Advertisement

பார்த்த தினத்திலிருந்து சின்ன பெண்ணாகவே நினைத்திருந்தவனின் விழிகள் மனைவி டாக்டர் எனும் விவரம்  அறிந்ததும்

‘இது எப்படி சாத்தியம்???’ என்று பெரிதும் குழம்பி போனான் பிரணாவ் ….

உண்மையில் இவள் வயதென்னவாக இருக்கும்????? என்ற யோசனை படர்ந்தவனுக்கு அப்போதே அக்கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று தான் காலையில் மருத்துவமனைக்குள் நுழைந்ததும்!!!!

ஆனால் அதன் பின் நடந்தேறிய நிகழ்வுகளில் அவனையே மறந்திருந்தவனுக்கு இப்போது மீண்டும் அவளை கேட்டிருந்தான்…

ஆனால் மைத்ரேயியோ கணவனை முறைத்து விட்டு திரும்ப

“சொல்லி விட்டு போடி !!!!!

ஒவ்வொரு வருடமும் டபுள் ப்ரமோஷன் வாங்கியிருந்தால் கூட இந்நேரம் நீ டாக்டராகி இருக்க வழி இல்லையே??!!!!

 இதில் மாஸ்டர்ஸும் படித்திருக்கிறாய்??!! சரி என்ன தான் படித்து முடித்திருந்தாலும் எப்படி உனக்கு கேர் ஹாஸ்பிட்டலில் வேலை கிடைத்தது???? யுகன் மாம்ஸ் ரெகமண்ட் செய்தார்களா??????”

 புரியாமல் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கியவனிடம்

“அதை தெரிந்து இப்போது நீ என்ன பண்ண போகிறாய்??????”  எரிந்து விழுந்தாள் .

“என்னடி பஜாரி இப்படி கேட்டு விட்டாய்???

 ஒரு பொண்டாட்டியோட வயதை தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு இல்லையா ??????”

 வசனம் பேசியவனிடம்

“எப்படி எப்படி திருமணம் முடிந்து இரண்டு வாரம் கழித்து பெயரை தெரிந்து கொண்ட உரிமையை போலவா?????”  நக்கலோடு  கூறினாள்.

ஆனால் அவனோ அதற்கும் ஒரு கேள்வியை தயாராக வைத்திருந்தவன் போல்

” பெயராடி பஜாரி அது??? அதை பார்த்ததும் எப்படி இருந்தது தெரியுமா???

ஆமாம் கல்யாணம் ஆகிவிட்டாலே கணவன் பெயரை சேர்த்து கொள்ளலாமா??? அதற்கென்று வேறு எந்த ப்ரொஸீஜர்ஸும் இல்லையா????”

‘மிஸஸ். மைத்ரேயி பிரணாவ் ‘ பெயர் காரணத்தை விளக்குக?????? என்பது போல் கேட்டிருந்தவனையே

ஒரு முழு நிமிடம் பார்த்தவள் ” நம் கல்யாணம் முடிந்ததும் ரிஜிஸ்டர் பண்ணுவதற்கு சைன் போட்டாயே !!!! அதற்குள் மறந்துவிட்டாயா??? ” என்றவள்

” அப்போதே அந்த சர்ட்டிபிகேட்டையும் சேர்த்து கொடுத்து பெயரை மாற்றிவிட்டேன்…. அடுத்த நாளே ஹிந்து நியூஸ் பேப்பரில் விளம்பரமும் பதிவு செய்திருந்தேன்!!!”

திருமணத்தன்று சில பேப்பர்களில் அவன் கையெழுத்து போட்டது எல்லாம் இயந்திரமாக தானே நடந்து முடிந்தது….

அதிலும் யுகன் கேட்கவும்

அப்போதிருந்த சூழ்நிலையில்

அது பதிவு திருமணத்திற்கான பத்திரமாக இல்லாமல்

 விவாகரத்திற்கான ஒன்றாக இருந்திருந்தாலுமே படித்து பார்க்காமல் கையெழுத்து இட்டிருப்பான் தானே!!!!!

யோசனையுடன் அமர்ந்திருந்தவனின் முதல் கேள்விக்கு விடையாக

” கலெக்டர் ஆஃபீஸில் உன்னை முதன்

முதலில் பார்த்த தினத்திற்கு அடுத்த நாள் தான் போய் கடைசி எக்ஸாம் எழுதினேன்!!!!

 இப்போது நீயே கூட்டி கழித்து என் வயதை யூகித்து கொள்!!!!

அப்புறம் என்ன சொன்னாய்???

எப்படி வேலை கிடைத்தது என்றா????

நான் படித்த காலேஜும் ஸ்கோர் பண்ணிய மார்க்ஸிற்கும் இந்த கேர் மருத்துவமனை மட்டுமன்றி இவ்வுலகில் எந்த ஹாஸ்பிட்டலிலும் எளிதாக வேலை கிடைக்கும்!!!!!

சந்தேகமாக இருந்தால்…… கூகுள் செய்து பார் இந்த வருடத்திற்கான டாப் மெடிக்கல் ராங்க் ஹோல்டர்ஸ் லிஸ்ட்டை!!!!! ”  என்று பெருமை பொங்க கூறிவிட்டு  நிற்காமல் சென்று விட்டாள்.

மனைவி சொன்னது உண்மையாக தான்

இருக்கும் என்று தெரிந்துமே தன் போனை எடுத்து அவள் கூறியதை ஆராய்ந்தான் பிரணாவ் ….

அதில் மைத்ரேயியின் பெயர் முதலாம் இடத்தை நிரப்ப அதற்கடியில் அச்சிடப்பட்ட  அவள் படித்த ‘என்.கே மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்’ கல்லூரி நிர்வாகத்தின் பெயர் பிரணாவை வேறு சிந்திக்க செய்தது……..

 தட்டுகளை அடுப்படியில்  வைத்துவிட்டு

 உதிஅண்ணியை ஒரு முறை பார்த்துவிட்டு

 தன் அறைக்கு திரும்பியவளிடம்

“அப்போது உனக்கு இருபத்தி நாலு வயது ஆகிறதா??????”  அதிசயமாய் மலைத்து வினவினான் பிரணாவ்…..

” கணக்கு தப்பு !!!!!  25 கம்ப்ளீடட் ……”

“அப்புறம் எப்படிடி இப்படி 15வயது

பொண்ணு மாதிரியே இருக்கிறாய்??????

 கடவுளே இப்படியே இவள் என் கண்ணுக்கு தெரிந்தாள் என்றால்

 நான் எப்படி குடும்பம் நடத்துவேன் ??????” தன் பாட்டிற்கு புலம்பியவனின் சொற்களில்

அவள் கன்னங்கள் அவள் அனுமதி இன்றி சிவந்தது!!!!

 அதை மறைக்க “உனக்கு இங்கு என்ன வேலை????? உன் ரூமில் போய் தூங்குவதை விட்டு விட்டு!!!!” சிடுசிடுத்தாள் .

“வெரி சாரி !!!! இது தான் என் ரூம்!!!!

 கொஞ்ச நாள் நீ ஸ்டே பண்ணி விட்டதால் உனக்கு மட்டும் ரூம் ஆகிவிடாது !!!!

ஆல்சோ இன்று பக்கத்து ரூம் என்கேஜ்ட்…..

பக்கத்து ரூம் மட்டுமின்றி அதற்கு அடுத்த ரூமும் கூட ஃபுல்!!!! பிரணிக்காவும் இங்கே தான் தங்கி இருக்கிறாள்!!!!!!”  விளக்கவுரை ஆற்றினான் பிரணாவ் .

” இல்லை உதிஅண்ணி மாடி ஏறக்கூடாது என்று கீழ் அறையில் தான் படுத்து இருக்கிறார்கள்!!!!!

 அதனால் நீ கிளம்பு …. போ!!!!!”  கிட்டதட்ட விரட்டியவளிடம்

” யார் எங்கே படுத்தாலும் சரி நான் இங்கே தான் படுப்பேன் என் பையனுடன்!!!!!” மேலும்

 தூக்கக் கலக்கத்தில் இருந்த சோட்டுவிடம்

” அப்பா கூட தூங்குகிறாயாடா ????? ” என்று கேட்டவன்

கட்டிலில் குழந்தையை நடுவில் படுக்க வைத்து  சுவர் ஓரமாய் படுத்து கொண்டான் …

இதென்னடா புது பிரச்சனை?????

 நொந்து கொண்டவள் காலையிலிருந்து நடந்தேறிய பல அதிர்ச்சி சம்பவத்தால் அசதியில்  படுத்ததும் உறங்கியும் விட்டாள்….

காலை எட்டரை மணி வரை தூங்கிவிட்டவள் விழித்ததும் கண்டது குளித்து அலுவலகத்திற்கு தயாராகியபடி ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் தலைவாரி  நின்று கொண்டிருந்த பிரணாவை தான்…..

 உடனே மணியைப் பார்த்தவளுக்கு

அச்சோ!!!!! இப்போது கிளம்பினாலும் சோட்டுவை எழுப்பி அவனையும் தயார் படுத்தி கூட்டிச் செல்ல லேட் ஆகி விடுமே!!!!!

 மனதில் உரைக்க  அவசரமாக எழுந்தாள்…

 அப்போது கட்டிலின் அருகே வந்த பிரணாவ்

“எழுந்து விட்டீர்களா குட்டி பையா ??

அப்பா ஆஃபீஸ் போய் விட்டு வருகிறேன்!!!!

 நல்ல பையனா சமத்தாக உன் யசோ பாட்டியிடம் இருந்து கொள்ளுங்கள்…..

 சரியா?????”  என்றபடி மகனின் முன் உச்சியில் முத்தமிட்டு கிளம்ப

 அரை தூக்கத்தில் விழித்திருந்த சோட்டுவோ தெள்ளத் தெளிவாக

 “அப்பா !!!!!!!!!!!!!!!!!!”

என்று முனகினான்.

 குளியலறை நோக்கி சென்ற மைத்ரேயி தன் குழந்தையின் மொழியில் உறைய

எத்தனை தவம் புரிந்தேன்

நான் அறியேன்

அப்பா!!!! எனும்

உன் முதல் மொழியை

கேட்ட நொடியில்

ஏழு ஜென்மத்தின்

விமோசன பயன்

நல்கினேனே!!!!

பிரணாவ் அவசரமாக சோட்டுவிடம்  திரும்பி

“என்னடா?????

இப்போது என்ன சொன்னாய்????????

 எங்கே திரும்ப சொல்லு ?????????”

என்றதும்

  தூக்க கலக்கம் கலைந்து தன் தந்தையைக் கண்ட மகனோ புத்துணர்ச்சியாக தன் பொக்கை வாயை காட்டி சிரித்தான்…..

அவனைத் அப்படியே தூக்கி ஆர தழுவியவன்

“அம்மா!!!!!!!!!!!!!!!!!”

 வீடே அதிரும் படி கத்தி கொண்டு அவசரமாக கீழே இறங்கி ஓடினான்…

 பிரணாவ் சத்தத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் ஹாலில் குழுமி இருக்க

உதிதாவும் என்னமோ ஏதோ என்று அவசரமாய் தன் அறை வாசல் வரை வந்து நின்றாள்!!!

 காஞ்சனாவிடம் விரைந்த பிரணாவ்

” அம்மா என் பையன் என்ன சொன்னான் என்று தெரியுமா ?????????” கூப்பாடு போட்டதோடு அருகில் நின்ற யசோதாவையும் விட்டு வைக்கவில்லை…

” யசோம்மா நீ சொல்லேன்??????

 என் பையன் என்ன சொல்லியிருப்பான் என்று???!!!!”

 மகனின் முகத்தில் வெளிப்பட்ட அளவு கடந்த சந்தோஷம் கதிரேசனை திருப்தி அடைய செய்தபோதும் அவர்

ஒருவார்த்தை பேசவில்லை !!!!

ஆனால் காஞ்சனா ” என்னடா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாய்?????”  சிரித்தபடி வினவ

“பின்னே என் பையன் சொன்னது அப்படி!!!!!!!!!”  என்று கூறி

மகனின் பட்டு கன்னத்தில் தன் இதழ்களை  ஒற்றி எடுத்து

“என்னை அப்பா என்று சொல்லிவிட்டான் அம்மா!!!!!!!!!!!” என்று கூறும் போதே தந்தையின் மகிழ்ச்சியில் பங்கு எடுத்து கொண்டவனாய்

 இரண்டாவது முறையாக

“அப்பா !!!!!!!!!!” என்றான் மைந்தன் .

 அங்கு நின்ற அனைவர் முகத்திலும் ஆச்சரியம் துளிர் விட

“கேட்டாயா அம்மா?????  யசோம்மா நீ கேட்டாயா ???????” பிரணாவ் குதிக்க

இப்போது அவனின் உவகையும் அனைவரையும் தொற்றிக் கொண்டது!!!!

” உன் பையன் தானேடா ???? அப்படித்தான் சொல்வான்!!!!!!” என்றிருந்தார் காஞ்சனா. மேலும்

“இங்க வாங்க குட்டி பையா பாட்டியிடம்!!” மனமுவந்து அவர் கையை உயர்த்த

” மாட்டேன்!!!!” என்பது போல் பிரணாவை கட்டிக்கொண்டான் சோட்டு.

”  சோட்டு  என்னிடம் இருந்தால் அவன் அம்மாவிடமே போக மாட்டான் அம்மா!!!!!!”  தந்தைக்குரிய பெருமை பொங்க தெரிவித்த பிரணாவ்….

சற்று தொலைவில் தன் தம்பியின் கூத்தை கண்டு சிரித்த முகமாய் நின்றிருந்த உதிதாவை பார்க்கவும் முகம் மாறியவனாய் எதுவும் பேசாமல் உடனே மாடிக்கு திரும்பினான்…

 அப்போது மாடியிலிருந்து ஹாலுக்கு இறங்கி வந்த பிரணிதா

“என்னடா ஓவராக சவுண்ட் கொடுக்கிறாய்?????

 நீ போட்ட சத்தத்தில் என் பையன் பயந்து கத்திவிட்டான்!!!!

 மறுபடியும் தொட்டிலில் போட்டு ஆட்டிவிட்டு வருகிறேன் தெரியுமா??????” என்றதும்

“ஹோய் பிரணிக்கா!!!!!  என் பையன் எல்லாம்  என்னை அப்பா என்று சொல்லிவிட்டான் …….

ஆனால் உன் பையன் உன்னை அப்படி சொல்வானா??????” சந்தோஷத்தில் தலை

கால் புரியாமல் வம்பிழுத்தான்….

 “அடேய் அவனுக்கு நான் அம்மாடா!!!!! என்னை போய் எப்படி டா அப்பா என்று சொல்லவான்?????????” பிரணிதா பாய

 “என்னைப் பார்த்து உனக்கு பொறாமை பிரணிக்கா!!!! அதான் இப்படி என்னிடம் கோபப்படுகிறாய்!!!!!”  என்று கூறியபடி மாடி படிகளில் தாவினான் பிரணாவ்…

” இவன் என்ன லூசா அம்மா???????”

 தன் அன்னை காஞ்சனாவிடம்  பிரணிதா குறைபட

“அடி போடி!!!  அவனே பல நாட்களுக்கு பிறகு  இன்று தான் சந்தோஷமாக இருக்கிறான்!!!!  அவனை போய் ஏதாவது சொல்லாவிட்டால்  உனக்கு தூக்கம் வராதே????!!!!!”

 என்றபடி திரும்பிச் சென்றுவிட்டார்.

 “இது என்னடா வம்பா போச்சு?????? நீ சொல்லு உதி !!!!

நான் இப்போது என்ன தப்பாக சொல்லிவிட்டேன்?????”  என்று பிரணிதா தங்கையிடம் கேட்கவும்

 உதிதா தனது கூம்பி போன முகத்தை காட்ட விரும்பாமல் விருட்டென்று உள்ளே சென்று விட்டாள் !!!!!

“தம்பியும் சரியில்லை !!

தங்கையும் சரியில்லை!! ” என்று தன்னைத் தானே நொந்து கொண்டபடி தன் மகனிடம் விரைந்து விட்டாள் பிரணிதா …

இன்னும் மகன் உதிர்த்த வார்த்தையினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தும் மீளாது

 நின்ற இடத்தை விட்டு நகராது போனவளின் அருகில் சென்றவன்

 அவளை சொடக்கிட்டு  அழைத்து நிகழ் காலத்திற்கு மீட்டு வந்ததோடு

“நான் ஆஃபிஸ் போய் விட்டு வருகிறேன்…

 டிரைவரிடம் சொல்லிவிட்டேன் !!

இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான்….

 நம் வீட்டில் இருக்கும் இன்னொரு காரில் நீ ஹாஸ்பிட்டல் கிளம்பு!!!!

அம்மாவிடம்  சோட்டுவை கொடுத்துவிட்டு நான் கிளம்புகிறேன் ….. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் !!!!

அப்புறம் முக்கியமான விஷயம் ஒழுங்காக சாப்பிட்டு கிளம்புடி பஜாரி!!!

எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது…….”

 என்றபடி அவள் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டான் பிரணாவ்….

சோட்டுவிற்கும் பிரணாவிற்குமான பிணைப்பை கண்டு அதிசயித்தவள்

 பிரணாவ் மீது மகன் காட்டும் அன்பை

எண்ணி பயந்து தான் போனாள்!!!!!

 பிற்காலத்தில் பிரணாவும் தாமும் பிரிய நேர்ந்தால் சோட்டு ஏமாற்றப்பட்டதாய் உணர்வானோ?????

எங்கு அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது போய் விடுமோ????

 இதற்கு என்ன தீர்வு இருக்கிறது????

 என்ற யோசனைகளுடனே தன் வேலைகளை முடித்துக்கொண்டு மைத்ரேயி கீழே வருகையில் அங்கு பிரணாவ் இல்லை….

 “பாட்டி மீது கோபமா ???? வர மாட்டாயா?????”  என்று கேட்டபடி

யசோதாவிடமிருந்த சோட்டுவை காஞ்சனா வாங்குவதற்காக கைநீட்ட

தன் தலையை “மாட்டேன்!!!!!” என்பது போல் ஆட்டி மீண்டும் யசோதாவின் தோளிலேயே படுத்துக்கொண்டான் சுட்டிபையன்!!!!

” படவா உன்னையும் உன் அப்பனை போல் நாலு சாத்து சாத்தினால் தான் வழிக்கு வருவாயா???????”  என்று காஞ்சனா சிரித்தபடி கேட்டதும்

கடைசி படிக்கட்டுகளின் நின்றவளது கண்கள் தெப்பக்குளமானது !!!!

எப்படி இவர் மனம் மாறியதென்ற ஆச்சர்யத்தையும் சுமந்து நின்றவள்

பிறர் அறியா வண்ணம் தன் கண்களிலிருந்து  வெளியேற துடித்த ஒற்றை சொட்டு நீரை துடைத்தெடுத்து

 அவர்களின் அருகில் செல்ல

” நீ போய் சாப்பிடு மைத்தி!!!!!”  என்றார் யசோதா மருமகளை பார்த்து விட்ட நொடியில்…..

 காஞ்சனா எதுவும் பேசாத போதும் முன்புபோல் திருப்பிக் கொண்டு செல்லவும் இல்லை !!!

அதை தன் மனதில் குறித்துக் கொண்டு அப்படியே நின்றவளிடம்

” மைத்தி வா சாப்பிடலாம்!!!!!”  என்று கையோடு அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தாள்  உதிதா….

 அதோடு அவள் முன் ஒரு தட்டை வைத்து பரிமாற ஆரம்பிக்க

“அட என்ன உதிஅண்ணி நீங்கள்!!!!!!

முதலில்  உட்காருங்கள்….

  நான் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டேனா??????”  என்றபோதே அவளுக்குள் எஞ்சியிருந்த தயக்கம் பறந்தோட சாப்பிட ஆரம்பித்தாள்.

 சாப்பிட்டு முடித்து எழுந்தவள் ” நான் டியூட்டிக்கு போய்விட்டு வருகிறேன்…..

 சோட்டுவை…….”

 விட்டுவிட்டு செல்லவும் மனமில்லாமல்

 எங்கு கையோடு தூக்கிச் சென்றால்

பிரணாவ் கோபிப்பானோ என்றும் புரியாமல் தடுமாறி நின்றவளிடம்

” இன்று ஒரு நாள் லீவு எடுத்துக் கொள்கிறாயா மைத்தி!!!!!! உன்னிடம் சற்று பேச வேண்டும் ……” என்று உதிதா கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை……

 சரியாக அச்சமயம் மும்பையிலிருந்து போன் வரவும் எடுத்து பார்த்தவள்

“வியான் கூப்பிடுகிறான் உதிஅண்ணி…..

 நான் பேசிவிட்டு வருகிறேனே????”

 அனுமதி கேட்டு கொண்டு  மாடிக்கு ஏறியவள்

ஒன்றரை மணி நேரமாகியும் வியானுடனான  போன் தொடர்பை அணைத்திருக்கவில்லை……

 இறுதியாக “என்னால் இப்போது வர

முடியாது!!!!!! நான் மும்பைக்கு வரும்போது பேசித் தீர்த்துக் கொள்வோம் !!!!” என்றபடி அழைப்பை துண்டித்தவளுக்கு பூதாகாரமாய் தன் தந்தையின் நினைவுகளே வியாபித்தது ….

ஏன் டாடி என்னை விட்டுவிட்டு போனீர்கள்????

 நீங்கள் இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலைமை வரவிட்டு இருப்பீர்களா??????

 உங்களுக்கு தெரியுமா டாடி ????

 ஒரு பெண்ணின் கண்ணீரை கொண்டு இங்கு நான் தண்ணீர் குடிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறேன்!!!!!!!

 இதில் உங்கள் பேரனுக்கு காரணமே இல்லாமல் பிரணாவை அவ்வளவு பிடித்திருக்கிறது!!!!

 நான் செய்வது சரியா??? இங்கிருப்பது பிழையா?????

 எதுவும் புரியாமல் தவிக்கிறேன்!!!!!

 ஐ மிஸ் யூ டாடி!!!!! மிஸ் யூ சோ மச் !!!!!

வருந்தியவள் கண்ணீர் கோடு வற்றாது ஊற்ற அப்படியே கட்டிலில் சரிந்து கண் மூடி படுத்து விட்டாள் !!!!!!!

Advertisement