Advertisement

மைத்ரேயிக்கு தன்னந்தனியாக பிரசவத்தை கையாள்வது இதுவே முதல்  அனுபவம் !!!!!

 அவள் கற்ற பாடம் பொருட்டு ஜெல் வைத்துப் பார்த்தும்…. ஊசி செலுத்தி பார்த்தும்…….  உதிதாவின் கருப்பை வாய் திறக்காமல் போக எமர்ஜென்சி ‘சி’ செக்ஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள் தாமதிக்காமல்…….

 தன் கண்முன் படுத்திருப்பவள் தனக்குச் சொந்தமான உதிஅண்ணி எனும் எண்ணத்தை அரும்பாடுபட்டு நகர்த்தியவள்

தன் தந்தையை மனதார வேண்டிக்கொண்டு உதிதாவின்  வயிற்றில் கத்தியை வைத்தாள்…..

 இதற்கு முன் அவள் பார்த்த முதல் பிரசவம் ……

 அது அவள் மட்டுமின்றி கைதேர்ந்த மகப்பேறு மருத்துவர்களால் பார்க்கப்பட்ட பிரசவம் தனில்……

 அன்னை இறந்திருக்க !!!

இனிமேல் எக்காரணம் கொண்டும் லேபர் வார்டுக்குள் ஒரு மருத்துவராக வரவே கூடாது என்பது போன்று ஒரு சபதம் எடுத்திருந்தாள் மைத்ரேயி……

 ஆனால் இப்போது நிலைமை கை விட்டுப் போகவும் எடுத்த சபதம் பறந்து போக

தன் பணியில் மூழ்கினாள்!!!!!

 அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சிசுவை கையில் ஏந்திய மைத்திரேயி

நர்சிடம் அதனை ஒப்படைத்து விட்டு பிளாஸ்திரி ஒட்ட துவங்கும் சமயம் எதிர்பாராதவிதமாக கருப்பை பை வாயிலாக அதிக அளவிலான ரத்தம் வெளியேறத் துவங்கியது!!!!

கால் மணி நேரமாக ரத்தப்போக்கை கட்டுப்படுத்த போராடிய மைத்ரேயி ஒருவழியாக இயல்பு நிலைக்கு உதிதாவை மீட்டிருந்த போதும்

அவசரமாக அவள் உடலிற்கு இரத்தம் ஏற்றுவது அவசியம் ஆகிப்போனது!!!!

 வெளியே ஓடிய மைத்ரேயி

“உதிஅண்ணியின் பிளட் குரூப் என்ன??????

 அந்த ரத்தம் உடனே தேவைப்படுகிறது!!!!!” என்று கத்த

யுகன் அவளுக்கு மேல் கத்தி இருந்தான்…..

” அம்முவுக்கு என்ன ஆச்சு????????????”

” பயப்படாதீர்கள் அண்ணா!!!!!!!

 கொஞ்சம் பிளட் லாஸ் ஆகி இருக்கு….

 உடனே ரத்தம் ஏற்றி ஆக வேண்டும்…..”  என்றிருந்தாள் மைத்ரேயி….

உடனே யசோதா வேகமாக அவள் அருகில் வந்து “உதி பி பாசிட்டிவ்……  நானும் அதே பிரிவு  தான் ” என்று அழுதபடி ரத்தம் கொடுக்க முன்வந்தார் …..

ஆனால் மைத்ரேயி சற்றே தயக்கத்துடன் அங்கு ஒரு ஓரமாய் கலங்கிப் போய் நின்ற பிரணவிடம் விரைந்து சென்று

“உன் பிளட் குரூப் என்ன????????” என்று வினவினாள்…..

பிரணாவ்

“பி  பாசிடிவ் தான்!!!!”  என்றதும்

  “நீ உடனே வா!!!!!!”  கணவனின் கை பற்றி

அழைத்துச் சென்றவள்

அவனின் ரத்தத்தை எடுக்க ஏற்பாடு செய்துவிட்டு நொடியும் தாமதிக்காமல் உதிதாவின் உடலிற்குள் அதை செலுத்தலானாள்……

 ரத்தம் ஏற்றி  அரை மணி நேரம் ஆகியும்  விழிப்பு வராத போதும் உதிதாவின் பல்ஸ் ரேட் அனைத்தும் சீராக மாற

ஒரு பெருமூச்சோடு வெளியே வந்த மைத்ரேயி

“உதிஅண்ணியும் குழந்தையும் நலம்!!!!”  என்று கூறவும் தான்

யுகனிற்கு நின்ற உயிர் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது!!!!!!

”  ரொம்ப தேங்க்ஸ்மா ” நா தழுதழுக்க கண்ணீர் குரலில் யுகன் கூறவும்

“என் அண்ணிக்கு நான் பிரசவம் பார்த்தேன்…..  இதில் நீங்கள் எதற்காக அண்ணா நடுவில் வந்து தேங்க்ஸ் சொல்கிறீர்கள்????????”  என்றவள்

 இன்னும் அழுகை ஓய்ந்த பாடாக தெரியாத யசோதாவின் அருகில் சென்று

“அது…. உங்கள் ரத்தத்தை உதிஅண்ணிக்கு ஏற்றலாம் தான்……

 ஆனால் அதற்கு முன் ஹீமோகுளோபின் லெவல் செக் பண்ணியாக வேண்டும்!!!!!

 அதற்கு இப்போது நேரம் இல்லாததால் தான் பிரணாவிடம் கேட்டேன்……”

அவரது  ரத்தம் வேண்டாம் என்று அவள் நிராகரித்ததை எப்படி எடுத்துக் கொள்வாரோ?????

 என்று தன் சின்ன மாமியாரிடம் விளக்கம் கூறினாள் மைத்ரேயி…….

 ஆனால் யசோதாவோ தன் முன் நின்றவளை  இறுக்கியணைத்ததோடு அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வழங்க

அச்செய்கையில் சமைந்து போனாள் சின்னவள்…….

” இன்று நீ மட்டும் இல்லை என்றால்????? என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை!!!!!”  பேச்சு வராமல் யசோதா நிறுத்தியதோடு

 பிரணாவிடம் திரும்பி

“உங்களுக்கு நான் என்ன கைமாறு பிரணாவ் செய்யப் போகிறேன்????????”  என்ற தாயன்பின் வெளிப்பாட்டை மறைக்க முடியாமல் திணறினார்…..

அதற்கு  பிரணாவ்  “ஏன் யசோம்மா

வீட்டில் என்னை காரை எடுக்க வேண்டாம் என்று சொன்னாய்???????????”  அவனுக்கு தன் சிற்றன்னையின் மீதிருந்த கோபம் தீரவில்லை!!!!!!

“வரவர கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நீயும் என் அப்பா மாதிரி மாறிக் கொண்டு வருகிறாய்!!!!!!”  என்றான் தன் தந்தை அருகில் நிற்கும் நினைவை மறந்து…..

 உடனே காஞ்சனா “என்ன பிரணாவ் பேசுகிறாய்????????”  என்று அதட்ட

“ஆமாம் எல்லோரும் நினைத்ததை பேசலாம்…. நான் மட்டும் பேசக்கூடாது!!!! முனுமுனுத்த போதும் அங்கேயே தான் நின்றான்…….

” சாரிடா பிரணாவ்  ….. நீயும் உன் பொண்டாட்டியும் தான் இன்று உதியை காப்பாற்றி இருக்கிறீர்கள்!!!!!”  என்றதும் அவன் கோபம் பன்மடங்கு ஆகியது …..

“நான் என்ன பண்ணினேன்?????

 ஹோ வண்டி ஓட்டியதை சொல்கிறாயா????? இல்லை ரத்தம் கொடுத்ததை சொல்கிறாயா யசோம்மா ??????? “

 என்றபடி எறிந்து விழுந்தவன்

 “யாரும் யாரையும் காப்பாற்ற வில்லை!!!!

 ஏன் இவள் டாக்டர் தானே?????

 அவளது கடமையைத்தானே செய்திருக்கிறாள்…..

 தயவுசெய்து ஓவர் எமோஷனல் என்ற பெயரில் எதையாவது இப்படி உளறி வைக்காதே !!!!!!!!” என்று

 நகர்ந்து கொண்டவனை பார்க்கையில்

 தன் மனதில் வேறு ஒரு எண்ணம் குடியேறுவதை மைத்ரேயியால் தடுக்க முடியவில்லை……

 இந்நேரம் தான் செய்த காரியத்திற்கு தன் அப்பா  மட்டும் இருந்திருந்தால்??????

 தன் இரு தோள்களையும் பற்றி “சபாஷ்டா ரேயி கண்ணா!!!”  பெருமை பொங்க வாழ்த்தி இருப்பார்…..

 தன் தந்தை அளவிற்கு பாராட்ட வேண்டாம் எனும் போதும் இப்படி கடமையை செய்வதற்கு ஏன் இத்தனை பில்டப் என்ற அளவிற்கும் பேசி இருக்க வேண்டாமே ????!!!!!!

கடமை தான் என்றாலுமே இது தனக்கு முற்றிலும் புதிது என்று பிரணாவ் ஏன் அறிந்திருக்கவில்லை????????

 என்ற எண்ணங்களை சுமந்து நின்றவளுக்கு  தன் மனம் ஏன் இதை எதிர்பார்க்கிறது என்பது புரியாமல் சிக்கித் தவித்தாள் ……

அப்போது

ரகுநாதன் அவளிடம் சென்று “என்ன

சொல்வது என்று தெரியவில்லைமா????? ரொம்ப தேங்க்ஸ்!!!!”  என்று கூற

 காஞ்சனா இதனை பார்த்த போதும் அவர்கள் பேச்சில் பங்கு கொள்ளவில்லை….

 இத்தனை நாட்களாக வேண்டாத மருமகளாக அவளை நடத்திவிட்டு

 இன்று அவள் செய்திருக்கும் இன்றியமையா செயலுக்கு அணைத்து பாராட்டி ஆறுதல் படுத்த மனம் நினைத்த போதும்

 அறிவோ அதற்குண்டான உரிமையை தான் இழந்துவிட்டதாக வற்புறுத்தியது!!!!!!!

 அப்போது கம்ப்ளீட் செக் அப்-பிற்காக முதல் தளத்தில் இருந்த குழந்தை நல மருத்துவரிடம் அனுப்பப்பட்டிருந்த உதிதாவின் குழந்தையை கையில் ஏந்தியபடி கீழே வந்த நர்ஸ் ஒருவர்

” ‘எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்று டாக்டர் உங்களிடம் இந்த ரிப்போர்ட்டை கொடுக்கச் சொன்னார் டாக்டர் ”  என்று கூறிவிட்டு குழந்தையையும் மைத்ரேயியிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்……

” என்ன பேபி????????”  யசோதா தான் கேட்டார்……

 தூங்கிக் கொண்டிருக்கும் சோட்டுவை தன் தோளில் சுமந்தபடி சற்று தள்ளி நின்ற பிரணாவ் அக்காளின் குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து கொடுத்ததை பார்த்த போதும் அதனருகில் செல்லவில்லை…….

 ஆனால் அப்படி அருகிலேயே நின்ற யுகனும் மனைவியை பாராமல்

அவள் முகத்தை காணாமல்

தன் உதிரத்திலிருந்து உதிர்த்த சிசுவை பற்றி தெரிந்து கொள்ள

விளையவில்லை……..

 இருப்பினும் “பொண்ணு”  என்ற மைத்ரேயியின் ஒரே வார்த்தையில்

தான் இவ்வுலகையே வென்று விட்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மனதை அடக்க வழி தெரியாது தவித்துப் போனான் யுகன் ……..

சற்று நேரத்திலேயே

மனைவி கண் விழித்து விட்டாள் என்பது தெரிய வர அவசரமாக அவளிடத்தில் விரைந்தான்……

 அவ்வளவு வலியிலும் புன்னகை முகமாய்

” நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு தான் பிறந்து இருக்காள் யுகி” என்று வாய் வார்த்தைகளால் கூற நினைத்தவளுக்கு

 வெறும் காற்றே வெளிவர

மனைவியின் சந்தோஷத்தையும் அவள்

வெளிவராத மொழிகளையும் அறிந்திருந்த யுகன்

அவள் நெற்றியில் முத்தமிட்டு

“என் அம்மு போலவே என் பப்புவும் என் சொல் பேச்சு கேட்டு சமத்தாக என்னிடம் வந்து விட்டார்கள் !!!!!!” என்றான் உணர்ச்சி மிகுதியில்…….

” பாப்பா பிறந்திருக்கிறாள் என்று சொன்னார்கள்….. ஆனால் அவளை இன்னும் என் கண்ணிலேயே காட்டவில்லையே????!!!!!! “

 கொஞ்சம் சிரமப்பட்டே குறைபட்ட உதிதா

 ” நம் பப்பு உங்களை மாதிரியா??????? இல்லை பிரணாவ் மாதிரியா யுகி?????? ” என்றாள் கண்கள் மின்ன ……..

அப்போது குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்த மைத்ரேயிக்கு அவ்வளவு கோபம் வந்தது!!!!!!!

 “சோட்டுவால் இங்கு ஒழுங்காக தூங்க முடியவில்லை!!!!

 நான் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன் அம்மா ” காஞ்சனாவிடம் சொல்லி விட்டுப் புறப்பட்ட பிரணாவ்

“உதி உன்னை தான் பிரணாவ்  தேடுவாள்!!!!

 ஒழுங்காக வந்து பார்த்து விட்டு போ!!!!!” தன் அன்னையின்  அதட்டல் மொழி  எதற்கும் அவன் செவிசாய்த்து இருக்கவில்லை ……

இங்கு உதிஅண்ணி  என்னடா என்றால் இப்படி கேட்கிறார்கள்????!!!!!!!

 அவன் இங்கு இல்லை என்று தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்???????

 என்று கணவனின் மீது கோபத்தை திரட்டியபடி   கையிலிருந்த குழந்தையை பார்க்க

அது ஏனோ அவள் கண்களுக்கு தன் கணவன் போலவே தோன்றியது!!!!

மேலும் ” என் மாமனையா திட்டுகிறாய்????” என்பது போல் வீறிட்டு கத்த துவங்கியது…….

 அந்த சத்தத்தில் ” இதோ பப்பு வந்துவிட்டார்கள்……  நீயே பார் அம்மு யார் மாதிரி என்று!!!!” யுகன் கூற

” உங்களுக்கு யாரைப் போல் யுகி தெரிந்தாள்???? என்றாள் உதிதா ஆர்வம் மேலோங்க…..

 “அது எப்படி உதிஅண்ணி அண்ணா சொல்வார்?????

 குழந்தையை பார்க்க கூடாது என்று

இருந்தவருக்கு பப்பு யார் மாதிரி என்று எப்படி தெரியுமாம்????????” என்ற சிரித்தபடி அவர்களின் புதல்வியை அவர்களிடம்  நீட்டினாள் மைத்ரேயி…..

 மைத்ரேயியின் கூற்றில் “அப்படியா யுகி????

நீங்கள் இன்னுமா பப்புவை பார்க்கவில்லை???????????”  என்று தன் கண்களை அகல விரித்த உதிதாகவின் காதருகில்

“அம்மு இது ஹாஸ்பிடல்!!!!!!!”  என்று கூறி

 ரோஜா நிற தேங்காய்ப் பூ துண்டினால் சுற்றி இருந்த தன் ரோஜா குவியலை கவனமாக வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துகொண்ட யுகன்

அந்த பஞ்சு பொதியினும் மென்மையான பிஞ்சு கால்களுக்கு தன் முதல் முத்தத்தை பதித்து

“வெல்கம் பப்பு” என்றான் …..

அக்காட்சியை தன் மனப்பெட்டகத்திற்குள் பூட்டி வைத்துக் கொண்ட உதிதா

” இங்கே கொடுங்கள் யுகி!!!!”  என்று கேட்டு  குழந்தையை வாங்கியதும்

“எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது யுகி !!!!!!

பிரணாவ் பிறந்ததும் இப்படித்தான் இருந்தான்…… நம் பப்புவும் அவள் மாமாவை மாதிரியே உரித்து வைத்து பிறந்திருக்கிறாள் ” என்று பரவசமடைந்தாள்……

 பின் உடனே “பிரணாவ் எங்கே?????? என் மீது கோபம் சரி !!! அதற்காக பப்புவை பார்க்காமல் இருக்க மாட்டானே ????!!!

 பப்புவை பார்த்து விட்டு என்ன சொன்னான்??????”

 சிறு வருத்தம் மேலோங்கிய போதும் ஆர்வமாய் கேட்டவளிடம்

என்ன சொல்வது?????? என்று தெரியாமல் திணறினாள் மைத்ரேயி ……

“செல்லு மைத்தி” என்று இப்போது அவள் முகம் பார்த்து கேட்கவும்

மைத்ரேயியின் முக பிரதிபலிப்பில் பிரணாவ் இங்கு இல்லை என்பதை அறிந்து கொண்ட யுகன்

“உனக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகிவிட்டது அம்மு…… அவன் தான் ரத்தம் கொடுத்தான்!!!!!

 அப்புறம் உனக்கு ஒன்று தெரியுமா??????

 உனக்கு ஆபரேஷன் பண்ணி நம் பப்புவை பத்திரமாக இவ்வுலகிற்கு அழைத்து வந்தது மைத்தி தான்!!!!!”  என்று பேச்சை மாற்ற

அவள் கையை பற்றி தன் கண்களில் வைத்து கொண்ட உதிதா ” தேங்க்ஸ் சொல்லி உன்னை பிரிக்க தோன்றவில்லை மைத்தி!!!!!!!” என்றாள் பாசமிகுதியில்…..

பிறகு

“ரிசப்ஷனில் மகப்பேறு மருத்துவர்களை அணுகி வர சொன்னார்களே!!!!

 அப்போது அவர்கள் யாரும்  வரவில்லையா??????”  என்று உதிதா கேட்ட போது

விதுல்யா தன் அண்ணன் கவின் மற்றும் அண்ணி பிரணிதாவுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்…..

 பிரசவ நேரத்தில் ஏற்பட்ட சிக்கலை நர்ஸ் ஒருவரின் மூலம் அறிந்துகொண்ட விதுல்யா மைத்ரேயியின் சாமர்த்தியமான மருத்துவ

அணுகுமுறையைக் கண்டு மெச்சிய போதும் அவளிடம் எதுவும் பேசவில்லை……

 மைத்ரேயியும் விதுல்யாவை பார்த்த போது எந்த பேச்சுக்கும் இடம் கொடுக்காமல் கடந்து சென்று விட்டாள்!!!!

 தன் மகளை பிரணாவ் பார்க்கவில்லையே எனும் தகவல்  நெருஞ்சி முள்ளாய் குத்த

“நீ ஏன் மம்மி கவலைப்படுகிறாய்????

 மாமாவை பற்றி உனக்கு தெரியாததா?????

 எப்படியும் நம்மிடம் பேசாமல் எங்கு போகப் போகிறார்?????

 இப்போது முதலில்  நீ என்னை கவனி !!!!!!”

 என்பதை தன் அழுகையை மொழியில் உணர்த்த குழந்தையிடம் தன் முழு கவனத்தையும் திசை திருப்ப முயன்றாள் உதிதா ……

மருத்துவமனைக்கு பிரணாவ் வந்து அவ்வபோது போதிய உதவிகளை செய்த போதும் உதிதாவையும் அவளது குட்டி மகளையும் பார்த்து விடுவதை கவனமாக தவித்திருந்தான்…..

ஆனால் அவனுக்கும் சேர்த்து அவன் மனைவி உதிதாவை கவனித்து கொள்ள

யசோதா தான் வாய் ஓயாமல் மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் மகளிடம் தன்  மருமகளின் புராணத்தை பாடி வியந்து போனார்…..

” கடவுள் புண்ணியத்தில் அந்த மைத்தி  பொண்ணு வந்து உதவியது…. இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் உதிமா??????”

 “அம்மா கொஞ்சம் அமைதியாக தான் இரேன் ….. சரி பிரணாவ் எனக்கு ரத்தம் கொடுத்ததை இப்படித்தான் நீ சொல்லி

சொல்லி காண்பிக்கிறாயா????

 இல்லைதானே !!!!!

அதுபோல் தான் மைத்தி செய்திருப்பதும்!!!!

அவர்களை  பிரித்துப் பார்க்காதே!!!!”

 உதிதாக விளக்கம் கூறவும்

“அது எப்படி நான்  பிரித்துப் பார்ப்பேன்??????

 அவள் நம் வீட்டிற்கு வந்ததிலிருந்தே உங்களில் ஒருத்தியாக தானே பார்க்கிறேன்!!!!!

 இருந்தாலும்  தக்க சமயத்திற்கு மைத்தி உதவியது நமக்கு இன்றியமையாது தானே ?????!!!!!” என்றார் மீண்டும்….

 அப்போது அரை வாயிலுக்கு வந்த மைத்ரேயியிடம் “எனக்கு நீ ஒரு முறை தான் பிரசவம் பார்த்தாய்……

 ஆனால் அதை அம்மா சொல்லி சொல்லி பத்து பிள்ளைகளை பெற்று விட்டது போல்

இப்போது தோன்றுகிறது மைத்தி!!!!!” என்று உதிதா சொன்னபோது

மைத்ரேயியின் பின்னோடு உள்ளே நுழைந்த யுகன் ” அட இது நல்லா இருக்கே!!!!!!!” என்று புருவத்தை உயர்த்தினான்….

” நல்லாயிருக்கும்  இருக்கும்!!!!!”

 பழிப்பு காட்டியவளை பார்த்து சிரித்தவன்

 யசோதாவிடம் திரும்பி

“டாக்டர் இன்று வீட்டிற்கு கூட்டிப் போகச் சொல்லிவிட்டார்கள் அத்தை……

 அம்மா தான் ரொம்ப ஆசைப் படுகிறார்கள் அங்கே நம் வீட்டிற்கு  கூட்டிப் போகலாம் என்று!!!!!

 ஆனால் நீங்கள் எதாவது சொல்வீர்களோ என்று கேட்க மறுக்கிறார்கள்!!!!!

 அம்முவையும்  பப்புவையும்  நான் அங்கு அழைத்துப் போகட்டுமா அத்தை??????  “

அனுமதி கேட்டு நின்றான்.

 “ஒரு 2 மாதம் போகட்டுமே மாப்பிள்ளை!!!

 அப்புறம் அங்கே தானே இருக்க போகிறார்கள்” என்றார் யசோதா தயக்கத்துடன்!!!!

“என்னை  விட்டுவிட்டு போகிறாயா அம்மு???????” என்பதாய்  மனைவியை ஏறெடுத்து பார்த்தவனின் விழிகள் அவளை சாட

  “இரண்டு மாதம் தானே யுகி!!!!! ப்ளீஸ் யுகி” கணவனிடம்

 கண்கள் மொழி பேசியவளுக்கு தெரியாது

இன்னும் இரண்டே நாட்களில் தாமே கணவனை அழைத்து

“என்னையும் நம் பொண்ணையும் அங்கு கூட்டி போய் விடுங்கள் யுகி!!!!!!” என்று கதற போகிறோம் என்பது!!!!!!!

Advertisement