Advertisement

பிளைட்டில் ஏறியதும் கச்சிதமாய் மைத்ரேயி சீட் பெல்ட் போட்ட விதத்திலேயே  பிரணாவிற்கு தெரிந்தது மனைவிக்கும் விமான பயணத்திற்குமான பிணைப்பை பற்றி…..

  ஆனால் சோட்டுவிற்கு ரொம்ப குஷியா ஆகிவிட்டது என்பதை அவன் கைதட்டி குதித்து உணர்த்தினான்…. மேலும் தூக்கி வைத்திருந்த தந்தைக்கு நிமிடத்திற்கு ஒரு முறை ஹவ்வா கொடுத்தபடியே  பயணித்து வந்தான்…..

 மகனின் உற்சாகம் தன்னையும் தொற்றி கொள்ள   ” இது அநியாயம்டா சோட்டு…. மும்பை பிளான் என்னுடையது …. ஆனால் முத்தம் உன் அப்பாவிற்கா????” மைத்ரேயி

முறைத்தபடி வினவ

” ஏன்டி பஜாரி என் பையனை பார்த்து திருந்தவும் மாட்டாய்…. இதில் திட்ட வேறு செய்கிறாயா????

சோட்டு உன் ஆத்தாவிடம் டூ விடுடா!!!” என்ற தந்தையின் சொல்லை உடனே கடைபிடித்திருந்தான் மைந்தன்…..

“டுடுடுடுடுடு” மகன் வாயிலேயே விமானத்தை செலுத்தவும்

கடுப்பானவள் ” போடா பேட் பாய் ” என்று திரும்பி கொண்டாள் மைத்ரேயி…. அதில் உதடு பிரியா சிரிப்பொன்றை உதிர்த்த பிரணாவ்

” என் பையன் விட்ட ‘டூ’வை வாபஸ் வாங்க வைக்கிறேன்….

எங்கே அவன் கொடுத்த ‘ஹவ்வா’வில் ஒன்றை இங்கு கொடு ” என்று

அவன் கன்னத்தை மனைவியின் புறம்

காட்ட

உடனே செக்கச்சிவந்த வானை அவள் கன்னங்களில் பூசி கொண்டவள்

அதனை அவள் கள்வன் பார்த்து விடாது மறைக்க கோபமூட்டைக்குள் தன்னை திணித்து

“போங்கடா பேட் பாய்ஸ் ” என்றாள் அவள் மகனின் தந்தைக்கும் சேர்த்து…..

இம்முறை வாய்விட்டே சிரித்தவன்

” அதற்கு மட்டும் சான்ஸே இல்லைடி பஜாரி….  பேட் பாயோ குட் பாயோ !!!!!

உன் பாய்ஸ் நாங்கள்….  எங்கேயும் போக மாட்டோம்…. உன்னையும் போக விட மாட்டோம்!!! அப்படி தானேடா சோட்டு?????”

மகனிடம் கேட்ட கேள்விக்கு ஆமோதிப்பாய் மீண்டும் தன் ‘ஹவ்வா’வை பரிசளித்தான் மகன்…..

அப்பேர்பட்ட அப்பா மகன் உறவில் மெய்சிலிர்க்க……

 அவளை மறந்து பார்த்திருந்த

கண்பார்வை தான் பட்டிருக்குமோ???????????

நடக்கபோவதை பற்றி எந்த அறிகுறியும் தெரியாதவள்

காலையில் யுகனிற்கும் அவளுக்கும்  நடந்தேறிய சம்பாஷணை நினைவுகூர அதனை கணவனிடம் பகிர்ந்து கொண்டாள்…..

” யுகிஅண்ணா

 ‘இப்போது நீ மும்பைக்கு போயே தீர வேண்டுமா???????'”

என்று பதற்றப்பட்டார்…..

பின் அவரே

 ‘சரி பிரணாவ் பார்த்து கொள்வான்’

என்று சமாதானமும் ஆகி

 ‘ பத்திரமாக போய்விட்டு வா’ என்றார்……

இந்த சமயத்தில் என் அப்பாவின் பிஸினஸ் என்று சில்லி ரீஸன் சொல்லி சோட்டுவையும் அழைத்து வந்தது தப்பா பிரணாவ்??????????”

யுகிமாம்ஸ் பயப்படுகிறார் என்றால் கண்டிப்பாக ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ????

ஒருகணம் யோசித்தவனுக்கு

மனைவியின் கலங்கிய நிலை

 ” உன் அத்தான் தான் கூட வருகிறேன் அல்லவா???? பிறகென்னடி பஜாரி??????”

 தைரியமூட்ட உந்தியது……..

அவ்வார்த்தைகள் அவளை நிமிர செய்ய

 இனி என்ன நடந்தாலும் அதற்கு வளைந்து கொடுக்கும் வில் அம்பாக மனதை தேற்றி தடைகளை எதிர்த்து பாயவும்  வழிவகுத்தது……..

 மும்பை வந்து இறங்கியதும் ” நீ போய் லக்கேஜ் எடுத்து வா பிரணாவ்……

 நாங்கள் அங்கு வெயிட் பண்ணுகிறோம்!!!!”  என்ற கூறி மைத்ரேயி நகர்ந்து கொள்ள

பிரணாவ் அவர்களது  இரண்டு ட்ராவல்

பேக்-களை பெற்றுக் கொண்டு வரும் போது அங்கு வியான் வந்திருந்தான்…..

” எப்படி இருக்கிறாய் மைத்தி??????”

 என்று கேட்ட வியான் அவள் மகனிடம்

” ஹே சோட்டுப் பையா!!!!! என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயா??????”  என்றபடி அவனை வாங்க முற்பட

 சோட்டுவோ தொலைவில் வந்த பிரணாவை பார்த்துவிட்டு

“அப்பா!!!!!!!!!!!!!!!”  என்றபடி தந்தையிடம்  தாவி இருந்தான் .

 ஆனால் வியானிற்கு பிரணாவின் மேல் அளவு கடந்த கோபம் என்பது அவன் பார்த்த அனல் பார்வையிலேயே தெரிந்தது……

 இது எதையும் தன் கவனத்தில் பதித்து கொள்ளாது  தன் எதிரில் வந்த ஒருவனையே பார்த்து நின்ற மைத்ரேயி

அவன் தன்னருகில் வரவும்

“ஸ்ரீதீப் எப்படி இருக்கிறாய்????????”

 என்று கேட்க

புதியவனோ இவள் ஒரு ஆள் என்பதைக் கூட பொருட்படுத்தாமல் அவளை கடந்து சென்றிருந்தான்…….

 அதை கண்டும் காணாதுமாய் மைத்ரேயியை நெருங்கிய வியான்

“சரி வாங்க போகலாம் !!!!!” என்று அழைத்ததோடு

அங்கு பார்க்கிங்கில் நின்ற ஊதா நிற

பகானி ஜோன்டாவின் கதவை திறந்து ஏற சொல்லவும் பிரணாவிற்கு ஒரே குஷியாகி விட்டது…..

 பிரணாவ் ஒரு கார் பிரியன் என்று சொல்வதைவிட கார் வெறியன் என்று சொல்லலாம் !!!!!

வருடத்திற்கு ஒரு கார் தான் வைத்திருப்பான்….

 எப்போது அடுத்த மாடலில் தன் பார்வை திரும்புகிறதோ அப்போதே அதை மாற்றியும் விடுவான்…..

 இதில் தந்தை கதிரேசன் மற்றும் சித்தப்பா ரகுராமின் கார்களை தேர்ந்தெடுப்பதும் அவன் தான்……

 அதுமட்டுமில்லாமல் ‘வேண்டாம்’ என்று அவ்வளவு மறுத்தும் கேட்காமல் அம்மாவற்கும் யசோம்மாவிற்கும் எங்காவது வெளியில் சென்று வர வீட்டில் ஒரு காரை வாங்கி நிறுத்தி இருந்தான்…..

 வீட்டைச் சுற்றியிருக்கும் எழிலான பூந்தோட்டமே இவனது கார் மோகத்தால் பின்பக்கம் அரை பகுதி கார்ஷெட் ஆக மாற்றப்பட்டது……

 சில சமயம் கதிரேசனுக்கு பிரணாவின் மீது அவன் நடவடிக்கைகளால் கோபம் வரும் என்றாலும் இந்நாள் வரை இந்த கார் விஷயத்தில் மட்டும் மகனை அவர் ஏதும் சொன்னதில்லை…..

 அப்படிப்பட்டவன் முதன்முதலில் இந்தியா வந்து இறங்கிய ப்ளூ கலர் பகானி ஜோன்டா காரை வாங்க நினைத்திருக்க அதை தன் தந்தையிடம் கூறி விட்டு  வாங்க முற்படுவதற்குள்

 ஏதோ ஒரு மும்பை காரன் அக்காரை வாங்கிவிட்டதாக தகவல் மட்டும் கிடைத்தது…….. உடனே அடுத்த காரை புக் பண்ணியவன் அந்த விசயத்தை

அப்படியே விட்டுட்டான்……

 ஆனால் இப்போது அதே கார் தன் கண் முன் நிற்கவும் பிரணாவின் ஆச்சரியத்திற்கு வரையறை இல்லாமல் போனது……..

 கூடவே தன் ஒத்த டேஸ்ட்-உடைய

 இந்த ஊதா நிற பகானிக்கு சொந்தக்காரனையும் பிரணாவிற்கு ரொம்ப பிடித்துப் போனது…..

பயணத்தின் போது “என்ன வேலை பார்க்கிறீர்கள்??????”  வியானிடம் பிரணாவ் கேட்டதற்கு மைத்ரேயி முந்திக்கொண்டு பதிலளித்தாள்…..

” வியான் அப்பாவின் பிசினஸை பார்க்கிறான்!!!!!”

“ஓ!!! என்ன பிசினஸ்?????”

 இதற்கும் “இம்போர்ட்ஸ் அண்ட்

எக்ஸ்போர்ட்ஸ்”  மைத்ரேயியிடம் இருந்து தான் பதில் வந்தது…….

 “என்னமோ உங்க அப்பா பிசினஸை  கேட்டது போல் பதில் சொல்லுகிறாய் பஜா……. “

 தன் முன் ஒருவன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்பதால் அவளை அழைக்கும் முறையை நிறுத்தி

“மைத்தி!!!!!!!”

என்று முடித்தான் பிரணாவ்…..

 இம்முறை பிரணாவ் அவன் மனைவியிடம் கேட்ட கேள்விக்கு வியான் பதிலளித்திருந்தான்….

 “மைத்தியின் அப்பா பிசினஸை நான் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் அவள் பதில் அளிக்கிறாள்!!!!!!!”  என்று அவன் கூறும் போதே அவர்கள் பயணித்த

பகானி  ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்று நின்றது…..

 காரை விட்டு இறங்கியவனின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது

 கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மிகப்பெரிய ஷெட்-டும் அதில் வரிசையாக அடுக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய மாடல் கார்களும் தான்!!!!!!

 அப்படி வியந்து நின்றவனின் கையிலிருந்து இறங்கிய சோட்டு  அவன் பாட்டிற்கு வீட்டு வாசற்படி நோக்கி தவழ்ந்து செல்லவும்

” நம்ம வீடு உனக்கு ஞாபகம் இருக்காடா சோட்டு?????????”  என்று கேட்டபடி மகனை பின்தொடர்ந்தாள் மைத்ரேயி…..

இன்னும் கார்களை விட்டு கண்களை அகற்றாத வண்ணம் நின்ற பிரணாவின் அருகில் வந்த வியான் பகானியை சுட்டி

காண்பித்து

” சிர்ஃப் யே வாலா காடி நை…… பாக்கி வஹான் காதி ஹுய் சபி காடியோன் கி மால்தின் மைத்தி ஹை!!!!!!!”

(” இந்த கார் மட்டுமில்லை…. அங்கு நிற்கும் எல்லா கார்களுக்கும் சொந்தக்காரி மைத்தி மட்டும் தான்!!!!!!!” )

ஹிந்தியில் மொழிந்தவனின் கூற்றை சரியாக கணித்த பிரணாவிற்கு அவன் மேல் துளி கோபம் உண்டாகவில்லை!!!!! மாறாக……

“மைத்தியின்  சொத்துகளுக்காக தானே அவளை கல்யாணம் பண்ணி கொண்டாய்…….

 பிஸினஸில் இருக்கும் கருப்பு ஆடு ஒன்றைக் கண்டுபிடிக்க நரியை இழுத்து  வந்த கதையாய் மைத்தி உன்னையும் சேர்த்து கூட்டி வந்திருக்கிறாள்……

ஆனால் நான் விடமாட்டேன்……

 மைத்தி ப்ராப்பர்ட்டீஸ் எல்லாம் அவளுக்கும் அவள் மகன் சோட்டுவிற்கும் மட்டும் தான் சொந்தம்!!!!!

எப்படி நீ என்னை மீறி அவர்களின் சொத்துகளில் கை வைக்கிறாய் என்பதை பார்த்து விடுகிறேன்!!!!!!”

இம்முறை தாய்மொழியிலேயே கனலை கக்கியவன் மீது புதிராக பிரணாவினுள் ஒரு நன்மதிப்பு தானாகவே எழுந்தது…..

 அப்போது  ஆடவர்கள் அருகில் வந்த மைத்ரேயி ” என்ன பிரணாவ் இங்கேயே நின்று விட்டாய்???????

 வியான் நீயும் உள்ளே வா !!!!!!” என்று கூறி அவர்களை  அழைத்துச் சென்றாள்…

” வீட்டை நன்றாக மெயின்டைன் பண்ணி

இருக்கிறாய் வியான்!!!!!”  நண்பனிடம் சர்டிஃபிகேட் வழங்கியவளிடம் வேறு பேசினான் வியான்….

” பிரபா அக்காவை  சமைப்பதற்கு   வர சொல்லியிருக்கிறேன் ….  சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்கள்!!!!  மாலை ஆஃபிஸ் போகலாம் …..

அப்புறம் அம்மா உன்னையும் சோட்டுவையும் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் …..

நான் தான் வந்தவுடனே தொந்தரவு கொடுக்க வேண்டாமே!!! என்று அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்…..

 மாலை வரும்போது அம்மாவை கூட்டி வரவா?????? ” என்றவனிடம்

“சரி !!!!!!!” என்ற மைத்ரேயி

“நான் வருவதைப் பற்றி ஆஃபீஸில் யாருக்கும் எந்த இன்ஃபர்மேஷனும் கொடுக்க வேண்டாம்!!!!!”  என்றாள்…..

ஒப்புதலாக தலையாட்டிய வியான்

” இந்தா பிடி உன் கார் கீ!!!!!!”  என்றபடி

 அவள் கைக்கு சாவியை தூக்கி போட்டு

வாசல் நோக்கி புறப்பட

ஏதோ தோன்றியவனாய் அவளருகில் மீண்டும் வந்து

“டேக் கேர் மைத்தி !!!!!!” என்று கூறி விட்டு சென்றான் …….

 வியான் அப்படித் தான்…..

 சிறுவயதிலிருந்தே மைத்ரேயிக்கு நல்ல தோழன்!!!!

அவளது பாதுகாப்பில் சற்று கூடுதலான அக்கறையையும் அள்ளி தெளிப்பவன்….

 ஆகவே தான் யுகன்

“அந்த அயோக்கியனிடமிருந்து சட்டப்படி மைத்ரேயி தப்பிக்க வேண்டும் என்றால் உடனடியாக அவள் ஒரு திருமணத்தை செய்து கொள்ள வேண்டும்”

 என்று கூறியதற்கு

மைத்ரேயியின் மீது துளி காதல் இல்லாத போதும்

அவள் மீது தான் கொண்ட கோடிக்கணக்கான அரவணைப்பின் காரணமாக மட்டுமே !!!!

அவளை திருமணம் செய்ய முன் வந்தான் வியான்….

யுகனிற்கும் வியானை பற்றிய நல்லதொரு அபிப்ராயம் ஏற்பட்டிருந்ததால் தான் அவ்வளவு விரைவாக அந்த திருமணத்தை நடத்தி விட முயன்றான்……

 சிறுவயதிலிருந்தே பழக்கம் என்றாலும்

வியான் மைத்ரேயியின் ஸ்டேட்டஸை கண்டு  விலகி நின்றதும் இல்லை அதேசமயம் எதிலும் உரிமை எடுத்துக் கொண்டதும் இல்லை!!!!!

 ‘ரேயி குரூப்ஸ் ஆஃப் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ்’-ன் எக்ஸிக்யூடிவ் மேனேஜிங் டைரக்டர் பதவி வகித்த போதும் வியான் அவன் சம்பள பணத்தை தவிர்த்து அனாவசியமாக ஒரு ரூபாயைக் கூட  அங்கு தொட்டது இல்லை…… நேர்மையானவன்!!!!!

 இன்றும் தோழிக்கு பிடிக்குமே என்று தான் அவளுடைய பகானி காரை விமான நிலையத்திற்கு எடுத்து வந்தானே தவிர

 எப்போதும் வியான் அவன் வைத்திருக்கும் ஹோண்டா சிட்டியில் தான் மும்பை சிட்டியை உலா வருவதும்!!!!!

 பிரணாவ் மீது தனிப்பட்ட வெறுப்பு என்று

வியானிற்கு எதுவும் இல்லை தான்…..

 ஆனால் திருமணமான புதிதில் மைத்ரேயி வியானை  அழைத்து  அவளது லேப்டாப் மற்றும் சில முக்கியமான பொருள்களை உடனே அனுப்புமாறு சொல்லவும் ….

“ஏதாவது பிரச்சனையா???????” என்று பதறினான் ஒரு நண்பனாக…..

 அவள் “இல்லை!!!!!” என்று சொன்னபோதும் அவள் குரலில் இழையோடிய சோகத்தை கண்டு கொண்டவனுக்கு பிரணாவின் மீது புதியதொரு வன்மம் தோன்றியது…….

 அதுவும் ஒருநாள் மைத்ரேயி பஸ்ஸில் பயணம் செய்யும் போது வியான் அவளை அழைத்திருக்க

சரியாக அச்சமயம் கண்டக்டர் “டிக்கெட் டிக்கெட்!!!” என்று கேட்டு வைக்க

கொதித்து தான் போனான் வியான்…..

 பிறந்ததிலிருந்து பஸ்ஸில் ஏறி பழக்கம் இல்லாதவள் இன்று கைக்குழந்தையோடு இப்படி கஷ்டப்படுவதை பொறுக்க மாட்டாமல்

“நான் இப்போது அங்கு வருகிறேன்!!!!!

 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்???????

 தாலிகட்டி உன்னை கொடுமைப் படுத்திவிட்டால் உன் சொத்தை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றி தருவாய் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானா??????

கேட்க ஆள் இல்லை என்ற கொழுப்பா??????”

வியான் பொரிந்து தள்ள

 “நான் சொல்லாமல் சென்னைக்கு நீ வரவே கூடாது !!!!!!!” என்று கண்டிப்பாக மைத்ரேயி கூறியிருந்தாள்……

 ” சரி நான் வரவில்லை ….. ஆனால் நீ நன்றாக இருக்க வேண்டும்……….

 எனக்கு அது தான் வேண்டும்!!!!!!

 நீ அனுபவித்தது எல்லாம் போதும்…..

 இனியும் ஒருத்தன் உனக்கு எதிராக கஷ்டம் கொடுக்க வந்தால் அது யாராக இருந்தாலும் சரி அவனை நான் சும்மா விட மாட்டேன் !!!! ” என்றான் உறுதியாக…..

 இருக்கிற பிரச்சினையில் அன்று நண்பனை சமாதான படுத்துவதற்குள் சோர்ந்து போனது மைத்ரேயிக்கு…….

 ஆனால் எவ்வளவு துன்பம் நேர்ந்த போதும் அவளுடைய ஒரே மருந்து சோட்டு தானே !!!!!!!

அப்பேற்பட்ட மகனை இன்று இமைக்கும் நொடிக்குள் காணாது

“சோட்டு எங்கேடா இருக்கிறாய்????????” என்று கத்தியவள்

தன் கணவனிடம் சென்று

“சோட்டு எங்கே பிரணாவ்????????”  என்றாள்.

 இன்னும் கார் மயக்கத்திலிருந்தே தெளிந்திராதவன் மனைவியின் கேள்வியில்  சுற்றம் உணர்ந்து

அவள் கலக்கத்தை கண்டு

 “நான் பார்க்கவில்லையே !!! எத்தனை முறை சொல்வது ????? நான் இருக்கும் போது ஏன்டி பஜாரி இப்படி பதறுகிறாய்???? ?????

சோட்டு வீட்டினுள் தானே இருப்பான்???? பார்க்கலாம் வா!!!!!” என்றவன்

மகனை தேடலானான்……

 கீழ்த்தளம் முழுவதிலும் தேடியவள்

அவசர அவசரமாக மாடி ஏற

பிரணாவும் அவள் பின்னோடு படிகளில் தாவினான் …..

Advertisement