மனைவியின் கைபேசி எடுக்கபடாததை கண்டு பிரணாவினுள் ஒரு சிறு பதற்றம்….
யுகி மாம்ஸ் இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் முன்கூட்டியே பயந்தாரோ?????
இப்போது அவளை எங்கு சென்று தேடுவது??????
வழியே தென்படாத போதும் அவன் கால்கள் வீட்டில் நிற்க மறுத்தன!!!
” எங்காவது ஓடு பிரணாவ்…. அவளை எப்படியாவது மீட்டுவிடு ” அவன் மனம் சத்தமாக குரல் கொடுக்க
வியாயின் வண்டியில் விரைந்து ஏறி கொண்டவன் தன் மனைவிக்கு வியானை தவிர்த்து வேறு யாராவது நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்களா என்று
விசாரித்தான்….
“மைத்தி கூட படித்த கிளோஸ் பிரண்ட்ஸ் ரஞ்சி, கீர்த்தி ….. அவர்கள் இரண்டு பேரையும் எனக்கு நன்கு தெரியும்…..
எதற்கும் அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்!!! ” என்றபடி போனை எடுத்து சென்ற வியானுக்கு அவன் எதிர்பார்த்த தகவல் கிடைக்காததால் உதட்டை பிதுக்கினான்……
“ஓ காட்!!!!! இந்த சுந்தரமூர்த்தி எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ளாமல் சாதாரணமாக நினைத்து விட்டேனே???!!!!!!” என்ற பிரணாவ் தன் தலையை தட்டி கொள்ள
இவன் என்ன சொல்ல வருகிறான்??????
ஒருவேளை சுந்தரமூர்த்தி மைத்தியை கடத்தி சென்றிருப்பான் என்றா???????
இவன் கற்பனை வளத்திற்கு ஒரு அளவே இல்லையா????? ஆண்டவா!!!!!!!! என்று
நொந்து கொண்டான் வியான்…
” பிரணாவ் ச்சில்!!!!!!! மைத்தியை காணாமல் நீ எவ்வளவு அதிர்ந்து இருக்கிறாய் என்பது இப்போது நீ கூறிய வாக்கியத்தில் இருந்தே நன்கு தெரிகிறது……
நீ நினைப்பது போல் எல்லாம் படத்தில் வேண்டுமானால் நடக்கலாம்!!!!
மைத்தி பிறந்ததிலிருந்தே இங்கு தான் இருக்கிறாள்!!!
இப்போதும் இங்குதான் எங்காவது சென்று இருப்பாள் ” ஆறுதல் மொழி கூறிய வியானிடம்
“இங்கு தான் என்றால்!!! அது தான் எங்கே என்று நானும் கேட்கிறேன்????” கிட்டதட்ட கத்தினான் பிரணாவ்…….
அதில் சற்றே மிரண்ட வியான் ” சரி
பார்க்கலாம் வா!!!!” என்றபடி வியான் தன் காரை செலுத்த முற்பட
” நான் டிரைவ் பண்ணட்டுமா???????” என்று கேட்டுகொண்டு டிரைவர் சீட்டில் அமர்ந்த பிரணாவ்
“இப்போதே மணி எட்டரை ஆகிவிட்டது….. எங்கு போய் தேட போகிறோம்??????” என்று புலம்பியபடி வந்தான் …..
அவனது புலம்பலில்
” ஸ்ரீதீப்பிடம் பேச வேண்டும் என்று முன்பு ஒருமுறை மைத்தி தெரிவித்திருந்தாள்….. ஒருவேளை அவனிடம் பேச சென்றிருப்பாளோ??????” என்று தனக்கு தானே சத்தமாக யோசித்த வியானிடம்
” அந்த ஸ்ரீதீப் நம்பர் உன்னிடம் இருந்தால் போன் பண்ணி கேட்டு விடேன்!!!!!!!”
அவசரப்படுத்தினான் பிரணாவ்….
” அவள் தோழிகளை அழைக்கும் போதே
ஸ்ரீதீப் நம்பருக்கும் ட்ரை பண்ணி விட்டேன் …. அவன் எடுக்கவில்லை!!!!” என்று வியான் பதில் கூறிய சமயம் அவன் போன் அடித்தது…..
” யார் உன் போனில் ???? மைத்தியா?????” பிரணாவ் பரபரக்க
“இல்லை ஸ்ரீதீப் !!!!” என்றான் வியான்.
அத்தொடர்பை ஏற்றதும் “என்ன வியான் கால் பண்ணி இருந்தாய் போல?????
இங்கே டெல்லியில் ஒரு மீட்டிங் என்று அப்பா அட்டென்ட் பண்ண சொல்லி இருந்தார்……
அதான் கொஞ்சம் பிஸி!!!!
உஃப்ப் இப்போது தான் முடிந்தது……. நீ சொல்லு வியான் ” ஸ்ரீதீப் மொழிய
“அப்போது நீ மும்பையில் இல்லையா????????” லேசாக கலவரமாய் கேட்டு விட்டான் வியான் …..
“ஏன் என்ன ஆனது??????
மைத்தி!!!!!!!!
மைத்திக்கு ஒன்றும் இல்லையே?????
சோட்டு எப்படி இருக்கிறான் ??????????”
ஸ்ரீதீப் கத்தியது போன் ஸ்பீக்கர் இல்லாதபோதும் அருகில் இருந்த பிரணாவிற்கு தெள்ளத் தெளிவாக கேட்டது ……
” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஸ்ரீ !!! சும்மா உன்னை பார்க்கலாமே என்று தான் கேட்டேன்….. சரி நான் அப்புறம் கூப்பிடுகிறேன் ….. இங்கு வேறு ஒரு வேலை ……” போனை அணைத்ததும்
” மைத்தி ஸ்ரீதீப்பை பார்க்க போகவில்லை எனில் பிறகு எங்கு தான்
சென்று இருப்பாள்??????” இம்முறை வியானுமே சிறு உறுத்தலுடன் வினவ காரை நிறுத்தியிருந்தான் பிரணாவ்…….
ஏன்??????? என்ன ஆனது???? என்பது போல் வியான் பிரணாவை பார்க்க
” கன்ஃபர்ம் …. அந்த சுந்தரமூர்த்தி வீட்டிற்கு போகலாம்!!!! அங்கு கண்டிப்பா நமக்கு மைத்தி பற்றிய தகவல் கிடைக்கும் !!!!” என்று அவன் வீட்டு முகவரி தெரியுமா??? இல்லை அலுவலகத்திற்கு சென்று எடுத்து கொள்ளலாமா என்றான் பிரணாவ்….
” எதற்கும் பீச்சில் இருக்கிறாளா என்று ஒருமுறை பார்த்துவிட்டு போகலாமா??????” வியான் கேட்டதற்கு
” என்னது பீச்சா?????
நிலைமை புரியாமல் பேசாதே!!!!” வெடித்தான் பிரணாவ் ……
” இல்லை … மைத்தி பீச்சிற்கு சென்று அமர்ந்துவிட்டாள் எனில் அவளை வீட்டிற்கு அழைத்து வருவது சாதாரண விஷயம் இல்லை ……
நேரம் போவது தெரியாமல் அப்படியே அலைகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள்!!!!! அதுதான் கூறினேன் ” வியான் கூறியதும் அடுத்த அரை மணி நேரத்தில் அவனது ஹோண்டா சிட்டியை
ஜுஹா பீச்சில் சென்று நிறுத்திய பிரணாவ் இறங்கி ஓடலானான்…..
வியானும் வேறு திசையில் சென்று மைத்ரேயியை தேட
கால் மணி நேரத்திலேயே தோழியை அங்கு கண்டும் பிடித்திருக்க ஏனோ அவன் கால்கள் அவள் அருகில் செல்ல துடிக்கவில்லை…..
மாறாக பிரணாவிடம் மைத்ரேயின் இருப்பிடத்தை தெரிவிக்க விழைந்தவன்
பிரணாவை எதிர்நோக்கி செல்ல
சரியாக அச்சமயம் பிரணாவின் விழிகளும் மைத்ரேயியை தான் முற்றுகையிட்டு இருந்தது ……
அவ்வளவு நேரமாக காணத் துடித்தவளை
சற்று தொலைவில் அலைகளை வெறித்து சிந்தனைகளை தொலைத்து ஒரு மோன நிலையில் வீற்றிருக்க கண்டு விட்டவனுக்கு
இதுவரை தான் அனுபவித்த அத்தனை பரிதவிப்பும் அவளின் மீது கண்மண் தெரியாத ஆக்ரோஷமாய் மாறி போனது…..
ஆனால் அதற்கான காரணமும் அடுத்த
நொடியே அவனுள் சிக்கித் தெளிய
அப்படியே நின்ற இடத்திலேயே மண்டியிட்டபடி சரிந்து அமர்ந்தான்…….
இது எப்படி சாத்தியமாகும்??????????
அப்போது விதுல்யாவிடம் தான் கொண்டது??????
‘சூழ்நிலை கைதியாக மைத்ரேயியை மணந்து இருந்த போதும் கடைசிவரை இனி அவள் மட்டும் தான் எனக்கு !!!! ‘ என்று உறுதியாக இருந்தவன் தான்……
அவளும் விதியின் வழியை பின்பற்றி தன்னோடு இசைந்து இந்த வாழ்க்கையில் வெற்றி காண வேண்டுமென்பதற்காகவே சகஜமாக உரையாடுபவளும் கூட!!!
அவ்வாறு அவன் கணவன் மனைவியாக பேசும் சமயங்களில் அவள் எதிர்ப்பு
தெரிவிக்காத பொழுதிலேயே தெரிந்தது…… சோட்டுவிற்காக மணந்தவள் தான் என்றாலும் கூடிய விரைவில் மனதாகவே அவனை ஏற்றும் கொள்வாள் என்பது!!!!!
ஆனால் இடையில் அவள் அனுபவித்த வலிகளும் சுமைகளும் பல !!!!!
இத்திருமண பந்தத்தையும் அதனால் நிகழவிருக்கும் தாம்பத்தியத்தையும் எக்காரணம் கொண்டும் அவள் பட்ட பழைய காயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக தான் இருந்தான் ……..
ஆகவே தான் அவ்வளவு பேச்சு பேசுகிறவன் அவளிடம் இத்தனை நாட்கள் நெருங்காது இருந்ததும்…..
மற்றபடி இதற்கெல்லாம் காரணம் மைத்ரேயி நம்புவது போல்
அவன் மனதில் விதுல்யாவை நீக்காது அவன் தவிப்பதால் அல்லவே அல்ல…..
தாலி கட்டும்போது தீர்மானித்தது தான்…..
எப்போது விதுல்யாவிடம் மனதார மன்னிப்பு கேட்டானோ ????
அந்த நொடியே இனியும் அவளை நினைத்து தன்னோடு வாழ வந்தவளுக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் பிரணாவ்…..
ஆனால் இப்பொழுது அவன் குழப்பத்திற்கான காரணமே
பிரணாவினுள் பெரும் தடுமாற்றத்தை விதைத்தது……
அவளைக் காணாமல் சில மணித்துளிகளுக்கு முன் அவன் அனுபவித்த தவிப்பு?????
அவளை கண்டதும் ஏன் என்பதை புள்ளி
விவரத்துடன் படம் பிடித்து காட்டியது!!!!!
இதுவே மைத்தியின் இடத்தில் வேறு யார் காணாமல் போயிருந்தாலும் தேடியிருப்பான் தான் …. படபடத்தும் கூட உணர்வான் தான்…….
ஆனால் அவளை கண்டெத்த நொடியில் அவன் கண்டுவிட்ட உண்மை!!!!????
தலைகீழாக அவன் உலகை மாற்றிவிட்டு எனக்கென்னவென்று அக்கறையற்று இயற்கையோடு உறவாடியவள் ஒரே நொடியில்
அவன் உலகை நேராக்குவதற்கு பதிலாக அப்படியே திருப்பி அல்லவா போட்டிருக்கிறாள்??????
அவள் மீது தனக்குள் புதிதாக தோற்றுவித்த காதல்!!!!!!!
இது காதலா?????
அப்போது விதுல்யாவிடம் தான்
கொண்டது ????? இரண்டாவது முறையாக தன்னுள் கேட்டு கொண்டான்…
ஒருவனுக்கு காதல் இரு முறை ஜனிக்குமா?????
மனைவியின் மீது தான் கொண்ட இந்த நேசத்தை ‘காதலுள்’ அடக்க விரும்பாதவனுக்கு
இது எப்படி???? மற்றும் எப்போதிருந்து???????? எனும் விடை தெரியாத புதிர்கள்…….
அவளோடு பழக பழக ஏற்பட்ட உணர்வோ????
அல்லது திருமணமானதால் ஏற்படும் சாதாரண ஈர்ப்பினால் எழுந்ததோ?????
இல்லை….
உதிக்கா சொன்னாள் என்பதற்காகவே
தான் மணமேடை ஏறினான் என்றாலும்
அப்போதே அவனையுமறியாமல் அவனது பஜாரியை காத்தாக வேண்டும் எனும் வெறி அவனுள் மறைந்திருந்ததோ????????????????
அவனால் பகுத்தறிய முடியவில்லை…..
இதுவே தன் மனதை உணராது போயிருந்தால் மைத்ரேயியை கண்டதும் ஓடி சென்று அவள் கன்னத்தை பழுக்க செய்யவும் தயங்கி இருக்க மாட்டான் தான்!!!!
” போனை கூட எடுக்காமல் அப்படி என்னடி பஜாரி இப்படி பைத்தியம் மாதிரி உட்கார்ந்து இருக்கிறாய்?????????” பித்துப் பிடித்தவன் போல் கத்தவும் செய்திருப்பான் …..
ஆனால் இப்போது தன் மனமே புரியாத புதிராய் விளங்க
தொலைவில் தன் வரவை பற்றியும் தன் மனதில் நடக்கும் போராட்டத்தையும் பற்றியும் எந்தவொரு அறிகுறியும் தெரியாமல் கடலினுள் சிந்தை லயித்து அமர்ந்திருந்தவளின் அருகில் மெதுவாக எழுந்து சென்று ஒற்றைச் சொல்லை கூட உதிர்க்காது அவள் பார்த்து அலைகளை பார்த்தபடியே உட்கார்ந்து கொண்டான் பிரணாவ்……
தன் அருகே ஏற்பட்ட அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கு தன் கணவன் அமர்ந்திருப்பது புலப்பட
எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் மணலில் அழுந்த புதைந்திருந்த அவன் கரத்தைப் பற்றி
“நான் இங்கு அடிக்கடி வருவேன் பிரணாவ்……
அது ஏனோ எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக
இருந்தபோதும் ஆர்ப்பாட்டமாய் ஓங்கி வரும் அலைகள் நம் அருகில் வரும்போது எப்படி ஓய்ந்து போய் விடுகிறதோ???????
அதைப் பார்த்தால் என் மனதில் அப்படி ஒரு நிம்மதி கிட்டும்!!!!!!
நம் பிரச்சனைகள் எல்லாம் நாம் பார்க்கும் விதத்தில் தான்……
அதனை
கடலினுள் இருக்கும் போது பேரிரைச்சலுடன் ஓங்கி ஒலிக்கும் பேரலைகள் ஆக பார்த்தால் திணறிவிடுகிறோம்!!!!
பிறகு
ஒரு தீர்வோடு
நம்மிடம் பட்டும்படாமலும் உரசி செல்லும் நுரையாக பிரச்சனையை எதிர்கொள்ளும் போது உற்சாகமும் ஆகி விடுகிறோம்!!!!
சோட்டு பிறந்த அடுத்த தினத்தில் கூட நான் இங்கு வந்து இருந்தேன்…….. ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தவளுக்கு
ஆனால் மூன்று மாதத்திற்கு முன் என் டாடி…… டாடி!!!!! ” என்றதும் அதற்குமேல் பேச முடியாது நீர் கோர்த்த விழிகள் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பவனை மறைக்க வேறு புறம் திரும்பிக்கொண்டு தன் அழுகையை உள்ளிழுத்துக் கொள்ள
அடுத்த நொடியே தன் மனைவியை வலுக்கட்டாயமாய் தன் புறம் திருப்பிய பிரணாவ்
“சொல்லுடி பஜாரி!!!!! மாமாவிற்கு என்ன ஆனது ???????” அவள் மனதை அழுத்தும் பாரம் அனைத்தையும் எப்படியாவது பறித்து அதை தான் ஏற்றுக் கொள்ள மாட்டோமா என்ற வெறியில் கேட்டிருந்தான் .
” நீயும் உன் அப்பவும் பேசி நான் பார்த்ததில்லை பிரணாவ்….. பட் ஐ கேன் ஃபீல் யுவர் லவ் டுவேர்ட்ஸ் யுவர் டாடி…….
அதை நான் உணர்கிறேன் என்றால் அதற்கு ரீஸன் என் டாடி !!!!! அவருடைய அன்பு……
என் டாடி இருந்த வரையில் அவர் வாயை மூடி நீ பார்த்திருக்க முடியாது …… எதையாவது பேசி கொண்டே இருப்பார்!!!!!
அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்…. அவர் பிசினஸ் ஆகட்டும் இல்லை பிடித்த குச்சி வத்தல் ஆகட்டும் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்!!!!!
நான் பிறந்ததுமே என் அம்மா எங்களை விட்டுப் போய்விட்டார்கள்…….
சொந்தங்கள் எல்லாம் அவரை அடுத்த திருமணத்திற்கு வற்புறுத்த
திடமாக மறுத்துவிட்டதோடு எங்களுக்காகவே எங்கள் மீது உயிராகவே இருந்தார் …..
டாடிக்கு நான் அவருடைய பிசினஸை
பார்க்கவேண்டும் என்று அவ்வளவு ஆசை!!!!!!
ஆனால் என் விருப்பம் தெரிந்ததும் என்னை துளிகூட வற்புறுத்தவில்லை…..
மாறாக என்ன சொன்னார் தெரியுமா???????
” சோட்டு வளர்ந்து பெரியவனாகும் வரையில் நான் நிர்வாகப் பொறுப்பை பார்த்துக்கொள்கிறேன் ரேயி கண்ணா!!!!!!” என்றார்…
அப்படி சொன்னவர் ஏன் பிரணாவ் எங்களை விட்டுச் செல்ல வேண்டும்????????
அதுவும் இரு தினங்கள் அலுவல் விஷயமாக வெளியூர் சென்றாலே 200 தோப்புக்கரணம் போடச் சொல்லி படுத்துவேனே !!!!
அப்படி இருக்க எப்படி இப்படி ஒரேடியாக என்னை விட்டு போனார்???????”
திணறியவளை பார்த்தவனின் மனம் அவள் அடைந்த வேதனையை பங்குபோட வழியின்றி தவிக்க
அவன் கரத்தை இறுகப் பற்றியிருந்தவளின் தளிர் விரல்களை இரு கைகளிலும் பாதுகாத்து இதமாக தன் நெஞ்சில் வைத்தான்……
கணவனின் செய்கையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் அவனுள் தஞ்சம் புகுந்த அவள் கரத்தை சுட்டிக்காட்டி
” இந்த ஃபிஸ்ட் அளவிற்கு தான் பிரணாவ் இருக்கும் இங்கு உள்ளுக்குள் இருக்கும் இதயமும் …..
ஆனால் அது எப்போது அதன் வேலையை நிறுத்தும் என்பதை யாராலும் தீர்மானிக்க
முடியாது !!!!
சோட்டு பிறந்த அடுத்தநாள் நான் இங்கு வந்ததோடு சரி …… அதன்பின் அவனையும் என் படிப்பையுமே கவனிக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது……
அன்று டாடியின் இதயத்திற்கு முன்பே தெரிந்திருக்கும் போலும் ???? இன்னும் சற்று நேரத்தில் தான் செயலிழக்க போகப் போகிறோம் என்று!!!! ” என்றவள் அன்றைய நிகழ்வை கணவனின் கண் முன் கொண்டு வந்தாள்……
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தமிழ்வாணன் தூங்கிக்கொண்டிருந்த சோட்டுவை கையில் தூக்கிக்கொண்டு
“வாடா டேயி கண்ணா…… கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் !!!!!” என்றார்…
” ஏன் டாடி???? இப்போது தான் சோட்டுவை தூங்க வைத்தேன் …. எனக்கும் எக்ஸாம்ஸ் ஆரம்பிக்க போகிறது….
இன்னொருநாள் போகலாமே??????” என்று மைத்ரேயி மறுத்ததையும் மீறி
“இன்று ஒரு நாள்…. ஒரே ஒரு நாள் ப்ளீஸ்….. டாடி சொல்றதைக் கேளுடா “
என்று அவர் கேட்டபோது அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர் சொல்லை தான் கேட்கப் போகிறோம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லையே!!!!!!
இதோ !!!!! இதே இடத்திற்கு தானே!!!!!! அன்று எங்களை அவர் அழைத்து வந்ததும் …….
“ரேயி கண்ணா உன் ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிந்தவுடன் உன் ஆசைப்படி ஹார்ட் சென்டர் ஆரம்பித்துவிடலாம்……
மும்பையில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் குறைந்தது 15 இடங்களிலாவது ஹார்ட் சென்டரை திறக்க வேண்டும்!!!!”
” டாடி இது என்ன உங்கள் பிசினஸ் என்று நினைத்தீர்களா ????? ஐ நீட் எக்ஸ்பீரியன்ஸ் டூ….. அதையெல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இன்னும் மூன்று வருடம் டி.எம் படிப்பை நான் முடித்திருக்க வேண்டும்!!!! “
” சோ வாட்??????
அனைத்து இதய வல்லுநர்களும் உன் மருத்துவமனையில் வந்து நீ ஆசைப்பட்டபடி ஃப்ரீ சர்வீஸ் கொடுத்தபடியே உனக்கும் ட்ரெய்னிங் கொடுக்கட்டும்!!!” என்றவர்
அப்போது விழித்திருந்து சோட்டுவை
உயரத் தூக்கி
” நீங்கள் பெரியவராகி தாத்தா ஆரம்பித்த பிசினஸையும் பார்த்துக்கொள்ளுங்கள்……. அப்படியே உங்க அம்மாவின் கனவையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு உறுதுணையாக இருங்கள் மகாராஜா!!!!! சரியா???????” என்று கேட்ட நொடியில் அவர் கையிலிருந்த பேரனை நழுவ விட்டபடி சரிந்திருந்தார்…..
” டாடி என்னாச்சு????????????????
எழுந்திரியுங்கள்!!!” என்றபடி அவர் இதயத்தில் கை வைத்ததுமே மைத்ரேயிக்கு விளங்கிவிட்டது தந்தையின் நெஞ்சு கூட்டில் இருந்த உயிர் தங்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என்பதை ……
அன்று
அதே இடத்தில் வார்த்தைகளின்றி ஊமையாகிப் போய் அழ கூட தோன்றாது மகனை கையில் ஏந்தியபடி நின்று வெறித்தவள்