Advertisement

அத்தியாயம் 12

“மாப்பிள்ளையை கூப்பிடுவோம் . எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம் ” என்று கூறிய ரகுராமிடம்

 “ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வரட்டும் . அவன் வந்து உதயின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம் பெண்ணை நானும் அனுப்புவதாக இல்லை ” என்று உதிதா மீது கொண்டிருந்த அதீத பாசம் கதிரேசனை பேச வைத்தது.

“சண்டை எதுவும் வேண்டாம் அப்பா …. மாமாவிடம் அமைதியாகவே பேசுங்கள்…. உதிக்காவிற்கு ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டிருந்தால்????? ” என்று பிரணாவ் கூறும் போது அவர்கள் வீட்டு போன் அடித்தது.

அதை எடுத்த ரகுராம் எதிர்முனை கூற்றை ஆமோதித்தவிட்டு தெம்பூட்டும் விதமாக “எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் சம்பந்தி….. தைரியமாக இருங்கள்!!!! ” என்றுவிட்டு வைத்தார்.

“உதிதாவின் மாமியார் இவர்கள் சண்டை பற்றி அறிந்ததும் மயங்கிவிட்டாராம் …. ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்களாம்…..

 “உதிதா இப்போது இங்கு வந்தாளானால் நன்றாக இருக்கும்” என்று சம்பந்தி கார்த்திகேயன் பேசினார் “

“இப்படி அழுது கொண்டிருப்பவள் போவாளா?????

அதுவும் யுகன் வராமல் ஓடி வந்த பெண்ணை நாமும் தான் எப்படி அனுப்புவது ????” என்று கதிரேசன்

கூறிகொண்டிருக்கும் போதே தம்பியின் மூலம் விசயத்தை அறிந்து ஹாலிற்கு ஓடி வந்த உதிதா

“நான் ஹாஸ்பிட்டலிற்கு கிளம்புகிறேன் அப்பா!!!!!!! ” என்றாள்……

அத்தை இப்போது எப்படி இருக்கின்றார்களோ ?????

எல்லாம் தன்னால் வந்ததுதானே !!!!!!!

 தனக்கும் யுகனுக்கும் நடந்த பிரச்சனையில் அத்தையை எப்படி மறந்தோம் ?????? அத்தைக்காக தானே அவன் மனதையும் விட்டு கொடுத்து தன்னை மணந்தான் .

 பாவம் யுகி என்ன செய்து கொண்டிருப்பானோ????? என்று தன்னுள் புலம்பியபடி வாசலை அடைந்தவளை

“நில் உதிம்மா யுகன் வராமல் நீ போவது சரி இல்லை!!!!!!!!!! ” என்று தடுத்தார் கதிரேசன் .

“என்ன பெரியப்பா பேசுகிறீர்கள்????

அங்கு என் அத்தைக்கு உடம்பு சரியில்லை ……… நான் எப்படி போகாமல்

இருக்க முடியும்?”

” உன் அத்தையா!!!!!! நீ தானேம்மா இப்போது சொன்னாய் . இனி எனக்கு அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று!!!!!  “

“அப்படி சொன்னவளை நான்கு சாத்து சாத்தியாவது அங்கே கொண்டுபோய் விட்டிருக்க  வேண்டாமா?????????” என்று உதிதா கூறுவதை கேட்டு குடும்பத்தினர் அனைவரது முகத்திலுமே குறுநகை எட்டி பார்த்தது .

அவர்களது சிரிப்பை பார்த்து தான் என்ன வார்த்தைகளை சிந்தினோம் என்று எண்ணி அசடு வழிந்தவளை

 “அப்பா அடிக்க மாட்டார் என்கிற தைரியத்தில் தானே உதிக்கா சொல்கிறாய்????

 நான் தயார் ….. நாலென்ன நாற்பது சாத்தே பேஷா சாத்திரலாம் !!!! ” என்று பிரணாவ் கையை ஒங்க

அதனை பிடித்து கொண்டவள் “என்னைய ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போறியா????” என்று கேட்கவும் குடும்பத்தினர் அனைவருமே மருத்துவமனைக்கு விரைந்தனர் .

ஐ.சி.யூ விற்கு வெளியில்  சோகத்தை வெளி காட்டி விடாது தன் முகத்தை கைகளால் மூடி அமர்ந்திருந்த கணவனின் அருகில் செல்ல துடித்த கால்களை அடக்கி சற்றே திருப்பி  கார்த்திகேயனிடம்  “அத்தைக்கு இப்போது பரவாயில்லையா மாமா ????” என்றாள்.

“ம்ம்… டாக்டர் இப்போது தான் வந்து சொல்லிவிட்டு சென்றார்மா……. இன்னும் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து விடுமாம் “

“என்னால் வந்தது தானே மாமா!!!!!!! ”  குற்றவுணர்வோடு பேசியவளை இடைமறித்து “அப்படியெல்லாம் குழப்பி கொள்ளாதே உதிமா …. எல்லாம் சரியாகி விடும்!!!!! ” என்று தன் மகனையும் ஒரு

பார்வை பார்த்தார் அவள் மாமனார்.

தங்கள் சண்டையை தான் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்து  அவளும் தன் கணவனை திரும்பி பார்த்தபோது அங்கு அவனது விழிகள் உதிதாவை விட்டு அகலாமல்

நிலைத்திருந்தது.

மனைவியின்  குரலை கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் தான்!!!!! அதன் பின் அவன் பார்வையை வேறு திசைக்கு திருப்பவே மறந்திருந்தான்…..

உதி வந்துவிட்டாள்!!!!

 அவனையே மயிலிறகாக்கி அந்த நிலவிடம்  சென்றுவிட்டு மீண்டது போல் ஒரு பிரம்மை……….

“மாப்பிள்ளை …….” என்ற அரவம் கேட்டு தன் கண்களை கஷ்டப்பட்டே தன்னவளிடமிருந்து பிரித்தவன் கதிரேசன் அங்கு நிற்பதை கண்டு அவனும் எழுந்தான் .

“அம்மாவிற்கு சரியாகி விடும் …… அவர்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் …. என் மகளையும் தான்….. அவள் சிறிய பெண்…… ஏதாவது தவறாக பேசியிருந்தால்

மன்னித்து விடுங்கள் மாப்பிள்ளை!!!!! ” என்றவரின் கரம் பற்றி

“என்ன மாமா பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறீர்கள் !!!!!

 ஏதோ ஒரு தடவை தவறு நடந்து விட்டது ……

மன்னிக்க மாட்டீர்களா????? இனி பாருங்கள் என் பொண்டாட்டியை உங்கள் வீட்டிற்கே வராதபடி பார்த்து கொள்கிறேன்….  ” என்று குறும்போடு பேசியவனை பார்த்து சிரித்தார் .

“எங்கள் வீட்டு சந்தோஷத்தை முழுதாக பறித்து கொண்டால் எப்படி மாப்பிள்ளை ??????” என்று அவர் கேட்ட போது யுகனும் அதை மறுக்காமல் உடனே

ஆமோதித்திருந்தான்.

“மேடம் கண் விழித்துவிட்டார்கள்…. இப்போது உள்ளே போகலாம்….. ” என்ற நர்ஸின் மொழி கேட்டு

 “நீங்கள் போய்பாருங்கள் மாப்பிள்ளை…. ” என்று  கூறிவிட்டு நகர்ந்தார் கதிரேசன் .

யுகன் உள்ளே செல்வதற்கு முன்பே மாமியாரிடம் விரைந்திருந்த உதிதா அவர் கரத்தை எடுத்து தன்னோடு வைத்து கொண்டு பேசலானாள் .

“நான் உங்கள் மீது கோபமாக இருக்கிறேன் அத்தை ….. இப்படியா சாதாரண விஷயத்தை பெரிதாக குழப்பி கொண்டு உடம்பை வருத்தி கொள்வீர்கள் ?” என்றாள் வருத்தமாகவே .

“ஏதோ சண்டை என்று தெரிகிறது …… அதை பேசி சரி செய்ய கூடாதா????? இப்படியா டைவர்ஸ் பற்றி பேசிவிட்டு உன் வீட்டிற்கு சென்று விடுவாய்!!!!!!!! நான்

எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா உதிம்மா?????”

“நீங்கள் அன்பானவர் பண்பானவர்   என்றெல்லாம்  தெரியும் அத்தை….   அதற்காக மாமாவிடம் சண்டை போட்டு கொண்டு உங்கள் அம்மா வீட்டிற்கு கூட செல்லாத ‘ரொம்ப நல்லவர்’ என்று தெரியாமல் போய்விட்டதே!!!!!!!!!! ” என்றபடி சிரிப்பை அடக்க

“நீ வேற உதிம்மா ……. எங்களுக்கு திருமணமான புதிதில் அவள் அம்மா வீடு தான் அவளுக்கு தஞ்சம் ” என்று ஆரம்பித்தார்  கார்த்திகேயன்.

“ஸ்கூலில் அவளை எதற்காகவோ திட்டியதற்கெல்லாம் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாக வறுத்தெடுத்து கொண்டிருக்கிறாள் …… இதில் நீங்களும் கூட்டா??????” என்றபோது  கதவருகில் நின்று கொண்டிருந்த யுகனிற்குமே சிரிப்பு வந்து விட்டது .

    அழையாவிருந்தாளியாக வந்த சிரிப்பை ‘நான் கோபமாக இருக்கிறேன்…. நீ போ!!!!’ என்று விரட்டி தன் அத்தையிடம் மேலும் பேசினாள் உதிதா.

” இனியொரு தரம் எதற்காகவும் இப்படி ஓவர் எமோஷன் ஆகி விட மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடுங்கள் “

“கண்டிப்பாக ….. ஆனால் அதற்கு முன் நீ எனக்கொரு ப்ராமிஸ் செய்ய வேண்டும் .. கூடிய சீக்கிரம் எங்களுக்கு குட் நியூஸ் சொல்ல வேண்டும்!!!!!”

என்ன நியூஸ்!!!!! என்று ஒரு கணம் யோசித்தவள் பின் அர்த்தம் புரிந்தவளாய் “உங்கள் பேரன் பேத்தியோடு விளையாடுவதற்காகவாது முதலில் உங்கள் உடம்பை ஃபர்ஸ்ட் ஃபிட்டாக வைத்து கொள்ள வேண்டும் அத்தை!!!!!! ” என்று கண் சிமிட்டியவளின் அருகில் வந்த யுகன்  

“நல்லா கேட்டுக்கோங்கமா  உங்க மருமகள் சொல்வதை !!!!!! ” என்றான் .

இவன் எப்போது வந்தான்?????

 எந்த தைரியத்தில் இப்படி பேசினோம்!!!!!!!! என்று தன் உதட்டை கடித்து கொண்டவள் ரூமை விட்டு வெளியேற சென்ற போது

“உதிம்மா கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போம்மா ” என்று அழைத்தார் தேவகி.

இரவு தான் தங்கி கொள்வதாகவும் மகன் மருமகளை புறப்படும்படியும்  கூறிய கார்த்திகேயனிடம் கண்டிப்பாக மறுத்திருந்தாள் உதிதா .

   “வீட்டிற்கு அழைத்து வரும்வரை நான் அத்தையிடம் தான் இருப்பேன்” என்றவள் அந்த பொறுப்பை செய்துவிட்டு அடுத்த நாள் இரவு தன் அறைக்கு சென்ற போது தடுத்திருந்தான் அவள் கணவன்.

” நில்லு!!! உன்னோடு சற்று பேச வேண்டும்…. “

   “வீறாப்பாய் சென்றவள் ஏன் திரும்ப வந்தாய்???” என்று கேட்பானோ!!!!

 “நீங்கள் கொடுத்த பனிஷ்மெண்ட் டைம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றதல்லவா ……. அது முடிந்தவுடன் நான் கிளம்பி விடுவேன்….. ” என்று கூறி கொண்டிருந்தவளின் அருகில் சென்றான் .

என்ன சொல்ல போகிறான்??????

ஏன் இப்படி நெருங்குகிறான்!!!!!

 அவள் கால்கள் இரண்டு அடி பின்னால் நகர அதை லட்சியம் செய்யாமல் முன்னேறி

கொண்டிருந்தவனிடம்

“என்ன??????”

என்று கேட்ட போது தான் தெரிந்தது தான் சுவற்றில் சாய்ந்து கொண்டு நிற்பது .

“இனியும் தப்பிக்க வழியில்லை!!!!!!! ”  விஷமமாக சிரித்தவன்

“என் அம்மாவிற்கு வாக்கு கொடுத்து விட்டு இரண்டு மாதங்களில் எங்கே ஓட பார்க்கிறாய் ? என்றான்.

என்னடா நடக்குது இங்க!!!!!

ஏன் இப்படியெல்லாம் பேசுகிறான்?????? பிரமித்து தன் கண்களை அகலப்படுத்தி அவள் பேச யத்தனித்தபோது அவளது திறந்த இதழ்களை இனியும் தாங்காது!!!!!!!!! என்பது போன்று தன் அதரங்களை கொண்டு மூடியிருந்தான் அவளின் கொடுங்கோல் ஆட்சியாளன்.

எவ்வளவு நேரம் சிறை பிடித்தானோ!!!!!

 மனைவியின் மூச்சு காற்றிற்காக அவன் சற்று இளக கண்களை திறக்காத வண்ணம் மயக்க நிலையில் சுவற்றோடு சாய்ந்தபடி நின்றாள் .

“என்னை உனக்கு பிடித்திருக்கின்றது தானே???????” அவள் காதுகளில் தன் உதட்டை பதித்து யுகன் கேட்ட போது அவளையுமறியாமல் சம்மதத்திற்கு அறிகுறியாக அவள் தலை ஆடியது .

ஆனால் அதை ஏற்க மறுத்தவனாய் “என்னை பார்த்து சொல்லு …… இங்க கொஞ்சம்  முழிச்சு பாரு அம்மு!!!!! ” என்று அவள் தோள்களை பற்றி மென்மையாக உலுக்கினான்.

அம்மு!!!!!!!!!!

அவனின் அம்மு அவளை இவ்வுலகிற்கு மீட்டெடுக்க கணவனின் கைகளை தட்டி விட்டு “என்னை அப்படி கூப்பிடாதீர்கள்!!!!!!!!!!!” என்றாள் கோபமாக .

“ஏன்  உனக்கு பிடிக்கவில்லையா????”

ஆசையாக கேட்டவனிடத்தில்

“அடுத்தவருக்கு சொந்தமானது எதுவும் எனக்கு வேண்டாம்!!!!!!” என்று வேகமாக சொல்லிவிட்டு அவள் அறைக்கு  சென்றாள்.

 தன்னை தள்ளிவிட்டு ஓடியவளை  ஒரே எட்டில் பற்றி இழுத்து “புரியும்படி

சொல்லு…….. அடுத்தவருக்கு சொந்தமானது என்றால்!!!!!! யார்??????” என்றான்.

“நீங்கள்!!!!!

உங்களை தான் சொல்லுகிறேன்…..

எனக்கு நீங்கள் வேண்டாம்!!!!!!!!!! “

“நானா??????? என்ன உளறல் இது?????

நான் உன் கணவன்!!!!

 உனக்கு மட்டுமே சொந்தமானவன்”

இல்லையென்று தலையாட்டியவளின் கன்னங்களை ஏந்தி

“இதென்ன வீண் பிடிவாதம் !!! உன்னை பார்த்த நொடியிலிருந்து உன் மேல் பைத்தியமாக திரியும் என்னை பார்த்து தான்  சொல்கிறாயா????? என் மனம் பூராவும்……. ” என்று சொல்லி கொண்டு போனவனிடம்

“பொய்!!!!!!!!!!!!!!!!!!” என்று தன் காதுகளை பொத்தி கொண்டாள்.

மனைவியின்  நடவடிக்கை விசித்திரமாக பட “இங்கே உட்காரு…….. ” என்று சோபாவில் அமர சொன்னவனை முறைத்தாள்.

“உங்கள் அம்மாவிற்கு பேரகுழந்தைகள் வேண்டும் என்றால் அதை தெளிவாக சொல்லலாமே!!!!!

 அதைவிட்டுவிட்டு ஏன் தேவையில்லாமல் எதைஎதையோ இல்லாது பொல்லாததையெல்லாம் பேசுகிறீர்கள் ???????”

 அவளை ஓங்கி ஓர் அறை விட ஓங்கிய கரத்தை எப்படி தான் அடக்கி கொண்டானோ!!!!

எவ்வளவு கேவலமாக தன்னை நினைத்துவிட்டாள்!!!!! 

Advertisement