Advertisement

அத்தியாயம் 10

அதிவேகமாக வீட்டினுள் நுழைந்தவள் யாரையும் பொருட்படுத்தாது மாடி படிகளில் தாவி தன் அறைக்குள் சென்று கட்டிலுக்கு அடியில் பத்திர படுத்திய டைரியை கையில் எடுக்கலானாள் உதிதா.

அதை திறந்து பார்த்தவளுக்கு அதில் அவனது கணக்கு வழக்கு பற்றிய குறிப்பேடுகள் இருப்பதை காணவும் ‘அடுத்தவர்களை சற்றும் மதிக்க தெரியாத கொடுங்கோல்  ஆட்சியாளனின் மனமாவது

யாரையாவது விரும்பியிருப்பதாவது!!!’ என்று கனம் நீங்க பெற்று லேசான மனதுடன் எண்ணினாள்.

ஆனால் அதே சமயம் அந்த டைரியிலிருந்து ஒரு காகிதம்  கீழே

விழுந்தது….

 அந்த காகிதத்தையே சற்று நேரம் பார்த்தவள் தன் நடுங்கும் விரல்களால் அதனை எடுத்து படித்ததும் அப்படியே சிலையென உறைந்து போனாள்.

“அம்மு!!!!!!

            என்றென்றும் என்னவளான என் அம்மு!!!

         

        முதன்முதலில் உன்னை பார்த்ததும் உன் கண்களிடத்தில் என்னையுமறியாமல் என் மனதை கொடுத்தேன் …… இரண்டாம் முறை நீ செய்த குறும்பு தனத்தில் விரும்பியே என் மனதை உன்னிடத்தில் சேர்த்தேன்.

      உனக்கே தெரியாமல் நீ திருடி சென்ற என் மனதை உன்னிடத்திலேயே பத்திரமாய் வைத்துகொள் என்று உன்னிடம் கூற வரும்போது தான் நீ சொன்னாய்  உன் மனதை வேறொருவனுக்கு கொடுத்துவிட்டதை !!!!!!

   எப்படி உணர்ந்தேன் தெரியுமா அம்மு????? இதற்காக தான் இந்த பிறவி எடுத்தோமா என்று அனைத்தும் வெறுத்து போனது…..

   

    நான் அடைந்த அத்தனை கொடூரமான வலியையும் வார்த்தைகளால் குறுக்கிவிட முடியாது…….

    உன்னை கண்ட நொடியிலேயே

என்னுள் விதை போல் முளைத்த

காதல்❤

ஆண்டாண்டு காலமாய் வேரூன்றி

நிற்கும் விருட்சம் போல்

 ஏழேழு ஜென்மமும் உன்

கரம் பிடித்து

மடி சாய்த்து

தோள் அணைத்து

முன் நெற்றி முத்தமிட்டு

சரசமாடி

பிள்ளைகள் பல பெற்று

சண்டைகள் சில இட்டு

கண்கள் பேசும் சமாதானங்கள் ஏற்று

ஆசைஆசையாய் வாழ்ந்துகழித்த

பரமசுக வித்தையை விந்தையோடு

வாரி இறைத்ததுமில்லாமல்

என்னை உயிரோடு கொன்று

குவித்து போட்டு

தற்போது செய்வதறியாது

 வேடிக்கை பார்த்து நிற்கிறதே!!!!!!!!!!!

     நிதர்சனம் புரிந்தும் உன்னிடம் சென்றுவிட்ட என் மனதை திரும்பி பெறும் எண்ணம் மட்டும் தோன்றாமல் நடைபிணமாய் திரிகிறேன் அம்மு!!!!

      என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரியாத இவ்வேளையில்

அம்மா என்னை பெண் பார்க்க அதாவது உன்னை பார்க்க உன் வீட்டிற்கே அழைத்து வந்தார்கள் .

      

     அன்று உன் மனதை வெளிகாட்டிய போது அடைந்த வேதனையை விட  பல நூறு மடங்கு அதிகமாக இன்று  பிடித்தமின்றி என் கண்முன்னே மணப்பெண்ணாய்  நின்றதை பார்த்த

போது அனுபவித்து கொண்டிருக்கிறேன் .

    இன்னொருவனை மனதில் சுமந்து கொண்டிருக்கும் உன்னை என் நிழல் கூட நெருங்காது அம்மு……

     நீ விரும்பிய வாழ்வை வாழ்வதற்கு என்ன இன்னல்களை வேண்டுமானாலும் சந்திக்க நான் காத்துகொண்டிருக்கிறேன் .

உன் மனதிற்கு புறம்பாய் எதுவும் நடந்திராது என்று வாக்களிக்கின்றேன் …….

       ஒரே ஒரு வேண்டுகோள்!!!!!

உன்னிடம் நிரந்திரமாக அனுப்பிய என் மனதையும் உயிரையும் பத்திரமாக பார்த்துகொள் அம்மு …….

                     இப்படிக்கு,

                 உன்னவனாக முடியாத துர்தஷ்டசாலி!!!!!!!!!

                

          படித்து முடித்திருந்தவளின் விழிகளிலிருந்து நீர் வற்றாது சாரை சாரையாக பெருகிய வண்ணம் இருந்தது.

   கரங்களால் தன் கன்னங்களின் ஈரத்தை உணர்ந்தவளுக்கு அழுகைக்கான காரணத்தை யூகித்ததும் துடிதுடித்து போனாள் .

 தன்னை பிடிக்காத ஒருவன் மீது கூட காதல் மலருமா???????

 இது எப்போது தன்னுள் வந்தது????

 தன் குடும்பத்திற்காக பேசியதற்காகவா?????

சொல்ல போனால் முற்றிலும் ப்ரணிக்காவிற்காக இதை செய்திருக்கிறான்……

     இல்லை அன்று தஞ்சையில் அவன் கட்டிபிடித்ததால் வந்ததா??????

  இல்லை அதற்கும் முன் விபத்து நடந்த இடத்தில் அவனை காணாது தேடும் போதே வந்துவிட்டதா???????

 இல்லை ஆரம்பத்தில் அவன்

வம்பிழுக்கும்போதே வந்துவிட்டதா ???????

இல்லை படங்களில் சொல்வது போல மஞ்சள் கயிறு மேஜிக்கால் வந்ததா????????

 இல்லை!!!! இல்லை!!!!! இல்லை!!!!! என்று பைத்தியம் பிடித்தவள் போல் தலையை உலுக்கினாள் உதிதா.

ஏன் என்னுள் நீ வந்தாய் என்று காதலின் சட்டையை பிடித்து உலுக்க வேண்டும் என்றொரு வெறி உதிதாவிற்கு எழுந்தது.

‘காதல்’ என்ற சொல்லின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லாதிருந்தவளுக்கு இன்று அது நல்கும் வேதனையை ஏற்க முடியாமல் தவித்து போனாள்…..

அதுவும் ‘நீ வேண்டாம் போய் விடு’ என்பவனிடம் ஏன் இந்த காதல் வந்தது ??????

     முதன் முறையாக தன் மீதே ஆத்திரம்

பெருக்கெடுக்க தன் கைகளால் முகத்தை மூடி கொண்டு அப்படியே சரிந்து வெடித்து அழலானாள் .

       எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது!!!!!!

 யுகன் அவர்கள் அறைக்கு வந்து

“லைட் கூட போடாமல் என்ன செய்கிறாய் ????? சாப்பிட கூட கீழே

இறங்கவில்லையாம் …….. என்னவாயிற்று ?????” என்று சுவிட்ச்சை தட்டவும் அங்கு துவண்டு கிடந்த மனைவியின்  நிலை கண்டு பதறி தான் போனான் .

   திருமணமான முதல் நாள் தன்

அம்மாவிற்காக ஹாஸ்பிட்டலில் ஒரு சொட்டு நீரை உதிர்த்தவள் அதன் பின் எந்த சூழ்நிலையையும் தைரியமாக தான் எதிர்கொண்டிருக்கின்றாள்.

    பிரிவு பற்றி பேசிய போது கூட கொண்டு போய் விடுகிறாயா இல்லை

நானே செல்லட்டுமா என்று துணிச்சலாக கேட்டவள் இப்படி துவண்டு கிடக்க காரணம் என்ன????? என்று அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்

 “உதி… என்னாச்சு???? இங்க பாருமா…..” என்றான் கலக்கத்துடன்.

    அவன் பேசியது அவள் செவிகளுக்கு எட்டவே இல்லை என்பதை அறிந்து கொண்டவன் முகத்தினை மறைந்திருந்த அவள் கரங்களை பிரித்து அவள் தாடையை ஏந்தினான் .

   அழுதழுது வீங்கியிருந்த அந்த கண்களை பார்க்க திறனற்றவன் போல் தன் விழிகளை திரையிட்டு கொண்டவன் சற்றும் யோசிக்காமல் அவளை அள்ளி தன் மார்போடு அணைத்துகொண்டான் யுகன்.

    காடு மலை புயல் தாண்டி தன் குடிலுக்கு வந்துவிட்டாற்போல் உதிதாவும் கணவன் மார்பினுள் தன்னை  புதைத்து வெடித்து

அழலானாள் .

   அவள் முன்னுச்சியில் முத்தமிட்டவன் அவள் அழுகையை தாங்காத வண்ணம் “என்னடா ஆச்சு? உன்னை இப்படி பார்த்ததே இல்லையே ….. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லும்மா …”

பதிலின்றி போகவும் சற்று நிதானம் இழந்தவனாய் ” இப்படியே இருந்தாய் என்றால்  எனக்கு பயமாக இருக்கிறது… என்னை பாரு அம்மு ப்ளீஸ்……. ” செய்வதறியாது குழம்பினான்.

அம்மு!!!!!!!!!!!!

சாட்டையால் அடித்தது போல் வலித்தது!!!!

என்ன நினைத்து கொண்டிருக்கிறான் இவன்?????

தீ பட்டாற் போல் வெடுக்கென்று யுகனிடமிருந்து விலகியவள்

 ‘ச்சீ’  நாம் எப்படி அவனிடம் ஒண்டினோம்????

 நமக்கு சொந்தமில்லாத ஒன்றின் மீது எப்படி உரிமை பாராட்டினோம்!!!!!!

 என்று தன்னை தானே கடிந்து கொண்டபடி கணவனை பார்க்க தைரியமில்லாது தரையை பார்த்த வண்ணம்  அமர்ந்திருந்தாள்.

“என்ன உதிம்மா ஆச்சு ??? என் உயிரே என்னிடம் இல்லை தெரியுமா????? ” என்று அவள் கரத்தை பிடித்தவனை உதறிவிட்டவள்

“என்னை தொடாதீர்கள் !!!!!!” என்று பித்து பிடித்தவள் போல கத்தினாள்.

தஞ்சையில் சுயநினைவற்று அன்று தான் செய்யவிருந்த காரியத்தின் போது கூட “முழிச்சுக்கோங்க யுகன்!!!!!!! நான் உதிதா…… ” என்று பொறுமையாகவே எடுத்துரைத்தவள் இன்று நடந்து கொள்ளும் முறைக்கு காரணம்

என்னவாக இருக்கும் என்று வெகுவாக குழம்பி போனான் .

  மேலும் இந்நிலையில் அவளை தனித்து விட்டு போக மனமில்லாமல் “எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் உதிம்…. உதிதா . இந்த தண்ணீரை குடித்துவிட்டு போய் படு!!!!” என்றான் .

“எனக்கு எதுவும் வேண்டாம்…… இனியும் நான் இங்கே ஒரு நொடி கூட இருக்க மாட்டேன் ……. நான் போகிறேன்!!!!! ” என்று தன் போக்கில்  புலம்பி கொண்டு எழுந்தவளின் கரம் பற்றி பலம் கொண்டு தன்னிடம் திருப்பினான் யுகன்.

“உனக்கு என்ன தான் ஆச்சு?????? ஏன் இது போல் நடந்துகொள்கிறாய்??????”

“நீங்கள் தானே சொன்னீர்கள் …… ஆறு மாத தண்டனை அதன் பிறகு உன் வீட்டிற்கு செல்லலாம் என்று”

ஒருநொடி தன் கண்களை மூடி திறந்து

தன்னை கட்டு படுத்தி கொண்டவன்

 “அப்படியே பார்த்தாலும் அது முற்று பெற தான் இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறதே??????” என்றான்.

“ஒன்றரை மாதங்களா?????

 இனி ஒரு நிமிடம் கூட என்னால் இங்கு.. இந்த வீட்டில் இருக்க முடியாது!!!!! ” என்று அரற்றியவளிடம்

 “உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?????” என்று பொறுமையிழந்து கத்தினான் அவளின் கொடுங்கோல் ஆட்சியாளன் .

“ஆமாம் எனக்காவது பைத்தியம் தான் பிடித்திருக்கிறது ……. ஆனால் உங்களுக்கு ………” என்று நிறுத்தியவளிடம்

“எனக்கு என்னடி பிடிச்சிருக்கு?????” என்று அதட்டி அவள் தோள்களை பற்றி பலமாக உலுக்கினான் நிதானத்தை முற்றிலும்

தொலைத்தவனாக.

உனக்கு என்ன பிடிச்சிருக்கா?????

உனக்கு யாரை பிடிச்சிருக்கு என்பது தான் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டதே!!!!!

கசப்பாக எண்ணியவள் திடமான மனதை வாடகைக்கு பெற்று தீர்க்கமான பார்வையுடன்

 “உங்களுடன் என்னால் வாழ முடியாது!!!!

உங்களுடனான இந்த வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை…..

 மனதிற்கும் உடலிற்கும் சம்பந்தமில்லாத ஒரு வாழ்வை  என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது!!!!! 

தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்…….” என்று யுகனை  காயப்படுத்தியபோது அவனது கரங்கள் வலுவிழந்து தரையில் தொங்கின.

    அடிப்பட்ட பார்வை பார்த்தவன் மனைவியின் உண்மை  சொற்களை

ஜீரணிக்க திரனில்லாதவனாய்

 “நாளை நீ உன் வீட்டிற்கு போகலாம் …. இனி எந்த ஒரு நிபந்தனைக்காகவும் இந்த வீட்டிற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை ” என்று விட்டு அவளை திரும்பி பார்க்காது வெளியேறினான்.

   சற்று நேரத்தில் கேட்ட கார் அரவத்தினால் தெரிந்தது யுகன் வீட்டை விட்டு சென்றது .

 இந்நேரத்தில் எங்கு போவான்?????? என்று உள்ளம் பதறிய போதும் இனி அவனை பற்றி நினைக்காமல் இருப்பதே நமக்கும் அவனுக்குமே நல்லது என்று பிடிவாதமாய் அவன் பின்னால் ஓடிய மனதை ஒரு அதட்டு போட்டு கட்டி போட்டாள்.

    விடியா இரவு நீண்டு கொண்டே போக அதனை கிழித்து மீள கண்ணீரின் உதவியை நாடிய போதும் கடக்க பெரும்பாடாகத்தான் இருந்தது உதிதாவிற்கு.

அதிகாலையில் வீடு திரும்பிய மகனை “எங்கேடா போனாய்?????

நேற்று வந்தவுடன்  மாடி ஏறியவள் இன்னும் இறங்கிய பாடாக தெரியவில்லை……

எப்படி எடுத்து கொள்வாளோ என்று கேட்கவும் சங்கடமா இருக்கிறது…..

 அப்படி என்னதான் பிரச்சனை உங்களிருவருக்கும் ” என்று நிறுத்தி வைத்து கேட்ட தேவதியிடம்

 “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அம்மா…….  தேவையில்லாமல் குழப்பி கொள்ளாதீர்கள்!!!! ” என்று சோர்வுடன் இயந்திரம் போல் உரைத்துவிட்டு படி ஏறினான் யுகன் .

     மனம் சரியில்லை என்று கோவிலுக்கு சென்று வர நினைத்த தேவகி மருமகள் விழித்ததும் தகவலை சொல்லிவிடு என்று வேலைக்கார பெண்மணியிடம் கூறிவிட்டு புறப்பட்டார் .

     உதிதாவையும் யுகனையும் விருந்திற்கு

அழைத்து வரும் பொறுப்பை ஏற்று கொண்டதன் அடிப்படையில் அவர்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்தான் பிரணாவ் .

     கூட்டி செல்வதற்காக தான் தன் தம்பியை வரவழைத்திருக்கிறாள் போலும் என்று யூகித்த யுகன் மனைவி குளித்து தயாராகி கீழே வரவும்

“சீக்கிரம் நீ ஆசைப்பட்ட டைவர்ஸ் உனக்கு கிடைத்துவிடும்!!!!! ” என்றான் அவளிடம் பிரணாவ் முன்னிலையில்.

“என்னது டைவர்ஸா ????? என்ன உதிக்கா நடக்கிறது இங்கே???????” யுகனின் வருத்தமாக பேச்சில் பதறி போனான் பிரணாவ்.

மேலும் அக்காளின் அமைதி

 அச்சுறுத்த “மாமா என்ன பேசுகிறீர்கள் ?????? விளையாட்டிற்கு ஏதாவது சொன்னீர்களா??????” என்று யுகனிடம் திரும்பினான்.

     இந்நாள் வரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தவன் இன்று உரிமையோடு கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறினான் யுகன்.

உதிதாவின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது …..

மாமான்னு கூப்பிடு என்ற போதெல்லாம் அலட்சியம் செய்தவனுக்கு பிரியும் தருவாயில் எதற்காக  இந்த சொந்த பாராட்டல்!!!!!!!!

  ஆதங்கமாக உணர்ந்தவள் “வா பிரணாவ் போகலாம் ”  என்றாள் நேரே தம்பியை பார்த்து.

“நான் வர மாட்டேன் உதிக்கா…….. உங்களிருவருக்கும் …….” என்ற பிரணாவை  இடை மறித்து

“எங்கள் இருவருக்கும் இடையில் இனி ஒன்றுமே கிடையாது!!!!!!!!!!! ” என்றிருந்தான் யுகன் .

“அப்படியென்றால் ???????”

“இனி நான் நம் வீட்டில் தான் இருக்க போகிறேன் …. எல்லாம் முடிந்துவிட்டது!!!! ” என்று நடுங்கிய குரலுடனே திடமாய் தெரிவித்தாள்.

“உளறாதே உதிக்கா!!!!!!!! ” என்றவனிடம்

“எதுவாக இருந்தாலும் நம் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம்  பிரணாவ்…… இப்மோது நீ என்னை கூட்டி போகிறாயா????? இல்லை நானே போகட்டுமா????” என்று முன்னேறி சென்றவளை தடுக்க வழி தெரியாமல் வேகமாக ஓடிச் சென்று தன் பைக்கை உதைத்தான் சின்னவன் .

   

           

Advertisement