Advertisement

அனன்யா தன் குட்டி காதல் கதையை விவரிக்க, அதில் மைத்ரேயியின் வாழ்வையே மாற்றி போட்ட ஒரு சம்பவ நாளை ஞாபகப்படுத்தவும், அப்படியே அமைதி ஆகிவிட்டாள் மைத்ரேயி…….

அன்று அடி பட்டவனுக்கு இரண்டு நாட்கள் கழித்து ‘ஓ நெகட்டிவ்’ இரத்தம் உடனே தேவைப்படுகிறது என்று மாலை மருத்துவமனையிலிருந்து மைத்ரேயியை அழைக்கவும் தானே

ஸ்ரீதீப் கொடுத்த ட்ரீட்-டை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்த மைத்ரேயி

 தன் அப்பாவை கூட்டிக்கொண்டு அங்கு விரைந்ததும்  ….

அன்று நள்ளிரவு தானே அந்த அயோக்கியன் கொண்டு வந்திருந்த எத்தனால் ஸ்ப்ரேயினால் வசமிழந்து அந்த கொடுமையான அசம்பாவிதம் நடந்தததும்!!!!!

முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்த மைத்ரேயியின் தோளை பிடித்து உலுக்கிய அனன்யா

“உங்களுக்கு நியாபகம் இல்லை என்றால் பரவாயில்லை விடுங்கள்!!!!” என்று கூறிவிட்டு தொடர்ந்தாள்…..

” ஸ்ரீதீப் சாருடன் நீங்கள் மருத்துவமனைக்கு சென்று விட்டீர்களா,

 மாலை உங்களை அழைத்துச் செல்ல வந்த வியான் தனியாக நிற்கவும்

 இதுதான் சரியான நேரம் என்று கருதி

 தப்பு தப்பாக உளறி வைத்து

மாட்டிக்கொண்டேன் !!!!! ” என்றாள் அனன்யா …

அவள் மொழிந்த தொனியில்

“அப்படி என்னதான் உளறி வைத்தாய்??????” மைத்ரேயி ஒருவாறு தன்னை மீட்டு கேட்டிருக்க

“அவரை அது தான் வியானை!!! தூரத்திலிருந்து பார்த்தவுடனே

என் மனதை மடை திறந்த வெள்ளமாய் கொட்டி

 அவரோடு இன்றே பைக்கில் ஒன்றாக சென்று விடவேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து அவரை நெருங்கினேனா??????

 எங்கிருந்தோ ஓடிவந்த படபடப்பு என்னை தொற்றிக் கொண்டது!!!!!

 அதில் நான் சொல்ல வந்த காதல்

ஒளிந்துகொள்ள

ஆனால் பேசியே தீரவேண்டும் எனும் ஆசை மட்டும் மேலோங்கி நிற்க

” மைத்ரேயி ஸ்ரீதீப் சாருடன் ஹாஸ்பிடல் போய் இருக்காங்க…..

அதனால் இப்போது நாம் கிளம்பலாமா?????”  என்று விட்டேன் வரவழைத்த தைரியத்துடன்!!!!!!

“ஆனால் அன்று எடுத்தவுடன்

ஏன் அப்படி சொன்னேன்???? என்று எனக்கே தெரியவில்லை!!! “என்று யோசனையோடு கூறியவளை கண்ட

 மைத்ரேயிக்கு எவ்வளவு முயன்றும்  சிரிப்பை அடக்க முடியவில்லை…..

” நீங்கள் இப்படி சிரித்து வைத்தால் நான் என் கதையை சொல்ல மாட்டேன்பா!!!!” என்று முறுக்கிக்கொள்ள

”  சரி சாரி அனு நீ சொல்லு!!!! நான் சிரிக்கவில்லை”  என்று தன் வாயை மூடி அமர்ந்து கொண்ட சீனியரிடம் தன் கதையை மீண்டும் தொடர்ந்தாள் ஜூனியர்…..

நான் அப்படி கூறியதில் என்னை ஒருமாதிரி பார்த்த வியான்

”  ஹலோ ஃபர்ஸ்ட் நீங்கள் யார்????

 நீங்கள் ஏன் என்கூட கிளம்ப வேண்டும்?????”  என்றார்….

” நான் அனு!!!!

 நான் ஏன் உங்களோடு கிளம்ப வேண்டும்????

இது ஒரு நல்ல கேள்வி!!!!

 அது…. வந்து ….  ரொம்ப பிடித்திருக்கிறதே!!!!

அதனால் தான்….. “

 என்று கூறியே விட்டேன்…..

 உடனே பைக்கில் இருந்து இறங்கியவர்

” என்ன ?????

என்ன சொன்னாய்?????

 என்று கத்தியின் உதவி இல்லாமலேயே அவ்வளவு கூர்மையாக என் கண்களை நோக்கி கேட்டாரா !!!????

எனக்கு அப்படியே உடம்பெல்லாம் சில்லிட்டு நெற்றியில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது!!!

வயிற்றுக்குள் வேறு ஏதோ பிசைய….

பயத்தில் பேந்த பேந்த

விழித்து நின்று என் முன் சொடக்கு போட்டு அழைத்து

“உன்னிடம் தான் கேட்கிறேன் !!

யாரை பிடித்திருக்கிறது??????”  என்று அந்த மிலிட்டரி ஆபீசர் மீண்டும் கேட்கவும்

“ஹான்  அது!! ஹான்

மைத்ரேயியை தான்….. ஆமாம் மைத்ரேயியே தான்….. அவர்களை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே!!!????

  எனக்கும் பிடிக்கும் !!!

பிடித்ததற்கு பிடித்ததாய் வண்டியில் கிளம்பினால் ஒன்றும் தப்பில்லை என்று எண்ணி கேட்டுவிட்டேன் !!!!

அதுவும் தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன்!!!!!

 ஆளை விடுங்க சாமி !!!!!

நானே தனியாகவே கிளம்பி கொள்கிறேன்!!!!”  என்று அந்த இடத்தை விட்டு ஓடியே வந்து விட்டேன்  வாய்க்கு வந்ததை உளறிவிட்டு …..

அப்புறம் இன்னொரு நாள் தனியாக

பார்க்கிங்கில் நின்ற வியானை பார்க்க நேரிடவும் ஊரிலுள்ள எல்லா சாமியையும் கும்பிட்டுவிட்டு மீண்டும் தைரியத்தை வரவழைத்து அவர் முன்னே சென்று

 “உங்க போன் நம்பர் என்ன ?????” என்றேன்!!!!

நான் கும்பிட்ட சாமி என்னை கைவிடவில்லை …..

உடனே மறுக்காமல் நம்பரை கொடுத்த பின்பு தான் ஏன் என்றே கேட்டிருந்தார்…..

 ‘நாளையிலிருந்து எக்ஸாம்ஸ் ஆரம்பிக்கப் போகிறது…..

 ஜி.கே கொஸ்டின் எல்லாம் கூட கேட்க சான்ஸ் இருக்கிறது என்று இன்று எங்கள் சார் சொன்னார் !!!!’

 ‘அதுதான் ஒருவேளை எக்ஸாமில் உங்கள் நம்பரை கேட்டுவிட்டால்???

 பாஸ் பண்ணுவதற்கு  உதவியாக

இருக்குமே!!! என்று தான்…… ‘

என்று இழுத்தேனா

 அதற்கு ஒரு பார்வை பார்த்தார்  பாருங்கள்  மறுபடியும் பி.டி.உஷாவின் தங்கையாகி போனேன்!!!!

 அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு நாளிற்கு குறைந்தது 200 முறையாவது அழைத்துவிடுவேன்…..

 எப்போதாவது எடுத்து பேசுவார் !!!!

நானும் சொல்ல வேண்டிய விஷயத்தை தவிர எதைஎதையோ பேசிவிட்டு வைத்து விடுவேன்……

 அண்ட் திஸ் இஸ் மை எவர் ஸ்வீட் ஒன் சைடு  ஸ்டோரி!!!!

 இது லவ் ஸ்டோரியா இல்லை டிரேஜெடி ஸ்டோரியா என்பது வியான் சொல்லப்போகும் பதிலில் தான் இருக்கிறது!!!!!” என்று முடித்தாள் அனன்யா தன் காதல் கதையை….

” அதற்கு முதலில் நீ அவனிடம் உன் காதலை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா ??????” என்று மைத்ரேயி கூற

“வாஸ்தவம் தான் !!!!

ஆனால் அப்படி சொல்ல முடிந்திருந்திருந்தால் தான் பார்த்த முதல் தினமே கொட்டியிருப்பேனே ??!!

எனக்காக நீங்கள் உங்க தோஸ்த் கிட்ட கொஞ்சம் பேசுகிறீர்களா ?????? என்று கேட்டவளின் கரத்தை பற்றிய மைத்ரேயி

“ஒரு பச்ச புள்ளையை இப்படி சுத்தவிட்டு இருக்கிறான்????

பார்க்கலாம்!!!

அவனா ??? நாமா??? என்று!!!!”

அனன்யாவிற்கு ஆதரவு அளித்து விட்டு

” நீயே சொல்லு சோட்டு ….. இன்று வியானை நாம் என்ன செய்யலாம் என்று!!!!”  என்றபடி

அருகில் விளையாடிக் கொண்டிருந்த மகனைப் பார்த்தால் அங்கு சோட்டுவை காணவில்லை……

 “சோட்டு!!!!! சோட்டு!!!!!” பூங்காவின் மறுபுறம் வரையில் மகனை தேடிச் சென்று விட்டாள் மைத்ரேயி …..

‘ என் மடியில் தானே உட்கார்ந்திருந்தான்!!!

 அதற்குள் எங்கு ஓடினான்?????’

 அனன்யா ஒருபுறம் தேட

ஆனால் சோட்டு அவ்விடத்தில் இல்லாமல்  போகவும் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் மகன் தென்படுகிறானா என்று விரைந்து பதற்றத்துடனே ஆராய சென்றாள் மைத்ரேயி    ……..

 அதற்குள் பிரணாவிற்கும் தகவல் கொடுத்திருக்க அடுத்த அரை மணி நேரத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்து இருந்தனர் வியானும் பிரணாவும்….

 அப்போது சிசிடிவி ஃபுடேஜ்ஜில்  யாரோ ஒருவன் சோட்டுவை தூக்கி சென்றிருக்கும் காட்சி பதிவாகி இருப்பதை பார்த்து திகைத்து நின்றான் பிரணாவ்……

 ஆனால் எல்லாம் ஒரு நொடிதான்!!!!!

 “பாஸ் சோட்டுவை கண்டு பிடித்துவிடலாம்….  டென்ஷன்

ஆகாதீர்கள்!!!!”

மைத்ரேயியை காணவில்லை என்றதும் அவன் படபடத்தது வியானிற்கு நினைவு கூற இப்போது என்ன செய்வானோ என்று அஞ்சி வியான் கூறியபடி பிரணாவை பார்க்க

அங்கு பிரணாவ் நின்ற தடயம் கூட இருந்திருக்கவில்லை….

  கண்ணிற்கு எட்டும் தூரத்தில் சிறு புள்ளியாய் மைத்ரேயியின் ஊதா நிற பகானி செல்வது வியானிற்கு தென்பட

“நில்லுங்க பாஸ்…..  நானும் வருகிறேன்!!!!!”  என்று வியான் கத்தியது பிரணாவ்  காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை …..

சிறுத்தையாய் சீறி சென்றவனைப் பார்த்ததுமே வியானை சிறு பயம் ஆட்கொண்டது!!!

அனன்யாவை மைத்ரேயியோடு அங்கு

பார்த்ததும் சரி அதிர்ச்சிக்குள்ளான வியான்

“அப்படி என்ன பேசிக் கொண்டு சோட்டுவை தொலைத்து வைத்திருக்கிறாய்??????” என்று பாய்ந்தான் தன் தோழியிடம் …..

உடனே இடைபுகுந்த அனன்யா

“மைத்தி  மீது எந்த தப்பும் இல்லை….

 நான் தான் பேசிக்கொண்டு இருந்தேன்!!!”  கலக்கத்தோடு கூற

“ஏய் அறிவே இல்லையா உனக்கு?????

 உன்னால் கொஞ்ச நேரம் கூட பேசாமல் இருக்கவே முடியாதா?????

 எப்போது பார்த்தாலும் லொட லொட என்று !!!!

இப்போது பார்…..  சோட்டுவை காணவில்லை!!!!”

 சம்பந்தமே இல்லாமல் வியான் அனன்யாவை சாடினான்……

அதில் கோபமடைந்த மைத்ரேயி

 ” அவளை ஏன் வியான் திட்டுகிறாய்?????” என்று கத்த

“ஏன் திட்டுகிறேனா ??????

பாஸ்-ற்கு இருக்கும் பரிதவிப்பு மற்றும் ஆற்றாமையில் ஒரு சதவீதம் கூட இல்லாமல் எந்த தைரியத்தில் உன்னால் இப்படி என்னிடம் கத்த வேறு முடிகிறது????????” என்றான் வியான் உண்மையாகவே புரியாமல் …

” காணாமல் போயிருப்பது என் பையன்!!!!

 அவனைக் காப்பாற்ற போயிருப்பது என் புருஷன்!!!!!

சோட்டுவை  கண்டு பிடிக்காமல் பிரணாவ் வீட்டிற்கு வர மாட்டான்!!!!!

எனும் தைரியத்தில் தான் கேட்கிறேன்….

 இப்போது நீ ஏன் அனுவிடம் தேவையில்லாமல் பேசுகிறாய்?????”

 “என்ன தேவையில்லாமல் பேசினேன்??????

 இந்நேரம் அவள் மட்டும் பேசாதிருந்தால் சோட்டு பத்திரமாக இருந்திருப்பான் அல்லவா??????”

” ஜஸ்ட் ஸ்டாப் இட் வியான் !!!!

திஸ் இஸ் தி லிமிட் ” மைத்ரேயி அனன்யாவிற்காக நண்பனுடன் சண்டைக்கு நிற்க

“ப்ளீஸ் விடுங்கள் மைத்தி!!!!”  என்ற அனன்யா

வியான் கண்களை நேரே சந்தித்து

“நான் உங்களை உண்மையாக நேசிப்பதை உணர்ந்தும் நீங்கள் என்னை எப்போதும் துச்சப்படுத்தி கொண்டே தான் இருக்கிறீர்கள்!!!

 ஆனால் அப்போதும் இவ்வுலகின் மிகப்பெரும் துர்பாக்கியசாலி நானாகி நிற்கிறேன்!!!

 குட் பை …..” என்று விட்டு ஓடியவளை பார்க்க மைத்ரேயிக்கு பாவமாக இருந்தது…

” போய் அவளை சமாதானப்படுத்து வியான்”   உறைந்து நின்றவனை பிடித்து மைத்ரேயி உலுக்க

அதில் சகஜ நிலையை எட்டியவனோ

 ” ரொம்ப முக்கியம் பாரு!!!!

 முதலில் சோட்டுவை தேடி கண்டுபிடித்தாக வேண்டும்…. வா!!!!”  என்று தன் தோழியை அழைத்து கொண்டு விரைந்தான்….

 பிரணாவின் கைபேசிக்கு 7, 8 முறை

அழைத்தும் பார்த்தும் பதில் வராது போகவும்

“இப்படியே எவ்வளவு நேரம் தான் சுத்தி கொண்டு இருப்போம் வியான்….. வீட்டிற்கு வண்டியை திருப்பு!!!!!” என்றவளை கண்டு அதிர்ந்தவன்

” எனக்கு நிஜமாகவே புரியவில்லை மைத்தி….

என்ன பேசுகிறாய்?????

பாஸ் நம் அலுவலகத்தில் கையாடல் செய்தவனை கண்டு பிடித்துவிடுவார்  என்று நீ நம்பியதில் ஒரு நியாயம் இருக்கு!!!!

 இப்போது பாஸும் தான் என்ன செய்வார்????

 சுந்தரமூர்த்தி வீடும் பூட்டி கிடக்கிறது

எனும் பட்சத்தில் !!!

எங்கு சென்று தேடுவார்??????

நான் ஸ்ரீதீப்பை அழைக்கவா?????

அரசியல் இன்ஃப்லுயன்ஸை வைத்து நாம் கட்டாயம் சோட்டுவை மீட்டுவிடலாம்!!!!!”  என்று ஸ்ரீதீப்பிற்கு தொடர்பு கொள்ள முயன்றான்…..

 ஆனால் “நோ !!!!!” என்றபடி நண்பனின் செய்கையை தடுத்தவள்

“சோட்டுவிற்கும் பிரணாவிற்கும் உள்ள பிணைப்பை பற்றி உனக்கு தெரியாது வியான்…….

 பிரணாவ் சட்டபடி சோட்டுவிற்கு தந்தையாகும் முன்னே

பிரணாவின் மகனாவதற்காகவே தான் இவ்வுலகில் சோட்டு ஜனித்திருப்பான் போலும் !!!!

அவர்களின் பந்தத்தை நினைத்தால் இப்போது கூட எனக்கு புல்லரிக்கிறது!!!!

 நீ வேண்டுமானால் பார் ….. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் பிரணாவ்    யுகன் அண்ணன் மூலமாக யாரையாவது பிடித்து எப்படியாவது கண்டுபிடித்து சோட்டுவை பத்திரமாக மீட்டு வந்து சேருவான் …..” என்றாள் உறுதி தொனிக்க….

” உனக்கு ஏன் மைத்தி புரிய மாட்டேன் என்கிறது!!!!

பாஸ் மற்றும் சோட்டு பற்றி நீ சொல்வதை கேட்கும் போது என்னை விட சந்தோஷம் கொள்வதற்கு இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ????

ஆனால் பிராக்டிகலாக கொஞ்சம் யோசித்துப் பார் !!!!

முதலில் பாஸ் இந்த ஊருக்கே புதிது!!!

ஒருவேளை போலீசிடம் போனாலும் எப்படியும் அவர்கள் சோட்டுவை  கண்டுபிடிக்க இரண்டு நாட்களாவது ஆகும்!!!!

 நீ நம்புவது போல் நடப்பதற்கு பாஸ் ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தால் மட்டும்தான் முடியும்!!!”

 “பிரணாவ் சூப்பர் ஹீரோவா என்பது எனக்கு தெரியவில்லை !!!!

ஆனால் கண்டிப்பாக அவன் ஒரு  சூப்பர் டாடி !!!!

இப்போது வா வீட்டிற்கு போகலாம் ” என்றவள் பிடிவாதமாக அவள் வீட்டிற்கு சென்று ஒரு சோபாவில் அமைதியாக அமர்ந்து கொண்டாள் ….

வியான் பிரணாவின் போனிற்கு மீண்டும்

மீண்டும் அழைத்து பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை…..

 மைத்ரேயி சொன்னபடி ஒரு மணி நேரத்தை அங்கிருந்த கடிகாரம் கடந்திருக்க

நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்தவனின் மனதை மற்றொரு சஞ்சலமும் ஆட்கொண்டது….

 நொடிக்கொருதரம் அழைத்து தன்னை பழக்கபடுத்தி வைத்திருப்பவள் இன்று தான் கோபமாக கத்தவும்

ஒரேடியா தன்னை  புறக்கணித்து இருப்பது வலித்தது!!!!

 எப்போது பார்த்த முதல் நாளிலேயே

 ‘ ரொம்ப பிடித்திருக்கிறதே’ என்று சொன்னாளோ

அந்த நிமிடத்திலிருந்து அனன்யாவை அளவுக்கதிகமாய் வியானிற்கு பிடித்துப் போய்விட்டது…..

 அதன்பின் அவள் தடுமாறி வைத்ததையும் ரசித்தவன் தன் சொந்த காலில் நின்ற பின் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான் ….

சரியாக அச்சமயம் தன் தோழிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகளில் தன் மனதை வெளிக்காட்ட தயங்கியவன்

 அவன் காதலை அப்படியே கிடப்பில் போட்டு வைத்தான்…..

 ஆனால் எப்போது மைத்ரேயியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தானோ?????

 அன்றே தன் காதலை குழிதோண்டி

புதைத்தும் விட்டான்…..

அப்போதும் அவள் அழைப்புகளில் தன் மூச்சுக்காற்றை பொத்தி வைத்தவனுக்கு

 தோழியின் வாழ்வில்  இனி கவலை எதுவும் இல்லை!!!! எல்லாம் பாஸ் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை வந்தவுடன்

தடையின்றி சுவாசிக்கும் ஆசை எழுந்தது…..

 இன்று இப்போது அனு பேசியதால்  தான் கவனமின்றி சோட்டுவை தவற விட்டிருக்கின்றனர் என்பதை மட்டும் வியானால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை !!!!

அதனால்தான் தன்னை மீறி தன்னவளிடத்தில் கத்தியும் விட்டான்…

 ‘இதோ இங்கு சோபாவில் மகனின் நினைவுகளோடு அமர்ந்திருக்கும் மைத்ரேயியையும் தான் திட்டினேன்’

 அவள் என்னிடம் உடனே பேசவே இல்லையா????

 இவளுக்கு மட்டும் என்னவாம்???????

மனம் தன் செல்ல அனுபேபியிடம்  புது காரணத்தைத் தேடி  ‘டு’ விட்டு  வைக்க

 அவளை பற்றி இப்போது நினைக்கக்கூடாது என்று அனன்யாவின் நினைவுகளை புறந்தள்ளியவன்

இப்போது ‘சோட்டுவை எப்படி மீட்பது???????’ என்ற சிந்தனையில் தன்னை முழுதும் தொலைத்துக் கொண்டான்…

 அடுப்படிக்குள் சென்று பாலை காய்ச்ச போனவளின் பின் சென்ற வியான்

” உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?????

 ஒரு மணி நேரத்தில் பாஸ் வந்து விடுவார் என்று கூறினாய்???

இப்போது இரண்டு மணி நேரம் ஆகியும் இன்னும் காணவில்லையே!!!

 போனையும் பாஸ் எடுக்க மாட்டேன் என்கிறார்….

 எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா????

 வா மைத்தி போகலாம்….. எங்கேயாவது போய் எப்படியாவது சோட்டுவை கண்டுபிடித்து வரலாம் “

என்றவனுக்கு தன் தோழியை நினைத்து  உண்மையாகவே பயமாக இருந்தது…..

 அவள் தந்தை இறந்த அன்று தன் அழுகையை முற்றிலும் அடக்கி வைத்திருந்தவள்

நேற்று மாலை தான் கடற்கரையில் கத்தி அழுது மயங்கி விழுந்து வைத்தாள்…..

 இப்போது மகன் தொலைந்து போயிருக்கும் விஷயத்தில் பிரணாவ் மீது அதீத நம்பிக்கை செலுத்தி எதார்த்தமாக நடமாடுவதாக காட்டிக் கொள்பவள் ஒருவேளை இன்றைய இரவிற்குள் பிரணாவ் பாஸால் சோட்டுவை கண்டுபிடிக்க முடியவில்லை எனில்???!!!!!!!

 மீண்டும் என்ன ஆவாளோ?????? என்ற கவலை ஒருபுறம் வாட்ட

மறுபுறமோ சோட்டுவை மீட்கும் வழி தெரியாமல் வியான் அங்கு தவித்து நின்றான் !!!!

Advertisement