Advertisement

பிரணாவிற்கு புரியாமல் இல்லை…..

திருமணம் ஆகிவிட்ட போதும்

காதல்!!!!! அதுபற்றி அவனுக்கு சரிவர தெரியவில்லை……

விதுல்யாவின் மீது தனக்கு ஏற்கனவே காதல் மலர்ந்திருந்ததால் மைத்ரேயியின் மீதும் அவ்வுணர்வு எழ வாய்ப்பிருக்கிறதா என்பதை அறியான்???!!!!

ஆயினும் ஒருவித பிடித்தம் கூட இல்லாமல் அவளை நெருங்குவது கூடவே கூடாது என்று திட்டமிட்டிருந்தான்….

அதிலும் அவள் தன்னை ஒரு மனிதனாக முதலில் பார்த்து பேசி பழகட்டும்….

 இவளோடு தான் வாழ்க்கை!!! என்று முடிவாகிவிட்டது….

பொறுமையாகவே வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் அடி எடுத்து வைக்கலாம் என்று எண்ணியவனும் கூட!!!!!

ஆனால் அவ்வபோது அதிர்ச்சி என்ற பெயரில் விரிந்து தொலைக்கும்

அவளிடத்தில் அவனை ஈர்க்கும்

ரோஜா மொட்டிதழ்கள்…..

அவனை சலனமாக்குவதோடு உரசாமலேயே மோகத்தீயை பற்ற வைத்து வேறு வேடிக்கை பார்க்கிறது!!!!

பசியெடுக்கவே ” உன் அத்தானிற்கு சாப்பாடு போடுடி பஜாரி!!!!” பிரணாவ் சாதாரணமாக கூறிவிட்டான்…….

ஆனால் அதனை கணவன் குறிப்பிட்ட அழைப்பை கண்டு வியந்த மைத்ரேயியோ தன்னையுமறியாமல்

வீட்டினில் யாரிடத்திலும் சகஜமாய் பேசாது  பசையின்றி ஒட்டியே

வைத்திருக்கும் உதடுகளை பிரிக்க

அதை கண்டவனோ தன் கழுத்தில் சுற்றி இருந்த சோட்டுவின் கரங்கள் கொண்டு தன் விழிகளை மூடிக் கொண்டு

” இனி ஒரு தடவை ‘ஷாக்’ எனும் பெயரில் என் முன்  இப்படி ஒரு ரியாக்ஷனை கொடுத்து

 என்னை செட்யூஸ் பண்ண  ட்ரை பண்ணினால்!!!!!!!

 பிறகு என் பேச்சை நானே கேட்க மாட்டேன்……

ஜாக்கிரதை!!!!!!!!”  என்றான் அவளது உதடுகளை சுட்டி காண்பித்து மிரட்டலாக….

 அவனது அப்படியொரு பேச்சை எதிர்பாராதவள் அதிர்ந்ததில்

 இம்முறை அவளது கைகள்  தானாக அவளது ரோஜா இதழ்களை மறைத்துக் கொண்டன!!!!

 இருந்தும் ” லூசாடா நீ ?????? இப்படி என்ன வேண்டுமானாலும் உன் இஷ்டபடி பேசுவாயா?????”  என்ற வார்த்தைகள்

 அவளுக்கே கேட்காத தொனியில் கைகளுக்குள் சிக்கியிலிருந்த இதழ்களிலிருந்து வெளிவர

அதை அறியாதவன் தன் இமைகளுக்கு காவல் புரிந்த மகனின் கைகளுக்கு விடுதலை வழங்கிவிட்டு பேசினான் ……

”   பேசிக்கலி நான் ஹீரோ தான் !!!!!”

” நீயாடா ஹீரோ ?????  நீ வில்லன் !!!!”

என்றபடி எரிந்து விழுந்தாள் அவன் மனைவி….

உடனே அவளது கரங்களால் மறைக்கப்பட்ட  இதழ்களை மீண்டும் சுட்டிக்காட்டி

“கரெக்ட் உனக்கு மட்டும் வில்லன்……

 அதுவும் இதை பார்த்தால் மட்டும் வில்லன்!!!!!!!

 ஆனால் உனக்கும் ஒரு ஹீரோவாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன்…….

 அப்படி நினைக்கும் என்னை டெம்ப்ட் பண்ணி வில்லனாக மாற்றுவது நீதான் !!!!

 ஸோ பி கேர்ஃபுல்…..

 இப்போ வாடி பஜாரி…….  உன்னிடம் பேசி பேசியே ரொம்ப பசி எடுத்து விட்டது”

 டைனிங் டேபிளை நோக்கி நடந்தவனை வெறித்துப் பார்த்தாள் மைத்ரேயி……

இப்படியுமா ஒருத்தர் பேசுவார்கள்?????????

 தொண்டையை அடைத்து

அவளுக்கு விக்கலே வந்திருந்த போதும்

மறுக்காமல் அவன் பின்னோடு சென்று எதுவும் பேசாமல் சாப்பாடு எடுத்து வைத்தாள்……..

 சாப்பாட்டு மேஜையை பார்க்கவும் “மம்மு மம்மு ” என்று மகன் குதிக்க

“சோட்டுவிற்கு சப்பாத்தி கொடுக்கலாமா??????”  என்று சந்தேகம் கேட்டான் பிரணாவ்….

“வேண்டாம் வேண்டாம்!!!!  இட்லி  கொடுக்கணும் …. நான் ஊட்டி விடுகிறேன்….

 நீ சாப்பிடு!!!”  என்றவள் குழந்தையை வாங்க தன் கைகளை நீட்ட

பிரணாவ் சோட்டுவை மனைவியிடம் தர மறுத்ததோடு அவனே இட்லியை மகனுக்கு ஊட்டவும் ஆரம்பித்தான் ……

இரு வாய் இட்லி துண்டுகளை வாங்கியதும் அதற்குமேல் சாப்பிட மாட்டாது சோட்டு துப்பி வைக்க

 “ஏன்டா டேஸ்ட் பிடிக்கவில்லையா????????”

 என்று  கையில் எடுத்த உணவை தன் வாயில் வைத்து சுவை பார்த்துவிட்டு

” நன்றாக தானடா இருக்கு !!!!!” என்றான்..

மேலும்  மனைவியிடம் “எப்போதும் எவ்வளவு சாப்பிடுவான் ??????” சந்தேகம் கேட்க

” சாப்பிடவில்லை என்றால் விடு…..

 கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி ஏதாவது கொடுக்கிறேன்!!!”  மனைவியின் பதிலில் திருப்தி அடையாதவன் எழுந்து மகனை தூக்கிச்சென்று

அடுத்த இரண்டு துண்டுகளையும் ஊட்டி விட்டே சாப்பிட ஆரம்பித்தான்……

 சோட்டுவை மடியில் வைத்துக்கொண்டு சாப்பிட சற்றே சிரமப்பட்ட கணவனிடம்

“அது தான் சோட்டு சாப்பிட்டான் தானே….. அவனை கொடு!!!!!!” மகனை வாங்க மைத்ரேயி தன் கரங்களை நீட்ட

அதனை பிடித்து அப்படியே அவளையும் அருகில் அமர வைத்த பிரணாவ்  ” நீயும் சாப்பிடு!!!!!!”  என்றான்.

உடனே  தன் தந்தை மற்றும் மற்றொரு நபரின் நினைவுகளால் சிந்த ஆயத்தமான நின்ற விழி நீரை மறைத்தபடி எதுவும் சொல்லாது சாப்பிட்டு விட்டு எழுந்தவள் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை…….

 அடுத்த நாள் காலையில் ” மூன்று நாட்களாக நம் ஃபேட்டரிக்கு போகாமல் வேலை நிறைய இருக்கிறதுடா மகனே!!!!

 ஈவினிங் மீட் பண்ணலாம்…. பை”  என்று துயில் கொண்ட  மகனின் நெற்றியில் அவசரமாக முத்தமிட்டவாறு கிளம்பி சென்றிருந்தான் பிரணாவ் ……

மாலை 6 மணி வரை பணிச்சுமை அவனை வேறு புறம் திரும்ப விடாது துரத்திய போதும்

இதற்கு மேல் முடியாது என்பதுபோல்

 சோட்டுவை காணும் ஆவலில் முடிக்க வேண்டிய சில முக்கிய அலுவல் வேலைகளை தன் பென்டிரைவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டான் ……

ஆனால் வீடு வந்தவனுக்கு மகனை காணாது போனதும்

ஏற்பட்ட ஏமாற்றத்தில்

“சோட்டு!!!!!!!!! சோட்டு!!!!!!!! “

வீடே அதிரும்படி  கத்த

 தன் அறையிலிருந்து வெளிவந்த காஞ்சனாவிடம்

“சோட்டு எங்கே அம்மா?????”  என்றான்.

” என்னைக் கேட்டால் எனக்கு எப்படி பிரணாவ் தெரியும்?????????”

 “பஜா……. மைத்தி!!!!  சோட்டுவையும் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் போய் இருக்கிறாளா அம்மா???????”

“இங்கு இருப்பவர்கள் எல்லாம் என்னிடம் சொல்லி விட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கிறார்களா?????????

 ஏன் நீயே என்ன செய்கிறாய் என்பது இப்போதெல்லாம் எனக்கு தெரிய மாட்டேன்கிறது!!!!!!!!!”  குறை கூற

“அம்மா !!!! நான் என்ன கேட்கிறேன்????

 நீங்கள் என்ன பேசுகிறீர்கள்???????” என்று சிடுசிடுத்தான் பிரணாவ்…

” உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறதா பிரணாவ்??????

மாதமானால் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லி போய் விடுகிறாய்!!”

 “பிசினஸ் விசயமாக தானே போகிறேன்!!!!

 அதுவும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டுதானே போகிறேன்??!!!

 பிறகு என்ன அம்மா???????”

 “நீ பார்க்கும் அதே பிசினஸை தான் உன் அப்பாவும் பார்க்கிறார்!!!!

 நீ டெல்லிக்கு கிளம்பி போகிறேன் என்று கூறிவிட்டு போன தினத்தில் அங்கு அவர்கள் கம்பெனிக்கு போகவே இல்லை……..

அன்று உன்னை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை …..

 மாறாக அடுத்த நாள் தான் பேசியிருக்கிறாய்….. வேலைகளையும் பார்த்து இருக்கிறாய்……”

 “ஐயோ எல்கேஜி பையனின் அம்மா தோற்று விடுவார்கள் ……. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு!!!!!!!

 வழியில் ஒரு ஃபிரண்டை பார்த்தேன்….

 அவனோடு அன்றைய தினத்தை செலவளித்துவிட்டு அடுத்த நாள் வேலையை கவனித்தேன் !!!!!

இது ஒரு குற்றமா???????”

” அப்படியா பிரணாவ்????

 சரி எனக்கு தெரியாத அந்த ஃப்ரண்டு யார்????

 எனக்குத் தெரிந்து ஏன் நம் வீட்டிற்கே தெரிந்து உனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்

ஹசீனா தான் !!!!!

 போன வாரம் அவளுக்கு  கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தாள் …..

வந்தவள் உதியையும்  குழந்தையையும் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்து

‘பேபி பிறந்ததை கூட பிரணாவ் என்னிடம் சொல்லவில்லைமா……. இப்போதெல்லாம் அவன் பேசுவதே இல்லை!!!”  என்று வருத்தப்பட்டாள்…

 சரி அதை கூட உன் பணிச்சுமை காரணமாக சொல்லவில்லை என்று விட்டுவிடலாம்……

 அப்போது மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்த மைத்ரேயியையும்  சோட்டுவையும் பார்த்து

” கெஸ்ட் வந்திருக்கிறார்களாமா??????” என்றாள் பார்…..

 இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் மறைக்க போகிறாய் பிரணாவ் ???????

 உன் அப்பா தான் ரிசப்ஷன் ஒன்று வைக்கலாம் என்று ரொம்பவும் ஆசைப்பட்டு கேட்டார்!!!

 சின்ன மாப்பிள்ளை அது பற்றி உன்னிடம் கேட்டபோது “உங்கள் பொண்டாட்டி ஒரு தடவை செய்ததே ஆயுசுக்கும் போதுமானது!!!!!” என்று சொல்லி இருக்கிறாய்…….

 எனக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா??????

உதியும் சொல்லவில்லை சின்ன மாப்பிள்ளையும் சொல்லவில்லை!!!

 சின்ன மாப்பிள்ளையிடம் நீ கத்தியது ஸ்பீக்கரில் இல்லாத போதும்  அடுத்த அறையிலிருந்து சம்பந்திக்கு  கேட்டதாம்!!!!!! நிஜமாகவே உதியின் அத்தை உனக்காகவும் மைத்ரேயிக்காகவும் அவ்வளவு நேரம் கூறி வருத்தப்பட்டார்……..

சின்ன மாப்பிள்ளை அன்று ஹாஸ்பிட்டல்லில் கூறிய தினத்திலிருந்து அவர்கள் அவளை மகளாக தான் பார்க்கிறார்கள்!!!!!

 அப்படி என்னதான் பிரணாவ் உன் பிரச்சனை???????

 கல்யாணம் பண்ணிக்கொண்டது பிடிக்கவில்லை!!!!

 விதுல்யாவை கட்டிக்கொள்ள ஆசைப்பட்டாய்!!!!!!”

அப்படி மென்மேலும் நிறுத்தாது கூறிச்சென்றவரிடம்

“போதும் அம்மா!!!!!!!!” என்று தடுக்க நினைத்தான் பிரணாவ்……

ஆனால் ”  நான் பேசி கொள்கிறேன் பிரணாவ் ……. ” என்றவர் தொடர்ந்தார்…..

“நீ உன் உதிக்காவிடம் பேசாமல் இருப்பதை ஏன் என்று நான் கேட்டேனா?????

 ஏனென்றால் எனக்கு தெரியும்!!!!

 எப்படியும் அவளிடம் பேசாமல் இப்படியே உன்னால் இருந்துவிட முடியாது என்றது!!!!!

 ஆனால் மைத்ரேயி விஷயம் அப்படி இல்லை……

 எனக்கும் தான் இப்படி யாரோ ஒரு பெண்ணை நீ திருமணம் செய்துகொண்டது சுத்தமாக

பிடிக்கவில்லை…..

 இருந்தும் இப்படி நீ இன்னும் விதுல்யாவையே மனதில் நினைத்துக் கொண்டு வாழ வந்த பெண்ணை தண்டிப்பதும் சரி இல்லை !!!!!

அவள் மகன் சோட்டுவை நீ ஏற்றுக் கொண்டதை நினைத்து எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமாடா??????

 அப்படி இருக்க அவள் அன்னையை உன் மனைவியாக அங்கீகரிப்பதில் என்ன பிரச்சனை??????????

 இல்லை சோட்டுவையும் வேண்டாவெறுப்பாக தான் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாயா??????

 அப்படி என்றால் இப்போதே சொல்லி விடு!!!!!

 அவர்களுக்கு வரும் காலத்தில் ஏமாற்றத்தை பரிசளிக்காமல் இப்போதே அனுப்பிவிடலாம் …..” என்று காஞ்சனா கூறவும்

“அம்மா !!!!!!!!!!!!!!!!!!” என்று கத்தி இருந்தான் பிரணாவ் …..

சரியாக அச்சமயம் குழந்தையுடன் வீட்டினுள் நுழைந்த மனைவியை கண்டவன் அவளிடம் விரைந்து “ஹாஸ்பிடலுக்கு ஏன் சோட்டுவை தூக்கிக்கொண்டு போனாய்??????????”

 என்று கேட்டபடியே தன் மகனை வாங்கிக்கொண்டான் .

 கணவனின் அத்தனை இறுக்கமான கேள்வியில் ” அது …. அது …..” தந்தியடித்து நின்றவளிடம்

” சொல்லுடி பஜாரி!!!!!”  என்று அதட்ட

” இத்தனை நாள் சோட்டுவை உன் யசோம்மா பார்த்துக் கொண்டார்கள்……

 அவர்கள் இப்போது யுகன் அண்ணன் வீட்டிற்கு சென்று இருப்பதால் கூட்டி போனேன்!!!!!!”  என்றதும் பிரணாவின் கோபம் பன்மடங்கானது …….

“ஹோ !!!! யசோம்மாவை தவிர இந்த வீட்டில் வேறு யாரும் இல்லையா??????

 இல்லை என் அம்மா சோட்டுவை நான் பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னார்களா??????”

” அப்படி இல்லை பிரணாவ் ….. எதற்கு சிரமம் என்று தான்….”  கம்மிய குரலில் கூறியவளை பார்க்கவே பிடிக்கவில்லை பிரணாவிற்கு ……

அன்னையிடம் திரும்பி “இனி சோட்டு வீட்டில் தான் இருப்பான்!!!!!! அவனை

பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா…..

 அப்போது தான் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் கொஞ்சம் பிஸியாகவே இருப்பீர்கள்!!!!”  என்று மட்டும் கூறிவிட்டு மாடி ஏறி விட்டான்…….

 எதற்கு இவ்வளவு கோபம்???????

  என்னமோ தன்னிடம் பேசி குழைபவரை தான் நிராகரித்துவிட்டு சென்றதாக ஏன் இந்த வீண் குற்றச்சாட்டு ?????

அம்மாவும் மகனும் தன்னைப்பற்றி அப்படி என்ன பேசிக் கொண்டார்கள்?????????

 என்று நினைத்தபடி தன்முன் சற்று சோகமாய் நின்று இருந்தவரை ஏறெடுத்துப் பார்த்தாள் மைத்ரேயி ….

ஆனால் அவரோ வழக்கம்போல் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ரூமிற்குள் புகுந்து கொண்டார்….

என்னடா நடக்கிறது இங்கே ??????

இப்போது தன்னிடம் காரணமே இல்லாமல் திருப்பிக் கொண்டு சென்றவனின் கூற்றில் ஒரு சதவீதமாவது நியாயம் இருக்கிறதா என்று அவன் சட்டையை பிடிக்கலாம் என்றொரு வெறி எழ கணவனிடம் விரைந்தாள் மைத்ரேயி…..

ஆனால் அங்கு அவள் கண்ட காட்சி!!!!!

 மகனை உட்கார வைத்து அவன் மடி மீது தன் தலை சாய்த்து

“நான் வீட்டிற்கு இவ்வளவு சீக்கிரமாக வந்ததே உன்னை பார்க்க தான்!!!!

 அப்படி நான் வரும்போது நீ இங்கு இல்லையா????? நிஜமாகவே அவ்வளவு பயந்துவிட்டேன்!!!!

 எங்கு உன் உதிஅத்தை போல் உன் ஆத்தாவும் உன்னை தூக்கி கொண்டுபோய் விட்டாளோ என்று?????

 இதில் என் ஆத்தா வேறு!!!!!

உன் ஆத்தாவை கல்யாணம் செய்து கொண்டதை ஊரறிய எல்லோருக்கும் சொல்லவில்லையாம்!!!!!  அதற்கு இப்படி ஒரு கேள்வி……

சோட்டுவை மனமார ஏற்று கொண்டாயா????? இல்லை நடிக்கிறாயா என்று!!!!!!

நான் என்னடா உன்னை ஏற்றுக் கொள்வது???????

 நீ தானே சோட்டு என்னை “அப்பா !!!!!” என்று ஏற்றுக்கொண்டாய் …..

நீ என்னால் பிறக்க முடியாது போயிருந்தாலும் எனக்காகவே என் மகனாகவே பிறந்தவனல்லவா??????

 உன்னை எப்படி பிரித்துப் பார்ப்பேன்????

 எனக்கு இப்போது என் ஆத்தா உன் ஆத்தா இப்படி யாருமே இல்லாது போனாலும் நீ இல்லை என்றால் இனி என்னால் எதுவுமே முடியாது போய்விடும்…….

என்னை விட்டு எங்கும் போய் விடாதேடா!!!!!!”  உணர்ச்சி மிகுதியில் கண்ணீரோடு உரைத்தவனை கண்டு ஏதும் பேசாமல் விலகி சென்றுவிட்டாள் மைத்ரேயி……

 இது என்ன மாதிரியான பந்தம்??????????

 அவளுக்கு புல்லரித்தது!!!!!

சரி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவள் நினைத்திருக்க அடுத்து வந்த நாட்களில் முற்றிலும் மாறி போனான் பிரணாவ்……

Advertisement