Advertisement

ஸ்ரீதீப் மைத்ரேயியிடம்  தன் காதலை மறைத்திருந்த போதும் அவளை சந்திக்காது அவளது ‘ குட் மார்னிங்’-கை பெறாது ஒரு நாளையும் தொடங்க மாட்டான்…….

அப்பேர்பட்ட நாட்களில் மைத்ரேயி கல்லூரிக்கு இரு தினங்கள் வராது போக

மேலும் அவளது போன் சுவிட்ச் ஆஃப் என்ற நிலையில் தவித்துப் போனான்….

வியானிற்கு அழைத்தால் அவன் ஏதோ சொந்த ஊருக்கு சென்றிருப்பதாகவும் நாளை கண்டிப்பாக மும்பை திரும்பியதும் மைத்ரேயியை கல்லூரிக்கு கூட்டி வந்து விடுவதாகவும் வாக்களித்தான்….

ஆனால் நாளை காலை வரை தாங்காது என்று நிலை கொள்ளாமல் திணறிய ஸ்ரீதீப்

மைத்ரேயியின் வீட்டிற்கு புறப்பட

அங்கு ஒரு பெரிய பூட்டு அவனை வரவேற்கவும் அவனை ஒரு வித பயம் தொற்றிக்கொண்டது….

 உடனே பிரதீப்  என்ன செய்கிறான்????  எங்கு இருக்கிறான்????? என்று ஆராய்ந்தவனுக்கு

பிரதீப்பால் மைத்ரேயிக்கு எந்த தொல்லையும் இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் தான்

சீராக மூச்சு விடவே முடிந்தது…..

 இப்போது அவளை எங்கு  தேடிச் செல்வது????

அவள் நெருங்கிய வகுப்பு தோழிகளிடமும் விசாரித்தாயிற்று!!!

குழம்பி தவித்தவனுக்கு வியானுடனான

 பேச்சில் ஒரு முறை

 யாருக்கு என்ன பிடிக்கும்?????? என்று கேட்டிருந்த போது

“உட்கார பீச் மண்ணும் கண்ணுக்கு எதிரே பெரிய பெரிய அலைகளும் போதும்!!!!

 இந்த உலகையே மறந்து விடுவாள்……”

 என்று வியான் அவன் தோழியை பற்றி கூறியது ஸ்ரீதீப்பிற்கு நினைவு தட்டியது…..

உடனே அவசரமாக ஜூஹா பீச்சிற்கு ஓடியவன்  அங்கு  கண்ட காட்சி!!!

 மைத்ரேயியின் தந்தை தமிழ்வாணன் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்க இவள் 38, 39 என்று எண்ணி கொண்டு இருந்தாள்!!!!

” ஐயோ என்னால முடியலைடா ரேயி கண்ணா!!!!!”

 அவள் தந்தை உட்கார்ந்து விட

“கமான்  டாடி…..  பனிஷ்மென்ட் என்றால் பனிஷ்மென்ட் தான் !!

இனி எங்களை விட்டு செல்ல உங்களுக்கு மனமே வரக்கூடாது…….. கூட இருக்கும்  சப்போர்ட்டில் தானே இப்படி செய்கிறீர்கள்????

அந்த சப்போர்ட்டை முதலில் கட் பண்ணனும்”  கூட இருந்தவளை முறைத்து கொண்டே கூறியவள்

 இன்னும் 160 தான் பாக்கி இருக்கு….

ஸ்டான்ட் அப்!!!!!”

குச்சி ஒன்றை கையில் ஏந்தி மிரட்டிய மைத்ரேயி

அவளையறியாமலேயே

  இவ்வளவு நேரம் ஸ்ரீதீப் அனுபவித்திருந்த பதற்றம், வலி, பயம்  அனைத்தையும் மயிலிறகால் வருடி சென்றிருந்தாள்….

  சரி நாளை எப்படியும் கல்லூரிக்கு தான்

வருவாள்… பேசிக்கொள்ளலாம்!!! என்று நகரவும் முடியாமல்

தந்தையோடு உரையாடி கொண்டிருந்தவளின் அருகில் செல்லவும் வழியில்லாமல் நின்றவனை பார்த்துவிட்ட மைத்ரேயி

” ஸ்ரீதீப்!!!!!”  என்று கத்தி விளித்ததோடு

 ஓடி சென்று அவன் கரம் பற்றி  தன் தந்தையிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியும் வைத்தாள்…..

 ” டாடி மீட் அவர் யங் அண்ட் ஹான்ட்சம் சேர்மன்!!!!”

 அவள் ஒருமுறை கூட நேரில் தன்னிடம் அப்படி புகழ்ந்து கூறியதில்லையே????!!!

அவள் தந்தையிடம் அவனை அப்படி குறிப்பிடவும்

சிறு வெட்கம் ஸ்ரீதீப்பின் முகத்தை மேலும் பொலிவுறச் செய்ய

 சிரித்தபடியே அதை அவள் பார்த்துவிடாது மறைக்க வேறு புறம் திரும்பி கொண்டான்….

மகள் தன்னை இவ்வளவு நேரம் படுத்தியமைக்கு

“காலேஜுக்கு படிக்க போகிறாயா?????

இல்லை சைட் அடிக்க போகிறாயா?????”

  எப்போதும் போல் விளையாட்டுத் தனமாக சிறு கண்டிப்புடன் தமிழ்வாணன் கேட்ட  விதத்தில்

 மைத்ரேயி தன் தந்தையை போலியாக முறைத்து

 “அந்த டியூட்டியை தான் எங்கள் காலேஜில் ஒட்டுமொத்த பெண்களும் பார்க்கிறார்கள்……

 நான் தான் சமத்து பொண்ணாக இருக்கிறேனாக்கும்…

ஆனால் டாடி என்னைப் பார்த்து நீங்கள் அப்படி கேட்டு விட்டதால் இனி நானும்

அந்த டியூட்டியில் சேர்ந்துவிட முடிவு பண்ணிட்டேன்!!!!!

 என்ன ஸ்ரீதீப் உனக்கு ஓ.கே வா ???” என்று கண்ணடித்து கூறிய தொனியில்

எத்தனையாவது முறையாக அவளுள் தன்னை தொலைத்து  நின்றான் என்பதை ஸ்ரீதீப் அறியான்….

 அதற்குள் தமிழ்வாணன் “உன்னை அடிப்பேன் படவா!!!!!”  மகளிடம் சிரித்தபடியே கையை ஓங்க

” இதுதான் சான்ஸ் என அடிக்கலாம் என்று பார்க்கிறீர்களா டாடி ??????” என்று எழுந்து தன் குச்சியை மீண்டும் கையில் எடுத்திருந்தாள் மைத்ரேயி …….

தந்தையும் மகளும் சமாதானம் ஆனதும் தமிழ்வாணனிடம்  பேசிய அரை மணி நேரத்தில்

அவர் பேசிய பிசினஸ் ஆகட்டும்

செல்ல மகளின் சேட்டைகள் ஆகட்டும்

 பொதுவான அரசியல் ஆகட்டும்

 அனைத்துமே ஸ்ரீதீப்பிற்கு  மிகவும் பிடித்துப் போனது ……

அவருக்குமே ஸ்ரீதீப்பை பிடித்து இருந்தது போலும் !!!

“கட்டாயம் வீட்டிற்கு வர வேண்டும் யங் சேர்மன்!!!!!”  என்று கூறியே விடைபெற்றார் தமிழ்வாணன் ….

 அடுத்த நாள் மைத்ரேயி கல்லூரிக்கு சென்றதும் வாசலில் நின்ற ஒருவன்

“மைத்தி ஐ லவ் யூ!!!!!!!!!!”  என்று ஒரு சிவப்பு ரோஜாவை நீட்ட

“யாருடா நீ ????????

உன்னை நான் பார்த்ததே இல்லையே???????”  என்றாள் குழப்பமாக..

” நான் யார் என்பது இங்கு தேவையில்லை மேடம்!!!!

 இந்த குட்டி சைஸ் ரோஸும் அதற்குள் ஒளிந்திருக்கும் மலையளவு பெரிய லவ்வும் யாருடையது என்பது தான் முக்கியம்!!!!!

 இதை பிடியுங்கள் முதலில் !!!!” என்றவாறு ரோஜாவை அவள் கையில் திணித்து விட்டு ஓடினான் அப்புதியவன்….

” இவனென்ன லூசா?????” குழப்பத்துடனே மைத்ரேயி

அடுத்த நான்கு அடியை கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்

“மைத்தி வில் யூ பி மை வேலன்டைன்????????” என்று ஒரு சிவப்பு

ரோஜாவை நீட்டி இருந்தாள் ஒரு மாணவி…..

 மைத்ரேயிக்கு சிரிப்பு தான் வந்தது!!!!!

” வேண்டாம்மா இந்த விஷ பரிட்சை!!!!

 நாடே தப்பாக பேசும் ….. ” என்று எதிர் நின்றவளின் ரோஜாவை மைத்ரேயி மறுக்க

“ரோஸ் யாருடையது என்று மட்டும் தெரிந்தால் நாடே ரசிக்கும்…… வாங்கிக் கொள்ளுங்கள் மேடம்!!!!”  என்றபடி நீட்டினாள் அம்மாணவி…..

அடுத்து மைத்ரேயியின் பிளாக் அருகில் நின்ற அவள் வகுப்பு மாணவன் ஒருவன் அதே சிவப்பு ரோஜாவை நீட்டி

“மைத்தி என்னை கல்யாணம் பண்ணிக்

கொள்கிறாயா ப்ளீஸ்???????”  என்று கூற

” அடப்பாவி இந்த கிறுக்குத் தனமான ஐடியா உன்னுடைய தானா?????

இந்த ரோஸஸ் எல்லாம் உனக்கானது தானா?????  என்று வியந்த வண்ணம் கேட்டிருந்தாள்.

ஆனால் வகுப்பு தோழனோ

“உன் மேல் இவ்வளவு  கிறுக்குத்தனமாக இருப்பது நானும் இல்லை இந்த ஃபிளவர்ஸும் என்னுடையது இல்லை!!!! போய் பாரு……. அங்கு யார் வாழ்க்கை முழுமைக்கும் உன்னோடு பயணிக்க காத்து நிற்கிறார் என்று ??????”

என்று அனுப்பி வைத்தான்….

” பில்ட்அப் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது !!!! அப்படி யாருடா நமக்குத் தெரியாத கிறுக்கன்???????”

தன்னுள் முற்மிலும் குழப்பி தவித்தபடி மாடி ஏற ஆரம்பித்தவளிடம்

அதன்பின் குறைந்தது ஏழு எட்டு பேராவது

ரோஜாக்களை  கையில் கொடுத்தும்

காதல் வசனங்களை  கோர்த்தும்

அங்கு சிவப்பு ரோஜாக்களால் இதய வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆடிட்டோரியத்தின் கதவை

” ஐ லவ் யூ மைத்தி!!!!!!” என்று கூறியபடியே நான்கைந்து பேர் திறந்து விட

அரங்கினுள்ளே இவை அனைத்திற்கும் காரணமானவனின்  பெயரை கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் ஒட்டுமொத்த கல்லூரியும்…..

ஸ்ரீதீப்!!!!!!!!

ஸ்ரீதீப்!!!!!!!!

ஸ்ரீதீப்!!!!!!!!!

 மைத்ரேயி இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவள் அதிர்ந்து நின்ற விதத்திலேயே அங்கு நின்றவர் அனைவருக்குமே தெரிந்தது……

 தன் வகுப்பு தோழன் எவனோ ஒருவனின் வேலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணியவளுக்கு

அந்த அரங்கின் பிரம்மாண்டமான மேடையில்

தன் கண்களில் காதலை தேக்கி நின்றவனை கண்டதும் பேச்சே எழவில்லை…..

 கீழே நின்ற சிலர் அவளை மேடைக்கு வழுக்கட்டாயமாக ஏற்றி விட்டிருக்க

தன் அருகில் வந்தவளின் அதிர்ச்சியடைந்த விழிகளை நேரில் சந்தித்து மேல் நாட்டு பாணியில் ஒரு காலில் மண்டியிட்டு

“மைத்தி உன்னைப் பார்த்ததுமே… இந்த கண்களை இவ்வளவு அருகினில் சந்தித்ததுமே… தெரிந்து விட்டது!!!!!

எனக்கு நீ தான் எல்லாமே என்று!!!

 உன் படிப்பு முடியும் வரையில் அதை சொல்லி விட வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ….

 ஆனால் ரெண்டு நாட்களாக உன்னை பார்க்க முடியாது தவித்ததும்

‘இனியும் இரண்டு வருடத்திற்கு  உன்னால் நிச்சயமாக முடியாதுடா ஸ்ரீதீப்’ என்று இங்கிருக்கும் ஆரிக்கல்ஸும் வெண்ட்ரிக்கல்ஸூம் அடித்து சொல்லி துடித்தது!!!

 உனக்கு ஷாக் ஆக இருக்கும் என்று புரிகிறது!!!! பட் ஐ ஹேவ் நோ அதர்

சாய்ஸ்……

 என்னை உன் பெட்டர் ஹாஃபாக ஏற்றுக் கொள்வாயா மைத்தி ???????????

 என்று ஸ்ரீதீப் கேட்டதும்

அப்படி ஒரு சத்தம் …..

மைத்தி ஸே யெஸ்!!!!

மைத்தி ஸே யெஸ்!!!!

மைத்தி ஸே யெஸ்!!!!

 அவர்கள் நின்ற அரங்கமே பூகம்பத்திற்கு நிகராக அதிர ஆரம்பிக்க

 தன் முன் மண்டியிட்டு அமர்ந்தவனின் அருகில் தானும் மண்டியிட்டு உட்கார்ந்தவள்  கூறப்போகும் பதிலுக்காக மொத்த கல்லூரியும் நிசப்தத்தை கடைபிடித்து அவளை எதிர்நோக்கி நிற்க

” மைத்தி என்ன சொன்னாள்????????????????? ” என்று பதற்றத்துடன்

இவ்வளவு நேரம் அரைத் தூக்கத்தில் கதை கூறியவனின் சட்டையை பிடித்து உலுக்கினான் பிரணாவ்……

 அதில் முழுவதும் விழித்துக் கொண்ட வியான்

“என்ன பாஸ் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்?????

 இவ்வளவு நேரம் என் முன்னாடி ஸ்ரீதீப் தானே நின்றிருந்தான்!!!!!!!”  என்று உளற ஆரம்பிக்க

” மவனே கொலை பண்ணிவிடுவேன்….

 மரியாதையாக மைத்தி என்ன சொன்னாள் என்று சொல்லுடா??????”  என்று கத்தினான் பிரணாவ் ….

“இப்படி எல்லாம் கோபமாக கேட்டால் அப்புறம் நான் சொல்லவே மாட்டேன்  பாஸ்!!!!

 இப்போது தானே சொன்னேன் நீங்கள் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று….

 சிரித்து கொண்டே கேளுங்க பாஸ்…

 அப்போது தான் சொல்வேன் ஹான்!!!!!”

முகத்தை சுண்டி திருப்பி கொண்ட வியானை கண்டு நொந்து கொண்ட பிரணாவ்

“படுத்தாதடா !!!!” தன் தலையில் அடித்து கொண்டு

அவன் முகத்தை தன் புறம் திருப்பி

தன்னிடமிருந்த 32 பற்களையும் நீட்டி

” தயவுசெய்து சொல்லு வியான்!!!!” என்றான் பிரணாவ்.

” இது !!! இது தான் எங்க பாஸ் !!!! “

பிரணாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய வியானின்  மண்டையை பிரணாவ் உடைக்க ஆயத்தமாவதற்குள்  கதைக்குள் குதித்திருந்தான் வியான்…

மொத்த அரங்கமும் மைத்ரேயி கூற போகும் பதிலுக்காக அவள் மேல் பதித்த கருவிழிகளை நகர்த்தாது அசையாதவண்ணம் ஃப்ரீஸாகிவிட

அவளோ ஸ்ரீதீப்பின் கண்களில் நேர் பார்வை பதித்து தன் மனதை அப்படியே வெளிப்படுத்தலானாள்  ……….

“உன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை !!!!!

நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்று எனக்கு சொல்லக் கூட தெரியவில்லை????

 இவ்வளவு காதலை சுமந்து கொண்டு

இப்படி ஒரு தருணத்தில் இந்நேரம் உன் முன்னே வேறு ஒரு பெண் மட்டும் இருந்திருந்தாள் எனில்

‘ ஏய் மடச்சி ஓ.கே சொல்லுடி’ என்று அவள் மண்டையில் நானே கொட்டவும் தவறியிருக்க மாட்டேன் !!!!!

 ஆனால் என்னிடம் நீ கேட்கும் போது உண்மையிலேயே எனக்கு பதில் சொல்வது என்று தெரியவில்லை????

  என் கையில் இருக்கும் இத்தனை ரோசஸ்……

 அதை நீ கொடுத்த விதம் !!!!

எனக்கு உன் மேல் ஒரு துளி கூட கோபம் வர மாட்டேன்கிறது ….

அட் தி சேம் டைம் லவ்வும் வரவில்லை!!!!

லவ் என்பது ஒரு ஃபீல் தானே????

 இவ்வளவு நாள் எதுவும் தோன்றாத போது இதெல்லாம் பிடித்ததால் மட்டுமே

இப்போது அவசரப்பட்டு

 ஓகே சொல்லிவிட்டால்

நாம் இரண்டு பேருமே பின்னால் கஷ்டப்படுவோமோ என்று பயமாக இருக்கிறது!!!!!

 எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் நான் கேட்க போவதில்லை…..

 உன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டசாலியாக தான் நான் இருக்க போகிறேன் என்றால் அதை நான் ஃபேஸ் பண்ணி கொள்கிறேன்!!!!

 ஆனால் எனக்கு இதற்கு மட்டும் பதில் சொல்லு…..

 நம் காலேஜிலேயே எத்தனையோ அழகான பொண்ணுங்க உன்னை

ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார்கள்……

 ஏன் என்னிடமே சில பேர் லெட்டர் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொல்லி  இருக்கிறார்கள்….

 அப்படி இருக்க……..

 நான் மட்டும் எப்படி உன் கண்களுக்கு ஸ்பெஷலாக தோன்றினேன்????????”

 என்று ஆச்சரியம் மாறாத குரலிலேயே கேட்டிருந்தாள் …

 அவனை அவள் நிராகரித்ததில் உண்டான வலியை  அவளுக்கு தெரிய விடாமல் காத்தவன்

“இதோ இப்போது நீ  பேசினாயே அதுதான் உன்னிடம் இருக்கும் ஸ்பெஷாலிட்டி!!!!!

 மனதில் தோன்றியதை யார் என்ன நினைப்பார்கள் என்று  மென்று முழுங்கி மாற்றி பேசாது

அதேசமயம் எதிராளியின் மனதையும் புண்படுத்தாது நடந்துகொள்ளும் இந்த முறை தான்  ஸ்பெஷல் !!!!

சரி நீ சொல்லு…..

 இப்போது இங்கு இருக்கும் அத்தனை பேரும் …. ஏன் நான் இங்கு படிக்கும்போதே என் அருகில் அமர்ந்து இருப்பவன் கூட என்னை ‘சார்’ என்று மரியாதையாக தான் அழைத்தான்….

 அப்படி இருக்க நீ மட்டும் ஏன் பார்த்த முதல் தினமே ஸ்ரீதீப் என்று பெயர் சொல்லி கூப்பிட்டாய்???????” மென்னகையுடன் வினவ

 “அது …. நாம் முதல் தடவை பார்க்கும் போது நீ ஸ்டூடண்ட்டாக தானே இருந்தாய்!!!! ஸோ நேச்சர் ஆகவே எனக்கு உன் பெயரை சொல்லி தான் அழைக்க வந்தது !!!!

ஆல்சோ அதன்பின் நாம்  ஃப்ரெண்ட்ஸ்

ஆகிவிட்டதால் உன்னை ‘சார்’ என்று கூப்பிட முடியவில்லையோ என்னவோ??????” தன்னிலை விளக்கம் கூறினாள் மைத்ரேயி…..

இப்போது ஸ்ரீதீப்பின் இதழ்கள் சற்றே விரிந்து புன்னகை புரிய

 “அந்த நேச்சர் தான்

எத்தனை நாள் என்ன ????

எத்தனை வருடம் வேண்டுமானாலும் இவளுக்காக வெயிட் பண்ணலாம் என்று அடித்து சொல்கிறது !!!!

உன் கையில் இருக்கும் ரோஜாக்களுடன் எந்த ரோஸையும் பிடி  …..

 நான் உன்னை திரும்ப காதலிக்க சொல்லி வற்புறுத்த வில்லை !!!!! திரும்ப காதலை பற்றி உன்னிடம் பேச போவதுமில்லை ….

ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்…..  ஐ வில் பி வெயிட்டிங் ஃபார் யூ ஃபாரெவர் மைத்தி !!!!! “

 என்றதும் அரங்கமே பலத்த கரகோஷத்துடன் மீண்டும்

“ஸ்ரீதீப்!!!!!!!!”  எதிரொலிக்க ஆரம்பித்தது …..

Advertisement