Advertisement

ஸ்ரீதீப் அவனது கடலினும் ஆழமான காதல் நிராகரிக்க பட்டிருந்த போதும் அவனுள் துளிர்விட்ட சிறு விதை அளவிலான நம்பிக்கை  விருட்சமாக மாற  ஏங்கி காத்து கொண்டே தான் இருந்தது…..

அவன் காதலை உணர்த்திய பிறகு சில மாதங்கள் சகஜமாக நகர்ந்திருக்க

ஒரு வாரமாய் வந்து “ஹாய் !!!!!”

மட்டும் சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே “பை”-யையும் சேர்த்து கொண்டு ஓடுபவனிடம்

 “என்ன ஆச்சு????

 ஏன் இப்படி உம் என்று திரிகிறாய்?????” என்றாள் மைத்ரேயி…..

” விடு!!!!!” என்று சலித்த வண்ணம் கிளம்பியவனிடம்

“நான் அப்போதே சொல்லிவிட்டேன்பா…..

 நீ தான் விட மாட்டேன் என்கிறாய் !!!!!” என்றாள் அவன் காதலை குறிப்பிட்டு….

” ஹேய் ஏதாவது பேசி விட போகிறேன்!!!!!

 நானே கண்ட்ரோலாக இருக்கிறேன்….. சீண்டி விட்டு  வேடிக்கை பார்க்காதே…..

 வீட்டில் எனக்கும் பிரதீப்பிற்கும் பிரச்சனை…..

 இப்போது உடனே சாட் அவுட் பண்ண முடியாமல் நிற்கிறேன்…..

ஆமாம் மேடம் என்ன சொன்னீர்கள்?????

 அப்போதே விட சொன்னீர்களா????

 இனி உன்னிடம் பேசி எந்த பயனும்

இல்லை!!!!!

 நான் அங்களிடம் பேசிக் கொள்கிறேன்…….” என்ற ஸ்ரீதீப்

அப்போதே தமிழ்வாணனை சந்திக்க புறப்பட்டான்…..

” ஏய் நில்லு ஸ்ரீ…. டாடியிடம் என்ன பேசப் போகிறாய்?????

அட  சொல்லி விட்டுப் போ!!!!!”  என்று பின் தொடர்ந்தவளையும் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு

ரேயி குரூப்ஸ் ஆஃப் இன்டஸ்ட்ரீஸிற்குள் சென்று தன் வண்டியை நிறுத்தினான்……

 தாமதிக்காமல் தமிழ்வாணனின் அறைக்கு சென்றவன்

” அங்கிள் கொஞ்சம் முக்கியமான விஷயம் …. பேசலாமா ?????” என்று அனுமதி கேட்க

அப்போது அறைக்குள் ஓடி வந்த மகளை பார்த்தபடியே தன் இருக்கையை விட்டு எழுந்து அங்கிருந்த ஃசோபாவில் அமர்ந்து வந்தவர்களையும் உட்கார சொன்னார் மைத்ரேயியின் தந்தை…..

” எனக்கு மைத்தியை கல்யாணம் பண்ணிக் கொடுங்கள் அங்கிள்….. ப்ளீஸ்!!!!!”  என்றான் சுற்றி வளைக்காமல்….

அவனது இக்கூற்றில் அதிர்ச்சியடைந்தவர் தன் மகளை பார்க்க

ஸ்ரீதீப் அவசரமாக இடைபுகுந்தான்…..

 ” அவளுக்கு கொஞ்சம் கூட இதில் இன்ட்ரஸ்ட் இல்லை அங்கிள்….

 எனக்கு மட்டும் தான் அவளை பிடிக்கும்…..

 ரொம்ப பிடிக்கும்!!!!

 எப்படியும் நாளைக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து அவளுக்கு கட்டி வைப்பீர்கள் தானே???

 அப்படி தேடி பிடித்தவனாக என்னை நினைத்துக் கொண்டு என்னை கட்டி வையுங்கள்…..

என்னை பற்றி மைத்திக்கு தெரியும்…..

இருந்தும் உங்கள் திருப்திக்கு விசாரித்து கொள்ளுங்கள்…..

கண்டிப்பாக அவளை நல்லபடியாக பார்த்து கொள்வேன்….

என்னை நம்புங்கள் அங்கிள் ப்ளீஸ் !!!!”

 ஸ்ரீதீப் அவன் மனதை வெளிபடுத்தி கொண்ட விதம் தமிழ்வாணனிற்கு  மிகவும் பிடித்துப் போனது…..

அவன் நல்லவன் என்பதை தான் மகள் ஓர் ஆயிரம் முறையாவது அவன் நிர்வாகிக்கும் திறமையை பற்றி எடுத்து உரைக்கும் போது உணர்த்தி இருக்கிறாளே!!!!

இவனை விட நல்ல குணசாலியை தன் மகளை நேசிக்கும் பண்புடையவனை

எங்கு போய் தேடுவேன் ????? என்ற எண்ணங்கள் சூழ்ந்திருக்க

 ” ரேயி கண்ணா படிப்பு முடியட்டும் மாப்பிள்ளை….. கட்டிக் கொடுத்து விடுகிறேன்!!!!”  என்று தமிழ்வாணன் கூறியது தான் தாமதம்

அவரை தூக்கி தட்டாமாலை சுற்றி இருந்தான் ஸ்ரீதீப்…..

 மைத்ரேயி தன் வாயை பிளந்து அக்காட்சியை பார்த்து நிற்க

அவள் அருகில் வந்தவன் ஒரு முறை தன் கண்களை இறுக்க மூடி திறந்து

“உன்னையும் கூடிய சீக்கிரம் இப்படி தூக்கி சுற்ற தான் போகிறேன் …..

எதற்கும் என்னிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள் !!!” என்று கண்ணடித்து உடனே அவ்விடம் விட்டு விடைபெற்று

இருக்க

“ஏன்டா டேயி கண்ணா????

 நீயே சொல்வது நல்ல பையன் தானே???

  டாடி ஏதாவது சொல்வேன் என்று நினைத்து மறுத்தாயா ????

இல்லை

நிஜமாகவே உனக்கு அவனை பிடிக்கவில்லையா??????”   என்றார் தமிழ்வாணன் தன் மகளின் குழம்பிய நிலையை கண்டுகொண்டு.

 “ஸ்ரீதீப்பை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா டாடி ??????

ஆனால் டாடி எனக்கு என்னமோ தெரியவில்லை….. கொஞ்சம் பயமாக  இருக்கிறது!!!!!

 அது எப்படிப்பட்ட பயம் என்று என்னால் சரியாக எக்ஸ்ப்ளைன் பண்ண முடியவில்லை”  யோசனையோடு கூறிய மகளை அணைத்து கொண்டவர்

“உன் டாடி இருக்கிறேன் அல்லவா????  அப்புறம் ஏன் என் ரேயி கண்ணாவுக்கு பயம் ??????” ஆறுதல் மொழி உதிர்த்து தெம்பூட்டினார்…

மேலும்

திருமணம் என்றதும் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் சஞ்சலத்தை மகள் குறிப்பிடுகிறாள் என்று நினைத்து கொண்டவர்

“அதுதான் இன்னும் படிப்பு முடிய ஒரு வருடம் இருக்கிறதே ????

ஆனால் இப்போது அதற்கு முன் இன்னொரு முக்கியமான வேலை இருக்கிறது….. நமக்கு வாடா ரேயி கண்ணா…. நம் வீட்டிற்கு சென்று அதை  முதலில் பார்ப்போம்……

 நம் வீட்டில் கூடிய விரைலில் கேட்கப் போகும் கெட்டிமேளம் சத்தம் என்னை உற்சாக மூட்டுகிறது…..”

 குஷியாக கூறிச் சென்றவரை எதிர்த்துப் பேசாது பின்தொடர்ந்தாள் மைத்ரேயி……

அடுத்த நாள் வியானிற்கும் மைத்ரேயிக்கும் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் ட்ரீட் கொடுப்பதாக சொல்லி அவர்களை அங்கு அழைத்து வந்திருந்தான் ஸ்ரீதீப் ……

யாருக்கோ விருந்து என்பது போல் தன் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளிடம்

ஐஸ்கிரீம் டப்பாவை பிடுங்கிய வியான்

” அங்கு ஒருத்தன் உங்கள் கல்யாணத்திற்கு  ட்ரீட் வைத்து

ஒரு வாய் கூட சாப்பிடாமல் உன்னையே பார்த்தபடி அரை மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறான்!!!!!

 அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல்

இதை இந்த மொக்கு மொக்குகிறாய்??????

ஆனாலும் ஸ்ரீ நீ ரொம்ப பாவம்டா!!!!!

எதற்கும் ஒருமுறை  நன்றாக யோசித்துக் கொள் !!!!

இதே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?????????”  என்று தோழியிடம் ஆரம்பித்தவன் நண்பனிடம் நிறுத்த

” என்ன மச்சி பண்றது ?????

மத்த லைட் எல்லாம் பார்க்க கூட தோன்றவில்லை அவ்வளவு கண்ணு கூசுதே ??” என்றிருந்தான் ஸ்ரீதீப் சிரித்தபடி….

 அப்போதும் அவர்களின் உரையாடலில் தலையிடாமல் வியான் கைப்பற்றியிருந்த ஐஸ்கிரீம் டப்பாவை வாங்க

முயன்றவளை பார்த்து தன் தலையில் அடித்து கொண்ட வியான்

“ஆனால் இந்த லைட் எரிவதற்குள்ளே நீ கிழவன் ஆகி விடுவாய்…. எதற்கும் ஜாக்கிரதை!!”  என்றுவிட்டு

  தன் தோழியிடம் திரும்பி “உனக்கு இந்த ஐஸ்கிரீம் தானே வேண்டும்…..

 அவனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு விட்டு எடுத்துக்கொள் !!!!” என்று அந்த டேபிளில் வைக்க

அவசரமாக ஸ்ரீதீப்பை பார்த்த மைத்ரேயி அந்த ஐஸ் கிரீம்  டப்பாவில் கை வைக்க தயங்கினாள்…..

 ஆனால் அவளின் நிலை உணர்ந்த ஸ்ரீதீப் “விடு வியான்…..

 இது நான் எனக்கு பிடித்த பெண்ணை  கல்யாணம் செய்துகொள்வது

போவதற்கான ட்ரீட்!!!

  அப்படி அவளுக்கு பிடித்த பையனாக நானும் மாற தான் போகிறேன் …..

அன்று அவளும் நமக்கு இப்படி ஒரு ட்ரீட் நிச்சயம் கொடுப்பாள்..

அப்போது அவளுக்கு பிடித்த இந்த பிளாக் கரன்ட் ஐஸ்கிரீமை நான் சொல்லாமலேயே எனக்கு ஊட்டிவிட தான் போகிறாள்!!!

 இவை அனைத்தும் கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகிறது!!!”  என்று அவ்வளவு உறுதியாகச் சொன்னவனின் வாழ்க்கை

அன்றிரவே அவன் காதலையும் சேர்த்துக்கொண்டு தடுமாறி செல்ல போவதை அவன் அறியவில்லை…..

அப்போதும் வீடு திரும்புகையில்

“மைத்தியை பத்திரமாக கூட்டிக் போ வியான்…..

 இப்போது ரெண்டு நாளாக அமைதியாக கடந்துவிடும் பிரதீப்பை பார்த்தாலே பகீரென்று இருக்கிறது !!!!

அவன் எவ்வளவு சண்டை போட்டாலும் ஒரு கை பார்த்து விடுவேன்….

 அதுவும் இந்த முறை எலக்ஷனில் சீட் கிடையாது என்று அப்பா சொல்லவும் எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கடந்தவன் தீட்டும் திட்டம் தான் புரியவில்லை!!!???

 எங்கு அவனுக்கு என் மீது இருக்கும் வன்மம் மைத்தியை பாதிக்குமோ என்று தோன்றுகிறது….. கவனமாக பார்த்து கொள்!!!

” டேக் கேர்!!!!” என்று அவ்வளவு காதலையும் அக்கறையையும் சுமந்து அவள் புறம் திரும்ப

 மைத்ரேயி பேச தொடங்கும் முன்னே

” நானே பிளாக் பெல்ட் ஹோல்டர் என்று அசால்ட்டாக இருக்காதே !!!! ப்ளீஸ் டேக் கேர் மை…. மைத்தி !!!!” என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு விடை பெற்றிருந்தான் ஸ்ரீதீப் ….

அப்படி வீட்டிற்குத் திரும்பியவன்

 போதையால் தடுமாறியபடி தன் காரை திறந்து வெளியேறிய பிரதீப்பை காண வித்திடவும்

அவனது உள்ளுணர்வு அவனுக்கு எதையோ உணர்த்த

உடனே மைத்ரேயியை அழைத்திருந்தான்…..

” மைத்தி வீட்டிற்கு சென்று விட்டாயா??????”

 அவள் அதற்கு கூறிய பதிலில் திருப்தி அடையாது

“தனியாக வந்து இருக்கிறாயா????

 இல்லை யாராவது கூட இருக்கிறார்களா????”  என்று பதறினான்.

 பின் “அங்கிள் கூட இருந்தாலும் பரவாயில்லை…. நானும் வருகிறேன்!!!!” என்று அடம்பிடிக்க

” பயப்படாதே ஸ்ரீ!!!!  நீ பயப்படுற அளவிற்கு முதலில் உன் அண்ணன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது!!!!

 என்னை பற்றி உனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை…..

இதோ என்னை கூப்பிடுகிறார்கள் ….

 நாம் மார்னிங் மீட் பண்ணலாம்!!!!” என்று கூறி அணைத்து விட்டாள் மைத்ரேயி ….

 ஆனால் இவ்வளவு பயப்படுகிறானே ஏன்

என்று சற்று ஜாக்கிரதையாக அனைத்தையும் மைத்ரேயி முன்கூட்டியே யோசித்திருக்கலாமோ?????

நள்ளிரவு 2:00 மணி அளவில் மைத்ரேயியின் வீட்டின் முன் தன் காரை நிறுத்தினான் பிரதீப் …..

  பிரதீப்பிற்கு தன் உடன்பிறப்பின்  மீது இருந்த பகையில் அவனைப் பழிவாங்க துடித்து அதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருக்கலானான்…..

 அவனுக்கு தெரிந்த நபர்கள் சிலரின் உதவியால் மைத்ரேயியை பற்றியும் ஸ்ரீதீப்பின் காதலை பற்றியும் அறிந்தே தான் வைத்திருந்த போதும் அவனுக்கு அது ஒரு பொருட்டாக தெரியவில்லை…..

 ஆனால் இன்று அவர்களது ட்ரீட்-டை நேரில் கண்டவனுக்கு

  ” இனி எப்படி இப்படி சிரிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்டா!!!!”   என்றான் கண்களில் தீப்பொறி பறக்க…..

 செய்ய வேண்டும் எதையாவது இன்றே செய்து தீர வேண்டுமென்ற வேகம் ஒன்று எழ வீட்டிற்கு சென்று மூச்சு முட்ட முட்ட குடித்தவன்

ஸ்ரீதீப் வீட்டிற்கு வரும் வரையில் காத்திருந்து

தம்பியின் கார் உள்ளே வந்ததும் வெளியில் புறப்பட்டான் தன் திட்டத்தை நிறைவேற்ற !!!!

 சுவாசிக்கும் போதை பொருளான எத்தனால்  இன்ஹேலரை நேராக அவன் நண்பன் ஒருவனிடம் சென்று வாங்கிய பிரதீப் நள்ளிரவு வரை அவன் வீட்டிலேயே தங்கிவிட்டு மைத்ரேயியின் வீட்டு காலிங்

பெல்லை அழுத்தியிருந்தான்….

 10 நிமிடங்களாக ஓயாமல் ஒலித்த காலிங் பெல் சத்தத்தினால் வந்து கதவை திறந்த தமிழ்வாணனின் முகத்தில் அம்மருந்தை பாய்ச்சியவன் அடுத்த படியாக “டாடி!!!!!” என்று பாய்ந்து வந்தவளின் வாயிலேயே நேரிடையாக எத்தனாலை இன்ஹேலரை புகட்டி

அவளை அப்படியே தூக்கி அருகில் இருந்த……..”

 என்று வியான் கூறும்போதே

“வேண்டாம் சொல்லாதே !!!!!!!

போதும் போதும்!!!!!!”  என்று தன் காதுகளை பொத்தி கத்தியிருந்தான் பிரணாவ்……

 அதற்கு மேல் எதையும் கேட்க முடியாதவனாய் எழுந்தவனின் கரம் பற்றி தன் அருகில் அமர வைத்த வியான் கூற வந்ததை முழுதாக கேட்டிருக்கலாமோ?????

 பற்றிய பிரணாவின் கையை விடாது   ” இப்போது சொல்லுங்கள் பாஸ்…..

 நீங்கள் ரொம்ப நல்லவர் வல்லவர் தானே ????

 சரியான நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்!!!!

 இங்கு ஸ்ரீதீப் என்ன தப்பு பண்ணினான்??????

 மைத்தியை உண்மையாக காதலித்ததை தவிர ????

பிரதீப் செய்த காரியத்திற்கு அண்ணன் என்றும் பாராமல் அவனைக் கொலை பண்ணும் அளவிற்கு சென்று விட்டான் ஸ்ரீதீப்….

 பிறகு அவனது அப்பா என்.கே வின் குறுக்கீட்டால் அன்று பிரதீப் உயிர் தப்பித்து விட்டான்….

அதை காட்டிலும் பிரதீப் இருக்கும் வீட்டில் இனி இருக்க மாட்டேன் என்று அவர்கள்  வீட்டை விட்டே வெளியே வந்து விட்டான்…..

 அவன் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்து விட்டான்……

 அதன் பிறகு மைத்தியிடம் பேசக்கூட அவன் முயற்சிக்கவில்லை!!!!

” போய் பேசுடா!!” என்று அத்தனை முறை கேட்டுப் பார்த்து விட்டேன் ….

அதற்கு அவன் “இந்த ஜென்மத்தில் அவள்

என்னை மன்னிக்க மாட்டாள்!!!” என்று மறுத்ததோடு அவள் இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை……

அதன்பின்  ஒருவருடம் கழித்து மைத்ரேயியின் தந்தை தமிழ்வாணன் இறந்த அன்று தான் அவள் வீட்டிற்கு சென்று அவளை சந்தித்தான்…..

 சோட்டுவை முதன்முதலாக பார்த்த ஸ்ரீதீப் அவனை தூக்க முற்பட கல்லென இறுகிப்போய் வீற்றிருந்த மைத்ரேயி வேக வேகமாக வந்து மகனை பறித்து கொண்டு

” இவன் என்னுடைய பையன் …..

எனக்கு மட்டும்தான் பையன்!!!!!

 தயவுசெய்து இவனிடம் இருந்து நீ விலகி நில் !!!!” என்று முறைத்துவிட்டு திரும்பினாள்.

” மைத்தி ஸ்ரீ என்ன பண்ணினான் ?????

எதற்காக இப்படி அவனை பேசுகிறாய்?????

 உன்னை மாதிரி அவனும் பாவம் தான்!!!”

 வியான் அவன் மனம் கேட்காமல் கத்த

” விடுடா….. அவளை எதுவும் சொல்லாதே!!!!” என்று வியானை அமர்த்திய ஸ்ரீதீப் தாமதிக்காமல்  அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறி விட்டான்…..

அதன்பின் தான் பிரதீப்பின் ஆட்டம் அதிகரித்தது….

துணை யாருமின்றி தனித்து நின்ற

மைத்ரேயியிடம் மகனை காரணப் பொருளாக்கி  அவளை தினம்தினம் சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த

அவனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தவள்

 சோட்டுவை எப்படியாவது அவ்வயோக்யனிடமிருந்து பாதுகாக்க

 விழைந்து  ஒருவாறாக யுகனை சந்தித்திருந்தாள்!!!!

யுகனோ அவளை கண்ட நொடியிலேயே அவள் மீது எழுந்த இனம்புரியாத பாசத்தால் பிரதீப்பையும் மத்திய அமைச்சர் என்.கே வையும் எதிர்க்க துணிந்தான் ….

அப்படி ஒரு நாள் கலெக்டர் ஆஃபீஸ் யுகன் சார் ” பிரதீப்பிடம் இருந்து அவன் பொலிடீஷியன் ஃபோர்ஸை மீறி   சோட்டுவை  சட்டப்படி முழுதாக மீட்க வேண்டும்  என்றால் மைத்தி உடனே ஒரு திருமணம் செய்து கொள்ள  வேண்டும்  .. அதுவே அவளுக்கும் அவள் மகனுக்கும் இந்த மாதிரி அயோக்யனிடமிருந்து காப்பதற்கு நல்ல தீர்வு!!!!”  என்று அறிவுறுத்த

” ஸ்ரீதீப்பை கல்யாணம் செய்துகொள் மைத்தி!!!!!”  என்று எவ்வளவோ எடுத்துச்

சொன்னேன்…..

 ஆனால் ” நோ நோ நோ !!!” என்று மறுத்தவளின் மீது வியானிற்கு கட்டுக்கடங்காத கோபம்…..

 அந்த கோபத்தில் “அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றால் பிறகு என்னையா கட்டிக் கொள்வாய் ?????”

அவனை அறியாமல் கொட்டிய வார்த்தைகளை கண்டு ஒரு கணம் திகைத்த மைத்ரேயி

” சரி வியான் கல்யாணம் செய்து கொள்ளலாம்!!!!” என்றாள் உறுதியாக…

” என்ன விளையாடுகிறாயா ????”

அவள் அப்படி சொன்னதும் அதிர்ந்து தோழியிடம் பாய்ந்த  வியானிடம்

யுகன் “உனக்கு உண்மையிலேயே மைத்தி நன்றாக இருக்க வேண்டும்

 சோட்டு பத்திரமாக இருக்க வேண்டும்

 என்று ஆசை இருந்தால்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவள் கையை விடாமல் பற்று!!!!”  என்றான்.

 வியானன் மைத்ரேயியை ஏற்கவும் முடியாமல் அதேசமயம் விலகவும் முடியாமல் தான் அந்த கல்யாணத்திற்கு சம்மதித்ததும்….

 அப்போதும் ஒரு லட்சம் முறையாவது எடுத்துச் சொல்லி இருப்பான்

“இது சரியா வராது மைத்தி!!!!!”

 அவளோ ஒரே ஒரு நிபந்தனை மட்டும்  வியான் முன் வைத்து

“உனக்கு இதற்கு மட்டும் ஓ.கே என்றால்???? எல்லாம் சரியா வரும்!!!!” என்று கூற

அவள் கேட்கும் நிபந்தனை வியானிற்கு ஒரு பொருட்டே இல்லாது போக

 சந்தர்ப்ப சூழ்நிலையால் தோழியின் கைப்பற்றி வாழ்க்கைத் துணையாக ஆக இருந்தான்….

 ஸ்ரீதீப்பிடம் இதைப் பற்றி சொன்ன போது அவனிடம் எந்த பதிலும் இல்லை…..

 ஆனால் அவனுக்கு வியான் துரோகம்  செய்வதாய் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது உண்மை……..

 ஆனால் இப்போது “ஐ அம் சோ ஹாப்பி பாஸ் !!!! ஹாப்பி ஹாப்பி பாஸ்!!!!!!

 எப்போது அவளை காணாமல் நீங்கள் தவித்ததை நான் நேரில் கண்டேனோ

எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது

அவளுடைய லைஃப் நல்ல பாதையில் தான் பயணிக்கிறது என்பது!!!!!!

 மனப்பூர்வமாக ஒன்று சொல்லட்டுமா பாஸ்

“ஐ லவ் யூ !!!! ஐ லவ் யூ !!!!ஐ லவ் யூ பாஸ்!!!!!!”  என்றபடி பிரணாவின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு

 அவனது ஒட்டுமொத்த தூக்கத்தையும் பறித்து அவன் முன்னே சரிந்து விழுந்து தூங்கியும் போயிருந்தான் வியான்….

வியானின்  தலைக்கு ஒரு தலையணையை அணைவாக கொடுத்து அவனை நேராக படுக்க வைத்துவிட்டு மணி பார்த்தவனுக்கு கடிகாரம்

நான் வானை விடிய வைக்க  போகிறேனே என்பதை உணர்த்த இரு முட்களையும்

எண் நான்கின் அருகில் ஜோடி சேர்த்து காட்சியளிக்க

தன்னவளை காண மாடிபடிகளில் ஏறலானான்…….

Advertisement