Advertisement

வியான் பிரணாவை முறைப்பதை கண்டு பொறுக்க மாட்டாமல் மைத்ரேயி நண்பன் என்றும் பாராமல் அவனை கடிந்து கொள்ள

தோழியின் இப்பரிமாணத்தை சற்றும் எதிர்பாராத வியான்  உடனே அந்த இருக்கையிலிருந்து எழுந்து

” சாரி மேடம்!!!!!!” என்றுவிட்டு

“அஸ் அன் எக்ஸிக்யூட்டிவ் மேனேஜிங் டைரக்டர் ஆஃப் அவர் ரேயி குரூப்ஸ்

 இந்த மாதத்திற்கான நஷ்டஈட்டை நானே ஏற்றுக் கொள்கிறேன்!!!!!

மேலும் அடுத்த மாதமும் இதே நஷ்டம் தொடரும் எனும் பட்சத்தில் நான் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன்…….”  என்றான் ஒருவித

கோபத்தில்…….

 “ஷப்பா!!!!!!” நண்பனின் போக்கில் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்

” நீ வேலையை விட்டு செல்லும் அளவிற்கு அடுத்த மாதம் நமக்கு லாஸ் எதுவும் ஏற்படப் போவதில்லை ……

 ஆல்சோ இந்த மாதமும் நம் கம்பெனியில் தொலைந்து போயிருக்கும் பணத்தை நீ திருப்ப தேவையிருக்காது!!!!!!!!”

அவ்வளவு உறுதியாக கூறியவளிடத்தில் மெய்யாகவே புரியாமல்

“ஏன் மேடம்???????”  என்றான் வியான் குழம்பிய வண்ணமாய்….

” பணத்தை மோசடி செய்தவனுக்கு ரிசிக்னேஷன் லெட்டர் மட்டும் நீ ரெடி

பண்ணி வை……

 அவனே மொத்த  பணத்தையும் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை இன்னும் சற்று நேரத்தில் ஏற்படும் !!!!!!” என்றாள் மைத்ரேயி தன் கணவன் மீது தான் கொண்ட நம்பிக்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வை நேரில் கண்டவளாய்……

 அப்படி என்றால்!!!!!

இவள் என்ன சொல்ல வருகிறாள் ?????

 இதோ லேப்டாப்பின் முன் உட்கார்ந்து இருப்பவன்

 இங்கு இருவர் பேசிக்கொண்டு இருப்பது கூட தெரியாத வண்ணம்

 வேலைப் பளுவில் தன்னை தொலைத்ததாய் காட்டிக் கொண்டிருக்கிறானே!!!!!

 இவன்…….

இவன் அந்த பணத்தை களவாடியவனை கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்து விடுவானாம்??????!!!!!

 அப்படி  என்ன அவனின் மேல் அத்தனை நம்பிக்கை??????

 பார்க்கத்தானே போகிறேன்!!!!

 எவ்வளவு சீன் போட்டாலும் ஒரு ஆணியையும் அவனால் கழற்ற முடியாது என்பதை!!!! என்று எண்ணும்போதே வியானின் போன் அடித்தது…….

 அவன் அன்னை தான் அழைத்திருந்தார்…..

 அதை கவனித்த மைத்ரேயி ‘ வியானின் அம்மா கூப்பிடுகிறார்கள் என்றால் சோட்டு ஏதேனும் அழுகிறானோ ???????’

 என்று மனதுள் முணுமுணுத்ததை தான்

வியானின் அம்மாவும் தன் மகனிடம் போனில்  தெரிவித்திருந்தார் …….

“சமாளிக்க முடியாதா அம்மா??????” வியான் கேட்கும் போதே

” நீ வீட்டுக்கு போ மைத்தி!!!!!!”

 என்றிருந்தான் பிரணாவ் ……

ஓ!!!! பேஷ் பேஷ்!!!!  அப்போது அவன் செவிகளை இங்கு மொத்தமாக விலைக்கு விற்று விட்டுத் தான் கண்களை கணினியிடத்தில் வாடகைக்கு விட்டிருந்தானோ???????

 இதற்கும் பிரணாவின் மேல் சம்பந்தமே இல்லாமல் வியான் கோபப்பட்டது தான் மிச்சம் ……

” சரி பிரணாவ் ….. நீ இங்கு பார்த்து கொள்!!!!”  என்று கிளம்பியவளின் அருகே விரைந்த பிரணாவ்

“உனக்கு நிஜமாகவே கார் ஓட்ட தெரியுமா???? பத்திரமாக போய்விடுவாயா???????” என்றான் சந்தேகமாக…..

 இம்முறை வியானின் சொற்களுக்கு அணை போட முடியாது போக அவை சற்றே காட்டமாக எதிரொலித்தன…..

 “பொண்டாட்டிக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் தான் அவளை  பஸ்ஸில் போக சொன்னாயாக்கும்?????

அதுவும் சோட்டுவை தூக்கிக் கொண்டு!!!!!!”

 பிரணாவிடம் வியான் பாய

நண்பனை ” ஸ்டாப் இட் வியான்!!!!!”

 என்று அதட்டி இருந்தாள் மைத்ரேயி …..

” மைத்தி என்ன இது????? விடு!!!!”  என்பது போல் அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து உணர்த்திய பிரணாவ்

 ” நீ கிளம்பு…. இங்கு நான் பார்த்து கொள்கிறேன்!!!  அங்கு சோட்டு அழுது கொண்டிருக்கிறான் …..

டேக் கேர் ” என்று தன் மனைவியை அனுப்பி வைத்துவிட்டு

அருகில் நின்ற வியானை சட்டை செய்யாமல் கணினி முன்பு மீண்டும் அமர்ந்து கொண்டான் .

 15 நிமிடங்களில் ” இந்த சுந்தரமூர்த்தி!!!! இவனைப் பற்றிய முழு டீடெய்ல்ஸும் எனக்கு வேண்டும் !!!!” என்று பிரணாவ் வியானிடம் கேட்க

“வாட்!!!!!!!

 அவர் யார் தெரியுமா?????

 அங்கிள் அது தான் மைத்தியின் அப்பா தமிழ்வாணன் !!! அவருடைய பெஸ்ட் ஃபிரண்ட் …….

அங்கிள்  இந்த கம்பெனியை மிக சிறிய அளவில் ஆரம்பித்தத போதே சுந்தரமூர்த்தி சார் தான் அக்கவுண்டன்ட் ஆக இருந்தார் …..

இப்போது ரேயி குரூப்ஸின் சி.எஃப்.ஓ!!!!!(சீஃப் பைனான்ஸ் ஆபிஸர்) ….

அவரை நியமித்ததும் அங்கிள் தான்…..

 அவரைப் போய் சந்தேகப்படுகிறாயா????

உனக்கு ஒன்று தெரியுமா??? மைத்தி அவருக்கு இன்னொரு டாட்டர் மாதிரி!!!!!!” வசனம் பேசி சென்றவனை இடை வெட்டி

 “இன்னொரு டாட்டர் மாதிரி தானே???

 ஆனால் டாட்டர் இல்லையே!!!!!

 ஆல்சோ  கம்பெனி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ரிலேஷன்ஷிப்பிற்கு நடுவில் பொருந்தாது …..

மகளாகவே இருந்தாலும் கம்பெனி என்று வரும் போது அவளும் ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி தான் !!!!

அண்ட் ஐ நீட் ஹிஸ் டீடைல்ஸ் ரைட் நௌ!!!!”

 அதிகாரத் தொனியில் கேட்டவனை கண்டு ஒரு நொடி அதிர்ந்த போதும்

 கம்பெனி ரூல்ஸ் பற்றி தெரியாமல் தான் கல்லூரிப் படிப்பின் நடுவிலேயே பார்ட் டைம் ஜாப்-ஆக  இங்கு வேலைக்கு சேர்ந்ததோடு

 இன்று இந்த நிலையில் முழுப் பொறுப்பையும் ஏற்று

நடத்துகிறோமா??????

 என்னதான் வேண்டியவராக இருந்தாலும் சுந்தரமூர்த்தி சாரையும்  நான் விட்டு வைக்கவில்லையே?????

 அவரைப் பற்றியும் தானே முழுமூச்சாக ஆராய்ந்தேன் !!!!!!

அப்படி எந்த ஒரு பிழையும் அவர் மீது தன் கண்ணிற்கு புலப்படவில்லையே…..

 இப்போது அதே ரெக்கார்டில் இவன் எதை கிழிக்கப் போகிறான் என்பதையும் தானே பார்க்க போகிறேன் !!!!!

 என்பதைப்போல் ஏளனமாக ஒர்க்கர்ஸ் பற்றிய முழு டீடெயில்ஸ் அடங்கிய தொகுப்பை தாங்கிய பென்டிரைவ் ஒன்றை பிரணாவிடம்  நீட்டினான் வியான்…..

 அதை வாங்கி மேலும் 15 நிமிடங்களை செலவழித்த பிரணாவ்

“சுந்தரமூர்த்தி உடைய கேபின் எங்கே????????”  என்றான்…..

 இவ்வளவு சொல்கிறோம் …. ஏன் அந்தப் பென்டிரைவ்விலும் ஒன்றும் கிட்டாது போக இப்போது அவர் கேபினில் எதை  துலாவ போகிறானாம்?????

 “வேஸ்ட் ஆஃப் டைம் !!!! “

முனகியவாறு

“அவர் இன்று லீவ்!!”  என்று கூறிவிட்டு அவரது அறையை சுட்டிக் காட்டியிருந்தான் வியான்….

 அங்கு விரைந்த பிரணாவ் அவரது லேப்டாப்பை அரை மணி நேரத்திற்கும் மேல் பயன்படுத்திவிட்டு அருகிலிருந்த டெஸ்கில் எல்லாம் ஆராய ஆரம்பித்தான்…..

”  எனக்கு இந்த லாக்கர் கீ வேண்டும்!!!!”

 பிரணாவ் கேட்டதற்கு

வியான் பொரிந்து தள்ளினான் ….

“நீ சொன்னது போல் சுந்தரமூர்த்தி சார் தான் கல்பிரிட் ஆக இருந்தாலும்

 இவ்வளவு நேரம் அந்த பென்ட்ரைவிலும் இந்த  லேப்டாப்பிலும் எந்த ஒரு தடயமும் தென்படாது போக

 அந்த கப்போர்டில் தான் பணத்தை பதுக்கி வைத்திருக்க போகிறாரா???????”  என்று பாய்ந்தான்.

ஆனால் ” கொடு வயான் !!!!” பிரணாவ் தன்மையாக பேசிய விதம் வியானை கட்டி போட்டு மேற்கொண்டு பேச விடாது தடை செய்தது……

 அங்கு கப்போர்டில் சிக்கிய சிறு காகிதத்தை கையில் எடுத்த பிரணாவ்

” நான் இப்போது ஹெச்.டி.எஃப்.சி பேங்கிற்கு போகிறேன் !!!!

வருகிறாயா?????” என்றான்.

 பிரணாவின் கையில் இருக்கும் காகிதத்தை பார்த்த வியான்

“இது ஜஸ்ட் அந்த பேங்க் ஃபார்ம் ….

இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?????”  என்று அதிசயமாய் கேட்க

“இப்போது நீ வருகிறாயா இல்லையா???????” என்று அழுத்தமாய் வினவினான் பிரணாவ்.

 அதில் எரிச்சலடைந்த போதும்

அங்கு எந்த புதையலைத் தோண்டி எடுக்கப் போகிறானாம் இவன்???????

 என்பதை தெரிந்துகொள்ள வியானிற்கு ஓர் ஓரத்தில் ஆர்வமாகவும் தான்

இருந்தது…..

” நீ மைத்தியை கொடுமை படுத்தியதை போல் எனக்கும் உன்னை பஸ்ஸில் போக சொல்லத்தான் ஆசை!!!!

 ஆனால் அவள் தான் அதற்கும் கோபித்துக் கொள்வாள்……

 வா போகலாம் !!!!” என்று முன்னே நடந்தவனை

தன்  இதழ்களுக்குள் பூத்த மென்னகையுடன்  பின் தொடர்ந்தான் பிரணாவ் …..

பாங்கினுள் நுழைந்ததும்  சுந்தரமூர்த்தி ஃபார்மை நீட்டி அங்கு அவர் கம்பெனி  பெயரில்  இந்த மாதம் வாங்கியிருக்கும் லோன் தொகையை பற்றி விசாரிக்க

” சாரி சார் ஒரு தனிப்பட்ட நபரின்

கணக்கை மற்றவருக்கு தெரியப்படுத்த கூடாது என்பது எங்கள் விதி …. அது யாராக இருந்தாலும்!!!!”  என்று சிறு கண்டனத்துடன் பதிலளித்தார் பேங்க் மேனேஜர் …..

அசராமல் “இவர் வியான்…. ரேயி  குரூப்ஸின் இ.எம்.டி (எக்ஸிகியூட்டிவ் மேனேஜிங் டைரக்டர்) …..

சுந்தரமூர்த்தி கம்பெனி பெயரை பயன்படுத்தி வாங்கிய லோன் டீடைல்ஸ் மட்டும்  நீங்கள் கொடுத்தால் போதும்!!!!”  என்று பிரணாவ் கூறியதை இம்முறை பேங்க் மேனேஜரால் மறுக்க முடியவில்லை …..

“ப்ளீஸ் வெயிட் சார் !!! ” என்று அவர் நகரவும்

“இந்த பாங்கில் நாங்கள் எந்த லோனும் கமுபெனி பெயரில் வாங்கியதில்லை…..

மேலும்  ஐ.சி.ஐ.சி.ஐ பாங்கில் தான் நம்

கம்பெனிக்கு அக்கவுண்ட் இருக்கிறது!!!!

 அக்கவுண்ட்ஸை கோ த்ரு பண்ணும் போது அது உனக்கே தெரிந்திருக்கும்!!!!

 இப்போது சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கு வந்திருக்கிறோம்?????”

 என்று வியான் பிரணாவை கடிய

 அச்சமயம் அவர்களின் நெருங்கிய பேங்க் மேனேஜர்

“சார் இந்த மன்த் மிஸ்டர் சுந்தரமூர்த்தி ரேயி குரூப்ஸீ  ஆஃப் இன்டஸ்ட்ரீஸிற்கான வாங்கிய தொகை 78 லட்சம்!!!!!!”  என்று கூறவும்

தன் இருக்கையை விட்டு தன்னையும் மீறி எழுந்திருந்தான் வியான்…..

 இந்த உண்மையை நம்புவதற்கு அவனுக்கு சில மணித்துளிகள்

தேவைப்பட்டது……

 அதற்குள் பிரணாவ “தேங்க்ஸ் ஃபார் தி டீடைல்ஸ் சார் !!!!” என்று பேங்க் மேனேஜரிடம் உரைத்துவிட்டு

“கமிஷனர் ஆபீஸில் ரிட்டன் கம்பிளைன்ட் ஒன்று எழுதி கொடுத்துவிட்டு அந்த சுந்தரமூர்த்தியின் மீது லீகலாக ஆக்ஷன் எடுக்கலாம்!!!!!

 எப்படியும் மூன்று மாதத்திற்குள் கம்பெனிக்கு வந்து சேர வேண்டிய தொகையை மீட்டுவிடலாம்”  என்று கூற

” எப்படி????? எப்படி தெரிந்தது??????

 அதுவும் இந்த பேங்க் தான் என்பது!!!!!!”

 வியான் அதிர்ச்சியிலிருந்து  மீளமுடியாமல் அதே இடத்தில் நின்று நகர முடியாது கேட்டிருந்தான்….

“போகும் வழியில் சொல்கிறேன் வா!!!!”  என்றபடி அழைத்துச் சென்ற பிரணாவ்

“டூ சிம்பிள் !!!!

ஒரு கம்பெனியின் சி.எஃப்.ஓ வை அவ்வளவு பெரிய தொகையை யாரும் கையாள முடியாது…. சோ ஆட்டோமேட்டிக்கலி இவன் தான் என்னுடைய ஃபர்ஸ்ட் டார்கெட்!!!!!!

அவனும் ரொம்ப கிளவராக எந்த தடையையும் விட்டு வைக்கவில்லை தான்…..

 நீ சொன்ன மாதிரி கம்பெனி மெட்டீரியல்ஸ் காண லோன் அனைத்தும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கில் இருந்து வாங்க பெற்றதற்கான டீடெயில்ஸ் சிஸ்டமிலேயே இருந்தது……

 ஆனால் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சிலிப்பை பார்க்கவும் ஒரு சான்ஸ்!! இங்கே ஏதாவது தென்படலாமோ ??? என்று தான் வந்தது!!

 ஆனால் மொத்த பணத்தையும் இங்கு இதிலிருந்து அவன் டெப்பாசிட் பண்ணி இருப்பது நமக்கு வசதியாக போய்விட்டது………

நீ மூன்றாவது மனிதனாக என்னிடத்தில் இருந்து ஆராய்ந்து பார்த்திருந்தால் நீயே இதை எளிதாக கண்டும் பிடித்திருப்பாய்!!!!!!!”

 என்று தன்னிலை விளக்கம்  சொன்னபடி காவல் நிலையத்திற்குள் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு

வீட்டிற்கு காரை திருப்ப கூறினான் பிரணாவ்……

 பங்களாவினுள் சென்றவனுக்கு அங்கு போர்டிகோவில் மனைவியின் ஜோண்டா நிற்காததைக் கண்டு பிரணாவினுள் சிறு உறுத்தல் ஏற்பட்ட போதும் அதை வெளிக்காட்டாது உள்ளே நுழைந்தான் ….

அங்கு ஹாலில் தென்பட்ட வியானின் அன்னையிடம்

“மைத்தி எங்கே ????????”

அவனையும் அறியாமல் ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்ள வினவ

“மைத்தி வந்தபோது தான் அவ்வளவு நேரம் அழுது கொண்டே இருந்த சோட்டு தூங்க தொடங்கியிருந்தான்……..

 ஏதோ முக்கியமான வேலை இருக்கிறது என்றும்

‘நான் போய்விட்டு வந்து விடுகிறேன் சோட்டுவை பார்த்து கொள்ளுங்கள் !!!!!’

என்றும் சொல்லி விட்டு அப்போதே கிளம்பி விட்டாளே!!!!!”

 என்று வியானின் அம்மா தெரிவித்ததும்

 அப்போது கம்பெனிக்கு தான் வந்திருப்பாளோ?????

” நீங்கள்  இன்னும் கொஞ்ச நேரம் சோட்டுவை பார்த்துக் கொள்ளுகிறீர்களா??????”  என்று கேட்டு கொண்டு  வெளியே ஓடிய பிரணாவை பின் தொடர்ந்தான் வியான்…..

அங்கு மைத்ரேயியின் போனுக்கு அழைப்பு விடுத்தபடி நின்றுகொண்டிருந்த பிரணாவிடம்

” இப்போது எதற்காக இவ்வளவு டென்ஷன் ??????” என்றான் வியான் மெதுவாக….

”  போனை எடுக்க மாட்டேன்கிறாளே?????

 ஒரு மணி நேரத்திற்கு முன்பே கிளம்பி விட்டிருந்தால் நாம் அங்கு கம்பெனியில் தானே இருந்தோம்!!!!

எப்படியும் நம்மை பார்த்து இருப்பாளே?????

அப்போது அவள் அலுவலகத்திற்கு வரவில்லை எனில்…..

  வேறு எங்கு சென்று இருப்பாள்????????”

 யோசனை படர்ந்து நின்றவனின்

தோளைத் தொட்டு

 “மைத்தி அப்படி எங்கே சென்று இருக்க போகிறாள்????? எங்கு சென்றிருந்தாலும்

எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு தானே வர போகிறாள் !!!!

கொஞ்சம் நேரம் இங்கேயே வெயிட் பண்ணு….

 நான் வேண்டுமானால் போய் பார்த்துவிட்டு மைத்தியை அழைத்து வருகிறேன் ??????” என்றான் வியான் …..

“இல்லை இல்லை நானும் வருகிறேன்…..

 காலேஜுக்கு சென்றிருப்பாளோ!!!

இல்லை வேறு யாரையாவது பார்க்க சென்றிருப்பாளோ!!!

அப்படி என்ன முக்கியமான வேலை?????

இந்த போனை கூட எடுக்காத அளவிற்கு??????”  பொரிந்து தள்ளிய பிரணாவை அதிசயமாக பார்த்த வியானிற்கு தெரியாது இன்னும் சற்று நேரத்தில் அவளை காணாது அவனும் திகைத்து திணற போகிறான் என்பது !!!!

Advertisement