Advertisement

உதிதாவிற்கு குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்கு வந்து உதவிகளை செய்த போதும்

அவளையும் அவள் குழந்தையையும் பார்த்திருக்கவில்லை பிரணாவ்….

இதில் அடுத்த நாள் காலையிலேயே “டெல்லிக்கு போகிறேன் அப்பா……

 வேலை இருக்கிறது!!!!!”

எப்போதும் அதிகாலையில்

  குழந்தையையும் உதிதாவையும் பார்த்துவிட்டு வரும் வழக்கத்தை கொண்டிருந்த தந்தை கதிரேசனிடம்

அவர் வீட்டிற்குள் நுழையவும்  பிரணாவ் கூற

“அந்த வேலையை அடுத்த வாரம் பார்த்துக்கொள் பிரணாவ்….. உதிக்கு

குழந்தை பிறந்திருக்கும் இந்த சமயத்தில் ஹாஸ்பிட்டலிற்கு போகவும் வரவுமே வேலை  சரியாக இருக்கும்!!!!!”  என்று மகனிடம் மறுத்து பேசியிருந்தார்…..

 ” ஆனால்  அடுத்த வாரம் வரை எல்லாம் டெல்லிகாரன் விருந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டான்!!!!!!

 நான் போகும் காரியம் முடிவதற்கே எப்படியும் மூன்று நாட்களாவது ஆகிவிடும்…….

 இதில் அங்கு ஞாயிற்றுக்கிழமை முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் மீட்டிங் ஒன்று  இருக்கிறது…… அதையும் முடித்துவிட்டு திங்களன்று வந்துவிடுகிறேன்!!!!!”

இம்முறை  தந்தையின் பதிலை எதிர்பாராமல் சென்றவனை வெறித்தார் கதிரேசன்…….

 பிரணாவ் ஊரில் இல்லை எனும் விஷயம் மனதை வருத்த

யசோதா  மறுத்ததையும் கேளாமல்

   தன் பணிக்கு விடுமுறை எடுத்திருந்த மைத்ரேயி

உதிதாவையும் குழந்தையையும்  பார்த்துக் கொண்டாள் …..

அப்படி  பார்த்து கொள்ளும் சமயங்களில்

வீட்டில் யாராவது ஒருவர் யசோதாவோ அல்லது  காஞ்சனாவோ எப்போதும் இருக்க சோட்டுவையும் மருத்துவமனைக்கு கூட்டி வர வேண்டிய நிர்ப்பந்தம் மைத்ரேயிக்கு ஏற்படவில்லை……

 உதிதாவையும் அவளது மகளையும்  ஐந்து நாட்களுக்குப் பிறகு வெள்ளியன்று மாலை பிறந்த  வீட்டிற்கு அழைத்து வர

 அடுத்து வந்த சனி ஞாயிற்று தினங்களில் மருத்துவமனைக்கு சென்றிராத மைத்ரேயி

திங்களன்று டியூட்டிக்கு கிளம்பினாள்…..

 அவள் மனதில் சிறு நெருடல்!!!!!

 இத்தனை நாட்கள் யசோதா சோட்டுவை பார்த்துக் கொள்ள

இப்போது உதிதாவின் குழந்தையோடு அவருக்கு நேரம் சரியாக இருக்குமே என்று எண்ணி

 சோட்டுவை மருத்துவமனையில் இருக்கும் ‘டே கேர்’ல் விட்டுவிட முடிவெடுத்தாள்…….

அப்போது  வாசல் வரை குழந்தையோடு சென்ற மருமகளை கவனித்துவிட்ட காஞ்சனா அவளிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியிராததால்

 ரூமிலேயே அடைந்து கிடப்பது எப்படியோ இருந்தது என்று  சற்று நேரம் ஹாலில் உட்காரலாம் என்று அப்போது வந்து உட்கார்ந்த உதிதாவிடம்

“ஏய்!!!!! நில்லு நில்லு உதிமா ” என்றார்  காஞ்சனா அவசரமாக……

மாமியாரின்  சத்தத்தில் மைத்ரேயியின் கால்கள் தானாக நிற்க

“ஏன் பெரியம்மா இங்கு உட்கார கூடாதா??????”  என்றபடி எழுந்து நின்றாள் உதிதா…. மேலும்

” பையனை ஏன் இப்படி தூக்கிக்கொண்டு போகிறாய்??????”  என்று சிறு அதட்டலோடு வினவிய காஞ்சனாவிடம்

“ஐயோ பெரியம்மா!!!! எனக்கு பிறந்தது பப்புமா ….. பிரணிக்காவிற்கு தான் பையன் …

இன்னும் அதே நினைப்பில் இருக்கிறீர்களா ??????

நான் உட்கார்ந்து தானே இருந்தேன்…..

 நீங்கள் தான் நிற்க சொன்னீர்கள்!!!!

 அதனால் தான் பாப்பாவை தூக்கிக்கொண்டு நிற்கிறேன்!!!!!

நான் எங்கேயும் போக வில்லையே?????”

 நிஜமாகவே ஒன்றும் புரியாமல் பெரியன்னையின் பேச்சில் குழம்பி கர்ம சிரத்தையுடன் பதலளித்தாள் உதிதா……

 ஆனால் புரிய வேண்டியவளுக்கு விஷயம் சென்று அடைந்ததோடு

 அவளுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால்

உதிதாவின் அருகில் வந்து

” உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் உதிஅண்ணி!!!!!!

 நாங்கள் வேறு எதற்கு இடையூறாக?????

பப்புவை பார்த்துக் கொள்ளுங்கள் உதிஅண்ணி “

என்று மாமியாரின் போக்கிலேயே அவருக்கு  பதிலளித்துவிட்டு  நகர்ந்து விட்டாள் மைத்ரேயி …..

அதை கேட்டவருக்கு அழுகையும் கோபமும் போட்டி போட்டுக்கொண்டு வர

 அதுவரை ஒட்டாதிருந்த உறவில்

பெரும் விரிசல் ஒன்று விழுவதை

உணர்ந்து தன் அறைக்குள் சென்றுவிட்டார் …….

 பெரியம்மாவின் முகத்தை பார்த்ததும் நடந்ததை யூகித்த உதிதா

அன்று மாலை மைத்ரேயி வீடு திரும்பியதும் இதுபற்றி பேசி

மாமியார் மருமகளின் கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி கொண்டாள்!!!!

 ஆனால்??????!!!!!!!

 மாலை 6 மணியளவில் கணவன் பெயர் தாங்கி வந்த அழைப்பை இன்முகமாய் ஏற்ற உதிதா

“என்ன யுகி மதியம் தானே பேசினீர்கள்!!!!!

 அதற்குள் என்ன??????”  போலியாய் மிரட்டல் விடுக்க

“ஹேய் என் நிலைமையை  பார்த்தால் உனக்கு காமெடியாக தெரிகிறதாடி??????

 நீ ஒருத்தி அங்கே இருந்தாலே என் எண்ணங்கள் முழுவதும் அங்கு உன்னையே தான் சுற்றி வரும்!!!!!

 போதாதென்று  என் பப்புமா-வையும் சேர்த்துக் தூக்கி கொண்டு போயிருக்கிறாய்!!!!!!

 ஒரு கலெக்டரை ஒழுங்காக வேலை பார்க்க விடுகிறாயா அம்மு நீ????????”

 புலம்பிய யுகன்

” இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கு வரும்போது என்ன நடந்தாலும் சரி உன்னையும் பப்புவையும் இன்று

 தூக்கிக்கொண்டு போக தான் போகிறேன்!!!!!!”  என்றான்  உறுதியாக …..

“என்ன விளையாடுகிறீர்களா?????

சண்டே என்று நேற்று முழுவதும் இங்கு தானே இருந்தீர்கள்?????

 அப்புறம் எதற்கு இன்று????

 சமத்து பையனாக நம் வீட்டிற்கே போவீர்களாம்…….

 இரண்டு நாட்கள் கழித்து வருவீர்களாம்!!!!!

யுகி அப்படியே அத்தையையும் கூட்டி வாருங்கள்…… பேத்தியை பார்த்தே ஆக வேண்டும் என்று உங்களுக்கு போட்டியாய் தவிக்கிறார்!!!!!!!”

” எல்லோரையும் தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் ஜாலியாக இருக்கிறாய் அம்மு!!!!”

 சண்டை பிடித்தவனிடம் கொஞ்சி கெஞ்சி ஒரு வழியாய் போனை வைத்தவள் ஓய்ந்திருந்தாள்……

” உன் அப்பா இருக்கிறாரே???????

கொடுங்கோல் ஆட்சியாளரே தான்!!!!!!! “

 லேசாக  சலுகையாய் சிரித்தபடி  விழித்திருந்த மகளிடம் உரைத்த உதிதா

” அடடா!!!! ஜக்கில் தண்ணீர் காலியாகிவிட்டதே!!!!!!

அம்மா கிச்சனிற்கு சென்று குடித்து விட்டு வருகிறேன்…..

என் பப்புமா குட் கேர்ளாக இருப்பாளாம்!!!!!”  என்று மகளிடம் கூறிவிட்டு சென்றாள் உதிதா…..

 அன்னை இருக்கும் வரை அவள் கூறியதை கூறியபடி சமத்தாக கேட்டு கொண்ட  யுகனின்  பப்பு

உதிதா  சென்றதும் “குவா குவா” என்று சத்தம் போட ஆரம்பித்தது ……

 அப்போது டெல்லியில் இருந்து வீடு திரும்பிய பிரணாவ் கீழே இருக்கும் அறையில் அழுகைச் சத்தம் கேட்கவே

அதிலும் அக்குரலுக்கு சொந்தகாரி தன்

தமக்கையின் பெண்ணவளது என்பது  தெரிந்ததும்

 அவன் கால்கள் அவனையும் மீறி அவன் பப்புமாவிடம் சென்று நின்றன……

 ஆனால் அறை வாயில் வரை சென்று விட்டவனை உள்ளே செல்ல விடாது ஏதோ ஒன்று தடுக்க

அழும் குழந்தையை சற்று தொலைவிலிருந்தே பார்த்தபடி அப்படியே நின்று போனான் பிரணாவ்!!!!!!!!

இந்த   அம்மாவிற்கும் யசோம்மாவிற்கும்   பப்புமாவை கூட கவனிக்காமல் அப்படி என்ன வேறு வேலை?????????

 மனதில் அன்னையர் இருவரையும்  திட்டி தீர்த்தவன்

உள்ளேயும் செல்ல முடியாது

விட்டு நகரவும் முடியாது

திணறி போனான்…….

 தண்ணீர் குடிக்க போனவளுக்கு பசி எடுக்கவும் அடுப்படியில் யாரையும் காணாததால் அவளே பாலை சூடு பண்ணி ஹார்லிக்ஸ் ஆற்றி அங்கேயே குடித்து விட்டு வர

ஹாலிலேயே தன் மகளின் அழுகுரல் கேட்க ஆரம்பித்தது!!!!

 “அடடா தனியே விட்டு விட்டு வந்தோமே!!!!!” என்று உதிதா ஓட

அங்கு அறை வாயிலில் தன் தனயன் நிற்பதைக் கண்டு உறைந்தாள்…….

 இவனுக்கு என் மீது தானே கோபம்!!!!!!!

 அப்படியிருக்க என் பொண்ணு என்ன செய்தாள்?????????

 அவள் அழுகுரல் இவன் நெஞ்சில் உள்ள

பிடிவாதத்தை கரைக்கவில்லையோ?????!!!

 அப்படி என்றால்?????????

 மனதில் எழுந்த ஆயிரம் கேள்விகளை முகத்தில் பிரதிபலித்து பிரணாவை பார்த்தபடியே அறையினுள் சென்ற உதிதா தம்பியிடம் ஒரு வார்த்தை  பேசவில்லை……

 ஆனால் அவள் பார்த்த பார்வை??????!!!!!!

 இவ்வளவுதானாடா நீ ????????

என்று கேட்ட விதத்தில் அங்கு நிற்க முடியாமல் தனது அறைக்கு தாவி இருந்தான் பிரணாவ்…..

 மருத்துவமனையிலிருந்து சோட்டுவுடன் வீடு திரும்பிய மைத்ரேயியின் கண்களுக்கு உதிதா அறையின் முன் நிற்கும் கணவன் தென்பட்டான்…..

 உள்ளே சென்று பேபியை தூக்குவதற்கு என்னவாம்????????

 மனதில் அவனை குமைந்தபடி நிற்கும்

போது தான் உதிதா அடுப்படியிலிருந்து வந்ததும்!!!!!

 ஆனால் வந்தவளும் ஒரு சொல்  உதிர்க்காமல் சென்றுவிட

அதைக் கண்ட பிரணாவும் அவன் பாட்டிற்கு மாடி ஏற

இவளுக்கு தான் அவனின் மீது கோபம் கோபமாக வந்தது!!!!!!!

உடனே கணவன் பின்னோடு சென்றவள் அவர்கள் அறையில் சுவற்றின் பக்கமாய் திரும்பி நின்றவனின் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல்

“உனக்கு ஏன் பிரணாவ் இவ்வளவு கோபம்???????

 அதுவும் நேற்று பிறந்த குழந்தையிடம் காட்டுகிறாய்????????

உதிஅண்ணி உன்னைப் பற்றி விவரித்ததில் பத்து சதவீதம் கூட உண்மை இல்லை என்பதை நிரூபித்து

விட்டாய்!!!!!!!

இப்படி  ஒவ்வொரு நாளும் நீ அவர்களிடம் பேசாமல் கடந்து போகும் போதும் இவையெல்லாம் என்னால் வந்தது தானே???????? எனும் தாழ்ப்புணர்ச்சி என்னுள் தோன்றி என்னை உயிரோடு  கொல்கிறது !!!!

இப்போது

அந்தப் பாவம் நீ அவர்கள் பப்புவை கண்டு கொள்ளாமல் போய் சோட்டுவையும் தொடர வேண்டாம்!!!!

 நாங்கள் போகிறோம்…….. “

 படபடத்தபடி பொறிந்து தள்ளிவிட்டு திரும்பியவளின் கரம் பற்றி இழுத்து அவளை தன்னோடு இறுக்க  கட்டிக்கொண்டான் பிரணாவ்……..

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்துவிட்ட நிகழ்வில் முதலில் அதிர்ச்சி அடைந்தவள் தன்னை மீட்டுக் கொண்டு

கட்டியவனை தள்ளிவிட முயல

” எனக்கு பப்புமாவை எப்படித் தூக்க வேண்டும் என்பது தெரியாதுடி பஜாரி !!!!!

உனக்கு தெரியுமா???

ஆதி பிறந்து முதல் மூன்று மாதம் வரை நான் தூக்கவே இல்லை!!!!

 சோட்டுவும் கொஞ்சம் பெரிய பையனாக இருந்ததால் தான் தூக்கினேன்…..

 இல்லாவிட்டால் தூக்கி இருக்க மாட்டேன்!!!!

 நான் வேண்டுமென்றே பப்புவை தூக்காமல் இல்லை…….

 ப்ளீஸ் நீயாவது என்னை புரிந்து கொள்!!!!!!!

 ஆனால் …. ஆனால் உதிக்காவிற்கு என்னைப் பற்றி தெரிந்தும் ஏன் என்னை அப்படி  தப்பாக நினைத்தாள் ????????

 அவள் பார்த்த பார்வை !!!!!!!

எனக்கு எப்படி தெரியுமா இருக்கிறது????????

 அப்படியே அரிவாளைக் கொண்டு கூறு கூறாக வெட்டி போட்ட மாதிரி வலிக்கிறது!!!!!!!

 நான் எப்படி பப்புவை கண்டு கொள்ளாமல்  போவேன்?????

 அது என்னுடைய உதிக்காவின் பப்பு அல்லவா???????

பப்பு பிறந்ததற்கு என்னைவிட இவ்வுலகில் யார் அதிகம் சந்தோஷப் பட்டிருப்பார்கள்????????

 பப்புவிற்கு ஏதாவது ஒன்று என்றால் யுகி மாம்ஸை விட நான் துடித்துப் போய் விட மாட்டேனா????????

 ஆனால் அது ஏன் உதிக்காவிற்கு புரியவில்லை??????????”

 தேமி தேமி சிறுபிள்ளையாய் மாறி அழுதவனின் முதுகை மைத்ரேயியின் கைகள் தானாக தடவிக் கொடுத்தது…….

” ரிலாக்ஸ் பிரணாவ்…… நீ பேசினால் உதிஅண்ணி புரிந்து கொள்வார்கள்…..

 இப்போதே பேசுகிறாயா???? ” என்றதும் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்தவன்

” இல்லை வேண்டாம் ” என்றான்….

 பின் இவ்வளவு நேரம் தாய் தந்தையின் அணைப்பின் கதகதப்பில் சுகம் கண்ட சோட்டு பிரணாவிடம்

“அப்பா!!!!!!!” என்றபடி பாய

மூன்று நாட்களாக பார்த்திராத மகனை தூக்கி அக்கா மகளுக்குமான தன் முத்தங்களையும் சேர்த்து அவனுக்கே பரிசளித்தான்  பிரணாவ்  ……

  முகத்தில் குழப்ப ரேகைகளை படர விட்டு நின்றிருந்த மைத்ரேயி

“ஏன் வேண்டாம்??????

சரி உன் கோபத்தை நீயே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடு!!!!

 நான் போய் உதிஅண்ணியிடம் பேசுகிறேன்…….

 அவர்கள் ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பார்கள்…….

 நீ குழந்தையை தூக்காததை தவறாக நினைத்துக் கொண்டு வருந்தியிருப்பார்கள்!!!!!”  என்று கூறிவிட்டு செல்ல

“நில்!!!!! தப்பாக நினைத்தால் நினைத்து விட்டு போகட்டும் …… நீ எதுவும் போய் பேசக்கூடாது!!!!!”

 அவ்வளவு அழுத்தமாக  தோரணையில் பேசியதும்

இவனா ஒரு நிமிடத்திற்கு முன்

குழந்தைத்தனம் மாறாமல் தன்னை அப்பட்டமாக  வெளிப்படுத்திக் கொண்டவன்??????

 என்பதுபோல் மலைத்து நின்றாள் .

 இவனுக்கு என்ன தான் பிரச்சனை???????

முதலில் இவன் நல்லவனா கெட்டவனா?????? ரீதியில் கணவனை

 முறைத்தவள் அவன் சொற்களை கண்டு கொள்ளாமல்  திரும்பிச் செல்ல

 ஒரே எட்டில் அவளின் கரத்தை அழுந்த பிடித்தவன்

” நான் சொன்னது உன் காதில் கேட்கவில்லையாடி பஜாரி ??????

 இப்போது நான் சொன்னது எதுவும் எப்போதும் எக்காரணம் கொண்டும்  உதிக்காவிற்கு  தெரியக்கூடாது!!!!!!!!”  மீண்டும் அதே அழுத்த குரலில் மொழிய

அவனிடம் சிக்கியிருந்த தன் கையை அவசரமாக  உருவிக் கொண்டாள்

மைத்ரேயி……

 “உனக்கு போய் பொண்டாட்டியாக பிறந்திருக்கிறேன் அல்லவா???? அதனால் எதுவும் சொல்ல மாட்டேன்!!!!!!

 ஆனால் என்ன பண்ணுவது????

நான் மனித ஜென்மமாக பிறந்து விட்டேனே!!!!

அதனால் உன்னைப் போல் எல்லாம் உதிஅண்ணி என்ன பண்ணுகிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ளாமல் இங்கேயே  உட்கார்ந்து இருக்கவும் என்னால் முடியாது……

 உதி அண்ணியை பார்த்து ஆறுதலாவது கூறிவிட்டு வருகிறேன்!!!”  என்று சென்றவளை இம்முறை  பிரணாவ் தடுக்க முயற்சிக்கவில்லை….

 பிரணாவ் தன்னிடம் கூறியதை பற்றி

தெரிவிக்காத போதும் எதையாவது சொல்லி உதிஅண்ணியின் நிலையை சீர் செய்ய விரைந்த மைத்ரேயி  அங்கு கண்ட காட்சி!!!!!

” யுகி இப்போது உடனே வந்து பப்புவையும் என்னையும் நம் வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுங்கள்!!!”

 அழுகுரலில் வினவ

 பதறிப் போனான் யுகன் மறுமுனையில்……

” என்னாச்சு அம்மு??????

 அங்கு ஏதாவது பிரச்சனையா??????”

” எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை!!!!!!

 நீங்கள் வருகிறீர்களா??? அல்லது நானே அங்கு வந்து விடவா??????”  விசும்பலோடு கூற

” இன்னும் கால் மணி நேரத்தில் அங்கு

இருப்பேன் ……

தயவுசெய்து  நீ முதலில் அழுகையை நிறுத்து அம்மு!!!! ” என்றபடி போனை அணைத்து இருந்தான் யுகன் …..

Advertisement