” எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பிரணாவ்!!!!!”

மைத்ரேயி வியானின் நட்பில் பேச்சு வராது பிரமித்து நிற்க

“அட இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறதாம்?????” என்ற எண்ணவோட்டத்துடன் தோழியிடம் வியான் பேச முயன்ற போது

அவன் போன் ” ஹோ பேபி பேபி….. என் காதல் ஜோடி……” என்று பாட ஆரம்பித்தது….

 அதை தன் அருகில் நின்றவளிடம் காட்டி

” உனக்காவது இப்போது தான் மைத்தி என்ன பேசுவது என்று தெரியவில்லை!!!!!

 ஆனால் எனக்கு எப்போதுமே தெரியாது

போலும்??????

 ஒரு நாளைக்கு நான்கு முறை போன் பண்ணினால் எதையாவது பேசலாம்!!!

 இப்படி நான்கு நிமிடத்திற்கு ஒரு முறை அழைத்தால்????

 நான் என்னதான் பேசுவது நீயே சொல்லு!!!!”

 அலுத்துக் கொண்ட போதும் வியானின் முகப்பொலிவு அவன் அடைந்த சந்தோஷத்தை படம் பிடித்து காட்டியது….

 “அதிருக்கட்டும் …  அது என்ன  ‘பேபி பேபி’ என்று பாடுகிறது??????

ஒருவேளை அதற்குள் உங்களுக்கு பேபி பிறந்து விட்டதா??????

ஏதாவது ஸ்கூலில் சேர்த்து விட்டுள்ளார்கள்???????”

 பிரணாவ் வியானை வார

 “இது என்ன பாஸ் இப்படி

கேட்டுவிட்டீர்கள்????

 ஏன்??

 உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு தகுந்த ரிங்டோனை நீங்கள் பதிவு செய்து வைத்துக் கொள்ள மாட்டீர்களா ??????”

என்ற வியான், இமைக்கும் நொடிக்குள் மைத்ரேயியின் போனை பற்றியிருந்தான்…..

 உதிஅண்ணி பிரணாவை தொடர்பு கொள்ளும் போது ஒலிக்கும்

‘கண்ணில் அன்பை சொல்வாளே!!!’ ஈசன் பட பாடலும்

ஹசீனா கூப்பிடும் போது

” கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் ” தோழிக்கு உரிய பாடலும்

மைத்ரேயிக்கு நினைவுகூர அப்படி

தனக்கும் எதையாவது ஸ்பெஷலாக வைத்திருப்பானோ???? என்ற ஆசை மேலோங்கும் சமயத்தில்

“என்னை ஓட்டுகிறார்கள் பாஸ்?????

நீங்கள் உங்கள் பஜாரிக்கு அப்படி என்ன பாட்டு வைத்திருக்கிறீர்கள் என்று நானும் கேட்கிறேன்????”  என்றபடி தோழியின் போனிலிருந்து பிரணாவிற்கு அழைப்பு விடுத்திருந்தான் வியான்….

பிரணாவ் அதனை  நிராகரிப்பதற்குள் அவன் போன் அவனை மாட்டி விடுவது போல்

“ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி !! டொடைன் டொடைன்!!!!!”  என்ற குத்தாட்டம் போட

அதைக்கேட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் வியான்….

மைத்ரேயிக்கு சக்தி இருந்திருந்தால் அவள் கண்களாலேயே பிரணாவை பொசுக்கி இருப்பாள்…..

” அது இல்லைடி பஜாரி!!!!

 கல்யாணம் ஆன புதிதில் உன் அருமைபெருமை எல்லாம் தெரியாமல் வைத்துவிட்டேன் …

 இப்போதே மாற்றி விடுகிறேன்!!!!!”  என்று சமாதானம் பேச முயன்ற போது

“இங்கே வாடா சோட்டு !!!!!” என்று கூப்பிட்டபடி பிரணாவின் மகனை தோழியிடமிருந்து  வாங்கிய வியான்

“யூ கேரி ஆன் மைத்தி!!!!!!”  என்று அடி தடியை அமோகமாக தொடங்கி வைத்தான் …..

“சொன்னால் கேளுடி பஜாரி….

 நான் உன் புருஷன்!!!!

 புருஷனை அடிப்பது சட்டப்படி குற்றம்”

 என்று பிரணாவ் இரு அடி பின்னால் நகர

” நீ தான் முட்டாளாக்கி விட்டாய் அல்லவா???

 அதனால் உன்னை அடிக்கலாம்!!!!”  என்று துரத்த ஆரம்பித்தாள் அவனது பஜாரி….

” கமான் காட்ச் ஹிம் மைத்தி!!!! விட்டுவிடாதே….”

 நண்பனின் குரல் கூட கேட்காத அளவிற்கு  கால் கிலோ மீட்டர் தூரத்தினையும் கடந்து ஓடினாள்….

 சற்று நேரத்தில் மூச்சு வாங்க நின்றவளின் அருகே ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கி வந்து நீட்டியவனை முறைத்துக் கொண்டே அதை வாங்கி

பருக ஆரம்பித்தாள்….

”  இப்போ கேளுடி பஜாரி  என்ன பாட்டு வைத்திருக்கிறேன் என்று!!!!!”

” ஒன்றும் வேண்டாம்… போடா !!!”  சிலிர்த்துக்கொண்டு திரும்பியவள் தனக்கு எதிரே வந்தவனின் கண்டதும் முற்றிலும் மாறி போய் நின்றாள்  …..

 “ஸ்ரீதீப் ஒரு நிமிஷம்…. உன்னிடம் சற்று பேச வேண்டும் !!!! ” தன்னெதிரில் வந்தவனை பார்த்து தன்னருகில் நின்றபடி கேட்டவளின் மேல் பிரணாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது…..

போன வாரமும் இதே ஏர்போர்ட்டில்  “எப்படி இருக்கிறாய் ஸ்ரீதீப்???” என்று மைத்ரேயி கேட்ட போது  இதே ஸ்ரீதீப்  தான் பதில் ஏதும் கூறாமல்….

ஏன்… அவளை ஏறெடுத்தும் பாராமல்  தவிர்த்து விட்டு சென்றிருந்தான்…..

ஆனால் அப்போது ‘ நம்ம பஜாரிக்கே ஒருத்தன் பல்ப் கொடுக்கிறான்….. யாரிந்த அப்பாடெக்கர்???’ என்னும் எண்ணம் படர்ந்த பிரணாவிற்கு அந்த அப்பாடெக்கரையும் அவனது காதலையும் பற்றி தெரிந்து கொண்ட பிறகு  பொறாமை உணர்வு ஒன்று பலமாக அவனுள் சுழல்வதை தடுக்க முடியவில்லை ….

ஆகையால்  ‘இப்போ அவனிடம் பேச என்ன இருக்கிறதாம்????’ என்று மனம் தன்னவளை பொரிந்து  தள்ள

ஸ்ரீதீப்பும் அதையே தான் மைத்ரேயியிடம் கூறி  கொண்டிருந்தான்….” உன்னிடம் பேச இனி  என்ன இருக்கிறது????”

ஆனால் அவளோ விடாது “நீ பேச எதுவுமில்லை தான்… ஆனால் நான் கூற போவதை கேட்கலாம் அல்லவா??? ” என்று மடக்க

ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு ‘உன் விருப்பம்’ என்பது போல் தன் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து விட்டு

 பேசுவதற்கு தோதாக அருகிலிருந்த கஃபே வினுள் சென்று அமர்ந்தான் ஸ்ரீதீப்….

” டூ மினிட்ஸ்  !!!!!!” கணவனிடம் பொறுப்பாய் அனுமதி கேட்டவளை முறைத்தான் பிரணாவ் ….

” நாட் ஈவன் எ சிங்கிள் செக்கண்ட்….

நீ யாரிடமும் எதுவும் பேச கூடாது…… ” என்று அவள் கை பிடித்து இழுத்து சென்றவனை அதிசயமாய் பார்த்த மைத்ரேயி

” ஆர் யூ கிரேஸி பிரணாவ்???!!!

என்னை விடு …. ஐ ஹேவ் சம்திங் டூ ஸே ஹிம்… ” என்று தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விடுவித்து கொண்டாள்…..

” கிரேஸியோ அரொகெண்ட்டோ…. எப்படி வேண்டுமானாலும் சொல்லி கொள்…. உன்னை அவனிடம்  பேசுவதற்கு நான் விட மாட்டேன்….”

தம்பதியினரின் உரையாடலை சற்று தொலைவிலிருந்து கண்ட ஸ்ரீதீப்

தன் இருக்கையை விட்டு எழ

” அச்சோ ஸ்ரீதீப்  கிளம்ப போகிறான்…. இன்று அவனை கண்டிப்பாக மிஸ் பண்ண கூடாது !!!!”  தன் போக்கில் கூறிவிட்டு பிரணாவ் கூறியதை கண்டு கொள்ளாமல் செல்ல

” ஏய் நில்லுடி பஜாரி…. இப்போது மட்டும் நீ அவனிடம் சென்று பேசினால் நான் என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது ” என்று கத்தினான்….

‘ நீ என்ன செய்தால் எனக்கென்ன????? எனக்கு இப்போது ஸ்ரீதீப் தான் முக்கியம்’ என்பது போல் தன் குறிக்கோலை மாற்றி கொள்ளாது ஸ்ரீதீப்பை நோக்கி

அவசரமாக சென்றவளையே வெறித்தான் பிரணாவ் .

************

உன் உறவாக மாறிய போதும்…..

உன் துன்பம் கண்டு வருந்திய போதும்……

உன் தோளணைத்து தோழியின் ஆதரவை தேடிய போதும்…….

உன் கலக்கம் அகற்ற எதையும் செய்ய துடித்த போதும்……

உன் ரோஜா மொட்டிதழ்களின் மென்மையை வருட விழைந்த போதும்…..

உணராது போனது என் தவறே ஆயினும்……

உன்னை தொலைத்து என்னை மீட்ட அந்நொடியில் புதிதாய் ஜனனமெடுத்து

 கண் மூடி  தெளிந்த நீரோட்டத்தில் தெரிந்து கொண்ட என் மனதை

வெறும் விடியா இரவுகளின் கனவாக  துவண்டு போக விடாது……..

நான் கொண்ட நேசத்திற்கு

உயிர்ப்பளித்து எம்மை நடமாட வைப்பது நின் கடமையன்றோ என் பஜாரி❤

***********

தான் இவ்வளவு சொல்லியும் பொருட்படுத்தாமல் சென்றவளின் மீது ஆற்றாமை உணர்வு பொங்கி எழ

 அவ்வுணர்வு பிரணாவினுள் அதன் நண்பனான எரிச்சலையும்  மேம்படுத்தி வைக்க

“அவன்  ஹீரோவாக இருக்கலாம் ஆனால்  நான் உன் வில்லன்!!!!!”

 என்பது போல் மனதுள் கருவியபடி ஸ்ரீதீப்புடன் கதைக்க ஆயத்தமானவளின் கார்க்கூந்தலை….

இல்லையில்லை இப்போது புதிதாக அவனை வசீகரிக்க தொடங்கியிருக்கும் அதே  ஸ்ப்ரிங் முடியை !!!!

பிடித்து கையோடு இழுத்து வரும் அளவிற்கு அவனை பித்து கொள்ள

செய்தது …

மைத்ரேயி தன் எதிரில் வந்து அமரவும்

” ஒன் பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம் ப்ளீஸ்!!!!!”  என்று ஆர்டர் கொடுத்திருந்தான் ஸ்ரீதீப்….

 அவனையே பார்த்தவள் “இது எதையுமே உன்னால் அவ்வளவு ஈசியாக மறக்க முடியாது என்று எனக்கு தெரியும்!!!

 ஆனால் நீ ட்ரை பண்ணி தான் ஆக வேண்டும் …..

நான் உன்னை கல்யாணம் பண்ணி கொள்ளாததற்கு காரணம் நீ நினைக்கும்படி அந்த பிரதீப்போ இல்லை அவன் செயலோ இல்லை!!!!!” என்றவள்

அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தவனிடம் தன் மனதை நிறுத்தாது மூச்சு விடாது படிக்க ஆரம்பித்தாள்….

”  என்னை உன்னிடமிருந்து பிரிய செய்தது நீயும் உன் காதலும் தான்!!!!

 இதை நீ நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை….

 ஐ டோன்ட் டிசேர்வ் யுவர் லவ் ஸ்ரீ!!!!

பிரதீப்பால்  ஏற்பட்ட பாதிப்பால் ஆரம்பத்தில்  உன்னிடம் இருந்து ஒதுங்கிப் போனது நிஜம் …..

ஆனால் நாளாக ஆக உன் மேல் எந்தப் பிழையும் இல்லை என்று உணர்ந்த பிறகும் உன்னை விட்டு விலகிவிட தான் துடித்தது மனம்….

 உன்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பைப் பெறுவதற்கு நான் தகுதியானவள் இல்லை என்று தெரிந்துதான் உன்னை தவிர யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள அன்று சம்மதித்தேன் !!!

உதிஅண்ணி புண்ணியத்தில் இன்று எனக்கும் சோட்டுவிற்கும் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது …..

நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்!!!!

 அதே மாதிரி உன் மனதை மாற்றி உனக்கேற்ற பெண்ணை தேர்ந்தெடுத்தாயானால் நான் இந்த பிறவியில் நிம்மதியாகவும் இருப்பேன் ஸ்ரீதீப்!!!!”

நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன் என்பது போல் எழுந்தவளிடம்

“என் நிம்மதியை பறிக்க நினைத்து உன்னை தண்டிப்பதாக பிரதீப் செய்வித்த பாவம் தான் அவன் உயிரையும் பறித்து விட்டது!!!!!”  என்று ஸ்ரீதீப் கூறவும்

“என்ன???

 என்ன சொல்கிறாய்?????

 பிரதீப் உயிரோடு இல்லையா ?????” என்பது போல் மீண்டும்  அதே இடத்தில் அமர்ந்து படபடத்தாள் மைத்ரேயி …..

“ஏன் உனக்கு தெரியாதா????

 வியான் சொல்லவில்லையா????”

 திருமணமான புதிதில் ஒரு முறை பிரதீப் பற்றி வியான் பேச முயன்றபோது

“தயவு செய்து இனி அந்த பெயரை கூட என்னிடம் சொல்லாதே ப்ளீஸ்!!!” என்று கூறியிருந்தது நினைவூட்ட

“எனக்கு தெரியாது!!!!

 எப்படி ???? என்ன நடந்தது????”  என்றாள் அதே பதற்றத்துடன் ….

” சூசைட் பண்ணிக் கொண்டான் அதுவும்

வீட்டில்……

 ஆனால் என்னமோ நடந்திருக்கிறது!!!

 இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்!!!!

 அந்த கமிஷனர் அத்விக் அப்பாவிடம் பிராப்பராக ரெஸ்பாண்ட்  பண்ணவில்லை….

ஸோ  அவன் தான் ரீஸனா ????

இல்லை அந்த கமிஷசர் யாருக்கோ உதவி புரிகிறானா என்பதும் தெரியவில்லை!!!!!

 விட்டால் நானே அந்தப் பாவியை என் கையால் கொலை பண்ணி இருக்கவேண்டியது ….

என் அப்பா புண்ணியத்தால் என்னிடமிருந்து பிழைத்தவன் அவனே நல்ல முடிவை தேடியும் கொண்டான் …..

அவன் கேஸ் எதிலும் நான் தலையிடவில்லை ….

அப்பா தான் அவன் பொறுக்கி என்பது தெரிந்தும் இதற்கு காரணமானவர்களை

கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்!!!! என்று

கமிஷனரை பகைத்து கொண்டு சுற்றி திரிகிறார்……

 எனக்கென்னமோ……”

ஸ்ரீதீப் பேசிக் கொண்டிருக்கும்போது மைத்ரேயியின் அருகில் வந்து அமர்ந்த பிரணாவ் அப்போது அவள் முன்னே வைக்கப்பட்டு சென்ற ஐஸ்கிரீம் டப்பாவை கையில் எடுத்து

” ஹை பிளாக் கரண்ட்!!!!” என்று கூறி அதில் இருந்த ஸ்பூனில் ஒரு ஸ்கூப் எடுத்து தன் வாய்வரை கொண்டு சென்றான். பின்

தன் தலையை பலமாக ஆட்டி

 அதை தன் மனைவியின் புறம் நகர்த்தியதோடு

” இதை நான் இப்படியா சாப்பிடுவேன்?????

இதை நம் வழக்கம் போல் நீயே ஊட்டி

விடுடி பஜாரி !!!!”  என்று  கூறியபடி என் எதிரில் அமர்ந்து இருந்தவனை முறைத்திருந்தான் பிரணாவ்…..

 சில நபர்களை எந்தவித காரணமும் இல்லாமல் வெறுத்து ஒதுக்க கூடிய இயல்பு படைத்தவர்கள் இவ்வுலகின் ஜீவராசிகள்!!!!

 அப்படியிருக்க ஸ்ரீதீப்போ தன்னவளை உயிருக்குயிராய் காதலித்து வைத்திருக்கிறான் !!

 ஏன் அவனுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா காதலிக்க??????

பிரணாவின் மனம் அவனிடம் மல்லுக்கு நிற்க

‘ அடிடா அவனை!!! உதைடா அவனை!!! வெட்றா அவனை!!! தேவையே இல்லை!!’

 எனும் பாடலுக்கு ஏற்ப கையும் காலும்

பரபரத்தது…..

” ஏய் என்ன பண்ணுகிறாய் பிரணாவ்??????”

 மைத்ரேயி புரியாமல் பார்க்க

” ஏன் ஊட்ட மாட்டேன்கிறாய்?????

ஓ!!!! கண்டவன் எல்லாம் இருக்கிறான் என்று பார்க்கிறாயா?????

 யார் இருந்தால் நமக்கு என்னடி பஜாரி ???

 அன்று இரண்டாயிரம் பேர் இருக்கும் மண்டபத்தில் எனக்கு ஊட்டினாய்????

 இப்போது என்ன????”  சத்தமாகவே கேட்டு வைத்தான் பிரணாவ்….

 ஆனால் அதில் எரிச்சலடைந்தவளோ

” இப்போது எதைடா டிரை பண்ணுகிறாய்???” என்று அவள் கணவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்

சீண்ட

“என்னென்னமோ ட்ரை பண்ணி பாருடா என்று நீ வைத்தியம் பார்க்காத ஹார்ட் சொல்கிறது!!!!

அனைத்தையும் செய்து விடட்டுமா?????”

கொஞ்சும் பாணியில் கேட்டவனை முறைத்து முயன்று தோற்றாள் …..

 ஒரு முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியா செய்வான்?????

ஸ்ரீதீப்பை சங்கடமாக பார்த்தவள்

“கொஞ்ச நேரம் அங்கே வெயிட் பண்ணு  பிரணாவ் ப்ளீஸ்!!!!”  என்று பிரணாவிடம் கெஞ்ச

“நான் எங்கேயும் போகமாட்டேன்!!

 இங்கே தான் இருப்பேன்!!”  என்று பிரணாவ் உரக்க கத்த ஸ்ரீதீப் எழுந்துவிட்டான்….

 பிரணவ் வந்ததும் அவன் நடந்து கொண்ட முறையும் ஸ்ரீதீப்பிற்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்த

எங்கு இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்று அங்கிருந்து செல்ல முற்பட்டான் …..

 ஆனால் சரியாக அச்சமயம் வியான் சோட்டுவுடன் வரவும்

அவர்களை பார்த்துவிட்ட ஸ்ரீதீப் ” சோட்டுவாடா???????”  என்றான் தன் நண்பன் வியானிடம் ….

‘ஆம் !!!!’ என்று வியான் தலையசைத்ததும்

 அவசரமாக மைத்ரேயியின் புறம் திரும்பிய ஸ்ரீதீப்

” நான் ஒரு முறை …. ஒரே ஒரு முறை!!!! தூக்கி கொள்ளட்டுமா??????”  என்றான் அவ்வளவு ஆசையாக……

 மனைவி ஆமோதிப்பதற்குள்

 “முடியவே முடியாது!!!!!!”  என்று தன் மகனிற்கும் ஸ்ரீதீப்பிற்கும் இடையில் புகுந்து நின்று கொண்டான் பிரணாவ்…..