Advertisement

      தோழியின் கல்யாணத்தில் பிரணாவ் கூறிய கதையை மைத்ரேயி ஒருவித ஆர்வத்தில் முழுநிலவின் பிரகாசத்தோடு கேட்டிருக்க

இப்போது பிரணாவோ தன் மனைவியை பற்றி ‘என்ன உளற போகிறானோ ??? ‘ என்று தேய்பிறையாய் வாடிய முகத்தோடு வியானின் முன் அமர்ந்திருந்தான் …..

அதை உணராத வியானோ போதையின் தாக்கத்தில் தோழியை பற்றி அவன் அறிந்து வைத்திருந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தான்  …

“அப்போதெல்லாம் மைத்தி எப்படி தெரியுமா பாஸ் இருப்பாள்?????” என்ற வியான் அவனுக்கு முன் தெரிந்த ஸ்பைரல் வட்டத்தினுள் குதித்திருந்தான்….

 கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டுமாக …. இருக்கிற அந்த நாலு ஸ்ப்ரிங் முடியை உற்றுப் பார்த்தால் தான்   மைத்ரேயி பொண்ணா இல்லை பையனா என்பதே அடுத்தவருக்கு தெரியும்  !!!

 அவளுடைய காலேஜ் பர்ஸ்ட் இயர்……. ஃபர்ஸ்ட் டே  …

 “தம்பி இங்க வாடா…..”  ஒரு சீனியர் கூப்பிட

சும்மா கெத்தாக அவர்கள் முன்னே போய் இருக்கிறார்கள் நம் ஹீரோ !!! இல்லையில்லை ஹீரோயின்!!!!!!!

 அங்கு ராகிங் பண்ணிய சீனியர்களில் ஒருவன் மைத்ரேயியை அருகில் கண்டதும்

“தம்பி இல்லை மச்சி…. இது  பாப்பா!!!!” என்று சிரித்ததோடு

” பாப்பா இது ஸ்கூல் இல்லைடாமா காலேஜ் ….. ஆமாம்  நீ நிஜமாகவே பிளஸ் டூ முடித்து விட்டாயா??????”  என்றான் அவள் தோற்றத்தில் சந்தேகம் கொண்டு!!!

” ஏன் இப்போது முடிக்கவில்லை என்று சொன்னால் நீ முடித்து கொடுக்க போகிறாயா?????”  என்று மைத்ரேயி பதில் கொடுத்த விதத்தில்

 இங்கு யார் சீனியர் யார் ஜூனியர் என்பதே அனைவருக்கும் மறந்து போனது…..

 இவளிடம் எதற்கும் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும் என்று முடிவெடுத்த ராகிங் கும்பல்

“இப்படி எல்லாம் பேசக்கூடாது பாப்பா….

 இன்று நாங்கள் கூறுவதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் !!!

உனக்கு வேறு ஆப்ஷனும் இல்லை… அதனால் சமத்து பாப்பாவாக சொல்

பேச்சு கேட்டு விடுவாயாம்!!!!!”  என்று விளக்கினர் தன்மையாகவே…

 பதிலேதும் கூறாது நின்றவளிடம் அங்கு சிலர் தரையில் நீச்சல் அடிப்பதையும் மரத்தைச் சுற்றி கண்ணாமூச்சி ஆடியதையும் காண்பித்து

” நீ இவ்வளவு சின்ன பாப்பாவாக இருப்பதால் உனக்கு இன்று குட்டி டாஸ்க் தான்….. நம்  ஃபைனல் இயர் ஸ்ரீதீப் சாரிடம் சென்று

‘ஹாய் ஸ்ரீதர் சார்…. குட் மார்னிங்!!!!” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விடு…. சரியா??????”  என்றான் ஒருவன்.

” சொல்லவில்லை என்றால்??????”

மைத்ரேயியின் கேள்வியிலேயே தெரிந்தது அங்கிருப்போருக்கு

அவள் கண்டிப்பாக சொல்ல போவதில்லை என்பது!!!

 “சிம்பிள்….  நீ இந்த காலேஜில் மேற்கொண்டு படிக்க முடியாது….

 ஏனெனில் இது ஸ்ரீதீப் சாரின் காலேஜ்!!!!

 மேலும் உன் திமிரை அவரிடம் காட்டினால் கண்டிப்பாக உன்னால் இங்கு நிற்கக்கூட முடியாது பாப்பா …..

அதற்கு தான் சொல்கிறோம்….

ஒரு  ஹாய் மட்டும் சொல்லிவிட்டு வந்து விடு  ஓகே வா???????”

“ஓ !!!! அப்படியா சரி சரி …….

இப்போது அந்த ஸ்ரீதீப் சார் எங்கே இருப்பார்?????”  சற்றே பயந்த தொனியில் கூறி அவள் உரைத்த நக்கல் மொழியில்

” உனக்கு இன்று நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்…… வந்த முதல் நாளே நல்ல பாடம் கற்க போகிறாய் என்று நினைக்கிறேன்!!!! போகலாம் வா …..” என்றபடி மைத்ரேயியை அழைத்து சென்றான் சீனியர்ஸ் கூட்டத்தின் ஒரு கோடு போட்ட சட்டை…

 “இனாகுரேஷன் பங்க்ஷன் பற்றிய ஸ்டாஃப் மீட்டிங்கில் ஸ்ரீதீப் சார் இருப்பார் போலும் !!! ஒரு பத்து நிமிடம் வெயிட் பண்ணலாம்”  என்று மைத்ரேயியின் கூட வந்த சீனியர் கூறவும்

“பண்ணலாம் பண்ணலாம்…… இல்லாவிட்டால் எனக்குத்தான் இந்த காலேஜில் இடம் இல்லை என்று சொல்லி விட்டீர்களே???”  என்று போலியாக வருத்தப்பட்டவளுக்கு

 சற்று தூரத்தில் அங்கு நின்ற பெண்கள் இருவரிடம் புதிதாக வந்த ஒருவன் கலாட்டா செய்ய ஆரம்பித்தது தெரிந்தது……

 அதில் ஒரு பெண் தப்பி ஓடி இருக்க மற்றொரு பெண் “ப்ளீஸ் என்னை விட்டு விடுங்கள் சார்” என்று கெஞ்ச

அதை கண்டுகொள்ளாது அவளிடம்  எல்லையை மீற ஆரம்பித்திருந்தான் அந்த அயோக்யன்…..

மைத்ரேயியின் அருகில் நின்ற சீனியர் அத்துமீறுபவனை பார்த்துவிட

“நாம் போகலாம் … வா” என்றான் மைத்ரேயியிடம்…

ஆனால் அவளோ ” அப்போது அந்த குட்மார்னிங்???????” என்று எதிர் கேள்வி கேட்க

“நிலைமை புரியாமல் பேசாதே பாப்பா …..

 இன்னொரு நாள் சொல்லிக்கொள்ளலாம்!!!!

 இப்போது வா ….” ஆபத்துக்கு பாவமில்லை என்று மைத்ரேயியின்  கரம் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட்டான் அந்த சீனியர் …..

” விடுவிடு….நானே வருகிறேன்!!!”  என்று தன் கையை இழுத்துக்கொண்ட மைத்ரேயி

” ஆனால் அதற்கு முன் ஒரே ஒரு நிமிஷம்!!!” என்றபடி அங்கு அராஜகம் செய்தவனை நெருங்கினாள்….

” ஹேய் என்ன பண்ற?????

 எங்கே போகிறாய் ?????

காட்டுமிராண்டியிடம் இருந்து தப்பிக்க உன்னை இழுத்துக்கொண்டு போனால் நீயாக அவன் வலைக்குள் சென்று சிக்க பார்க்கிறாய்??????”  சீனியர் மைத்ரேயியை நிறுத்த முயற்சிக்க

“இந்த மாதிரி பசங்களுக்கு எல்லாம் ஸ்டாஃப்ஸ் சொல்லித்தரப் பாடம் ஏறாது சீனியர்….. ஆனால் ஒன்று விட்டால் போதும் எல்லாம் இறங்கிவிடும்!!!!!”  என்றாள் மைத்ரேயி தன் தன் நடையை

நிறுத்தாது …..

” ஐயோ …. அதிகப்பிரசங்கி மாதிரி எதையும் செய்து தொலைக்காதே!!!

 ஆல்சோ நீ நினைக்கிற மாதிரி அவன் ஸ்டுடென்ட் எல்லாம் இல்லை…….” சீனியர் கூறியது அவள் செவிகளில் சென்றடையாத தூரம் அந்த அயோக்கியனிடம் விரைந்த மைத்ரேயி

அவனை ஓங்கி ஓர் அறை விட எண்ணி ஆக்ரோஷமாய்  கையை உயர்த்திய சமயத்தில்

மற்றொருவன் இடை புகுந்து விட்ட ஒரே உதையில் சில்மிஷம் பண்ணியவன் இரு அடி தள்ளிப் போய் விழுந்திருந்தான் ….

 அங்கு நின்ற பெண் “தேங்க்ஸ்  ஸ்ரீதீப் சார்!!!!”  என்று அவ்விடம் விட்டு நகர்ந்து இருக்க

ஸ்ரீதீப்போ ” சாரி மா !!! இனி இப்படி எதுவும் நடக்காது” என்று அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரினான்….

அதற்குள் அடிபட்டு  விழுந்தவன் எழுந்து ஆவேசமாக ஸ்ரீதீப்பின் சட்டையை பிடித்து இருந்தான் …

நூற்றுக்கணக்கானோர் அவர்களை சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்க மைத்ரேயியால் அப்படி நிற்க முடியவில்லை போலும்…..

 கீழே கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அந்த அயோக்கியன் வலது கையை இமைக்கும் நொடிக்குள் தாக்கிவிட

அதில் அந்த அயோக்கியனின் பிடி ஸ்ரீதரின் சட்டையில் இருந்து நழுவி போனதும்

தன்னை தாக்கிய மைத்ரேயியின் புறம் பலம் கொண்ட யானையாய் திரும்பி பிளிறினான்…

ஆனால் அதற்குள் ஸ்ரீதீப் ” டேய் தம்பி நீ யாருடா நடுவில்????????”  என்று மைத்ரேயியின் பின்புறமாய் தன் இடக்கரத்தால்  அணைத்து

 அவளை அவ்வயோக்யன் பார்க்கவிடாது செய்ததோடு   தன் மறு கரம் கொண்டு எதிர்த்தவனை தட்டிவிட்டு

“உன்னை தான் இந்த காலேஜுக்குள் வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா???????

 இதுவரைக்கும் நீ செய்த எதையும் நான் அப்பாவிடம் சொன்னதில்லை !!!!

ஆனால் இனி உன்னை இந்த சைட் பார்த்தேன் என்றால்????

 அடுத்த எலக்ஷனில் அப்பா உனக்கு தருவதாக சொல்லி இருந்த எம்.எல்.ஏ சீட்டை கொடுக்க விடாமல் செய்து விடுவேன்!!!!!”  அவ்வளவு அழுத்தமாக மொழிந்தான்……

 தன் விஷயத்தில் தலையிடாமல் எப்போதும் கண்டு கொள்ளாமல் சென்றுவிடும் உடன்பிறப்பு இன்று எதிர்த்து சண்டையிட்டதோடு

தன் அரசியல் வாழ்விற்கும் ஆப்பு வைக்கிறேன் என்கிறானே??????? என்று அதிர்ந்த பிரதீப்

அந்த சூழலில் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் பின் வாங்கினான்……

 எம்.பி நாகேஷ் கிருஷ்ணாவிற்கு தன் இரட்டை புதல்வர்களில் இரண்டாவது மகன் ஸ்ரீதீப் கூறுவதே வேத வாக்கு!!!

 பெரியவனின் நடவடிக்கையின் பேரில் அவன் மீது எந்தவித நம்பிக்கையும் ஏற்படாதிருக்க சிறிய மகனை எப்படியாவது தன் அரசியல் வாரிசாக ஆக்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்.கே….

ஆனால் ஸ்ரீதீப் மெடிசின் படிக்க விரும்ப மகனின் ஆசைக்கு அவர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை…..

  சமீபகாலமாக தன் கொட்டங்களை அடக்கி தந்தையிடம் நற்பெயர் பெற்று இருந்த பிரதீப் மெதுவாக அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்க இப்போது அதற்கு வேட்டை வைப்பேன் என்று வெளிப்படையாக ஸ்ரீதீப் கூறியதும்

தம்பியின் மீது இருந்த வன்மம் பிரதீப்பிற்கு அதிகரித்தது ..

 அதிலும் மைத்ரேயியை பையனாக

நினைத்திருந்ததால் காலேஜ் பையன் ஒருவனை விட்டு அடிக்க வேறு செய்திருக்கிறான்??????.

 சமயம் வரும்போது இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க தான் போகிறேன்!!!!! என்று மனதில் கருவியபடி  அந்த இடத்தை காலி செய்திருந்தான் பிரதீப்….

 அப்படி அவன் வெளியேறுவதைக் கண்டு கொண்ட ஸ்ரீதீப் தன் கைவளைவிற்குள் பின் பக்கமாய் திரும்பி நின்ற மைத்ரேயியிடம்

”  அடேய் தம்பி  உனக்கு எதுக்குடா  தேவையில்லாத ஹீரோயிசம்??????”  என்றபடி அவளை திருப்பி

அவள் முகத்தை வெகு அருகில் நோக்க

 அவள் மீது அழுந்த பட்டிருந்த அவன் கரங்கள் தானாக நழுவியது…..

 சத்தியமாக அந்த இடத்தில் ஒரு பெண்ணை எதிர்பாராத ஸ்ரீதீப்பின் குரல் தடுமாறியது மனதையும் சேர்த்துக்கொண்டு!!!

  அப்போது அவள் சம்பந்தமே இல்லாமல் “குட் மார்னிங் சார்!!!!!” என்று கூற

 ஒன்றும் புரியாமல் விழித்தான் ஸ்ரீதீப் ……

“அப்படி கூறாவிட்டால் உங்க காலேஜில் இடம் கிடைக்காதாமே !!!!” அவள் கண்ணடித்து கூறிய விதத்தில்

ஏற்கனவே அலைபாய்ந்து இருந்த ஸ்ரீதீப்பின் இதயம் இப்போது அவளிடம் முழுமையாகவே சரணடைந்தது….. உடனே

” அது நம்ம பசங்க வேலை ஸ்ரீதீப் சார்!!!” என்று சீனியர் கூற

“அடங்க மாட்டீங்களாடா நீங்க?????” என்றவன்

மைத்ரேயியிடம் திரும்பி

” எ வெரி குட் மார்னிங்!!!!

 இதைச் சொன்னால் தான் இங்கே இடம் என்பது இல்லை……

 ஆனால் இதை நீ என்னிடம் சொல்லிவிட்டதால் கண்டிப்பாக என் மார்னிங் மட்டுமில்லை இந்த நாளே பேடாக இருக்காது என்று தோன்றுகிறது !!!” என்றான் புன்னகையுடன்….

” ஆக்சுவலா எ வெரி பேட் மார்னிங்….. எனக்கு உன் காலேஜில் இடம் வேண்டாம் என்று சொல்ல தான் வந்தேன்…..

 ஆனால் இப்போது……..”   என்று நிறுத்தி அவளிடம்

” இப்போது என்ன????????” அப்படி என்ன

சொல்ல போகிறாளாம் என்று அவன் மனம் ஆசையுடன் எதிர்பார்க்க

“இன்று மட்டும் இல்லை….. இனி எல்லா நாளும் உனக்கு  குட்-ஆக தான் அமைய வேண்டும் ” என்றாள் சிரித்தபடி …..

அந்த சிரிப்பில் மீண்டும் தன்னைத் தொலைத்து அவளிடம் ஒரு சிறு தலையசைப்போடு விடைபெற்று சென்ற ஸ்ரீதீப் அந்நாளை முழுவதும் அவள் நினைவுகளோடு செவழித்தான்…..

அன்று மாலை மைத்ரேயியை அழைத்து போக வந்த வியானை பார்த்து  ” யாரு அண்ணனா?????????”  என்றபடி ஸ்ரீதீப் அங்கு வர

“இல்லை தோஸ்த் !!!!” என்றவள் வியானை ஸ்ரீதீப்பிற்கு அறிமுகப்படுத்தியும் வைத்தாள்….

வியானிடம் மைத்ரேயியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல சொன்னவன் “எதற்கும் ஜாக்கிரதையாக இரு…. பிரதீப் இப்போதைக்கு எதுவும் செய்ய மாட்டான்…. பட்…டேக் கேர் !!!”  என்று கூற

“நான் பார்த்துக் கொள்கிறேன்…..  பை ஸ்ரீதீப்!!!!”  என்று தன் தோள் குலுக்கி கையசைத்து இருந்தாள் மைத்ரேயி …..

” ஹே  நில்லு…. இப்போது என்ன சொன்னாய்???????”  தன்னுள் பரவிய பரவசத்துடன் அவளை தடுத்தான் ஸ்ரீதீப்….

“நான் என்னை பார்த்து கொள்கிறேன் என்றேன்….. “

“அதற்கு அப்புறம்?????”

” பை தானே சொன்னேன் ஸ்ரீதீப்….. வேறு

ஒன்றும் சொல்லவில்லையே???” என்று யோசித்தபடியே கூறியவளிடம்

“வேண்டாம் போகாமல் என்னுடனே வந்துவிடு  என்னவளாக!!! ” என்று கூற வேண்டும் போல் அவனுள் ஒரு அவா எழுந்தது…..

 அடுத்த நாள் கல்லூரிக்கு அவளது காரில் தனியே வந்தவளிடம்

” ஏன் உன் தோஸ்த் இன்று வரவில்லையா?????”  என்று கேட்டிருந்தான் ஸ்ரீதீப் …. மேலும் ” வழியில் எந்த ப்ராப்ளமும் இல்லையே????

 ஏதேனும் ராங் கால் வந்ததா ????” என்றான் சிறு பதற்றம் தொனிக்க…..

“ஹே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை…..

 அதுவும் இல்லாமல் வியான் நேற்று ஃபர்ஸ்ட் டே என்பதால் நம் காலேஜையும்

அப்படியே சில முக்கியமான டாக்டர்ஸ்களையும்  பார்க்கும் ஆவலில் வந்திருந்தான் …. இப்போது வியான் அவனுடைய காலேஜிற்கு சென்றிருப்பான் ….  எம்.டெக் படிக்கிறான்”

 “அவன் என்ன படித்தாலும் சரி ….

ஈவினிங் அவனை வந்து கூப்பிட்டு போக சொல்லு!!!!

 அப்படி ஒருவேளை முடியாவிட்டால்….. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனில் நானே உன்னை டிராப் பண்ணுகிறேன்….  “என்று ஸ்ரீதீப் சீரியஸாக கூற

 “ஆனாலும் உன் அண்ணன் பிரதீப்பிற்கு ஓவர் பில்டப் கொடுக்கிறாய்பா    …..

 நான் எல்லாம் பிளாக் பெல்ட் ஆளு!!! தெரியுமா????

 எனக்கு எந்த பயமும் இல்லை…..

 உனக்காக வேண்டும் என்றால் வியானிடம் சொல்கிறேன்…..” என்றாள் மைத்ரேயி…

” சரி இப்போதே கால் பண்ணி சொல்லு!!!!”

” ஈவினிங் தானே….. அப்போது பேசுகிறேனே!!!”

“அதெல்லாம் முடியாது !!!” ஸ்ரீதீப் திடமாக மறுத்து நிற்க மைத்ரேயி வியானை அழைத்திருந்தாள்….

அப்படி அவள் அழைத்ததும் அவளது போனை பிடுங்காத குறையாக “இங்கே கொடு!!!” என்று கேட்டு வாங்கியவன்

” ஹலோ ஸ்ரீதீப் ஹியர்….

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா????

 மைத்தியை காலேஜிற்கு பிக்கப் டிராப்இன் டியூட்டியை எடுத்துக் கொள்கிறாயா ப்ளீஸ்  !!!!” என்று கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கேட்டிருந்தான்….

“வியான் சொன்னாலே செய்வான் …..

எதற்காக உன் ‘ப்ளீஸ்’ஐ எல்லாம் வேஸ்ட் பண்ணுகிறாய்??????”  என்றபடி அவள் போனை வாங்கி

“ஈவினிங் வந்து விடு வியான்!!! உன் முக்கியமான லேடி டாக்டர்ஸ் எல்லாம் உன்னை பார்க்காமல் தவிக்கிறார்களாம்…..  சார்மன் சொல்ல சொன்னார்!!!” என்று பேசியபடி ஸ்ரீதீப்பிடமிருந்து விடை பெற்று தன் வகுப்பிற்குள் சென்றாள்  …

 அப்படி போகிறவளையே பார்த்து நின்றவன் அவளது வாழ்நாள் முழுமைக்கும் அவளின் அரணாக மாறிவிட துடித்தவன்

 அந்த வருடம் தன் கல்லூரி படிப்பை முடித்து

வெளிநாட்டிற்குச் சென்று தன் மேற்படிப்பைத் தொடர ஆசைப்பட்ட போதும்

அவளை பிரிய மனமில்லாமல் அக்கல்லூரி நிர்வாகப் பொறுப்பை

மட்டுமில்லாது அவன் தந்தைக்கு சொந்தமான இன்ஜினியரிங் மற்றும் கலைக் கல்லூரி தலைமை அதிகாரி பொறுப்புகளையும் நிர்வாகிக்க தொடங்கினான் …..

நாள் தவறாமல் காலேஜிற்கு வந்து அவளை ஒருமுறையேனும் சந்தித்து விடும் வழக்கத்தை பின்பற்றியவன் தன் மனதை மைத்ரேயியிடம்  வெளிகாட்ட முன்வரவில்லை  ……..

 அதற்கு காரணம் அவள் வியானோடு பழகும் அதே தோழமையோடு தன்னையும் பாவிக்கும் விதம் !!!!

ஆனால் அப்படி நினைத்திருந்த ஸ்ரீதீப் தான் அடுத்த இரு தினங்களில் முற்றிலுமாக மாறியும் போனான் ….

Advertisement