வாட்ச் மேனிடம் ” இதோ வருகிறேன்” என்று கூறியபடி வெளியேறிய பிரணாவிற்கு விதுல்யா இங்கு தான் இருக்கிறாள் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை….

அப்படியே விதுல்யா இந்த கேர் மருத்துவமனையில் இருந்தாலுமே அவளது மகப்பேறு பிரிவு அடுத்த கட்டிடமான பிளாக் – பி2 வில் தான் அமைந்திருக்கிறது!!!!

அந்த எண்ணம் தான் பிரணாவை அவ்விடத்தை விட்டு நகர செய்ததோ????

சரியாக அவன் சென்ற அடுத்த ஐந்து நிமிடங்களில்  விதுல்யா  ” மே ஐ கம் இன் டாக்டர்????”  என்று கேட்டபடி மைத்ரேயின் அறையை ஒருமுறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். 

” ஹாய்!!! டாக்டர்.மைத்ரேயி……

நான் விதுல்யா …..

  கைனகாலஜிஸ்ட்டா இந்த ஹாஸ்பிட்டலில் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்…. “

 என்று விதுல்யா மைத்ரேயியிடம்  தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள

 ஏனோ தெரியவில்லை??????

 அவளை கண்டதுமே மைத்ரேயிக்கு ஒரு இனம்புரியா சிநேக உறவு தோன்ற

அவளும் புன்னகை முகமாய் 

“ஹலோ டாக்டர்.விதுலா!!!!!!”  என்று கைக்குலுக்கினாள்….

” இருபது நாட்களாக  நார்த் சைட் காம்ப் போயிருந்தேன் …….

காலையில் தான் சென்னைக்கு  தினும்பினோம்….. வந்த

 உடனே  நம்ம ஹாஸ்பிட்டலிற்கு ஒரு அட்டென்டன்ஸ் போட்டு விடுவோமே

என்று ஓடி வந்து விட்டேன்!!!!!!” பலநாள் பழகிய தோழியிடம் உறவாடுவது போல் கண்ணடித்து சிரித்த விதுல்யாவை மைத்ரேயிக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது ….

திருமணமான தினத்திலிருந்து ஒருவித இறுக்கத்துடன் வலம் வந்தவளுக்கு விதுல்யாவின் நட்பு வரப்பிரசாதமாக பட பழைய மைத்ரேயியின் துடுக்குதனமான பேச்சு வெளி வந்தது……

“ஹோ!!!!!!!  இத்தனை நாளா வாடி வதங்கி போயிருந்த ஹாஸ்பிட்டல் இன்று பூத்து குலுங்குகிறதே என்று வியந்தேன்!!!!!!

அதற்கு முழுமுதற் காரணம் தங்களின் வருகை தானா????? ”  மைத்ரேயியின் கேளி பேச்சிற்கு

“அடடே!!!  அவ்வளவு  மிஸ் பண்ணிவிட்டதா??????

 ஓவர் டைம் ட்யூட்டி பார்த்து டேலி செய்து விடுகிறேன்!!!!!!”   என்றிருந்தாள் விதுல்யா.

மேலும் ” ரொம்ப சின்ன பொண்ணாக தெரிகிறீர்கள் !!!!

நீங்கள் ஒரு டாக்டர்……. உங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை!!!!!!”

 உண்மையாக அதிசயப்பட்ட விதுல்யா

”  இங்கே இருக்கும் பேபி கேரில் உங்கள் பையனை சேர்த்து இருப்பதாக  டாக்டர்.மது சொன்னார்கள்……

சமத்தாக இருந்து கொள்வாரா???”

யதார்த்தமாக விசாரணை மேற்கொண்டாள்..

“அதெல்லாம் சோட்டு ஒரு பிரச்சனையும் கொடுக்க மாட்டான்………”  பெருமை பொங்கி கூறிய அன்னையிடம்

” ஸ்வீட் பாய் ….. அப்போது அந்த ஸ்வீட் சோட்டுவை நேரில் பார்த்தாக வேண்டுமே!!!!???

 மதியம்  லஞ்ச்  ஹவரில் என்னையும் கூட்டி போறீர்களா????? ” என்றாள்

விதுல்யா.

” இல்லை…. அது  இன்று  சோட்டுவை வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறேன்…… இந்நொரு நாள் கட்டாயம் பார்க்கலாம்!!!!!”

“ஹோ.. வீட்டில் பார்த்து கொள்ள ஆள் இருக்கிறார்களா??????

அதுவும் நல்லதுதான்…..

 சொல்ல போனால் அது தான் பெஸ்ட்!!!!!

 என் அண்ணிக்கு பையன் பிறந்த உடனே அவர்கள்  வேலையையே ரிஸைன் பண்ணிவிட்டார்கள்……. 

ஆதிக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது…

‘வீட்டில் அம்மா ஆதியை பார்த்துக் கொள்வார்கள் .. நீங்கள் ஆபிஸ் போய் உங்க வேலையில் ஜாயின் பண்ணுங்கள்’ என்று சொன்னாலும்  கேட்க மாட்டார்கள் !!!!

‘ ஆதியை  விட எந்த ஆபிஸும் முக்கியமில்லை என்று தன் வேலையை  கட் அடித்து கொண்டு  அந்த அடங்காத வாலு பின்னாடியே சுத்திட்டு இருக்கிறார்கள்!!!!!!!!

 ஆனால் என்ன தான் பேபி கேரில் வசதியாக இருந்தாலும் வீட்டில் பார்த்துக்குற மாதிரி வராது தானே???????”  என்று மூச்சுவிடாமல் பேசிய விதுல்யா

” சாரி நான் கொஞ்சம் உளறு வாய்!!!!!! ஓவராக மொக்கை போட்டு விடுவேன்……” என்று தன் பேச்சை நிறுத்தினாள்.

“அச்சோ நீங்கள் வேற!!!!!

 யாருடா என்னிடம் இப்படி பேசுவார்கள் என்று தான் நானும் காத்து கொண்டு  இருந்தேன்…… எது வேண்டுமானாலும் பேசுங்கள்!!!!” என மைத்ரேயி விதுல்யாவின் நட்பை இறுகப் பற்றிக்

கொள்ள நினைக்க

ஆனால் அந்நட்பின் ஆயுட்காலமோ இன்னும் இரண்டே நிமிடத்தில் முடியபோவது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை…..

” நான் பேசமாட்டேன்பா!!!!

 நீங்க வாங்க போங்க என்று இப்படி மரியாதை இல்லாமல் இப்படி பேசினால் எல்லாம் நான் பேச மாட்டேன்பா!!!!!” என்ற விதுல்யா

”  உன்னை விட ஒரு வயது தான் நான் பெரியவளாக இருப்பேன்  …….

ஸோ….

 சீனியர் சொல்கிறேன்…

மரியாதையாக  நீ !! வா!!  போ!! என்று கூப்பிடு சரியா??????” என்று கேட்க

” உத்தரவு சீனியர்!!!!!!”  என்று தலையை சற்று குனிந்தபடி உரைத்தாள் மைத்ரேயி…

“சரி சரி காலில் விழுந்தது போதும்!!!!!!!! எழுந்திரு மைத்தி”

 ” எப்பவும் இப்படிதானா????

 இல்லை… இப்படித் தான் எப்பவுமா?????”  என்று விதுல்யாவின் குணத்தில் மிகவும் பிடித்துபோய் மைத்ரேயி வினவ

“பிறந்ததலிருந்தே!!!!!!!!!!

 ஆனால் ஒருவரை பார்த்தால் மட்டும் இந்த லிப்ஸ் ஃபெவிக்கால் இன்றி ஒட்டிக் கொள்ளுமாக்கும்!!!!” என்று சோக கீதம் பாடினாள் விதுல்யா. 

“ஓ !!!! அப்படி யாரு அந்த மேஜிக்கல் பெர்சன்??????? “

“என் அண்ணியின் தம்பி….

 உன்னிடம் பேசினால் நேரம் போவதே தெரியவில்லை மைத்தி  !!!!!

அதிலும் நான் இப்போது அவரை பற்றி பேச ஆரம்பித்தால்….

பூத்து குழுங்கும் இந்த கேர்  ஹாஸ்பிட்டலை விட்டு என்னை ரிஸைன் பண்ணினாலும் பண்ணி விடுவார்கள் !!!!!!

 வாங்குகிற ஃபீஸிற்கு கொஞ்சமாவது வேலை பார்த்து விட்டு வருகிறேன்……

லஞ்ச் டைமில் மீட் பண்ணலாம்…. பை மைத்தி!!!!!!” என்று திரும்பி நடந்தவளின்  நீண்ட கூந்தலை பார்த்தவளுக்கு சம்பந்தமே இல்லாமல்

தன் குட்டையான சுருள் கேசத்தையும் கண்டு  ” ஏன்டி பஜாரி என்னை ஏமாற்றினாய் ??????” என்ற கணவனின் சொல் நினைவிலாடியது………

” உங்… உன்  ஹேர் ரொம்ப சூப்பராக இருக்கிறது விது…… எப்படி இதை மெயின்டெய்ன் பண்ணனும் ??????”

பார்த்ததும் நெருங்கிய

தோழியானவளிடம்  தன் முடியைத் தொட்டு பார்த்தவாறு மைத்ரேயி கேட்க

 கதவு வரை சென்ற விதுல்யா  திரும்பி நின்று பதிலளித்தாள்….

” அம்மா தான் கண்டகண்ட  எண்ணெய்யை தேய்த்துவிட்டு வளர்த்தார்கள் மைத்தி….. கட் பண்ண விடாமல்!!!!

இப்போது தான் நாமே வளர்ந்துட்டோமே இது எதற்கு ??? கட் பண்ணி விடலாம் என்று  பார்த்தால்……..

அண்ணியின் தம்பிக்கு இது தான் பிடித்து தொலைத்திருக்கு…. ரொம்ப கஷ்டம் பா..” லேசாக வெட்கம் பூசி சென்றதோ அவள் முகத்தில்……..

சற்று முன் தானே அவள் அண்ணியின் தம்பியிடம் பேச மாட்டேன் என்றாள்!!!! ஆனால் பிடித்ததையெல்லாம் செய்வாளாமாம்????? மனதுள் எட்டி பார்த்த

வரிகளை அப்படியே எதிர் நின்றவளிடம் கொட்டி இருந்தாள் மைத்ரேயி.

“பேச மாட்டாய்!!!! ஆனால் பிடித்ததெல்லாம் தெரியுமோ???????”   விதுல்யாவின் சந்தோஷம் தன்னையும் தொற்றி கொள்வதாய் அவள் மனம் கவர்ந்தவனை பற்றி கேள்வி எழுப்பினாள் மைத்ரேயி…

” ஓட்டாதே மைத்தி!!!!

இனி என்ன ஆனாலும்  சரி அவரிடம் பேசியே ஆக வேண்டும்  என்று முடிவு பண்ணிவிட்டேன்…..

 ஆனால் இப்போது கதம் கதம்!!!!!!!

இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாதே!!!!!

எதுவென்றாலும் லஞ்ச் டைமில் பேசி கொள்ளலாம்….

அதிலும் அவரை பற்றி பேசவே பேசாதே!!!!!”  என்று சற்றுமுன்

பரிச்சயமான தோழியின் அருகில் வந்து

அவளது இதழ்களை ஒரு கரத்திலும்  தன் இதழ்களை இன்னொரு கரத்திலும் மூடி நின்றவளிடம்

மதியம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்???????

இப்போதே அனைத்தையும் பேசி தீர்த்து விடுவோமே!!!!!! என்பது போல் உள்ளே நுழைந்திருந்தான் பிரணாவ்………

காரை உரிய இடத்தில் பார்க் செய்த பிரணாவின்  மனதில் ஒரே ஒரு கேள்வி தான்!!!!!!!

அக்கேள்வியை உடனே தன் மனைவியிடத்தில் கேட்டு விட நினைத்தவன்

‘இப்போது உள்ளே போகாதே!’ என்பது போல் போன் அவனை அழைத்து தடுக்கவும்……

அலுவல் நிமித்தமாக அழைத்தவரிடம் பேசியதில் கால் மணி நேரத்தை கடத்தியிருந்தான்.

 அவனுள் உதித்த கேள்வியை அவளிடத்தில் சேர்த்து அதற்கான விடை கிடைக்காமல் கிளம்ப முடியாது என்று எண்ணியவன்

 தன் பெயரையும் சேர்த்து தாங்கிக் கொண்டு மிளிரந்த அவளின் அறைக் கதவை தட்டாமலேயே திறந்தான்……

பிரணாவை அங்கு எதிர்ப்பாராத விதுல்யா  சிறு பதற்றமடைந்த போதும் சிறு துணிவை வர வழைத்து

” என்ன அத்தான் இந்த பக்கம்????

 ஒருவேளை என்னைப் பார்க்க வந்தீர்களா?????

 இரண்டு வாரங்களுக்கு முன்னே என்னைத் தேடி வீட்டிற்கு வந்து

இருந்தீர்களாம்……

நான் குஜராத் கேம்ப் போயிருந்தேன்!!!!

 அம்மா காலையிலேயே உங்களைப் பற்றி பேச போவதாக சொன்னார்கள்….

ஆனால் நான் இங்கே வந்துவிட்டேன்….

எதுவும் முக்கியமான விசயமா அத்தான்??????”

ஆரம்பத்தில்  தயங்கியபோதும்

இனி பிரணாவுடன் பேசியே ஆக வேண்டும் என்று உருப்போட்ட மந்திரம் விதுல்யாவை தெளிவாக உரையாட வைத்தது…..

அந்த தெளிவு!!!!

அவள் கண்களில் தெரிந்த ஆசை!!!!

 உள்ளே நுழைந்தவனின் கலக்கம்!!!!

இவையனைத்தும் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றவளை போரில் முதுகு புறமாய் குத்திய கத்தியாக அச்சுறுத்தியது……

அவ்வாறு உடைந்து போயிருப்பினும் நூற்றில் ஒரு சதவீதமாக நப்பாசை ஒன்று தன்னை தழுவி கொள்ள கணவன் கூறவிருக்கும் பதிலுக்காக  செவி சாய்த்து நின்றவளை  அவனின் வார்த்தைகள்  சுக்குநூறாக கிழித்து எரிந்தது!!!!!!!

“ஆமாம் முக்கியமான விசயம் தான்!!!!”

அவ்வளவு நிராசையுடன் கூறியவனைப் புரிந்து கொள்ளாமல்

“என்ன அத்தான்??????” அத்தனை ஆசையுடன் வினவினாள் விதுல்யா ……

அவள் கண்களும் மொழியும் உணர்த்திய காதலை ஏற்க முடியாது தவித்தவன்

 அதற்கு மேல் ஒருநொடி கூட தாமதிக்க விளையாது……

தன் விழிகளை ஒருமுறை மூடி திறந்து

“எனக்கு திருமணம் ஆகிவிட்டது விது.. விதுல்யா…….”  என்றான்  அழுத்தமாக….

” என்.. என்ன சொன்னீர்கள்  அத்தான்?????”

 என்ன உளறுகிறான்????

அவன் சொன்ன கூற்றை நம்ப மறுத்த மனதோடு

“ஒரு எதிர்ப்பாராத தருணத்தில்…..” பிரணாவ் பேச பேச

” விளையாடாதீங்க அத்தான்!!!!!!” பனித்த கண்களுடன் கத்தியிருந்தாள் விதுல்யா.

” நிஜம் தான் விது……… தயவுசெய்து   என்னை மன்னித்துவிடு …..” பிரணாவ் வருத்தம் அப்பிய  முகத்தோடு எங்கேயோ பார்வையை பதித்து உரைக்கும் போதே

“அத்தான் போதும்!!!!!

எல்லாவற்றிற்கும் லிமிட்ஸ் இருக்கு!!!!

கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறீர்கள்….. 

சரி…

 யாரை கட்டுனீர்கள்?? என்று நான் கேட்டால்,, இப்போது யாரை காட்ட போகிறீர்கள்????????” அவன் கூற்றில் துளியும்  நம்பிக்கையின்றி விதுல்யா  கேட்டதுமே

அவனையுமீறி பிரணாவின்  கண்கள் அங்கு நின்ற அவன் மனைவியை தொட்டு மீண்டது!!!!!!

அவன் பார்வையில் பொதிந்த விடையில்

தூக்கிவாரி போட்டு இரு அடி பின் நகர்ந்த காதலியிடம்

“விது நான் சொல்வதை கொஞ்சம் கேளு!!!!! ப்ளீஸ்.. ……” பிரணாவ்  கெஞ்ச கெஞ்ச

தன் இரு காதுகளையும் பொத்தி கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடியே இருந்தாள் விதுல்யா……… ..

ஒருத்தியோ அழுதபடி  அறையை விட்டு வெளியே ஓடியிருக்க

 மற்றொருத்தியோ உள்ளுக்குள்ளே குமைந்தபடி மண்ணுலகை விட்டே ஓடத் துடிக்க

செய்வதறியாது ஒருநொடி திகைத்தான் பிரணாவ்!!!!!

பிறகு தாமதிக்காமல்

“விது நில்லு !!!!!!” என விதுலாவின் பின் நிலை தடுமாறி விரைய ஆயத்தமானான்……

அச்சமயம்

நேற்று லேபில் இருந்து டெஸ்ட்டிற்காக எடுத்து வரப்பட்ட ட்ரக் ‘அடிநாசின்’ தட்டி விடப்பட்டு மைத்ரேயியின் அறை எங்கும் புகை மண்டலமாய் காட்சியளிக்க

 மனைவியின் புறம் நகர்ந்த கால்களை சிரமப்பட்டு தடுத்த பிரணாவ்  விதுல்யாவின் பின்னால் ஓடலானான்.

அப்போதும் வெளியில் இருந்த அட்டண்டரிடம்

 ”  கை தவறி ஒரு ஆசிட் கொட்டி விட்டது……. ப்ளீஸ் என்ன என்று கொஞ்சம் பாருங்களேன்!!!!!!!” என்று தகவல்  கூற மறந்தானில்லை…..

நேரே விதுல்யாவின் அறைக்கு சென்றவன் 

“நான் எதையும் நியாயப்படுத்த வரவில்லை.. தயவு செய்து உன் நல்லதிற்காகவாவது நான் சொல்வதை கொஞ்சம் கேளு!!!”  என்று எதையோ கூற முற்பட

“நீங்கள் எதுவும் என்னிடம் சொல்ல வேண்டாம் !!!!!!

 உண்மையிலே எனக்கு ஏதாவது நல்லது

செய்ய நினைத்தீர்கள் எனில் என்னை தனியாக விடுங்கள் ப்ளீஸ் !!!!!”

கையெடுத்து கும்பிட்டவளை ஒரு கையாலாகாத தனத்தோடு பார்த்தவன் விருட்டென்று கிளம்பிவிட்டான்.

” ஹே விது!!!!  மைத்ரேயி என்று ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் புதிதாக நம் மருத்துவமனையில் சேர்ந்து இருக்கிறார்கள்!!!

பார்க்க சின்ன பொண்ணாக தெரிகிறார்கள்……

 ஆனால் அவர்களுக்கு ஒரு சின்ன பையனே இருக்கிறான்…… ” காலையில் மருத்துவமனைக்குள் நுழைந்ததும்

கூட பணிபுரியும் டாக்டர்.மது கூறியதை  

“ஓ…….”  என்று சாதாரணமாக கேட்ட விதுல்யா 

“அவர்களை  உனக்கு ரொம்ப பிடிக்கும் பாரு…….” மது புரியாத  புதிர்  ஒன்றை போடவும்

“ஏன்டி?????” என்றபடி யோசித்து நின்றாள்  .

” ஏனென்றால் …… உனக்கு ரொம்ப பிடித்த பெயர் தான் அந்த பெண்ணின் இரண்டாவது பெயர் !!!!!”

என்று மது கூறியது தான் தாமதம்…..

  விதுல்யா ஓடியே விட்டிருந்தாள் மைத்ரேயியின் அறைக்கு…..

*****மிஸஸ் மைத்ரேயி பிரணாவ் *****

பெயரை  பார்த்ததும் ஒரு புத்துணர்ச்சி!!!!!!!!

நாளை தன் பெயரும் இவ்வாறு தானே புனைய போகிறது என்று!!!!

கண்முன் கொட்டை எழுத்துகளில் மின்னும் நாமத்திற்கு சொந்தகாரனே தன்

மனங்கவர்ந்தவன் தான்

என்று தெரிந்திருந்தால்

 மைத்ரேயியிடம்  பேச ….. பேச என்ன பார்க்க கூட விதுல்யா நினைத்திருக்க மாட்டாளே!!!!!

பிரணாவ் அவள் அறையை விட்டு சென்றதும்

உடனே வீட்டிற்கு ஓடி தன் தலையணையில் தஞ்சம் கொள்ள துடித்த முகத்தை  தண்ணீர்விட்டு அலம்பியவள்

 தன் எண்ணங்களை பிடிவாதமாக திசை திருப்ப முயன்று

அட்டெண்டரின் பட்டன் அழுத்தி

” ஓ.பி(அவுட் பேஷன்ட்ஸ்) வந்து விட்டார்களா????? உள்ளே வரச் சொல்லுங்கள்!!!!”  என்றாள் விதுல்யா ….

அங்கோ

அறைக்கதவை திறந்த அட்டெண்டர்

 அறை முழுவதும் புகை மண்டலமாக இருப்பதைக் கண்டு அப்படியே அதிர்ந்து

 மைத்ரேயியை அந்த புகையில் அடையாளம்  காண முடியாது

 “மேடம் ???? மைத்ரேயி மேடம் எங்கு நிற்கிறீர்கள் ???????” என்று இருமியபடி கத்தினார்….