Advertisement

சோட்டுவை காணாது ஒவ்வொரு அறையாக சென்று தேடிய மைத்ரேயி மாடி ஏற பிரணாவும் மனைவியை பின் தொடர்ந்தான்…..

அங்கோ அவர்களை பத்து நிமிடங்களாக திகிலடைய செய்திருந்த புத்திரன் ஓர் அறையினுள் பெரிய மரக் தொட்டிலை பிடித்து நிற்க முயன்று கொண்டிருந்தான்………

மகனை கண்டதும் அவளுள் இருந்த சலசலப்பு மறைந்து தெளிந்த நீரோடையாய் மனம் மாற

 ” உனக்கு நம் ரூம் கூட அடையாளம் தெரிந்துவிட்டதா சோட்டு பையா?????????”

 என்றபடி அவனை தூக்கியவள் அருகில் நின்ற பிரணவிடம் அங்கு மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை காண்பித்து

” என் அப்பா !!!!!!! ” தொண்டையடைக்க

தமிழ்வாணன்!!!!!!”

என்றபோது அவள் அனுமதி இன்றி அவள் கண்கள் தெப்பக்குளம் ஆனது…….

மனைவியை உணர்ந்து அவள் கரத்தை பற்றிய பிரணாவ் அவளை தன் தோளோடு அணைத்து ஆறுதல் தர, அவளோ

 ” உன்னை மூட் அவுட் ஆக்குகிறேன் என்று நினைக்கிறேன்!!!!!!

 ஆனால் உன்னை பார்த்தால் என் டாடி  அவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் பிரணாவ்!!!!!

 உன்னை போல் தான் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்…….

 ஆமாம் நீ ஏன் வந்ததிலிருந்து எதுவுமே பேசவில்லை ???????

டேய்  சோட்டு உன் அப்பாவிற்கு இ‌வ்வளவு நேரம் பேசாமல் இருந்ததற்கு கின்னஸ் சாதனை தான் கொடுத்து கௌரவிக்க வேண்டும்” என்றாள் வேறு பேச எண்ணி வரவழைத்த ஒரு சின்ன சிரிப்புடன்…..

ஆனால் அதற்கும் வாயை பசை போட்டு ஒட்டி வைத்து நின்றவனிடம் மைத்ரேயி ஏதோ சொல்ல எத்தனிக்க

அப்போது வியான் குறிப்பிட்ட சமையல் உதவியாள் பிரபா உள்ளே வரவும்

அவரிடம் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு

” மதியத்திற்கு மட்டும் சமைத்து விடுங்கள்

அக்கா……

 இரவு எப்படியும் லேட் ஆகிவிடும்!!!!

 வெளியில் பார்த்துக் கொள்கிறோம்”

 என்றதோடு என்ன சமைக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தாள்…..

பிறகு   கணவனை தேடி மீண்டும் தன் மாடி அறைக்கு சென்றவள்  பிரணாவ் அவனது லேப்டாப்பில் ஏதோ முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது போல் தோன்ற

 அவனருகில் சமத்தாய் விளையாட்டு பொம்மை கார்களை உருட்டி கொண்டிருந்த சோட்டுவை தூக்கிக் கொண்டு கீழே சென்று விட்டாள்……

 மதிய உணவிற்கு பின் வியான் அவன் அம்மாவை மைத்ரேயியின் வீட்டிற்கு அழைத்து வந்துவிட அவர்களிடம் சற்று

நேரம் செலவழித்தவள்

 மகனையும் அலுவலகத்திற்குச் தூக்கிச் செல்ல

சோட்டுவை ஏற்கனவே நன்கு பார்த்துக் கொண்டவர் என்பதால்

“சோட்டுவை நான் பார்த்துக்கொள்கிறேன் மைத்தி…..  நீங்கள் உங்கள் வேலையை பார்த்துவிட்டு வாருங்கள்!!!!!”  என்று தடுத்தார் வியானின் அன்னை.

 மைத்ரேயியின் மை தீட்டிய விழிகள் இயல்பாய் அவள் கணவனை  ஏறிட்டு அனுமதி கேட்க

பிரணாவ் அதற்கு “அழுகாமல் இருந்து கொள்வானா????????”  சந்தேகமாய் வினவினான் ….

”  பிறந்ததிலிருந்து பார்த்து கொண்டவரை

 இப்போது சில மாதம் பிரிந்து இருப்பதால் ஒரேடியாக சோட்டு மறந்து போய்  விடுவானா என்ன???????”  என்று எகிறினான் வியான்……..

 எங்கு விட்டால் நண்பன்

 கணவனின் சட்டையை பிடித்து விடுவானோ????????? என்று அஞ்சிய மைத்ரேயி

“அதெல்லாம் இருந்து கொள்வான்…… நான் புறப்படலாம் பிரணாவ் !!!!”

என்று அவ்வளவு உறுதியாக கூறியபோது

 தன் மாமியார்களிடம் சொல் பேச்சு கேட்டு சாதுவாக இருந்து கொள்ளும் மைந்தனை பற்றி முழுதாக தெரிந்திருக்கவில்லை….

 மைத்ரேயிக்கு அவள் தந்தை இருக்கும்போதும் அவர்கள்

அலுவலகத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிட்டியதும் இல்லை…….

 அவள் அதற்கு இஷ்டப்பட்டதும் இல்லை!!!!!!

 மகளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்த தமிழ்வாணன் மைத்ரேயியை இந்தியாவின் மிகச்சிறந்த இதய வல்லுனர் ஆக்க நினைத்தவர்

 பாதியிலேயே அவளை விட்டுச் செல்லவும் அவரின் நிர்வாகம் அனைத்தும் இவளது பொறுப்பின் கீழ் அமைந்து போனது!!!!!

 நண்பன் வியானின் உதவியால் மைத்ரேயி இந்நாள் வரை அலுவல் விஷயத்தில் முழுதாக தன்னை ஈடு படுத்தாமல் இருந்த போதும்

ரேயி குரூப்ஸ்-இன் தலைமை நிர்வாகம் ஒரு இடத்திலும் உதிர அலுவலங்கள் மும்பை சிட்டியின் மற்ற ஏழு இடங்களிலும் வெற்றிகரமாக இயங்கி வரும்  நிலையில்

அவள் மும்பையில் இருந்த வரையில்

முதலாளி என்பதற்காக

அங்கெல்லாம்  மைத்ரேயியை வியான் அழைத்துச் சென்றது உண்டு…..

 நண்பன் பின்னோடு செல்பவள் அவன் காட்டும் இடங்களில் கையெழுத்து இட்டும் அவன் விளக்கும் தொழில் கூறுகளை கர்ம சிரத்தையாய் கேட்டும் கொள்வாள்…….

ஆனால் தந்தை ஆரம்பித்து பேணி காத்த தொழில் சாம்ராஜ்யம் என்பதற்காக செய்த போதும் எப்பொழுதும் அதனுள் அவள் மனம்  லயித்ததில்லை…….

 எந்த வித கஷ்டமும் இன்றி தமிழ்வாணனின் அறிவுரை படியும் அவர் ஆசீர்வாதத்தின் கீழும் பல கோடி லாபம் பார்க்கும் விதமாக வியான் திறம்பட நடத்தும் தொழிலில்

இப்போது சில மாதங்களாக ஏழு லட்சங்கள் ஆகவும் எட்டு லட்சங்கள் ஆகவும் லாபக் கணக்கில் இருந்து மறைந்திருந்த தொகை

 போன மாதம் மட்டும் 78 லட்சங்கள் மொத்தமாக காணாமல் போயிருந்தது!!!!!

 வியான் கம்பெனியில் பணிபுரியும் ஒருவரையும் விடாது அனைவரது கணக்கீட்டையும் சரி பார்த்து குழம்பி போய் நின்றது தான் மிச்சம்……

 இது இப்படியே தொடர்ந்தால் தோழிக்கும் அவள் தந்தை தன்மேல் கொண்ட

நம்பிக்கைக்கும் அர்த்தமே இல்லை!!!!!!

 என்று தான் வியான் மைத்ரேயிக்கு தகவல் கொடுத்து உடனே வரச்சொல்லி இருந்ததும்…….

 அப்படிப்பட்டவன் இன்று ” நான் முன்னால் போகிறேன்….. நீ வா மைத்தி!!!!!! ” என்று தோழியிடம் கூறி விட்டு

தனது ஹோண்டா சிட்டி காரை நோக்கி செல்ல

“வியானை ஃபாலோ பண்ணி நாமும் போய்விடலாம் பிரணாவ்!!!!!!”  என்றிருந்தாள் மைத்ரேயி தன் கணவனிடம்…….

 “ஏன்டி பஜாரி?????? இல்லாவிட்டால் உனக்கு அட்ரஸ் தெரியாதாக்கும்!!!!!! “

 பிரணாவ் கேளிக்கு சொன்ன போதும்

 அதுவே நிஜம் என்பதால் அமைதி காத்தாள் மைத்ரேயி……

 மனைவியின் முகத்தை பார்த்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் இன்னும் பகானி காரை ஸ்டார்ட் பண்ணாததை எண்ணி ‘இன்று வந்த காரியம் நிறைவேறியது போல் தான்!!!!!!!!’ மனதுள் நொந்து கொண்டவள்

“நான் வியான் கூடவே போகிறேன்……..

 நீ என்னமோ பண்ணு!!! எங்கேயோ போ!!!!”

 என்று கார் கதவை திறக்க முயல

 அதற்காகவே காத்திருந்தவன் போல்

” இது பகானி  கார்டி பஜாரி …….

உன் இஷ்டத்திற்கு எல்லாம் திறக்க முடியாது!!!!!!!!!!”

 அன்று முதன்முதலில் அவன் காரில்

அவளை  ஏற்றிய போது கூறிய அதே வசனத்தை மீண்டும் கூறவும் சத்தமாக சிரித்து விட்டாள் மைத்ரேயி …….

” அன்றும் உன்னுள் இப்படித்தானேடி பஜாரி சிரித்திருப்பாய்??????

சரியான போக்கிரி!!!!

 உலகில் தயாரிக்கப்படும் அத்தனை விலை உயர்ந்த கார்களையும் வாங்கி

மலைபோல் ஷெட்டில் குவித்து வைத்திருப்பவளிடம்

 ஒரு கேனையன் மாதிரி டயலாக் அடித்திருக்கிறேனே!!!!!!!!!” என்று அவன் முந்நெற்றியில் அடித்து கொள்ள

அதில் அவள் மேலும் சிரிக்க

“சிரிக்காதடி பஜாரி !!!!!

உங்கப்பா பிசினஸ் என்று நீ சொன்ன

போது வருடத்திற்கு சில லட்சங்களை புரட்டும் நிறுவனம் போலும்…..

அதற்கு இந்த பில்டப் கொடுக்கிறாள்!!!!!

 என்று நேற்று நினைத்திருந்தேன்……

 ஆனால் இங்கு மாத வருமானமே பல கோடிகள் !!!!!!

நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை இந்த ட்விஸ்ட்டை…….

 அங்கு சென்னையில் நம் ஃபேக்ட்டரியை விட  ஏழு எட்டு மடங்கு அதிகப் பிராஃபிடில்  புரள கூடிய நிர்வாகம் இது!!!!!

 உனக்கு தெரியுமா????? போன வருடம் மாமா ஸ்டார்ட் பண்ணி இருக்கும் சோலார் பேனல் மேனுஃபாக்சரிங் தான் வருங்கால இந்திய பொருளாதாரத்தையே அதிகரிக்க வாய்ப்பிருக்கும் நம்பர் ஒன் பிசினஸ்!!!!!

 அதில் வியானின் பங்கீடோ மைண்ட் பிளோயிங்!!!!!

மாமா  நினைத்ததை அப்படியே செயலாற்றுகிறான்……

 இதில் இப்போது லாஸ் என்றால் கண்டிப்பாக கம்பெனியில் யாரோ ஒருவன் பண்ணுகிற ஃபிராடு தனமாகதான் இருக்கும் …….

இதை ஒருவன் மட்டும் செய்கிறானா அல்லது ஒரு கூட்டமே செய்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும் …….

அலுவல் கணினியில் போய் உட்கார்ந்தால் அதைக் கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை தான்……

 ஆனால்……………”

” ஆனால்…” என்று நிறுத்தியவனையே

 மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்

மைத்ரேயி ……..

கூடவே அவள் ரோஜா இதழ்களிலும் அவனை கட்டி இழுக்கும் விதமாக

அவனது கூற்றை கேட்டு அதிசயப்பட்டதில்

 திறந்து நிற்க

அதனை கண்டவன் தன்னை கட்டுப்படுத்த முடியாத வண்ணம் தன்னை மீறி ஓங்கிய விரல்களை கொண்டு

 வர்ணஜாலம் தீட்டாமலேயே எடுப்பாக மிளிர்ந்த செந்தூர இதழ்களை வருடிய அந்த நொடியில் மின்சாரம் போல் ஏதோ ஒன்று தன்னை தாக்கியதாக உணர்ந்து தன் கையை உறுவியும் கொண்டான்……

இந்நிலை தொடர்ந்தால் அடுத்தது என்ன செய்திருப்பான் என்பது அவனுக்கே தெரியாத பட்சத்தில்

” கைன்ட்லி ஷட் திஸ் டி பஜாரி!!!!!!!”  என்றபடி  அவள் கரத்தை கொண்டே

அவள் இதழ்களையும்

தன் கரத்தை கொண்டு தன் விழிகளையும் மூடியவனையே

 இமைக்காது பார்த்திருந்தாள் அவனவள்……

 ஆனால் எல்லாம் அரை நிமிடம் தான்!!!!!

 அதற்குள் தன்னை ஒருவாறு மீட்டிருந்தவன்

 “உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்……

 முக்கியமான விஷயம் பேச வரும்போது இப்படி பண்ணினால் !!!!! நான் என்ன செய்வேன்??????

 பேசிக்கலி ஐ அம் எ ஹீரோ……

ஆனால் இந்த ரோஸ்பட்ஸை அதுவும் இந்த பொசிஷனில் பார்த்தால் மட்டும்

‘என்ன ஆனாலும் பரவாயில்லை வில்லன்

ஆகிவிடுடா பிரணாவ்!!!!!! ‘

இப்படி தாறுமாறாக ஏற்றி விடுகிறது ‘இது!!!!!!!!!!!’ “

 என்று தன் இதயத்தைத் தொட்டு காண்பித்தான்……

 பின் ” இங்கு ஒன்று இருப்பதால் தான் இன்னும் ஹீரோவாகவே மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருக்கிறேனாக்கும்!!!!!!!”  இப்போது தன் மூளையை சுட்டிக்காட்டியவன்…..

“ஆனால் அது எப்போது மக்கர் பண்ணி

 மாட்ட போகிறேனோ !! தெரியவில்லை????

 எதற்கும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள் !!!!!!!”

வசனம் பேசியவனக்கு தெரியாது

அன்று இரவே அந்த அறிவு எக்கு தப்பாக யோசித்து வைக்க அவன் அதற்கு நேர்

எதிராக என்ன செய்ய போகிறான் என்பதும்……

  கணவன் கூறியபடி தள்ளி அமர்ந்தவளின் மனதில் இரு பெரு வினா விடையின்றி சுழன்று கொண்டிருந்தது…..

 என்ன முயன்றும் தடுமாறி தொலைக்கும் இவனது இந்த பேச்சுகள் எதற்காக ?????????????

கண்டிப்பாக இன்னும் விதுல்யாவை இவனால் மறந்திருக்க முடியாது!!!!!

 ஒருவேளை திருமணம் எனும் பந்தத்தில் தன்னோடு வாழ தயாராகிய போதும் காதலின்றி எப்படி நடைமுறையில் இது சாத்தியமாகும்????????????

 எப்போதும் அவனது பேச்சுகளில் தன்னையே முற்றிலும் மறந்து நிற்பவள்

இன்று அவற்றிற்கான காரணத்தை யோசித்து புலம்பித் தவித்தாள்……..

அவள் சிந்தை அடுத்து என்ன செய்வது????? எப்படி எதிர்கொள்வது?????

இது சரியா???? இல்லை தவறா?????

இப்படி பல கேள்விகளை சுமந்து வர

 அடுத்த அரை மணி நேரத்தில் ரேயி இண்டஸ்ட்ரீஸிற்குள் பகானியை நிறுத்திய பிரணாவ்

தனக்குப் பின்னால் வந்த வியான் காரை கண்டு

“தட்ஸ்  கூல்ல்!!!!!!”  என்று தன் முன் இருந்த ஸ்டியர்ரிங் வீல்-லை ஒரு தட்டு தட்டினான்……..

 ஆனால் தன் காரிலிருந்து சற்றே கோபமாக இறங்கி வந்த வியான்

” உன் மனதில் என்ன பெரிய ஹீரோ என்ற நினைப்பா?????????

 ரேஸ் கார் தோற்றுவிடும்!!!!!!

 உன் பக்கத்தில் ஒருத்தி உன்னை நம்பி தான் உட்கார்ந்திருக்கிறாள் என்று எப்போதுதான் உன் புத்திக்கு உரைக்கும்??????????”  என்று கத்த ஆரம்பிக்க

 அதில் நடப்புலகை எட்டிய மைத்ரேயி

” என்ன வியான்????? ஏன் இவ்வளவு கோபம் ??????” என்றாள் அங்கு நடந்தேறிய எந்த விஷயத்தையும் தெரியாமல் குழப்பமாகவே …….

” அது சார் காரை நாம் ஓவர்டேக் பண்ணி விட்டோம் அல்லவா????

 அந்தக் கோபம் தான்!!!!

 நீ இறங்கி மைத்தி…..  நாம் போகலாம்!!!!!”  என்றவனை முறைத்த வியான் வேறு புறம் திரும்பி கொண்டான்……..

பின் மைத்ரேயியை மேனேஜிங் டைரக்டர் அறைக்குள் அழைத்துச் சென்ற வியான் அங்கிருந்த கம்ப்யூட்டரை இயக்கி காண்பித்து

” இந்த மாத வருமானத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடிகள்!!!!

 அப்படியிருக்க இந்த 78 லட்சம் ஒரு சாதாரண அமௌன்ட் ஆக இருக்காது என்று எவனோ ஒருத்தன் கையாண்டிருக்கிறான்….. அது எப்படி????

 யார் ????என்று தான் தெரியவில்லை மைத்தி !!!!!”

ஒருவித இயலாமையுடன் கூற

“சாரை கொஞ்சம் நகர சொல்லு மைத்தி!!!!!” என்றிருந்தான் பிரணாவ் தன் மனைவியிடம் …..

ஆனால் தன் இருக்கையிலிருந்து எழ மனமில்லாத  வியான் மீண்டும் பிரணாவை ஒருமுறை முறைக்க

அதில் கோபம் ஆன மைத்ரேயி

“வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் வியான்….. ஆனால்  இது ஆஃபீஸ்…..

 எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கட்டாயம் என் ஹஸ்பண்ட்-ற்கும்  நீ கொடுத்துதான் தீர வேண்டும்!!!!!!”

 சற்று கடுமையாகவே வினவினாள்….

 அவளும் எத்தனை முறை தான் விளக்குவாள் ????

பிரணாவ நல்லவன்….. தன்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறான் என்று!!!!

 எப்போது பார்த்தாலும் கஞ்சி போட்ட சட்டையாய் விரைத்து  கொண்டு திரிந்தால்??????????

 அதுதான் அவளையுமறியாமல் அவ்வார்த்தைகள் சிந்திவிட்டன……

Advertisement