Advertisement

அத்தியாயம் 6

 அறை தட்டப்படும் ஓசையும் “யுகன் யுகன் … என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் அவசரமோ என்று அஞ்சி “என்னப்பா ?????” என்று கேட்டபடி பதற்றத்துடனே எழுந்து கதவை நோக்கி விரைந்தான் யுகன் .

“ஒன்றுமில்லை யுகன்……  அம்மாவின் தூக்க மாத்திரையை உதிதா கையோடு எடுத்து வந்து விட்டாள் போலும் …. அதை வாங்குவதற்காக தான் வந்தேன்!!! ” என்றதும் சற்றே நிதானமானவன்

 “இதோ எடுத்து வருகிறேன் அப்பா!!” என்று மாத்திரையை தேடலானான் .

எங்கே வைத்திருப்பாள் ???? அறை முழுவதும் தேடியவன் மாத்திரையை

காணாது அவளிடமே கேட்டு விடலாம் என்று உள் அறை கதவை மெதுவாக தட்டினான்….

அது தாழிடாமல் இருந்ததால் வேகமாக  உள்ளே சென்று  கட்டிலிலேயே மாத்திரை இருப்பதை கண்டு எடுத்தவனுக்கு ஒரு பொறி தட்டியது….

இப்போது கதவை திறக்கும் போது உதி டிரெஸ்ஸிங் ரூமில் படுத்திருப்பது அப்பாவிற்கு தெரிந்தால் வீண் கேள்விகள் எழலாம் என்று உணர்ந்து  அதிவிரைவாக மனைவியை தூக்கி தன் கட்டிலில்  கிடத்தினான்.

பின் கதவை திறந்து மாத்திரையை கொடுத்து “நான் வேண்டுமானால் வரட்டுமா அப்பா ???? அம்மா ரொம்பவும் சிரமப்படுகிறார்களா?????” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம் யுகா. சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்!!!!”

“என்னப்பா சாரி எல்லாம்…. மிஸ்டேக் இஸ் அவர்ஸ் டூ .. சாரி அப்பா ..”

“இட்ஸ் ஓகே .. போய் படுபா குட் நைட்!!!!! “

         அப்பாவிடம் விடைபெற்று வந்ததும் தூக்க கலக்கத்தில் தன்னருகில் இருந்த தலையணையை எடுத்து அணைத்தவளை கண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்…..

 மனைவியின்  தலை முடியை மிருதுவாக  கோதி விட்டவன்

“இந்த கோலிகுண்டு கண்களை விரித்து விரித்து ஏனடி கொல்கிறாய்?????” என்று தன்னையுமறியாமல் தன் இதழ்களை அவற்றிடம் ஒற்றி எடுத்தான் .

அவளது செவ்விதழ்களை வருடியவனுக்கு இப்படி பண்ணுவது தவறென மூளை அறிவுறுத்த உடனே அந்த செயலிலிருந்து பின்வாங்கினான் .

 தலையணையை கட்டி பிடித்திருந்த  

கரத்தை பிரித்து எடுத்து  தன் கையோடு இணைத்து தன் மார்பில் வைத்து கொண்டவன் “இங்கே நடக்கும் போராட்டம் பற்றி எந்த கவலையுமில்லாமல் எப்படி உன்னால் இவ்வளவு நிம்மதியாக தூங்க முடிகிறது?” என்று துயில் கொண்டவளிடத்தில் சண்டை போட்டான் .

“நான் எப்போது வேண்டுமானாலும் விழித்து கொள்வேன்…. ஜாக்கிரதை!!!” என்பது போன்று பயமுறுத்திய விழிகளை பார்த்து

“என் வசத்தை இழக்க செய்யும் அளவிற்கு இதில் என்ன தான் ஒளித்து வைத்திருக்கின்றாய் ???? உன்னிடம் நிறைய பேச வேண்டும் …..

ஆனால் நீ விழித்திருக்கும் போது அது நடக்காத ஒன்று  …..

 எங்கே என் மனதில் இருக்கும் என் காதலை பற்றி நீ தெரிந்ததும் என்னை நீ மறுத்துவிட்டால் அதை தாங்கி கொள்ளும் சக்தி சத்தியமாக எனக்கில்லை ….

 அதனால் தான் உன்னை பிரிந்துவிட

முடிவு செய்தேன் ……

 காதல் இல்லாமல் திருமணம் என்னும் பந்தத்திற்காக இந்த வாழ்வை நாம் தொடங்குவதை ஒரு போதும் என்னால் ஏற்று கொள்ள முடியாது !!!!

நீயாவது நிம்மதியாக வாழ வேண்டும் ….

 உன்னை பத்திரமாக பார்த்துகொள்!!!” எனும்போது அவன் அனுமதியின்றி  ஒரு சொட்டு நீர் வெளிவந்து அவள் பட்டு கன்னத்தில் தெளிக்க முகத்தை சுருக்கினாள் அவனவள்.

இதற்கு மேல் பேசினால் கண்டிப்பாக  விழித்து விடுவாள்  என்றுபட சொல்பேச்சு கேட்டு தன் மார்பில் புதைந்திருந்த அவள் கரத்தை தலையணையிடம் சேர்த்தான் யுகன் .

 அருகிலிருந்த சோபாவில் சாய்ந்தவன் பல எண்ணங்களை அலைபாய விட்டு விடியற்காலையில் கண் அயர்ந்தான்.

      கிழக்கு வானை செம்மை பரப்பி கொண்டு வந்த கதிரவன் ஜன்னல் வழியே உதிதாவின் எழிலில் மயங்கி

அவள் மேல் படர சுகமாய் அணைத்திருந்த இமை கூட்டுகளை மென்மையாக பிரித்தெடுத்தாள் ……

எழுந்து உட்கார்ந்தவளுக்கு தான் இருக்கும் கட்டிலை பார்த்ததும் தலையே சுற்றுவது போல் தோன்ற மீண்டும் இமைகளை அழுந்த ஒட்டி கொண்டாள் …..

நாம் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் ????? ஒருவேளை தூக்க கலக்கத்தில் எழுந்து வந்துவிட்டோமோ????

கொடுங்கோல் ஆட்சியாளன்  சும்மாவே சண்டை போடுவான் ….. இதில் தான் இப்படியெல்லாம் வேறு செய்து  வைத்திருப்பதற்கு என்ன கத்து கத்த போகிறானோ????? எதற்கும் முன்கூட்டியாக பஞ்சை காதில் அடைத்து வைக்க வேண்டியதுதான் …..

ஆமாம் அந்த  ஆருயிர் கணவர்  எங்கே??? காணோம்!!!

 அலைபாய்ந்த கண்கள் சற்று தள்ளியிருந்த சோபாவில்  லயிக்க இவன் ஏன் சோபாவில் தூங்குகிறான் ???? இவனுக்கு இதே வழக்கமாகி விட்டது போலும்!!!!!

அல்லது தான் இங்கு வந்ததும் தான்

சோபாவிற்கு சென்றிருப்பானோ ????

 பின்னே நீ வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் உதி???

உன்னை அப்படியே கொஞ்சியிருக்க வேண்டுமா??? என்று மனம் ஒருவித ஏக்கத்துடன் வினவ

” இது என்ன முட்டாள் தனமான கேள்வி ????” என்று தன்னை தானே நொந்து கொண்டபடி கடிந்து கொண்டாள்.

அவன் மனதில் தனக்கு இடமில்லாத போது…… அப்படியே திருமணம் என்னும் கட்டாயத்திற்காக அன்பு உண்டாகும் என்றாலும் அவன் அதை ஏற்று கொள்ள முயற்சியாவது செய்ய  வேண்டும்…..

‘நான் எதையும் செய்ய மாட்டேன்…. நீ தான் உங்க அக்காவை ஓட வைத்து என் திருமணத்தில் சதி செய்தாய்… அதனால்  ஆறு மாதத்தில் இங்கிருந்து கிளம்பிவிடு’ என்று சட்டம் பேசி திரிகிறவன் நான் இங்கே வந்ததற்கு எப்படி ஒரு அறை விடாமல் விட்டான் ????

அப்படியென்றால்!!!! நானாக இங்கு வரவில்லையோ????? என்று யோசித்தவளுக்கு மீண்டும் ஒரு முறை தலை சுற்றியது.

இவன் எதற்காக தன்னை இங்கு கூட்டிவந்து படுக்க வைத்திருப்பான் ? கூட்டி வந்தானா அல்லது தூக்கி ……….. நினைக்கும் போதே உடலெங்கும் ஒருவித புதிய ரசாயனம் பரவி புல்லரிப்பது போல் சிலிர்த்து உலுக்கி கொண்டாள்.

 எழுப்பி நடக்க வைத்திருந்தால் கண்டிப்பாக தெரிந்திருக்கும் ….. அவளிடம் ரகசியம் பேசி சிரித்த அவன்  தொட்ட பாகங்களை அதட்டி கணவன் முகம்

பார்க்க முடியாமல் குளியறைக்குள் புகுந்து கொண்டாள் உதிதா.

நேற்று இரவு அப்படி என்ன தான் நடந்திருக்கும்???? மற்ற எல்லா  விசயங்களில் அவனிடத்தில் எதிர்த்து வம்பு பேசியவளால் இதை பற்றி ஏன் பேச முடியவில்லை என்றும் குழம்பி போனாள்…..

கண்டிப்பாக ஏதும் காரணமில்லாமல் இதை செய்திருக்க மாட்டான் என்று நம்பியவளுக்கு தேவகியை  பார்த்த போது விஷயம் தெளிவானது .

“நான் அப்போதும் வேண்டாம் என்று தான்மா சொன்னேன் . உன் மாமா தான் ‘மாத்திரை போடமால் உனக்கு தூக்கம் வந்த பாடாக தெரியவில்லை’ என்று கூறிவிட்டு உங்கள் அறைக்கு வந்தார் ” என்று மாமியார்  சொன்ன போது தான் உதிக்கு உறைத்தது இரவு மாத்திரை அட்டையை கையோடு எடுத்து சென்றது.

“சாரி அத்தை ….. அவர் கூப்பிட்டதும் அப்படியே சென்று விட்டேன். ரொம்ப நேரம் கஷ்ட பட்டிருப்பீர்கள் போலும் . சமாளிக்கும்படி இருந்திருந்தால் மாமா வந்திருக்க மாட்டாரே??? ” என்று மெய்யான வருத்ததுடன் மொழிந்தவளை பார்த்து புன்னகைத்தார் தேவகி .

“யுகா ஏன் இன்னும் கீழே வரவில்லை உதிம்மா???? இவ்வளவு நேரம் தூங்க மாட்டானே??? எதாவது வேலை பார்த்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை போய்  கையோடு சாப்பிட கூப்பிட்டு வாம்மா!!! “

உள்ளே படபடத்த போதும் அதனை வெளியே காட்டாதவாறு “சரி அத்தை ” என்றாள் மருமகள்.

மாத்திரையை கொடுத்துவிட்டு வரும் அறிவு கூட உனக்கு கிடையாதா ? என்ற திட்டை எதிர்பார்த்து கணவனிடம் விரைந்தவளுக்கு  ஏமாற்றத்தை தான் மனைவிக்கு  பரிசாக அளித்தான் அவள் கணவன்  .

 அப்போதுதான் விழித்திருப்பான் போலும்….. ஸோஃபாவிலேயே அமர்ந்திருந்தவன் உதிதா வருவதை உணர்ந்து “டூ மினிட்ஸ் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்!!! ” என்று அவளை பாராமல் சொல்லிவிட்டு சென்றான் .

  அடுத்து வந்த இரு மாதங்களிலும் வார இறுதியில் வீட்டிற்கு வந்தவன் மனைவியிடம் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் . கணவனின் பாராமுகம் ஏனென்று தெரியாத போதும் உதிதாவை பாடாய்படுத்தி மிகவும் வருத்தியது .

 தங்கள் இருவருக்கும் இடையில் மெலிதான இரும்புத்திரை ஒன்று விழுந்திருப்பது மட்டும் தெரிந்தது. தானாக வலிய  போய் பேசினாலும் அந்த லாப் டாப்பிலிருந்து மறந்தும் கூட கண்களை அகற்றுவதில்லை…..

என்ன செய்துவிட்டோம்????

மாத்திரையை கையோடு கொண்டு

வந்தது அவ்வளவு பெரிய குற்றமா???

வெட்கத்தை விட்டு அதற்கும் போய் விளக்கம் கூறியாயிற்று…..

அன்று தெரியாமல் தான் அப்படி செய்தேன் என்று!!!!

“ம்ம்ம்ம்” என்றானே பார்க்கலாம்….. அவன் பார்த்து கொண்டிருக்கும் லாப்டாப்பை தூக்கி அவன் மண்டையை உடைக்கும் உதிதாவிற்கு வெறி எழுந்தது……

 ‘அம்மாவிற்காக’ என்று செய்யும்

சில்மிஷங்களை மறந்திருந்தாலும் பரவாயில்லை ….. பேசாமல் ஏன் புறக்கணிக்க வேண்டும்???????

 இருக்கிற வரைக்கும் சண்டை போட்டு கொண்டாவது இருக்கலாம் அல்லவா???? என்று ஏங்கிய மனதை எப்படி சமாளிப்பது என்று தவித்து கொண்டிருந்த தருணத்தில் தான் ஒரு நாள் பிரணாவ் வந்திருந்தான் .

“ஹே!!!! வாடா….. எப்படி இருக்கிறாய்?”

என்று ஆசையோடு அணைத்து கொண்ட தமையாளை தட்டிவிட்டான் பிரணாவ் .

“நான் எப்படி இருந்தால் உனக்கென்ன?”

“என்னடா ஆச்சு?”

“இன்னும் ஒன்றுமாகிவிடாமல் இருப்பது தான் மிச்சம் “

“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? வீட்டில் ஏதாவது பிரச்சனையா?” என்று பதறியவளின் மடியில் முகம் புதைத்தான்.

அவன் தலைமுடியை கோதிவிட்டு மெல்ல நிமிர்த்தியபோது பிரணாவ்வின் கண்கள் கசிந்திருந்தன .

“பிரணாவ்…” என்று அவன் கன்னத்தை உதிதா தொட்ட போது

 “என் பெயரையெல்லாம் ஞாபகம்  வைத்திருக்கிறாய் போல!!!! ” என்றான் அனுஜன் சீற்றம் தெறிக்க .

இவனுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபோது “ஏன் உதிக்கா திருமணம் ஆகிவிட்டால் பிறந்த வீட்டை மறந்துவிடணும் என்று யாராவது சட்டம் எழுதி வைத்திருக்கின்றார்களா???

 நீ எங்களிடம் பேசி இரு மாதங்கள் ஆகிவிட்டன …. தெரியுமா?????

நான் ஒரு முறை கூப்பிட போது “பள்ளியில் பிஸியாக இருக்கிறேன்… முக்கியமான மீட்டிங்!!!!” என்று வைத்துவிட்டாய் .

அடுத்த முறை கூப்பிட்டபோது அதை எடுத்து பிஸியாக இருக்கிறேன் என்று சொல்ல கூட உனக்கு நேரமில்லை போலும் !!!!

சரி நீயாக கால் பண்ணுவாய் என்று ஃபோனை பார்த்து பார்த்து ஏமாந்தது  தான் மிச்சம்” என்று பிரணாவ் அனல் பறக்க கேட்ட போது தான் அவளுக்கு உண்மையிலேயே விளங்கியது வீட்டில் யாரையுமே தாம் தொடர்பு கொள்ளவில்லை என்பது…..

இவனுக்கு இதை எப்படி புரிய

வைப்பது???? யுகனை பற்றிய சிந்தனையிலிருந்ததால் தன்னையுமறியாமல் நிகழ்ந்துவிட்டது என்று சொன்னால் அதை ஏற்று கொள்வானா????

 கடவுளே வந்து இதற்காக வேறு ஒரு காரணத்தை தயார் செய்து எடுத்துரைத்தாலும் ஒப்பு கொள்ள மாட்டான் என்று அறிந்திருந்த தமக்கை

“சாரி மை ஸ்வீட் ஹார்ட்!!!! இனியொரு முறை இதுபோல் நடக்காது என்று ப்ராமிஸ் செய்கிறேன் ” என்று சமாதானம் கூறியதற்கு திரும்பியிருந்த தலை லேசாக கூட ஆடவில்லை .

“நான்கு நாட்கள் அங்கு வந்து இருக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்…. இப்படி திருப்பி கொண்டிருந்தால் எப்படி வருவதாம் ” என்று வலுக்கட்டாயமாக அவனை தன் புறம் திருப்பினாள்.

“நீயாவது!!!! அங்கு வந்து தங்குவதாவது!!!! அதுவும் நான்கு நாட்கள்!!!! சான்ஸே இல்லை உதி!!!! “

“நான் கிளம்பிவிட்டேன் . முடிந்தால் உன் பைக்கில் கூட்டி போ…. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என் ஸ்கூட்டியிலே வந்து விடுகிறேன் “

“நிஜமாகவா உதிக்கா????? “

“ஃபோர் டேஸ் நோ அப்பாயின்ட்மென்ட்ஸ்…

ஒன்லி வித் யூ மை ஸ்வீட்ஹார்ட்!!!!! “என்றாள் மென்னகை வழிய .

“இந்த கொஞ்சல்ஸ்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை ” என்று போலியாக அலுத்து கொண்ட போதும் அவளோடு சேர்ந்து சிரித்தவன் வீட்டில் தேவகியிடம்

சொல்லிக்கொண்டு உதிதாவை தன்னோடு அழைத்து சென்றான் .

 போகும் வழியில் “அம்மா அழுதுகொண்டே இருக்கிறார்கள் உதிக்கா …. யசோம்மா தான் சமாதானம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள் …..

 சித்தப்பா ஒருதரம் ப்ரணிக்கா பற்றிய

பேச்சை எடுத்த போது அப்பா ரொம்ப டென்ஷன் ஆகி பிபி அதிகமாகிவிட்டது…..

 அம்மா அப்பாவிடம் பேசி கூட ஒருவாரம் ஆகிறது …. வீடு வீடு மாதிரியே இல்லை உதிக்கா . நரகம் மாதிரி இருக்கிறது!!!!!” என்று புலம்பியவனின் தோளை ஆதரவாக பற்றினாள் உதிதா.

“சீக்கிரம் ப்ரணிக்கா வந்து விடுவாள்டா . நம் பிரச்சனை எல்லாம் பறந்துவிடும் … பெரியப்பாவும் புரிந்து கொள்வார்”

“நாம் வேண்டாம் என்று ஓடிபோனவளுக்காக ஏன் உதிக்கா இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறாய்?????”

“என்னடா இப்படி பேசுகிறாய்????? ஒரு வேளை ப்ரணிக்காவிற்கு பதில் நான் ஓடி போயிருந்தால் இப்படி தான் என்னையும் வெறுத்து விடுவாயா பிரணாவ் ????”  என்றதும் சடாரென பிரேக் பிடித்தவன்

 “உளறாதே!!!!! உன்னை பற்றி என்னைவிட யாருக்கு நன்றாக

தெரியும்?????  அன்று நிதிஷ் அவர் காதலை உன்னிடம் சொன்னபோது அவரிடம்  கூறிய பதிலை நீ வேண்டுமானாலும் மறந்திருக்கலாம் .

 ஆனால்  என்னால் அதை ஒரு போதும் மறக்க முடியாது . நீயாவது காதலுக்காக நம் வீட்டை விட்டு போவதாவது!!!!!!” என்றபோது நிதிஷும் அன்றைய நிகழ்வும் உதிதாவின்  நினைவிலாடியது.

   

Advertisement