Advertisement

மைத்திரேயி தன் மனதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறிய போதும்

பிரணாவினால் சோட்டுவை  விட்டுக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை…….

 அதுவும் மகன் தன்னிடம் திருப்பிக்கொண்டு இருக்கும் இச்சமயத்தில்!!!

 அதேசமயம் மனைவி கேட்கும் கேள்விக்கு பதில் தரவேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்து விழித்து நிற்கும் போது தான் அவனைக் காப்பது போல் அவளது போன் இசைத்தது….

 அதை எடுத்துப் பார்த்து “யாரோ அன்நோன் நம்பர் !!!” என்று கூறி

அவ்வழைப்பை ஏற்ற மைத்ரேயி

“எஸ் சார்!!”

………..

 “வீ  ட்ரை தி பெஸ்டெஸ்ட் ஃப்ரம் அவர் ஸைட் சார் ……

ஹோப்ஃபுல்லி டுமாரோ ஹி வில் பி ஆல்ரைட்!!!!”

……….

“ஷுயர் சார் !!!”

என்று போனை அணைத்ததோடு

“அப்படி என்றால் யுகி அண்ணனுக்கு தெரிந்தவராக இருக்குமோ??” என்று தனக்கு தானே சத்தமாக யோசித்து வைக்க

“யாருடி பஜாரி ??????” என்றான் பிரணாவ்….

” இன்று மதியம் ஆபரேஷன் பற்றி சொன்னேன் அல்லவா?????

 அவருடைய பையன் தான் கால் பண்ணினார் !!!!

பெயர் நிதிஷ்…… புனே மாவட்டத்தில் தற்போது கலெக்டர் ஆக பணிபுரிகிறாராம்!!”

 கேள்விப்பட்ட பெயர் எனும் போதும் அதில் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை பிரணாவ்….

” ஹோ!!!”  என்று சாதாரணமாக சொன்னவனை ‘பாசமாக’ பார்த்து வைத்தாள் அவன் பஜாரி….

”  இப்போது நான் என்னடி பஜாரி

பண்ணினேன்????? எதற்காக இப்படி முறைக்கிறாய்???”

“நான் போன் பேசும் போது இப்படி பார்த்து வைத்தால்?????

 மதியமும் இதைத்தான் செய்தாய் !!!

 என் கன்சன்ட்ரேஷனை உன்னிடம் தொலைத்து எப்படி நான் போன் பேசுவதாம்???????”  என்றவளிடம்

” எப்படிடி பஜாரி பார்க்காமலேயே நான் உன்னை பார்ப்பதை கண்டுபிடித்தாய்??????” ஆச்சரியம் காட்டினான் அவள் கள்வன்…

 “ஆல் டீடெயில்ஸ் ஐ நோ!!!!”

அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன்

 ”  ஓகே மேடம்!!!! நீங்களே சொல்லுங்கள் நீங்கள் போன் பேசும்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று ?????” அவளிடமே பதிலை கோர

”  கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து இரு!!!! அது போதும்…….”

”  டீல்டி பஜாரி…. நீயும் பேச்சு மாற கூடாது உன் அத்தானும் வாக்கு தவற மாட்டான் !!!!

சரி வா இப்போது எனக்கு ரொம்பவும் தூக்கம் வருகிறது……

  நம் ரூமிற்கு போகலாம்!!!”  என்று அழைத்தவனிடம்

“இல்லை பிரணாவ்…..

 சோட்டு அழுதாலும் அழுவான்!!!!

 நான் இங்கேயே படுத்து கொள்ளட்டுமா????? ” என்றாள் சிறு தயக்கத்துடன் ….

“என் பையன் தூங்கி கொள்வான்டி பஜாரி…..

 ஒழுங்காக வா !!!!”

” நீ போய் படு பிரணாவ் ப்ளீஸ்…..”

 “சொன்னால் கேட்க மாட்டாய்…. நானே தூக்கி போகிறேன்!!!!”  என்று கூறியபடி நெருங்கியவனை கண்டு

 அவள் இதழ்கள் தானாக விரிந்து அவனை வரவேற்க

“இது ஹால் என்று கூட பார்க்க மாட்டேன்டி பஜாரி!!!!”  என்றான் தன்னை மறந்தவனாய் …..

” நான் பார்க்க சொல்லவில்லைபா!!!!”  என்று கண்ணடித்து விட்டு தன் இதழ்களை மூடிக் கொண்டவளின் கரங்களை  அவன் பிரிக்கும் சமயம்

அந்த ஹாலை பாதுகாக்கும் விதமாய்

” கண்ணில் அன்பை சொல்வாளே!!!!”

பாடல் பிரணாவின் போனில் பாடி அவனை தடுத்தது …..

 உடனே மனைவியை விட்டு சற்று நகர்ந்து அமர்ந்தவன் போனை எடுக்க கூட இல்லை ……

“எப்போது தான் பிரணாவ் மாறப்போகிறாய் ??????”  என்று திட்டியபடி பாடல் பாடி முடிக்கும்  முன் கணவனின் கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்து இருந்தாள் மைத்ரேயி …..

“ஸ்வீட் ஹார்ட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

 என்று எதிரொலித்த கண்ணீர் குரலில்  பரிதவிப்பும் பாசமும் போட்டி போட்டுக்கொண்டு மிளிர

” உதிஅண்ணி…… நான் மைத்தி பேசுகிறேன்!!!”  என்றாள் மைத்ரேயி அவசரமாக …..

” ஹோ…… மைத்தி!!!! ம்ம்ம்…. சோட்டுவிற்கு பரவாயில்லையா ??????”

ஏமாற்றத்தை மறைக்க முயன்று தோற்றுப் போனவளாய் உதிதா வினவ

“நன்றாக இருக்கிறான் உதிஅண்ணி…. பப்புமா தூங்கி விட்டார்களா?????”  என்றிருந்தாள் மைத்ரேயி …..

“இப்போது தூங்குகிறாள்…..

 இன்னும் கொஞ்ச நேரத்தில் விழித்து விடுவாள்!!!!!”  என்று கூறும்போது அவளையறியாமல் அழுகையின் மிச்சம் வெளிபட்டுவிட

” ஏன் அண்ணி குரல் ஒரு மாதிரி இருக்கிறது?????

 உடம்பிற்கு பரவாயில்லையா?????”

என்றாள் மைத்ரேயி….

 ” அது…… மைத்தி…..”

” என்ன அண்ணி செய்கிறது????? சொல்லுங்கள் ப்ளீஸ் !!!” என்றாள் கரிசனத்துடன்…..

”  ஒரு வாரமாகவே ஏதேதோ எண்ணங்கள்!!!

 யுகியிடம் கூட என்னால் சரியாக பேச முடியவில்லை…..

 பிரக்னன்சி டைமில் தான் அவரைப் போட்டு நன்றாக வாட்டி வதைத்து வைத்தேன்!!!!

இப்போதும் அப்படி ஏதாவது பேசி அவரை துன்புறுத்தி விடுவேனோ என்று பயந்து பேசாமல் ஒதுங்கி போகிறேன்…..

 அவர் பப்பு மாவை கொஞ்ச வரும் சமயங்களில் என்னால் அந்த இடத்தில்

நிற்க கூட முடியவில்லை…..

 எனக்கு தெரிகிறது நான் செய்வது சரி இல்லை என்று…… ஆனாலும் என்னால் இயல்பாக நடந்து கொள்ள முடியவில்லை!!!!

 யுகி முடிந்தவரை எதையாவது பேசிக்கொண்டே என்னையும் அப்பேச்சு வட்டாரத்திற்குள் அவ்வபோது இழுக்க முயல்கிறார்……

 ஆனால் அப்படிப் பேசும்போது என்னையும் அறியாமல் முன்பு போல் மாறி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது!!!!

 இதற்காகவே இரண்டு நாட்களுக்கு முன் டாக்டரிடம் சென்று என் உடம்பிற்கு என்ன செய்கிறது என்று கேட்டுவிட்டேன்….

அவரோ முழுதும் பரிசோதித்துவிட்டு 5, 6 மாத்திரைகளை எழுதி கொடுத்திருக்கிறார்….

 ஏற்கனவே சத்து மாத்திரைகள் பெயரில் 3 எடுத்துக் கொள்கிறேன்!!!!

 இப்போது இரவில் அந்த மாத்திரைகளை போடவும் அப்படியே குமட்டி விட்டது…..

 மீண்டும் அதனை போட்டுக் கொள்ளவா????

இல்லை விட்டு விடவா மைத்தி??????” என்று உதிதாவின் அழுகுரலை கேட்க நேரிடவும் மைத்ரேயிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது…..

” என்ன மாத்திரை  கொடுத்திருக்கிறார்கள் உதிஅண்ணி????

 பெயர் சொல்லுங்கள்?????”  என்றவள் அவசரமாக எழுந்து தங்கள் அறைக்கு  ஓடினாள் …..

தமையாளின் அழைப்பை மனைவி ஏற்றதுமே மகனை பார்க்க அன்னையின் அறைக்கு சென்ற பிரணாவ், ஹாலிற்கு வரும் சமயம் மனைவி திடுதிப்பென

மாடியேறவும்

என்னவென்று புரியாமல் அவளை பின்தொடர்ந்தான்….

போனை மெத்தையில் வைத்து விட்டு  லாப் டாப்பில் உதிதா  கூறிய மாத்திரைகளின் விவரங்களை மைத்ரேயி தேட ஆரம்பிக்க

 மனைவியை பின்னாலிருந்து அணைத்தவன் அவள் கூறிய டீலின் படி கண்களை மூடிக்கொண்டு

அவள் தோள்பட்டையில் முகத்தை புதைத்த வண்ணம்

நீ உன் வேலையை பாரு நான் என் வேலையை பார்க்கிறேன்!!!!!!

என்பதுபோல்

 தன் வேலையை தொடங்கியவனின்  மீது அவளுக்கு அத்தனை கோபம் எழுந்தது…..

 அனைத்தும் பிபிடி காண மாத்திரைகள்…..

(போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன்)

  இவை எதுவுமே உதிஅண்ணிக்கு தேவையில்லையே????

 இதோ இங்கே அமர்ந்திருப்பனின் ‘உதிக்கா…….” எனும் ஒற்றைச்சொல் போதுமே!!!

உதிஅண்ணியின் நிலையை சீராக்க…….

 உடனே  போனை எடுத்து  ஸ்பீக்கரில் போட்டவள் ” ஒன்றும் பிரச்சனை இல்லை உதிஅண்ணி!!!!

வாமிட்டிங் சென்சேஷன் இருந்தால் இரண்டு நாட்களுக்கு பிறகு கூட அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்….”

 என்றாள்….

 ” சரி மைத்தி….. உன்னிடம் பேசி பிறகு தான் கொஞ்சம் நார்மலாக இருக்கிறது!!!!

  இந்த மாத்திரைகளை போடா விட்டு ஃபீட் பண்ணுவதால் பப்புமாவிற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று தான்  மீண்டும் அனைத்து மாத்திரைகளையும் வாமிட் எடுத்த பின்பும் பிடிவாதமாக உள்ளே செலுத்தினேன்…..

ஆனால் இன்று அப்படியும் எடுக்க முடியாது திணறிதான் பிரணாவை அழைத்துவிட்டேன்!!!!”

  உதிக்காவின் குரல் கேட்கவும் மனைவியை விடுவித்தவன் போய் கட்டிலில் ஒரு ஓரமாக குப்புறப்படுத்துக் கொள்ள

“அதற்கும் ஃபீட் பண்ணுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை உதிஅண்ணி!!! சீக்கிரம் சரியாகிவிடும் ……

யுகி அண்ணாவிடம் பேச முயற்சி செய்யுங்கள்…. ப்ளீஸ் !!!!”  என்று போனை

அணைத்தவள்

“இப்போது சந்தோஷமா?????”  என்று கத்தினாள் கணவனிடம்  ….

 ஆனால் எந்த பதிலும் வராது போகவும் வேகமாக எழுந்து சென்று அப்படியே அவனை அடிக்க போனவள்

” என்னமோ பண்ணு …..

அங்கு சிரமப்படுவது உன் உதிக்கா!!!! அதுவும் உன்னால் என்பதை மட்டும் மறக்காதே!!!!”  என்று கூறிவிட்டு

அவனுக்கு அடுத்த பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டாள்…..

 சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்த்தவள் அவன் அப்படியே குப்புறப் படுத்தபடி உறங்கி இருப்பதை காணவும் மீண்டும்

சில அர்ச்சனைகளை வழங்கிவிட்டு தானும் உறங்கிப் போனாள்……

 காலையில் ஏழு மணி அளவில் கண்விழித்தவனுக்கு அருகில் மனைவியை காணாது

 இரவு சோட்டு அழுது இருப்பானோ?????

 இவள் தன்னை எழுப்பாமலேயே கீழே சென்று படுத்து விட்டாளோ????? என்று தான் முதலில் எண்ணினான் ….

பிறகு அங்கு ஷெல்ஃபில் ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக் பேட் அவன் கவனத்தை ஈர்க்க

அதை வேகமாக பாய்ந்து பறிக்கவும்

தனக்கான மனைவியின் செய்தியை அது தாங்கி இருப்பது  தெரிந்தது  …..

“குட் மார்னிங் பிரணாவ்…..

ஐ ஹாவ் டு கோ ஏர்லி!!!

  உன் பகானியை எடுத்துச் செல்கிறேன்…..

 நீ வேறு காரை யூஸ் பண்ணிக் கொள்!!!

 அப்புறம் நீ தூங்கும்போது உன் முன் நெற்றியில் ஒரு முத்தம்  கொடுத்திருக்கிறேன்……

 அதை  மறக்காமல்  இரவு திருப்பி கொடுத்துவிடு…  பை !!!!”

அவள் கையெழுத்தில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களை வாசித்தவனின் இதழ்கள் விரிய

கைகளோ அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் ஒட்டி இருக்கிறதோ என்று நெற்றியைத் தடவி பார்த்தது!!!!!

 தனது விடியலை அழகாக மாற்றிய தென்றலை பார்க்க துடித்தவனுக்கு தற்போது அது முடியாத காரியம் என்பது தெரிந்ததால்

கீழே இறங்கிச் சென்றான்…..

 அங்கு காஞ்சனா சோட்டுவை மடியில் படுக்க வைத்து எதையோ புகட்டிக் கொண்டிருக்க மகனை தொந்தரவு செய்யாத வண்ணம் அவனும்  அன்னை மடி சாய்ந்தான்….

பிரணாவை பார்த்ததும் சோட்டு அழுகவும் இல்லை அதேசமயம் கண்டுகொள்ளவும் இல்லை….

 ஆனால் காஞ்சனா ” உன் பையன் போட்டிருக்கும் சட்டை பிடித்திருக்கிறதா பிரணாவ் ?????”  என்று ஆர்வத்தோடு கேட்க

”  நீங்கள் வாங்கினீர்களா அம்மா ????

ஓல்ட் பேஷனாக இருக்கிறதே!!!!!”  என்றான் தன் மனதில் தோன்றியதை ….

” அட போடா!!! அந்த காலத்தில் இதுதான் நியூ ஃபேஷன்!!!”  என்று அவர் சலித்து

கொள்ள

”  என்னுடையதா அம்மா?????”  என்றான் கண்கள் விரிய…..

” என் சட்டை எல்லாம் போட்டுக்கோடா மவனே!!!! ஆனாலும் என்னிடம்  வராதே!!!!!”   என்று முகம் சுணுங்க

பாட்டியிடம் ஏறிக் கொண்டான் சோட்டு…..

 பிரணாவிற்கு கஷ்டமாக இருந்தபோதும் ” அப்பா ஆஃபிஸ் போய்விட்டு வருகிறேன் சோட்டு…..

 பாட்டியிடம் அழுகாமல் சமத்தாக இருங்கள்!!!!”  என்று கூற

தன் பொக்கை வாயை காட்டியிருந்தான் மைந்தன்…..

 அதுவே பஜாரி வழங்கிய முத்தத்தின் பொருட்டு ஜொலித்த  முகத்தினை

மென்மேலும் பொலிவாக்க தன் வேலையை கவனிக்க சென்றான் பிரணாவ்…..

மதியம் கூட வீட்டிற்கு திரும்பாது அலுவலகத்திலேயே தனது நாளை கழித்திருந்தவன்

இரவு பெய்த பேய் மழையில் எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்திருந்தான்….

 வாசலிலேயே மகனின் அழுகைச் சத்தம் பிரணாவை வரவேற்க

” ஏன் அம்மா எப்போது இருந்து அழுக ஆரம்பித்தான்??????”  என்று பதறியபடி ஓடி வந்து கேட்டான் தன் அன்னையிடம்…..

 “காலையிலிருந்து சும்மா தான்

இருந்தான்…..

இப்போது கூட தூங்கிவிட்டான்…. இந்த இடி சத்தம் தான் எழுப்பி விட்டது போலும்!!!!”  காஞ்சனா கூறிய பதிலில் திருப்தி அடையாதவன்

 “எங்க அம்மா அவள்?????

 இன்னும் வரவில்லையா?????” சுற்றுமுற்றும் அலைபாய விட்ட கண்களுடன்  வினவ

அன்னையின்  பதிலை எதிர்பாராமல் போனை எடுத்து அவளை அழைத்திருந்தான்……

” லேட் ஆகுமாடி பஜாரி??????”  கணவனின் கேள்விக்கு

“ஏன் பிரணாவ் சோட்டு அழ ஆரம்பித்துவிட்டானா??????” என்று மறு கேள்வி கேட்டிருந்தாள் அவன் மனைவி…..

 பதற்றப்படுவாளே என்று

“இல்லை”  என பதிலளித்தவன்

“இந்த மழையில் எப்படி  வருவாய்?????

 நான் வருகிறேன்!!!!”  என்றான்……

” இல்லை பிரணாவ்…. பகானி இங்கு தானே நிற்கிறது!!!!

 நான் வந்து விடுவேன்……

 இன்னொரு கால் வருது பிரணாவ்….

 நான் பிறகு கூப்பிடுகிறேன்!!!!”  என்று விட்டு போனை அணைத்தவள்

 நிதிஷின்  அழைப்பை ஏற்று

”  நான் ஹாஸ்பிடலில் தான் சார் இருக்கிறேன்!!!!!”  என்று கூறும் போது வாசலில் ஓர் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவும் விரைந்து சென்று பார்த்தாள்….

ஆம்புலன்ஸ் மகப்பேறு கட்டிடத்தின் வாயிலில் நிற்க இரண்டு பேர்  ஸ்ட்ரெக்சரை எடுத்துக் கொண்டு வருவது தெரிந்தது…..

 இன்று கைனகாலஜிஸ்ட் 2 பேர் லீவ்!!!!! என்று மருத்துவர் ஒருவர் மதிய உணவின் போது பேசி சென்றது மைத்ரேயிக்கு ஞாபகத்திற்கு வர

உடனே அங்கு ஓடினாள்…..

 பிரசவ அறையில் விதுல்யா மட்டும் நிற்க தான் செல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தவள்

பிறகு  எதையும் குழப்பி கொள்ளாதவளாக தான் வந்ததற்கான செயலில் வேகமாக ஈடுபட தொடங்கினாள்…..

 நர்ஸ் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு பிரசவத்தை எதிர்கொள்ள நினைத்த விதுல்யாவிற்கு மைத்ரேயியின் வரவு பேருதவியாக அமைந்திருக்க

“தொப்புள் கொடி சுற்றிக் கொண்டு விட்டதோ டாக்டர்????

 ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யட்டுமா?????” நர்ஸ் ஒருவர்  கேட்ட கேள்விக்கு

” இல்லை வேண்டாம்!!!!”  என்ற விதுல்யா

மைத்ரேயியிடம் குழந்தையின் வரவை கவனிக்க சொல்லி கூறிவிட்டு ஸ்கேன் பார்க்க ஆரம்பித்தாள் ……

 நிலைமை உணர்ந்து உடனே ஜெல் வைக்கவும் அடுத்த இரண்டாவது வலியில் குழந்தை சுகப்பிரசவத்திலேயே வெளிவந்து விட குழந்தையை

மைத்ரேயியிடம் ஒப்படைத்த விதுல்யா தையல் போட ஆரம்பித்தாள்…..

 குழந்தையை கையில் ஏந்தியவள் தானே அதனை கழுவி சுத்தம் செய்து நர்ஸ் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு தனது பிளாக்கிற்கு செல்ல அடுத்த 15 நிமிடத்தில் மிஸஸ். மைத்ரேயி பிரணாவின் அறையை  இரு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்  விதுல்யா……

Advertisement