மனைவியை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து அவள் உச்சந்தலையில்
தன் கன்னத்தை சாய்த்தபடி உறங்கி போனான் …..
அடுத்த ஒரு மணி நேரத்தில் கண் விழித்ததும் தன்னவனுள் புதைந்திருந்த நிலை கண்டு அவளையும் அறியாமல் சிறு அதிர்ச்சியில் அவனை வசமிழக்க செய்யும் அவளது ரோஜா இதழ்களை விரித்து இருந்தாள் மைத்ரேயி . …
பிறகு அதையும் உணர்ந்தாளோ ?????
‘நல்ல வேளை இவன் முழிக்கவில்லை!!!! இல்லையெனில் என்ன செய்திருப்பான்??????’ என்ற எண்ணம் உதிக்க
அவளது கை தானாக ரோஜா இதழ்களை மறைந்திருந்தது …..
மனைவியின் அசைவு தெரிந்து “ஆடாமல் படுடி பஜாரி!!!!!” தூக்கத்திலேயே
கூறினான் பிரணாவ் …
“காலை ஆகி விட்டது பிரணாவ் …..
சோட்டு முழித்து விடுவான்!!!
போய் பால் காய போட வேண்டும் “
அவள் எடுத்துரைத்தது அவன் செவிகளுக்கு எட்டியதும்
” சரி காயப்போட போ !!! ஆனால் எனக்கு தூக்கம் வருகிறது ….. கொஞ்சம் சீக்கிரம் வந்து விடு சரியா??????” என்று விழி திறவாமல் மனைவியை விடுவித்து இருந்தான் பிரணாவ்…..
கன்னங்களில் ஏறிய சிவப்பினை மறைக்காது அதனை தன் இதழ்களில் பாய்ச்சி மென்னகையை சிந்தி
கீழே இறங்கி ஓடியவள்
நடு ஹாலில் சோபாவிற்கு அடியில் தலையோடு தன் உடம்பையும் வைத்து
ஒற்றை காலை மட்டும் வெளியே நீட்டியபடி உறங்கிய நண்பனின் போன் அடிப்பதை கண்டு
‘வியானின் அன்னையாக இருக்குமோ ????’என்று அவனை
” எழுந்திரு வியான்!!!!” எழுப்பி பார்த்தாள்….
நண்பன் எழாமல் போகவும் ஒலித்த போனை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அதில் பதிந்து வைத்திருந்த
“பேபி!!!!!!!!!!!!!!”
என்ற பெயரும்
அதில் ஒலித்த பெண்ணின் புகைப்படமும் ஒருவித சுவாரஸ்யத்தை கூட்டியது!!!!!
மேலும் இப்பெண்ணை எங்கேயோ பார்த்து இருப்பதாய் மைத்ரேயிக்கு தோன்றிய சமயம்
அவ்வழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது…..
மேலும் வியானின் ‘பேபி’ யிடமிருந்து
116 மிஸ்டு கால்ஸ் வந்திருப்பதும் அவளுக்கு தெரிய வந்தது….
போனை எடுத்த இடத்திலேயே வைத்த மைத்ரேயி நண்பனை பற்றிய யோசனைகளுடன் கிச்சனுக்குள் சென்று தன் வேலையை கவனிக்கலானாள்……
கொஞ்ச நேரத்திலேயே பசியெடுத்து அழுத மகனை தூக்கியபடி கீழே இறங்கி இருந்த பிரணாவின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சுவதை கண்டுகொண்டவள்
சோட்டுவை வாங்கி ” வியான் நைட் ஃபுல்லா தூங்க விடவில்லையா??????
நீ போய் படு பிரணாவ்….. நான் பார்த்துக்கிறேன் “என்றாள்.
மனைவியை மென்மேலும் நெருங்கியவன் ” இதை ஓபன் பண்ணுடி பஜாரி!!!!” என்று அவளிதழ்களை தொட்டு காண்பிக்க
” என்ன ??? என்ன சொன்னாய்?????”
அவன் கண்களில் எந்தவித உணர்ச்சியுமில்லாத போதும் அவன் நடந்து கொள்ளும் முறை விசித்திரமாக பட்டதோடு
அவன் சுட்டி காண்பித்த இதழ்கள் அவன் சொல்பேச்சு கேட்டு அதிர்ச்சியில் தானாக விரிந்து நின்றது…..
” இதை தான் சொன்னேன்!!!” அவள் வாய் திறந்ததை குறிப்பிட்டவன்
அதில் ஒரு மாத்திரையை போட்டு
“நேற்று தான் டாக்டர் அவ்வளவு சொன்னார்… தினமும் காலையில் இம்மாத்திரைகளை தவறவிடாமல் எடுத்து கொள்ள வேண்டும் என்று !!!
ஆனால் டப்பாவை நீ திறக்க கூட இல்லைடி பஜாரி!!!”
சிறு குற்றச்சாட்டுடன் உரைக்கவும்
திருமணத்திற்கு முன்பு அன்று
அவளது அதிகாலை தூக்கத்திலேயே தைராய்டு மாத்திரையை வாயில் திணித்துவிட்டு செல்பவளை!! நினைவு கூறினாள் மைத்ரேயி…
அவளையுமறியாமல் வெளிப்பட்ட கண்ணீரை கணவன் பார்த்துவிடாது திரும்பி நின்றவளை வலுக்கட்டாயமாக தன்புறம் திரும்ப செய்தான் பிரணாவ் …..
எதற்கும் சட்டென அழுதுவிடும் பழக்கமில்லாதவள் பிரணாவ் வந்ததிலிருந்து தன் இயல்பே மாறக் கண்டதும் அவனை முறைத்து
” என்னை மாற்றிவிட்டாய் பிரணாவ்!!!!” என்று அவள் திட்ட
சம்பந்தமே இல்லாமல் முட்டி நிற்கும் தன் சண்டை கோழியின் மூக்கை பிடித்து ஆட்டியவன்
” நீ தான்டி பஜாரி …. என்னை அப்சைட் டௌன் கவுத்தி போட்டு வைத்திருக்கிறாய்!!!!!!” சரிக்கு சமமாக திருப்பி கொடுத்தான்…..
எதை குறிப்பிடுகிறான் என்று உணராத போதும் ” நானெல்லாம் யாரையும் கவுத்தவில்லை…. ” என்றவளுக்கு திடீரென ஸ்ரீதீப்பின் ஞாபகம் எழ
” உன்னை பார்த்த தினத்திலிருந்து கவுந்து கிடக்கிறேன் மைத்தி….
என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா ??????” ஸ்ரீதீப் அடிக்கடி கூறும் வசனமும் அவளை வாட்ட
” சரி போய் தூங்கு பிரணாவ்!!! ” என்றாள் தன் கணவனிடம் எதையும் வெளிகாட்டி கொள்ளாதவளாக…..
அவனோ விடாமல்
” ஏன் திடீரென அப்செட் ஆனாய்???
மாமாவின் நினைப்பு வந்து விட்டதா????
நான் தான் இருக்கிறேன் அல்லவா??????”
அவள் இரு கன்னங்களையும் ஏந்தி கூற
தன் இடக்கரத்தில் அரை தூக்கத்தில் அழுதபடி வந்த சோட்டு மீண்டும் உறங்கியிருக்க
அவள் மேல் படிந்த கணவனின் கரங்களை தன் வலக்கரம் கொண்டு
அழுத்தி பேசினாள்….
” நீ இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை பிரணாவ்!!!!
இன்னும் எவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டாலும் அனைத்தையும் தைரியமாக ஃபேஸ் பண்ணுவேன்……
ஆனால் நீ மட்டும் என் பக்கத்தில் இல்லை என்றால் நான்…. என்னால் …….???????” உணர்ச்சிமிகுதியில் திணறியவளின் இதழ்களை தன் கரம் கொண்டு பூட்டியவன்
” நான் சாகும் வரையில் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன்…..”
எனவும் தாரைதாரையாக வழிந்தோடிய அவளது விழிநீரை கண்டு திகைத்து போய் அவனவளை இயல்புக்கு மீட்டுவதாக எண்ணி
” உன்னை டார்ச்சர் பண்ணி கொண்டே தான்டி பஜாரி இருக்க போகிறேன்….
தயவுசெய்து என் மூஞ்சியிலேயே முழிக்காதே!!!!!” என்று அவள் செய்வித்த பிழைக்காக விடுதலை பத்திரத்தை அவள் முகத்தில் விட்டடிக்க போகிறான் என்பது!!!!!
கணவனின் ஆறுதல் மொழிகளில் தன்னை மீட்டிருந்த மைத்ரேயி
” சரி நான் கிட்சன் போகிறேன்…. மறுபடியும் முழித்தான் என்றால் சோட்டு அழ ஆரம்பித்துவிடுவான் !!!
கொஞ்ச நேரம் நீ ரெஸ்ட் எடுத்து கொள்”
என்று திரும்ப
“இல்லை கமிஷனர் சார் கால் பண்ணினார்…… ஒருமணி நேரத்திற்குள் வர சொல்லி இருந்தார் …. இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் !!!!”
என்றான் பிரணாவ் ….
“கமிஷனரா????? ஏன்??????” விவரம் ஏதும் அறியாமல் கேட்ட மனைவியிடம்
நேற்று நடந்த அனைத்தையும் ஒப்புவித்து இருந்தான் பிரணாவ்…
மகனுக்கு பால் புகட்டியபடியே கேட்டு முடித்தவள்
“சுந்தரமூர்த்தி அங்கிளா???????
இந்த காலத்தில் யாரையுமே நம்ப முடியாது போல பிரணாவ்!!!!!!!!
அடிக்கடி ‘நீ என் பொண்ணு மாதிரிமா’ என்பார் !!!!”
“அதனால் தான் பெண்ணின் சொத்தில் உரிமை எடுத்துக் கொண்டார் போல ….”
பிரணாவ் பேசும் போதே வியானின் போன் மீண்டும் அடித்தது ……
எதிர் சோபாவின் கீழ் உறங்கிக்கொண்டிருந்த வியானை எழுப்ப எழுந்தவனை
” வேண்டாம் பிரணாவ் ரிஸ்க் எடுக்காதே!!!!
நீ என்ன முயன்றாலும் இன்று மாலை வரை கண்ணே திறக்க மாட்டான்!!!!”
நண்பனை பற்றி முழுதும் அறிந்து வைத்திருந்த மனைவி எச்சரித்ததை பொருட்படுத்தாமல் வியானின் அருகில் சென்று
” எழுந்திரு வியான்!!!!!” என்றான் பிரணாவ் ..
அவன் அப்படி மெதுவாக அழைத்த
அடுத்த நொடியில்
” எஸ் பாஸ் !!!!!!!” என்று எழுந்தமர்ந்த வியானை கண்டு அதிர்ந்து போனாள் மைத்ரேயி …..
மேலும் “போன் அடிக்குது!!!!!” என்ற பிரணாவ் அங்கு கிடந்த வியானின் போனை காண்பிக்க
அதை கையில் எடுத்தவன்
“எக்ஸ்க்யூஸ் மீ பாஸ்!!!!
பேசிவிட்டு வந்து விடுகிறேன்…..” என்று நகர்ந்து சென்றான் ….
” நேற்று ஒரே இரவில் அவன் தண்ணி அடித்திருந்தும் அப்படி என்ன அதிசயம் நிகழ்ந்தது பிரணாவ் ?????” கணவனை மைத்ரேயி பார்க்க
“என்னென்னவோ நடந்து இருக்க
வேண்டியது??!!!!
வியான் தண்ணி அடித்ததால் அந்த அதிசயம் டிராக் மாறி போய்விட்டது போல…..
இரண்டு கன்னத்தையும் பிடித்து
‘லவ் யூ பாஸ் லவ் யூ பாஸ்’ என்று உதறித் தள்ளி விட்டான்…..
நல்லவேளை நான் பெண்ணாக பிறக்கவில்லை!!!!!!”
என்றதும் அடக்கமாட்டாமல் சிரித்தவள்
” எப்படி????????” என்றாள்…
” அழகாய் பிறந்தாலே இதுதான் பிரச்சினை !!!!” என்றவனை போலியாக முறைத்தவள்
” அதுதான் உனக்கு எப்படி இந்த பிரச்சனை வந்தது என்று கேட்கிறேன்!!!!?????” என்று வம்பிழுத்தாள் மனைவி …..
“உன் மனதை தொட்டு சொல்லுடி பஜாரி….
உன் அத்தான் அழகில்லை என்று!!!!!” சவால் விட்டவனை கண்டு
அதிர்ந்தவள் பதில் கூறும் முன்னே அவளை காப்பது போல் அவள் நண்பன் போன் பேசி முடித்து விட்டு வந்திருந்தான்….
இத்தனை மிஸ்டுகால்ஸ்- ற்கு இவ்வளவு சீக்கிரமாக சமாதானப்படுத்தி விட்டானா???????? என்று யோசித்த மைத்ரேயி
இப்போது அடுத்ததாக நண்பனை வம்பிழுக்கும் பொருட்டு
“பிரணாவ் இத்தனை நாள் நமக்கு மட்டும் தான் பேபி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!!!!
ஆனால் இன்று தான் தெரிந்தது வியானிற்கும் ஒரு கேர்ள் பேபி இருக்கிறாள் என்பது!!!!!
நேற்று அந்த பேபியை பற்றி அவன் ஏதாவது சொன்னானா ???” என்று கேட்டாள் ….
மாட்டிக் கொண்டாயா ??????
என்பதுபோல் வியானை பார்த்த பிரணாவ்
“நேற்று இரவு முழுவதும் அவன் கையில் வைத்திருக்கும் போனை அவன் பேபி தான் பாட்டு பாடி தூங்க வைத்து கொண்டே இருந்தது!!!!!! ” என்று பிரணாவும் மனைவிக்கு ஆதரவாக போர்க் கொடி உயர்த்தினான்….
‘நமக்கு மட்டும் எப்படி இந்த போன் அடித்தது கேட்காமல் போனது ???????????’ என்று அநியாயத்திற்கு வருத்தப்பட்ட வியான்
” புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கொண்டு ரொம்ப ஓட்டாதீங்க பாஸ்!!!!!!” என்றான்…
” இது என்ன புதுசா பாஸ் ?????” மைத்ரேயி கேட்க
“அப்படி கூப்பிடா விட்டால் மேடம் தான் கோபித்துக் கொள்வீர்களே !!!!”
தோழியிடம் முறைப்புடனே தான் பதில் அளித்தான் வியான்…
” அது … அது நீ பிரணாவிடம் முட்டி கொண்டே இருந்தாயா????
அது தான் அப்படி சொல்லிவிட்டேன்!!!!!
எப்போதும் போல் பெயர் சொல்லியே கூப்பிடு வியான் !!!”
” எப்படி இருந்தாலும் உன் புருஷன் தானே எனக்கு முதலாளி!!!!
அதனால் அப்படியே கூப்பிட்டு கொள்கிறேன்!!!” என்றான் வியான் மாறாதவனாய்….
” உன் முதலாளி நான் இல்லை வியான்…..”
“இங்கே வாடா மகனே!!! ” என்று மனைவியின் கையில் இருந்த சோட்டுவை வாங்கிய பிரணாவ்
“இவர் தான் உன் பாஸ்!!!
இவன் பெரியவனானதும் கண்டிப்பாக மாமா ஆசைப்பட்டபடி ரேயி குரூப்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தான் போகிறான்!!!!
இந்த வாரமே மாமா பெயரில் இருப்பதை…. அது மைத்தி பெயரில் இருந்தாலும் சரி அனைத்தையும் சோட்டு பெயருக்கு மாற்றி விடலாம்!!!!!!