Advertisement

6
நீயின்றி நானில்லை
என்பதை தாண்டி.,
உன் எண்ணங்களில்
நான் மட்டும் நர்த்தனம்
ஆடுவதில்
பெருமையே.,

         வீட்டிற்கு வந்தவள் அவனின் அலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள்., ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.,

         அப்பாவின் பேச்சே சற்று பயத்தை தந்தது., ‘இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என்ற நினைப்பை பயத்தோடு அவன் கழித்துக் கொண்டிருந்தாள்.,

      அங்கோ அவனும் அவன் நண்பனை அழைத்துக் கொண்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் விஷயங்களை பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

        ரெஜிஸ்டர் ஆபீஸ் சம்மந்தப்பட்ட அலுவலக விஷயங்களை நண்பனுக்கு தெரிந்தவர் மூலமாக ஏற்பாடு செய்ய போயிருந்தான்.,

         அவர் சில விஷயங்களை இது போன்ற அவசர திருமணங்களில் எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்., இதை இப்படி செய்தால் உடனடியாக முடிக்க முடியும் என்று சொல்லிக் கொடுத்தார்.

         அதைக் கையாளும் விதத்திற்காக மற்றும் சிலரை பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர்., அனைத்து வேலைகளை முடித்துக் கொண்டு அவன் வீட்டிற்கு வரும் போதே இரவு 9 ஆயிருந்தது.,

       அலுத்து சலித்து களைத்துப் போய் வந்தவனிடம் வீட்டிலுள்ளவர்கள்., “என்னடா இவ்வளவு நேரம்”., என்று கேட்கத் தொடங்கியிருந்தனர்.

       அவனும் “ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி”., என்று சொன்னார்.

         அவனுடைய சோர்வே அவன் எங்கேயோ அலைந்து திரிந்து வந்திருக்கிறான் என்று காட்டியது.,

       அவன் அம்மா தான் “வாடா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”., என்று அழைத்தார்.,

         “நீங்க சாப்பிட்டு எடுத்து வைங்கம்மா., எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.., முடிச்சிட்டு நான் அப்புறமா சாப்பிடறேன்”., என்று சொல்லிவிட்டு

         ரிஜிஸ்டர் ஆபிஸில் சொன்ன மற்ற விபரங்களை அவர் சொன்ன ஈமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்., என்ன செய்வது என்று பதற்றத்தோடு தான் அவன் அந்த வேலையை தொடங்கி இருந்தான்.,

         அதன் பிறகு அவளிடம் சில தகவல்களை பெறும் பொருட்டு அவளுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினான்.,

        அவனின் போனுக்காக காத்து இருந்தவளுக்கோ மெசேஜ் மட்டும் வர ‘ஏன் எதற்கு என்று யோசனை தோன்றினாலும்., அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.,  அவன் வீட்டில் இருப்பதால் பேசாமல் டீடைல்ஸ் கேட்கிறான்’.,  என்ற எண்ணத்தோடு அவன் கேட்ட தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தாள்.,

         அவற்றை வாங்கி அவனுடைய டாக்குமெண்ட் ஃபைலோடு சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தான்.,

       அப்போது தான் இவளும் “எதுக்கு இவ்வளவு அவசரமா” என்று மெஸேஜ் ல் கேட்டாள்.

           “அவனும் இல்ல., நான் உனக்கு டீடைல்ஸ் அப்புறமா சொல்றேன்”., என்று மெசேஜ் மட்டும் செய்து விட்டு போனை வைத்து விட்டான்.,

       அதன் பிறகு இவன் குளித்து டிரஸ் செய்து கொண்டு ஹாலுக்கு வர வீட்டினர் அனைவரும் ஹாலில் தான் இருந்தனர்.,

        “என்னடா அப்படி என்ன வேலை கம்ப்யூட்டர் தூக்கி வச்சி உட்கார்ந்துட்டு இருக்க., போன்ல மெசேஜ் பண்ற”., என்றார்.

         “ஆபீஸ் வொர்க்”., என்று சொன்னவன் வேறு எதுவும் சொல்லவில்லை.,

          அவன் அம்மாவோ “இட்லி இருக்குடா., உனக்கு வேணா  தோசை ஊத்தவா”., என்று கேட்டார்.

        “எனக்கு இதுவே போதும்” என்று சொன்னவன்., எதுவும் சொல்லாமல் சாப்பிட துவங்கினான்.,

               அப்போது அவன் அப்பாவும் பெரியப்பாவும் பெண் வீட்டை பற்றி பேச்சு எடுக்கத் தொடங்கிவிட்டனர்.,

         பொண்ணு இப்ப தான் படிச்சு முடிச்சு இருக்கு.,  வேலைக்கு போகணும்னு நினைச்சா நீயே ஏதாவது கம்பெனி பார்த்து ரெடி பண்ணிவிடேன்., வேலைக்கு போக வேண்டாம் ன்னு நெனச்சேன்னா வீட்ல இருக்கட்டும்.,

         நம்ம வீட்டு நிலைக்கு வேலைக்கு போகனும் ன்னு கட்டாயம் கிடையாது.,  நீ என்ன சொல்ற”., என்று கேட்டனர்.,

        அவனும் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்., “என்னடா கேக்குறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குற”., என்று கேட்டனர்.,

       “நான் சாப்பிடனுமா பதில் சொல்லனுமா”.,  என்று கேட்டான்.,

       அவன் அம்மாவும் பெரியம்மாவும் “நீங்களும் இப்ப ஏன் பேசிட்டு., அவன் சாப்பிட்டதுக்கு அப்புறம் பேச வேண்டியது தானே”., என்று சொன்னார்கள்.

          அவரவர் வீட்டுக்காரரை சத்தம் போட்டு விட்டு “நீ முதல்ல சாப்பிடு டா”., என்று சொல்லி அவனை சாப்பிட செய்தனர்.

          அவனும் ‘இந்த பேச்சில் இருந்து தப்பிப்பதற்கு வேறு என்ன வழிகள் உண்டு’ என்பதை யோசனையோடு அமர்ந்த படியே இருந்தவனுக்கு.,

       சரியாக அவன் நண்பனுக்கு இவன் மெஸேஜ் செய்தான்.

               கரெக்டாக அவன் சாப்பிட்டு முடிக்கும் நேரத்திற்கு முன் “நீ கொஞ்சம் போனுக்கு கால் பண்ணுடா., ஆபீஸ் கால் மாதிரி பண்ணு”., என்று மெசேஜ் செய்தான்.,

         அவனும் ‘எதுக்கு இந்த மெஸேஜ்’ என்ற யோசனையோடு என்னாச்சோ என்ற எண்ணத்தில் அவனுக்கு அழைத்தான்.

      சரியாக சாப்பிட்டு முடித்து கை கழுவி வரும்  நேரம்., அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.,

         “இப்ப தான் நீங்க சொன்ன அந்த டிடெயில்ஸ் எல்லாம் மெசேஜ் பண்ணேன்”., என்று பேசியபடியே அறைக்குள் சென்று லேப் டாப்பை தூக்கி வைத்துக்கொண்டு வேலை விஷயமாக பேசுவது போல பேசிக்கொண்டு..,  நண்பனிடம் ஜாடைமாடையாக விஷயத்தை சொன்னான்.

          அவனும் “இப்பவே வா”., என்ற அலறியவன்., “இனிமேல் தானடா இருக்கு”., என்று சொன்னான்.

             “இல்லடா., வீட்டில் பண்ணின ஏற்பாட்டை பத்தி பேசினாங்க., என் வாயிலிருந்து என்ன பதில் வருதுன்னு பார்ப்பாங்க., அதுக்காக தான் நான் வாயை திறந்து பதில் சொல்லாமல் இருக்கேன்”., என்று சொன்னான்.,

       “சரி சரி எல்லாத்தையும் நாளைக்கு பாக்கலாம்., இப்ப அந்த பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை பேசி சொல்லிடு”., என்று சொன்னான்.

      “நாளைக்கு ஒரு நாள் தான் டைம் இருக்கு”., என்று சொன்னான் பிரணவ்.,

      “அது எல்லாம் நல்லபடியாக முடியும்., பயப்படாம வேலையை பாரு”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

     பெரியவர்களும் காத்திருந்து காத்திருந்து பார்த்தனர்., இவன் ஆபிஸ்காலில் இருப்பது போலவே காட்டிக் கொண்டான்.,

       பின்பு “ஓகே நாளைக்கு ஆபீஸ்ல வச்சு அதை முடிப்போம்., இப்ப முடிந்தளவு முடிச்சிட்டு., ஒர்க் அ உங்களுக்கு மெயில் அனுப்புறேன்”., என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன்.,

     வீட்டினரிடம் “கொஞ்சம் ஒர்க் இருக்கு.,  முடிச்சிட்டு அப்பறமா பேசுறேன்., நீங்க தான் இருப்பீங்க இல்ல”., என்று சொல்லிவிட்டு அமைதியாக வேலையில் மூழ்குவது போல லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.,

      வீட்டில் ‘பாவம் பிள்ளைக்கு ரொம்ப வேலை போல’., என்று யோசித்துக் கொண்டிருக்க அவனோ அறைக்குள் சென்று கதவை சாத்தினான்., பெருமூச்சு விட்டபடி நீதாவிற்கு அழைத்தான்.

           “என்னாச்சு ப்பா” என்ற அவளும்

        “சாரி டா லேட் ஆயிடுச்சு”., என்று இவனும் பேச ஆரம்பித்தனர்.,

     “என்ன ஆச்சு”., என்று அவள் கேட்டாள்.,

         “கொஞ்சம் ஓர்க் ஜாஸ்தி மா., அது மட்டும் இல்லாம கொஞ்சம் ரெஜிஸ்டர் ஆபீஸ் விஷயமா அலைச்சல்., எங்க வீட்ல சொல்ல முடியாது இல்ல.,  ஆபீஸ்ல இருக்கிற மாதிரியும்.,  ஆபிஸ் ஒர்க் இருக்குற மாதிரியும் காட்டிக்கிட்டேன்., அதுக்கு தான் டீடெயில்ஸ் கேட்டேன்”., என்று சொன்னவன். அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.,

         ம்ம் ம்ம் என்று சொல்லி கொண்டு இருந்தாள்.,

             “உங்க வீட்ல என்ன ஆச்சு”., என்று கேட்டான்.,

         “வீட்ல அம்மா கொஞ்சம் முகத்தை தூக்கிட்டு இருக்காங்க., அப்பா சுத்தமா பேச்சு கிடையாது., அப்பா ரொம்ப தீவிரமா கல்யாணம் வேலையில் இறங்குற மாதிரி., பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு..,

       ஞாயிற்றுக்கிழமை  இப்படி பண்ணனும்., அப்படி பண்ணனும் என்று பேசிட்டு இருக்காங்க., என்ன பண்ணனும் தெரியல.,  ஆனா நான் எதுவும் பேச கூடாதுன்னு தான் இருக்கேன்., நான் இப்போதைக்கு பேச மாட்டேன்”., என்று அவள் சொன்னாள்.

         “சரி நீ எதுவும் பேச வேண்டாம்.,  அப்படியே இரு”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

               அவளும் அவனிடம் “என்ன பண்ணலாம்”., என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.,

          “அமைதியா போ”., என்றான்.

        அவளோ “நான் அமைதியா தான் போறேன்., என்ன பண்ணுவாங்கன்னு தெரியலை.,  ஞாயிற்றுக்கிழமை எப்படியாவது ஏதாவது சொல்லி தப்பிக்க ட்ரை பண்ணனும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

       “கவலைப்படாதே நான் பாத்துக்குறேன்”., என்று மட்டும் சொன்னான்.,

        “என்ன ஆச்சு”., என்று கேட்டாள்.,

      “நாளைக்கு பாங்க் க்கு மதியத்துக்கு மேலே லீவு போடுறியா”., என்று கேட்டான்.

            “லீவா எதுக்கு”., என்றாள்.

            “முடியலை னா பெர்மிஷன் போடு., ஒரு முக்கியமான வேலை இருக்கிறது”., என்று சொன்னான்.,

      “சரி” என்றபடி அவளும் சம்மதித்தாள்.,

      அதன் பிறகு இருவருக்கும் உண்டான சாதாரண பேச்சோடு சற்று படபடப்பாகவே பேசி முடித்தனர்.,

       ஆனாலும் விடியலில் கையில் தான் அவர்களுக்கான நேரம் மறைந்திருப்பதாக நினைத்தனர்.,

        வாழ்க்கையில் விடிந்து விடாதா என்று தான்., ஒவ்வொருவருக்கும் நினைப்புகள் ஓடிக்கொண்டிருக்கிறது.,

          ஃபோனை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தாலும் மனம் முழுவதும் இனி சந்திக்கப்போகும் பிரச்சினைகள் என்னென்ன என்ற யோசனையோடு அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.,

        அப்பொழுது தான் அவன் நண்பன் இன்று சொன்னது நினைவுக்கு வந்தது.,

      “ஏன்டா 30 வயசு ஆகுது.,  இன்னும் பயந்துகிட்டே இருப்பியா.,  கல்யாணம் ஆச்சுன்னா., இந்த வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி இருந்தா உன் குடும்பத்தை நடத்திட்டு  இருப்ப.,

            அப்பவும் உங்க அம்மா அப்பா கிட்ட கேட்டுகிட்டு இருப்பியா இல்ல தானே., உன் வாழ்க்கையை நீ தான் பாக்கணும் இல்ல.,

         உனக்கு வேணும்னா உங்க வீட்ல அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இந்த பொண்ணுட்ட ஓபனா சொல்லிட்டு போ.,

         அந்த பொண்ணு வீட்ல என்ன மாப்பிள்ளை பார்க்கிறாங்க தானே., அப்படின்னா அந்த பொண்ண அவங்க வீட்ல பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கிட சொல்லு.,

       ஏழு வருஷமா இரண்டு பேரும் பண்ணின லவ் க்கு முழுக்கு போட்டுட்டு போய் சேருங்க”., என்று கோபப்பட்டான்.,

          “நாங்க அப்படி ஒன்னும் பழகலை., அப்படி தப்பா நாங்க இதுவரைக்கும் நடந்து கொண்டதும் கிடையாது., எங்கள பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது., இதுவரை  நாங்க டச் பண்ணி கூட பேசினது கிடையாது.,

               எப்பவாது ரெண்டு பேரும் கைப்பிடித்து பேசுறதே அதிசயம் மாதிரி இருந்துச்சு., நாங்க ரெண்டு பேரும் உண்மையான அன்பில் தான் இருந்தோம்.,

       எந்த சூழ்நிலையிலும் எங்களோட காதல் வந்து உடல் சார்ந்தது ன்னு யாரும் சொல்லிவிடக்கூடாது ங்கிறது ல., ஜாக்கிரதை யா இருந்தோம்.,

       இது எங்க மனசு சார்ந்தது.,  நெஜமா உண்மையை சொல்லனும்னா.,

         ஃபர்ஸ்ட் லவ்வுல அப்பியரன்ஸ் அண்ட் பிசிகல் அட்டிரேக்சன் ஆ கூட இருக்கலாம்.,

     ஆனால் எங்களுக்குள்ள பேசிப் பழக பழக எங்ககிட்ட இருந்தது உண்மையான மனசு சார்ந்த விஷயம்., எனக்கு அவளை பிடிக்கும்.,  ரொம்ப பிடிக்கும்., அவளோட பழக்கவழக்கம்., விட்டுக் கொடுத்துப் போவது.,  யார்ட்டையும் எனக்கு தெரிந்து அதிர்ந்து பேசாதது., ஏன் இப்பவும் யோசித்துப்பார்.,

       வீட்டில் எவ்ளோ பிரச்சனை இருக்கு., இதுவரைக்கும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசலை., ஆமா ன்னு கூட சொல்லல.,  ஏன் சொல்லக்கூடாது ன்னு  எந்த கட்டாயமும் கிடையாது., ஆனால் யார் மனசையும் ஹட் பண்ண கூடாது ன்ற அந்த குணம் எனக்கு அவட்ட ரொம்ப பிடிக்கும்.,

     அவளுக்கும் என்னை பிடித்தது காரணம் ன்னு அவ சொல்லுவா., நான் கூட இருந்தா சேஃப் ஆ பீல் பண்றேன்னு சொல்லி இருக்கா.,  அப்படி தான் நாங்க ரெண்டு பேரும் மனசுல நினைச்சு இருக்கோம்.,

       எங்களுக்குள்ள தப்பான  மாதிரி ஃபீலிங் வந்தது கிடையாது.,  நாங்க ரெண்டு பேரும் யோசிச்சது எங்க ரெண்டு குடும்பத்தோட சம்மதத்துடன் தான் கல்யாணம் பண்ணனும் ன்னு.,

               ஆனால் அதுதான் இப்ப பிரச்சினைல வந்து நிக்கிற மாதிரி பீல் ஆகுது”.,  என்று சொல்லி வருத்தப்பட்டான்.,

          அவன் நண்பன் தான் “சரிடா நல்லவங்களா., அப்படியே இருங்க., அந்த நல்லவங்க குணத்தை.., பேரன்ட்ஸ் பீல் பண்றாங்க ன்னு சொல்லி பிரேக் அப் பண்ணிக்கலாம் சொல்லிடாதீங்க., அப்புறம் ஏழு வருஷ லவ் ஊத்தி மூடிட போகுது”.,  என்று சொன்னான்.

          “அப்படி எல்லாம் இல்ல., கண்டிப்பா எங்க லவ் சக்ஸஸ் ஆகும்” என்று சொல்லியிருந்தான்.,

           இப்போது நினைத்துக் கொண்டவனுக்கு., கண்டிப்பாக 7 வருட காதலின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.,

       அவனுக்கு  காதல் என்ன வைத்திருக்கிறது என்று காலத்திற்கு மட்டும் தான் தெரியும்.,

மகத்தான காரியங்களுக்கு..
மகத்தான நம்பிக்கைகளே
பிறப்பிடம்..!

Advertisement