Advertisement

அத்தியாதம் 5

  நான்கு நாட்களும் நான்கு நொடிகளாக  பறந்திருக்க வெள்ளிகிழமை காலையில் தன் புகுந்த  வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா .

வாசலிலேயே அவளை எதிர்கொண்ட தேவகி “வாம்மா இப்போதுதான் உன் வீட்டிற்கு போன் செய்தேன் . நீ புறப்பட்டு விட்டதாக சொன்னார்கள் “என்றார்.

 “முதலில் அவளை உள்ளே வர விடு தேவகி ” என்று சிரித்த கார்த்திகேயன்

“மகனும் மருமகளும் வரப்போகும் குஷியில் கால் தரையில் படாமல் நாட்டியமாடுகிறது போலும் ” என்று மனைவியை  வம்பிழுக்க

“உங்கள் மருமகளுக்கு தான் நாட்டியம் அத்துபடி . அவளது ஆட்டத்தை பார்ப்பதென்றால் சாப்பாடு கூட வேண்டாம்…. நாள் முழுவதும்

பார்த்துக்கொண்டே இருக்கலாம் …. எப்போதும் பிசினஸ் பிசினஸ் என்று பள்ளி விழாவிற்கு எல்லாம் வராமல்  நீங்கள் தான் மிஸ் பண்ணிவிட்டீர்கள் ” என்று லேசான வருத்ததுடன் குறைபட்டார் தேவகி .

“அதனால் என்ன இன்று முழுவதும் நான் ஃப்ரீ தான் . இப்போது ஆடினாள் என்றால் என் கண்ணும் குளிர்ந்துவிட்டு போகட்டும் “

“புயல் தான் வரபோகிறதோ என்னவோ இன்று நீங்கள் வீட்டில் இருப்பதற்கு…. ” என்று சிரித்துவிட்டு

 “நீ உன் கச்சேரியை தொடங்குமா ” என்றார் பள்ளி முதல்வரான அவர்கள் வீடு எஜமானி .

“ஐயோ அத்தை!!! புருஷன் பொண்டாட்டி ஃபைட் நன்றாக இருக்கிறதே என்று சற்று நேரம் உங்கள் அருகில் உட்கார்ந்ததற்கு எனக்கு தண்டனையா????” என்று போலியான பயத்துடன் பின் வாங்கினாள்

உதிதா.

 “ஏன் உதிம்மா உன் மேடமாக சொன்னபோது உடனே ஆடினாய்….. அத்தையும் மாமாவும் கேட்கும் போது இப்படி மறுக்கின்றாய்?” என்றதும்

 “நான் கிளீன் போல்ட் அத்தை….. பீ ரெடி ….. இப்போதே கச்சேரியை வைத்து கொள்ளலாம்  ” என்று எழுந்தாள் உதிதா ….

**கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்ல கண்ணனே வா !** என்ற கிளாசிக்கல் மெலோடி பாடலிற்கு  தான் பயின்ற நாட்டிய கலையை மெய் மறந்து மெருகேற்றி ரசித்து ருசித்து வெளிபடுத்தினாள்….. அவள் கைகள் காட்டும் நளின வித்தைக்கு ஈடாக சலங்கை ஏதுமின்றியே கால்கள் எழுப்பும் தாண்டவ ஓசையோடு கூடிய பரதத்தை காண்பவர் எவராயினும் தன்னை மறந்துவிடுவர்…..

வருடா வருடம் பள்ளி மேடையில் உதிதாவின் ஆட்டத்தை கண்டு களித்திருந்த தேவகி வழக்கம் போல் தன்னை தொலைத்து  மருமகளின் ஆட்டத்தில் லயித்திருக்க கார்த்திகேயனோ பல வருடங்கள் கழித்து ஒரு சீழ்க்கை அடித்து உற்சாகமானார் …….

   ஆடல் முடிந்ததும் இருவரும் பேச்சற்று விழிக்க ” மாமா திஸ் இஸ் அன்ஃபேர்…

ஒரு பேச்சிற்காவது நல்லா இருக்கிறது என்று சொல்லலாமே !!!” என்று உதிதா குறைபடவும்

 “ரியல்லி இட்ஸ் அன் அமேஸிங் பெர்ஃபார்மன்ஸ்மா…. தூள் கிளப்பிட்ட!!!

இது பேச்சிற்கு என்று சொன்னால் நடன கலையே என்னை திட்டி தீர்த்துவிடும்  …..

ஸ்டே பிளஸ்ட் மா” என்ற வாழ்த்தினார் கார்த்திகேயன்…..

 “தேங்க்ஸ் மாமா ” என்று தன் அழகிய தெத்துபல் வரிசை தெரிய சிரித்தவள் “நீ

எப்போது யுகா வந்தாய் ?” என்ற தேவகியின் குரல் கேட்டு திடுக்கிட்டு வாசற்புறம் திரும்பினாள்.

    ஹால் கதவில் வாகாக சாய்ந்து கொண்டு கைகட்டியபடி ஊடுருவும் பார்வையோடும் சன்னமாய் சிரிக்கும் இதழ்களோடும்  நின்ற கணவனை பார்த்தவளுக்கு மூச்சு முட்டியது என்னவோ உண்மை…..

பாட்டு ஆரம்பிக்கும் போதே வந்திருப்பானோ ???

இல்லை ஒருவேளை  ஆட்டத்தை பாதியிலிருந்தாவது பார்த்திருப்பானோ?????

இது அவனுக்கு பிடித்திருக்குமா????

இல்லை கணவன் வருவான் என்று தெரிந்திருந்தால் வேறு ஏதாவது பெப் ஸாங்கிற்கு ஆடியிருக்கலாமே!!!! இது போன்ற கிளாசிக்கல் பாட்டை பொதுவாக எல்லோரும் ரசிக்க மாட்டார்களே!!!! இவனுக்கு எந்த மாதிரி பாடல்கள் பிடிக்கும்??????

என்று பலவாறு கற்பனை கேள்விகளை அடுக்கியவளின் மனதை

 “உதி போதும்!!! அவன் அடுத்த பக்கம் திரும்பி ஆறு மாசம்  ஆச்சு…. ஆமாம் இப்போது உன் ஆட்டம் அவனுக்கு பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் தான் என்ன?????  ” அறிவு கேலி செய்ய கனவுலகத்தை மூட்டை கட்டிவிட்டு நடப்பிற்கு வந்தாள்.

     “வேலை அங்கு குறைவு என்பதால் சீக்கிரம் புறப்பட்டு வந்தாயா????” என்ற தந்தையின் கேள்விக்கு

“இன்று அங்கு லோக்கல் விடுமுறை அப்பா ….. அதான் காலையிலேயே திருச்சிக்கு சென்று ஒரு ஃப்ளைட்டை பிடித்து ஓடி வந்தேன் ” என்று பதிலளித்திருந்தான் மகன் .

“உன் பொண்டாட்டியின் நாட்டியாளையம் இருப்பது தெரிந்திருந்தால் நீயே லீவ் போட்டு கொண்டு ஓடி வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை …..

 அன்று பள்ளியிலேயே அவளை

கண்டிப்பாக ஆட சொல்லு என்று கேட்டாய் தானே!!! ” என்று தேவகி சிரித்தபடி மகனிடம் கேட்கவும் விறுவிறுவென மாடிப்படிகளில் தாவினான் .  

என்னது???????

 பள்ளியில் நடனமாடும்படி சொன்னது யுகனா?????? ஏன்????? என்று  மலைத்து யோசித்து கொண்டு நிற்கையிலேயே “உதி மேலே வா!!!!” என்றொரு ஆணையையும் மனைவிக்கு பிறப்பித்துவிட்டு சென்றான் .

         

இதே வேறொரு சமயம் என்றால் இவன் யார் தன்னை அதிகாரம் செய்வதற்கு வேண்டுமென்றே கூட அங்கேயே நின்றிருப்பாள் .

ஆனால் இன்றோ அவளது

கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மறுபேச்சின்றி கணவனை பின்தொடர்ந்தாள் உதிதா .

அவள் அறைக்கு வந்ததும் கதவை வேகமாக சாத்தியவன் அவளை நெருங்கி அவள் கண்களில்  தன்னதை கலக்க விட்டான்….

ஒரு நிமிடத்தை ஒரு யுகமாக மாற்றி காட்டி தன்னை இழக்க நினைக்கையில் மனைவியின் மான் விழிகள்

 ‘ இப்போது என்ன செய்ய போகிறாய்?!?!’ சிந்திய சிறு  பயத்தை கண்டு கொண்டு  பின் வாங்கி

 “அபிஷேக் இஸ் ஸோ லக்கி ” என்றான் யுகன் சம்பந்தமில்லாமல்  …..

என்னடா நடக்குது இங்கே????

எதற்காக இப்படி பார்த்து வைத்தான்???

யம்மாடி!!!!

இவன் பக்கத்தில் இனி ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் உதி…… ஆமாம் என்னமோ சொன்னானே!!  ஹான்!! அபிஷேக் இஸ் லக்கி!!!! என்று தான் கேட்டது……

யாருடா இந்த அபிஷேக் ??????

ஏன் சம்பந்தமில்லாமல் இந்த நேரத்தில் இப்படி உளறுகிறான் ????? என்று தோன்றியபோதும்

அன்று ஏன் தன்னை நடனமாட சொல்லியிருக்க வேண்டும்  என்ற கேள்வி முதன்மையாக  மேலோங்க தன்னையே பார்த்து கொண்டிருப்பவனிடம்

 “அத்தையிடம் நீங்களா என்னை பள்ளியில்  அன்று டான்ஸ் ஆட சொல்ல சொன்னீர்கள் ?” வினவினாள்.

மனைவியின் கேள்வியை பொருட்படுத்தாமல்

 “எனக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் ” என்று அவளை தாண்டி சென்று மெத்தையில் விழுந்தவனை முறைத்தாள்….

“இவன் கூப்பிட்டான் என்று வந்தேனல்லவா எனக்கு இது தேவை தான்” தன்னையே நொந்து கொண்டு கதவருகே சென்றவளை

“ஒரு நிமிஷம்!!!!” என்று தடுத்தான் .

       என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தியவளிடம் “சற்று நேரம் உன் ரூமில் இருந்துவிட்டு கீழே இறங்கு ” என்றான் .

இவன் பேச்சை தான் எல்லாரும் கேட்க வேண்டும் என்ற விதியை  எழுதி வைத்திருப்பான் போலும் !!!

 ஆனால் அது என்னிடம் நடக்காது என்று எண்ணியபடி “எனக்கு கீழே ஒரு முக்கியமான வேலை இருக்கிறது ” என்று உரைத்துவிட்டு கதவை திறக்க யத்தனித்தவளை இரண்டே எட்டுகளில் தாவி பிடித்து

 “உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா?????

எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் கொஞ்ச நேரம் இங்கேயே இரு !!! ” என்றான் அதிகார தொனியில் .

அவன் பிடிக்குள் அடங்கியிருந்த தன் கரத்தை உருவி கொண்டு “நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கு இல்லை. ஒருவேளை  என் கேள்விக்கு பதில் தருவீர்கள் என்றால் நீங்கள் சொன்னபடி இங்கு இருப்பதை பற்றி யோசிப்பேன் ” என்று சவாலுடன் கூறியவளை முறைத்தான்.

“உனக்கு இப்போது என்ன தெரிந்தாக வேண்டும்?????”

“முதலில் கேட்டதே தான்……  நீங்கள் எதற்காக என்னை  டான்ஸ் ஆட சொல்லியிருக்க வேண்டும்?” என்று  கேட்ட போது அவளையுமறியாமல் அவள் மனது குறுகுறுத்தது .

” அன்று ஆஃபிஸ் ரூமிலிருந்து நீ சென்ற பிறகு உன் நடன புகழை பற்றி என் காதில்

ரத்தம் வரும் அளவிற்கு அம்மா பேசினார்கள் . ஆட்டத்தை பார்க்காமல் ஒப்புகொள்ள மாட்டேன் என்றேன் . போதுமா …..”

“ஓ.. அது தானா ..”

“வேறு என்ன ?”

எதற்காக “ஓ” வென்றோம் என்று தனக்கே சரியாக தெரியாத போது என்ன சொல்வது என்று தெரியாமல் “ஒன்றுமில்லையே” என்று கூறிவிட்டு அவளறைக்குள் சென்றவளை மீண்டும்  தடுத்தான் .

“ஆமாம் கச்சேரி எல்லாம் பலமாக இருக்கிறது. உனக்கு ஆறு மாதங்கள் தண்டனை கொடுத்திருப்பதாக அல்லவா நினைத்திருந்தேன்?????? ” என்றபோது எப்போதும் அவளிடத்தில் அடம்பிடித்து ராணுவ கெத்தை இழக்காது  வலம் வரும் அவனது இதழ்களும் லேசான புன்முறுவல் பூத்தன.

அதை கண்டுகொண்டவள் “என்னுடைய மேடமே அத்தையாகவும் அவங்க கணவர்  அன்பான மாமாவாகவும் எனக்கு பிடித்தாற்போல் இந்த வீடும் அமைந்திருக்க இது எப்படி தண்டனையாகும் ??????” என்றவளது விழிகளை ஊடுருவினான் .

அதில் எதை கண்டானோ “நான் ஒருவன் மட்டும் இங்கு இல்லை என்றால் இதை சொர்க்கம் என்றே கொண்டாடுவாய் போல் இருக்கிறதே????? ”  என்றவனிடம்

 “ஆமாமாம் எதற்கும் ஆறு மாதங்கள் இந்த வீட்டு பக்கம் வராமலிருந்தால் நன்றாக இருக்கும்!!! ” என்று கூறிவிட்டு அவன் பதிலுக்காக காத்திராமல் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள் உதிதா.

அப்படி உள்ளே சென்றதும்

   “உங்களிடம் வம்பிழுப்பதும் கூட ஒருவித சுகமாக தான் இருக்கிறது யுகி….. இதற்காகவே உங்கள் வரவை

வாராவாரம்  எதிர்பார்க்கலாம்!!!” என்றவளின் எண்ணங்களை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை…

 அடுத்த வாரம் சனிக்கிழமை போன் செய்து வேலை பளு காரணமாக வர முடியாது என்று தெரிவிக்கவும் அவளுள் தேய் நிலவை போன்றொரு வருத்தம் பரவியது .

தன்னால் தான் இது போல் செய்கிறானோ????? என்ற குற்றவுணர்வு எழ அவனுக்கு டயல் செய்தவள் அவன் “ஹலோ!!!” என்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

மீன்றும் இரு முறை அவன் ஹலோ சொல்லவும் “ஹலோ நான் உதிதா பேசுகிறேன் …. நீங்கள் வராமல் அத்தை மிகவும் வருத்தப்படுகிறார்கள் .

நாளை முடிந்தவரை இங்கு வர முயற்சி செய்யுங்கள்!!!! ” என்று படபடப்பாய் பொரிந்துவிட்டு போனை

வைத்துவிட்டாள்.

      இரவு உணவு வேளையின்போது “போன வாரம் இந்நேரம் யுகனும் நம்மோடு இருந்தான் அல்லவா?????” என்றார் தேவகி லேசான வருத்தம் தொனிக்க .

உணவிற்கு பின் மாமியாருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை அட்டையை கையில் எடுத்தவளுக்கும்

‘இது அம்மாவிற்காக!!!!!!’ என்று கண் சமிஞ்சை செய்தவாறு அவள் கையில் எடுத்த சப்பாத்தியை தன் வாய் அருகே கொண்டு சென்று

 மனைவியின் விரிந்த விழிகளை நேரே சந்தித்து ஒரு முறை தன் கண்களை முடி திறந்தவாறு அதனை விழுங்கினான்…

  “இதெல்லாம் ஓவராக தெரியவில்லை!!!!” என்று அவள் கணவனுக்கு மட்டும் கேட்கும்படி கடுகடுத்தபோதும்

“ஒரு துண்டை தானே வாங்கினேன் அதனை போய் ஓவர் என்கிறாய்??” என்று

அவன் தோள்பட்டையை குலுக்கிய வண்ணம் கூறியது தற்போது  நினைவிலாடியது .

அவ்வெண்ணத்தை ஒதுக்கி “அதனாலென்ன அத்தை அடுத்த வாரம் தான் வந்துவிடுவார் அல்லவா ????

 அப்படியே வரமுடியாது என்றால் நாம் அங்கு தஞ்சைக்கு  போவோம்… சரியா??? ” என்று அவள் கூறியதற்கும் யுகன் அங்கு வந்து

 “ஹாய் எவெரிபடி !!!! ” என்றதற்கும் சரியாக இருந்தது.

“டேய் யுகா .. நூறு ஆயுசுடா …. உன்னை பற்றி தான் பேசி கொண்டிருந்தோம் “

“நீங்கள் பேசியதை கேட்டு கொண்டே தான்மா வந்தேன்……” என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு

 “நான் இங்கு வராவிட்டால் நீ அங்கு  வந்துவிடுவாயா??????” என்றான் மனைவியிடம்.

     பார்க்க ஏங்கிய கண்கள் அவன் வரவை எதிர்பாராது காணவும் செய்வதறியாமல் திகைத்த வேளையில் கணவனின் கேள்வியையும் கேட்டு மேலும் விரிவடைந்தது.

அவள் விழிகளிடமிருந்து தன் பார்வையை பிரித்தவன் தேவகியிடம் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு “குட் நைட் மா” என்றான்.

 மேலும் “நீ சாப்பிட்டாய் தானே வா?????” என்று உதிதாவின் கரத்தையும் பற்றி மாடி ஏறலானான்.

“சாப்பிடு யுகா !!!!” என்று அம்மாவின் சொற்களுக்கு

“பசிக்கவில்லைமா” என்ற பதில் மட்டும் காற்றோடு பறந்து வந்தது.

தனிமை கிடைத்ததும் “அம்மா ஹாப்பி ஆகிவிட்டார்கள் போல????” என்றான்

குறும்பு கொப்பளிக்க.

 அக்கேள்விக்கு சற்று தடுமாறி

 “அது… நீங்கள் தான் பார்த்தீர்களே???? ” என்று பதில் அளித்து வைத்தாள் உதிதா .

“பார்த்தேன் பார்த்தேன்!!!! ” என்று விஷமமாக அவன் கூற இவ்வுலகையே மறந்தார் போல் ஒரு சிலிர்ப்பு அவள் உடலெங்கும் பரவியது .

தப்பிக்க எண்ணியவள் “எனக்கு தூக்கம் வருகிறது….. குட் நைட்… ” என்று சிரிக்க முயன்று அதில் தோற்று போய் தரையை நோக்கி உரைத்த போது தான் உறைத்தது தன் கரம் இன்னும் அவனது வலிய பிடிக்குள் சிறைபட்டிருப்பது .

தன் கையை விடுத்து கொள்ள முயன்றபோது உனக்கு ஏன் சிரமம் என்பது போல் அவனும் தன் பிடியை நழுவவிட தன் அறைக்குள் ஓடியே விட்டிருந்தாள் உதிதா.

மனதில் பல குழப்பங்கள் சஞ்சரிக்க ஏதேதோ யோசனையில் ஆழ்ந்தவளை சில மணி நேரத்தில் நித்திரா தேவி அரவணைத்து கொண்டாள்.

         இரவு ஒரு மணிவரையும் தூக்கத்தை தொலைத்திருந்த யுகன் வீண் எண்ணங்களால் உருவாகும் மன வருத்ததிலிருந்து திசை திருப்ப லாப்டாப்பை திறந்து கொண்டு உட்கார்ந்திருந்தான் .

அப்போது அறை தட்டப்படும் ஓசையும் “யுகன் யுகன் … ” என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் சீரியசாக இருக்குமோ என்று அஞ்சி

 “என்னப்பா ?????” என்று கேட்டபடி பதற்றத்துடனே எழுந்து கதவை நோக்கி விரைந்தான் .

Advertisement