காதலில் மட்டுமே
கண்மூடித்தனமான
நம்பிக்கையும் வரும்
சந்தேகமும் தொற்றி
கொள்ளும்.,
காதல் ஒரு வகை
நோய்.,
மாலை அலுவலகம் முடிந்து வந்தவனிடம் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினருக்கு வாங்கிய துணிகளை காட்டிக் கொண்டிருந்தனர்.,
அவற்றை பார்த்தவன் “நல்லா இருக்கு., எல்லாத்தையும் எடுத்து வைச்சிருங்க”., என்று சொன்னான்.,
“டேய் நாளைக்கு நாங்க போகிறோம்”., என்று சொன்னார்கள்.
“அந்த கார்லேயே சொல்லிருவேன்”., என்று மட்டும் சொன்னான்., வேறு எதுவும் சொல்லாமல் “மத்தியானத்துக்கு மேல வருவாங்க”., என்று சொல்லி இருந்தான்.,
“ஏன்டா மத்தியானத்துக்கு மேல., நாங்க காலையில வேற கார் புடிச்சு போய்டுவோமே”., என்று பெரியப்பா சொன்னார்.,
“மத்தியானத்துக்கு மேல போய்க்கலாம் பேசாம இருங்க”., என்று சொன்னார்.
பாட்டி “இவ ஏதோ சொல்லுறானே”., என்றவர் சந்தேகமாக பார்த்தார்.,
தாத்தாவோ அருகில் இருந்தபடி “சும்மா சும்மா அவனை அப்படியே பார்த்துட்டே இருக்காதே”., என்று சொன்னார்.
“சோழியன் குடுமி சும்மா ஆடாது., எனக்கு இவனை பத்தி முன்னாடியே தெரியும்., இவன் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான்., அஞ்சு பைசா அனாவசியமாக செலவு செய்யாதவன்.,
கண்டிப்பாக இன்னிக்கு கார் பிடித்து அனுப்பி வச்சிருக்கான்., அந்த கார்காரன் ட்ட அப்பப்ப போன் ல வேற பேசிக்கிட்டான்”., என்று சொன்னார்.
“அது எப்ப நீ பார்த்த”., என்று தாத்தா கேட்டார்.
“எனக்கு தெரியும்., இவன் நம்பர் இதுல தானே முடியும்”., என்று கடைசி மூன்று நம்பரை சொன்னவர்., “அப்பப்ப அந்த டிரைவர் பயலும் பேசிட்டு வந்தான்., நான் பின்னாடி இருந்து பார்த்துட்டு தான் வந்தேன்., எந்த கடைக்கு போறீங்கன்னு அவன் கேட்டிருப்பான் போல., டிரைவர் பதில் சொல்லிட்டு இருந்தான்”., என்றவர்.
“வேற எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்கான்”., என்று சொன்னார்.
“நீ சும்மா இரு., எப்ப பார்த்தாலும் இப்படி சொல்லிட்டு இருக்காத”., என்று சொன்னார்.
“போகப்போக தான., அவன பத்தி உங்களுக்கு தெரியும்”., என்று சொன்னார்.
தாத்தா இப்போது பாட்டியை சந்தேகமாக பார்த்தார்., “நீ என்னதான் சொல்ல வர., எனக்கு என்னமோ உனக்கு எல்லாம் தெரிஞ்சு நீயே அவனுக்கு ஏதோ சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கே”., என்று கேட்டார்.
“அப்படியே பண்ணிட்டு போனால் நல்லதா போச்சு ன்னு., நான் சொல்லிடுவேன்., என்ன நம்ம சொந்தத்திலேயே பொண்ணு முடிக்கனும் ன்னு என்ன கட்டாயமா”., என்று சொன்னார்.,
” நீ சரி இல்லை”., என்பதை சத்தமாகச் சொன்னார்.,
“நான் சரி ன்னு சொல்லி வேற ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துரப் போறான் பாருங்க”., என்றார் பாட்டி.,
தாத்தாவோ., “யாருக்கு தெரியும்”., என்று சொன்னார்.
பாட்டியோ சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்., அவன் பாட்டியும் தாத்தாவும் குசுகுசு என்று பேசுவதை பார்த்தால் இது சரியில்லை என்று நினைத்தவன்.,
இரண்டு பேரும் பேசுவது சரியில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்., “வேலை இருக்கு காலையில பார்ப்போம்”., என்று சொன்னான்.
“டேய் சாப்பிட்டு போய் படு” என்று அம்மா சொன்னார்.
“நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு சொல்லுங்க மா., வாரேன்”., என்று சொல்லி விட்டு உள்ளே சென்று நண்பனிடம் தேவையான அனைத்தும் தயாராகி விட்டதா என்பதை கேட்டு அறிந்து கொண்டவன்.,
வீட்டிற்கு வெளியே வந்து வீட்டில் உள்ளவர்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டிலுள்ளவர்கள் ஆளாளுக்கு அவன். திருமணத்தை பற்றி பேசிக்கொண்டே இருந்தனர்., எதுவும் காதில் வாங்காதது போல அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.,
பின்பு எழுந்து போனை காதோடு வைத்து நண்பனோடு பேசிக் கொண்டே செல்ல பாட்டி தான் “கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்த மாதிரி., உன் மகன் காதுல போனோடு தான் பிறந்தான் போல., எப்ப பாரு அதை தூக்கி காதுல ஒட்டி வச்சிக்கிட்டே அழையுதான்., பேசாம காதில் ஓட்டை போட்டு கட்டி தொங்கவிடு”., என்று பிரணவ் அப்பாவிடம் சொன்னார்.
பிரணவ் அப்பா சிரித்துக் கொண்டார்., “அம்மா இப்போ உள்ள பையன்கள் எல்லாம் அப்படி தான் இருக்காங்க., அதுக்காக மாற்ற முடியுமா., அவங்க வேலை அப்படி”., என்று சொன்னார்.
‘அது சரிதான் இவன் வேலை வேலைனு வேலையை பார்க்கானோ., இல்லையோ., வேற ஏதோ பார்க்கான்., அது மட்டும் தெரியுது’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்.
“ஏன்டா போனை காதிலேயே ஒட்டி வைச்சிட்டு அழையுற., காது வலிக்கலையா” என்று பாட்டி கேட்டார்.
அவனோ “பாட்டி ஹெட் போன் போட்டு பேசினா., அதுக்கும் கிண்டல் பண்றீங்க., காதுல ஒரு வயரை சொருகிட்டு பேசிக்கிட்டே அலையுறான் லூசு மாதிரி., ப்ளூடூத் கனெக்ட் பண்ணினா., காதுல ஒன்னும் கண்ணுக்கு தெரியலை., ஃபோனை கைல எடுக்காம பேசிட்டு போறான் ன்னு சொல்லுறீங்க., இப்ப நீங்க போன காதில் வச்சு பேசினா., காது வலிக்கலையா ன்னு ஏன் கேட்கிறீங்க”., அப்ப என்ன தான் பாட்டி செய்யணும்”., என்று கேட்டான்.
“அந்த போன் இல்லாம பேச., இந்த ப்ளூடூத் என்னமோ சொன்னீயே அது எனக்கு ஒன்னு வாங்கி கொடு”., என்று சொன்னார்.
ஏன் என்று தாத்தா கேட்டார்.,
“இல்ல எப்ப பாத்தாலும் போன் வந்துச்சுனா., போன தூக்கி காதில் வச்சுகிட்டே பேசினா., எனக்கு காது வலிக்கு பாத்துக்கோங்க., அதுக்கு தான் கேட்டேன்”., என்று தாத்தாவிடம் சொன்னார்.
“நல்ல புதுசு புதுசா நீயும் எல்லாம் பழகிக்கிற” என்று தாத்தா சொல்லிக்கொண்டிருந்தார்.
இவனும் அவர்களது பேச்சை பார்த்து சிரித்தபடியே அறைக்குள் சென்றவனுக்கு சற்று மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.,
‘குடும்பத்தின் இந்த சந்தோஷத்தை குலைக்க போகிறோம்., என்று தெரியும் இந்த சந்தோஷத்தை தான் அனுபவிக்க முடியுமா., திரும்ப தனக்கு இது கிடைக்குமா., என்ற வருத்தமும் அவனுக்குள் இருக்க தான் செய்தது.,
ஆனாலும் திருமணத்தை செய்து கொண்டு வந்த பின்பு பேசிப் பார்ப்போம்., அதன் பிறகு அவர்களிடம் சொல்லி பார்க்கலாம்’., என்று தோன்றியது.,
ஆனாலும் எதுவும் நடக்கவில்லை என்றாலும்., பின்பு பேசிக் கொள்ளலாம் என்றும் தோன்றியது.., எதுவாக இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தை போட்டு மேலே செல்லலாம் என்று நினைத்துக் கொண்டவன்.,
சீக்கிரமாக உள்ளே வந்து நீதாவிடம் பேசியவன் நீதா சொன்னவற்றை கேட்டுக்கொண்டு “நீ சொல்வதும் சரிதான் திருமணத்தை முடித்துக் கொண்டு வந்து உன் தம்பியிடம் சொல்லிக்கொள்ளலாம்”., என்று சொல்லி இருந்தான்.
எப்படியும் வீட்டிற்கு தெரிய தானே போகிறது என்ற எண்ணத்தோடு அதற்கு மேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.,
நிம்மதியான தூக்கம் தன்னை தொடரவேண்டும் என்ற வேண்டுதலோடு..,
வெளியே பேசிக்கொண்டிருந்த பெற்றவர்களோ அவன் கதவை முழுமையாக அடைக்காமல் லேசாக சாத்தி வைத்து இருந்ததால் உள்ளே விளக்கை அணைப்பது தெரிந்ததும்..,
“என்ன அதுக்குள்ள படுத்துட்டான்”., என்று பெரியப்பாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.
“அவனுக்கு நல்ல வேலை போல., அலைச்சல் ஜாஸ்தி இருக்கும் இல்ல.,அதுதான் தூங்கிட்டான்”., என்று பாட்டி சொன்னார்.
“என்னமோ ஆபிஸ் வேலை பத்தி தெரிஞ்ச மாதிரியே பில்ட்-அப் பண்றதை பாரு”., என்று தாத்தா சொன்னார்.
“எனக்கு தெரியும்., அவனுக்கு வேலை ஜாஸ்தி தான் இருந்திருக்கும்”., என்று பாட்டி சொன்னார்.,
தாத்தா பாட்டியை இப்போது குறுகுறுவென பார்த்தார்.,
பாட்டியோ “தெரியும் போய் தூங்குங்க”., என்று சொல்லி “எப்பவும் நான் தான் சந்தேக படுவேன்., இப்ப நீங்க சந்தேகப்படுறிகலாக்கும்”., என்று சொல்லி விட்டு பாட்டி போய் ஹாலில் டிவி பார்க்க வந்து விட்டார்.
“அம்மா நைட் 10 மணிக்கு உட்கார்ந்து பாட்டு கேட்குறத பாருங்க” என்று பேசிக் கொண்டிருந்தனர்.,
அதற்குள் பெண்கள் உள் அறையில் சென்று படுக்க., ஆண்கள் ஹாலில் விரித்து படுக்க ரெடி செய்து கொடுத்தனர்., பாட்டி சற்று நேரம் ஹாலில் அமர்ந்து இருந்தவர் பின்பு எதுவும் சொல்லாமல் மருமகளோடு சென்று உள் அறையில் படுத்துக் கொண்டார்.
தூக்கம் வராமல் படுத்திருந்த பாட்டி மருமகளிடம் “என்னம்மா மருமகளே தூங்கிட்டியா என்ன”., என்று கேட்டார்.
“இல்லத்தை என்ன”., என்று கேட்டனர்.
“சரி கல்யாணத்த நீங்களே பேசுறீங்க., நீங்களே முடிவு பண்ணுறீங்க., அந்த பையன் ட்ட இப்ப வரைக்கும் பொண்ணு போட்டோவை கூட காட்டலையே”., என்று சொன்னார்.
“அச்சோ மறந்துட்டோமே” என்று இரண்டு மருமகள்களும் ஒன்று போல சொன்னார்.
அவசரமாக எழுந்த பிரணவ் அம்மா “நான் வேணா போய்., போட்டோ காட்டிட்டு வரட்டுமா”., என்று சொன்னார்.
பாட்டி “அட கூறு கெட்டவளே., காலைல காண்பிக்கலாம்”., என்று சொன்னார்.,
“அவன் மத்தியானத்துக்கு மேல தானே பொண்ணு வீட்டுக்கு போக சொல்லி இருக்கான்”., என்று பிரணவ் அம்மா சொன்னார்.
பிரணவ் ன் பெரியம்மாவும் “ஒரு வேளை சர்ப்ரைஸா நம்ம கூட பொண்ணு வீட்டுக்கு வர போறானோ என்னவோ., அதுக்கு தான் மத்தியானத்துக்கு மேல போங்கன்னு சொல்லியிருக்கானோ”., என்று சொன்னார்.
பாட்டியோ ‘அது விடிஞ்சதுக்கப்புறம் எல்லாம் தெரியும்’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு “சரி எது எப்படி இருந்தால் என்ன., இப்ப தூங்குங்க காலையில போட்டோ காட்டுங்க” என்று சொன்னார்.,
பின்பு “காலையில் காட்டாதீங்க., நாளைக்கு சாயந்தரம் காட்டுங்க., பொண்ணு வீட்டுல பேச்சு வார்த்தையில் மூடிச்சிட்டு வந்து காட்டுங்க”., என்ற பாட்டியின் மனதிற்குள் ஏதோ சிறு சந்தேகம் பெரும் தீப்பொறியாக எழுந்து எரிந்து கொண்டு தான் இருந்தது.,
தன் பேரனின் சிறுசிறு நடவடிக்கைகளிலும் வித்தியாசம் காண்பவர்., ஆனாலும் பேரனை விட்டு தர மனம் இல்லாதவர்., அவன் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்த பாட்டி., இதையும் செய்து கொடுப்பார் என்பது சந்தேகம் தான்., என்றாலும் நிச்சயமாக எதிர்க்க மாட்டார்.
இது ஏதும் பிரச்சனையாகக்கூடாது என்று மனது கிடந்து அடித்துக்கொண்டது., ஆனால் என் மனதில் தோன்றுவது உண்மையா என்றும் பாட்டிக்கு தோன்றியது., எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
காலை விடிந்ததும் எழுந்த பிரணவ் மற்றும் நீதாவின் மனநிலை சற்று படபடப்பாக இருந்தாலும் வீட்டில் எப்போதும் கிளம்புவது போல கிளம்பினர்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு நீதா விற்க்கு துணையாக தம்பி எப்போதும் போல வந்தவன் தன் அக்காவை வித்தியாசமாக பார்த்தவனை., “என்ன டா” என்று கேட்டாள்.,
அவனிடம் பதில் இல்லை என்றவுடன்.,”உன்னை தான்டா திரும்பத் திரும்பக் கேட்கிறேன்”., என்றாள்.,
“ஒன்னும் இல்ல., உன் முகம் ஒரு மாதிரி இருக்கு அதுதான் பார்த்தேன்”., என்றான்.
“இல்ல இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல., நான் நல்லாத்தான் இருக்கேன்”., என்று சொன்னாள்.
“அக்கா எதுனாலும் பயப்படாத., என்னால அம்மா அப்பா கிட்ட பேச முடியாமல் போனாலும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் பயப்படாதே”., என்று மட்டும் சொன்னவனைப் பார்த்தவள்., அவன் தலையை கோதி விட்டு “நீ உன் படிப்பு மட்டும் பாருடா., என்னால அம்மா அப்பா ட்ட திட்டு வாங்காதே”., என்று சொல்லி விட்டு ட்ரெயின் ஏற தயாராகி நின்றாள்.
ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து ஆறுதலாய் கை பிடித்து நின்ற தம்பியை பார்த்தவளுக்கு கண்கலங்கினாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “அப்புறமா போன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.,
சற்று நேரத்தில் அவள் போக வேண்டிய ட்ரெயின் வர., அதில் ஏறி போவதை பார்த்தவனுக்கு மனம் சற்று பயமாகத்தான் இருந்தது., அவளின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று., கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டே சத்தமே இல்லாமல் கிளம்பினான்.,
மனதில் சற்று பாரம் ஏறியது போல தோன்றியது., அவன் தான் வணங்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை வைக்கவும் தவறவில்லை., “என் அக்காவின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும்”., என்று மட்டும் நினைத்துக் கொண்டான். அவளுடைய நிம்மதியை தேடி தான் போய் கொண்டு இருக்கிறாள் என்பது தெரியாமல்..,
அது போல பிரணவ் வேண்டுமென்றே காலை தாமதமாக எழுந்து வந்து., அவசரமாக கிளம்புவது போல கிளம்பியவன்., காலை உணவை மட்டும் முடித்து கொண்டு கிளம்ப போனான்.,
பாட்டி தான் ” டேய் பிரணவு”., என்று அழைத்தார்.,
“என்ன பாட்டி” என்றவனிடம்.,
“சும்மா தான் டா” என்று அழைத்தவர் சாமி செல்ப் வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்., அவனுக்கு திருநீறு பூசிவிட்டு “எல்லாம் நல்லபடியா நடக்கும் ன்னு., நம்பிக்கையோடு இரு., எப்ப பாத்தாலும் மனச குழப்பி படபடப்போடு அடிச்சிட்டு இருக்காத சரியா., எப்ப பாரு டென்ஷனோடு இருந்தா எதுவுமே நடக்காது”., என்று சொன்னார்.
சுத்தி இருந்த மற்றவர்கள் தான்., ஏன் பாட்டி இப்படி சொல்லுறாங்க என்று ஆச்சரியத்தோடு பார்த்தனர்.,
ஆனால் பாட்டியோ பிரணவ் ன் கண்ணை பார்க்க., பிரணவ் க்கு பாட்டியை பார்க்கும்போது கண்கலங்கியது., ‘தன் பாட்டி இதுவரை தான் ஆசைப்பட்ட எந்த ஒரு விஷயத்திற்கும் மறுப்பு தெரிவித்தது கிடையாது.., ஆனாலும் இதை சொல்ல அவனுக்கு சற்று தயக்கம் தான்., எதுவாக இருந்தாலும் பாட்டியின் ஆசீர்வாதம் தனக்கு இருக்கும்’ என்று நம்பிக்கையோடு பாட்டியை தோளைச் சேர்த்து பிடித்தவன் “தேங்க்ஸ் பாட்டி” என்று சொல்லி சிரித்தபடியே கிளம்பினான்.,
தாத்தா பாட்டியிடம் “அவன் என்ன சண்டைக்கா போறான்.,திருநீர் பூசி அனுப்புற”., என்று கேட்டார்.
“உங்களுக்கு சொல்லிட்டா மட்டும் புரிஞ்சுற போது பாருங்க., அந்தாள போங்க., போயி அரசியல் பேச உட்காருங்க., குடும்பத்தில் நடக்குற எதுவும் பாக்குறது கிடையாது., எப்ப பாரு அரசியல் பேசிட்டு சுத்திட்டு திரியுறது”., என்று சொல்லிவிட்டு போய் டிவி பார்க்க அமர்ந்தார்.,
காரில் ஏறியவனுக்கோ ரிவர் வியூ மிரர் ல் பார்த்தவன் நெற்றியில் இருக்கும் திருநீற்றை பார்த்தவனுக்கு பாட்டியின் பேச்சை நினைத்தவனுக்கு., ‘அவருக்கு ஏதேனும் சந்தேகம் வந்திருக்குமோ’ என்று நினைத்தாலும்., அதன்பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் கிளம்பினான்.
அவளும் அந்நேரம் அங்கு வந்து இருப்பாள் என்ற எண்ணத்தோடு.
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்
கொள்ளாதே உலகத்திலே
சிறந்தவன் நீ தான் இதை
எப்போதும் நம்பு..!