Advertisement

உள்ளங்கவர் கள்வனே(2) – 14

தன் அருகில் நிற்பவள் கதைக்கும் தாய்மை மொழி புரிந்து அதிர்ச்சியின் விளிம்பில் நின்ற  பிரணாவிடம்

 “உன் நிலைமை புரிகிறது பிரணாவ் மாப்பு…… இந்தக் குழந்தை ஒரு அயோக்கியன் செய்த பாவத்தினால் கிடைத்த பொக்கிஷம்!!!!!

 எக்காரணத்தைக் கொண்டும் அந்த குழந்தையை மட்டும் வெறுத்து விடாதே!!! ப்ளீஸ்…… நான் எக்ஸ்ப்ளைன் பண்றேன் உன்னால் கண்டிப்பாக  புரிந்துகொள்ள முடியும்!!!!”

ஐந்து வருடங்களாக குழந்தைக்கு தவமிருக்கும் ஒரு தந்தையின் குரலில் யுகன் பிரணாவிடம் எடுத்துரைக்கும் போது

“எவன்டா இங்கு கல்யாணம் பண்ணியது????? யாருக்கு அவ்வளவு தைரியம்?????” கூப்பாடு போட்டபடி  திருமண மண்டபத்திற்குள் நுழைந்தான் அந்த அயோக்கியன்……

 அவன் முன்னே ஜான்சி ராணியாய் சென்று நின்ற பிரணாவின் மனைவி

“உன் தின் க்யா போல் ரஹி தி ????? தெரெஸி காவுன் ஷாதி காரேங்கா!!!!!??? அச்ச்சி தாரா ஷி தேகோ……” 

 (“என்னமோ சொன்னாய்????? உன்னை யாரு கல்யாணம் பண்ணுவான் பாக்குறேன்னு!!!!! நல்லா பாரு…..”)

ஆவேசமும் ஆக்ரோஷமும் பொங்க சீறினாள் …..

அவளை ஏற இறங்க பார்த்தவன் அவள் கழுத்தில் மின்னிய மஞ்சள் சரடை கண்டு கொண்டு  “எப்போ இன்னொருத்தன் உன்னை தொட்டு தாலி கட்டினானோ அப்பவே எனக்கு நீ வேண்டாம்!!!!! எனக்கு என் பிள்ளை மட்டும் போதும்….. நீ எக்கேடோ கெட்டு போடி”  என்று அவள் கையில் வைத்திருந்த குழந்தையை பறிக்க முயல

யுகன் அவ்வயோக்கியனின் செயலை எளிதாய்  தடுத்ததோடு அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டிருந்தான்.

” டேய் கலெக்டரு என்னையா அடித்தாய்!!!!! உன்னை என்ன பண்ணுகிறேன் என்று மட்டும் பார்……. நீ தானே இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து என் குழந்தையையும் என்கிட்ட இருந்து பிரித்தாய்!!!! உன்னை… உன்னை…….”

ஆவேசமாக கத்தியதோடு

 “என் பையன் எனக்கு வேண்டாம் என்று நினைத்த உனக்கும் உன் குழந்தை வேண்டாம்  !!!!!!!”  என்றபடி மேடிட்ட வயிற்றுடன் நின்றிருந்த உதிதாவை கண்ணிமைக்கும் நொடிக்குள் பிடித்து தள்ளிவிட்டு இருந்தான் அந்த அயோக்கியன்.

எதிர்பாரா நிகழ்வில் உதிதா கீழே விழ போக ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதற்கேற்ப  பாய்ந்து சென்று அவளை தாங்கியிருந்த பிரணாவ்

 “உதிக்கா பார்த்து…. அடிபட்டு விட்டதா???? ஆர் யூ ஓகே??????” தன்னையுமறியாமல் கேட்டபடி தன் அக்காளை  ஆராய்ந்ததோடு

” பப்புமா உனக்கு ஒன்றும் இல்லைடா……….” என்றான்

வயிற்றிலிருக்கும் தன் மருமகளிடம் குழந்தை உருவான தினத்திலிருந்து  அவன் அழைக்கும் விதத்தில் .

அப்போது உதிதாவின் கண்களில் இருந்த கண்ணீர் அவன் கையில் பட்டு தெறிக்க உடனே நிமிர்ந்தவன் “பிரணாவ்……!!!!!!” கன்னத்தை நோக்கி உயர்ந்த தமக்கையின் கரத்தை தட்டிவிட்டு சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான் மீண்டும் வரவழைத்த இறுக்கத்துடன்.

 அதற்குள் யுகன் அந்த அயோக்கியனை அருகில் நின்ற அசிஸ்டன்ட் கமிஷனரிடம் கைது செய்து அழைத்து செல்லும்படி உத்தரவிட

மும்பை சிட்டியின் பெரிய புள்ளி!!!!

 ஆளும் கட்சியில் இருக்கும் அரசியல்வாதியை பகைத்துக் கொள்ள

விரும்பாது அந்த அயோக்கியனின் மேல் காவல்துறையினர் கை வைக்க தயங்கினர்.

“சார்.. டூ வாட் ஐ சே!!!!! என்ன பிராப்ளம் வந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கறேன்”  கூட்டிட்டு போங்க என்றான் கட்டளையாக .

 உடனே கான்ஸ்டபிள்ஸின் உதவி கொண்டு அந்த அயோக்கியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றான் ஏ.சி.பி .

“முதலில் வீட்டிற்கு தகவல் கொடுக்க வேண்டும்….. வாங்க… இப்போதே சென்னைக்கு புறப்படலாம்”   யுகன்  கூற

” அப்போது அந்த பொலிடிஷியன்????? நீங்கள் கிளம்பினால் அவன் அடுத்த நிமிடமே ஜாமீனில் வெளி வந்து

விடுவானே????”  உண்மை புரிந்து தயங்கினாள் உதிதா.

“ஐ கேன் மேனேஜ்……  இப்போது அதை விட இது தான் முக்கியம்….. போய் அந்த பொண்ணையும் குழந்தையையும் கூட்டிட்டு வா” சற்று கடுமையாகவே சொல்லி விட்டு காரை நோக்கி சென்றான் யுகன்.

 யுகனிற்கு  அவன் அம்முவின் மேல் அளவு கடந்த கோபம்!!!!!

 பயணத்தின்போது “நான் பெரியப்பாவிடம் இப்போதே திருமணம் குறித்து  சொல்லி விடுகிறேன் யுகி ….  நாம் நேரில் சென்று காரணத்தை பேசி புரிய வைத்துக் கொள்ளலாம் !!!!!” முன் சீட்டில் அமர்ந்து இருந்தபடி உதிதா வினவியதற்கு

“வேண்டாம் மாம்ஸ் ….. எது என்றாலும் வீட்டிற்கு  போய் பேசிக்கொள்ளலாம்… இப்போது நாம் போகிற வரைக்குமாவது அவர்கள் அங்கு நிம்மதியாக இருந்து கொள்ளட்டும்!!!!!”   சத்தமாகவே சிடுசிடுத்தான் பிரணாவ் .

அவன் கத்தியதில் அருகில் இருந்தவளின் மடியில் சமத்தாக  தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டு  அழ

” டாரோ மத் சோட்டு ஹம் அபி ட்ட்ட்ர்ர்ர்ரா ரஹே ஹை!!!!!!!”

( “ஒன்னுமில்ல சோட்டு நாம் இப்போது ட்ட்ர்ர்ர்ரா போகிறோம்….. பயப்படாதீங்க!!!!!”)

 மகனை சமாதானப்படுத்த முயன்றாள்.

அதில் எரிச்சலுற்ற பிரணாவ்  ” ஐயோ….. நீ கொஞ்சம் வாயை மூடு ….  நீ

பேசுவதற்கு உன் கையில் இருப்பவன்  கத்துவதே தேவலம்…… இன்னொரு வார்த்தை ஹிந்தியில் பேசினாய் என்றால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது”  தன்னவளாக்கியவளிடம் பேசிய முதல் வார்த்தைகளை பொரிந்து தள்ளி இருந்தான் .

 கூடவே திடீரென்று பெரிய சந்தேகம் ஒன்று எழ “ஏய் நான் பேசுவது உனக்கு புரிகிறதா இல்லையா????????” மனைவியிடத்தில் விளித்தவன்

” மாம்ஸ் இவளுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா??????”  என்றான் யுகனிடம் அவசரமாக .

ஏனோ அவனது  அச்சத்தமான புலம்பலில் தன் அழுகையை முற்றிலும் துறந்து

சிரிக்க ஆரம்பித்திருந்தான் குட்டி பையன்.

 என் நிலைமையை பார்த்தால் உனக்கு சிரிப்பாக இருக்காடா!!!!!!!!

 குழந்தையிடம் மானசீகமாக உரையாடிய பிரணாவ் 

வாயை இறுக்க மூடி அதற்கும் மேலான இறுக்கத்தை முகத்தில் சுமந்து அமர்ந்திருந்தவளிடம் “உன்னிடம் தான் கேட்கிறேன்….. நான் பேசுவது உனக்கு கேட்கிறதா இல்லையா?????” என்றான் சைகை மொழியில்.

” ஹையோ !!!!! என் வாழ்க்கை ஃபுல்லா இப்படி கையை ஆட்டி ஆட்டியே முடிய போகுதா கடவுளே ” பிரணாவ்  நொந்துகொண்டதும் அவ்வாறு சமிஞ்சைமொழி பேசியதும் யுகனின்  முகத்தில் புன்முறுவலை  கொண்டு வர

“அவள் அப்பா தமிழ் பண்டிட்  மாப்பு…….

நம்மளை விட சூப்பராக தமிழ் பேசுவாள்….. நீ உன் உதிக்காவை போல் டான்ஸ் ஆட வேண்டிய அவசியமே இல்லை”  என்றான்.

” அப்பாடா!!!!!!!! ஏய்….உன் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்???? அதை சொல்வதற்கு என்ன?????” மனைவியிடம் பிரணாவ் பாயும்போது அவன் போன் அடித்தது.

” ஹலோ அப்பா…..  ம்ம்ம்  பார்த்துட்டேன்ப்பா… அமௌன்ட் செட்டில் பண்ணியாகிவிட்டது….. நாளைக்கு லோடு ஏற்றி விடுறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்!!!!  சரி அப்பா”

” உதியை போய் பார்த்தாயா பிரணாவ்????? நைட் ரிட்டர்னிற்கு ட்ரெயின் டிக்கெட் போட்டு இருக்கிறாயா???? உங்க அம்மா சொன்னாள் !!!!! ஏன் ஃபிளைட்டில்

வந்து விடலாமே???? “

” அப்பா….. அது!!! வந்து………”

” சொல்லு பிரணாவ்….. என்ன ஆச்சு ????ஏன் ஒரு மாதிரி பேசுகிறாய்???????”

” இங்கே கொடு பிரணாவ்” என்று உதிதா பின் பக்கமாக திரும்பி கையை நீட்ட

“உதி பேச்சு குரல் கேட்கிறது…… உன் பக்கத்தில் இருக்கிறாளா???? அவளிடம் போனை கொடு  பிரணாவ்” என்ற அவன் அப்பா கதிரேசன் கூற மறுக்க வழியில்லாமல் போனை நீட்டி இருந்தான் பிரணாவ்.

“உதிமா எப்படிடா இருக்காய்????? செக் அப் போய்விட்டு வந்தாயா?????  டாக்டர் என்ன சொன்னார்கள் ????? ” மகளிடம் நலம் விசாரணையை ஆரம்பிக்க

“பெரியப்பா ஒரு முக்கியமான விஷயம்!!!!” என்று பேச்சை திசை திருப்பினாள் உதிதா.

” சொல்லுடாமா….. ” கதிரேசன் வினவ

“அவளிடம் இருந்து போனை வாங்குங்கள் மாம்ஸ்….. வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் !!!! “பிரணாவ் யுகனிடம் கத்த

அதை காதில் போட்டுக் கொள்ளாமல் “இங்கு ஒரு பிரச்சனை பெரியப்பா….. அதில் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் பிரணாவ் கல்யாணம் முடிந்துவிட்டது!!!!! அங்கு வீட்டிற்கு தான் இப்போது வந்து கொண்டிருக்கிறோம்….. வந்து டீடெய்லா சொல்றேன் பெரியப்பா” என்று அவசரமாக உதிதா ஒப்புவித்து இருந்தாள்.

 மறுமுனையில் முழு நிசப்தம்!!!!!!

 “பெரியப்பா லைனில் இருக்கீர்களா????” உதிதா பதற்றப்பட

“வாங்க!!!!” என்ற ஒரு வார்த்தையை மட்டும்  மறுமுனை உதிர்த்துவிட்டு  பட்டென்று அணைக்கப்பட்டிருந்தது போன்.

 உதிதாக போன் பேச ஆரம்பித்ததுமே வண்டியை ஓரம் கட்டி இருந்தான் யுகன்.

 பிரணாவ் அவன் தந்தை கதிரேசனின் அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த இறுக்கத்தை கண்டுகொண்டதோடு அவர் மனம் கொள்ளும் உளைச்சலை உணர  கார் கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியேறி தன் கைகளால் தலையை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றான்.

 அவ்வாறு பிரணாவ் இறங்கி செல்லவும்

யுகனும் அவன் பின்னோடு சென்று ” புரிந்து கொள்வார்கள்  மாப்பு….. பேசிக்கலாம்…..  நான் பேசுகிறேன்….. உன் உதிக்கா சொன்னால் கண்டிப்பாக மாமா கேட்டுக்கொள்வார்கள்…. சமாதானப்படுத்தி விடலாம் ” அவன் தோள் தொட்டு ஆதரவாய் கூறினான்….

 “அப்பாவுக்கு என் கல்யாணத்தை பெரிதாக  செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசை மாம்ஸ்!!!!!! உங்க கல்யாணமும் ஒருவித சிக்கலோடு ‘ஹர்ரி பர்ரி’யில் நடந்தது….. பிரணிக்கா கல்யாணத்தை நாங்கள் யாருமே பார்க்கவில்லை…… உங்களுக்கு பப்புமா பிறந்தவுடன் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பெண் கூட பார்க்காமல் யாரிடமும் ஒன்றும் கேட்காமல் ஐந்து மாதத்திற்கு பிறகு வரும் ஒரு முகூர்த்த நாளை குறித்ததோடு திருமண மஹால் ஒன்றிற்கு

அட்வான்ஸும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்….. இப்போது இந்த விஷயத்தை எப்படி எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்வது கஷ்டம்!!!! எல்லா கோபமும் உங்க பொண்டாட்டி  மீது தான் திரும்பும்…. அப்பா ரொம்ப பாசமானவர் மாம்ஸ்….. ஆனால் கோபம் வந்தால் என்ன பேசுவார் என்பது அவருக்கே தெரியாது !!!!! கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்றான் பிரணாவ்  தன் மனதை நெருடியதை.

 “நான் இருக்கிறேன் அல்லவா……. எது நடந்தாலும் பயப்படாமல்  ஃபேஸ் பண்ணி தான் ஆக வேண்டும்…. வா மாப்பு !!!!” அவன் தேளை  தட்டிக்கொடுத்து அழைத்துச் சென்றான் யுகன்.

காரின் அருகில் வந்தவன் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தவளையும் குழந்தையையும் காணாது  ” அவர்கள் எங்கே??????”  என்று உதிதாவிடம் பதற

 “அம்மாவிற்கு போன் பேச முயன்று கொண்டிருந்தேன் யுகி…… அவர்கள் இறங்கியதை நான் கவனிக்க வில்லையே!!!!!” என்று தன் பங்கிற்கு உதறி காரை விட்டு அவளும் வெளியேறவும்

 “நீ உள்ளே உட்காரு அம்மு …….. நானும் மாப்புவும் போய் பார்க்கிறோம்” என்று நிமிடத்தில் தன் கோபத்தை தூக்கி வீசியதோடு மனைவியை அமைதியுற செய்த யுகனும் பிரணாவை கூட்டி கொண்டு  ஆளுக்கொரு திசையில் ஓடினர் .

அந்த அயோக்கியனின் வேலையாக இருக்குமோ யுகன் குழப்பத்துடன் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியபடி தேடி செல்ல

பிரணாவோ ‘இப்போ எங்க ஓடி

போயிருக்கா அந்த ராணி ரங்கம்மா????’ அவனுக்கு ஏற்கனவே இருக்கும் கோபத்தையும் மனைவி மீதே செலுத்தி தேடி சென்றான்.

அரைமணி நேர தேடலுக்கு பிறகு ஒரு காபி ஷாப்பில் இருந்து வெளியில் வந்தவளை கண்டவனுக்கு அவள் மீதிருந்த கோபம் வெறியாய் மாறியது .

 காலையில் யாருமே சாப்பிட வில்லை தான் …… அதற்காக இப்படியா  சொல்லாமல் கொள்ளாமல் ஓடி காபி குடித்தாக வேண்டும்????!!!!!!!

 அவள் அருகில் விரைந்த பிரணாவ் வேறு யோசிக்க தோன்றாது ” ஏய் அறிவிருக்காடி உனக்கு?????? உன்னை காணோம் என்று மாம்ஸும் நானும் இவ்வளவு நேரமா தேடி கொண்டு

இருக்கிறோம் !!!!! உன் பாட்டிற்கு போய் காபி குடித்து விட்டு வருகிறாய்??????”  என்று எகிற

அப்போது யுகன் இவர்களை பார்த்துவிட்டு ஓடி வந்து

“என்னம்மா?????”  என்று கேட்டிருந்தான்.

” அது சார்…. அண்ணா!!! சென்னை போக எப்படியும் ஈவினிங் ஆகி விடும்…. சோட்டுவிற்கு பசிக்குமே என்று பால் வாங்க போனேன்” என்று பால் டப்பாவை நீட்டியவளை கண்டு அதிர்ந்தான் பிரணாவ்.

 இதை எப்படி யோசிக்க மறந்தேன்???!!!! என்று அவன் மனதுள் கூறியதை

யுகன் அவளிடத்தில் வெளிப்படையாய் கூறினான்.

 “சாரி நான் மறந்துட்டேன்……. வேற

எதாவது வேண்டுமாமா??????” என்று கேட்டவனிடம்

” இல்லை அண்ணா….. போகும்போது பார்த்துக்கலாம் ” என்று மறுத்திருந்தாள்.

” சரி வாங்க போகலாம்…..” யுகன் அவசரப்படுத்த

“சாரி குழந்தைக்கு என்று  எனக்கு தெரிய வில்லை….. நான் யோசிக்கவும் இல்லை” என்று மனைவியிடம்  தயங்காது மன்னிப்பு கேட்ட மறுநொடியே

“ஆனாலும் சொல்லி விட்டு போயிருக்கலாம் அல்லவா?????” என்று காய்ந்தான் பிரணாவ் .

 அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்பது போல் யுகனுடன் நடந்தவளை மனதிற்குள் புகைந்தபடியே அவர்களை

பித்தொடர்ந்தான் .

பிரணாவின் மனநிலை புரிந்து இடைஞ்சலின்றி சற்று கண்ணயர

“அம்மு நீ பின்னாடி உட்கார்ந்துகிறாயா?????”  உதிதாவிடம் யுகன் கேட்டதற்கு

“இல்லை வேண்டாம் மாம்ஸ் உதிக்…….. உங்க பொண்டாட்டிக்கு கம்ஃபர்டபிளா இருக்காது ” என்றபடி பின்னிருக்கையில் சாய்ந்து தன் கண்களை மூடி அமர்ந்து கொண்டான் பிரணாவ் .

 அத்திரையிட்ட விழிகளையும் காயம்பட்ட மனதையும் பூதாகரமாய் ஆட்சி செய்திருந்தாள் விது……

விதுல்யா!!!

 சொற்களால் வெளிப்படுத்திக் கொண்டால் தான் காதலா ???????

ஒற்றை காதல் பார்வைக்கு ஈடாகுமா ஆயிரம் காதல் வார்த்தைகள்!!!!!!

 அன்று மருத்துவமனையில் நேரிடையாக காதலை சொல்லாத போதும்……

 விதுல்யாவிடம் தன் மனதை வெளிப்படுத்தியதை எண்ணி எவ்வளவு பூரித்துப் போனான்!!!!!!!!!

 அவள் மட்டும் என்ன ???????

அவனின் மொழிகளில் பிரமித்து  ரசித்து சிரித்து  சிட்டாய் பறந்தாளே!!!!!

அந்நாளின் நினைவுகள் வெறும் ஞாபங்களாகி போன சாபம் ஏனோ?????

  எவ்வளவு முயன்றும் அவள் அழைத்த “அத்தான்” என்ற அழைப்பு பிரணாவை விட்டு நீங்குவதாய் இல்லை….

 அவளது இதழ்கள் மௌன மொழி பேசும் போதும்

கண்கள் ஆயிரம் காதல் மொழி உணர்த்தியதே!!!!!!!

 விதுவிடம் நான் என்ன சொல்லி விளக்கம் கூறுவேன்??????

 அப்படி விளக்கி கூறினாலும் மன்னித்து எளிதில் விலகி கொள்வாளா?????

 அவளே மன்னித்தாலும் தான் செய்த பாவத்திலிருந்து மீண்டு இதோ தன்னை நம்பி வந்தவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்க வழி வகுப்பேனோ??????

  “கூடிய விரைவில் விதுல்யா அவள் மனதை மாற்றி கொண்டு அவள் வழியில் செல்ல வேண்டுமே !!!!” மனதார கடவுளை வேண்டிய பிரணாவ் பலநூறு

குழப்பங்களில் சிக்கி தவித்து

புயல் போல் தாக்கிய அவளது நினைவலைகளிலேயே நீச்சல் அடித்தபடி நடப்புலகை மறந்து தன்னருகில் அமர்ந்திருக்கும் புதிய பந்தங்களை துறந்து கண்ணயர்ந்தான் …….

Advertisement