Advertisement

“டேய் அதிகபிரசங்கி!!!!! முதலில்  வந்தவர்களை வாங்கனு கூப்பிடு ” என்று யசோதா பிரணாவின்  காதில் ஓத “வாங்க” என்றான் எங்கோ பார்த்தபடி .

“இதற்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம் ” என்று உதிதா தம்பியிடம் பாய “விடு உதி” என்றான் யுகன் பெருந்தன்மையாக .

       தனக்காக அதுவும் தன் உதிக்காவிடம் பரிந்துரைக்க இவன் யார்???????? என்ற ஆத்திரம் பொங்க “ஹலோ …” யுகனிடம் சண்டைக்கு ஆயத்தமாகும் போது

 “வாங்க மாப்பிள்ளை வாங்க ” என்றபடி உள்ளே நுழைந்தார் கதிரேசன் .

   அவர் பின்னாலேயே வந்த ரகுராமும் “வாங்க மாப்பிள்ளை .. ரொம்ப நேரம் ஆகி விட்டதா?” என்று கேட்டு கொண்டே வந்தார் .

“இல்லை மாமா இப்போது தான் வந்தோம் …..  உங்களிடம் சற்று பேச வேண்டும் ” என்றான் அனைவரையும் பார்த்து பொதுவாக .

“சொல்லுங்க மாப்பிள்ளை . அதற்கு முன் ஏதாவது சாப்பிட்டீர்களா?” என்று தன் மனைவியை  ஏறிட்டார் கதிரேசன் .

“நீங்களும் வந்துவிடட்டும் என்று மாப்பிள்ளை மறுத்து விட்டார் ” என்று கணவனின் பார்வைக்கு பதிலளித்திருந்தார் காஞ்சனா .

“என்ன மாப்பிள்ளை இது????? முதல் முறையாக வந்துள்ளீர்கள் ….. போம்மா போய் ஸ்வீட்ஸ் எடுத்துவா ” என்ற மாமனாரின் பேச்சிற்கு

 “எங்களோடு இன்னும்

இரண்டு நபர்கள் வந்துள்ளார்கள்….. அவர்களையும் உள்ளே அழைத்தீர்களானால் நாங்களும் கலந்து கொள்வோம் ” என்று ஆரம்பித்தான் யுகன் .

“யாரையும் காணவில்லையே???? ” என்று கதிரேசன் கூறும் போதே

தன் மனைவியின் விழிநீரோடு வாசலில் அலைபாய்ந்த பார்வை அவருக்கு தெளிவு படுத்தியது இளைய மருமகன் யாரை குறிப்பிடுகிறான் என்று !!!!!

 இத்தனை நாட்களின் பிரிவின் விளைவாக மனம் மகளின் வருகையை எதிர்பார்த்த போதும் கெளரவம், அனுபவித்த அவமானம், எதிர்கொண்ட ஏமாற்றம் அனைத்தும் சிங்கமாய் கதிரேசனை கர்ஜிக்க வைத்தது .

“முடியாது ……. ஒருபோதும் அது நடவாத காரியம் மாப்பிள்ளை …… அவர்களுக்காக நீங்கள் பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை!!!!! ” என்று உரக்க கத்தினார் .

“சரி மாமா …… உங்கள் முதல் மகளை எப்படி மறந்து வாழ முடிவு செய்தீர்களோ அதே போல் உங்கள் இரண்டாவது மகள் அதாவது என் பொண்டாட்டியையும்

இனி மறந்துவிடுங்கள்!!” என்று உதிதா உட்பட அனைவரையுமே கதி கலங்க

செய்தான் .

“ஆனால் யுகி…” பேச்சை ஆரம்பித்த தன் மனைவியிடம்

 “இனி பேசி பயனில்லை . நான் சொன்னது உன் காதிலும் விழுந்தது தானே !!!!!! என் பேச்சை மீற மாட்டாய் என்று நம்புகிறேன் …… வா போகலாம்” என்று மனைவியின் கரம்பிடித்து வாசல் பக்கம் இழுத்து சென்றான் யுகன் .

என்ன செய்கிறோம் என்று புரிந்து தான் செய்கிறானா??????  பிரம்மிப்புடன் கணவனுடன் சென்று கொண்டிருந்தவளையும் அவள் கரம் பிடித்தவனையும் வழி மறைத்தார் கதிரேசன் .

“என்ன மாப்பிள்ளை இது??? ஏன் இந்த வீண் விவாதம்!!!!!!! “

“உங்கள் பிடிவாதத்திற்கு சரியான போட்டி என்று கூட நீங்கள் நினைக்கலாம் …..

நானும் பிடிவாதக்காரன் தான் மாமா . ஒரு விசயத்தை தீர்மானித்துவிட்டால்

அதை கண்டிப்பாக பிடித்தாலும் சரி பிடிக்கா விட்டாலும் சரி நடத்தியே தீருவேன்”

“ஆனால் ஏன் மாப்பிள்ளை ????? அன்று நமக்கு கிடைத்த வேதனை ….” என்று ஆரம்பித்தவரை

 “நீங்களே சொல்கிறீர்கள் நம் வேதனை என்று !!!!!!

 சற்று யோசித்து பாருங்கள் மாமா……. அன்று எனக்கு ஏற்பட்ட அவமானத்தை விடவா உங்களது பெரியது??????

 இவன் வேண்டாம்!!! என்று நிராகரிக்கப்பட்ட துன்பத்தை அதிகரிக்கும் விதமாக பெண்ணின் தங்கையை மணப்பெண் ஆக்கினீர்கள் ……

மனம் என்று ஒன்று இருக்கிறது என்றே அன்று  யாருக்கும் புலப்படவில்லை போலும் !!!!

   

அம்மாவின் நிலையோ என்னை வேறு சிந்தனைக்கு இடமளிக்க விடாது ஒரு அசாதாரண இக்கட்டில் தள்ளியது…….

உங்கள் குடும்ப கௌரவத்திற்காக நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதை பற்றியும் யோசிக்காமல் என் அருகில் வந்தமர்ந்தாள் உங்கள் மகள்.

எங்கள் இருவருக்காக நீங்கள் யாரையும் ஏற்று கொள்ளவும் வேண்டாம் அதை பற்றி நங்கள் இனி பேசவும் கூடாது அப்படி தானே மாமா!!!!!!! ” என்று வாதாடியவனை

 “போதும் மாப்பிள்ளை போதும் ” என்று பேச்சு வராமல் தடுமாறினார் .

    அப்போது அங்கு அழுகையுடனே பாய்ந்து வந்த ப்ரணிதாவை கண்டதும் எஞ்சியிருந்த கோபம் வறட்டு பிடிவாதம் எல்லாம் பறந்து போக  ஆதரவு தேடி வந்த மகளை  கட்டி கொண்டார் மன்னிப்பு

வழங்கிய தந்தையாக .

“என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா ப்ளீஸ் ….. நான் செய்ததிற்கு எப்போதுமே என்னை ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்று பயந்துவிட்டேன் …… தேங்க்ஸ்பா”

“அம்மா…….” என்று காஞ்சனாவை அணுகியபோது ஓங்கி ஓர் அறை விட்ட காஞ்சனா அதே கன்னங்களுக்கு முத்தத்தையும் வழங்கி அணைத்துகொண்டார் .

“யசோம்மா …….

சித்தப்பா …….” என்று அனைவரிடத்திலும் தஞ்சமடைந்தவள் தன் தம்பியிடமும் “சாரி டா ” என்றாள்.

“ஏன் ப்ரணிக்கா இப்படி செய்தாய்????” என்று கலங்கி அவளை தன்னோடு சேர்த்து கொண்ட பிரணாவிற்கு தன் கோபங்கள் எல்லாம் சென்ற இடம்

தெரியவில்லை.

“முதலிலேயே சொல்லியிருக்கலாம் தானே ப்ரணிம்மா??????” என்று வருத்ததுடன் கேட்டு அவள் தலையை கோதிய ரகுராமிடம்

 “பயம் சித்தப்பா ….. எதை கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் வாங்கி கொடுத்த நீங்கள் தான் காதல் என்ற வார்த்தையையே கேட்கவே கூடாது என்று வளர்த்தீர்கள் ….   அப்படியிருந்தும் காதலித்துவிட்டேன் . சொன்னால் நிச்சயமாக மறுத்துவிடுவீர்கள்… ஏதேதோ அறிவுரைகள்  சொல்வீர்களே தவிர ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன் …. அப்போதும் கவின் வீட்டினருடன் வந்து பெண் கேட்பதாக தான் கூறினார் . என்னுடைய பயம் அவரையும் தடுத்துவிட்டது . சாரி சித்தப்பா ” என்ற போது அனைவரது நெஞ்சமுமே இளகி இருந்தது .

  குடும்பத்தினரின் மனம் சந்தோஷத்தில்

நிறைந்திருக்க வயிற்றை நிரப்ப தடாபுடலாக விருந்து ஏற்பாடு செய்யும்படி மனைவியிடம் மொழிந்தார் கதிரேசன்.

“நான் கிளம்புகிறேன் மாமா ….. தஞ்சையிலிருந்து நேராக இங்கு வந்துவிட்டேன்…. மாலை முக்கியமான மீட்டிங் இருக்கிறது . வீட்டிற்கு போய்விட்டு கிளம்ப சரியாக இருக்கும் . இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் ” என்றவன் மனைவியிடம் திரும்பி “வேண்டுமானால் நீ இங்கு இருந்துவிட்டு நாளைக்கு வா ” என்றான் .

“இல்லைங்க .. அத்தை மாமாவை பார்த்துவிட்டு நாளை இங்கு வருகிறேன் ” என்று அவனோடு சேர்ந்து நடந்தவளை அங்கு யாரும் தடுக்கவில்லை .

   அனைவரிடத்தும் பொதுவான வணக்கத்தை தெரிவித்துவிட்டு கிளம்பியவனை தன் பார்வையால் பின் தொடர்ந்தான் பிரணாவ்.

 புயலென பேசி வீட்டில் சந்தோஷமெனும் அமைதியை நிலைக்க செய்துவிட்டு போகிறவனின் மேல் தனி மரியாதை மனதில் உண்டாவதை பிரணாவால் தடுக்க முடியவில்லை.

நிராகரிக்கப்பட்டவன் என்று அவனே சொல்லும்போது எதற்காக இப்படியொரு காரியத்தை செய்தாக வேண்டும்!!!!!!!

 இதனால் இவனுக்கென்ன பலன் இருக்க போகிறது ??????

 மனைவியின் அக்கா!!! என்ற ஒரே சொந்தத்திற்காக இவ்வளவு செய்திருப்பவனுக்கு தன் மனதில் இருக்கும் இடத்தை பூராவும் எழுதி வைக்க ப்ராயத்தமானான் பிரணாவ் .

     இவ்வளவு பெரிய காரியத்தை சாதாரணமாக செய்துவிட்டு ஒன்றுமே நடவாதான் போல காரை ஓட்டிகொண்டிருந்தவனை இமைக்காமல் பார்த்து கொண்டு வந்தாள் உதிதா .

தனக்காக தன் கணவன்  இதை செய்திருக்கிறான் எனும் பெருமிதம் முகத்தில் வெளிப்படுவதை அவளும் தடுக்க முற்படவில்லை .

   மாறாக காரினுள் எழுந்த நிசப்தத்தை கிழிக்க முற்பட்டவளாய் “தேங்க்ஸ் யுகி ….. எங்கள் குடும்பத்திற்கு இன்று நீங்கள் செய்திருப்பது …..” என்று ஆரம்பித்தவளிடம்

“வீடு வந்துவிட்டது …… டின்னர் எனக்கு வேண்டாம் . வீட்டினுள் வந்தால் லேட் ஆகும் . இங்கேயே இறங்கி கொள்” என்று வாசலில் இறக்கிவிட்டு சென்றான் .

    அந்த நொடியில் என்றுமில்லாத அளவிற்கு எங்கிருந்துதான் வந்ததோ அவ்வளவு கோபம்!!!! அனைத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு சென்றவன் மீது  சம்பாதித்து வைத்தாள் உதிதா.

பெரிய கலெக்டர் சார் தான் !!!!!!

ஒத்து கொள்கிறேன்…….

நல்ல காரியங்களையும் செய்கிறான் …..

இன்று அவன் தன் குடும்பத்திற்கு செய்திருப்பதோ இன்றியமையாதது !!!!!

அதற்கான நன்றியை செலுத்துவதற்காக தானே பேசினோம் ….

அதை கூட அலட்சியம் செய்து விட்டு போகிறான்…. 

அப்படி  என்ன தான் இவன் மனதில் நினைத்து கொண்டிருக்கிறான்???????? யோசித்தவளின்  மூளை சடாரென

அப்படி  யாரை தான்  இவன் மனதில் நினைத்து கொண்டிருக்கிறான்??????  கேள்வி எழுப்பியது.

      இதற்கான விடை ஒருவேளை  அன்று தான் எடுத்து ஒளித்து வைத்திருந்த டைரியில் கிடைக்குமோ என்ற ஞாபகமும் கூடவே உதிதாவிற்கு உதித்தது.

   அதிவேகமாக வீட்டினுள் நுழைந்தவள்

யாரையும் பொருட்படுத்தாது மாடி படிகளில் தாவி தன் அறைக்குள் சென்று கட்டிலுக்கு அடியில் பத்திர படுத்திய டைரியை கையில் எடுக்கலானாள்.

Advertisement