Advertisement

எங்கு பிரணாவ் சோட்டுவை இன்று இரவிற்குள் மீட்டு வரவில்லை எனில் மைத்ரேயி மீண்டும் இறுக்கமான சூழ் நிலைக்கு திரும்பி விடுவாளோ என்று

அஞ்சிய வியான் இனி இவளிடம் பேசி பயனில்லை!!! தம்மால் முடிந்த அளவில் எதையாவது செய்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டான்….

இவ்வளவு நேரம் வியான் பிரணாவிற்கு தொடர்பு கொண்டபோதும் அவன் போனை எடுத்து இருக்கவில்லை…..

 ஆனால் இப்போது கூப்பிட்ட போது அது சுவிட்ச் ஆஃப் என்று நிலையில்

எங்கு செல்வது????

 யாரைப் பார்ப்பது????

 என்று தடுமாறியவன் தோழிக்கு

தெரியாமல் ஸ்ரீதீப்பை தொடர்பு கொள்ள  முடிவெடுத்தான்  ….

அவ்வாறு எண்ணி தன் போனை எடுத்து கொண்டு வியான் வீட்டை விட்டு வெளியே வரும்போது  மைத்ரேயியின் பகானி வீட்டினுள் நுழைந்தது    ….

பாஸ் சோட்டுவை கண்டு பிடித்துவிட்டாரா??????

உள்ளம் பதைபதைக்க காரின் அருகில் சென்ற வியான்,

 கதவை திறந்து கொண்டு தோளில் உறங்கிக்கொண்டிருந்த சோட்டுவை சுமந்தபடி பிரணாவ் இறங்குவதை பார்க்கவும் தான் அவனுக்கு உயிரே வந்தது….

உச்சகட்ட சந்தோஷத்தில் பேச்சே எழாமல் நின்ற வியானிடம் குழந்தையை தூக்கி

வந்த பிரணாவ் ” உள்ளே வா வியான்” என்று அழைத்து வீட்டினுள் கூட்டி சென்று

கார் வந்த அரவம் கூட கேட்காது சோபாவினிலேயே தன் கைகளால் முகத்தை மறைத்து அமர்ந்திருந்தவளை கண்டதும்

” பஜாரி!!!!!” என்றான் உடைந்த குரலில் …..

கணவனின் அவ்வொற்றை சொல்லில் தன் சொர்க்கத்தை எட்டியவள் விசுக்கென்று நிமிர

” சோட்டு மயக்கத்தில் இருக்கிறான்…..

 அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து விட்டு தான் வருகிறேன்!!!

 ஒன்றும் பிரச்சனை இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார்   ….

சாரிடி பஜாரி ரொம்ப பயந்து இருப்பீர்கள்!!!!

 எனக்கு இருந்த டென்ஷனில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே சோட்டுவை பார்த்துவிட்ட  போதும் உங்களிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது…..

 அதிலும் சோட்டு கண் முழிக்க வில்லை என்றதும் ரொம்பவும் பயந்து விட்டேன்…..

 நீ ஒரு டாக்டர் என்பது கூட எனக்கு ஸ்ட்ரைக் ஆகவில்லை!!!!

உண்மையாகவே கையும் ஓடாது காலும் ஓடாது ஒன்றும் புரியாமல் ரொம்ப பயந்துட்டேன்டி பஜாரி!!!!!” என்றவன்

 தன் மனைவியை குழந்தையோடு கட்டிக் கொள்ள அவனது இதயத்துடிப்பு  இன்னும் படபடப்பு குறையாமல் பந்தயக்குதிரையாய் துடித்தது மைத்ரேயிக்கு தெரிந்தது ….

மேலும்

 ” நீயும் இப்படித் தானேடி பஜாரி

பயந்திருப்பாய்!!!!

 சாரி எனக்கு நிஜமாகவே தெரியவில்லை….”  கலக்கத்தோடு உரைத்தவனின் முதுகை வருடி கொடுத்தவள்

” நீ இருக்கும் போது நான் எப்படி பிரணாவ் பயப்படுவேன்????

கண்டிப்பாக இன்றிரவே சோட்டுவை கூட்டி கொண்டு தான் நீ வருவாய் என்று நம்பினேன் !!!!

ஆனால் வியான் தான் ரொம்ப பயந்து விட்டான் !!!” என்று கூறவும் மனைவியை விடுத்து வியானின்  புறம் திரும்பிய பிரணாவை

 வேகமாக ஓடி வந்து  கட்டிக்கொண்டான் வியான் …..

” மைத்தி அத்தனை தடவை சொன்னாள் பாஸ் ……

‘நம்பாமல் விட்டது உன் தவறடா மடையா!!!’  என்று என் மண்டையிலேயே ஒன்று போடுங்கள்!!!!”

 என்று உணர்ச்சி வசப்பட்டவனிடம்

“நான் வேண்டுமானால் போடவா வியான்????”  என்று அவர்களின் பதற்றத்தை குறைக்க முயன்றாள் மைத்ரேயி ….

” சோட்டுவை கொடு பிரணாவ்….படுக்க வைக்கிறேன்!!!”  மைத்ரேயி கேட்டதற்கு

” இல்லை வேண்டாம் ….

என்னிடமே இருக்கட்டும்!!!”  என்று மறுத்திருந்தான் பிரணாவ்…

”  சோட்டு எங்கே பாஸ் இருந்தான்???? அந்த சுந்தரம் மூர்த்தி வேலை தானே????

அவனை சும்மாவா விட்டார்கள் ?????”

வியான் ஆக்ரோஷமாக கேட்க

“சுந்தர மூர்த்தியின் மாப்பிள்ளை தான் சோட்டுவை கடத்திக்கொண்டு போய் இருக்கிறான்…..

 நேற்று கமிஷனர் ஆஃபிஸில் நாம் புகார் கொடுத்ததை நம் ஆபீஸில் வேலை செய்பவர்களின் மூலம் ஏற்கனவே அறிந்துகொண்ட சுந்தரமூர்த்தி

 அப்போதே அலெர்ட் ஆகி விட்டான்!!!

 அவன் மாப்பிள்ளை சரியான பிராடு போலும்…..

 அவன் தூண்டுதலில் தான் சுந்தரமூர்த்தி பணம் கையாண்டதும்….

 போலீஸ் கேஸ் என்றாகிவிட்டதும் சோட்டுவை கடத்தி கேஸை வாபஸ் வாங்க கோர திட்டமிட்டிருக்கின்றனர் மாமனாரும் மருமகனும்!!!!

 ஆனால் அவன் சோட்டுவை கடத்தியதை மைத்திக்கு போன் செய்து மிரட்டுவதற்குள் நாங்கள் அவன் இடத்திற்கே சென்று விட்டோம்!!!

இல்லாவிட்டால் என் பையனுக்கு என்ன ஆகியிருக்கும்???!!!!! ” என்று தன் உடம்பை நடுக்கியவாறே பிரணாவ் விவரம் தெரிவித்தான்….

 ” நாங்கள் என்றால் யாருடன் சென்றீர்கள் பிரணாவ்??????

யுகன்  அண்ணாவிடம் விஷயத்தை கூறினீர்களா????? என்று கேட்டிருந்தாள் மைத்ரேயி….

” இல்லை நான் இருந்த மனநிலையில் மாம்ஸிற்கு சொல்லவேண்டும் என்று கூட தோன்றவில்லை!!!

 இனியும் வீட்டில் யாருக்கும் சோட்டுவின் கடத்தல் பற்றி எதுவும் தெரிய வேண்டாம்….

 எனக்கு இப்போது உதவியதும்  கமிஷனர் சார் அத்விக் தான்!!!

சோட்டு காணாமல் போனதும் ஓடிச்சென்று அவர் முன்புதான் நின்றேன்….

 நல்ல வேளை அவன்களுக்கு இதுதான் முதல் கடத்தல் என்பதால் போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்க கூட தெரியவில்லை!!!

 அவர்கள் போனில் லொகேஷனை உடனே டிராக் செய்து அடுத்த நொடியே அங்கு பாய்ந்து சென்று விட்டோம்….

என் கையால் அடி வாங்கிய செத்திருக்க வேண்டியவர்கள்!!!!

அத்விக் சார் தான் இடை புகுந்து அவர்களை காப்பாற்றி விட்டார்……”

 ஆவேசமாய் பொரிந்து தள்ளியவனின் கரத்தை பற்றிய மைத்ரேயி

” அதுதான் போலீசிடம் மாட்டிக் கொண்டார்கள் அல்லவா???? விடு….

 அவர்களைக் கொன்று விட்டு ஜாலியாக நீ ஜெயிலுக்கு போய் உட்கார்ந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வதாம்??????” சமாதானப்படுத்தியவளை கண்ட வியான்

” சரி நான் கிளம்புகிறேன் மைத்தி!!!!!” என்று அவசரமாக எழுந்தான் …..

“தயவுசெய்து போய் தண்ணி அடிக்காதே!!!! நேற்றே ரொம்பவும் ஓவர்!!!” நண்பனை அதட்டியவளிடம்

 ” இன்று மட்டும் தடுக்காதே மைத்தி!!!

 என்னால் முடியவே முடியாது…. ப்ளீஸ்!!”

என்றான் வியான்…

” உன் பாஸ் தண்ணி அடிக்க மாட்டார் !!

உன் பாஸ் தண்ணி அடிப்பவனிடம் பேசுவதைக் கூட அவர் அப்பா விடவே மாட்டார்!!!

 பிறகு உன் இஷ்டம் பா !!”

பாவம் போல்  நின்ற வியானை பார்த்து

”  தண்ணி அடிப்பவனிடம் அப்படி நான் பேசக் கூடாது என்றால் முக்கால்வாசி நேரம் மௌன விரதம் தான் இருந்தாக வேண்டும்!!!

 நான் தப்பாக நினைக்கமாட்டேன் வியான்…

 ஆனால் நேற்றே அதிகமாக குடித்து இருந்தாய்….

 இன்று கொஞ்சம் குறைத்துக் கொள்!!!!” என்றவனை

“மை பாஸ்!!!!!!” என்றபடி கட்டியணைக்க வியான் நெருங்க

‘டேய் விடுடா!!! நானே அத்தனை முறை அவனை கட்டிப்பிடித்து இல்லை !!!’ என்று தன் மனதுள் கத்தினாள் மைத்ரேயி…

 ஆனால் பிரணாவ் அப்படி எதுவும் பேசவில்லை… தடுக்கவும் இல்லை…

  வியான் கிளம்பிச் சென்றும் ஒரு பத்து நிமிடம் வரை எதுவும் பேசாமல் உம்மென்று இருந்தவன் மாடியேறி மனைவியின் அறைக்கு சென்று சோட்டுவை மெத்தையில் கிடத்தி மகனை அணைத்தபடியே படுத்து கொண்டான்…

 கணவனை பார்த்தபடி

அமர்ந்திருந்தவளிடம் பத்து நிமிடத்தில் கண்விழித்து இருந்த மைந்தன் அழுகையுடனே தாவி இருந்தான்….

  பிரணாவ் ” ஏன்டி பஜாரி  இப்போது சோட்டு அழுகிறான்?????” என்று

மனைவியிடம் பதறி

” அப்பாவிடம் வாடா சோட்டு !!!!!” என்று மகனிடம்  கைநீட்ட

உலக அதிசயமாக தந்தையிடம் போக மறுத்திருந்தான் புத்திரன்….

” என் மேல் கோபமா சோட்டு ????

சாரிடா உன்னை மிஸ் பண்ணியது என் தப்புதான்!!!!

 அதற்காக அப்பாவிடம் வராமல் இருந்து விடுவாயா?????”   தன்னை வருத்தியபடி பிரணாவ் குரலுடைந்து வினவ

“பிரணாவ் கூல் !!!! அவன் குட்டி பையன்

தானே!!!!! கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான்”  மைத்ரேயி சமாதான மொழிகள் எதுவும் அவனை நிம்மதி அடையச் செய்யவில்லை…..

 மாறாக “உன்னிடம் மட்டும் வருகிறான்?????

 அப்படி என்றால் என் மேல் கோபம் என்று தானே அர்த்தம்?????”  பிரணாவ் புலம்ப

” இத்தனை நாளும் என்னிடம் வராது உன்னிடமே தானே இருப்பான்!!!!

அப்போது அவனுக்கு என் மேல் கோபம் என்று நான் இப்படியா ஃபீல் பண்ணினேன் ?????” என்று மைத்ரேயி கூறும்போதே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு….

“சோட்டுவிற்கு என்ன பண்ணுதுடி பஜாரி!!!!!

ஹாஸ்பிடல் போகலாமா???”

 துடித்து போய் கேட்டவனிடம்

” கோலிக் பெயினாக இருக்கும் பிரணாவ்….”  என்று கூறி காய்ச்சிய பாலை கொஞ்சம் கொடுத்துவிட்டு வயிற்றுவலி டிராப்ஸை கொடுத்து

 அவனைத் தோளில் கிடத்தி  தங்கள் அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தாள் மைத்ரேயி…

 அங்கேயே சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த பிரணாவ் சோட்டு அழுகையை நிறுத்தி தூங்க ஆரம்பித்ததும் அவனை வாங்க முற்பட மீண்டும் கத்த தொடங்கினான் பிரணாவின் செல்ல மைந்தன் ….

“இந்தா நீயே பிடி!!!!”  அவசரமாக மைத்ரேயியிடம் தன் மகனை ஒப்படைத்த பிரணாவ் முதல் நின்ற இடத்திற்கே  போய் அப்படியே கை கட்டியபடி

நின்றுகொண்டான்……

மைத்ரேயிக்கு சோட்டுவை விட பிரணாவின் நிலைதான் வருத்தியது…

 அவள் அரை நிமிடம் நின்றாலும் அழுகையை மீண்டும் ஆரம்பித்த மகனைக் கண்டு நடந்தபடியே

 ” இன்று என்ன ஆச்சு என் சோட்டு பையனுக்கு?????”  என்று உரையாடியவளை கண்டு

” சோட்டு என் பையன்!!!!!”  சன்னமாய் கூறியிருந்தான் பிரணாவ்….

“ம்ம்ம் சரி….. இன்று என்ன ஆச்சு அப்பாவின் சோட்டு பையனுக்கு??????

 எப்போதும் சமத்தாக தானே இருப்பீர்கள்?????

 நடந்துகொண்டே இருப்பது  நன்றாக

இருக்கிறதா????

சரி நீங்கள் தூங்குங்கள் !!!!

அம்மா நடக்கிறேன்….”  என்று பேசியபடியே நடையை தொடர்ந்தாள்….

 மைத்ரேயி முக்கால் மணி நேரம் நடந்ததில் சோட்டு நன்றாக தூங்கி இருக்கவும் அவனை மெத்தையில் கிடத்த

புதிதாக மீண்டும் தன் அழுகையை ஆரம்பித்திருந்தான் மகன்….

 மறுபடியும் அவனை தூக்கியவள் எந்த அலுப்பும் கொள்ளாமல்

“சாரிடா சோட்டு பையா…

 அம்மா படுக்க வைத்து விட்டேனா?????

 இதோ நடந்து விடலாம்!!!

 அழுகாதீர்கள் சோட்டு கண்ணா…..”  என்று கூறியபோதும் அவள் முகம்

 அசதியை வெளிப்படுத்ததை இனம் கண்டு கொண்ட பிரணாவ்

“என்னிடம் வரவும் மாட்டேன் என்கிறான்!!! உனக்கு கை வலிக்குதாடி பஜாரி ?????”என்றான்….

”  இல்லை பிரணாவ் ….

நீ படு …

நான் இன்னும் கொஞ்ச நேரம் நடந்து கொண்டு படுத்துக் கொள்கிறேன்!!!!”

 நான் படுப்பதா???? என்னால் உட்கார கூட முடியவில்லையே!!!!!

என்று எண்ணியவன்

“சரி தண்ணீர் குடிக்கிறாயா????

 இல்லை உனக்கு வேறு ஏதாவது ஹெல்ப் வேண்டுமா????

நான் ஏதாவது செய்யட்டுமா?????”  என்றான்…

 அவள் ரெஸ்ட் ரூமிற்கு செல்ல வேண்டி இருக்குமோ???

 சற்று நேரம் எப்படியாவது  அழும் மகனை

  சமாதானப்படுத்த கை மாற்றலாமா???? என்று தான் பிரணாவ் கேட்டது…..

ஆனால் அவளோ வேறு சொன்னாள்….

“பசிக்குது பிரணாவ்!!!!

 தோசை மாவும் இல்லை…. கடைக்கு போய் பிரெட் மாதிரி ஏதாவது வாங்கி வருகிறாயா?????”  என்றதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது….

 மாலை அலுவலகத்திற்கு கிளம்பும் போது அவள் கன்னத்தில் முத்தமிட்டு

” இரவு டின்னருக்கு வெளியில் போகலாம்டி பஜாரி!!!” என்று  காற்றோடு காற்றாக கூறியிருந்தது ஞாபகம் வர

” சாரிடி பஜாரி !!!! சோட்டு காணாமல் போனதில் எனக்கு சாப்பிடாதது கூட தெரியவில்லை….

 இரு வருகிறேன்!!!!!”  என்று அடுப்படிக்குள் ஓடினான் பிரணாவ்….

ஒரு அடுப்படி இப்படித்தான் இருக்குமோ????? சுற்றும் முற்றும் பார்த்தவன்

தாமதிக்காமல் தன் சிற்றன்னையை அழைத்தான்….

 பிரணாவின் அழைப்பை ஏற்று “ஹலோ!!!” சொன்ன யசோதா

” என்னடா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கிறாய்??? என்ன விஷயம்????”  என்றதும்

“தூங்கிக் கொண்டிருந்தாயா யசோம்மா????”  என்று பிரணாவ் கூறிய விதத்திலேயே அவனது சோகம்  புலப்பட்டுவிட்டது…..

  பின்னே இது சாதாரணமாக இருந்தால் அவர் கேட்ட கேள்விக்கு

 ” உனக்கு கூப்பிடுவதற்கு ஜோசியரிடம் போய் நேரம் குறித்துக் கொண்டு வந்தா பேச முடியும் யசோம்மா????”  என்று எதையாவது சொல்லி வம்பிழுத்திருப்பான்….

”  என்ன ஆச்சு பிரணாவ்??????”

” உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணி விட்டேனா யசோம்மா ?????”

” என்னடா ஓவராக பேசுகிறாய்????

அறைஞ்சேனா பாரு!!!!

ஒழுங்காக விசயத்தை சொல்லு ….

உன் மருமகளே இப்போது தான் முழித்திருக்கிறாள் நைட் டியூட்டி பார்க்க…. “

 என்றவர் மடியில் படுத்து இருக்கும் பேத்தியிடம்

“உன் மாமன்காரன் நம்மை டிஸ்டர்ப் பண்ணுகிறானாம்????

என்ன என்று நீ கேளுடாமா குட்டி!!!” என்றார் …

” பப்புமா உன்னிடம் தான் இருக்கிறாளா யசோம்மா?????”

 ஒருவித பரவசத்துடன் கேட்டவனிடம்

“இந்தா நீயே பாரு… உன் பப்புமாவை!!!!!” என்றபடி வீடியோ காலை ஆன் பண்ணி இருந்தார் யசோதா……

பிறவி பயனாய் கண்ணை இழந்தோன் இறையருளாலும் மருத்துவரின் உதவியாலும் பார்வை கிட்டும் சமயம் எவ்வாறு பரவசமாக உணர்வானோ

அதே அளவிலான சந்தோசத்தை

தன் சிற்றன்னையின் மடியில் படுத்தபடி சிரித்து வேறு காண்பித்த பப்புமாவை முதன்முதலாக பார்த்தபோது பிரணாவும்

நல்கியிருந்தான்….

அன்று தூக்காமல் விட்டதற்கும் இன்றுவரை பாராமல் இருப்பதற்கும் சேர்த்து தன் மருமகளிடத்தில் ஒரு கோடி முறையாவது கண்களில் யாசிப்பை வேண்டியவனை பார்த்து

உன் மன்னிப்பு யாருக்கு வேண்டும்?????

 என்பது போல் யுகனின் செல்ல சிண்டு அழ ஆரம்பிக்க

“நோ நோ நோ பப்புமா!!!!!!

ப்ளீஸ் நீயும் அழுகையை ஸ்டார்ட் பண்ணி விடாதே!!!!!!”  என்று கெஞ்ச ஆரம்பித்தான் பிரணாவ்…..

 அதற்குள் உதிதா  ” ஆரம்பிச்சிட்டீங்களா பப்புமா????? இங்கே அம்மாவிடம் வாங்க!!!!”  என்றபடி தூக்கத்தில் இருந்து

எழ

குழந்தையை உதிதாவிடம் கொடுத்த யசோதா

“குழந்தை என்றால் அழ தான்டா செய்யும்….

 ஏன் இப்படி பதறுகிறாய்??????”  என்றார் மகனிடம்…

” அட போ யசோம்மா இங்கு ஒருத்தன் ஒரு மணி நேரமாக அழுது கொண்டே இருக்கிறான்….

என்னால் முடியவே இல்லை!!!!”  பிரணாவ் நொந்து கொள்ள

” டேய் நீ சின்ன பையனாக இருந்தபோது எந்த இரவிலாவது எங்களை உருப்படியாக தூங்க விட்டிருக்கிறாயா????

 உன் பிள்ளை தானே !!!

அப்படித்தான் இருப்பான்…..”  யசோதா சிரித்தபடி சாதாரணமாக கூறலானார்…..

” ஆனால் …ஆனால்

என் பையன் என்னிடம் வரவே மாட்டேன் என்கிறான்?????

அவளிடமே இருக்கிறான் !!!!” என்று சோகமாக கேட்ட மகனை  பார்த்து அதிசயித்தவர்

“இது என்னடா வம்பா போச்சு?????

 இப்போது சோட்டு உன்னிடம் வராதது பிரச்சனையா?????

இல்லை ….

என் மருமகளிடம் இருப்பது உன் பிரச்சனையா??????”  என்றார்….

“இல்லை அப்படியில்லை…..

 அவன் அம்மா கிட்டே இருப்பானாம்…. அப்பாவை பார்த்தாலே அழுவானாம்……”

விட்டால் அழுதுவிடுவேன் ரீதியில் கூறிய மகனை பார்க்க  உண்மையிலேயே யசோதாவிற்கு அவ்வளவு சிரிப்பாக வந்தது….

 ”  டேய் இது உனக்கே ஓவரா தெரியவில்லையா ????

என்றாவது ஒரு நாள் நீ உன் அப்பாவிடம் சென்றதாக உனக்கு நினைவிருக்கிறதா?????

 ஏன் உன் அம்மாவிடம் சொல்லாமல் என்னிடம் தானே இருப்பாய்!!!!

 அப்போதெல்லாம் உன் அம்மா அப்பாவும் இப்படி அழுதார்களா ????”

” அட சும்மா சும்மா நீ என் கூடவே கம்பேர் பண்ணி கொண்டு இருக்காதே யசோம்மா!!!!

 எப்படி அழுகிறான் தெரியுமா?????

 அதுவும் மைத்தி அவனை தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறாள்!!!!

 கொஞ்சம் உட்கார்ந்தாலும் அவ்வளவுதான்….. மீண்டும் ஆரம்பித்து விடுகிறான்…..

 அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது யசோம்மா !!!!”  என்று பொரிந்து

தள்ளினான் ….

” வயிற்று வலியாக இருக்கப்போகிறது….

 மைத்திக்கு தெரியுமல்லவா????

 மருந்து எதையாவது கொடுத்தாளா???” என்றார் யசோதா தன் சிரிப்பை கைவிட்டு  ….

” கொடுத்தாள் …..

ஆனாலும் நடந்து கொண்டேதான் இருக்கிறாள்”

” நன்றாக தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் பிரணாவ் ….. நீ டென்ஷனாகாத!!!!”

” எப்போதடா சரி ஆகும் என்று இருக்கிறது!!!!! சரி யசோம்மா  ஏதாவது சிம்பிளாக இப்போது சாப்பிடும்படி ரெசிபி சொல்லேன் “

“இன்னும் சாப்பிடவில்லையா நீங்கள்????

 ஏன் பிரணாவ் இவ்வளவு நேரம்??????”

” அது…. அது ஒன்றுமில்லை யசோம்மா…. ஹோட்டலுக்கு போனோம் அங்கேயே அப்போதே சோட்டு அழ ஆரம்பிக்கவும் திரும்பி வந்து விட்டோம்  …

 இப்போது சீக்கிரமாக  செய்வது போல் ஏதாவது மேஜிக் டிஷ் இருந்தால் சொல்லு யசோம்மா  ….

பாவம் ‘பசிக்குது’ என்று சொன்னாள்” எனும் போது

” என்னது அந்த டாங்கி சமைக்க போகிறதா????????” தன்னை மீறி அதிர்ந்த தமக்கையின் குரலை பிரணாவிற்கு கேட்க நேர்ந்தது….

Advertisement