Advertisement

     

அத்தியாயம் 11

            மனம் ஒன்றாமல் மீட்டிங்கை முடித்துவிட்டு எழுந்த யுகனின்  விழிகள்  எதிர்நோக்கி வந்தவனை கண்டு அதிர்ந்தது.

    இவன் மேல் எந்த தப்பும் இல்லாதிருக்கும் போதும் மனம் சாதாரண ஹாய் சொல்வதற்கு கூட சட்டை செய்ய எதிர் வந்தவனோ “ஹலோ சார் …….. ஐ அம் நிதிஷ்!!

இப்போது தான் ட்ரைனிங் முடித்துவிட்டு போஸ்டிங்கில் ஜாயின் பண்ணுகிறேன் ….. க்லாட் டு மீட் யூ!!!!! ” என்று யுகன் முன்னே அவன்  கையை நீட்டியிருந்தான் .

     மறுக்க வழியின்றி அவனிடம் கை குலுக்கிய போதும் “ஐ ஹாவ் டு மூவ் நௌ…….. டோன்ட் மிஸ்டேக் ” என்று அவசரமாக கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் யுகன் .

“யாருடா நித்தி??? தெரிந்தவரா!!!!!” என்று நிதிஷின் அருகில் வந்த நண்பன் பிரேமிடம் பதில் கூறாமல் மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தியிருந்தான் நிதிஷ் யுகனை பார்வையில் பின்தொடர்ந்தவாறு.

“உன்னிடம் தான்டா மச்சான் கேட்கிறேன்????

 தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டாயே!!!!!! இன்று நீயே போய் பேசுகிறாய்…..

அதுவும் அப்படி அலட்சியமா போறான்!!!! விட்டால் பின்னாடியே போய்  பேசுவாய் போல!!!!!! அப்படி யாருடா இந்த விஐபி??????”

நண்பனிடத்தில் யுகன் காட்டிய வெளிப்படையான புறக்கணிப்பு பிரேமிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது போலும்!!!!!

“நான் இன்று இந்நிலையில் இருப்பதற்கு

காரணமானவளின் கணவர்!!!!!!!  எப்படி பேசாமல் இருக்க முடியும்???????” என்று புருவம் உயர்த்தியவனை பற்றி

“என்னடா சொல்ற?????

உன் காதலுக்காகவும்!! அவள் ஆசை பட்டால் என்ற ஒரே காரணித்திற்காகவும் தானேடா கலெக்டர் ஆவதாக கூறினாய் …….. அப்படியென்றால் ???????” என்று மென்று விழுங்கியவனிடம் ஒரு வெற்று சிரிப்பை உதிர்த்தான் நிதிஷ் .

“உன் மனசில் என்ன பெரிய தியாகி என்ற நினைப்பா?????? உன்னை நம்ப வைத்து ஒருத்தி ஏமாற்றி இருக்கிறாள்…… அவளுக்காக  பாராமுகம் கொண்டு போகும் அவள் கணவனிடம் சென்று பேசினாயாக்கும்!!!!!”

“உதி பற்றி தப்பாக பேசாதே பிரேம் ….. நான் யார் என்று கூட யுகனிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!!!! “

“எப்படி தெரிந்திருக்கும் ?????? உன்னை பற்றி அவரிடம் சொன்னால் அவள் பெயர் தானே கெட்டு போகும்!!!!!! “

மௌனமாக சிரித்தவனிடம் “இப்படி சிரித்து சிரித்து வெறுப்பு ஏத்தாமல் வாயை திறந்து பேசி தொலைடா ” என்றான் பிரேம் பொறுமை இழந்தவனாய் .

ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு தன் காதல் கதையை நண்பனுக்கு விளக்க ஆரம்பித்தான் நிதிஷ்.

“நான் தான்டா உதிதாவை  காதலித்தேன்…… அதுவும் பள்ளி பருவத்திலேயே!!!!!! யெஸ் இட்ஸ் ஒன் ஸைட் லவ்!!!

 அவளை பொறுத்தவரை நான் கூட பயிலும் ஒரு சக மாணவன் …… அச்சமயத்தில் என் காதலை

சொல்ல பயம் …..

  அதுமட்டுமில்லாமல் அப்போதே

தெளிவான நேர்காணலோடு அவள் அணுகுவதை எல்லோரும் பாராட்டுவார்கள் ….. ஒரு விசயத்தை ஆராய்ந்து முடிவெடுத்தாளானால் எக்காரணம் கொண்டும் அதிலிருந்து பின்வாங்க மாட்டாள்  …..

 அப்படியிருக்க என் காதலை நான் சொல்ல போக அதை அவள் மறுத்துவிட்டாள் எனில்????

  திரும்ப அதை அவளிடம் கொண்டு போவது அரிதான விஷயம் அல்ல ……

இதுவே என் காதலை அவளிடம் நான் மறைத்ததற்கான முக்கிய காரணம்!!!!

    ஒரு நாள் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் வருங்காலத்தை பற்றி பேசி கொண்டிருக்கும் போது  ‘ஒரு கலெக்டருக்கு மனைவியாவது தான் என் குறிக்கோள்’ என்றாள்….

    விளையாட்டாக கூறியதுதான்!!!! இருந்தும் அவள் ஆசைப்பட்டது போல்

கலெக்டர் ஆகி அவள் முன்னே நிற்பேன் என்ற வெறியுடன் ஒரு சபதத்தை எடுத்து கொண்டு அதில் வெற்றியும் கண்டு அவளிடம் சென்றேன் .

    அவ்வபோது அவளை பற்றிய தகவலையும் சேகரிக்க தவற வில்லை…….. நாங்கள் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாக பணிபுரிவதால் என் காதலை முளைவிட்ட இடத்திலேயே விருட்சமாக்கி விடலாம்  என்ற

கனவோடு பள்ளிக்கு சென்றேன் .

    அன்றைய நிகழ்வு எந்நாளும் மறக்க முடியாதவை !!!!!

   என்னை கண்டதும் அவளே சந்தோசத்தில்  “ஹாய் நிதிஷ் ….. எப்படி இருக்கிறாய்????? பார்த்து ரொம்ப நாள்

ஆகிவிட்டதல்லவா????? லைஃப்லாம் எப்படி போகுது???? ” என்றாள் சகஜமாய்.

   நான் பதிலுரைக்குமுன்னே “ஐ.ஏ.எஸ் படிப்பதாக கேள்வி பட்டேன் …… மை

கங்க்ராட்ஸ்” என்று வாழ்த்தவும் செய்தாள்.

“நான் படித்ததே உனக்காகத்தானே உதி!!!!!” என்றதும்  மலர்ந்திருந்த அவளது தாமரை முகம் குழப்ப ரேகைகளை சுமந்து என்ன???? என்பது போல் வினவியது …..

“நீ தானே சொன்னாய் ….. கலெக்டர் மாப்பிள்ளையை தான் கட்டி கொள்வேன் என்று !!!!! நீ கேட்டதை செய்துவிட்டு உன்னிடம் வந்திருக்கின்றேன் ….. இப்போது  என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா??????”

“என்ன பேசுகிறாய் நிதிஷ்????

 நான் எப்போது உன்னிடம் கேட்டேன்?????? ” என்று கலக்கத்துடன் கேட்டவளிடம்

 “நான் உன்னை விரும்புகிறேன் உதி. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே….. அப்போது அதை உன்னிடம் சொல்ல தைரியமும் தகுதியும் இல்லை …. ஆனால்

இன்று நீ என்னை ஏற்றுகொள்வாய் என்ற முழு நம்பிக்கையுடன் வந்திருக்கின்றேன்….. நோ மட்டும் சொல்லிராத உதி” என்றவனிடம் சொல்வதறியாது சிலையென நின்றாள் உதிதா.

   பத்து நிமிடங்கள் எதுவும் பேசாமல் சென்றிருக்க அதை தாங்கி கொள்ள முடியாமல் “உதி…” என்று அவள் கரத்தை பிடித்தேன் .

பதற்றத்தில் மற்றொரு கையிலிருந்த பேப்பர்கள் நழுவி கீழே விழ அதை எடுக்க குனிந்தவள் திட்டவட்டமான முடிவுடன் அவசரமாக தன் பேப்பர்களை எடுத்து கொண்டு

 “ஐ அம் சாரி நிதிஷ் ……. என்னையையும் அறியாமல் ஏதாவது தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு ….. ஐ அம் இன் லவ் வித் அபிஷேக் …… 

என் அக்கா திருமணம் முடிந்ததும் இதை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்று பிறகு

வெளியில் சொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தோம் ……. பட் உன்னிடம் மறுக்க வழியின்றி சொல்லிவிட்டேன் …… அகெய்ன் சாரி டு ஸே திஸ் ….

 உனக்குனு ஒரு பொண்ணு கண்டிப்பா பொறந்துருப்பா…. அண்ட் ஷி வில் சேஸ் யூ ஃபார் ஷுயர்னு தோனுது  !!!! சரி  நான் கிளம்புகிறேன் …. பை!!!! ” என்றுவிட்டு சென்றவளை வெறித்தேன் .

   அவள் வார்த்தைகள் கொடுத்த வலியில் உறைபனியாய் நின்ற போதும் சில நிமிடங்களில்   இவ்வுலகத்திற்கு மீண்டு ச்சே அவளது காதலுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லையே!!! தன்னை பற்றி  என்ன நினைப்பாள்!!! என்ற எண்ணம் எழ அவளை தேடி விரைந்தேன் .

அப்போது உதிதாவின் தம்பி பிரணாவ் அவளிடம் கடிந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“ஹே ஒடிதா!!!!!!! என்ன காரியம் செய்து வைத்திருக்கின்றாய்?????? நிதிஷிடம் நீ

பேசியதை நான் கேட்டேன் ….. யாருடி அந்த அபிஷேக் ?????” என்ற பிரணாவின்  காதை திருகி

“இது ஸ்கூல் ….. டி போட்டு என் மானத்தை வாங்காதே!!!!!” என்றாள் உதிதா கோபமாய்.

“ரொம்ப முக்கியம் ……  நம் குடும்பத்தின் மானத்தை வாங்க நீ எப்படி முடிவு எடுத்தாய்????? எவ்வளவு தைரியம்!!!!!!

 ப்ரணிக்கா திருமணம் முடிந்தவுடன் உன் காதலனை நம் வீட்டிற்கு கூட்டி வந்து சம்மதம் வாங்குவாயாக்கும் !!!!!!! ” என்று ஆக்ரோஷமாய் கேட்டவனை பார்த்து கலகலவென நகைக்கலானாள் .

பின் அவளது சிரிப்பில் மேலும் ஆத்திரமடைந்தவனின் தோளை பற்றி “கூல் கூல் மை ஸ்வீட் ஹார்ட்…… காதலன் என்று ஒருவன் இருந்தால் தானே வீட்டிற்கு கூட்டி வர முடியும்!!!!! ” என்று கண் சிமிட்டினாள்.

“அப்பறம் ஏன் உதிக்கா அப்படி சொன்னாய் ?????”

“நீ தான் கேட்டாயல்லவா!!!!!!!

 அன்று விளையாட்டிற்கு சொன்னதை அவ்வளவு சீரியசாக எடுத்து கொண்டு என் முன்னே வந்து நிற்பவனிடம் ‘சாரி! என்னால் உன்னை லவ் பண்ண முடியாது ….. என் குடும்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று கூற சொல்கிறாயா?????? “

“அதற்காக !!!!!!

 இப்போது நீ கூறியிருக்கும் பொய்யால் உனக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டாகலாம் தெரியுமா????? பிற்காலத்தில் உன்னை உன் கணவருடன் பார்க்கும் போது எவ்வளவு கேவலமாக உன்னை நினைக்கலாம் என்று உனக்கு புரிகிறதா இல்லையா??????”

“நிதிஷ் அப்படி நினைக்க மாட்டான்….. அப்படியே ஒரு வேளை நினைத்தாலும் நான் ஒரு துளி கூட அதற்காக வருத்த பட

மாட்டேன் …… இப்போதிற்கு இந்த காதல் பேச்சு நின்றால் போதும் என்று இருக்கிறது…… பெரியப்பாவிற்கு தெரிந்தால் … நினைத்துகூட பார்க்க முடியவில்லை!!! எப்படி தான் லவ் வருமோ!!!!!! எனக்குலாம் கல்யாணத்திற்கு பிறகு லவ் வருவதே டவுட் தான்!!!! ” கண்ணடித்தவளை

“எனக்கென்னமோ பயமா இருக்கு உதிக்கா!!!! இந்த பொய் எங்கே கொண்டு போய் விடுமோனு!!! ” என்றான் தனயன் வருத்தமாய்……

“விட்றா விட்றா தம்பிபையா…. நாம பார்க்காத பிரச்சினையா!!!!!!!!!! “

என்றவளுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை இந்த பொய் தான் அவள் வாழ்வையே கால்பந்தாட போகிறது என்பது.

உதிதாவும் பிரணாவும் பேசியதை  காண விழைந்ததால்

“இது தான் உன் பிரச்சனை என்று

என்னிடமே கூறியிருக்கலாமே உதி?????” என்று நினைத்த வண்ணம் அப்பாவிடம் சென்று உதிதாவை ‘காதல்’ என்று அவள் வீட்டில்  கூறாமல் இயல்பாக பெண் கேட்டு வருமாறு சொன்னேன்.

ஆரம்பத்திலிருந்தே எதையும் அப்பாவிடம் ஷேர் செய்து ப்ரெண்ட்லியாக பழகியிருந்தமையால் அவரும் “கங்க்ராட்ஸ் மை பாய்!!! ” என்று வாழ்த்திவிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டார்.

இப்போது அவள் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் உதிக்கு திருமணம் பேச இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்றும் விசாரித்ததில் தெரிய வந்தது .

அவள் அக்கா திருமணம் முடிந்ததும் அடுத்த நாளே சென்று உதிதாவை பெண் கேட்டு நம் வீட்டு மருமகள் ஆக்கி விடலாம் என்று வாக்கும் அளித்திருந்தார் என் அப்பா.

ஆனால் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் போலும்!!!!!!

   அவள் அக்கா திருமணத்தில் நடந்த தகராறில் உதிதா யுகனை திருமணம் செய்து கொள்ளும்படி ஆகிவிட்டது.

 தெரிந்ததும் துடித்து போனது உண்மை தான் !!!!!!!

  இதில் யார் மேல் குற்றத்தை சுமத்த முடியும் ????? காலம் தானே எல்லாவற்றிற்கும் ஏற்ற மருந்து . சரியாகிவிடும்!!!!!! ” என்று கம்மியான குரலில் முடித்தவனை கட்டி கொண்டான் பிரேம் .

 நிதிஷிடம் கை குலுக்கி விட்டு வேகமாக காரை எடுக்க வந்த யுகனிற்கு கார் சாவியை கான்பெரென்ஸ் ஹால் டேபிளிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவு கோரவும்

 அதை திருப்பி எடுக்க வரும்போது நிதிஷ்

பிரேமிடம் சொன்னது அனைத்தையும் யுகனிற்கு கேட்க  நேர்ந்தது……

     என்ன மடத்தனம் செய்திருக்கிறோம்??????

 ஆனாலும் நேற்று இரவு அவளாக தானே பிரிவை பற்றி பேசிவிட்டு சென்றாள்……. அது ஏன்???????

     அது என்னவாக இருந்தாலும் சரி அவளை தூக்கி வந்து தன் கை வளைவிற்குள் வைத்து தான் கேட்க வேண்டும் …… இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க முடியாது.

என்ன செய்து கொண்டிருக்கிறாய் அம்மு ????? உன்னை இப்போதே பார்த்தாக வேண்டுமே !!!!

உன்னிடம் இப்பொழுது பேசியாவது தீர வேண்டுமே என்று தன் மொபைலை எடுக்கும் போது அதுவும் அவனை தான் அழைத்து கொண்டிருந்தது.

 எதற்காக அப்பா இப்போது

அழைக்கிறார்????? சிந்தித்த வண்ணம் போனை காதிற்கு கொடுத்தவன் “அம்மா……………. ” பதறியபடி புயலென சாவியை எடுத்து கொண்டு ஹாஸ்பிட்டலை நோக்கி காரை செலுத்தினான் .

    வழியில் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தவன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியதும் பொறுக்க மாட்டாதவனாய் “என்ன உதிக்கா இதெல்லாம்?????

என்னன்னவோ பேசுகிறீர்கள்?????

 அப்படி என்னதான்  நடந்தது என்று சொல்லு ப்ளீஸ் ???????” என்றான் பிரணாவ்.

   வாசலிலேயே அக்காவும் தம்பியும் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை நெருங்கிய கதிரேசன் மாப்பிள்ளையையும் காணாது மகளின் கலங்கிய முகத்தையும் கண்டு பதறி போனார்.

“என்னடா ஆச்சு ? மாப்பிள்ளை வரவில்லையா உதிம்மா ?”

“அப்பா நீங்களே கேளுங்கள் !!!! இனி அங்கு போகவே மாட்டாளாம் . மாமாவும் டைவர்ஸ் பத்திரத்தை அனுப்பி வைக்கிறேன் என்கிறார்!!!”

“என்னம்மா பிரணாவ் என்ன சொல்லுகிறான்????????”

“உண்மை தான் பெரியப்பா….. இனி நான் இங்கு தான் இருப்பேன் …   அவரும் என்னை தேடி வரபோவதில்லை …..

அப்படி வந்தாலும் என்னை அனுப்பி விடாதீர்கள் பெரியப்பா…. என்னால் இனி அவருடன் வாழ முடியாது!!!!!!”

“புரியாமல் பேசாதே உதிமா…… என்ன பிரச்சனையாக இருந்தாலும் சற்று நேரம் உட்கார்ந்து பேசினால் தீர்ந்து விட போகிறது”

“தீரும் பிரச்சனையல்ல பெரியப்பா இது!!!!!

“அப்படி என்னம்மா  நிகழ்ந்து விட்டது ?????”

மௌனம் சாதித்தவளிடம் “ஏன்டி இப்படி பேசுகிறாய்?” என்று கலங்கினார் யசோதா .

“நீ ஏதாவது செய்தாயா உதி?????

 உன் மேல் ஏதாவது தப்பிருக்கிறதா????” என்ற ரகுராமின் கேள்விக்கு தலையை மட்டும் இல்லை என்பது போல் ஆட்டி விட்டு தன் விழிநீரை மறைக்க வீட்டினுள் ஓடி போனாள் மகள்.

“மாப்பிள்ளையை கூப்பிடுவோம் …. எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம்!!!! ” என்று ரகுராம் கூற

 “ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வர வேண்டும்  ….. அவன் வந்து உதியின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம் பெண்ணை நானும் அனுப்புவதாக

இல்லை!!!!!!! ” என்று உதிதா மீது கொண்டிருந்த அதீத பாசம்  கதிரேசனை யுகனை எதிர்த்து பேச வைத்தது.

Advertisement