Advertisement

மைத்ரேயி பிரசவம் குறித்து கவலை வேண்டாம் என்று கூறியதும் யசோதா  அடுப்படிக்குள் செல்ல

சோட்டு பிரணாவுடன் விளையாடி கொண்டிருக்கவும் சின்ன மாமியாருக்கு  ஏதாவது உதவி செய்யும் எண்ணத்துடன் மைத்ரேயியும் அவர் பின்னோடு நுழைந்தாள்…..

பிரிட்ஜில் இருந்த குடைமிளகாயை யசோதா எடுக்க  ” நான் கட் பண்ணவா???” என்று கேட்டு வாங்கிய மருமகளின் உதவியோடு  பஜ்ஜி செய்தவர்

” என்ன யசோம்மா வாசனை கமகமனு வருது!!!????” என்றபடி உள்ளே நுழைந்த   பிரணாவிடம்  ஒரு தட்டை நீட்டி

“இதை உன் உதிக்காவிடம் கொடுத்து வாடா !!!!” என்றார் .

“என்ன யசோம்மா???????

 ஒரு மருமகள் வந்தும் உன் அதிகாரம் இப்படி  தூள் பறக்குது!!!!!!!

 என் பொண்டாட்டி உன்னிடம் டூ விட்டு முகத்தை தூக்கி வைத்திருக்கும் போதே இந்த ஆட்டம் ஆடுகிறாய்!!!!

இதில் பழம் விட்டுவிட்டால் ??????

நான் அவ்வளவுதான் போலவே!!!!”

 என்றபடி நழுவ பார்க்க

 “எண்ணெய்  கரண்டி என்று கூட பார்க்க மாட்டேன்……. அப்படியே ஒன்று போட  போகிறேன் பார்!!!!

 அடுப்பில் வேலை  இருக்கு…… இப்போது நீ போய் கொடுப்பாயா மாட்டாயா??????”

 மகளுக்கும் மகனுக்கும் நடுவில் இருக்கும் சண்டையை இன்னும் அறியாதவர் எதார்த்தமாய் பிரணாவிடம் வேலை வாங்க

 கணவன் அந்தத் தட்டை வாங்கி சென்று கொடுக்க மாட்டானோ?????  என்று அங்கு நின்று மைத்ரேயியும் ஆர்வமாக காத்திருந்தாள்.

 “மாட்டேன்!!! யசோம்மா…. மாட்டேன்!!!!!

ஆமாம்  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ??????

 சூப்பர் ஸ்டார் பாட்டை அடிக்கடி கேட்டு விட்டால் ‘இளமை திரும்புதே!!!!!’ ஆகி விடுமா??????

 உனக்கு வயதாகிறது யசோம்மா !!!!

அதற்கு தகுந்தார் போல் நாலு நடை

நடக்காமல் இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு  பஜ்ஜி சொஜ்ஜியா சாப்பிட்டாய் என்றால் எப்படி சமாளிப்பது???????

 அதிலும் முதலில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு பெற்றுக்கொள்ளலாம் என்று தான்  நினைத்திருந்தேன்!!!!!

 ஆனால் இப்போது அடுத்த பேபிக்கு வேறு ஆர்டர் பண்ணி இருக்கேன் !!!!

அப்படி தானேடி பஜாரி???????”

 மனைவியின் முகத்தை நொடியில் செம்மை பரவச் செய்யும் வித்தைக்காரன்

 தன் சிற்றன்னையிடம் திரும்பி

“சொல்லு யசோம்மா இப்படியே இருந்தாய் எனில் எப்படி வேலை பார்ப்பாய்???????

 இப்போது நீயே நாலு நடை நடந்து போய் அந்த பஜ்ஜியை கொடு …… சரியா???????”

என்று வசனங்களை கோர்த்துவிட்டு அவர் நீட்டிய தட்டை வாங்காமல் நகர்ந்து சென்றான்.

” நான் அப்படி என்னடா கேட்டுவிட்டேன் உன்னிடம்??????

 நீயே என்னை நோயாளி ஆக்கி அதில் சோடா வேறு  குடிக்கிறாய்??????”  யசோதா புலம்ப

” வாக்கிங் போ என்று சொன்னேன்!!!!!

 அது ஒரு தப்பா??????” என்ற பதில் மட்டும் பாய்ந்து வந்தது…..

ஆனால்  அங்கு நின்றவளுக்கு யசோதாவை  பார்க்க பாவமாக இருந்தது போலும்!!!!!!!

 “எங்களுக்கு கல்யாணம் ஆன தினத்திலிருந்து உதிஅண்ணியிடம் பிரணாவ் பேசுவதில்லை!!!!!!!!!!!!”

 போட்டுடைத்தாள் மைத்திரேயி …….

ஆனால் மருமகளின் இக்கூற்றை யசோதா கனவிலும் நிஜம் என்று நம்பி இருக்க மாட்டாரே!!!!!!!

” ஏன்டா டி-ஷர்ட் ஜீன்ஸ் சகிதமாக சூப்பராக இருப்பவன்  இப்போதெல்லாம்  இப்படி ஓல்ட் ஃபெல்லோ  மாதிரி சுற்றுகிறாய்????????”

 ஒரு முறை பிரணாவிடம் அவன் முன்பு கூறியபடியே திருப்பி கேட்டதற்கு

“என்ன செய்வது யசோம்மா???????

 கல்யாணம் பேபி என்று ஆகிவிட்டால் பொறுப்புகள் கூடும் தானே?????

 அதற்கு தகுந்தார் போல் நானும் டி-ஷர்ட் ஜீன்ஸ்-ற்கு  எல்லாம் பை சொல்லிவிட்டேன்!!!!!!!!” என்று பதில் கொடுத்திருந்தான் பிரணாவ்….

 “அதற்காக இப்படி ஞாயிற்றுக்கிழமை கூட டையோடு தான் உட்கார்ந்து இருப்பாயாடா???????? அதுவும் வீட்டில்!!!!!!”

 என்று மகனை கேலி செய்து சிரித்த போதும்

பிரணாவ்  தன் மனைவி மகனுக்காக மாறியதை எண்ணி சந்தோஷம் தான் அடைந்தார் யசோதா ……

 அவன் சோட்டுவை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருப்பதால் தமக்கையிடம் இப்போதெல்லாம் வம்பிழுக்கும் நேரம் செலவழிக்க முயலவில்லை போலும்!!!!!!

 என்றும் நினைத்திருந்தார் …….

உதிதாகவும் இது குறித்து தன்னிடம் ஒரு வார்த்தை கூறி விடவில்லையே?????

 எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள்!!!!!!

 இவனால் எப்படி இப்படி பேசாமல் இருக்க முடியும்?????? அதுவும் அவன் உதிக்காவிடம்!!!!!!!!!

” பிரணாவ் நில்லு!!!!!!”  சத்தமாக கூப்பிட்டவர் ” மைத்தி சொல்வது உண்மையா???????????”  என்றார் அப்போதும் நம்பமுடியாமல்……

 இந்த பஜாரிக்கு இப்போது இது தேவையா ??????????

மனைவியை மனதில் வறுத்தெடுத்தவன்

” ஒரு முக்கியமான போன் கால் வருது யசோம்மா!!!! பேசிவிட்டு வரவா??????” என்றபடி அவர் பேச்சிலிருந்து விலகி ஓட பார்க்க

“அப்போது நிஜமாகவே நீ உதிதாவிடம் பேசுவதில்லையா பிரணாவ்??????????”

  அப்பட்டமாகத் அதிர்ந்தார்…….

“அட என்ன யசோம்மா நீ????

இப்போது தானே சொன்னேன்….

 உனக்கு இளமை திரும்பவில்லை என்று!!!!! இப்படி டென்ஷன் ஆகாதே !!!!பீ கூல் “

“நான் நன்றாக இருக்க வேண்டும்  என்று நினைத்தால்  இப்போதே போய் உன் உதிக்காவிடம் பேசு பிரணாவ் “

 “இதென்ன பிளாக்மெயில் ஆ?????? யார் பேசினாலும் பேசாவிட்டாலும்

நீ நன்றாக தான் இருப்பாய் !!!!!

 என்னை விட்டுவிடு ப்ளீஸ்!!!!!”

என்று

விலகிச் சென்றவன் தான் வளர்த்த செல்ல மகன் தானா????????

 என்ற ஐயம் யசோதாவிற்கு  எழுந்தது…..

 உடனே உதிதாவிடம் விரைந்தவர்

“ஏன் என்னிடம் மறைத்தாய்????? பிரணாவ் உன்னிடம் பேசாமல் இருப்பதை!!!!!” ஆதங்கத்தோடு வினவ

“என்னம்மா நீங்கள்?????

 பிரணாவ் பற்றி தெரியாதா????

 என்னிடம் பேசாமல் என் ஸ்வீட் ஹார்ட்டால் இருக்க முடியுமா????

இது சும்மா விளையாடி பார்க்கிறான்”

 அவ்வளவு வலியையும் மறைத்து புன்னகைக்க முயன்றாள் உதிதா…..

 அன்றிரவு யுகன் போன் செய்த போதும் பிரணாவின் நினைவுகளால் சிக்குண்டவளுக்கு தன் கணவனிடம் சரியாக பேச முடியாது போக “தூக்கம் வருகிறது யுகி….. குட் நைட்” என்க

” வரவர பேச கூட மாட்டேன்கிறாய்

அம்மு…..

இப்போதே இப்படி கழற்றி விட்டால் என் பொண்ணு பிறந்ததும் என்னை பார்த்து ‘யார் நீ?’ என்று கேட்டாலும் கேட்பாய் போலவே ????????”

” உங்களிடமும் பேசாது போனால் எனக்கு கண்டிப்பாக  பைத்தியம் தான் பிடித்து விடும்…. ஆனால் இப்போது நிஜமாவே தூக்கமாக தான் இருக்கிறது…. நான் வைக்கிறேன்!!!!!”

” வேண்டாம் அம்மு வைக்காதே!!!!! உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு போனை என் பொண்ணுவிடம் கொடுத்துவிட்டு தூங்கு ” யுகன் கூறவும்

போனை தன் வயிற்றின் அருகில் வைத்தவள் கண்களை இறுக்க மூடி படுத்து கொண்டாள்……

மனைவியின் பேச்சிலே ஏதோ சரியில்லை என்று யூகித்தவனுக்கு

பிரச்சினை அவள் உடன் பிறந்தோன் சம்பந்தபட்டது என்றால்

அதை வெளியில் கூட சொல்ல மாட்டாளே!!!???? என்று தான் போனை அணைக்க மனமில்லாது அவ்வாறு சொன்னான்…..

அவன் நினைத்தது போலவே அறையினுள் வந்த யசோதா

” எப்படிடி பிரணாவ் இப்படி மாறிவிட்டான்?????” ஆற்றாமையோடு உதிதாவிடம் கூறிய வாக்கியத்தை

கேட்டதும் போன் பட்டென்று அணைக்க பட்டிருந்தது…..

திரும்பி அழைத்தால் ‘தூங்கிவிட்டேன்’ என்று பொய்யுரைப்பாளே ஒழிய எதையும் காட்டி கொள்ளமாட்டாள் என்று அறிந்து வைத்திருந்ததால் மனைவியின் நினைவுகளிலேயே தத்தளித்தான் யுகன்….

இரவு பன்னிரெண்டு மணி வரையிலும்

எழுந்து வலது பக்கமும் இடது பக்கமும் மாறி மாறி படுத்த போதும் உதிதாவிற்கு தூக்கம் வந்தபாடில்லை ……

அப்போது அடிவயிற்றில் சுள்ளென்று ஒரு வலியை நிமிடத்திற்கும் குறைவாக உணர்ந்தவள்

அருகில் அவ்வளவு நேரம் பிரணாவ் பற்றி புலம்பிக் கொண்டே இருந்துவிட்டு அப்போது தான் அசந்த அன்னையை எழுப்ப மனமின்றி

அறைக்குள்ளே 10 நிமிடங்கள்  நடை பயின்று விட்டு வந்து படுத்து கொண்டாள்……

 ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் அதேபோல் ஒரு வலி ஏற்பட இம்முறை சற்று சுதாரித்து

” அம்மா !!!!!!!” என்று அழைக்க

“என்ன உதிமா வலிக்குதா??????” என்றபடி எழுந்தார்  யசோதா…..

“ஹாஸ்பிடல் போய் விடலாம்…. இரு அப்பாவை கூப்பிடுகிறேன்” என்று ஓடிச்சென்று தன் கணவர் ரகுநாதனை அழைத்த யசோதா

விரைந்து காரை எடுக்கச் சொல்லி பதற

மொத்த வீடும் விழித்துக்கொண்டது!!!!!

 அப்போது தான் தூங்கி இருந்தான் சோட்டு ……

யசோம்மாவிடம் தான் உதிக்காவோடு உரையாடாதிருப்பதை சொல்லிக் கொடுத்ததால் மனைவி மீது முளைத்த புதிய கோபத்தில் லேப்டாப்பில் தன் வேலைகளை பிரணாவ் பார்த்துக்கொண்டிருக்க

மைத்ரேயியும் அவளது லேப்டாப்பில் தான் மூழ்கி இருந்தாள்……

 ஒரு டாக்டருக்கு லேப்டாப்பில் என்ன ஓவர்டைம் டியூட்டி இருக்கப்போகிறது????????

 என்று எண்ணியபோதும்

அவள் மீதிருந்த கோபம் அவளிடம் பேசுவதற்கு தடா செய்ய

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவனை

யசோதாவின் சப்தம் எழுந்து கீழே ஓட செய்திருந்தது……

” ரொம்ப வலிக்குதாடா ???? ஹாஸ்பிடல் போய்விடலாம்!!!” கதிரேசன் மகளிடம் கூற கேட்டு

ரகுநாதனிடம்  “பேசுவதற்கு இது நேரமில்லை….. போய் வண்டியை எடுங்கள்!!!!! எத்தனை முறை சொல்வது??????”  யசோதா பதற்றத்தில் கத்த தொடங்கினார்…..

” அம்மா பயப்படும் அளவிற்கு   ஒன்றும் இல்லைமா…… இப்போது தான் வலி வர ஆரம்பித்திருக்கிறது!!!  நீ பிரணாவை கூப்பிடு…… நாம் கரெக்ட் டைமிற்கு போய்விடலாம் ” என்று தன்  அன்னையை  சமன்படுத்த முயன்றாள் உதிதா ….

ஆனால்…..

“பிரணாவ் வேண்டாம்……

 நீங்களே கூட்டி போங்கள் !!!!!!” என்றபடி கணவனிடம் திரும்பிய யசோதாவை பார்த்து ஒட்டுமொத்த வீடும் அதிர்ந்தது….

 அப்போது அவர் அருகில் வேகமாய் வந்த பிரணாவ்

 “லூசா யசோம்மா நீ????????????????” என்று கோபமாக  திட்டிவிட்டு

காஞ்சனாவிடம் “அம்மா நீயும் கை பிடித்து கூட்டி வா……. நான் வண்டியை

எடுக்கிறேன்!!!!!”

என்றவன் தன் மனைவியிடம் திரும்பி

” சோட்டுவை தூக்கி கொண்டு வா!!!!! சீக்கிரம் !!!!” என்று விட்டு விரைந்தான்.

 அதுவரை தூறல் இட்டபடி மென்மையாய் கீதம் ஒலித்த வானம் பிரணாவ் அவனது பகானியை எடுத்ததும்

 கண்களை அச்சுறுத்தும் பளீர் மின்னல்களுடனும்

காதுகளை துளைத்தெடுக்கும் பெரும் இடியுடனும்

 பேய் மழை பொழிய ஆரம்பிக்க

 வண்டியை அவ்விரவு வேளையில்  ஓட்டுவதே  சிரமம் ஆகிப்போனது !!!!!!!!

 அவனது பகானியில் மனைவி மற்றும் மகன் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க

 தமக்கை தன் அன்னைகளின்

கதகதப்பிற்கு இடையில்

 வலியை பொறுத்துக்கொண்டு கண்களை இறுக்க மூடி

யுகனின் நினைவுகளில் சிறு  தெம்பை பெற்று வீற்றிருந்தாள்…..

 உதிக்காவின் நிலை உணர்ந்தவனோ கவனத்தை சிதற விடாது லாவகமாய் வண்டியை  செலுத்திய போதும்

அந்த கும்மிருட்டில் ஒரு பள்ளத்தாக்கின் அடியில்

அவனது பகானியின் ஒரு சக்கரம் நன்றாக மாட்டிக்கொண்டதோடு

வண்டியே சற்று சாய்ந்தபடி அப்படியே நின்ற போனது !!!!!

“ஐயோ என்னாச்சு பிரணாவ்???????” யசோதாவின் பதற்றமோ இமாலய உயரத்தை தொட

காஞ்சனாவும் அவர் பங்கிற்கு

“இப்போது என்ன பிரணாவ் செய்வது????

அதுவும் இந்த கொட்டுற மழையில்??????”

என்று ஒன்றும் புரியாமல் குழம்பினார்…..

சரியாக அச்சமயம் உதிதாவிற்கு ஏற்பட்ட வலியில் தன் அன்னைகளின் பிடியில் இருந்த கையை விலக்கி ஓட்டுனர் சீட்டில் அமர்ந்திருந்தவனின் தோளை பற்ற

அதை கண்ட யசோதாவோ நொறுங்கி போனார்…..

” அக்கா இப்போது என்ன செய்வது???????

எனக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லையே!!!!!” யசோதா காஞ்சனாவிடம் கத்தி அழ துவங்க

மைத்ரேயி வாய் திறப்பதற்கு முன் அவள் கூற நினைத்ததை உதிதாவே சிரமப்பட்ட போதும் உறுதியாய் மொழிந்தாள்….

” கொஞ்ச நேரம் அமைதியாக இரு அம்மா!!!!

அதுதான் பிரணாவ் இருக்கிறான் அல்லவா???? அவன் பார்த்து

கொள்வான்!!!!!!

நீ குழம்பி உனக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் அவன் உன்னை பார்ப்பானா???? இல்லை என்னை பார்ப்பானா??????”

பிரணாவிற்கு அவனது உதிக்காவின் அச்சொற்கள் ஆயிரம் யானைகளின் பலத்தை திரட்ட

அடுத்து என்ன செய்வது????

என்பதை யோசித்து  பதற்றமடையாமல் மற்றொரு காரில் தங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தந்தையை அழைக்க  முயல

அவர்களின் கெட்ட நேரம்  போனில் சிக்னல் இல்லாது போனது ……

அப்பாவும் சித்தப்பாவும் பின்னாடி வந்தும் பிரயோஜனமின்றி போய்விடுமோ??????

ஒருவர் காரை செலுத்தினாலாவது

  தான் இறங்கி சற்று சக்கரத்தை தூக்கி விட வசதியாக இருக்குமே!!!!???????

இப்போது பதற்றமாகி தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவனின் எண்ணங்களை அவன்  முகத்தில் படித்த மைத்ரேயி

“நீ இறங்கி தள்ளு பிரணாவ்…… நான் பார்த்துக்கிறேன்!!!!” என்றதோடு

” சோட்டுவை பிடியுங்கள்!!!!” என்று தன் கரத்தில் உறங்கி கொண்டிருந்த மகனை யசோதாவிடம் நீட்டிவிட்டு ஓட்டுனரின் இடத்தில் அமர எழுந்தாள்……

” ஹோய் ஸ்கூல் பொண்ணே!!!! உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?????” வாய்வரை வந்துவிட்ட நக்கலை தன்னுள் புதைத்தவன்

வேறு வழியும் இல்லாத காரணத்தால்

” சரி நான் சொல்வது போல் ஆக்செஸ்

பண்ணு…..”  என்று கூறிவிட்டு

 வினாடிக்கு ஒரு முறை

“பிரேக்கில் இருந்து காலை எடு….

 ஆக்சிலேட்டரை விட்டுவிடாதே……

 ஸ்டீயரிங் வீலில் கவனத்தை செலுத்து….

 கீரை மாற்று…..”

போன்ற  கட்டளைகளை பிறப்பித்தவாறு சக்கரத்தை பள்ளத்திலிருந்து நகர்த்தி

 தொப்ப தொப்ப என்று நனைந்தபடி அப்படியே ஏறி உட்கார்ந்தவன்

 அசுர வேகத்தில்  மருத்துவமனைக்கு தன் பகானியை  செலுத்தினான்…..

 காரில் பிரணாவ் ஏவிய பணிகளை அதற்கு முன்னமே அவன் மனைவி செய்து முடித்து இருந்ததை அறியாது

 “சொன்ன வேலையை கரெக்டாக செய்தாய்…….

இல்லாவிட்டால் இங்கு வர தாமதமாகி இருக்கும் !!!! ரொம்ப தேங்க்ஸ்”  நெஞ்சார நன்றி உரைத்தவனிடம்

நின்று பதில் கூறும் நிலையில் மைத்ரேயி  இல்லை…….

 வண்டியை விட்டு இறங்கி வாட்ச்மேனிடம் “ஸ்ட்ரெச்சர் ப்ளீஸ் !!!!!!” என்று கத்தியபடி உள்ளே ஓடி இருந்தாள்…….

 மருத்துவமனையில் அந்த நள்ளிரவு வேளையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூட இல்லாது போகவும்

 உதிதாவை கண்டு செவிலியர் பெண் ஒருவர் மருத்துவர்களுக்கு எமர்ஜென்சி பெயரில் உடனே வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

 பிரணாவ்  கொடுத்த தகவலில்

தேவகியையும் கார்த்திகேயனையும் அழைத்துக்கொண்டு அடுத்த பதினைந்தாவது நிமிடத்திலேயே அங்கு நின்றான் யுகன்……

 நேரம் ஆக ஆக பிரசவ வலியின் உச்சக்கட்டத்தை சந்தித்து துடிதுடித்துப் போன மனைவியின் கதறலை பொறுக்க மாட்டாத யுகன் பிரசவ அறையை விட்டு வெளியேறி விட

இவ்வளவு வலி இருந்தும் கருப்பை வாய் திறக்காததை கண்டு சற்று பயந்து போனாள் மைத்ரேயி !!!!!

Advertisement