லேசாக மூச்சு வாங்க ஆடிட்டோரியத்தை அடைந்தவளை எதிர்கொண்ட மாணவிகள் “சாரி மேம் … எனி ப்ராப்லம் ?” என்று கேட்டுக்கொண்டு நின்றனர்.
உதிதாவிடம் எதுவும் பதில் வரமால் போக “நான் தான் முதலில் ஆரம்பித்தேன் . என்னால் தான் உங்கள் எல்லோருக்கும் பிரச்சனை ” என்றாள் நிவிஷா தொண்டை கரகரக்க.
“நடந்ததை பற்றி பேச வேண்டாம் . இனி இதுபோல் நடவாமல் பார்த்து கொள்ளுங்கள் ” என்று உதிதா அறிவுறுத்தவும் ” கண்டிப்பா உதிமேம் ” என்ற பதில் கோரசாக வந்தது.
“சீர் அப் . லெட் மை ப்ரெட்டி கேர்ள்ஸ் ராக் டுடே ” என்று அங்கிருந்த நிலையை சகஜமாக்கி அவர்களிடம் மேக் அப் டீடைல்ஸ் பற்றி பேசலானாள் .
அப்போது அங்கு வந்த ப்யூன் பள்ளி முதல்வர் உதிதாவை வந்து பார்க்க சொன்னதாக கூறிவிட்டு சென்றான் .
கொஞ்சம் ஓவராக தான் நடந்து கொண்டோமோ !!! அந்த கலெக்டர் எதையாவது கூறியிருப்பானோ என்று அஞ்சி சென்றவளுக்கு ஆபீஸ் ரூமில் யுகனை காணாததால் “சொல்லுங்க மேடம் ” என்றாள் தேவகியிடம் இன்முகத்துடனே .
“நீயும் என் ஸ்டுடென்ட் தானே…. ” என்றவரிடம் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை .
“ராதை மனதில் ராதை மனதில் என்ன
ரகசியமோ …….” என்ற பாடலிற்கு மேடையை பிளந்து கட்டி கொண்டு நடனம் ஆட ஆரம்பித்தனர் .
உதிமேமும் நம்மோடு ஆடுகிறார்கள் என்ற உற்சாகத்தில் கூடுதல் சந்தோஷமாக மாணவிகள் அளித்த பெர்பார்மன்ஸ் மொத்த பள்ளியையும் எழுந்து நின்று கை தட்ட செய்தது.
உதிதாவோ ராதையாகவே
மாறியிருந்தாள். நளின முக பாவனைகளோடு அவள் ஆடிய நடனத்திற்கு இன்னும் யாரும் ஈடாக மாட்டார்கள் போலும் என்று எண்ணிய தேவகி அதையே அவளிடம் தெரிவித்து பெருமை பொங்க வாழ்த்தினார் .
அதே சந்தோஷத்தோடு தன் வீட்டிற்கு சென்றவள் வீடே அதிரும்படி இந்த செய்தியை கூறி தடாபுடாலாக்கினாள் . சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்த
ரகுராமிடம் “அப்பா உங்க பொண்ணு இன்னைக்கு என்ன செய்திருக்கிறாள்
தெரியுமா?” என்று துள்ளினாள்.
“உன் கிளாஸ் பிள்ளைகள் எல்லோருக்கும் நூறு மார்க் போட்டுவிட்டாயா உதிமா??”
“இல்லப்பா….”
மீண்டும் எதை எதையோ ரகுராம் சொல்ல “போங்கப்பா…….. பெரியப்பா நீங்களாவது கெஸ் பண்ணுங்களேன் ” என்று கதிரேசனிடம் சென்றாள் .
“நீ இந்த ஆட்டம் போடுவதை பார்த்தால் ஆட்டம் ஆடியிருப்பாய் என்று தோன்றுகிறது ” என்று அவர் கணிக்கவும் “சூப்பர் பெரியப்பா ” என்று அவர் கழுத்தை கட்டி கொண்டாள்.
“என் பெண்ணை பற்றி எனக்கு தெரியாதா ?” என்று அவரும் பெருமையுடன் கூறினார்.
அப்போது அங்கு வந்த யசோதா “இன்று பள்ளி விழாவில் நடனம் ஆடினாயா உதி?” என்று கேட்க
“முன்னே சொல்லியிருந்தால் நாங்களும் வந்திருப்போமே உதிமா” என்று குறை பட்டு கொண்டார் காஞ்சனா.
“எனக்கே லாஸ்ட் மினிட்ல தான் மேடம் சொன்னாங்க பெரியம்மா ” என்று அவள் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போது “என்ன ஒடிதா!!! இன்று உங்க ஸ்கூலில் மங்கி டான்ஸாமே???? ” என்று அங்கு வந்து அமர்ந்தான் பிரணாவ் .
“ப்ரணிதா அக்காவிற்கு பதில் இவனை நீங்கள் முதலில் பெற்றிருக்கலாம் பெரியம்மா!!!! ” என்று காஞ்சனாவிடம் உரைத்துவிட்டு
“ஒழுங்கா அக்கானு கூப்பிடுனு எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாயாடா????” என்று அடிக்க கையை ஓங்கினாள் உதிதா.
உடனே சற்று நிதானித்து “ஆமாம் இன்று எங்க ஸ்கூலில் நடந்த டான்ஸ் பற்றி உனக்கு எப்படி டாங்கி தெரியும் ?” என்று
அடிக்காமல் கேட்டாள்.
“அது… என் ப்ரெண்டோட தம்பி உங்க ஸ்கூல்ல தான் படிக்கிறான் . அவன் வீட்டிற்கு சென்று விட்டு தான் வருகிறேன் …. அந்த தம்பி தான் சொன்னான் ” என்று வேகமாக கூறிவிட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் பிரணாவ் .
அவனை பின் தொடர்ந்தவள் “கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை .. அப்படியிருக்க யாருடா அந்த ப்ரெண்டு??????”
என்று விளக்கம் கேட்டிருந்தாள்.
“நோ பர்சனல் கொஸ்டீன்ஸ் ஒடிதா!!!! ” என்றவனின் தலையில் லேசாக தட்டி
“அக்கானு கூப்பிடுகிறாயா இல்ல பெரியப்பாவை கூப்பிட்டு நியூ ஃப்ரெண்டு யாருனு கேட்கவா?????” என்று மிரட்டினாள்.
“ஐயோ உதிக்கா … அவ பேரு ஹசீனா .
ப்ரெண்ட் மட்டும் தான் …. அவளுக்கு இரண்டு அண்ணன்கள்!!!!
இன்று அவளை அழைத்து செல்ல அவர்கள் யாரும் வரவில்லை என்றதும் நான் அவளை டிராப் பண்ணினேன்….
அப்போது அவள் பக்கத்து வீட்டில் இருக்கும் பையன் ஹசீயிடம் பேசுவதை வைத்து நீ ஆட்டம் போட்டதை தெரிந்து கொண்டேன் !!!
போதுமா?????
இதை போய் அப்பாவிடம் இப்போது சொன்னாயானால் அவ்வளவு தான் ……
இங்க பாரு தம்பி!!!!
காதலுக்கும் நம் குடும்பத்திற்கும் ரொம்ப தூரம் ….என்று அரை மணி நேரத்திற்கும் மேலாக லெக்சர் எடுக்க ஆரம்பித்துவிடுவார் .
இன்று கிளாசிலேயே அந்த தலை வலியை அனுபவித்து விட்டு தான் வந்திருக்கின்றேன் ” என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு தம்பி கூறிய விளக்கவுரையில் சிரித்துவிட்டாள் உதிதா .
மேலும்
“எங்கேடா ப்ரணிக்காவை இன்னும் ஆளையே காணோம் ?????” என்று அவள் கேட்டதற்கு
“என்று தான் அவள் நம்மோடு சேர்ந்திருக்கின்றாள் இன்று வந்து பேச????” என்று பிரணாவ் கூறி கொண்டிருக்கும் போது அவர்கள் அறைக்குள் எட்டி பார்த்த ப்ரணிதா
“ஸ்டேஜ் ஷோ பண்ணினாய் என்று அம்மா சொன்னார்கள்….. கங்க்ராட்ஸ்!!!” என்று கூறிவிட்டு சென்றாள் .
“ஏன் டா அக்கா மட்டும் இப்படி இருக்கிறார்கள்?????”
“பிரணிக்கா பிறந்ததிலிருந்தே இப்படி தான் . நம்ம வீட்டிற்கு ஒரு மங்கி போதும் என்று கடவுள் நினைத்து விட்டார் போலும்!!! “
“அதை ஒரு டாங்கி சொல்லுது பாரு. நீயெல்லாம் அடங்கவே மாட்டாயா?
பிற்காலத்தில் உன் பொண்டாட்டியிடம் தான் அடங்குவாய் போலும் . அதை கண் குளிர பார்க்கணும் பிரணாவ் “
“நீ உன் புருஷன் வீட்டிற்கு போன பிறகு தான் அவள் வருவாள் . ஸோ எப்படியும் உன்னால் அதை பார்க்க முடியாதே!!! “
“ஹே பிரணாவ் அக்காவை பெண் பார்க்க வருவதாக ஒரு நியூஸ் நேற்று நம் வீட்டில் பேச பட்டதே !!!! அது என்னவாயிற்று?”
“இரு வரன்கள் நன்றாக பொருந்தியிருக்காம்….. அதில் யாரோ ஒருவர் அடுத்த வாரத்தில் பெண் பார்க்க வருவார்கள் என்று எதிர் பார்க்கலாம் . இப்போதிற்கு இவ்வளவு தான் எனக்கு தெரியும் .
பசிக்குது வா உதிக்கா சாப்பிட போகலாம்!!! ” என்று தன் செல்ல அக்காளை இழுத்து கொண்டு போனான் அவள் அன்பு அனுஜன் பிரணாவ்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் “இன்று
விடுப்பு எடுத்து கொள்மா. ப்ரணிதாவை பெண் பார்க்க வருகிறார்கள் . உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ” என்றார் கதிரேசன்.
“எனக்கென்ன பெரியப்பா சர்ப்ரைஸ் இருக்க போகிறது அதுவும் ப்ரணிக்காவை பெண் பார்க்கும் படலத்தில் ” என்று வினவியவளுக்கு அவரது சிரிப்பு ஒன்றே பதிலாக கிடைத்தது.
“பெண் பார்க்க வரும் போது கூட அமைதியை கை விடாத உங்களுக்கு பேசாமொழி விருது கொடுக்க போகிறார்களாம் ப்ரணிக்கா” என்று தமக்கையின் அருகில் சென்று அமர்ந்தாள் உதிதா.
“ஏதாவது பேசிவிடு ப்ரணிக்கா. இல்லாவிட்டால் வரப்போகும் மாப்பிள்ளை கட்டினால் இந்த ஒடிதாவை தான் கட்டுவேன் என்று சொல்லி விட போகிறார். அதுவும் கலெக்டர் மாப்பிள்ளை என்றால் இவளுக்கு பயங்கர கிரஷ்.
ஸோ இந்த ஒடிதாவே கலெக்டரை இழுத்து கொண்டு ஓடி விட போகிறாள்…. பி கேர்புல்!!!! “என்றவனின் மேல் அருகிலிருந்த ஒரு ஜாடி தண்ணீரை எடுத்து கொட்டியிருந்தாள் உதிதா .
“ஆரம்பிச்சுடீங்களா உங்க சண்டையை ?????” என்றபடி அங்கு வந்த யசோதாவிடம்
“இது கொஞ்சம் கூட சரியில்லை யசோம்மா. நீ பெத்ததை கண்டித்து வை!!!” என்று கத்திவிட்டு உடை மாற்ற தன் அறைக்கு சென்றான் பிரணாவ் .
“மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டார்கள் சீக்கிரம் அக்காவை அழைத்து வா உதிமா ” என்று கூறிவிட்டு சென்றார் யசோதா.
“வா பிரணிக்கா ” என்று ப்ரணிதாவை அழைத்து சென்றவள் மாப்பிள்ளையாக யுகனை கண்டதும் பேயறைந்தார் போல் சில நிமிடங்கள் அப்படியே நின்றாள்.
யுகனிற்கும் அதிர்ச்சி தான் போலும் …..
அவன் முகத்தை அவள் முகத்திடமிருந்து அகற்ற மறந்து அப்படியே அமர்ந்திருந்தான் .
“சொன்னால் கோபம் மட்டும் வருகிறது …… ப்ரணியின் மாப்பிள்ளையை நீ ஏன் உதி இவ்வளவு நேரம் பார்த்து சைட் அடித்து கொண்டிருக்கின்றாய் ????” என்று அவள் காதருகில் பிரணாவ் ரகசியம் பேசவும் சுய நினைவிற்கு வந்தவள்
“கலெக்டராகவே இருந்தாலும் இவரை மட்டும் என்னால் மணந்து கொள்ளவே முடியாது டாங்கி …..
அதனால் பிரணிஅக்காவிற்கே விட்டு கொடுத்து விடலாம் ” என்று உதிதாவும் தன் தம்பிக்கு மட்டும் கேட்கும் பாணியில் பதிலளித்திருந்தாள் .
“ஏன் இவரை ஏற்கனவே தெரியுமா?” என்றதற்கு
“பிறகு சொல்கிறேன்” என்பது போல் கண் சமிக்ஞை செய்தவள் தேவகியிடம் சென்று பேசலானாள் .
சில பல உரையாடல்களுக்கு பிறகு யுகன் ப்ரணிதா ஆகியோரது சம்மதத்தையும் பெற்று இரு மாதங்கள் கழித்து பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது …..
அடுத்த நாள் பள்ளி வாசலில் காரின் அருகே ஸ்டைலாக நின்று போன் பேசி கொண்டிருந்தவனிடம் “ஹாய் மாம்ஸ் .. கங்க்ராட்ஸ்……
ப்ரணி அக்கா என்னை போல்
சாதுவாக இருக்க மாட்டாள்!!!!!
கொஞ்சம் வாய் ஜாஸ்தி…… என்னை போல் ரொம்ப நல்லவள் இல்லையென்றாலும் ஓரளவுக்கு நல்லவள்….. இப்படி முன்னபின்ன இருந்தாலும் நீங்கள் தான் கவனமாக பார்த்துகொள்ள வேண்டும் … சரியா??? ” என்று தலை சாய்த்து குறும்பு மின்ன கூறியவளை லட்சியம் செய்யாமல் காரில் ஏறினான் யுகன்.
என்ன பேசிவிட்டோம் !!! ஏன் இந்த அலட்சியம்?????
சற்றே திடுக்கிட்டவளாய்
“போங்க … இப்படி பட்ட மாப்பிள்ளையை கட்டி வைப்பதற்கு பதில் பிரணிஅக்காவை இரவோடு இரவாக கல்யாணத்தை நிறுத்தி ஓட வைத்து விடலாம் “
கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பிதற்றியவளின் மேல் விசித்திர பார்வை ஒன்றை வழங்கிய யுகன் அப்போதும் மறுவார்த்தை உரைக்காமல் சென்று விட்டான் .
இரவு சரியாக சாப்பிடாமல் எங்கோ சிந்தனையை செலுத்தியவளிடம் “ஏன் உதிக்கா ஏதாவது பிரச்சனையா??????” என்று அவள் அருகில் வந்து அமர்ந்தான் பிரணாவ் .
எனக்கும் அவருக்கும் ஒத்து போகவில்லை என்று நினைக்கிறேன்….. தேவகி மேம் பையன்…. அக்காவை நல்லபடியாக பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது ” என்றவளை கூர்மையாய் நோக்கினான் பிரணாவ் .
“என்னடா?????”
“உன்னை பிடிக்காதவர்களை எனக்கு எப்படி பிடிக்கும் உதிக்கா???? “
“பாசக்கார தம்பிடா!!!!” என்று சிரித்து பின்
“அக்காவிற்காக இதை நாம் பொறுத்து தான் போக வேண்டும் ஸ்வீட்ஹார்ட் …. புரிகிறதா??? வீட்டில் இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்…. ” என்றாள்…..
“சரி சரி ” என்று அவன் தலையை ஆட்ட அதை பார்த்து சிரித்தவளின் மன நிலை சீராகியதென உணர்ந்தாள்.
நேற்று இரவு வரை அனைவரும் அதே சீரான மனநிலையுடன் தான் இருந்தனர்.
இன்று காலை எங்கு தேடியும் ப்ரணிதாவை காணாது மேலும் அவளது அறையில் தான் விரும்புவனுடன் செல்வதாய் அவள் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்தினால் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது.
பெரியப்பாவின் நிலையோ வார்த்தைகளால் விளக்கி விடாதபடி இருந்தது.
பெரியம்மாவின் அழுகையை தேற்ற முற்படுகையில் விஷயம் பரவி தேவகியின் ரத்த கொதிப்பு அதிகமாகி மயங்கினார் .
தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிய போது “என் மகனின் திருமணம் ….” தடுமாற
“உங்கள் மகனின் திருமணம் இன்றே இனிதே நடைபெறும் . நடந்தவைக்கு
மன்னியுங்கள் சம்மந்தி ” என்று கூறிவிட்டு உதிதாவை தனியே அழைத்து சென்றார் கதிரேசன்.
“நம் குடும்ப மானத்தை காப்பாற்றி கொடும்மா” என்று அவர் கை கூப்பி வேண்டியதை பொறுக்கமாட்டாதவளாய் அவரை கட்டி கொண்டாள் பெண்.
அப்போது அங்கு வந்த பிரணாவ் “இது என்னப்பா அவசர முடிவு ??????
ப்ரணிதா செய்த தவறிற்கு உதிக்கா ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் ?????” என்று
யுகனை பார்த்த முதல் நாள் முதல் இன்று இரவு வரை நடந்தவைகளை அசை போட்டவள் அப்படியே உறங்கி போனாள்.
காலையில் கண் விழித்ததும் ஸ்கூலிற்கு நேரமாகிவிட்டதே என்று அவசரமாக எழுந்தவள் சுற்றம் பார்த்து தன் நிலையை உணர்ந்தாள்….
சிங்கம் விழித்திருக்குமோ ????? என்று தன் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு கட்டிலில் அவனை காணாது போகவும் இவ்வளவு சீக்கிரம் யாரை வேட்டையாட சென்றிருப்பான் என்ற யோசனையோடு பார்வையை சுழல விட்டாள்….. அப்போது சோபாவில் கால்களை மடித்து அவன் உறங்கி கொண்டிருந்தது தென்பட்டது .
இவ்வளவு பெரிய மெத்தை இருக்கும் போது ஏன் இப்படி கஷ்ட பட்டு படுக்க வேண்டும் என்று ஒரு மனம் இளகிய போதும் இதெல்லாம் இவனுக்கு பத்தவே பத்தாது …. இன்னும் பெருசா ஏதாச்சும் கஷ்ட படணும் என்று மறுமனம் வாதாடியது…..
மேலும் அவன் துயில் கலையவில்லை என்ற தைரியத்தில் “ஆறு மாதங்கள் தண்டனை கொடுத்திருக்கும் கலெக்டர் சாரே !!!!!
மார்க் மை வேர்ட்ஸ்……
நீங்கள் சொன்ன நாட்கள் முடியும் போது ‘ப்ளீஸ் உதிதா என்னை பிரிந்து போய் விடாதே . இங்கேயே இருந்துவிடு….
நீயில்லாமல் என்னால் இருக்கவே முடியாது….. ‘ என்று கெஞ்ச போகிறீர்கள்……
அப்படி என்னதான் வருந்தி போராடி துடிதுடித்து மன்றாடி கேட்டாலும் இங்கு ஒரு நொடி கூட நான் இருக்க மாட்டேன்!!! ” என்று மெதுவாக அதே சமயம் அழுத்தமாக கூறினாள்.
உடனே
“வாட் ???????” என்று அவன் உறுமி கொண்டு எழுந்திருத்த வேகத்தில் இரு அடிகள் பின்னால் நகர்ந்திருந்தாள் உதிதா……