Advertisement

மருத்துவமனையில் மைத்ரேயி கிளம்பிவிட்டதாக கூறவும் துணுக்குற்றவன்

மீண்டும்  ஒருமுறை அவளை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, அவனது கைபேசி முந்திகொண்டு

” உனக்காக வாழ நினைக்கிறேன் ….

உசுரோட வாசம் புடிக்கிறேன்!!!!!”

என்று பாடியது…..

” எங்கேடி பஜாரி இருக்கிறாய்????

முதலில் கூப்பிட்ட போது உனக்கு சிக்னல் கிடைக்கவில்லை …….

எங்கு என்று சொல்லு!!! இப்போதே  நான் அங்கு வருகிறேன்!!!”  என்று ஹலோ கூட சொல்லாது பொரிந்து தள்ளிவிட்டு வாசலுக்கு விரைந்தவனை அவளது பதில்

சற்றே ஆச்சரியம் மூட்டியது……

”  இல்லை வேண்டாம் பிரணாவ்….

 ஒரு ஐந்து நிமிடத்தில் நம் வீட்டிற்கு வந்து விடுவேன்….

 கேப்-பில் தான் வந்து கொண்டிருக்கிறேன்!!!! “

” ஏன்டி பஜாரி ???? என்னை அழைக்கலாம் அல்லவா?????”  என்றவன் மீண்டும் அவள் சொன்னதை நினைவுகூர்ந்து

” என்னது டாக்ஸியிலா?????” என்றான் அதிர்ச்சியாக ….

பின்னே அவள் பகானியை பார்த்ததும் மருத்துவமனைக்கு ஒரு கேப் கூட புக் பண்ணி போகாமல் ஏன்டி பஜாரி பஸ்ஸில் சென்றாய் என்று மும்பையில் பிரணாவ் கேட்டதற்கு

 “சோட்டோவிற்கு முன்புவரை எனக்கு

பயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை…..

 ஆனால் அதன் பிறகோ எல்லா விஷயத்தையும் நான் யோசித்து நிதானித்து தான் செய்ய ஆரம்பித்திருந்தேன்…..

 அப்படி ஒரு டாக்ஸி காரனை கூட நம்புவதற்கு எனக்கு சக்தி இல்லாமல் போய்விட்டது!!!!”

 என்று மனைவி அளித்த பதிலில் அன்று ஊமையாகிப் போனான் பிரணாவ்…

 அப்படி சொன்னவள் இன்று டாக்ஸியில் வருகிறேன் என்று கூறவும்

“ஏன்டி பஜாரி இப்போது உனக்கு பயம் எல்லாம் போய் விட்டதா??????” என்றான் உடனடியாக….

“நீ இருக்கும்போது எனக்கு என்ன பிரணாவ் பயம்???????

 என்ன மாதிரியான பிரச்சனை வந்தாலும்

அதை ஈசியாக சாட் அவுட் பண்ணுவதற்கு உண்டான என் மாபெரும் நம்பிக்கையே நீ தான்…

 இதோ நம் கேட் அருகில் வந்து விட்டேன்…..

என்ன பண்ணுகிறான் சோட்டு ??????

அழுகாமல் இருக்கிறானா ?????”

பேசியபடியே  வீட்டு கதவை திறந்தபடி உள்ளே நுழைந்தாள் மைத்ரேயி …..

இன்றும் அவளது பேச்சில் ஊமையாகி போய் வாசலிலேயே   நின்றவனின் அருகில் வந்தவள் அவன் முகத்தை கண்டு பயந்து

” சோட்டு அழுது கொண்டே இருக்கிறானா?????”  என மீண்டும்  கேட்டபடி  உள்ளே செல்ல முற்பட்டாள் ….

 ஆனால் அவனோ அவள் கரம் பிடித்து தடுத்து நிறுத்தி

அவள் யூகிக்கும் முன்னே அவள் முன்னுச்சியில் முத்தம் பதித்தான்…

கணவனின் திடீர் முத்தத்தில் அவள் கன்னங்கள் வழக்கம் போல் சிவந்த போதும்

இதழ்கள் அவ்வளவாக அதிர வில்லை என்பதை அவை திறவாமல் வெளிபடுத்தின ….

” என்ன பண்ணுகிறாய் பிரணாவ்???? அதுவும் வீட்டு வாசலில் ???”

போலியாக சண்டை பிடித்த போதும் அவனை விட்டு துளியும் விலகாது நின்றாள் ….

” என்ன பண்ணுகிறேனா?????

 ம்ம்ம்ம்ம்?????” என்று யோசித்தவன் இம்முறை அவள் ரோஜா இதழ்களை நெருங்க

” போடா !!!!” என்று தள்ளிவிட்டிருந்தாள்

மைத்ரேயி   ……

” வர வர புருஷனுக்கு மரியாதையே தருவதில்லை…. சேர்த்து வைத்து வட்டியை வசூலிக்க போகிறேன் பார் !!!”

” பார்க்கலாம் பார்க்கலாம்!!! இப்போது வா சோட்டு என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் “

என்று நகர்ந்தவளின் பின்னோடு வந்தவன்

” தூங்குறான்டி பஜாரி… மெதுவாக செல்!!!” என்று கூறியபடி அழைத்து சென்றான்…

காஞ்சனாவின் அறையில் மகன் உறங்குவதாக பிரணாவ் கூறவும் தன்னறைக்கு சென்று குளித்து விட்டு வந்தவள் டைனிங் டேபிளில்   ஆப்பத்தை ரசித்து ருசித்து கொண்டிருந்தவனின் அருகில் அமர்ந்தாள்…..

” சாரிடி பஜாரி … உனக்கு வெயிட் பண்ணதான் நினைத்தேன்… இந்த ஆப்பம் தான் கண்ணடித்து சதி பண்ணி என்னை அதன் பக்கம் இழுத்து விட்டது!!!

அதற்காக அதன் மேல் நீ கோபித்து கொண்டு சாப்பிடாமல் இருக்காதே…

வா வந்து சாப்பிடு!!!! ” அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு அடுத்த விள்ளலை வாயில் திணிக்க முயன்றான் பிரணாவ்….

ஆனால் கணவனின் கையை பிடித்து அவன் பிய்த்திருந்த ஆப்பத்தை தன் வாயில் வைத்த மைத்ரேயி அவன் தட்டை தன் பக்கம் நகர்த்தி சாப்பிட ஆரம்பிக்க

பூத்த புன்னகையை இதழ்களுள் சிறைபிடித்து

” மதியம் நீ செய்தது போல் இன்னொரு தட்டை எடுத்து நான் தனியே வேஸ்ட் பண்ண மாட்டேன்டி பஜாரி… எனக்கும் நீ தான் ஊட்டிவிட வேண்டும் !!!” என்று ஆ

காண்பித்தான்…..

மறுக்காமல் ஊட்டிவிட்டவள் அப்போது அங்கு வந்த கதிரேசனை பார்க்கவும்

என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து நிற்க

” ஹேய் உட்காருடி பஜாரி!!! ஸ்கூல் டீச்சரை பார்த்தது போல் நிற்கிறாய்?????” பிரணாவ் அவள் கரத்தை பிடித்து அமர வைக்கவும்

 மீண்டும் கதிரேசனை பார்த்துவிட்டு எழ முயன்றாள் மைத்ரேயி…

அதனை கண்டவரோ ” உட்காருமா…. மும்பை போன காரியம் நல்லபடியாக முடிந்ததா????” சகஜமாக பேச ஆரம்பிக்க

அவளுக்கு அதிர்ச்சியில் விக்கலே வந்துவிட்டது…

உதிதாவின் தந்தை ரகுநாதன் கூட

மைத்ரேயியிடம் பேசியதுண்டு……

சின்ன மாமனாரின் கேள்விகளுக்கு உரிய பதிலை ஓரிரு வார்த்தைகளில் நிறுத்தி கொள்பவள் இன்று முதன்முறையாக கதிரேசன் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் திணறினாள்….

” அவர் என்ன சிங்கமா பூதமா???

இப்படி பயப்படுகிறாள் உன் பொண்டாட்டி??? மாமனார் கேட்கும் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்ல சொல்லுடா ” என்றபடி தண்ணீர் ஜக்குடன் அங்கு வந்த காஞ்சனா மைத்ரேயியின் அருகில் இருந்த டம்ளரில் தண்ணீரை ஊற்றினார்….

” செம்ம பெர்ஃபார்மன்ஸ் அம்மா …. சீரியல் மாமியார் தோற்றுவிடும்!!!” என்று கைதட்டிய பிரணாவ்

” அதென்ன சந்தடி சாக்கில் அப்பாவை

பூதம் என்கிறாய்????” என்று வம்பிழுத்தான்…

மைந்தனின் முதுகில் லேசாக ஒன்று வைத்த காஞ்சனா ” அடங்கமாட்டாயாடா நீ ????” என்று  கேட்டுவிட்டு

” நீங்கள் முன்னமே வந்துவிட்டீர்கள்……

பிரணாவ் கூட வந்துவிட்டான்…..

ஏன் உங்கள் தம்பியை இன்று இன்னும் காணோம் ????” என்றார் தன் கணவனிடம்….

” உதியையும் பப்புமாவையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்றான்…. இதோ அவனே வந்து விட்டான்!!” என்று கதிரேசன் கூறும் சமயம் ரகுநாதன் வீட்டினுள் நுழைந்திருந்தார்….

மகனை அலுவலகத்தில் பார்த்திருந்தவர் இரு தினங்கள் கழித்து பார்த்த மருமகளிடம்

” என்னமா மைத்தி மும்மை வேலை முடிந்ததா??? பேரன் அழுதான் என்று

யசோதா கூறினாள்!! இப்போது பரவாயில்லையா???” என்றார்…

” முடிந்து விட்டது … சோட்டுவிற்கு இப்போது பரவாயில்லை!!!” என்று கூறியவளை கண்டு கோபமான காஞ்சனா

“என்னமோ நான் சீரியல் மாமியார் போல நடந்து கொள்கிறேன் என்றாய்…

உன் பொண்டாட்டி மட்டும் எப்படி பேசுகிறாள் பார்!!!????????” மகனிடம் குற்றபத்திரிக்கை வாசிக்க

” எத்தனை முறை ‘முறை’யோடு அழைக்க சொல்லி சொல்லி இருக்கிறேன் !!!” பிரணாவும் சலித்தபடி தான் கூறினான்….

ஆனால் அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் மேற்கொண்டு காஞ்சனா எதையோ கூறுவதற்கு முன்

” உனக்கு எப்படி பேச வருகிறதோ

அப்படியே பேசுமா…. அதற்கு உனக்கு இங்கு எல்லா உரிமையும் இருக்கிறது!!!!

யாரும் கட்டாய படுத்த மாட்டார்கள்…….” என்று சிறு கட்டளை தொனிக்க கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார் கதிரேசன்….

அவரோடு ரகுநாதனும் செல்லவும்

 ” சாப்பிடுங்கள் தம்பி !!” என்றார் காஞ்சனா….

“அங்கு மாப்பிள்ளை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன் அண்ணி !!!!” என்று ரகுநாதன் உள்ளே சென்றுவிட காஞ்சனாவும் அவர் அறைக்கு திரும்பி விட்டார்….

எதுவும் பேச முடியாமல் சங்கடமாக அமர்ந்திருந்தவளின் நிலை புரிய

” கமான்டி பஜாரி…. எனக்கு பசிக்குது !!!” என்று மீண்டும் ‘ஆ ‘ காண்பிக்க

” என் மேல கோபமா பிரணாவ்?????” என்றாள் உடைந்த குரலில்….

“உன் அத்தானை இன்னும் நீ சரியாகவே புரிந்து கொள்ள வில்லை…….

ஒருவேளை கோபமாக இருந்தால் எடுக்கும் பசிக்கு இப்படியா என் வாயை திறந்து கொண்டிருப்பேன்????

இந்நேரம் உன்…..”

அவனை மேற்கொண்டு பேச விடாது அவன் வாயில் ஆப்பத்தை திணித்திருந்தாள் அவன் பஜாரி…

சாப்பிட்டு முடித்ததும் மகனை தூக்கி வரும்படி கணவனிடம் மைத்ரேயி சொன்னதற்கு

” நான் தூக்கினால் கண்டிப்பாக அழுவான்…. நீயே போய் தூக்கி வாயேன்!!!!”  என்றான்  பிரணாவ்…

பாதி சாத்தினாற் போல் இருந்த கதவை ஒரு முறை தட்டிவிட்டு மைத்ரேயி உள்ளே செல்ல

அங்கு துயில் கொண்டிருந்த பேரனின்

 காலை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தார் கதிரேசன்…..

 காஞ்சனாவோ ஒரு ஸ்டூலை போட்டு அதில் மேலே ஏறி பரணியில் எதையோ தேடிக்கொண்டிருக்க

 கவனம் முழுவதும் சோட்டுவிடம் இருந்தபோதும்

“பார்த்து பார்த்து விழுந்து வைக்கப் போகிறாய்!!!!

பிரணாவை கூப்பிட்டு எடுக்க சொன்னால் தான் என்ன?????”  என்று கதிரேசன்  அதட்டல் தொனியில் கேட்டிருந்தார்….

 ” அவனுடைய சட்டையை அவனையே கூப்பிட்டு எடுக்கச் சொன்னால்

நன்றாகவே இருக்கும்?????”  என்ற காஞ்சனா

சில துணிமணிகளோடு கீழே இறங்கி

” இந்த சைஸ் நம் ராஜாவிற்கு  சரியாக இருக்கும் அல்லவா??????”  என்ற கேள்வியோடு பிரணாவின்  சிறு வயதில் பயன்படுத்திய ஆடைகளை கடை பரப்பினார்  …..

 அப்போது அங்கு வந்த மருமகளை பார்த்து விட்டவர் அவள் எண்ணம் புரிந்து

” சோட்டு மாலை எல்லாம் அழுது கொண்டேதான் இருந்தான்….

 இப்போது ஒரு மணி நேரமாக தான் தூங்குகிறான்…. இங்கேயே தூங்கட்டும்!!!!”  என்றார்….

 ஆனால் அவளோ சற்றே தயங்கியபடி “இரவில் முழித்தான் என்றால்

கண்டிப்பாக என்னைத்தேடி உங்களுக்கு தொந்தரவு கொடுப்பான்!!!!”  என்று இழுக்க

” அப்படிப் பார்த்தால் நீ வேலைக்கே சென்றிருக்க கூடாது!!!!

 வீட்டிலேயே இருந்து உன் பையனையே முழுதும் கவனித்துக் கொள்ளலாமே ?????”

என்று தன் சத்தத்தை உயர்த்தினார்….

 அதற்கு கதிரேசன் மனைவியிடம்

 ” என்ன இது??????”  என்று ஆரம்பிக்கவும்

” நான் உங்கள் மருமகளை எதுவும் சொல்லவில்லைபா…..

 என் பேரனை  பார்த்துக் கொள்வதில் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று நீங்களே அவளிடம் சொல்லி விடுங்கள்!!!!!” என்று திருப்பி கொண்டார்…

” அவன் தூங்கட்டும்மா…. அழுதால் நான் கூப்பிடுகிறேன்!!!!!”  என்று கதிரேசன் கூறவும்

“சரி !!!!!” என்று தலையை ஆட்டிவிட்டு உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றிருந்தாள் மைத்ரேயி….

 ஹால் சோபாவில் சம்மணமிட்டு டிவி ரிமோட் பட்டன்களை மாற்றி மாற்றி அமுக்கிய வண்ணம் அமர்ந்திருந்தவனின் அருகில் சென்றவள்

 அவன் மடியில் தலை வைத்து படுக்கவும்

 இயல்பாக அவன் கரங்கள் அவள் முடியை கோத ஆரம்பித்தது…..

” எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது பிரணாவ்!!!!”  என்று மனைவி கூறவும்

 டிவியை அமர்த்தியவன் “என்னாச்சுடி பஜாரி??????”  என்று வினவ

“இன்று மதியம் ஒரு கிரிட்டிக்கல் கேஸ்….

 என் டாடி வயது தான் இருக்கும்!!

 ஹார்ட் அட்டாக் வந்த நொடியில் இதயத்தின் ஒரு மூலையில் மட்டும் ரத்தக்குழாயில் ரத்தத்தை பாய்ச்ச அனுமதித்தவாறு உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிக் கொண்டிருந்தார்…..

 எங்களால் முடிந்த அளவிற்கு டிரீட்மெண்ட் செய்துவிட்டோம்…..

 இன்னும் ரிப்போர்ட்ஸ் வந்தால் தான் சரியாக சொல்ல முடியும்!!!!

 அவர் பிழைத்துக் கொள்வார் தானே பிரணாவ்???????”  என்று கடைசி வாக்கியத்தை எழுந்து அமர்ந்தவள்

கணவனின் வார்த்தைகளிலும் நம்பிக்கையை எதிர்பார்த்து

கேட்டிருந்தாள் …

 அவள் கரங்களை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்

“கண்டிப்பாகடி பஜாரி….. மாமாவின் ஆசி எப்போதும் உனக்கு துணை நிற்கும்!!!

 அப்படி அவரது ஆசியோடு நீ மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் நிச்சயம் வெற்றியை சந்திக்கும்!!!!” என்றான் தெம்பூட்டும் விதமாக…

 ஆனால் அப்போதும்  முகம்  தெளிவு பெறாமல் எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தவளிடம்

” இப்போது என்ன?????

 இங்கு இருக்கும் சின்ன மூளையில் எதையாவது போட்டு குழப்பிக் கொண்டே இருந்தால் இந்த அத்தானின் ஹார்ட்டில் என்ன இருக்கிறது என்று எப்போது யோசிப்பாய்??????”  என்று பிரணாவ்

கேட்டிருந்தான் அவளை சகஜமாக்கும் பொருட்டு….

”  சோட்டு இன்று மாலையும் அழுதானாம்…..

பிறந்ததிலிருந்து இப்படி இல்லையே????

 எப்போதாவது தான் அழுவான்!!!!

 ஒருமுறை நிறுத்தி விட்டால் பிறகு சகஜமாகி விடுவானே??

ஆனால்……”

பேசி சென்றவளிடம்

 “இப்போது ஹாஸ்பிட்டல் கூட்டி போகலாமாடி பஜாரி?????

 டெஸ்ட் ஏதாவது இல்லை ஸ்கேன் மாதிரி எதையாவது எடுத்து பார்த்தால் தெரியுமா?????”  அவளுக்கு மிச்சமாய்  பதற ஆரம்பித்தான் பிரணாவ்….

 ” பார்க்கலாம் பிரணவ் ….. இரண்டு நாட்கள் கழித்து அப்போதும் இப்படி

அழுதானெனில் ……”  அவளை பேச கூட விடாது

தானும் எழுந்து அவளையும் எழுப்பி

” இப்போதே பார்க்கலாம்…..

 இரண்டு நாட்கள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது!!!!”  சிறுபிள்ளை தனமாய் அடம் பிடித்தவனை இப்போது சமாளிப்பது அவள் முறை ஆயிற்று….

 உட்கார்ந்தவள் அவனையும் அமர செய்து “அலைச்சல் கடத்தல் இப்படி ஏதோ ஒன்றில் சோட்டுவிற்கு உடம்பு வலி ஏற்பட்டிருக்கிறது போலும் …..

ஒரு டு டேஸில் சரியாகி விடும்….

ஒருவேளை அப்படியும் ஆகவில்லை என்றால் பார்க்கலாம்…. சரியா??????” பொறுமையாக விளக்கவுரை ஆற்ற

 “என்னமோ போ !!!!” என்றான் மனைவியின் பேச்சை ஏற்றுக்

கொள்ளாதவனாய் …

அவனை தன் புறம் திருப்பியவள்

“எப்படி பிரணாவ் உனக்கு சோட்டுவை இவ்வளவு பிடிக்கிறது???????”  என்றாள் சிலிர்த்தபடி உண்மையாகவே புரியாமல் …

ஆனால் அவனோ அவளது கேள்வியின் தாக்கம் புரியாமல் மகனின் அழுகை வேறு சஞ்சலத்தை விதைக்க

” உன்னையே  பிடிக்கிறது!!! என் பையனை எப்படி  பிடிக்காமல் போகும்??” உளறி வைக்கவும்

“என்னது ??? உன்னையையே பிடிக்கிறதா ???”  இடுப்பில் கை வைத்து முறைத்தவள்

“உனக்கு அவனை முதலில் பிடிக்குமா இல்லை என்னை பிடிக்குமா??? ” என்றாள் சண்டைகோழியாய்  …..

இக்கேள்வியை சத்தியமாக மனைவியிடம் எதிர்பாராதவன் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து கொண்டு

 ” வெரி டஃப் கொஸ்டீன்டி பஜாரி… ஸோ பாஸ்!!!” என்றான்….

” பாஸ் சொன்னாய் என்றால் நீ ஃபெயில்…. போடா!!!” என்று அவனை விட்டு அவனவள் விலக எத்தனிக்க

அவளது செய்கையை எளிதாக தடுத்தவன்

” அத்தானை இப்படி ஒன்றுமே செய்ய விடாமல் ஃபெயில் ஆக்கி விட்டிருக்கிறாய்டி பஜாரி !!” சரசமாக

உரையாடி அவள் முதுகில் தன் முகத்தை பதித்து உறவாட முயன்ற போது திமிறினாள்…..

” போனால் போகுதே என்று பிடிக்குமாம்!! ஆனால் இப்படியும் செய்வானாம்!!” முணுமுணுத்தபடி

” என்னை விடு பிரணாவ் !!!” என்று விலக

” இப்போது என்னடி உன் பிரச்சனை????” என்றான் சிறு கடுப்புடன்….

” பேசுவதையும் பேசிவிட்டு கோபம் வேறா??? உனக்கு சோட்டுவை தானே ரொம்ப பிடிக்கும் ???” மீண்டும் ஆரம்பிக்க

” சரி நீ சொல்லுடி பஜாரி ….

முதலில் உனக்கு என்னை பிடிக்குமா என்றே எனக்கு இத்தனை நாட்கள் தெரியவில்லை…….

ஆனாலும் ஸேம் கொஸ்டீன்!!!

சோட்டுவா இல்லை உன் அத்தானா????”

இத்தனை நாட்களில் அவள் எதற்கும் மாற்றி பேசி அவன் கண்டதில்லை …. ஏன் அத்தனை பேர் குழுமியிருந்த

ஆடிட்டோரியத்திலேயே அவள் மனதை மறையாது ஸ்ரீதீப்பிடம் நேரிடையாக விடை கொடுத்தவள் ….

அப்படி இன்று “என் பையன் தானே ஃபர்ஸ்ட் வந்தான்… அதனால் அவன் தான்”

இப்படி எதையாவது சொல்வாள் என்று எதிர்பார்த்து பிரணாவ் அவளையே பார்த்திருக்க

அவன் பஜாரியோ வேறு சொன்னாள் ……

” சோட்டு பிறந்து அவனை கையிலேந்திய நொடியிலேயே முடிவுசெய்து விட்டேன்….

இனி ஆயுளுக்கும் அவன் தான் என்று !!!!

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் எனும் பந்தத்திற்கு மனம் திணிக்கபட்டிருந்த போதும் வாழ்வின் மீது

ஒரு பிடித்தம் ஏற்பட்டுவிட வில்லை …..

முடிந்த வரையில் என்னை மாற்றி கொள்ள வேண்டும் !!!! என்ற யோசனையுடன் தான் திருமண மேடையில் காலை எடுத்து வைத்ததும்…

ஆனால் … இப்போதோ????

 எனக்கு வாழ வேண்டும் பிரணாவ் !!!!!

 அது என் மகனிற்காக மட்டுமில்லாமல்

 எனக்காக!!!!

எனக்காக நான்….. உன்னோடு வாழ வேண்டும் எனும் ஆசை வரையறுக்க முடியாத அளவிற்கு மனதில் நிறைந்திருக்கிறது …..”  என்றவளையே இமைக்காமல் பார்த்தான் பிரணாவ்…

நான் இப்போது வாழ்வதே உன்னால்,

உனக்காகடா அத்தான் !!!!!

எனும் வரியை உணர்த்திவிட்டவளிடம் மொத்தமாய் தன் கண்களை விற்றவனை

” இப்படியே பார்த்து என்னை மெஸ்மரைஸ் பண்ணாத பிரணாவ் !!!

இப்போது எனக்கு நீ சொல்லு !!!!”

விடாது கருப்பு!!!!!!! ரீதியில்

அடம்பிடித்து காதலை யாசிப்பவயிடம் கூட அவ்வளவு எளிதாக அவன் மகனை விட்டு கொடுத்துவிட முடியவில்லை பிரணாவினால்………

என்ன சொல்லி தன் பஜாரியை வழிக்கு கொண்டு வருவது ??? என்று திணறிய சமயம் அவனை காப்பாற்றுவது போல் அவளை அழைத்தது அவள்  போன்….

Advertisement