தன் தந்தை கதிரேசனின் மொழிகளில் அவசரமாக எழுந்து வெளியே சென்ற பிரணாவ் சில நிமிடங்களிலேயே அவர் அலுவலகத்தை விட்டு கிளம்புவதை கண்டதும்

“உதிக்கா என்ன செய்தாலும் ‘என் பொண்ணு என் பொண்ணு’ என்று விட்டுக் கொடுக்காமல்  பெருமைப்படக் கூடியவருக்கு இன்று அவள் சித்தப்பாவின் பெண் ஆகிவிட்டாளாமாம்????!!!!!!!!!!”

  முணுமுணுத்தபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன் தான் விட்டு வைத்த வேலையை தொடர்ந்தான் .

மதிய உணவிற்கும் பிரணாவ்  வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை…..

அப்படி சென்றிருந்தால் ஆவது அங்கு

நடப்பதையும் நடக்கப் போவதையும் தெரிந்து இருப்பான்……

 இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பியவன்  தாளிட்டிருந்த தன் அறைக் கதவின் அருகே சிறு மணித்துளிகள் நின்றுவிட்டு தட்ட மனமின்றி உதிதாவின் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 அடுத்த நாள் மட்டுமின்றி தொடர்ந்து வந்த இரு வாரமும்  வீட்டில் ஒருவரிடமும் சரிவர பேசவில்லை பிரணாவ்.

அவன் திருமணம் முடிந்து இரு தினங்களிலேயே அலுவல் தொடர்பாக வெளியூர் சென்றிருந்த ரகுநாதன்  வீடு திரும்பியிருந்தார்.

 அவரிடம் மட்டும் அதுவும் ஒரே ஒரு முறை தன் மனதை வெளிப்படுத்தியிருந்தான் மைந்தன் …..

 ” வீட்டிலேயே உன்னிடம் பேச வேண்டும்

என்று இருந்தேன் பிரணாவ்…… ஆனால் அதற்குள் நீ ஆஃபீஸிற்கு வந்துவிட்டாய்…..” என்று ஆரம்பித்த ரகுநாதன் மகனிடம் நற்கருத்தினை எடுத்துரைக்க முயன்றார்.

 “கண்ணிமைக்கும் நொடிக்குள் வாழ்வையே எதிர்பாராத விதமாய் சுழற்றி போட்டிருக்கிறது சந்தர்ப்ப சூழ்நிலை ……

 அப்படி எதிர்பாராதவிதமாக நடந்ததை

 எதிர்பார்த்ததற்கும் மேலாக மாற்றிக் கொள்ளும் தன்மை

நம் அணுகுமுறையிலும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்திலும்  தான் பிரணாவ் இருக்கிறது………

ஸ்விட்ச் போட்டது போல் உடனே வெளிச்சம் பரவி எதுவும் சரியாகிவிடாத போதும்

சின்ன சின்ன அகல் விளக்குகளை ஏற்றினாலே நல்ல மாற்றம் ஏற்படும்…….

 ஆனால் அதற்கு நீ தான் முதல் படி எடுத்து வைக்க வேண்டும் பிரணாவ்…..

 நான் சொல்வது புரிகிறதா ??????”

” சித்தப்பா என்னிடம் நீங்கள் பேசுவதற்கு பதில் அப்பாவிடம் சென்று விளக்கிக் கூறுங்கள்……

 ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை……….’ என்று நானே விளக்கு பற்ற வைக்கிறேன் ….. அமோகமாக கொண்டாடலாம் !!!!!!” சிறு அலுப்பு தன்மையோடு கூறினான் பிரணாவ்….

” அப்போது நீ தெளிவாக இருக்கிறாயா??????”

” நான் என்ன சித்தப்பா செய்தேன்?????

 அவர் தான் அந்த கத்து கத்தினார்…..

 இப்போது தொண்டை வரண்டு போய் எதுவும் பேசாமல் சுற்றிக்

கொண்டிருக்கிறார் !!!!” தந்தை பேசவில்லை என்று அவ்வளவு வருத்தம் அப்பியிருந்தது பிரணாவின் குரலில்.

 ” அப்பா உன்னிடம் பேசாமல் எங்கு சென்று விடுவார் ……. ஆனால்

நான் சொல்ல வருவது உன் மனைவி பற்றி பிரணாவ்….. 

 எதை கண்டு பயந்து ஓடி வருவது போல் இவ்வளவு சீக்கிரமாக ஆபீஸிற்கு வந்திருக்கிறாய் ??????

அதுமட்டுமில்லாமல் இரவு அவ்வளவு தாமதமாய் வீடு திரும்புகிறாயாம் !!!!!”

” அட !!! என்ன சித்தப்பா????  ஒரு மனிதன் உழைக்கிறது ஒரு குற்றமா ????

அப்படி இருந்தால் இப்படி இரு என்கிறீர்கள்!!!

 இப்படி இருந்தால் அப்படியா????

 அந்த டெல்லி காண்ட்ராக்ட்டை முடித்திருக்கிறேன்…..  நாளை நேரில்

சென்று  கையெழுத்துப் போட்டால் அவர்களது ஆர்டர் நமக்குத் தான்!!!

 இதனால் எவ்வளவு லாபம் என்று சந்தோஷப் படாமல்………!!!!”

” எவ்வளவு கோடி வந்தாலும் குடும்ப வாழ்க்கை நிலையாக இல்லாமல் தடுமாறியது என்றால் எதுவுமே பயன் இருக்காது பிரணாவ்……”

சித்தப்பா கூறியது ஆரம்பத்திலேயே புரிந்த போதும் மாற்றி பேசியவன்

 இம்முறை “ஐ நீட் சம் டைம் சித்தப்பா……

 அவள் மட்டும் என்றாலே  இப்படி திடுதிப்பென புதிதாக குதித்தவளிடம் எனக்கு எப்படி அடாப்ட் ஆகிறது என தெரிந்திருக்காது!!!!

 இதில் ஒரு பேபி இருக்கிறது …..

எனக்கு உண்மையிலேயே ஹேண்டில் பண்ண தெரியவில்லை சித்தப்பா!!!!!!

 ஒன்று அவளைக் கண்டாலே கத்த தோன்றுகிறது ….. இல்லையெனில்…….” அடுத்த காரணத்தை சொல்ல

முடியாதவன்

” நிஜமாகவே முடியவில்லை சித்தப்பா!!!” தன் மனக்குமுறலை வெளிபடுத்தினான்.

 “ஒருவேளை அந்தப் பையனை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா பிரணாவ்??????” அண்ணன் மகனின் தோள் தொட்டவரிடம்

“ஐயோ என்ன சித்தப்பா நீங்களும் இப்படி கேட்கிறீர்கள்????? நான் சொன்ன அர்த்தமே வேறு !!!

ஒரு பையனின் அப்பாவாக…..

 ஒரு நல்ல ஹஸ்பன்டாக இருக்கும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லை!!!!

 ஆனால் கண்டிப்பாக சீக்கிரம்  அந்த மாதிரி மாறி விடுவேன் சித்தப்பா….

 கொஞ்ச நாள் தானே அவகாசம் கேட்கிறேன்….. என்னை என் போக்கில் விட்டு விடுங்களேன்  ப்ளீஸ்….”  என்ற மகனிடம் மேற்கொண்டு வற்புறுத்த ரகுராமால்  இயலவில்லை.

 அப்படி கேட்பாரின்றி தன் நாட்களை செலவழித்தவனை அன்று காலை 7 மணி அளவில் யசோதா அழைத்தார்….

 டிரைவிங்கில் இருந்தவன் போனை சைலன்ட்டில் போட்டு விட்டதால் முதல் மூன்று அழைப்புகளை தவிர விட்டிருக்க பின்  எதேச்சையாக போனை பார்க்க சேர்ந்ததும்  அதில் சிற்றன்னையின் அழைப்பை உணர்ந்து உடனே அதனை உயிர்ப்பித்தான்….

 “எங்கே தான் பிரணாவ் போனாய்?????” சிறு பதற்றத்துடன் அவர் குரல் கேட்க

“வீட்டிற்கு தான் வந்து கொண்டிருக்கிறேன் யசோம்மா…..  ஏன் ஒரு மாதிரி பேசுகிறீர்கள்?????” என்றான்.

 “இங்கு யார் தான் ஒரே மாதிரி இருக்கிறார்கள்??????”  என்று வெடித்தவர்

” நீ டெல்லி போய் இருப்பதே உன் சித்தப்பா சொல்லி தான் எனக்கு தெரியும்….

 நீ எங்கே இருக்கிறாய் என்று கூட இப்போதெல்லாம் தெரிய மாட்டேன்கிறது!!!!

 உன் பொண்டாட்டி பக்கத்திலிருந்தும் அவளுக்கு என்ன செய்கிறது என்றும் புரிய மாட்டேன்கிறது!!!”  என்று யசோதா புலம்பிக் கொண்டு செல்ல

ஏன் அவளுக்கு என்ன?????

மனம் கேள்வி கேட்ட போதும்

“சிட்டிக்குள்ளே வந்து விட்டேன் யசோம்மா… ஒரு பதினைந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்……. எதுவாக இருந்தாலும் வந்து பேசிக் கொள்ளலாம்”  என்றபடி போனை அணைத்து விட்டான் பிரணாவ்.

அதிவிரைவாக வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் எதிர்கொண்டது முகத்தில்

கலக்கத்தை சுமந்தபடி அமர்ந்திருந்த அன்னை காஞ்சனாவை தான்…….

திருமணம் ஆன தினத்தில் இருந்து

 அவரிடம் எதுவும் பேசிராதவன்……

 அவர் நிலை கண்டு வருந்தி

“என்னாச்சு அம்மா????? ” அவர் அருகில் சென்று அமர்ந்தான்…..

மகனைக் கண்டதும் அவர் கண்ணீர் கன்னத்தை நனைக்க…..

அதில் பதறியவன்

” அம்மா…..சாரிம்மா!!!!!!!!” என்றபடி கட்டிக்கொண்டான்…

ஏற்கனவே கோபம் வற்றி குற்றவுணர்வு மேலோங்க கலங்கி கொண்டிருந்தவர்

 மகன் தன்னை அணைத்து ஆறுதல் கூறவும் உடைந்து அழுதார்…….

 இக்காட்சியை அடுப்படி வாயிலில் நின்று கண்ட யசோதா ” அப்பாடி!!!!!! ஒருவழியாக அம்மாவும் பையனும் ஒன்று சேர்ந்து

விட்டார்களா!!!!!!!

இப்படியே எல்லா பிரச்சனைகளுக்கும் சீக்கிரமாக தீர்வு கிடைத்து விட வேண்டும்  முருகா!!!”  என்று வேண்டிக் கொண்டு அவர்களை நெருங்கினார்….

அவரை பார்த்தவன் “என்ன யசோம்மா????? நாலைந்து முறை கால் பண்ணியிருப்பாய் போல!!!!!” என்று கேட்ட போதே பிரணாவின் கண்கள்  மாடியில் தன் அறையை தொட்டு விட்டு மீண்டது.

அதனை கண்டவருக்கு அவ்வளவு கோபம்……..

“நல்லா வாழ்ந்து காட்டுவேன் என்று வாயால்  மட்டும் சொன்னால் பத்தாது பிரணாவ்…….

அதை செயலில் காட்ட வேண்டும்…….

 சரி உன் பொண்டாட்டி எங்கே???????” என்றார் யசோதா அதட்டலாக….

“ஏன் ரூமில் தானே இருப்பாள்…….

இருங்கள்  போய் கூட்டி வருகிறேன்!!” 

என்று எழ

”  நில்லு பிரணாவ் !!!!!!”

அடுத்த வார்த்தையாக  யசோதா கூறியதையும் பொருட்படுத்தாமல் மாடிபடிகளில் தாவியவனை பார்த்ததும் தன் அறைக்கு சென்று விட்டார் காஞ்சனா.

அச்சமயம் யசோதாவின் போன் அடுப்படியில் இருந்தபடி  அடிக்கவும்

அதனைச் சென்று எடுத்தவருக்கு

தன் மகளின் பெயரை திரையில் காணவும்

சற்று உணர்ச்சிவசப்பட்டு தன் மனதிலிருந்த அனைத்தையும் கொட்டிவிட்டார்………..

“என்ன அம்மா பண்றீங்க??????”

 உதிதா கேட்டது தான் தாமதம்

“ஒன்றும் பண்ண முடியாமல் தான் உதிமா இருக்கிறேன்…….

இங்கே நடக்கிறது எதுவும் சரியில்லை……

 அந்த பொண்ணு இந்த வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிப்பதில்லை!!!!!

கேட்கவோ கண்டு கொள்ளவோ ஆளில்லை…….”

“என்னம்மா சொல்றீங்க???????

நேற்றுகூட நான் அவளிடம்  பேசினேனே!!!!!

‘ நல்லாயிருக்கோம் உதிஅண்ணி…. ஒன்றும் பிரச்சினையில்லை ‘ என்றாளே !!!!!

எதையும் காட்டி கொள்ளாமல் பேசினாளோ?????? ” உதிதா படபடக்க…

“அந்த கொடுமையை ஏன் உதிமா கேட்கிறாய்????

 காலையில் வீட்டை விட்டு கிளம்பினாள் என்றால் சாயங்காலம் ஆறரை மணிக்கு தான் வீடு திரும்புகிறாள்……

உன் பெரியம்மா அவளை கண்டாளே ஒதுங்கி போய் விடுகிறார்கள் ……

 அவர்கள் மனம் ஆற கொஞ்ச கால அவகாசம்  கொடுத்து தானே உதிமா ஆகணும்……

 பையனுக்கு மட்டும் பால் ஆத்தி கொண்டு போய் கொடுப்பாள்……. அதுவும் அவள் வாங்கி வரும் பாலை!!!!!!

நேற்று அப்படி அவள் அடுப்படிக்குள் வரும் போது அக்கா இங்கே இருந்தார்கள்…….

 இவளை பார்க்கவும் விருட்டென்று வெளியேறி விட்டார்கள்…….

எனக்கே அவ்வளவு கஷ்டமாகத் தான் இருந்தது……

அதற்கு  பாலை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள்ளேயே போட்டு விட்டு குழந்தையை தூக்கி கொண்டு   ரூமிற்குள் போய் விட்டாள்…….

பையன் அழுகை சத்தம் நிற்காமல் கேட்கவும் எனக்கு மனம் தாங்கவில்லை……

நான் பாலை ஆத்தி கொண்டு  போய்

நீட்டுகிறேன்……

அதை அவள் திரும்பி கூட பார்க்கவில்லை……

எனக்கு அவ்வளவு கோபம்!!!!!!

என்னிடம் அவள் பேச வில்லை எனும் வருத்தம் இருக்க தான் செய்தது….

 அதுவும் அவள் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் …….

அவள் படும் கஷ்டத்திற்கு இது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை தான்…….

 ஆனாலும் அவள் பிடிவாதத்திற்கு பிள்ளையை ஏன் அழுக விடுறாள் என்று தான் அனைத்து கோபமும்!!!!!

அவள் கையிலிருந்த குழந்தையை கத்த கத்த வாங்கி அந்த பாலை கொடுத்தேன் ……

 மீறி என்னிடம் பிள்ளையை வாங்கி இருந்தாள் எனில்…… உன்னை சின்ன வயதில் சாத்தியதை போல்

சாத்தியிருப்பேன்……

அந்த அடியில் இருந்து தப்பித்தவளோ என்னிடம் மல்லுக்கு நிற்காது கண்ணீர் கொட்ட கொட்ட திரும்பி நின்றாள்……

எனக்கு அவளை அப்படியே அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும்  உதிமா……

 என்று பிரணாவ் தாலி கட்டி கூட்டி வந்தானோ!!!! அன்றிலிருந்தே உன்னையும் பிரணியையும் பார்க்கிற மாதிரிதான் அவளையும் பார்க்கிறேன்…..

சின்ன பொண்ணு …… அனுபவிக்க கூடாததெல்லாம் இந்த வயதில் பார்த்து விட்டாள்!!!!!!

 அவளை அப்படி மகளாக பார்க்கும் போது அவள் பையனையும் என் பேரனாக தானே பார்க்கிறேன்……

அப்படிப்பட்ட பேரனை ஆசையாக கொஞ்ச

முடியா விட்டாலும் இப்படி வழுக்கட்டாயமாக இழுத்து பிடித்து வாங்கியதை நினைத்தாலே வலிக்கிறது உதிமா……..” 

அன்னையின் ஆதங்கம் அனைத்தையும் அவ்வளவு மனத்தாங்கலோடு கண்ணீர் வழிய கேட்டு முடித்த உதிதா “பிரணாவ் எங்கே அம்மா??????”  என்றாள்.

“உன் தம்பி தானே….. ஆளு சென்னையில் இருப்பதும் தெரியவில்லை டெல்லிக்கு போனதும் புரியவில்லை …….

இதெல்லாம் நீ கேட்க மாட்டாயா உதிமா?????”

மௌனித்து நின்றவளிடம் யசோதா மேலும் தொடர்ந்தார் ….

” இப்போது தான் வந்தான்….  பொண்டாட்டி  வீட்டில்  இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாமல் மாடியேறி போயிருக்கான்…..

இன்று என்ன நடந்தது தெரியுமா உதி?????..

படிக்கட்டுகளில் இருந்து நடந்து வந்தவள் அப்படியே தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.. கையில் குழந்தை வேறு!!!!!

ஐயோ என்று பதறி போய் தூக்க முயன்றால் விலகி அவளே எழுந்து கொண்டு

“எனக்கு எப்பவும் மாதவிடாய் சமயங்களில் இப்படி இரத்தப்போக்கு அதிகமாக தான் இருக்கும்…….. அதான் கொஞ்சம் டயர்டாக இருக்கிறது…. மற்றபடி நீங்கள் பதறும் அளவிற்கு எதுவுமில்லை… பயப்படாதீர்கள்” என்று சொல்கிறாள்……

 ஆனால் அவளால் பேச கூட முடியவில்லை.. அவ்வளவு வயிறு வலி போலும் …..

 ஒருகையால் வயிற்றை பிடித்து கொண்டே மறுகையால் பையனை தூக்கி  சென்றும் விட்டாள்…… 

அவள் விழுந்ததையும் எழுந்து சென்றதையும் பார்த்த உன் பெரியம்மா அப்படியே சோஃபாவில் உட்கார்ந்து விட்டார்…….

“என்ன அக்கா ஆச்சு??” என்று  பயந்து போய் அவரை உலுக்கினேன்..

ஒன்றுமே பேசவில்லை……

தண்ணீர் எடுத்து வரலாம் என்று அடுப்படிக்கு வந்தேன் ……

அப்போது தான் பிரணாவ் உள்ளே வந்தான்…..

அவனிடம் கொஞ்சம் எடுத்து சொல்லு உதி…….

நீ சொன்னால் கேட்டு கொள்வான்….. ”  என்றார் மூச்சே விடாமல். 

நான் சொல்லி கேட்டதனால் தான் ,, இன்று இருவரின் வாழ்க்கையுமே கேள்விக்குறியானதோ????????????

 அதிலும் காரணமேயின்றி

 அச்சின்னப்பெண் அனுபவித்து வரும் துன்பம்???????????

வேறு பேச்சு எதுவும் வெளிவராதபடி தொண்டைகுழியில் இயலாமை எனும் வருத்தம்  சிக்கியிருக்க

“நான் உடனே அங்கு வருகிறேன்மா……. வந்து பேசுகிறேன்…… ” என்று போனை அணைக்க போன உதிதாவிடம் 

“வேண்டாம் உதிமா….. உன் பெரியப்பாவிற்கு  இன்னும் கோபம் சரியாகவில்லை……

நீ இப்போது கிளம்பி வந்து மேலும் பிரச்சனை எதுவும் ஆகிவிடாமல்…… அங்கே இருடாமா…… “

“இங்கே இருந்து என்ன பண்ண சொல்கிறாய் ??????

என்னை மட்டும்  நல்லா சாப்பிட்டு தூங்க சொல்கிறாயா ????

அதுவும் அங்கே நம்ம வீட்டிற்கு வாழ வந்த பொண்ணு வயிற்றை காயப்போட்டு விட்டு????”

சரியாக அச்சமயம் “பாலை குடிக்காமல் உள்ளே வந்து விட்டாய் அம்மு …….”  என்றபடி வந்த யுகனிடம்

“நான் குடிக்க மாட்டேன்……. எனக்கு எதுவும் வேண்டாம்!!!!!” என கத்தியிருந்தாள் உதிதா…..

“அடியேய் மாப்பிள்ளையிடம்  இப்படியா பேசுவாய்?????? ஒழுங்காக பாலைக் குடி…..

 நான் ஒருத்தி …….. எனக்கு இருந்த தலைவலியை உன் நெஞ்சில் இறக்கி வைத்து விட்டேன்…….

 உதிம்மா..    வயித்துல இருக்கிற குட்டிக்காக ஒழுங்காக சாப்பிட்டுக்கோடா.. நான் பிறகு கூப்பிடுகிறேன்…… மாப்பிள்ளையிடம் நல்ல விதமாக பேசு…..”

 என்றபடி போனை வைத்த யசோதா தான் மகளிடம் ஒப்பித்து வைத்த தவறை எண்ணி நொந்து கொண்டார்..

மனைவியை ரூமில் காணாது அடுப்படியில் நின்ற சிற்றன்னையிடம் விரைந்த பிரணாவிற்கு

அவர் தன் உதிக்காவிடம் நடத்திய உரையாடல் அனைத்தும் கேட்டுவிட அப்படியே இடிந்து போனான்……..