இரு போய் பார்க்கிறேன் !!!” என்று கூறி விட்டு வெளியேறியவர்
கைகளை கட்டி கண்களை திறக்காது கதவின் அருகே நின்ற மகனின் தோளை லேசாக தட்டி
“இங்கு என்னடா யுகா பண்ணுகிறாய் ???? அவள் உன்னை தான் கேட்கிறாள்!!!!!”
என்றார்.
உடனே மறுசொல் உதிர்க்காமல் உள்ளே நுழைந்தவவனை கண்டதும்
“யுகி!!!!!!!!!!!!!!!!!!!” என்று உதிதா அழைத்த கண்ணீர்க் குரலில் அவள் நிலைமை உணர்ந்து குடும்பத்தினரால் கணவனும்
மனைவியும் தனித்து விடப்பட்டனர்….
அனைவரும் அகன்றதும் சற்று தள்ளி நின்றவனிடம்
” என் மேல் கோபமா???????” என்றாள் உதிதா முதல் கேள்வியாக.
“இல்லை!!!!!!” என்று பொய்யாக தலையாட்டியவனிடம்
“அப்புறம் ஏன் என்னை பார்க்க வரவில்லை?????
நான் கண் விழித்ததும் உங்களை தான் தேடினேன் தெரியுமா????” என்றாள் அழுகுரலில்.
” ஏன் உன் பெரிய பையன் உன்னிடம் பேசாமல் இருப்பதால் போனா போகுது என்று என்னை தேடினாயாக்கும்??????”
எவ்வளவு முயன்றும் வருத்தத்தை மறைக்காது கொட்டிய மொழிகளில்
“சாரி யுகி …… நான் இப்போதெல்லாம்
உங்களை ரொம்பவும் கொடுமை படுத்துகிறேன் அல்லவா????
எனக்கே தெரிகிறது!!!!
நான் நானாகவே இல்லை!!!
உங்களை பாடாய் படுத்துகிறேன்…..
சில சமயம் இப்படி எல்லை மீறி பேசக்கூடாது என்று நினைக்கிறேன்
ஆனால் முடியாது போய் கத்தி விடுகிறேன்….
என்னை மன்னித்து விடுங்கள்!!”
அவள் கன்னங்களில் இறங்கிய சூடான நீரை சுண்டி விட்டவன் “என் அம்மு எதற்கும் அழ மாட்டாளே!!!!!
இது யார் புதிதாக அவதாரமெடுத்த புதிய அம்முவா ?????
இந்நேரம் என் பழைய அம்முவாக இருந்திருந்தால் நான் கேட்டதற்கு என்ன தெரியுமா கூறியிருப்பாள்????
‘ஆமாம் கொடுங்கோல் ஆட்சியாளரே !!!!
என் தம்பியை காணாததால் தான் உங்களை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதாக்கும்!!!’ என்று இருப்பாள்….
எனக்கும் அவள் தான் வேண்டும்….
இந்த அழுகாச்சி அம்மு எனக்கு வேண்டாம்பா” என்றபடி அவளது நெற்றியில் லேசாக முட்டியவனின்
கன்னங்களை பற்றியவளோ
“ஆனால் எனக்கு இந்த கொடுங்கோல் ஆட்சியாளர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை……. நான் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன் பா!!!!!” என்று கொஞ்சினாள்.
பல நாட்களுக்கு பிறகு தன்னிடம் சகஜமாக உரையாடியவளிடம்
“இது மட்டும் ஹாஸ்பிட்டல் ரூமாக இல்லாமல் நம் ரூமாக இருந்திருக்க வேண்டும் அம்மு!!!!
இன்று நைட் பார்க்கிறேன் எப்படி என்னை
தாண்டி அந்த சின்ன ரூமிற்குள் போகிறாய் என்று !!!!!
என்று கூறி மனைவியை விழி விரிக்க செய்திருந்தான் யுகன்.
இவளொருத்தி!!!!
” அம்மு இது ஹாஸ்பிட்டல்!!!! அந்தக் கோழி குண்டு கண்ணை வைத்து வசியம் பண்ணாதே!!!!” கறாராக கூறும் போது
அறைக்கதவை ஒரு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் காஞ்சனா கையில் சாப்பாட்டு தட்டுடன்….
உடனே மனைவியின் அருகில் அமர்ந்து இருந்தவன் சற்று விலகிக் கொள்ள
” டாக்டர் இப்போது உடனே சாப்பாடு தர சொன்னார்கள்!!!!
உதிமா ஒழுங்காக சாப்பிடாமல் இப்படியா ஒரு நொடியில் அனைவரையும் கலங்கடிப்பாய்?????
நீ இனி எப்படி சாப்பிடாமல் இருக்கிறாய் என்று பார்க்கிறேன் !!!! ” மிரட்டியபடி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தவரிடம்
காஞ்சனாவின் பின்னோடு வந்த கதிரேசன் ” இனி அவளால் எப்படி இப்படி இருக்க முடியும்????
உதியை கவனிப்பதை விட இனி உனக்கு வேறு எந்த வேலையும் இல்லை!!!” என்றார்.
மேலும் யுகனிடம் திரும்பி
“எப்படி சொல்வது என்று தெரியவில்லை மாப்பிள்ளை….. உதிதா செய்த காரியத்தை இன்னும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது தான்….
ஆனால் அதற்காக அவள் படும் பாடே இப்போது பூதாகரமாக தாக்கி வலிக்கிறதே!!!!
இன்னும் ஒரு மாதம் தானே…. குழந்தை பிறக்கும் வரை உதியை நாங்கள் அழைத்துக் செல்கிறோம் மாப்பிள்ளை” என்று கேட்டுக் கொண்டார்.
ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்து பிறந்த வீட்டிற்கு வர சொன்ன போது ” முடியவே முடியாது …. அங்கு தான் யுகி என்னை பார்த்து கொள்ள இருக்கிறாரே!!!! பிறகும் என்ன???? உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அங்கு வாங்க” என்ற கூறிவிட்டு கணவனுடனே மும்பைக்கு பயணித்திருந்தாள்.
அன்று அப்படி பேசியவளின் கண்கள் இன்று ” ப்ளீஸ் யுகி !!!! போயிட்டு வருகிறேனே ?!!!” எனும் செய்தியை உணர்த்த
ஒரு சதவீதம் கூட விருப்பமில்லாத போதும் “புரிகிறது மாமா…… பிரணாவ் விஷயத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை நாங்கள் சுக்குநூறாக உடைத்து விட்டோம்!!! என்ன தான் நியாயப்படுத்தக் கூடிய காரணம் இருந்தாலும் நாங்கள் செய்தது பெரிய தப்பு தான் !!!!
அப்போது அறை வாசலில் நிழலாட “இங்கு வா!!!!!!” என்றிருந்தான் யுகன்…
உறங்கும் சோட்டுவை கையில் வைத்து கொண்டிருப்பதற்கு
உதிதா கண் விழிக்கும் வரை பேபி கேரில் விட்டு விட்டு வரலாம் என்று நினைத்து
அங்கு சென்று விட்டு திரும்பிய மைத்ரேயியை தான் அழைத்திருந்தான் யுகன் …
அறையினுள் நின்ற கதிரேசன் மற்றும் காஞ்சனாவை கண்டு தயங்கியவளை
தன் பக்கமாக சற்று இழுத்து நிற்க வைத்தவன் தன் பெரிய மாமனாரிடம்
“இவளைப் பார்த்ததிலிருந்து ஏன் இவள் என்னுடன் பிறக்கவில்லை எனும் நினைப்பு பலமுறை எழுந்திருக்கிறது!!!!!
உதியையும் பிரணாவையும் பார்த்த பிறகு தான் உடன் பிறந்தவர்கள்
இல்லாமல் எத்தகைய சந்தோஷத்தை தன் வாழ்வில் இழந்திருக்கிறோம் என்பதே புரிய வந்தது!!!!!
அப்படி மைத்தி என்னை முதன் முதலில் பார்க்க வரும்போதே இவள் படும் துயரத்தையும் இவளுக்கு நேர்ந்த கொடுமையையும் ஒரு கலெக்டருக்கு உண்டான பார்வையில் எடுத்துக்கொண்டு எளிதாக என்னால் கடந்துவிட முடியவில்லை!!!!
எப்பேற்பட்டாவது ஏற்படவிருக்கும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தகர்த்தெரிந்து இவளை இந்த இக்கட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தே தீர வேண்டும் எனும் வேகம் எழுந்தது…..
ஆனால் நான் நினைத்தது 10% தான் என்பதுபோல் உதி மைத்ரேயி பற்றி தெரிந்ததும் அவளுக்கு உறுதுணையாய் நிற்க துணிந்தாள்….
அதற்காக அம்மு அனுபவித்த…….”
தன்னை மறந்து பேசிக் சென்றவனின் கைப்பற்றி
எங்கே அந்த அயோக்கியனால் தான் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி கூறி விடுவானோ என்று அஞ்சி
” யுகி கண்ட்ரோல்!!!!!” என்று கணவனை அமர்த்தினாள் உதிதா….
நடந்து முடிந்தது என்றாலும் வீட்டினருக்கு தான் கடத்தப்பட்டது தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று தான் கணவனை தடுத்திருந்தாள்.
தன் மேல் படிந்த கரத்தில் சிறு அழுத்தம் கொடுத்து விட்டு தொடர்ந்தான் யுகன்.
” எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் பிரணாவிற்கு கட்டிக் கொடுக்க மாட்டீர்களா மாமா??????? ஒரு நிமிடம்…….”
என்றவன்
வெளியில் நின்ற தன் தாய் தந்தையை அழைத்தான்.
“அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு மகளை பெற்று தருகிறேன்…. இப்போது ஒரு தங்கையை கொடுக்கிறேன்!!!!! ஏற்றுக்கொள்வீர்களா ????? ” என்று கேட்டபடி
தொங்க விட்டிருந்த மைத்ரேயியின் கையை எடுத்து தன் மீது சேர்த்து வைத்தபடி தேவகியிடம் நீட்டினான் யுகன்.
அடுத்த நொடியே மகளாக அறிமுகமானவளை தேவகி கட்டி அணைக்க ஸ்தம்பித்து நின்றாள் மைத்ரேயி.
யுகனின் மேல் ஒரு கலெக்டராக நன்மதிப்பு ஏற்பட போய் தான்
தன் பிரச்சனையை ஒருவேளை இவனிடம் கூறினால் அந்த ஆளுங்கட்சிகாரனை
எதிர்த்து ஏதாவது தீர்வு கிடைக்குமோ என்று
யுகனை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டாள் மைத்ரேயி….
திருமணத்திற்கு முதல் வாரம் ஆபத்து என்று அழைத்ததும் தாமதிக்காமல் தனக்குத் துணையாய் வந்த உதிதாவையும் சேர்த்து கடத்திக் கொண்டு சென்று அந்த பொறுக்கி பலவிதமாக டார்ச்சர் செய்ய
யுகனின் திறமையால் மீட்கப்பட்டதில் அவனுக்கு தான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!!!!
திருமணத்திற்குப் பின்பும் கூட சார் என்று அழைக்க
உதிதா ‘அண்ணா ‘ என்று கூப்பிட்டு பழகு!!!
என்று கண்டிப்பாக கூறிவிட்டதால் மறுக்க வழியில்லாமல் தான் அண்ணா என்று அழைத்ததும் …..
அப்படியிருக்க இன்றைய யுகனின் பாசமலர் வெளிப்பாடும்
மலைத்தேனின் சுத்தத்திற்கு போட்டிபோடும் அவனது கள்ளங்கபடமில்லாத அன்பும்
மைத்திரியை திக்குமுக்காட செய்தது!!!!!!
தனக்கும் சோட்டுவிற்கும் யாரும் இல்லாமல் தத்தளித்த போது
ஒரு நல் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்ததோடு
தங்களையும் அவன் குடும்பத்தினராகவே அரவணைத்துக் கொண்ட பாசம்
நெகிழ்ச்சியை உண்டுபண்ண
கட்டிக்கொண்ட தேவகியை மீண்டும் அணைக்க கூட தோன்றாமல் சமைந்து நின்று போனாள்……
அப்போதும் யுகன் தான் ” அம்மாவும் பொண்ணும் அப்புறம் கொஞ்சிக் கொள்ளுங்கள்!!!!” என்றபடி அவர்களை
விடுவிக்க செய்தவன்
“இப்போது சொல்லுங்கள் மாமா….
என் தங்கையை உங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்வதில் இன்னும் தயக்கம் இருக்கிறதா??????”
நடப்பதை ஒரு ஆச்சரியம் கலந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன் தன் மனதை வெளிப்படுத்தத் துவங்கும் சமயம்
அவரது மகள் பிரணிதா அவளது நாத்தனார் விதுல்யாவுடன் அறையினுள் பிரவேசித்தாள்…
தங்கையை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் எனும் தகவலறிந்து கேர் மருத்துவமனைக்கு வந்திருந்த பிரணிதா முதலில் எதிர்கொண்டது விதுல்யாவை தான்…..
அப்படி இருவருமாய் கண் விழித்து விட்ட உதிதாவை காண அந்த அறைக்குள்
நுழைந்திருந்தனர்….
ஆனால் அங்கு மைத்ரேயியை சற்றும் எதிர்பாராத விதுல்யா விருட்டென்று திரும்பி கொண்டு செல்ல
அதை கவனித்து விட்ட உதிதாவோ
” விது நில்லு!!!!!! பிரணிக்கா விதுவை கூட்டிக் கொண்டு வாயேன் ப்ளீஸ்…..” என்று கத்தினாள்.
விதுல்யாவை பார்த்ததும் காஞ்சனாவின் முகம் கூம்பி போய்விட கதிரேசனும் மேற்கொண்டு பேசாததால் யுகனே மீண்டும் பேசினான்.
” எனக்கு உங்கள் நிலைமை புரிகிறது மாமா…… ஆனால் கண்டிப்பாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது….
கூடிய சீக்கிரம் என் தங்கையை மனமார ஏற்றுக் கொள்வீர்கள் என்று !!!!!” என்றதும் மருமகனின் கரத்தை ஆறுதலாக பற்றினார் கதிரேசன்.
அச்சமயம் வலுக்கட்டாயமாக விதுல்யாவை இழுத்து வந்த பிரணிதாவை கண்டதும்
“நான் விதுவிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும்!!!!” என்று உதிதா கூற விதுல்யாவை விட்டுவிட்டு அனைவரும் வெளியே சென்றனர்.
அப்படி முதல் ஆளாய் வெளியேறிய மைத்ரேயியிடம்
“நீயும் இங்கேயே இரு மைத்தி!!!” என்றிருந்த உதிதா
இந்நிலையில் இப்போது இது தேவையா அம்மு??????????? என்ற கணவனின் பார்வையை மட்டும் கவனமாக தவிர்த்தாள்.
அனைவரும் வெளியேறிய பிறகு அவசரமாக எழ முயன்றவளின் கையில் குத்தி இருக்கும் (ஐவி) டிரிப்ஸ் எடுத்துக் கொள்ள “மெதுவா சின்னண்ணி” என்றபடி உதிதாவின் அருகில் சென்ற
விதுல்யா அதை சரி செய்தாள் .
அவளின் கரம் பற்றி
“விது என்னை மன்னித்துவிடு!!!!
எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான்!!
மைத்தி………”
என்று ஆரம்பித்து மைத்ரேயி பற்றியும் அவசர திருமணம் பற்றியும் முழுதாக கூறி முடித்திருந்த உதிதா
“அந்த சூழ்நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை…. அன்றைய திருமணம் நடக்காது போயிருந்தால் அடுத்து என்ன ஆகியிருக்கும் என்று யூகிக்க கூட முடியவில்லை….. அதனால் தான் இப்படி செய்தேன்….. என்னை மன்னிப்பாயா??????”
அவள் தரப்பு நியாயத்தை விளக்கிக் கூறி மன்னிப்புக் கோர
தன் கரத்தை வேகமாக உருவிக்கொண்டவளோ
“அதற்கு என் வாழ்க்கையில் ஏன் சின்ன
அண்ணி விளையாடினீர்கள்????????” என்றாள் விதுல்யா தன் நுனி மூக்கு சிவக்க …
இவளை எப்படி தேற்றுவது??? என்று தெரியாமல் உதிதாக தடுமாற
இதற்கு மேல் இங்கு இருந்தால் கண்டிப்பாக எதையாவது கூறி உதிதாவின் மனதை புண்படுத்தி விடுவோம் என்று நன்கு அறிந்த விதுல்யா
” டேக்கேர் சின்னஅண்ணி” என்று மட்டும் கூறிவிட்டு அங்கு நின்ற மைத்ரேயியை நிமிர்ந்தும் பாராமல் வெளியேறிய போது எதிர்கொண்டது பிரணாவை !!!!!
“நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்!!!!!” காலையில் விதுல்யா இப்படி கூறி விடவும்
தன் வண்டியை எடுத்துக்கொண்டு நால்வழி சாலையில் சீறிக் கொண்டு
சென்றவனின் மனம் ஒரு நிலையில் இல்லை…..
சூழ்நிலை காரணமாக அவள் மனம் கவர்ந்தவளை பிரிய நேர்ந்ததை
கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு தான் தீர வேண்டும் என்று
ஒரு நிலைக்கு இத்தனை நாள் கசக்கிப் பிழிந்து முன்னேறி இருந்தவனுக்கு
விதுல்யாவின் கலங்கிய விழிகளை காணும் சக்தி இல்லாது போனது!!!!!!!
தான் ஏற்றுக் கொண்டது போல் அவளும் நிதர்சனத்தை புரிந்து கொண்டு விலகி செல்ல தான் வேண்டும் எனும் உண்மை சுட
இனி அவளை தான் பார்க்காமல் இருப்பது தான் அவளுக்கும் நல்லது என்று முடிவெடுத்தவன் வெகுதூரம் பயணித்து இருந்தான்.
அச்சமயம் அங்கு
தான் குடித்த பெட்ரோல் திரவத்தை கருப்பு
நிற வாயுவாக மாற்றி அவ்விடத்தையே புகை மண்டலமாக நிரப்பியபடி தன்முன்னே சென்ற லாரி ஒன்றை கண்டவனுக்கு திடீரென்று அவனது மனைவியின் நினைவு தட்டியது!!!
அவளும் இதே மாதிரி தானே எதையோ தட்டிவிட்டு புகையின் நடுவில் நின்றிருந்தாள்!!!?????
அப்போதும் வெளியேறும் போது அந்த நர்ஸிடம் தான் ஆசிட்ஐ கொட்டியதாக கூறி விட்டு பார்க்க சொல்லிவிட்டு தானே வந்தோம் !!!!!
உடனே வெளியே வந்து விட்டிருப்பாள் தானே?????
சும்மாவே ரோஷக்காரி !!!!
இதில் கணவனுக்கு ஏற்கனவே ஒரு காதல் இருப்பது தெரிய வந்தால் கோபித்துக் கொள்ளாமல் விடுவாளோ?????
சின்னப் பெண் போலவா நடந்து கொள்கிறாள்???
அவளா சின்ன பொண்ணு???
அவள் ஒரு டாக்டர் பொண்ணு!!!!!! மனசாட்சி சிலிர்த்து எழ
ஆமாம் என்ன பெரிய டாக்டர்???? அவள் ஆளும் ஸைஸும்!!!!! என்று மனதுள் கூறியவன்
“ஆனால் அந்த ரோஸ் பட்ஸ் மட்டும் எக்சப்ஷனல்!!!!” வாய்விட்டே கூறியிருந்தான்.
மருத்துவமனையில் இருக்கிறாளா அல்லது எங்கும் சென்று விட்டாளா?????
அப்படி சென்று இருந்தால் அவளை தேடி கண்டுபிடிப்பது அடுத்த தலைவலி ஆகிவிடுமே!!!!
முதலில் அவள் எங்கிருக்கிறாள் என்று பார்த்தாக வேண்டும்!!!! 300 கிலோ மீட்டர்
தாண்டி வைத்திருந்தவன் தன் பகானி ஜோன்டாவை திருப்பி கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான் .