Advertisement

அத்தியாயம் 9

எதுவும் பேசாமல் முன்னே சென்றவனை பார்த்து ‘ஏன் இப்படி செய்கிறான்????????’ என்று குழம்பிய உதிதாவிற்கு அதற்கான பொறி அடுத்த கணமே தட்டியது .

ப்ரணிக்கா பேச்சை எடுக்கும்வரை நன்றாக தான் இருந்தான் ……

 இதற்கு பின்னால் வேறேதும் மறைந்திருக்கிறதா ?????? என்று மீண்டும் குழம்பி போனாள் .

 திருமணமான அடுத்த நாளே எழுந்த சந்தேகம் தான் …. யுகன்

வாய் திறக்காமல் இதற்கான விடை கிடைக்க போவதில்லை . அவனிடமே கேட்டு விடலாமா என்று யோசித்தவளுக்கு

நீ கேட்ட உடனே அதற்கான பதிலை

கொடுத்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான் போ உதி….. போய் வேறு வேலை இருந்தால் அதை கவனி என்றது

மனம் .

ஆயினும் அன்று பிரகதீஸ்வரர் முன்னிலையில் “இது என்ன மாதிரி உணர்வென தெரியவில்லை …… தான் சொல்வதை எல்லாம்  யுகன் கேட்க வேண்டும் அவனிடம் நிறைய பேசி பகிர வேண்டும்  என்று மனம் அடம் பிடிக்கிறது …….

கணவன் மனைவியாக வாழாத பொருட்டும் ஒரு நண்பனாகவாது யுகனை என்னிடமிருந்து பிரித்து விடாமல்  பார்த்துகொள் கடவுளே!!!!” என்று மனமார வேண்டி நின்றாள்.

சில தினங்களுக்கு பிறகு சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருப்பதாகவும் இப்போதே கிளம்ப வேண்டும் என்றும் தெரிவித்த யுகனிடம் “நீங்க போய்ட்டு வாங்க… நான் வரவில்லை” என்று டி.வி . யை பார்த்து கொண்டே சொன்னவளை விசித்திரமாக

பார்த்தான்.

தன்னை தான் பார்த்து கொண்டிருக்கிறான் என்பது உறுத்த திரும்பி கணவனின் விழி கலந்த உதிதா “இப்படி கண்கள் பேசுவதை தெரிந்து கொள்வதற்கு நான் தனியாக கோர்ஸ் ஏதும்  படித்திருக்கவில்லை !!!!! வாய் திறந்து பேசினால் தான் எதுவாக இருந்தாலும் எனக்கு புரியும்……. ” என்றவள்  மீண்டும் தன் விழிகளை திரையில் பதித்து கொண்டாள்.

மனைவியின் அருகில்  வந்து அமர்ந்தவன் “இரண்டு நாட்கள் இங்கு தனியாய் என்ன செய்வதாய் உத்தேசம்?” என்றான்.

“அதுபற்றி உங்களுக்கென்ன அக்கறை?”

“புரியாமல் உளறாதே …… மீட்டிங் இருப்பதால் தான் உன்னை கிளம்ப சொல்கிறேன் “

“மீட்டிங் கலெக்டருக்கு மட்டும் தானே ….. நான் வந்து என்ன செய்ய போகிறேன்??????”

“நீ வந்து அங்கு வீட்டில் இரு…. அது போதும் “

“அதற்கு பதில் இங்கு இந்த வீட்டில் இருக்கிறேனே!!!”

“சிறு பிள்ளை போல் ஏன் நடந்து கொள்கிறாய்?”

“சற்று நிதானமாக யோசித்தீர்களானால் யார் சிறு பிள்ளை தனமாக அடம் பிடிக்கிறார்கள் என்பது புரியும்!!! “

“எது எப்படி இருந்தாலும் நீ இப்போது என்னோடு கிளம்புகிறாய். இல்லையென்றால்……..”

“இல்லையென்றால்… ம்ம் .. சொல்லுங்க…. உங்களால அப்படி என்ன தான் பண்ண முடியும்???” என்று கணவனை தூண்டவும்

“தூக்கிட்டு போவேன்” என்று எழுந்தவனின் கரம் பற்றி

 “ஏன் யுகி ???? திடீரென்று இந்த

வன்முறையெல்லாம்!!” என்றாள் கண்கள் சிரிக்க  .

“உன்னை இங்கு தனியே விட்டுவிட்டு போக மனமில்லை….. தஞ்சை என் பொறுப்பில் இருக்கிறது!!! என் மாவட்டத்தை உன்னிடமிருந்து காப்பற்றுவதற்காக தான் இதெல்லாம்……” சிரிக்காமல் சொல்லிவிட்டு சென்றான்.

என்ன திடீர்னு  பாச மழை நம் காட்டில் பொழிகிறது!!!!!!! என்று நினைத்தவளின் இதயத்தில் சாரல்.

சென்னைக்கு செல்லும் வழியில் கணவனை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு  அமைதியாய் வந்தவளின் மௌனத்தை யுகனும் கலைக்க

முற்படவில்லை .

நல்லா தான் நடந்துக்குறான்!!!

ரொம்ப நல்லவனா தான் இருக்கிறான்!!!!

அப்புறம் என்னதான் பிரச்சினை இவனுக்கு?????? என்று யோசனையிலேயே கண் அயர்ந்தவளிடம்

“நான் கெட்டவன் தான்….

நீ கூறுவது போல் கொடுங்கோல் ஆட்சியாளனே தான்!!!!

உன்னை கண்டாலே பிடிக்கவில்லை…. முதலில் என்னை விட்டு போய் விடு…. அப்போது தான் என்னால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியும்…. ஆறு மாத காலம் வரை எல்லாம் பொறுத்திருக்க முடியாது!!! இப்போதே இப்படியே சென்று விடு……. என்னை விட்டு கண்காணாத இடத்திற்கு போய்விடு…. அதுதான் நம் இருவரின் வாழ்விற்குமே நல்லது…..”

“நான் இவ்வளவு சொல்கிறேன் ஒரு வார்த்தை திருப்பி பேசுகிறாயா ……

சொல்லு உதி ….. போகிறேன் என்று

சொல்லு !!!! என்னை பார்த்து சொல்லு!!! என்னை பாரு உதி!!!!!!” பலவந்தமாக அவளை உலுக்க

திடுக்கிட்டு விழித்தவள்

“மாட்டேன்….. நான் போ மாட்டேன்…. இங்கு தான் இருப்பேன்…. அதுவும் உங்க கூடவே தான் ” பிதற்ற ஆரம்பித்தாள்.

“என்னமா ஆச்சு????

 சரி கூல் ……… தூங்கிட்டு இருந்த…. அங்க ஒரு கார் பிரேக் டவுன் ஆகி நிற்பதை பார்த்தவுடன் ஏதாவது நம்மால் உதவ முடியுமா என்று எண்ணினேன்…. அப்படியே தூக்கத்தில் உன்னை விட்டு இறங்க மனமில்லை… அதனால் தான் எழுப்பினேன்…. நான்கு முறை கூப்பிட்டும் முழிக்காததால் ‘என்னை பாரு உதி’னு சத்தமா உலுக்கிட்டேன்…. சாரி….. “

ஹோ எல்லாமே கனவா???

தாங்க் காட்!!!!!!!

தன் முகத்தையே பாவமாய் பார்த்து

கொண்டிருக்கும் கணவனிடம் ” ஒன்னுமில்லைங்க…. சம் பேட் ட்ரீம்…. நீங்க போய் ஹெல்ப் பண்ணுங்க ” என்று சகஜமாக கூற முயன்றாள்….

“ஆர் யூ ஷுயர்????”

“பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்…. நீங்க போங்க “

அவள் தலையை ஒருமுறை தடவிவிட்டு இறங்கி சென்றவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் உதிதா….

எப்படி இவனை விட்டு  போக முடியும் ????

இவனே கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் சரி ஒருபோதும் யுகனை பிரிந்துவிட கூடாது !!!!!!!

சபதமெடுத்து கொண்டவளுக்கு தெரியாது பாவம் அன்றிரவே கணவனை வெறுத்து நெருங்க விடாது வெகுதூரம் ஓடிவிட துடிக்க போகிறாள் என்பது!!!!!!!

கண்களை மூடியபடி யுகனிடம் சீக்கிரமாக இந்த ஆறுமாத திருமண வாழ்வு குறித்து

கண்டிப்பாக பேசி ஒரு நல்ல தீர்வு எடுத்து விட வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தவள் தன்பக்க கதவின் கண்ணாடி  தட்டும் அரவம் கேட்டு விழிக்கவும் அப்படியே உறைந்து போனாள்.

பிரணிதா!!!!!!

“எப்படி இருக்கிறாய் உதி ?” என்று கண்ணீரோடு கட்டிக்கொண்ட ப்ரணிதாவை தங்கையும்  அரவணைத்து கொண்டாள் .

 சகோதரிகள் தடங்கல் இன்றி பேசட்டும் என்று ப்ரணிதாவின் கணவர் கவினும் யுகனும் சற்று தொலைவில் நின்று கொண்டனர் .

கவின் பேசியதற்கு யுகன் தலையை மட்டும் ஆட்டியவண்ணம் கேட்டு கொண்டிருந்தான்.

    அரைமணி நேர உரையாடலுக்கு பிறகு தன் கணவனிடம் சென்ற உதிதா “ப்ரணிக்காவையும் கவின் மாமாவையும் இப்போதே எங்க வீட்டிற்கு அழைத்து போகிறேன் …. நீங்கள் புறப்படுங்கள்…… ” என்று வேக எட்டுகளை எடுத்து வைத்தவளை வழிமறித்தான் யுகன்  .

“நானும் வருகிறேன் …..  முதலில் நாம் இருவரும்  அங்கு சென்று பேசி புரிய வைப்போம் . பிறகு அவர்களை கூப்பிடுவோம் ” என்று யுகன் கூறியது அவளுக்குமே நல்லதாக பட சரியென்று தலையாட்டினாள் .

 அப்போதும் மறக்காமல் “உங்கள் மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டதே?????? ” என்று இழுத்தவளிடம்

 “இதை விட எதுவும் இப்போதிற்கு முக்கியமில்லை…….. வா போகலாம் “

என்றான் யுகன் திடமாக.

      முதன்முறையாக வீட்டிற்கு வந்திருந்தமையால் “வாங்க மாப்பிள்ளை . நல்லாயிருக்கீங்களா ?????  இதை சாப்பிடுங்க. அதை வேண்டாம்னு சொல்லாதீங்க மாப்பிள்ளை ” என்ற உபசாரத்தில் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தான் யுகன் .

“மாப்பிள்ளை வருவதை பற்றி முன்பே சொல்லியிருக்கலாம் தானே உதிம்மா ?????

 முதலிலேயே அப்பாவை ஃபேக்டரியிலிருந்து வர சொல்லியிருப்பேனே???? ” என்ற யசோதாவிடம்

 “யசோம்மா உங்களிடம் முக்கியமான விசயத்தை பற்றி பேச வந்திருக்கிறோம் ” என்றாள் மகள் பட்டென .

 “என்னம்மா ?” என்றவரிடம் பேச யத்தனித்தவளை

 “மாமாவும் பெரியமாமாவும் வந்துவிடட்டும் உதி ” என்று அமர்த்தினான் யுகன் .

கல்லூரியிலிருந்து மதியமே வீடு திரும்பியிருந்த பிரணாவ் தன் தமக்கை நடுவீட்டில் அமர்ந்திருப்பதை காணவும் “என்ன ஒடிதா ஓடி வந்துவிட்டாய் போல???? இப்போது நம்புகிறேன்…. எந்த ஆளு வந்தாலும் உன் ஸ்வீட் ஹார்ட்டை யாரும் ரீப்லேஸ் பண்ண முடியாதென்று”  மயில் தோகைக்கு போட்டியிட்டு தொங்கும் அவளது அடர்த்தியான ஜடையை பிடித்து இழுத்தவன் அவளருகில் அமர்ந்திருப்பவனை கண்டு முகம் சுருக்கினான்.

Advertisement