Advertisement

அத்தியாயம் 7

பெரியப்பா கதிரேசனுக்கு உதிதாவை திடுதிப்பென  பிரணாவ் கூட்டி வருவதை கண்ட போதும் மனம் லேசாக

 காஞ்சனாவிற்குமே இளைய மகளின் வரவு இதமாக தான் இருந்தது …..

 “உதிம்மா நல்லாயிருக்கியா???” என்று அவளை கட்டிகொண்டபோது பெரியம்மாவின் விழிநீர் வழிந்திருந்தது.

அதை துடைத்துவிட்டவள் “அக்கா பிரெண்ட்ஸ் கிட்ட விசாரித்தேன் பெரியம்மா . சீக்கிரம் நல்ல தகவல் வரும் . பெரியப்பாவும் ஏற்று கொள்வார் . நம்புங்கள்!!!! “என்றாள் .

“உன் சொல் பலிக்கட்டும் உதிம்மா!!! ” என்றவரின் மனபாரம் தற்காலிகமாக  குறைந்திருந்தது .

ஸ்டடி ஹாலிடேஸ் என பிரணாவும் வீட்டிலே தங்கிவிட அவ்வபோது எழுந்த

யுகனின் நினைவுகளை விரட்டிவிட்டு உற்சாகமாகவே வலம் வந்தாள் உதிதா.

சமைக்க கற்றுகொள்கிறேன் என்று கூறிவிட்டு சமையலறையை இரண்டாக்கி கொண்டிருந்தாள் வீட்டின் செல்ல மகள்.

” இன்றைய ஸ்பெஷல்  ‘சைனீஸ் சிக்கன் சாலட்’ ” என்று கூறி சாப்பாட்டு மேஜையில் ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து வைத்தவளை பார்த்து புன்னகைத்திருந்த அவளது குடும்பத்தினரின் வயிற்றை விட மனது நிறைந்திருந்தது .

“சூப்பர் டிஸ்ஸேஸ்டர்டி  ஒடிதா!!!!!!” என்று தமக்கையை  வெகுமதியாய் பாராட்டிய போதும் தன் தட்டில் உள்ளவற்றை காலி செய்துவிட்டு  அந்த சாலட் கப்பை தன்னோடு எடுத்து கொண்டவனிடம்

 “டி போட்டு கூப்பிடாத டாங்கி!!! ” என்று வழக்கம் போல் அவனை அடிக்க தன் கைகளை ஓங்கினாள் உதிதா.

மங்கிக்கு எல்லாம் எதற்கு மரியாதை???? என்று வம்பிழுப்பவன் அன்று

 “உதிக்கா…..” என்றதும்

“என்னடா ?”

என்றாள் தன் கைகளை கீழே போட்டவாறு.

“இப்படியே எதையாவது தினமும் செய்து உன் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தாயானால் உன் கொடுமை தாங்காமல் நிரந்திரமாக உன்னை நம் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுவார்கள்!!!! ” என்று கண் சிமிட்டி சிரித்த ப்ரணாவை ஏறெடுத்து கூட பார்க்காமல் தன் அறைக்குள் ஓடிவிட்டிருந்தாள் தமையாள்.

 குடும்பத்தினர் அனைவருக்குமே அவளது இந்த செயல் விசித்திரமாக தான் பட்டது. பிரணாவ் என்ன சொன்னாலும் மல்லுக்கு நிற்பவள்……

அதுவும் சிலசமயம் கதிரேசன்  திட்டினாலும் “என்னை தானே

சொன்னான்…. நீங்கள் ஏன் பெரியப்பா கோபப்படுகிறீர்கள்?????? ” என்று தம்பிக்கு ஆதரவாய் போர் கொடி பிடிப்பவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள்?????

அப்படி என்ன பேசிவிட்டோம்???? எப்போதும் போல் வம்பிழுப்பது தானே!!!!!!  குழப்ப ரேகைகளை முகத்தில் சுமந்து கொண்டிருந்தவனின் முதுகில் ஒன்றை போட்டது இப்போது காஞ்சனாவின் முறையாகி போனது .

“இப்படியா பண்ணுவாய்??? வர வர உனக்கு வாய் அதிகமாகி கொண்டே போகிறது ….. உன்னை தவிர யார் பேசினாலும் சமாதானம் ஆகமாட்டாள் . போடா…. போய் உதியை கூட்டிவா ” என்ற காஞ்சனாவிடம்

 “இப்போதே வருகிறோம் ….. ஆனால் அதற்குள் இதை தீர்த்துவிடாதீர்கள்!!!! ” என்று உதிதா செய்து வைத்திருந்த டிஸேஸ்டரை காண்பித்துவிட்டு தன் பாசமலரிடம் விரைந்தான் பிரணாவ்.

    முகத்தை தொங்க போட்டு கொண்டு கால்களை மடக்கி கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று “உதிக்கா ” என்றபடி உட்கார்ந்தான் .

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் “ரொம்ப ஹர்ட் பண்ணிவிட்டேனா உதிக்கா?????? ஐ  அம் சாரி ” என்றான் .

தம்பியின் முகத்தில் வருத்தத்தை கண்டவள் “ஹே!! நீ ஏன் டா சாரி கேட்கிறாய்???? நான் தான் ஓவர் ரியாக்ட் ஆகி விட்டேன்….. சாரிடா….. யாராவது உன்னை ஏதாவது சொன்னார்களா????” என்றாள் உடனே தன்னை முழுதும் மாற்றி கொண்டவளாக .

“ஆமாம்…. உன்னை சமாதானப்படுத்த என்னை இங்கு அனுப்பி விட்டு நீ செய்ததை ஃபினிஷ் பண்ண அம்மா ப்ளான் பண்ணினார்கள் …. நான் விடுவேனா???? அதை யாரும் தொட கூடாது என்று சொல்லிவிட்டு வந்தேன்…

வா உதிக்கா போய் சாப்பிடலாம்….. ” என்று அவள் கையை பிடித்து எழுப்ப முயன்றான் தனயன் .

   பற்றிய அவன் கரத்தை தனது மற்றொரு கையால் பற்றி “பிரணாவ்……. நீ சொன்னபடி நிரந்திரமாக நான் இங்கேயே வந்துவிட்டால் ??????? ” என்றவளின் பேச்சை முற்று பெற விடாமல் அவள் வாயை பொத்தினான் இளையவன்.

“என்ன பிரச்சனை உதிக்கா???? அந்த ஆளு ஏதாவது சொன்னானா?????”

“எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாயா பிரணாவ் ????? முதலில் அவரை மாமான்னு கூப்பிடு “

“அவ்வளவு மரியாதையை எதிர்பார்க்கிறவள் அவரை விட்டு விலகுவதை பற்றி ஏன் பேச வேண்டும் ?????” என்று அவன் ஆத்திரத்தோடு வினவியபோது உதிதாவிற்கு ஒன்று தெள்ள தெளிவாய் புரிந்தது .

 இவனுக்கு என்றைக்குமே யுகனை பிடிக்க போவதில்லை …..

 இன்னும் சில மாதங்களில் தான் இங்கே வரும்போது வேறு எந்த பிரச்சனையும் நடந்துவிட கூடாது கடவுளே!!! என்று மானசீகமாய் வேண்டிக் கொண்டிருந்தவளை பலவந்தமாக தன் பக்கம் திருப்பினான் பிரணாவ் .

“உதிக்கா ப்ளீஸ் என்னவாக இருந்தாலும் அதை மறைக்காமல் சொல்லிவிடு “

“அப்படி ஏதாவது இருந்தால் உன்னிடம் சொல்லாமல் எங்கே போவேன் பெரிய மனுஷா !!!!!! வா ஸ்வீட் ஹார்ட் கீழே போகலாம்….. சாலட் தீர்ந்துவிட போகிறது” என்று பேச்சை திசை திருப்பியவளை முறைத்தான்.

“உன்னுடையது பளிங்கு முகம் உதிக்கா . ஏதோ பெரிய பிரச்சினை நடந்திருக்கிறது….  என்னிடம் அதை  சொல்லாமல் நீ இப்போது கீழே போக

முடியாது ” என்று அவளை விடாது வாதாடிய போது

 “உதி!!!! இங்கே வாம்மா சீக்கிரம்!! ” என்று ரகுராம் சற்றே சத்தமாக அழைக்கும் குரல் கேட்டது.

 “இதை இப்படியே விட்டுவிடுவேன் என்று நினைக்காதே ….. வா போகலாம் ” என்று எச்சரிக்கை மணி விடுத்து தமக்கையை கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான் பிரணாவ்.  

அனைவரும் டிவி யின் முன் நின்று பரபரப்புடன் ஏதோ பேசிகொண்டிருப்பது தெரிந்தது .

 “என்னப்பா?” என்று ரகுராமிடம் கேட்க அவரோ கவனத்தை டி.வி.யில் செலுத்தியிருக்க அங்கு  பார்த்தவளுக்கோ மயக்கம் வராத குறை .

“தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்த அடுக்கு மாடி

கட்டிடம் சரிந்து விழுந்தது …. உயிர் சேதம் பற்றி எதுவும் தகவலில்லை . படுகாயம் அடைந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!!!! ” அனைத்து நியூஸ் சேனல்களிலும் ஹெட் லைன்ஸ் ஓடிகொண்டிருந்தது.

கணவனின் மொபைலுக்கு தொடர்பு கொண்டவளுக்கு அது ஸ்விட்ச் ஆஃப் என்று பதிலளிக்கவும்

தாமதிக்காமல் அடுத்த நொடியே தேவகியிடம் போனில் பேசினாள்…

  “பயப்படும்படி ஒன்றும் இருக்காது அத்தை . இதை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள் . நான் போய் பார்த்து விட்டு விவரத்தை உடனே தெரிவிக்கிறேன் . டேக் கேர் அத்தை. மாமாவிடமும் பேசி கொள்கிறேன் ” போனை அணைத்ததும்

 “அப்பா நான் இப்போதே தஞ்சைக்கு கிளம்புகிறேன் . அவர் போனில்

பேசியிருந்தாலாவது பரவாயில்லை…. என்ன செய்கிறாரோ!!!!!!! ” என்று மூச்சு விடாமல் பேசியவளை

 “ரிலாக்ஸ் உதிம்மா ” என்று சமன் படுத்த முயன்றனர் வீட்டினர்.

அவளுடன் வருவதாய்  கூறிய ரகுராமிடம் “இல்லை வேண்டாம்பா . ஐ கேன் மேனேஜ்!!!! ” என்றாள் .

“இவனையாவது அழைத்து செல் உதிம்மா…. விடுமுறையில் தானே இருக்கிறான்…. ” என்று பிரணாவை சுட்டி காட்டிய பெரியப்பாவிடம்

“இன்னும் மூன்று நாட்களில் எக்ஸாம்ஸ் ஆரம்பிக்க இருக்கிறது ….. அங்கே நிலைமை எப்படியோ போய் பார்த்துவிட்டு ப்ரணாவை கூப்பிடுகிறேன்!!! ” என்று மறுத்துவிட்டு தன்னந்தனியாக தன்னவனுக்காக தஞ்சாவூருக்கு பறந்தாள்.

ஏர்போர்ட்டில் தமக்கையிடம் முகத்தை திருப்பி கொண்டிருந்தவனிடம் “இப்போது  நீ வந்தாயானால் இந்த செமஸ்டர் கெட்டுவிடும் . அங்கு எனக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால்  எப்படியும் உன்னை தானே கூப்பிடுவேன்….  அதற்குள் படித்துமுடித்து விடு சரியா ? இப்படி இருந்தாயானால் அங்கு இல்லை எங்கு சென்றாலும் இந்த உம்மணா மூஞ்சி தான் நினைவு வந்து கொண்டே இருக்கும் ” என்றாள் .

“நீ வந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை ….. இப்போது என்னை விட யார் யாரோ உனக்கு முக்கியமாக போய் விட்டார்கள் போலும்!!!!! ” என்றவனை வாத்சல்யமாய் பார்த்தாள்.

 “என்ன பிரச்சனைனு கேட்கிறேன்ல!!!!!” வீட்டில் சிலிர்த்து எழுந்து மிரட்டிய பெரிய மனுஷன் தற்போது  சிறு பிள்ளை தனமாய் கோபித்து கொள்வதை கண்டு

 “எத்தனை பேர் வந்தாலும் என் ஸ்வீட் ஹார்ட் கிட்ட நெருங்க முடியுமா ?????”

சமாதான படுத்தவும்

 “ஐஸ் வைக்காதே உதிக்கா . பத்திரமாக  பார்த்துகொள் . போனவுடன் போன் பண்ணு ” என்று வழியனுப்பிய  ப்ரணாவின் நினைவில் தஞ்சையில் காலெடுத்து வைக்கும் வரை  மூழ்கியிருந்தாள் உதிதா .

       

        கலெக்டர் அலுவலகத்திற்கு படபடக்கும் இதயத்தோடு சென்றவளுக்கு யுகன் இன்னும் விபத்து நடந்த இடத்தில் தான் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்தவளுக்கு

 பரபரப்புடன் அனைவரும் இயங்கிய வண்ணம் தேவையானவர்களுக்கு இளைஞர்கள் அங்குமிங்கும் ஓடி உதவி செய்து கொண்டிருக்க

அம்மா…அப்பா…. என்ற இரைச்சல்களுக்கு இடையே  கணவனை காண்பதே அரிதாக பட்டது .

 பயத்துடன் அலைபாய்ந்த கண்கள் ஓர் ஆடவனிடம் நிலைக்க “நிச்சயம் அது யுகனாக தான் இருக்க வேண்டும்” என்று பின்புறமாய் திரும்பியிருந்தவனிடம் ஓடினாள்.

ஆனால்  அந்த இளைஞன் அவளது யுகனாக இல்லாத பொருட்டு எட்டி பார்த்த கண்ணீரை சமாளித்து உள்ளிழுத்து கொண்டவள் “யுகிக்கு எதுவும் ஆகியிருக்காது !!!! ” உருப்போட்டபடி மீண்டும் தெம்பை திரட்டி கணவனை தேடலானாள்.

அரை மணி நேர தேடலுக்கு பின் சற்று தொலைவில் நின்ற யுகனை முழுதாக கண்டு கொண்ட பின் தான் உதிதாவிற்கு போன உயிர் திரும்பி வந்தாற் போல் இருந்தது .

அதே சமயம் நன்கு களைத்திருந்த யுகனும் உதிதாவை  பார்த்து விட்டு

அவளிடம் விரைந்த போது “அம்மு!!!!!!!!!”வென்று அவள் மேலே மயங்கி சரிந்தான் .

தண்ணீர் தெளித்தும் மயக்கம்  தெளியாததால் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் படுக்க வைத்து டாக்டர் பரிசோதித்தார் .

“ஹைப்பர் டென்ஸன் காரணமாக ஏற்பட்ட மயக்கம் …. சத்து ஊசி போட்டிருக்கிறேன் ….   ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்  ….. அவரை வீட்டிற்கு  அழைத்து செல்லுங்கள்…. வேறு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் நானே வந்து பார்க்கிறேன்….”  என்ற டாக்டரின் பரிந்துரையின்படி யுகனை கோட்ரஸிற்கு கூட்டி போனாள் மனையாள்.

      இன்னும் மயக்கம் தெளிந்திராதபடி முனகியவனை தொட்டு பார்த்தாள். அடுப்பிலிருந்து எடுத்த  சூடான பாத்திரத்தை தொட்டது போல் கொதித்தது நெற்றி…..

இப்போது என்ன செய்வது என்று ஒரு நொடி தடுமாறியவள் வீட்டிற்கு தகவல் கொடுத்தால் வீண் பதற்றம் தான் என்பதை உணர்ந்து சூழ்நிலையறிந்து உடனே செயலாற்ற தொடங்கினாள்.

காய்ச்சலில் புரண்டவனுக்கு  ஈரத்துணியை ஒற்றி எடுத்தவள் பாராசிட்டமால் டாப்லெட்டை அலமாரியில் தேடி எடுத்து வந்தாள்.

 மாத்திரை கொடுக்குமுன் ஆகாரம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி கிட்சன் பக்கம் சென்றாள்.

தனக்கு தெரிந்த அளவிற்கு அரிசி கஞ்சியை கிண்டி அதை ஒரு பவுலில் ஊற்றி ஸ்பூன் போட்டு

எடுத்துகொண்டு வந்தாள்.

அதை அருகிலிருந்த  டீபாயின் மீது வைத்துவிட்டு கணவனை எழுப்பி  உட்கார வைக்க முயன்றாள்.

இருமுறை கூப்பிட்டும் அசைவின்றி

படுத்திருந்தவனின் இரு தோள்களையும் பற்றி பாதி அணைத்தாற் போன்ற நிலையில் எழுப்பியவளை  கண்ணிமைக்கும் நொடிக்குள் அதிவேகமாக பற்றி இழுத்து தன்னோடு  இறுக்கமாக கட்டி கொண்டான் யுகன் .

என்ன நடக்கிறது?????? என்று உதிதா  யூகிக்குமுன்னே அவனது உஷ்ணமான முத்தங்களை மனைவியின்  முகமெங்கும் பொழிய ஆரம்பித்தான் அவளது கொடுங்கோல் ஆட்சியாளன் .

 “வேண்டாம் யுகன் ப்ளீஸ்!!!!” என்று அவள் சொல்ல நினைத்த வார்த்தைகள் காற்றோடு காற்றாக பறந்து சென்றன …..

ஏற்கவும் முடியாமல் விலகவும் தோன்றாமல் கணவனின் வலிய பிடிக்குள் சிக்குண்டவளை

காய்ச்சல் வேகத்தில் அவன் “அம்மு!!!!!” என்று அனத்தியபடி சரசமாடியதும் 

மின்சாரம் பாய்ந்தாற்போல் தாக்கியது….

 அவன் கரத்தை அவசரமாக  தட்டி விட்டு “யுகன்…. கொஞ்சம் கண்ணு முழிச்சு பாருங்களேன்…..  நான் உதிதா!!!!! ” என்று தன்னிடமிருந்த ஒட்டு மொத்த  சக்தியையும் திரட்டி பேசினாள்.

அவள் சொற்களில் சுய நினைவு பெற்று அணைத்திருந்த  மனைவியை சடாரென விட்டு விலகி பின் புறமாய் திரும்பி அமர்ந்து கொண்டவனின் உடல் முழுவதும் வியர்த்திருந்தது .

கணவனின் பிடி விலகியதும் எழுந்து அடுத்த அறைக்குள்

ஓடியவளின் இதயத்துடிப்பு சீராக சில மணி நேரங்களானது .

ஏன் இன்று இதுபோல் எல்லாம் நடந்து கொள்கிறான் ?????

 இப்போது நடந்த செயல் அவன் அறியாமல் நடந்திருந்தாலும் மாலை தன்னை பார்த்து தானே அம்மு

என்றான் ?????

 அல்லது அதுவும் சுயநினைவற்று மயங்கும் வேளையில் உதிர்த்த அழைப்போ!!!!!

குழம்பியவளுக்கு அந்த ‘அம்மு’ யாரென்று அறிந்தே ஆக வேண்டும் என்பது போல் ஒரு பேரவா எழுந்தது…..

அதே சமயம் “எப்படி உதி இதை போய் அவனிடம் கேட்பாய்???” மூளை எழுப்பிய வினாவிற்கு

” இப்போ என்னை கட்டிபுடிச்ச போது அம்முனு சொன்னீங்களே!!!!!

அது நான் தானேனு போய் கேளு !!!!”

மறைக்காமல் தன்னை வெளிகாட்டி கொண்டு பதிலளித்தது மனம்….

“உன்னை போ என்று துரத்தியவனின் காலில் போய் விழுவதற்கு பதில் பேசாமல் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கலாம் உதி!!!!!!” அறிவும் மனமும் நேர் கோட்டில் எடுத்துரைக்க

அவ்வேலையை தாமதமின்றி செவ்வென செய்தாள்…..

       அடுத்த நாள் அவனறைக்குள் சென்றபோது யுகன் குளித்து முடித்து வெளியே செல்ல தயாராக இருந்தது தெரிந்தது .

மனைவியை அறைவாசலில் கண்டவன் முகத்தை காட்டாமலேயே

“இன்று கிளம்புகிறாயா ????? டிக்கெட் போடட்டுமா????” என்றான் வெடுக்கென….

Advertisement