் இருக்கையில் அமர்ந்து

அவள் மறுக்க மறுக்க தன் மடி மீது தன்னவளை அமர்த்தி கொண்டான்…..

இன்னும் நடுக்கம் குறையாது வீற்றிருந்தவளை கண்டு ஒருகணம் பயந்து

” என்னடி பஜாரி பண்ணுது உனக்கு ??????

வீட்டிற்கு போய்விடலாமா இல்லை டாக்டரிடம் காண்பிக்கலாமா????”

 அவன் பதற

அவன் கன்னங்களை பற்றியவள்

” ஒன்றுமில்லை …… வீட்டிற்கு போகலாம்!!!!” என்றாள்….

” சாரிடி உனக்கு ஒத்து கொள்ளுமா என்று தெரியாமல் நான் தான் உன்னை மழையில் இழுத்து……”

அவன் வாக்கியம் முடியுமுன்னே

” உனக்கு மழையில் நனைய அவ்வளவு பிடிக்குமா பிரணாவ்???????”

கண்களில் ஆர்வத்தை தேக்கி கேட்டவளின் கரத்தை தன் உதட்டினில்

ஒற்றி எடுத்து

” இல்லை ” என்று மறுப்பாக தலையசைத்தவன்

“மழை தான் ‘பெஸ்ட் ‘ என்று நினைத்த போது பிடித்தது

ஆனால் எப்போது நீ தான்!!!! என்று புரிந்ததோ அப்போதிலிருந்தே உன்னில் நனைய தான் பிடிக்கிறது……..

நனையட்டுமா??????????????”

ஆசை வழிந்தோட மோகம் சொட்ட கேட்டவனை பார்க்க திறனிறாது நகர முற்பட்டாள் அவன் பஜாரி  …..

ஆனால் அவள் செய்கையை தடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தான் பிரணாவ்….

” இப்படியே வண்டி ஓட்டுவதற்கு

கம்ஃபர்டபிளாக இருக்காது பிரணாவ் !!!!”

அவள் கூறியதற்கு

” என்னுடைய கம்ஃபர்டபிள் ஜோன் நீ தான்!!!! பேசாமல் உட்காரு…. இல்லாவிட்டால் நாம் வீடு திரும்புவதற்கு  தாமதம் ஆகும் !!!

எனக்கு ஓகே பா …….” எனவும் அமைதியாகிவிட்டாள் மைத்ரேயி….

வீடு வரையில் அவளை தன் மடிமீது உட்கார வைத்தே பயணித்தவன் பகானியை நிறுத்தியதும்

” அழுத்தக்காரா!!!!” அவன் மீசையை பிடித்து திருகிவிட்டபடி இறங்கியவள் அவன் பதில் கூறுமுன்னரே வீட்டிற்குள் தாவியிருந்தாள்….

அங்கு காஞ்சனாவின் கையில் எதோ ஒரு விளையாட்டு பொம்மையை ஆராய்ச்சி செய்தபடி வீற்றிருந்த மைந்தன்

அன்னையை காணவும் ஏக்கம் கொண்டவனாய் மைத்ரேயியிடம் தாவ உந்த

ஈரமான தன் உடையை குனிந்து பார்த்தவள் ” ஒரே ஒரு செகண்ட் உன் பாட்டியிடம் இரு சோட்டு கண்ணா!!!!!” என்று மாடி ஏறினாள்….

” ஏன்டா நீ திருந்தவே மாட்டாயா????” அப்போது ஈரத்துணியுடன் உள்ளே நுழைந்த மகனை காஞ்சனா திட்ட ஆரம்பிக்கவும்

” அப்பா தானே அம்மா திட்டுவார்….

இப்போது அவர் ஹாலில் இல்லை எனவும் நீ ஆரம்பிக்கிறாயா?????” என்றவன்

மகனின் சிணுங்களை கண்டு ” அப்போதிலிருந்து அழுகிறானா அம்மா????” என்றான் வருத்தம் குடியேறிய முகத்துடன்…

அதற்குள் மைத்ரேயி நைட் ஷீட்டிற்குள் மாறியவளாக அங்கு விரைந்து மகனை கைப்பற்றி

” சாரிடா கண்ணா …. அம்மாவை தேடினீர்களா??????” என்று முத்தம் பதிக்க

” சாரி சொன்னால் அவனது ஏக்கம் போய்விடுமா?????” சுள்ளென்று கேட்டிருந்தார் காஞ்சனா….

” அம்மா!!!!!!” என்று பிரணாவ் குரல் கொடுக்க

” உங்கள் எல்லோர் போலும் என்னால் பேசாமல் இருக்க முடியாதுடா !!!!”

என்றுவிட்டு நிறுத்தாமல் தொடர்ந்தார் …..

” சோட்டுவிற்கு எத்தனை மாதங்கள் ஆகிறது?????

காலையிலும் முகம் கூட பார்க்காமல் ஹாஸ்பிட்டலுக்கு ஓடியவள் !!!

இப்போதும் இவ்வளவு லேட்டாக வீடு திரும்பினால்??????

ஆயிரம் பேர் கூடி நின்றாலும் அன்னை போல் வருமா????

எவ்வளவு இன்றியமையாத பணி என்றாலும்????

 பெற்ற மகனை காண முடியாது அப்படி என்ன வேலை முக்கியமாகி போய்விட்டது????

இப்போது என்றில்லை ….. இவள் சோட்டுவிற்கு தாய்பால் கொடுத்திருக்கிறாளா என்று கூட எனக்கு தெரியவில்லை!!!!”

எனவும்

” அம்மா திஸ் இஸ் தி லிமிட்!!!!!” மனைவிக்கு ஆதரவாய் பிரணாவ் போர் கொடி உயர்த்த

அங்கு நிற்க மாட்டாமல் மகனோடு மாடி

ஏறி விட்டாள் மைத்ரேயி…..

அதில் மேலும் கோபமானவர்

“உனக்கு என்னடா தெரியும் அம்மா லிமிட்ஸ் பற்றி???

உனக்கு இரண்டு வயது வரை நான் தாய்ப்பால் கொடுத்தேன்…..

ஏன்

பிரணிதா என்றாலும் உதிதா என்றாலும் கூட இதை தான் நான் சொல்லியிருப்பேன்!!!!!

ஆரம்பத்தில் மனம் ஏற்று கொள்ள தயக்கம் காட்டியபோதும் என் பேரனை நான் தூக்கிய நொடியிலிருந்தே அவன் அன்னையையும் என் மகளாகதான் பாவிக்கிறேன்!!!!

சொல்வதை நின்று கவனிக்க கூட முடியாமல் எப்படி ஓடுகிறாள் பார் !!!”

என்று வருத்தமும் ஆவேசமும் போட்டி போட முறைத்தவரின்

தோள் பற்றியவன் ” அம்மா பிரணிக்காவிற்கும் உதிக்காவிற்கும் நீ இதை தான் சொல்வாய் என்று எனக்கு தெரியும்!!!!

ஆனால் இப்படி கத்திய அடுத்த நிமிடம் அவர்களை அணைத்து ஆதரிக்கவும் தவறமாட்டீர்கள் அல்லவா?????

மைத்தி அன்றைய நிலையில் படிப்பையும் கைவிடாது சோட்டுவையும் தவிர்க்க முடியாது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டிருந்தாள்….

இதை தயவு செய்து பெரிது பண்ணாதீர்கள் அம்மா !!!!”

பெரிய மனிதனாக பேசியவனையும் காஞ்சனா விட்டு வைக்கவில்லை….

” சரிப்பா ராசா!!! நான் பேசியது அனைத்தும் தப்புதான் ….

ஆனால் நீங்கள் செய்வது எல்லாம் சரியா?????

நாளை உதியின் ‘பப்பு’ பிறந்து முப்பது நாட்கள் ஆகின்றன….

நம் வழக்கப்படி பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்திருக்கின்றனர் …..

அது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?????”

” ஹோ!!!!!” என்றவன்

” சொன்னால் தானே அம்மா தெரியும் ” சற்று  கேட்ட போதும் தனக்கு தெரிந்திருக்க வில்லையே என்ற குற்ற வுணர்வு அவனுள் மேலோங்கியது…..

Advertisement