Advertisement

 மைத்ரேயியின் அப்பா தமிழ்வாணன் இறந்த தினத்தன்று முதன்முதலாக சோட்டுவை பார்த்திருந்த ஸ்ரீதீப்  தன்னிச்சையாக தூக்க விழைய மைத்ரேயி ஓடி வந்து தடுத்திருந்தாள்…..

இன்றும் அப்படி ஏதாவது சொல்வாளோ என்று தான் ஸ்ரீதீப் அவளிடம் கேட்டது …

ஆனால் எதிர்பாராத விதமாக பிரணாவ் தடுக்கவும்

”  அதை மைத்தி சொல்லட்டும் !!!!!” ஸ்ரீதீப் அடக்கப்பட்ட ஆவேசத்துடன் தன் பற்களை கடித்தான்….

” நான் சொன்னாலும் அவள் சொன்னது போல் தான்!!!!!”  அதட்டலாக கூறினான் பிரணாவ்…..

” ஒரே ஒரு முறை தானே??? இங்கேயே

தூக்கிப் பார்த்துவிட்டு கொடுத்து விடுவான் பிரணாவ்”

ஸ்ரீதீப்பின் பக்கம் குரல் கொடுத்தவளை முறைத்தவன்

” முடியாது!!!

 என் பையனை கண்டவன் தூக்குவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்!!!!”  பிடிவாதத்துடன் அழுத்தமாக கர்ஜித்தான்…..

  அவனது கத்தலில் சோட்டு பயந்து அழ ஆரம்பிக்க ஸ்ரீதீப்பின் ரத்த பந்தமோ அவனை மீறி செயல்பட வைத்தது….

”  பேபி பக்கத்தில் இருப்பதை கூட  பாராமல் இப்படியா கத்துவாய்????”

பிரணாவை தள்ளிக்கொண்டு சோட்டுவை தூக்க முற்பட்டான் ஸ்ரீதீப்….

 ஆனால் நொடிக்குள் தன்னை சமன்படுத்தி கொண்ட பிரணாவ், ஒரு கரத்தால் ஸ்ரீதீப்பை தடுத்து

மேற்கொண்டு அழுவான் என்று தெரிந்தும்

வியானிடமிருந்து சோட்டுவை  வாங்கியிருந்தான் ……

தந்தையின் செயலில்

சோட்டு வீறிட்டு கத்த தொடங்க

 அதனைக் கண்ட ஸ்ரீதீப்பிற்கு பிரணாவின் மேல் கொலை வெறி உண்டாக

” டேய்ய்ய்” என்றபடி ஆவேசமாக கையை ஓங்கி விட்டு

அடுத்த நொடியே தனது தாக்குதலால் பிரணாவின் கையில் அழுது கொண்டிருக்கும் சோட்டுவிற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று தன் கையை இறக்கி கொண்டான்…..

ஆனால் பிரணவ்

‘ என்னடா நடக்கிறது இங்கே??’ என்பதுபோல் மலைத்துப் போய் நின்ற தன் மனைவியிடம்

” சோட்டுவை பிடி !!!” என்று  மகனை ஒப்படைத்து விட்டு

“இப்போ வாடா!!!!!”  என்று சவால் விட்டான் ஸ்ரீதீப்பிடம் உரக்க ….

தன் முன்னே சொடக்கிட்டு ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு அழைத்த பிரணாவைக் கண்டதும்

சுற்றம் மறந்து அவன் மீது பாய்ந்து இருந்தான் ஸ்ரீதீப் …..

“என்ன பண்ணுகிறீர்கள் ரெண்டு பேரும்?????

 ஐயோ முதலில் விடுங்கள்!!!!!”  என்று மைத்ரேயி கத்தியது அவர்கள் காதில்

விழுந்ததாகவே தெரியவில்லை …..

வியானும் அவன் பங்கிற்கு இருவரையும் தடுத்து பார்த்தான்…..

 ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை!!!!

 இயல்பாகவே இந்த அளவிற்கு ஒருவனை வெறுக்க கூடியவன் இல்லை தான் பிரணாவ்…..

 ஆனால் ஸ்ரீதீப்பைக் கண்டதும் அவனுள் ஒரு பாதுகாப்பின்மை எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை!!!!

‘ சோட்டு என் மகன் ‘ சோட்டுவிற்கும் ஸ்ரீதீப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!!! எனும் எண்ணம் காட்டாறு வெள்ளம் போல் மேலோங்கி கிடக்க

‘ மைத்ரேயி என்னவள் !!!!

அவளின் மீது இவனுக்கு

 என்ன கரிசனம்???

 எதற்கு அன்பு ???

எப்படி காதல்????

 என்ற பொறாமை உணர்வு கொழுந்து விட்டு எரிந்து, பிரணாவிற்கு  நிதானத்தை இழக்கச் செய்ததோடு சண்டையிடவும் தூண்டியது…..

 ஸ்ரீதீப்பின் நிலையே வேறு….

 பிரணாவை கண்டதுமே அவனுக்கு பிடிக்கவில்லை …..

மைத்தியிடம் அவன் நடந்து கொண்ட முறை சற்று அதிகப் பிரசங்கித் தனமாக தோன்றியதோடு  அவன் சோட்டுவை அழ வைத்தது ஸ்ரீதீப்பை கொலைகாரன் ஆகவே மாற்றியிருந்தது…..

 இருவரும் மற்றவரின் சட்டையை பிடித்து ஆக்ரோஷமாய் களத்தில் முட்டி கொள்ளும் சண்டை கோழியாய் திமிற

” மைத்தி நன்றாக இருக்கிறாள் என்று

தான் இத்தனை நாள் நினைத்து ஒதுங்கியிருந்தேன்…..

 ஆனால் எப்போது அப்படி இல்லை என்று தெரிந்ததோ????

இனியும் அவர்கள் எப்படி உன்னோடு இருக்கிறார்கள் என்று நானும் பார்க்கிறேன்!!!!”  என்ற வசனத்தை சொந்தமாக்கி பிரணாவின் கன்னத்தில் ஒரு குத்து விடவும்

 பிரணாவின் வேகம் கூடியது….

அப்படி  அவன் அடுத்து விட்ட ஒரே அடியில் ஸ்ரீதீப் கீழே போய் விழ

அங்கு சற்று தூரத்தில் நின்ற வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்த அரசியல் ஆட்கள்

‘அங்கு எவனோ ஒருத்தன் நம்ம சின்னையா மேலே கையை வைத்து விட்டான் …. வாங்கடா!!!!!’ என்று கூறியபடி பிரணாவை தாக்க முற்பட்டனர்….

 பிரணாவ் அவர்களை கண்டு சற்றும்

அஞ்சாது எதிர்த்து நிற்கையில்

தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்து நின்ற ஸ்ரீதீப் அவன் தந்தை என்.கே வின் ஆட்களை தடுத்து இருந்தான்…..

 ” இது எனக்கும் அவனுக்குமான பிரச்சனை…… யாரும் கிட்ட கூட வரக்கூடாது….

 என்ன நடந்தாலும் சரி !!!”

என்ற உத்தரவை பிறப்பித்ததோடு

 பிரணாவிடம் திரும்பி மல்லுக்கு நின்றான் ஸ்ரீதீப் …..

அவனது ஓங்கிய கையை எளிதாக பற்றிய பிரணாவ்

“என்னடா சொன்னாய்????

 என் பொண்டாட்டியும் பையனும் எப்படி என்னிடம் இருப்பார்களா?????”

வார்த்தைக்கு ஓர் அடியை பரிசளித்து

 ” ஏன் அவர்கள் என்னோடு இருக்காமல்…..

நீ கூப்பிட்டதும் உன் பின்னோடு வந்து விடுவார்களா என்ன????அது நான் செத்தாலும் நடக்காதுடா!!!!”  ஆவேசத்தில் வார்த்தைகளை கொட்டி

பிரணாவ் தாக்கியதில்

ஸ்ரீதீப்பின் வயிற்றில் தசை பிடிப்பு ஏற்பட்டிருப்பது ஒரு டாக்டராக அவனால் நன்கு உணர முடிந்தது…..

இப்போதிற்கு அவனால் பேசவே முடியாது என்ற போதும் சற்று சிரமப்பட்டு நிமிர்ந்து

” அதையும் பார்க்கலாம் டா !!!!

உன்னை கொன்றால் தான் மைத்தியும் சோட்டுவும் நன்றாக இருப்பார்கள் என்றால் …. அதை நான் செய்யவும் தயங்கமாட்டேன்!!!!!”   சரிக்குச் சரியாக ஸ்ரீதீப் முறைத்து கொண்டே முன்னேறினான்……

 உடனே தன் மனைவி

 எங்கு நிற்கிறாள்????

 என்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தவனுக்கு

 அவள் சற்று தொலைவில் சோட்டுவின் அழுகையை நிறுத்துவதா??? அல்லது சண்டையிட்டுக் கொள்பவர்களிடம் செல்வதா???

என்று தவித்து நிற்பது தெரிந்தது!!!!

 தான் பேசுவது அவளை எட்டாது என்பது உறுதியாய் புரிந்ததும் ஸ்ரீதீப்பிடம் திரும்பி நக்கலாக சிரித்த பிரணாவ்

” எப்படி எப்படி??????

 நீ என்னை கொல்ல போகிறாயா ????

உன்னை எல்லாம் உங்க அண்ணன் பிரதீப்பை போட்டு தள்ளிய அன்றே சேர்த்து செய்திருக்க வேண்டும் !!!!!

ஆமாம் அப்படி செய்திருந்தால் இந்நேரம் இப்படி என் முன்னே நின்று பேசிக்கொண்டு இருக்க மாட்டாய் அல்லவா?????”  என்றான்………

 அவ்வளவு தான்!!!!!  பிரணாவின் மீது படிந்த ஸ்ரீதீப்பின் கரங்களது பிடி தானாக தளர்ந்தது…..

 அவனுக்கு பிரணாவ் சொல்வதை உள்வாங்கிக் கொள்வதற்கு சிறிது நேரம் பிடித்தது!!!!!

” என்ன சொன்னாய்??????”

அதிர்ந்து விழித்தவனை

“நம்ப முடியவில்லையா ?????

ஆனால் இதுதான் உண்மை!!!!!

  என் பொண்டாட்டி பிள்ளையோட நிழலை நீ நெருங்க  நினைத்தாலும் உனக்கும் அதே நிலைதான்!!!!!”  என்றபடி தள்ளிவிட்டான் பிரணாவ்….

இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் ஸ்ரீதீப்பின் கை ஓங்காது நிற்கவும்

 பிரணாவும் மேற்கொண்டு அவனை

தாக்க முன்னேறாது விடவும்

 இடைபுகுந்த வியான்

” பாஸ் …… சொன்னால் கேளுங்கள் பாஸ்!!!

 தயவு செய்து நீங்கள் இருவரும் அடித்துக் கொள்ளாதீர்கள்!!!

 மைத்தி …. மைத்தி இங்கு வா!!!!!” என்று கத்தி அவன் தோழியை அழைத்து

பிரணாவை கூட்டிட்டு போக சொன்னான்  ஸ்ரீதீப்பை நகரவிடாது இறுக்க பிடித்த வண்ணம்…..

 தன் கரத்தை பிடித்து இழுத்து சென்றவளை பிரணாவ் தடுக்க முற்படவில்லை…..

 அவள் பின்னோடு சென்றவனின் மனதில் பல்வேறு எண்ணங்கள் …..

ஃபிளைட் ஏறி சீட்டில் உட்கார்ந்தவள்

அருகில் நின்றவனிடம் அதுவரை எதுவும் பேசாமல்

” உட்கார வில்லையா??????”  என்று கேட்க

” சோட்டு இன்னும் சிணுங்கி கொண்டு தான் இருக்கிறான்…..

 நான் உட்கார்ந்தால் கத்த ஆரம்பித்து விடுவானோ என்று பயமாக இருக்கு !!!

நீ அவனைப் பார்த்துக் கொள்….”  என்று விட்டு

இரு இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தினரிடம் சென்று

“எனக்கு ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா சார்????

 என் பையன் அழுது கொண்டே இருக்கிறான்!!!!

 உங்கள் பாப்பாவைப் பார்த்தால் அழுகையை நிறுத்தி விடுவான் என்று

நினைக்கிறேன்…..

 கொஞ்சம் மாறி உட்கார முடியுமா??????” என்றான் மிகவும் பணிவாக….

அவர்களும்  மனிதாபிமான அடிப்படையில் இடம் மாறி உட்கார சம்மதிக்க வீட்டிற்கு வரும் வழியில் கூட கணவனும் மனைவியும் ஸ்ரீதீப் பற்றி எதுவும் பேச முயற்சிக்கவில்லை….

 அவனிடம் தான் நடந்து கொண்ட முறைக்கு கட்டாயம் திட்டுவாள் என்று எதிர்பார்த்திருந்தான் பிரணாவ்….

 ஆனால் மைத்ரேயியோ தன் முழு கவனத்தையும்  மகனிடமே பதித்திருந்தாள் ….

 வீட்டிற்குள் நுழையும் போது சோட்டுவை வாங்க நினைத்த காஞ்சனா எதுவும் பேசாது அவளையே பார்த்தபடி வீட்டு வாசல் வரை வந்து நிற்க

பையன் மீண்டும் அழ ஆரம்பிக்கவும் மாமியாரைக் கண்டு கொள்ளாது அடுப்படிக்குள் சென்று பாலை ஆற்றி கொடுக்க விழைந்தால் மைத்ரேயி …..

 பிறகும் மாடி ஏறி தங்கள் அறைக்குச் சென்றவள்

 ” இப்போது எல்லாம் ஏன்  அம்மாவின் சோட்டு பையா இப்படி அழ ஆரம்பித்து விட்டீர்கள்??????

 உங்களுக்கு என்னடா பண்ணுகிறது ?????

நீங்கள் குட் பாய் தானே !!!!”

வயிற்றுப் பசியை போக்கி விளையாட்டு சாமானை காண்பித்து திசை திருப்பவும்

 அவள் பின்னோடு வந்த பிரணாவ்

”  அவன் என் பையன்!!!!! அவன் என்னிடம் வராவிட்டாலும் என் பையன்தான்!!!!”  என்று கூறினான் …

இம்முறை ‘நீங்க அப்பாவின் பையன்’ என்று நேற்று போல் மகனிடம் அவள் சொல்லாதது பிரணாவை வருத்த

“என் மேல் கோபமாடி பஜாரி?????”  என்றான் நேரிடையாக….

 அப்போது அவளுக்கு ஒரு போன் வர

” எமர்ஜென்ஸி கால் …. ஹாஸ்பிட்டலிலிருந்து!!!!”  கணவனிடம் உரைத்துவிட்டு மகனை சில விளையாட்டு சாமான்கள் சூழ அமரவைத்து விட்டு

 தனியாக போய் பேசிவிட்டு வந்தாள்….

அவளையே பார்த்தபடி

அவள் சின்ன சின்ன அசைவுகளையும்  ரசித்த வண்ணம் இதழ்களில் குடி கொண்ட மென்னகையை அகற்றாது நின்ற பிரணாவிடம் வந்தவள்

” நான் இப்போது உடனே ஹாஸ்பிட்டல்

போய் ஆக வேண்டும்…..

 ஆனால் சோட்டு?????”  என்று இழுத்தாள் …..

”  அவன் என்னிடம் தான் வர மாட்டேன் என்கிறான்…..

 அம்மாவிடம் கொடுத்துவிட்டு போயிட்டு வாடி பஜாரி!! ” என்று பிரணாவ் கூறியதை

 அவளோ கண்டிப்பாக மறுத்திருந்தாள்….

” உன்னிடமே வரவில்லை என்றால்!!

 அவர்களிடம் கண்டிப்பாக போகமாட்டான் பிரணாவ் ….

வீண் சஞ்சலம் அவர்களுக்கும்!!!

 வருத்தப்படுவார்கள் …..” என்று கூற

 பிரணாவ் “என் பையனுக்கு என் மீதுதான் கோபம்…. அதை என்னிடம் மட்டும் தான் காண்பிப்பான் ….

அவன் பாட்டியிடம் கட்டாயம் போவான்!!!

 நீ அவனை தூக்கி கொண்டு வா….”  என்று உறுதியாய் சொல்ல

 அவளது மருத்துவப் பணி அவளுக்கு இட்ட இன்றியமையாத பொறுப்பை உணர்ந்து கணவன் சொல்படி மகனை தூக்கிக்கொண்டு கீழே செல்ல

 காஞ்சனாவை பார்த்த நொடியில் அவரிடம் தாவி இருந்தான் பிரணாவின் புத்திரன் …..

உடனே அவரும் பேரனை உச்சி முகர்ந்து கொஞ்ச ஆரம்பித்தார்….

“பாட்டியை தேடினீர்களா ராஜா?????

 நானும் உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன் …..

 நீங்கள் இல்லாமல் வீடு வீடாகவே இல்லையே!!!”  என்று முத்தமிட்டபடி பேசி கொண்டு செல்ல

 சோட்டோவும் அவன் பங்கிற்கு அவர் வழங்கிய முத்தங்களுக்கு பதிலாக அவர்

கன்னத்தில் “ஹவ்வா!!” ஒன்றை பதிக்கவும்

 பிரணாவின் கண்கள் தான் தெப்பக்குளமானது…..

ஆனால் நடப்பது எதுவுமே அன்னையானவளுக்கு புரியவே இல்லை….

 பேரனின் முதல் முத்தத்தில் திளைத்தவர் அங்கு இருவர் நிற்கிறர் என்பதே மறந்து சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அவனைத் தூக்கிக்கொண்டு  அங்கும் இங்கும் ஓடினார் ….

” உன் தாத்தா கிட்ட பேசலாமா ராஜா?????

 அவருக்கு நீ எனக்கு கொடுத்த ஹவ்வா பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றலாமா ?????” என்று கூறி போனை எடுக்க

இமைக்க மறந்து அவர்களையே பார்த்து நின்றவளிடம்  “கிளம்புடி பஜாரி !!!!!

உன்னை டிராப் பண்ணி விட்டு  நான்

ஆபீஸ் செல்கிறேன்…..

அப்படியே வரும்போது பிக்கப் பண்ணுகிறேன்….”  என்றான்….

 அதில் சுயநினைவு பெற்றவள் மகனைப் பற்றிய கவலை நீங்கியவளாய் புறப்பட  அவசரமாக அவர்களிடத்தில் வந்த காஞ்சனா

“சாப்பிட்டு போங்கள்!!!”  என்றார் பொதுவாக….

 திருமணமான புதிதில் மகனிடம் மட்டும் அவ்வார்த்தையை படித்தவரை கண்டு அவள் உள்ளம் ஏங்கியது உண்மை !!!!

அதை அன்று கணவன் விவரித்த போது

“இல்லை!!” என்று மறுத்து வாதாடிய போதும் மைத்ரேயியை விடுத்து மகனை மட்டும் காஞ்சனா கூறியது அவளை வாட்டியது…..

ஆனால் இன்று அவளிடம் நேரிடையாக சொல்லாத போதும் மைத்ரேயிக்கு என்ன தோன்றியதோ

வேகவேகமாக டைனிங் டேபிளில் போய் அமர்ந்து தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்…..

 அதைக் கண்டவனது விழிகள் சிரித்த போதும் இதழ்கள் கோபத்தை தத்தெடுக்க

” புருஷனுக்கு சாப்பாடு போடணுமே!!!!

 அத்தான் பாவமே!!!! என்று கொஞ்சமாவது உனக்கு என் நினைப்பு இருக்கிறதாடி பஜாரி!!!!”  என்று  கேட்டு

அவள் வைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டு பக்கத்து சேரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான் பிரணாவ்…….

 மறுப்பேதும் சொல்லாமல் மற்றொரு தட்டை எடுத்து சாதத்தை பரிமாறியவள்

”  என்னை ட்ராப் மட்டும் பண்ணிவிடு பிரணாவ்…..  எப்படி தோது எப்போது கிளம்புவேன் என்று தெரியவில்லை!! வீட்டிற்கு நானே வந்து கொள்கிறேன்!!!”

 என்றவளிடம் “சரி!!!!!”  என்று அழைத்துச் சென்றவன்

அவளை கேர் மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தான்…..

 அங்கு அவனது வேலை மணி பார்க்க விடாமல் அவனைக் கட்டிப் போட

 இரவு 9 மணி அளவில் தன் இருக்கையை விட்டு எழுந்தவன்

வீட்டிற்கு புறப்பட்டான்….

 ஆனால் மனைவியை வீட்டில் காணாது மகன் மட்டும் காஞ்சனாவின் அறையிலேயே தூங்கி இருக்க

” எங்கம்மா அவள்?????”  என்றான் தன்

அன்னையிடம்….

” என்னைக் கேட்டால்????

 நீ தானே கூட்டி போனாய் !!!!!” என்று வேகமாய் வந்த பதிலில்

“நம்ம வீட்டில் ஹனி தீர்ந்து போய்விட்டதா அம்மா?????

 நாளை முதல் வேளையாக தேன் பாட்டிலை வாங்கி வந்து வருகிறேன்!!!! அதை சாப்பிடுங்கள்…. அப்போது தான் ஸ்வீட்டாக பேசுவீர்கள்!!”  என்று கூறியபடியே அவன் மனைவியை தொடர்பு கொண்டான்….

ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் எழுந்த பதற்றத்தை அமர்த்தி

கேர் மருத்துவமனைக்கு அழைத்திருக்க

” டாக்டர் மைத்ரேயி இஸ் நாட் ஹியர் சார்….

அவர்கள் அப்போதே

கிளம்பிவிட்டார்களே!!!!” என்ற பதில் அவனை தேடி வந்தது …..

Advertisement