Advertisement

அத்தியாயம் 8

அறைவாசலில் நிழலாட அங்கு நின்றவளை நிமிர்ந்து பாராமலேயே

“இன்று கிளம்புகிறாயா ????? டிக்கெட் போடட்டுமா????” என்றவனை சட்டை செய்யாமல் “உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றாள் உதிதா.

“ஐ அம் ஆல்ரைட் நௌ” கணவனின் பதிலில் திருப்தியுற்றவள்

“டிபன் செய்கிறேன்…. கண்டிப்பாக சுமாராக தான் இருக்கும்……  கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள்!!!!” என்று கிட்சன் பக்கம் திரும்ப

அவள் பின்னால் சென்று “உனக்கெதற்கு வீண் சிரமம்? நான் பார்த்து கொள்வேன்….. நீ கிளம்பு ” என்றான் யுகன் .

“அந்த லட்சணத்தை தான் பார்த்தேனே …….

 உங்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது தான் என் பொறுப்பாச்சே ” என்றவளிடம்

அவன் அனுமதியின்றியே நெருங்கிய யுகனின் கால்கள் அங்கு  அதிர்ச்சியில்  விரிவடைந்த கண்களை கண்டதும்  அதே இடத்தில் பிரேக் போட்டு நின்றன…..

  “இப்போ என்ன சொன்னாய்?????” என்று அவன் ஒற்றை புருவத்தை தூக்கி கேட்ட விதத்தில்

தான் கூறிய சொற்களை நினைவு கூர்ந்தவளுக்கு அது கிட்டாமல் போக

” அத்தை காலையில் எழுந்ததும் போன் பண்ண  சொன்னார்கள்….. பேசிவிடுகிறேனே….. ” என்று அவசரமாக கூறிவிட்டு தன் கைபேசியை எடுத்து கொண்டு ஓடி மறைந்தாள்…

அவள் உரையாடுவதையே சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு ‘இனி என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் போலும்!!!’ என்றொரு பெருமூச்சை விட்டவன்

மறுபேச்சின்றி அவள் சமைத்து வைத்திருந்த உப்புமாவை  தேவாமிர்தமாக ருசித்து விட்டு கிளம்பினான்….   

கணவன் கிளம்புகிறான் என்று பல் கூட தேய்க்காமல் கிளறிய உப்புமாவை அரைமணி நேரம் கழித்து குளியல் வேலை எல்லாம் முடித்து சாப்பிட அமர்ந்தவளுக்கு மறுபடியும் போய் வாய் கொப்பளிக்க நேர்ந்தது….

‘உப்புமால உப்பு போட்டு’ செய்ய சொல்லி கொடுத்த யசோம்மா மட்டும் இந்த ‘உப்புல உப்புமாவ போட்டு ‘ செய்து வைத்ததை டேஸ்ட் பார்த்துச்சு மவளே நீ தான் சட்னி !!!!

எப்படி அந்த கொடுங்கோல் ஆட்சியாளர் மட்டும்  இதை சாப்பிட்டான்???

ஒருவேளை நேற்று அடித்த காய்ச்சலில் இன்று நாக்கு மரத்து போயிருக்குமோ !!!!

கணவனின் மனதை அவன் வயிற்று வாயிலாக சென்றால் எளிதாக வென்று

விட முடியுமாம் !!!!!

இதே லட்சனத்தில் நீ சமைத்து போட்டாயெனில் ஆறு மாதங்கள் என்ன ஆறு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது உதி !!! ஸோ பி கேர்ஃபுல் ….. என்றவள் அன்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் அடுப்பங்கறையிலே செலவளித்தாள்…..

அடுத்த பத்து தினங்களில்  தேர்வுகளை முடித்துவிட்டு ஆயத்தமான பிரணாவின் வருகையால் அமைதியாக இருந்த வீடு ஆர்பாட்டமாக காட்சியளித்தது .

அங்கு தங்கியிருந்த இரண்டு நாட்களிலுமே யுகனிடம் ஒரு வார்த்தை கூட பேசினானில்லை பிரணாவ்.

யுகன் இருக்கும் அறையில் பிரணாவை பார்க்க முடியாது……

அவன் தஞ்சைக்கு வந்தது அவனது பாசமலருக்காக மட்டும் தான் என்பதை உணர்த்தி கொண்டிருந்தான் பிரணாவ்……

 டி.வியில் ஒரு நடன நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தவன் “உதிக்கா இங்க வாயேன்!!!!!”  வீடே அதிரும்படி கத்தினான் …..

“என்னடா!!!!!???? ” கிட்சனிலிருந்து பதட்டமாக ஓடிவந்தவளிடம்

“இங்க பாரு!!!! செம்மையா இருக்குதுல…..” தலையை டிவியிடமிருந்து அகற்றாது வினவியவனை முறைத்தாள் தமக்கை….

“எது???”

“எதுவா!!!!!! டான்ஸ் உதிக்கா டான்ஸ்….. உனக்கு பிடிக்குமேனு கூப்பிட்டா இப்படி பொறுப்பே இல்லாம ஆடி அசஞ்சு வந்து எதுனு வேற கேட்கிறாய்????? ஸில்லி மங்கி ஃபெல்லோ!!!!”

“ஹே டாங்கி …. அந்த டான்ஸ் பேராவது என்னனு தெரியுமா ???”

ஐயையோ!!! மாட்டிகிட்டியேடா பிரணாவு……. சமாளி சமாளி!!!! மனதுள்  கூறிய பிரணாவ்

“ஒரு கலையை ரசிக்கிறதற்கு அதை பற்றி  முழுதாக தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை யுவர் ஹானர்….” என்றான் கெத்தாகவே

” அது கலைய ரசிச்சவங்களுக்கு தம்பி!!!!! நீ எதை பார்த்தனு நான் சொல்லட்டா?????? “

“ஒரு அக்கா மாதிரியா பேசுற!!!!!!! போ….  குக்கர் அங்க உன்னை கூப்பிடுது “

“இனி நீ கூப்பிட்டு பாருடி!!!!!!” அவள் கையோடு  கொண்டு வந்திருந்த கரண்டியை எடுத்து மிரட்டி காட்டி விட்டு சென்றவளை பார்த்து

“ஜஸ்ட் எஸ்கேப்….. மண்டை தப்பிச்சுச்சு!!! ” தலையை தடவி கொண்டான் அன்பு தம்பி …..

பிரணாவின் அச்செய்கையை கண்ட

யுகனிற்கு சிரிப்பை கட்டுபடுத்த தெரியவில்லை …..

அவன் கத்தியதும் என்னமோ ஏதோ என்று ஹாலிற்கு ஓடி வந்த யுகனிற்கு  அக்கா தம்பியின் உரையாடலை காண நேர்ந்தது….. 

 கூட பிறந்தவர்கள் யாருமின்றி தனித்து வளர்ந்தவனுக்கு அவர்களது சிறு வாக்குவாதம் ஒருவித ஏக்கத்தை படரவிட பிரணாவின் அருகில் சென்று அமர்ந்தான் .

யுகனை கண்டதும் விருட்டென்று எழுந்து அடுப்பங்கறைக்குள் நுழைந்தான் பிரணாவ்.

“நடன கலைவாணி ரசிகனுக்கு கிட்சனில் என்னடா வேலை???” உதிதா உள்ளே வந்தவனிடம் வினவியிருந்தாள்…

” அவ டான்ஸ் பேரு தான் உனக்கு தெரிஞ்சுருக்குனு பார்த்தா அவ பேர கூட தெரிஞ்சு வச்சுருக்க!!!

கலைவாணி!!!!

வாட் எ பியூடிஃபுல் நேம்!!

 யூ ஆர் ஆஸம் உதிக்கா ஆஸம்!!!!…..”

“டேய்!!! என்கிட்ட அடி வாங்காம மரியாதையா போய்டு “

  அவளை தாண்டி சென்று கிட்சன்  மேடையில் ஏறி அமர்ந்தவன் ” என்னமோ செய்ற போல….. கும்முனு வாசனை வருது” என்றான் கடாயில் இருந்ததை முகர்ந்து பார்த்தவாறு…

“மஷ்ரூம் கிரேவிடா… இந்தா டேஸ்ட் பண்ணி பாரு” என்று அவன் கையை நீட்டி அதில் சற்று வைத்து  சுவைக்க கூறினாள்….

“நிஜமாவே நீ தான் இதை செய்தாயா???? இவ்வளவு நல்லாயிருக்கு!!!!! ”  சந்தேக பார்வையுடனே வினவியவனிடம்

“உனக்கு டின்னர் கான்ஸல்… போய் படு” என்று திருப்பினாள்….

உடனே அருகிலிருந்த  ஒரு தட்டை எடுத்தவன் “இதில் இரண்டு சப்பாதிகளை போடு…. ஃபுல் கிரேவியும் எனக்குதான்   ” என்றான் .

“அதற்குள் பசி வந்துவிட்டதா???? ஒரு ஐந்து நிமிடம்டா…. எல்லோருக்குமே  போட்டு விடுவேன் ……டைனிங் டேபிளிலேயே சாப்பிடலாம் “

“அங்கே உன் ஆளும் வருவார் ….. எதற்கு வீண் சிரமம் ????? ” என்றவனை சப்பாத்தி கட்டையில்  ஒரு தட்டு தட்டி

 “என் முன்னாலாவது அவரை ஆளுன்னு சொல்லாதடா…. ப்ளீஸ்  ” என்று கெஞ்சினாள் உதிதா….

“அந்த ஆளுன்னு சொன்னால் தானே உனக்கு கோபம் வரும் உதிக்கா…… உன் ஆளுன்னு தானே சொன்னேன் . கொடுங்கோல் ஆட்சியாளருக்கு இதுவே அதிகம் தான் ” என்ற போது எழுந்த

சிரிப்பை அவளாலும் அடக்க முடியவில்லை.

வேண்டாம் என்று தான் ஒதுக்கி விட நினைக்கும் மனைவி….. தன்னை ஒதுக்கி வீறாப்பாய் முறைத்து கொண்டு திரியும் மைத்துனன்!!!!!!!

 இவர்களது சிரிப்பை வெளியிலிருந்து கேட்டவனுக்கு அதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது….

உணவு வேளையின் போது தன்னோடு சேர்ந்து சாப்பிடவளிடம் “பிரணாவ் எங்கே ????” என்றான் யுகன் யதார்த்தமாக.

“அது….. நீங்கள் வரும் வரைக்கும் வெயிட் பண்றேன் என்று தான் கூறினான் ….. நான் தான் சாப்பாடு.. இல்லை…. பசிக்குமே என்று முன்கூட்டியே சாப்பாடு கொடுத்து விட்டேன்…… நீங்கள் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றும்

கூறிவிட்டேன்….. ” என்று மென்று விழுங்கியவளை வெளிப்படையாகவே ரசித்தான் யுகன் .

தன்னையே பார்த்து கொண்டிருந்தவனிடம் என்ன என்பது போல் புருவம் உயர்த்தியவளிடம் “உனக்கு பொய் சொல்ல வரவில்லை …… உனக்கு தான் தெரிகிறதல்லவா நான் எதையும் பெரிதாக எடுத்து கொள்ள  மாட்டேன் என்று …… பிறகு யாருக்காக இந்த பொய் ?” என்றான் கணவன்.

“அது… அது…” திணறி கொண்டிருந்தவளை பிரணாவின் “உதிக்கா!!!!! ” என்ற அழைப்பு காப்பாற்றியது .

அவளறையில் லாப்டாப்பில் முகத்தை புதைத்தவாறே “ஒரு புது படம் கூட இல்லை . எதற்காகத்தான் இதை வைத்திருக்கின்றாரோ?????” என்ற வினவிய பிரணாவிடம்

 “இதற்காக தான் கூப்பிட்டாயா? என் வேலையெல்லாம் போட்டுவிட்டு ஓடி வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என்று நொடித்தாள் உதிதா .

“என்ன வேலை ????? உன் ஆளை கவனித்து கொள்ள வேண்டுமாக்கும் ?????? அப்படியே உன் ரூமிற்கு ஓடி விட போகிறாய் ஒரு குட் நைட் சொல்ல கூப்பிட்டால்

இப்படி பிகு பண்ணுகிறாய்?????”

என்னது என் ரூமா ?????

 வந்ததிலிருந்து இங்கு தானே உறங்குவது ….. இன்று என்ன செய்வது ?????

இவனை சமாளிப்பதா அல்லது யுகனையா?

இரண்டு பேருமே

ஒருவருக்கொருவர் குறைந்தவர்களில்லை .

இவர்களிடம் மல்லுக்கட்டுவதற்கு பதில்

ஹால் சோபாவிலேயே படுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளுக்கு “உதி….” என்ற யுகனின் குரல் சற்று உரக்கவே கேட்டது .

எழுந்து சென்றவளை  “உதிக்கா என் குட்நைட் ” என்று பிரணாவ் இழுக்க “வைத்து கொள்டா உன் குட் நைட்டை!!!!” என்று கூறிவிட்டு அகன்றாள்.

“எதற்காக கூப்பிட்டீர்கள்?”

“என் லாப்டாப்பை பார்த்தாயா?”

“பிரணாவிடம் இருக்கிறது ….. போய் வாங்கி வருகிறேன்”

“இல்லை பரவாயில்லை …. நாளை பார்த்து கொள்கிறேன் “

எட்டி பார்த்தவள் பிரணாவ் அடுத்த அறை கதவை மூடிவிட்டிருப்பதை கண்டு கட்டிலிலிருந்த ஒரு தலையணையையும் போர்வையையும் எடுக்கலானாள்.

 மனைவியின்  செய்கையை யூகித்தவன் “இங்கேயே படு!!!!! ” என்று கூறியதுமில்லாமல் கதவையும் சாத்திவிட்டு அவளருகில் வந்தான் .

 அவள் கையிலிருந்தவற்றை வாங்கி “நான் கீழே படுத்து கொள்கிறேன் . நீ கட்டிலில் படுத்துகொள் ” என்று போர்வையை தரையில் விரித்தான் .

என்னடா இது ??????

எதற்காக  இந்த எட்டாவது அதிசயம்?????? என்று வியந்து

  “பரவாயில்லை நானே கீழே படுத்து கொள்கிறேன் ” என்று அவன் வைத்திருந்த  தலையணையை

பிடுங்கினாள்.

“நான் தான் சொல்றேன்ல?” என்று அவன் கூறியபோது

அவளடைந்த பிரமிப்பை அவள் கண்கள்

அகலமாய் விரித்து தெரிவிக்க  இதழ்களோ “சரி ” என்று முனுமுனுத்தது  ……

இவளொருத்தி!!!!!!!!!

 தன் விரல்களை இறுக்க மூடி தன்னை கட்டுபடுத்தி கொண்டவன் அவளது சரிக்கு வேறேதும் அர்த்தம் உள்ளதோ என்று திடீரென்று  கலக்கம் உண்டாக “பயமாக இருக்கிறதா??????” என்றான் அவசரமாக .

ஏன் இவ்வாறு கேட்கிறான்!!!!! என்று எண்ணி  “என்னகென்ன பயம்?” என்றாள் குழப்பமாகவே .

“இல்லை அன்று நான் ….” அவனது மனதின் வார்த்தைகளை புரிந்து கொண்டவள் கீழே விரித்திருந்த போர்வையை எடுத்து

“நான் இந்த பக்கம் படுத்து கொள்கிறேன் ….. உங்களுக்கு  இவ்வளவு இடம் போதும் தானே!!!!” என்று கேட்ட

வண்ணம் கணவனின் பதிலுக்காக காத்திராமல்  மெத்தையில் சென்று   படுத்தவள் அடுத்த ஐந்து நிமிடங்களில்  எந்த சலனமுமின்றி தூங்கியும் போனாள்.

அவளருகே படுத்தவன் “இந்த வாழ்க்கை நீடித்து கொண்டே போகாதா ???? என்றும் என்னோடு இப்படியே இருந்துவிட மாட்டாயா???? என்றான் திரையிட்டிருந்த

விழிகளிடம் .  பின் அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு எப்போது தூக்கம் வந்தது என்பது கூட நினைவிலில்லை……

    அக்காவும் தம்பியும் மங்கி டாங்கி என வம்பிழுத்து கொள்வதும் பிறகு அவளது ஸ்வீட் ஹார்ட்டில் அவன் சமாதானப்படுவதென அவர்களது

உரையாடலில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அதனை ரசிக்க யுகன் தவறினானில்லை…..

 பிரணாவின் வம்புகள் அனைத்தும் யுகனை பெரிதாக கவர்ந்தது…. தன்னிடம் பாராமுகம் காட்டிய போதும் பிரணாவை

யுகனிற்கு மிகவும் பிடித்துதான் இருந்தது…..

     பிரணாவ் கிளம்பிய அன்று இரவு வழக்கம் போல் அவனறைக்குள் சென்றவள் “ஓ மறந்துவிட்டேன் சாரி . இன்று நீங்கள் தாராளமாக படுத்து கொள்ளலாம் ……. குட் நைட்!!!! ” என்று இதழ்கள் எழிலாக வளைய சிரித்து விட்டு போனவளிடம்

“என்னை விட்டு போகாதே!!!!!” என்று   கத்த வேண்டும் போல் இருந்தது யுகனிற்கு.

 பின் “என் சுயநலத்திற்காக உன்னை வற்புறுத்த மாட்டேன்” என்று தன்னுள் கூறிகொண்டவன் அதன்பிறகு அவளோடு செலவளிப்பதை குறைத்து கொண்டான் .

  கணவன் அதிகம் பேசாத போதும் அதற்கான காரணம் புலப்படாத போதும்

அவனோடு இருப்பதே சுகமாய் பட அடுத்து வந்த இரு மாதங்களும் தஞ்சையிலேயே தஞ்சமடைந்திருந்தாள் உதிதா .

    இடையில் இருதரம் சென்னைக்கு சென்ற போதும் ஏதேதோ காரணங்களை சொல்லி மீண்டும் யுகனுடனே திரும்பியிருந்தாள்.

ஒரு ஞாயிறன்று “அத்தை பெரிய கோவிலுக்கு சென்று  சாமி கும்பிட்டு வர சொன்னார்கள்…… போகலாமா  ????” என்று கேட்டவளிடம்

“வேண்டுமானால் நீ மட்டும் கிளம்பு . என்னை தொந்தரவு செய்யாதே !!!!! ” என்றான் யுகன் முகத்தில் அறைந்தாற் போல் .

     எதுவும் பேசாமல் தன்னறைக்குள் புகுந்தவளை பார்த்தவனுக்கு ஏதோ செய்ய அவளறைக்கு சென்று  “சரி கிளம்பு போகலாம் ” என்றதும் போனில்

பேசி கொண்டிருந்தவள்

 “வருவதாக கூறிவிட்டார் அத்தை …… போய்விட்டு வந்து பேசுகிறேன் !!!!” என்று தொடர்பை துண்டித்தாள்.

“அடிப்பாவி!!!!! அதற்குள் அம்மாவிடம் போட்டு கொடுக்கிறாயா?????”

“பின்னே.. என்னை என்ன  சீரியல் பொண்டாட்டி என்று நினைத்து விட்டீர்களோ?” என்று கண் சிமிட்டியவளிடம் பதில் கூறாது சற்று நேரம் பார்த்து விட்டு சென்றான் .

“இப்போதெல்லாம் கலெக்டர் சார் கண்களாலே பேசுவார் போலும் !!!!!! ஆனால் அதை எந்த ஸ்கூலில் சொல்லி கொடுத்தார்கள் என்று தான் தெரியவில்லை உதி!!!!! ” என்றவள் கணவனோடு கோவிலுக்கு கிளம்பினாள்.

கோவிலில் யுகனை தெரிந்தவர்கள் அனவைரும் அவனுக்கு வணக்கம் கூற மரியாதை நிமித்தமாக உதிதாவிற்கும்

அதே வணக்கத்தை கூறிவிட்டு சென்றனர் .

மனமகிழ அனைவருக்கும் சிரித்தபடியே பதில் வணக்கத்தை தெரிவித்து கொண்டு வந்தவள் தன்னையுமறியாமல் “யுகி!!! ஐ அம் ஸோ ஹாப்பி டுடே ” என்று கூறிவிட்டு தன் உதட்டை கடித்து கொண்டு நின்றாள்.

  மனைவியின்  அந்த  செய்கையையும் “யுகி” என்ற அழைப்பையும் ரசித்தவன் “ஏன்?” என்றான் சிரித்தவாறே .

“ஸ்கூலில் 12த் படிக்கும்போது ப்ரெண்ட்ஸ் எல்லோரும் அடுத்து என்னவாக போகிறோம் என்பது பற்றி  பேசி கொண்டிருந்தோமா !!!!

என்னிடம் கேட்ட போது சற்றும் தாமதிக்காமல் ஒரு

கலெக்டரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றேன் .

 ‘ஹே இது என்ன வித்தியாசமான ஆசை ?’

ஏன்???????? என்று அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்…….

  இல்லாத காலரை தூக்கிவிட்டபடி

கலெக்டர் பொண்டாட்டின்னா மரியாதை கிடைக்கும் அல்லவா ? என்றேனா

செம்ம மொத்து மொத்தி விட்டார்கள் !!!!!!!!!!! ராஸ்கல்ஸ்  ” என்று அழுகிற தொனியில் அவள் கூறுவதை கண்ட அவனது விழிகளும் சிரித்தன .

“நீயே கலெக்டர் ஆகிவிட்டால் இன்னும் அதிகமாகவே மரியாதை கிடைக்குமல்லவா??”  என்றொருத்தி கேட்ட போது

“ஐயோ அவ்வளவு கஷ்டப்பட்டு படித்து எக்ஸாம் எல்லாம் எழுத முடியாதுபா….. எனக்காக ஒருத்தன் எழுதட்டும் மரியாதையை மட்டும் நான் சுட்டு கொள்கிறேன் ” என்றேன்….

 விளையாட்டிற்கு சொன்னதுதான் . பிறகு எப்போதும்  ப்ரெண்ட்ஸ் கேலி செய்ய

செய்ய அதுவே பயங்கர க்ரஷ் ஆகிவிட்டது .

பெரியப்பாவிடம் கூட சொல்லிவிட்டேன் ப்ரணிக்காவிற்கு பார்த்தது  போல் எனக்கும் கலெக்டர் மாப்பிள்ளை தான் பார்க்க வேண்டும் என்று!!!!! “

அதுவரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவனின் முகம் சட்டென்று மாறியதை உதிதாவால் இனங்காண முடிந்தது ….

அவளிடம் எதுவும் பேசாமல் முன்னே சென்றவனை பார்த்து ‘ஏன் இப்படி செய்கிறான்????????’ என்று குழம்பியவளுக்கு அதற்கான பொறி அடுத்த கணமே தட்டியது .

Advertisement