Advertisement

மைத்ரேயியின் செவிலியர் பெண் அவளை அப்புகை மண்டலத்தில் கண்டுபிடிக்க முடியாது போக

அவசரமாக வெளியே சென்று உதவிக்கு ஆட்களை அழைத்தாள்…….

அதற்குள் புகை அறை முழுவதிலும் பரவி உள்ளே நுழைவோரின் கண்களை திறக்கவிடாது எரிய செய்தது…

” இருக்கீர்களா டாக்டர்   ???? நாங்கள் பேசுவது கேட்குதா????”  மைத்ரேயியை மீட்டு வர சென்ற உதவியாளர் இருவர் கத்தியது அவள் செவிகளுக்கு எட்டவே இல்லை…

மாறாக தாலி கட்டியவன் அவன் காதலியிடம் ” தயவுசெய்து என்னை மன்னித்து விடு விது!!!!” கோரிய மன்னிப்பே மறுபடியும் மறுபடியும்

காதுகளில் பேரிரைச்சலோடு மோதி அவளை நிலைகுலைய செய்தது….

கைகளால் துலாவியபடி அங்கு மைத்ரேயி நிற்பதை அடையாளம் கண்டுகொண்ட உதவியாளர் ஒருவர்

“மேடம் முதலில் வெளியில் வாங்க…… இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நின்றாலும் மூர்ச்சை ஆகி விடுவீர்கள் !!!!!!!”

என வலுக்கட்டாயமாக  இழுத்து வெளியே வந்தார்……

அவ்வாறு  வந்ததும் அக்கம் பக்கம் பார்த்து நிதானத்தை அடைந்தவள்  மனதில் தடம்புரண்ட  எண்ணங்களால் அடுத்த நொடியே இவ்விடத்தை விட்டு மட்டுமில்லாது இவ்வூரை விட்டே ஓடி விட துடித்தாள்.

தன் சுயநலத்திற்காக

இன்னொரு பெண்ணின் வாழ்வைப்

பறித்து…..

அதன் மீதா சொகுசு காண முயல்கிறோம்?????

நினைத்து பார்த்தவளுக்கு தன் மீதே அருவருப்பு உணர்வு ஒன்று தோன்ற தன்னையே பலமாக உலுக்கி கொண்டாள்.

முதலில் வீட்டிற்கு சென்று சோட்டுவை தூக்கி கொண்டு மும்பைக்கு சென்று விட வேண்டும்!!!!!!

அங்கு என்ன பிரச்சனை வந்தாலும் சரி……

அந்த அயோக்கியனால் சாகவே நேரினும்

 யாரையும் கூப்பிட கூடாது!!!!!

இனி அனைத்தையும்  தனியே தான்  எதிர்த்து போராட வேண்டும்….. உறுதியாய் தன்னுள் கூறிக்கொண்டவள்

 மருத்துவமனையை  விட்டு அதிவிரைவாக வெளியேறும் சமயத்தில்  அங்கு வாசலில் யசோதா சோட்டுவை

தூக்கியபடி ஒரு காரிலிருந்து இறங்கினார்…..

யசோதாவிற்கு இங்கு மருத்துவமனையில் என்ன வேலை????

ஒருவேளை சோட்டுவிற்கு ஏதேனுமா????

 பதறிய தாயுள்ளம்……

 அவன் சிரித்தபடி அவர் முடியை பிடித்து விளையாடியதை கண்டதும் சமனடைந்தது……..

ஆனால் யசோதாவின் முகம் பெரும் கலக்கத்தில் இருப்பதாக பட

 அடுத்த பக்க கதவை திறந்து  கொண்டு காஞ்சனாவும் இறங்கினார்…….

அவர்கள் தன்னை நோக்கி வராமல் அடுத்த கட்டிடமான பி12 – ற்குள்  நுழைய

 அங்குதான் விதுல்யா  இருப்பாள் என்பது தெரிந்தும் அவர்களைப் பின் தொடர்ந்தாள் மைத்ரேயி !!!

அங்கு இரண்டாவது தளத்தில் அவசர சிகிச்சைக்கான அறையின் முன் யுகன் பதைபதைக்கும் நெஞ்சத்தை முகத்தில் பிரதிபலித்து  நிற்பது தெரிந்தது……

கூட நின்றவர்கள் அவன் பெற்றோர்களாக இருப்பர் என யூகித்த மைத்ரேயி

அவர்களிடம் விரைந்த யசோதா 

” மாப்பிள்ளை…. டாக்டர் என்ன சொன்னார்கள்???????”  என்று கேட்கவும் துணுக்குற்றாள்..

அப்படியென்றால்.. …

உதிஅண்ணிக்கு ஏதேனுமா??????

 அதற்குமேல்……  அவளால் அங்கு நிற்க முடியவில்லை!!!!!!

யுகனிடம் ஓடிச்சென்று ” என்னாச்சு அண்ணா?????? ” என்று  வினவ

ஒரு மணி நேரத்திற்கு முன் நடந்த சம்பவம் யுகனின் மனத் திரையில் உதித்தது…

பிரணாவிடம் போன் பேசிவிட்டு தன் அறைக்கு திரும்பிய யுகன் கண்களில் தென்பட்டது தன் துணிமணிகளை அவசரமாக எடுத்து கொண்டு உதிதா புறப்பட்டது தான்..

“அம்மு நில்லு!!!!  பாலையும் குதிக்கவில்லை?????  எதற்காக  இப்படி ஓடுகிறாய் ?????”

” நான் எங்க வீட்டிற்கு போகிறேன்…..

 நீங்கள் வரவேண்டாம்!!!!

 பெரியப்பா  ஏதாவது சொன்னால் கோபப்படுவீர்கள்……

நான் பார்த்துக்  கொள்கிறேன் யுகி.. “

அவள் பேசியதற்கே சுள்ளென்று கோபம் ஏறிய போதும்  அதை மறைத்து

” சரி போயிட்டு வா…..  இந்த பாலை குடித்துவிட்டு போ….

 பட்டினியாக போகாதே!!!!” என்றான் 

யுகன் சிறு கட்டளையுடன்..

“உங்களுக்கு இப்போது இந்தப் பால் தான் பெரிதாக தெரிகிறதா யுகி???????

  சரி….  கொடுங்கள் !!!” என்று அவன் கையிலிருந்தத டம்ளரை பறித்தவள் மடமடவென்று அண்ணாந்து வாயில் ஊற்றவும் புரை ஏறியது.

” பார்த்து அம்மு!!!!”

” என்ன பண்ணுகிறோம் என்று புரியாமல் எல்லாவற்றையும் தப்புத்தப்பாக செய்து கொண்டிருக்கிறாய்!!!!”  முனுமுனுத்தபடி மனைவியின் தலையை தட்டியவனின் கையை தட்டி விட்டாள் உதிதா.

“ஆமாம் யுகி நான் பண்ணினது எல்லாமே தப்பு தான்…..

 ஒரு  பெண்ணுடைய வாழ்க்கையை அந்த சைக்கோ கிட்ட இருந்து காப்பாற்ற நினைத்தது முதல் தப்பு!!!!

 என் தம்பி அவளுக்கு ஒரு நல்ல

துணையாக இருப்பான் என்று நினைத்தது அடுத்த தப்பு!!!!

 போன மாதம் கிட்டதட்ட ஒரு வாரமாக துப்பாக்கி முனையில் எங்களை சிறை கைதியாக வைத்திருந்தானே அந்த பொறுக்கி ……  அந்த கஷ்டத்திற்கு எல்லாம்  இப்போது விடிவுகாலம் கிடைத்துவிட்டது என்றும்  மைத்தி ஒரு நல்ல வாழ்க்கையில் குடியேறி விட்டாள் என்று நினைத்து நான் என் பாட்டிற்கு இங்கு இருந்ததும் அடுத்த தப்பு!!!!

 இப்போது அவள் எங்கள் வீட்டில் அனுபவிக்கும் கொடுமையை பார்த்தால் அந்த பொறுக்கியே எவ்வளவோ மேல்  போலவே???????

 அவளை திருமணத்திற்கு கோரி துன்புறுத்திய போதும் கூட வேளாவேளைக்கு சாப்பாட்டை மட்டும் சரியான நேரத்திற்கு அனுப்பியிருந்தானே!!!!!!

இதையெல்லாம் நான் எப்படி சரி செய்ய போகிறேன் யுகி????

 நான் என்ன செய்தால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மட்டும்  தெரிந்தால் அதை இப்போதே செய்து தீர்த்து விடுவேனே!!!!!!!” தன்னை மறந்து கத்திக் கூப்பாடு போட்டாள் உதிதா.

” அம்மு ரிலாக்ஸ்!!!! நீ இப்படி கத்துவதால்  எதுவும் சரியாகிவிடாது !!!! அததற்கு கொஞ்சம் டைம் கொடு ……”

“எததற்கு யுகி டைம் கொடுக்க வேண்டும்????

 கைக்குழந்தையோடு ஒரு சின்னப்பெண் அங்கு காரணமே இல்லாமல் துன்பப்படுகிறாளே!!!!!!

 இந்த பாவம் நம்ம குழந்தையை சும்மா விடாது யுகி!!!!!! ஏதாவது செய்தே ஆக வேண்டும்….. அதுவும் இப்போதே….”

என்றபடி எழுந்து தன் கையை உதறி கத்தியதும் மூச்சு திணறல் ஏற்பட்டு

அப்படியே கணவன் மார்பில் மயங்கி சரிந்தாள்.

 ஆனால் இவை அனைத்தையும் மைத்ரேயியிடம் வெளிப்படுத்த விரும்பாத யுகன் ” கொஞ்சம் டென்ஷனாக பேசிக்கொண்டு இருந்தாள்…… அப்படியே மயங்கி விட்டாள்!!!!” என்றான்.

 அன்னையை அங்கு திடீரென பார்த்துவிட்ட சோட்டு யசோதாவிடமிருந்து  தாவ முற்பட “உன் பாட்டியிடமே இரு சோட்டு!!!!!

 வந்துவிடுகிறேன்…….”  என்று கூறியபடி எமர்ஜென்சி வாட்-ற்குள் நுழைந்தாள் மைத்ரேயி  .

 அப்போது அங்கு உதிதாவை  பரிசோதித்த டாக்டர் மதுவிடம் ஏற்கனவே மைத்திரேயி அறிமுகம் ஆகி இருந்ததால்

” இவர்கள் என் அண்ணி …. என்ன

ஆயிற்று டாக்டர்?????”  என்றாள்.

 உரிய மருந்தினை உதிதாவின் நரம்பு வாயிலாக செலுத்திய மது “ஹைப்பர் டென்ஷன் காரணமாக  மயங்கி இருக்கிறார்கள்….

 ரொம்பவும் வீக்காக உள்ளார்கள்…….

 நன்றாக சாப்பிடாமல் இருந்து இருப்பார்கள் போலும்!!!! ” என்றாள்.

” பேபிக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?????

 ஸ்கேன் பார்த்து விட்டீர்களா டாக்டர்?????”

 என்றபடி அருகிலிருந்த மானிடரை மைத்ரேயி பார்க்க

அங்கு குழந்தையின் இதயம் சீராக துடித்ததுடன் அங்கு உற்சாகமாக விளையாடியது சிசு……

அதைக்கண்டு மைத்ரேயியின் மனம் ஆறுதல் அடைந்த போதும் மதுவிடம்

மறுபடியும் வினவினாள்.

” இதனால் பேபிக்கு வேறு ஏதாவது டெஸ்ட் எடுத்துக் கொள்வது பெட்டரா டாக்டர்?????”

 “இப்போதிற்கு பேபிக்கு எந்தவித தொந்தரவும் இல்லை…….

இன்னும்  இரண்டு மணி நேரத்தில் பேஷன்ட் கண் முழித்து விட்டால் நார்மல் வார்டிற்கு மாற்றி விடலாம்!!!!!

 மாலை வரை அப்சர்வேஷனில் இருக்கட்டும்….

 பிறகு கூட்டி செல்லுங்கள் ” என்றாள் மது.

” தேங்க்யூ டாக்டர்!!!!!”  என்று கூறிய மைத்ரேயி

“தட்ஸ் ஓகே டாக்டர் !!!” சிநேகமாய் சிரித்து விட்டு மது அடுத்த பேஷன்டின் ரிப்போர்ட்டை விசாரிக்க செல்ல

 கண்களை திரையிட்டு சோர்ந்து போய்

துவண்டு கிடந்த உதிதாவை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.

 ” என்ன ஆச்சு????”  யுகனும் யசோதாவும் ஒரு சேர வினவ

அதற்குள் உதிதாவின் அப்பா ரகுராமும் பெரியப்பா கதிரேசனும் அங்கு வந்திருந்தனர்….

 “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ….. பேபி நன்றாக இருக்கிறது !!!!! இன்னும் சற்று நேரத்தில் உதிஅண்ணி கண் விழித்து விடுவார்கள் ….” மைத்ரேயி கூறிமுடிப்பதற்குள்ளே

” அப்புறம் ஏன் மா மயக்கம் போட்டாள்???????”  யசோதாவிற்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை.

” அது… “யுகனை ஒரு முறை பார்த்துவிட்டு

 இதுவும் தன்னால் தானோ??????? என்ற குற்ற உணர்வோடு மொழிந்தாள் மைத்ரேயி .

“உதிஅண்ணி ஒழுங்காக சாப்பிடவில்லையாம் !!!!!!”

இந்த ஒரு வாரமாகவே இரு இட்லிகளை அவளை விழுங்க வைப்பதற்குள் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பான்!!!!!

 யுகனிற்கு  அவனின் அம்மு மீது மீண்டும் ஆத்திரம் பெருக அதை பிறர் அறியாவண்ணம் மறைக்க சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.

” எவ்வளவு சொன்னாலும் உதிமா கேட்கவே இல்லையே” தேவகி யசோதாவிடம் வருத்தப்பட

தன் மகளின் மடத் தனத்தை எண்ணி புகைந்தார் யசோதா.

 என்ன பிரச்சனை என்றாலும் வயிற்றில் இருக்கும் பிள்ளையை கவனிக்க வேண்டாமா?????

 எத்தனை ஆண்டுகளின் தவம்!!???

 தன் தசை ஆடிய போதும்

 “எல்லாம் சரியாகிவிடும் சம்மந்தி!!!”  ரகுராம் கார்த்திகேயனிடம் கூற

பேச்சிழந்து நின்றார் கதிரேசன்….

 தன்னால் தானே தன் செல்ல மகளுக்கு இந்த நிலை!!!!! மறுகியவருக்கு

 உதிதாவை இந்நிலையில் கண்டதும் அவரது கோபம் அனைத்தும் ஊசி குத்திய பலூனாய் வற்றிப் போய் இருக்க மகள் கண் விழிக்க காத்திருக்கலானார்.

 அதேசமயம் அவரை சிறு ஆச்சரியம்

தொற்றி கொள்ளவும் தவறவில்லை!!!!

 கதிரேசனை மட்டுமில்லாது அதே ஆச்சரியம் காஞ்சனாவையும் தாக்க  அவர் நிமிர்ந்து தன் கணவரை ஏறிட்டார்…

 யசோதாவிற்கும் ரகுராமிற்கும் மைத்ரேயி டாக்டர் எனும் உண்மை உதிதாவின் மூலம் அறிவிக்கப் பட்டிருந்ததாலும்

தங்கள் புதல்வியின் நிலை தற்போது வேறு எதையும் சிந்திக்க விடாது தள்ளியதாலும்

அவர்களுக்கு வேறு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை போலும்!!!!

 யசோதாவின் தோள் வளைவில் படுத்து அப்படியே தூங்கி இருந்தவனை “கொடுங்க….. நான் தூக்கி கொள்கிறேன்!!!”  என்றபடி வாங்கிக் கொண்டாள் மைத்ரேயி.

அடுத்த கால் மணி நேரத்தில் மதுவின் மூலம் விஷயம் அறிந்த விதுல்யா  முதல்

தளத்திற்கு  உதிதாவை காண விரைந்து வந்திருந்தாள்….

“ஹே விது அந்த மைத்ரேயி டாக்டரை போய் பார்த்தாயா???” மது கேட்டதற்கு விதுல்யா பதில் கூறுமுன்னே

” அவளுடைய அண்ணி எமர்ஜென்சி வார்டில் அட்மிட் ஆகியிருக்கார்கள்!!!! ரொம்பவும் அனிமிக்கா இருக்கிறார்கள்…..” என்றிருந்தாள்….

பிரணாவ் திருமணம் செய்து கொண்டதற்கு உதிதா என்ன செய்வாள்?????

அதுமட்டுமின்றி உதிதாவை இந்நிலையில் விதுல்யாவால் பாராது இருக்கவும் முடியவில்லை….

அங்கு நின்றிருந்த  காஞ்சனாவின் அருகில் சென்று “அத்தை!!!!”  என்று விதுல்யா  கைப்பற்றவும்

ஏனோ அவளை உடனே தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டார் காஞ்சனா.

 வெளிப்படையாக சொல்லாத போதும்

‘ தாய் அறியாத சூதேது ??’  என்பதற்கு ஏற்ப மகனின் மனதை அறிந்து வைத்திருந்தவர்

தன் கணவனிடமும் விதுல்யாவை பற்றி பேசியிருந்தார்.

 உதிதாவிற்கு குழந்தை பிறந்ததும் சம்மந்தி வீட்டிற்கு சென்று பெண் கேட்பதாக கதிரேசனும் வாக்களித்தார்.

 இப்போது விதுல்யாவை காணவும் தாமும் ஏமாந்து போய் அவளையும் ஏமாற்றிவிட்டதாக ஒருவித உணர்வு தோற்றுவிக்க தன்னையறியாமலேயே அவளை அணைத்து இருந்தார்….

 ஆனால் காஞ்சனா ஏன் தன்னை இவ்வாறு அரவணைக்கிறார் என்னும் காரணத்தை தவறாக யூகித்த விதுல்யா

 சற்று தள்ளி அமர்ந்திருந்த யசோதாவிடம்

” யசோத்தை சின்ன அண்ணிக்கு ஒன்றுமில்லை …. பேபி பிறக்கும் வரை ரெஸ்ட்டில் வைத்து பார்த்துக்கொண்டால் போதும்!!!!!”  ஆறுதல்  அளித்தாள்.

 அக்குரலில் வேகமாக  நிமிர்ந்து நோக்கியவளுக்கு அங்கு விதுல்யாவை காணவும்

எங்கு தாமே மயங்கி விடுவோமோ என்ற அச்சம் மேலோங்க

அவளிடம் இருந்து தள்ளி தூர ஓடிவிட நினைத்தாள்  மைத்ரேயி….

அதிலும் அவளை காஞ்சனா கட்டி கொண்டு நின்ற விதம் மனதை பிசைந்த போதும்

உதிதாவை இந்நிலையில் அப்படியே  விட்டு விட்டு செல்லவும் மனம் இடம்

கொடுக்காமல் தடுமாறினாள் …

ஆனால் அவ்விடத்தில் நிற்க முடியாதவள் சற்று தொலைவு ஒதுங்கி போக

அங்கு ஜன்னலின் அருகே சோகமே உருவாய் நின்ற யுகனை கண்டதும் அவனிடம் விரைந்தாள்.

 “பயந்து விட்டீர்களா அண்ணா????

உதிஅண்ணி நன்றாக தான் இருக்கிறார்கள்!!!!”

 ஆறுதல் கூறியவளிடம்

“அவள் நிஜமாகவே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாய் எனில் அது உன் கையில் தான்மா இருக்கிறது!!!!!”

 என்று கூறி விட்டு அவள் முகம் பாராமல் நகர்ந்தவனை கண்டு உறைந்தாள் மைத்ரேயி ……..

மூன்று மணி நேரம் கழித்து  நன்றாக

கசக்கிக் கொண்டு விழித்த இமைகள் இரண்டும் கணவனை தேடி அலைபாய

 ஒரு நர்ஸ் மட்டும் அதனை பார்த்துவிட்டு டாக்டர் மதுவை அழைக்க சென்றார்.

 அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு தனி அறைக்கு உதிதா மாற்றப்பட மொத்த குடும்பமும் அங்கு சூழ்ந்தது!!!!

 முதல் ஆளாய் உள்ளே ஓடிச் சென்ற கதிரேசன் உதிதாவின் கையை பிடித்துக் கொண்டு

“ஏன் நான் என் மகளை எதுவுமே திட்டக் கூடாதா ????? அதற்கு இப்படித் தான் சாப்பிடாமல் என்னை பழி வாங்குவாயா???? “உணர்ச்சி வசப்பட

” பெரியப்பா !!!!!!!” என்றபடி எழுந்து அவரை கட்டிக் கொள்ள எத்தனித்தாள் உதிதா.

 ஆனால் அவரோ “எழுந்திருக்காதே உதிமா  !!!!!

டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க……”  என்று பதற்றத்தோடு கூற

” அதெல்லாம் ஒன்றுமில்லை பெரியப்பா….

 நான் நன்றாகத்தான் இருக்கிறேன்!!!!!”

 என்றவளிடம் மொத்த குடும்பமும்

 ” முதலில் படு என்று சொல்கிறோம் அல்லவா??!!!” வசனத்தைக் கூறி அதட்டினர்…..

 அதில் உடனே படுத்தவள் தன் எதிரில் நின்ற  மாமியாரிடம்

“யுகி எங்கே அத்தை??????”  என்றாள்.

Advertisement