Advertisement

உதிதா அலைபேசியில் யுகனை வர சொன்னதை கேட்ட மைத்ரேயிக்கு  எப்படியாவது அவள் இங்கிருந்து கிளம்புவதை தடுத்தாக வேண்டும் என்று தோன்றியது……

கூடவே கணவனின் சொல்லையும்  மீற முடியாது போக உதிதாவை அணுகிய மைத்ரேயி

“உதிஅண்ணி ப்ளீஸ்……  அவசரப்படாதீர்கள்!!!

 பிரணாவ் என்று இருந்தாலும் உங்கள் தம்பி தான்…… உங்கள் ஸ்வீட் ஹார்ட் தான்!!!!!

 உங்களிடம் தான் வருவான்…..

 எனக்கென்னமோ கூடிய சீக்கிரம் உங்களிடம் பேசி விடுவான் என்று தான் தோன்றுகிறது!!!! ” என்று கூற

 ” எனக்கும் 10 நிமிடத்திற்கு முன்பு வரை அந்த நம்பிக்கை மலை போல் நிலைத்திருந்தது மைத்தி ……..

ஆனால் எப்போது  என் மேல் உள்ள கோபத்தில்  பப்புவை நிராகரித்தானோ?????

அப்போதே எல்லாம் சரியாகிவிடும்  என்பதற்கு  துளி கூட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது !!!!!

உனக்கு ஒன்று தெரியுமா மைத்தி??????

அவனுக்கு கை குழந்தையை தூக்க தெரியாது !!!!

ஆதி பிறந்த புதிதில் ‘சீக்கிரம் பெரியவனாகிவிடடா ஆதி அப்போது தான் உன்னை தூக்கி விளையாடுவேன் ‘ என்பான்….. ஆனாலும் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஒரு நொடி கூட அவனை விட்டு நகர மாட்டான்!!!!!

இன்று நடந்ததை பார்த்தாயா????

வீறிட்டு கத்தி அழுதும் அவள் மாமனை பார்க்க முடியாது போன துர்பாக்கிய சாலி ஆகி போனாள் என் பொண்ணு!!!!!

எல்லாம் என்னால் தானே????

என்னால் தானே பப்புவிற்கு அவளது மாமனின் பாசம் கிட்டாது போனது  ???!!!!

இனியும் நாங்கள்  இங்கு இருந்து யாருக்கும் இடையூறு செய்ய விரும்பவில்லை மைத்தி……

ரொம்ப வலிக்கிறது!!!!”

விசும்பலோடு பிதற்றியவளை எவ்வளவு முயன்றும் சமன்படுத்த முடியவில்லை மைத்ரேயினால்……..

 நடந்த சம்பவம் பற்றி துளியும் அறிந்திராத யசோதா பப்புவின் துணிகளை துவைத்து காயப்போட்டு வரும்போது

யுகன் வீட்டினுள்  நுழைவதை காணவும்

” வாங்க மாப்பிள்ளை…… நான் போய் காபி கொண்டு வருகிறேன்!!!!” என்று உபசரிக்க

” இல்லை அத்தை வேண்டாம்!!!!” என்று கூறி விட்டு அவசரமாக உதிதாவின் அறைக்கு  சென்றான் ……

கணவனை கண்டதும்

 அப்போது தான் நின்றிருந்த கண்ணீர்!!

 மீண்டும் பெருக்கெடுக்க

அடுக்கி வைத்திருந்த பைகளை காட்டி

” இதை எடுத்துக் கொள்ளுங்கள் யுகி….. நாம் போகலாம்!!!!”  என்று மட்டும்  கூறிவிட்டு குழந்தையோடு வெளியேறினாள்……

 அதைக் கண்ட யசோதா பதறிப் போனார்!!!!

” என்னாச்சு உதி ?????? ஏன் இப்போது இப்படி கிளம்புகிறாய்?????”

” இல்லைமா….. அத்தையால் பப்புவை

பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்!!!!

 அதுதான்…….”

 எங்கோ பார்த்தபடி பதிலளித்தவளிடம்

“இங்கு  என்னை பார்த்து பேசு !!!!!

உன் அத்தை உன்னை உடனே வரச் சொல்லி இருக்க மாட்டார்கள்!!!!

 எனக்கு தெரியும்….

 யார் என்ன சொன்னார்கள் ???????”

என்று கேட்டார்  …..

மகளிடம் பதில் இல்லாது போகவும்

அருகில் வருத்தம் அப்பிய முகத்துடன் நின்ற மைத்ரேயிடம்

” நீயாவது சொல்லுமா????? என்ன ஆனது என்று????????”  யசோதா பரிதவிப்புடன் வினவ

“ஒன்றும் ஆகவில்லை!!!!!!

 யாரும் எதுவும் சொல்லவும் இல்லை!!!!

 போதுமா?????

 நான் என் புருஷன் வீட்டிற்கு போகிறேன்…..

 அதில் உனக்கு என்ன பிரச்சனை??????

 உனக்கு பப்புவை  பார்க்க வேண்டுமென்றால் நீ அங்கே வா!!!!!

 ஆனால் நான் இனி இங்கே இருக்க மாட்டேன்!!!!”

 சற்று ஆவேசத்துடன் படபடத்தவள் நிற்காது விரைந்து சென்று விட்டாள்…..

 அதனைக் கண்டு யசோதா காரணம் புரியாமல் அதிர்ந்து நிற்க

 மைத்ரேயி வேகமாக  மாடிப்படிகளில் தாவினாள் …..

“இப்போது சந்தோஷமா??????

 உதிஅண்ணி இங்கிருந்து போய் விட்டார்கள்!!!!!

  அண்ணனை வரச்சொல்லி அழுது கொண்டே  கிளம்பி விட்டார்கள்!!!!!

 இது அவர்கள் வீடு தானே????

 ஆனால் இங்கு இருக்கவே

பிடிக்கவில்லையாம்!!!!!

 இதுதானே உனக்கு வேண்டும்?????

 ஆனால் இதற்கான பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று நினைக்கும் போது தான் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!!!!!!”  என்று கணவனிடம் வெடிக்க

என்னது உதிக்கா சென்று விட்டாளா?????

ஒரு நொடி அதிர்ந்த போதும்

இப்போதிற்கு அதுவே நல்லது என்று பிரணாவிற்கு தோன்றியது!!!!

சற்று முன் அழும் பப்புவை காண துடித்த மனதை அடக்க வழி தெரியாமல் எப்படி தவித்தோம்…..

இங்கு ஒரே வீட்டில் இருந்தோமானால் …….

இன்னும் ஆறுமாதம் கழித்து செய்த பாவத்திற்கான பரிகாரத்தை முழுதும்

நிறைவேற்றிவிட்டு அசுத்தம் நீங்கியவனாக தான் பப்புவின் முன் செல்ல வேண்டும் என்று

தான் நினைத்தது எல்லாம் வீணாகி போகுமே!!!

இன்று சொல் பேச்சு கேட்காமல் அறைவாயில் வரை சென்று விட்ட கால்கள் போல்

இந்த கைகளும் அடுத்த முறை பப்பு அழுதால்

தூக்க தெரியாமலே தூக்கி விடுமே !!!!!

ஆனால்

என் பாவம் துளியும் என் பப்புமா-வின் மீது படர நான் என்றும் அனுமதியேன்!!!!

தன்னுள் கூறி கொண்டவன் தன்னையே முறைத்து நின்றவளிடம்

“இப்போது என்ன?????

உதிக்கா அவள் புருஷன் வீட்டிற்கு தானே போயிருக்காள்!!!!!

 அதற்கு ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறாய்?????

 அப்புறம் என்ன சொன்னாய் ?????

உதிக்கா வெளியே சென்றதற்கு நீயும் ஒரு காரணமா????

 நெவர்!!!!

 அது எனக்கும் என் உதிக்காவிற்குமான  பிரச்சனை……

இதில் உனக்கு இடமில்லை……

ஆல்சோ ஐ வில் நெவர் எவர் அலோ எனிஒன் பிட்வீன் அஸ்!!!!

என்று கத்தினான் பிரணாவ்….

 செய்வதையும் செய்துவிட்டு பேச்சை பார் ?????????

 இதில் அநியாயத்திற்கு சம்பந்தமே இல்லாமல் என்னிடம்  கோபப்படுகிறான்

வேறு !!!!

 நான் என்றாது இவனிடம் சொன்னேனா??????

 இவனுக்கும் இவன் உதிக்காவிற்கும் நடுவில் நின்று கொள்கிறேன் என்று!!!!!

 மனதில் ஒருத்தியை சுமந்து இருக்கும் போது ” என்னால் முடியாது!!!!!!” என்று கூறி கட்டாயமாக திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும்…….

 அதை விட்டுவிட்டு அக்காள் கேட்டதும் துரை கடிக்கவும் செய்வாராம் அடுத்த நொடியே அதே அக்காளின் உறவை வெட்டிக்கவும் செய்வாராம்!!!!!!!!!!

 இதில் என்னை பார்த்தால் இவனுக்கு எப்படித் தெரிகிறதாம் ?????????

மனதிற்குள்ளே கணவனை குமைந்தவள்

 பிரணாவின் கைகளில் அவனின்

அவ்வளவு சத்தத்திற்கும் பயந்துவிடாமல் அமைதியாய் வீற்றிருந்த சோட்டுவையும் பார்த்து முறைத்து

“வாடா!!!!!!!!” என்றாள்.

” இப்போது அவனை எதற்காக வாங்குகிறாய்??????

 சோட்டு வரமாட்டான்!!!!!!

 ஹோ ஒருவேளை உதிக்கா கிளம்பி சென்றதை போல் நாமும் ஓடிவிடலாம் என்று ஏதாவது பிளான் போடுகிறாயா???????”

அப்படி அடிக்குரலில் வேகமாய்ப் பாய்ந்து வந்த அவனது ஒலியில் பொதிந்திருந்தது நக்கலா வருத்தமா என்பதை பகுத்தறிய முடியாதவள்

” போன நிமிடம் வரைக்கும் அந்த ஐடியா இல்லை…… ஆனால் இப்போது

வந்துவிட்டது !!!!!” என்று சீற

 ” டேய் சோட்டு  பையா உனக்கு மூன்று வருடம் கழித்து ஒரு தங்கச்சி பாப்பாவை கிஃப்ட் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்!!!!

 ஆனால் உன் ஆத்தாகாரி எங்கோ கிளம்புகிறாளாம் …..

அதனால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ” மகனிடம் பேசியவாறு  மனைவியை நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்த பிரணாவ்

 அவனை வில்லனாகவே விரிந்து கொண்ட ரோஜா இதழ்களில் தன் பார்வையைப் பதித்து

அவன் விட்ட சொற்றொடரை மீண்டும்

அழுத்தமாக உரைத்தான்……

 “அதனால்!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்று கூறியபடி

தன் வலக்கரத்தை கொண்டு ரோஜா மொட்டின் மென்மையை தீண்ட எத்தனிக்க

 கணவனின் செய்கையை  யூகித்தவளோ

படபடக்கும் நெஞ்சோடும் பட்டாம்பூச்சி இதழ்களோடும்

 அவன் கூறி நிறுத்திய அதே வார்த்தையை விரிந்திருந்த உதடுகளுக்கு சிரமம் அளிக்காத வகையில்

“அதனால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

 அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே கேட்டவாறு கூற

அதனை கண்டவன் தூக்கிய கரத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு

அசையாது வீணை மீட்டிய அவ்விதழ்களிடத்தில் தன்னை தொலைத்து நின்றான்……..

ஏன் இப்படி பார்க்கிறான்??????

முதலில்…  என்ன சொல்ல வந்தான்?????

 அதனால்!!!!!!!!!!!!!!!!! என்றவன்

அதனால்  இப்போதே பாப்பாவிற்கான ஏற்பாட்டை செய்துவிடலாம் என்றா???????

 அவன் கட்டியணைத்தது ஒரு உணர்ச்சி மிகுதியில்…… அதுவும் அவனையும் அறியாமல்  நடந்துவிட்ட நிகழ்வு என்பதை சரியாக யூகிக்க

 இப்போதைய அவனது பேச்சு சிறு கோபத்தை வரவழைத்த போதும்

 அவ்வபோது நல்லவனாக நடந்து கொள்கிறவனுக்கு

திடீரென எங்கிருந்து தான் குதிக்குமோ இந்த கழுதை புத்தி ???????

மனதில்  புலம்பியபடி அதிர்விலேயே நின்றவளுக்கு

பார்வையிலேயே அவளுள் புதைந்து விட விளைந்தவனை பிடித்து தள்ளிவிட தோன்றாமல் போனது!!!!!!!

 இன்னும் எவ்வளவு நேரம் தான்டா இப்படியே நிற்பீர்கள்????????

 ஆனால் உன்னை பார்த்தாலும் பாவமாக தான் மம்மி இருக்கிறது  என்பதுபோல்

 தந்தையின்  இடக்கையில் இருந்த சோட்டு சற்று எக்கி தன் அன்னையின் கன்னத்தில்

“ஹவ்வா!!!!!!!!!!”  என்றபடி ஒரு முத்தத்தை பதித்தான்….

அதுவரையில் மோன நிலையில் இருந்தவன்

 மகனின் முத்தத்தில்  தன்னை மீட்டெடுத்து

தன் தலையை பலமாக ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டு சோட்டுவிடம்  திரும்பி

” உங்கப்பனை காப்பாற்றி விட்டாய்டா மவனே……. ஜஸ்ட் மிஸ்!!!!!!!!”

 என்று கூறிவிட்டு  நகர்ந்து இருந்தான்….

 காப்பாற்றி விட்டானா?????

 என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்?????

 கணவனே ஆயினும் அவன் நடந்து கொள்ள இருந்த முறை அவளுக்கு மென்மேலும் கோபத்தை வரவழைக்க

” என்னடா சொல்ல வந்தாய்??????

 அதனால்!!!!!!!

 அதனால்!!!!!!!! என்று கீதம் பாடி !!!!

அப்படி என்ன தான் பண்ணி இருப்பாய் அதனால்!!!!!!!???????”  என்று சீறினாள்…

” என்ன பண்ணிருப்பேனா??????” யோசிக்கும் பாவனையில் நின்றவனிடம்

” கடுப்பேற்றாமல் ஒழுங்கா சொல்லுடா!!!!!” என்றதும்

” மூன்று வருடம் கழித்து சோட்டுவிற்கு தங்கச்சி பாப்பா கிஃப்ட் ரெடி பண்ணலாம் என்று சொன்னேனே……… நீ அதையா கேட்கிறாய் ??????”

அதேதான்!!!!!!!! என்பதுபோல் இன்னும் இறுகி போனவளுக்கு தன் பதிலை விளக்கினான்…

“நீ உன் பாட்டிற்கு  கிளம்பி சென்று விட்டால் நான்  எப்படி என் பையனுக்கு கிஃப்ட்  கொடுப்பேனாம்??????

அதனால்……… போகாதே !!!!! என்று சொல்ல வந்தேன்…….

ஆமாம் நான் என்ன பண்ணியிருப்பேன்

என்று நீ நினைத்தாய்?????

 சொல்லுடி பஜாரி!!!!!!

 புருஷனுக்கு மரியாதை எல்லாம் கொடுப்பதே இல்லை!!!!

 நான் அதை கூட மன்னித்து விடுகிறேன் …..

நீ என்ன நினைத்தாலும் சொல்லு ஜோராக

அதையே பண்ணிவிடலாம் !!!!!!!” என்று பேச்சை திருப்பிப் போட்டவனை முறைத்தவள்

“நான் இப்போது உன்னை நாலு சாத்து சாத்த தான் நினைக்கிறேன்!!!!!!”  என்று கத்த

 வழக்கம்போல் “வாடா மவனே !!!!! நாம் எஸ்கேப் ஆகி விடலாம்” என்று அறையை காலி செய்திருந்தான் பிரணாவ்……

கீழே சற்றுமுன் கடை வீதிக்கு சென்று விட்டு திரும்பியிருந்த காஞ்சனாவிடமும் கதிரேசனிடமும் யசோதா உதிதா புறப்பட்டுச் சென்றதை கூற

 அதைக் கேட்ட கதிரேசன் ” நான் போய் இப்போதே பார்த்துவிட்டு என்னவென்று கேட்டு விட்டு வருகிறேன்!!!!!!” என்றபடி கிளம்பினார் …

அப்போது அங்கு வந்த பிரணாவ் தந்தையை தடுத்ததோடு

” சின்ன விஷயத்தை பெரிது பண்ணாதீர்கள்……

 உதிக்கா எங்கு போய் விட்டாள்?????

 அவள் புருஷன் வீட்டிற்கு தானே!!!!!!

 யசோம்மா உனக்கு பப்புவை  பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் சொல்….

 நான் கூட்டி போய் விடுகிறேன்!!!!” என்றான்.

” அக்காவும் தம்பியும் சொல்லி வைத்ததை

போல் ஒரே மாதிரி பேசுகிறீர்கள்!!!!!!

 அவள் இப்போது சென்றதற்கு நீ தான் காரணமாக பிரணாவ்?????? அப்படி என்ன தான்டா செய்தாய்????????”

 வருத்தத்துடன் யசோதா கேட்க

அவன் எதுவும் செய்யவில்லை !!!!

அதுதானே பிரச்சனையே!!!!!! என்ற எண்ண ஓட்டத்துடன் படிக்கட்டுகளில் இறங்கி வந்தவளை பார்த்தபடியே கூறினான் பிரணாவ்….

“என்ன யசோம்மா நீ ?????

உன் பையனை போய் சந்தேகப் படுகிறாயா?????

 நீ பார்க்கிற டிவி நாடகத்தில் எல்லாம் இந்த நாத்தனார்களுக்கு இடையில் தானே பாம்ப் வெடிக்கும்!!!!!!!

 அந்த மாதிரி கூட நம் வீட்டில் நடந்திருக்கலாம் அல்லவா?????????” மனைவியை வம்புக்கு இழுத்து விட்டான்……..

அதில் பதறி வேகமாக இறங்கி வந்து

 “ஐயோ நான் எதுவும்……….”

 மைத்ரேயி பேசுவதற்குள்

“மைத்தி எதுவும் சொல்லி இருக்க மாட்டாள்!!!!

 நீ தான் ஏதையோ சொல்லி இருப்பாய்……

ஏற்கனவே உன் உதிக்காவிடம் பேசாமல் சித்ரவதை செய்தாய்…..

இப்போது எதையோ சொல்லி வீட்டைவிட்டு அனுப்பி வைத்திருக்கிறாய்……

 ஆனால் இவ்வளவு செய்தும் உன்னை என்னால்  திட்ட கூட முடியவில்லை போடா!!!!!!”  ஆதங்கமாய் கூறியவரிடம்

” உன் மருமகள் மேல் உனக்கு  ஓவர் கான்ஃபிடன்ஸ் யசோம்மா…..

 சரி புலம்புவதை விட்டுவிட்டு இப்போதே

கிளம்பு நாம் அங்கு போகலாம்!!!!!” என்று பிரணாவ் சிற்றன்னையை கிளப்ப

” நீ போய் அங்கு கொஞ்ச நாள் இருந்துவிட்டு வா யசோதா!!!!!!  கைப் பிள்ளையை வைத்துக் கொண்டு சிரமம் தானே?????”  காஞ்சனா கூறவும்

யசோதாவிற்கும் அதுவே சரியென்று பட்டது…..

 ஆனால் கதிரேசன் தன் மனைவியிடம்

” நீயும் கிளம்பு …….. நாமும் போய் சம்பந்தியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து விடுவோம்……

 யசோதா அங்கு இருந்துவிட்டு தோதுபடி  வரட்டும்”  என்று கூறியதை பிரணாவும் தடுத்திருக்கவில்லை……

 அலுவலகத்தில் இருந்த ரகுநாதனிடம் தகவல் கூறி விட்டு பெரியவர்கள் மூவரும் யுகன் வீட்டிற்கு  புறப்படும் வரை

பொறுமையை இழுத்து பிடித்து  நின்ற மைத்ரேயி இப்போது கணவனிடம் பாய்ந்திருந்தாள்!!!!

“பண்ணுவதெல்லாம் பண்ணிவிட்டு எப்படிடா என் மேல் பழியை தூக்கி போடுகிறாய் ????????”

“அதுதான் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்களே!!!!!!”

” அவர்களை போல் ஒரு ஆளாக இருக்கக்கண்டு நான் தப்பித்தேன் !!!!!! இதே அவர்கள்  இடத்தில் நான் இருந்திருந்தாலும் உன்னை தான்டா நம்பி தொலைத்து இருப்பேன் பாவி !!!!”

“எவர்களைப் போல்????????” பருவம் உயர்த்தி கேட்டவனிடம்

“அது … அது உன் யசோம்மா போல்!!!!!!!”

” ஏன் அத்தை என்று சொல்ல மாட்டாயா??????

 உனக்கு இந்த வீட்டில் ஓவர் செல்லம்!!!!!

 அதுதான் உன் இஷ்டத்திற்கு எல்லாம் ஆடுகிறாய்……”

” பேச்சை மாற்றாதே…… ஏன் என்னை அப்படி சொன்னாய்???????”

” சும்மா ஒரு ஜாலிக்கு தான்டி பஜாரி……

 போதும் இந்த டாபிக் !!!!!

உன் அத்தான் மதியமும் சாப்பிடவில்லை….

 வந்து சாப்பாடு போடு!!!”

கணவனின் கடைசி வாக்கியத்தில்

 என்ன???????? என்று அதிர்ந்தவளின் இதழ்கள் வழக்கம்போல் பிரணாவை சோதனை படுத்துவதற்காகவே வரவேற்பளித்து விரிந்தன……..

Advertisement