Advertisement

5
திடீரென வரும்
முடிவுகள்.
விபத்தாகவும்
மாறலாம்.,
விடியலாகவும்
மாறலாம்.,

காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மனதில் ‘இவர்களின் அவசரம் சரியில்லையே’ என தோன்றியது.,

‘நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை என்பது காதல் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது’., என்று நினைத்துக் கொண்டான்.,

‘நேற்றோ நீதா மீது தவறு இருப்பது போல யோசித்துக் கொண்டு இருந்தவன்., இன்று ஐயோ வீட்டில் அவசரப் படுகிறார்களே’ என்று நினைத்தான்.,

அதே நேரம் ‘இதில் மாட்டி விடவும் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்., நீதா வீட்டில் வேறு பிரச்சினை பெருசாக இருக்கிறது., எப்படியும் அதை சமாளித்து தீரவேண்டும்’., என்று நினைத்தவன் ‘பேசாமல் வீட்டில் சொல்லி விடுவோமா’., என்று நினைத்தான்.,

பின்பு ‘சரி எதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் போய் அவளிடமும் ஒரு வார்த்தை பேசி விடுவோம்.,

இன்று மாலை யார் என்ன சொன்னாலும் சரி., நேரடியாக விஷயத்தை சொல்லி விடுவோம்., எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் போது என்ன செய்வார்கள்., அது மட்டுமல்லாமல் மனதிற்கு பிடித்த பெண் அவள் தான் என்பதை தெளிவாக அவர்கள் உணரும்படி கூறினால் என்ன செய்ய முடியும்’., என்று நினைத்துக் கொண்டான்.,

நிச்சயமாக எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்பிக்கையோடு பாதையில் கவனத்தைச் செலுத்தினான்.

தனது கம்பெனிக்கு வந்து இறங்க., நண்பன் தான் இன்றும் அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தான்.

“ஏன்டா லூசு மாதிரி இருக்கேனா., உத்து உத்து பாக்கிற”., என்று கேட்டான்.,

“இல்லடா நேத்து வந்தமாதிரியே ஏன் இன்னைக்கும் இப்படி வந்து இருக்கீயே ன்னு பார்த்தேன்” என்று சொன்னான்.,

“சொல்றேன்., சொல்றேன்., அதெல்லாம் ஒரு பெரிய கதை இருக்கு., கேண்டீன் போவோமா”., என்று கேட்டான்.,

“டேய் நேத்து நான் கேன்டீன் போவோமா ன்னு கேட்டது க்கு., ஃபுட் கோர்ட் போலாம்னு சொன்ன., கட்டாயப்படுத்தி உன்னை இழுத்து பிடித்து கூட்டிட்டு போனேன்., இன்னைக்கு நீயே வந்து கேண்டீன் போவோம் ங்கிற”., என்று கேட்டான் என்று தன் முன்னால் இருந்த லேப்டாப்பில் வேலை பார்த்த படியே.,

“நீ வேலை பார்த்தது எல்லாம் போதும்., மூடி வச்சுட்டு வா”., என்று சொல்லி பிரணவ் அழைத்தான்.

“அடேய் இதெல்லாம் சரியே இல்ல., உன்ன ஐயோ பாவம் டென்ஷனா இருக்க ன்னு நேத்து நான் கூட்டிட்டு போனதுக்கு., இன்னைக்கு நீ என்ன கூட்டிட்டு போய் என்னடா பண்ண போற”., என்றான்.,

“அது மூடு ஆப் பண்ற விஷயமா., இல்ல ஆன் பண்றதா ன்னு நீ தான் வந்து சொல்லனும் வா”., என்றவுடன் வேறு வழியின்றி அவன் நண்பனும் கிளம்பி போனான்.,

எப்போதும் போல அங்கு சென்றவுடன் “ஒரே ஒருத்தியை ஏழு வருஷமா லவ் பண்ணினதுக்கு., இந்த காதல் என்னைய வச்சு செய்து”., என்று சொல்லிக் கொண்டே அமர்ந்து விட்டான்.,

தன் நண்பனிடம் இரு வீடுகளிலும் நடக்கும் விஷயங்களை மீண்டும் கூறினான்.,

“என்னடா சொல்ற”., என்றான்.,

“ஆமா டா., நான் நேத்து சொன்னேன் இல்ல., அவங்க எல்லாம் வெள்ளிக்கிழமை தான் வருவாங்கன்னு பார்த்தா., இன்னைக்கே வந்து நிக்கிறாங்க.., எதுவும் தீவிரமா இறங்கிட்டாங்க போல., அவங்க பேசுறத பாத்தா அப்படிதான் தோணுது”., என்று சொன்னான்.,

“சரி இப்ப நீ என்ன பண்ண போற”., என்று கேட்டான்.

“ஈவினிங் போய் விஷயத்தை ஓபன் பண்ணிட வேண்டியது தான்., இதுக்கு மேல எல்லாம் மறச்சு வச்சு பிரயோஜனம் கிடையாது., எப்படினாலும் தெரிய தானே செய்யணும்., தெரியட்டுமே”., என்று சொன்னான்.,

“டேய் உங்க வீட்ல ஒத்துக்குவாங்க ன்னு நம்புறியா”., என்று கேட்டான்.,

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க., பிரச்சினை வரும்”., என்று சொன்னான்.,

“டேய் பிரச்சனை வர்றது வேற., உன்னைய கைய கால கட்டி தூக்கிகிட்டு போய்ட்டாங்க னா., என்ன பண்ணுவ., இங்க அந்த பொண்ணோட நிலைமை என்ன ன்னு யோசித்து பாரு”., என்று சொன்னான்.

சற்று நிதானமாக யோசித்தவனோ “இப்ப என்னடா பண்றது”., என்றான்.

“அந்த பொண்ணு வீட்ல இப்போ சிட்டுவேஷன் என்ன”., என்று கேட்டான்.,

அவள் நேற்று இரவு பேசியதை சொன்னான்., “இன்னைக்கு காலையில பேசலை., நான் ஆபிஸ் வந்து பேசுறேன் ன்னு சொல்லி இருந்தேன்., அதனால வெயிட் பண்ணுவா”., என்று சொன்னாள்.,

“சரி இப்ப கூப்பிட்டு பேசு., என்ன சொல்றா ன்னு கேளு”., என்று சொன்னான்.,

அவனும் அவளுக்கு அழைத்தான் அவளுடைய குரல் சற்று டல்லாக இருந்தாலும்., அவனது குரலை கேட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் சாதாரணமாகவே பேசினாள்.,

“சொல்லுப்பா”., என்று கேட்டாள்.,

“ஏன்டா குரல் டல்லா இருக்கு”., என்றான்.,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல”., என்று சொன்னவள்., அதான் நேத்தைக்கே சொன்னேனே”., என்று சொன்னவள்.,

இன்று காலையில் தாய் தந்தை பேசுவதைக் கேட்டிருந்தவள் அதையும் சொன்னாள்., அதை தவிர தம்பியை தன்னோடு ரயில்வே ஸ்டேஷன் வரை தந்தை அனுப்புவதை சொன்னதைக் கேட்டவுடன்.,

“ரயில்வே ஸ்டேஷன் வரை துணைக்கு அனுப்பி வைக்கிறவரு., பேங்க் வரைக்கும் அனுப்ப வேண்டியது தானே., ஏன் உன்னை என்னால பேங்க்லிருந்து நான் கூட்டிட்டு போக முடியாதா., பேசாம உங்க அப்பாவ பேங்க்க்கும் வந்து உன் தம்பிய உட்கார சொல்லச் சொல்லு”., என்று சொன்னவுடன்.,

அவளும் “யாருக்கு தெரியும்., எங்க அப்பா இங்கே ஏதும் ஏற்பாடு பண்ணி வச்சு இருக்காரோ., என்னவோ”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

பின்பு “ரிலாக்ஸ் நீத்து ஒன்னும் இல்ல., நான் பார்த்துக்கிறேன்”., என்று சொன்னவன்.

தன் வீட்டின் சூழ்நிலையும் சொன்னவுடன்., சற்று நேரம் அமைதி காத்தவள்.,

பின்பு “ஓ அதனால தான் என்னை பொண்ணு பாக்க வராங்க ன்னு சொன்னதுக்கு., பரவாயில்ல ன்னு சொன்னீயா”., என்று கேட்டாள்.,

“லூசா நீ”., என்று அவன் கேட்டான்.,

“பின்ன நீயும் பொண்ணு பாக்க தானே போக போற ன்னு., நீ சொல்லிட்டு போய் பாக்க போற அப்படித்தானே”., என்று கேட்டாள்.

“அறிவு அறிவு., ரொம்ப முத்திப் போய் பேசாத., ஆபீஸ் ல வொர்க் இருக்கு தானே., நான் உனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்., என்ன பண்ணலாம் ன்னு நீயே சொல்லு”., என்று சொன்னான்.,

தன் நண்பன் சொன்ன அறிவுரைகளையும் சொன்னான்., தான் என்ன செய்ய இருப்பதாக இருந்ததையும் சொன்னான்.,

“இப்ப நீ சொல்லு., நான் இன்னைக்கு ஈவினிங் பேசவா., இல்ல அவன் சொன்ன மாதிரி பேசாம இருக்கணுமா”., என்று கேட்டான்.

“இல்ல அந்த அண்ணா சொல்ற மாதிரி., அவங்க உங்களை கட்டாயப்படுத்தி ஊருக்கு கூட்டிட்டு போயிட்டா., என்ன பண்ணுவீங்க”., என்றாள்.,

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்., “சரி நான் உனக்கு மத்தியானத்துக்கு உள்ள ஒரு விஷயம் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்., நீ அதுவரைக்கும் டென்ஷன் இல்லாம ரிலாக்சாக இருக்க பாரு சரியா., உன் குரல் டல்லா இருக்கு., அப்புறம் இந்த மாதிரி இருக்கக்கூடாது பார்த்துக்கோ”., என்று சொன்னான்.

“சரி”., என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

மதிய உணவிற்குப் பின் அழைத்தவன்., ” நீதா நான் என்ன முடிவெடுத்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான் இருக்கும் ன்னு நம்புற இல்லை”., என்று கேட்டான்.,

“ஆமா., அதுல என்ன டவுட்”., என்று அவளும் பதில் சொன்னாள்.,

“சரி நான் சொல்றத., நீ சரியா கேளு”., என்று சொன்னவன்., “ரெண்டு பேர் வீட்லயும் இனியும் சம்மதம் கிடைக்கும் எதிர்பார்க்குறீயா”., என்று கேட்டான்.

“இல்ல நிச்சயமாக சம்மதம் கிடைக்காது”., என்று சொன்னாள்.,

“சரி இப்ப நீ தான் சொல்லணும்., நீ தான் முன்னாடி சொல்லுவ., 2 பேமிலி சம்மதத்துடன் நம்ம கல்யாணம் நடக்கணும்னு., இப்போ ரெண்டு பேமிலியும் சம்மதிக்காது ன்னு தெரியும்., இவங்க பெர்மிஷன் வாங்குவதற்காக இன்னும் உட்கார்ந்துட்டு இருந்தா.,

உன்னை கட்டாயப்படுத்தி யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்து வாங்க., அல்லது நீ சொன்ன மாதிரி எங்க வீட்ல கைய கால கட்டி என்னைய ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாங்க., என்ன செய்யணும் நீ தான் சொல்லு”., என்று சொன்னான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள்., “2 ஃபேமிலி ல ஒரு ஃபேமிலி கூட சம்மதிக்க மாட்டாங்க இல்ல”., என்று கேட்டாள்.,

“சந்தேகம் தான் என்ன பண்ணலாம்., நீ தான் சொல்லு”., என்று கேட்டான்.

“நீங்க யோசிச்சி முடிவு பண்ணுங்க., எனக்கு ஒன்னும் புரியல”., என்று சோர்வாக சொன்னாள்.,

“ஏன் அதுக்குள்ள டல்லாகுற., சொன்னா கோவிச்சுக்க மாட்ட இல்ல”., என்று கேட்டான்.,

“இல்ல கோச்சுக்க மாட்டேன்., சொல்லு”., என்றாள்.,

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா”., என்று கேட்டான்.

அதிர்வது இப்போது இவள் முறை ஆயிற்று.,”நெஜமாவா சொல்றீங்க., உங்க வாயில இருந்தா இந்த வார்த்தை சொல்லுறீங்க”., என்றான்.

“இதை சொல்ல என் பக்கத்து சீட் காரன் ட்ட வாயை கடன் வாங்கிட்டு வந்தா சொல்ல முடியும்., நான் தான் சொல்றேன்., இப்ப உன் பதிலை சொல்லு”., என்றான்.

“இல்ல சில நேரம் நான் டென்ஷன் ல வீட்டை விட்டு வரப்போறேன் சொன்னா கூட நீங்க தானே சொல்லுவீங்க., அப்படி கல்யாணம் பண்ணிக்க கூடாது ன்னு., அதனால் தான் என்று கேட்டேன்”என்றாள்.

“ஒண்ணுமில்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம்., ஆனா ஆபீஸ் வேர்கிங் டேஸ் ஐ பதிந்து வைக்க சொல்லுவாங்க., நான் எதாவது வேற ஏற்பாடு பண்ண முடியுமா., என்று பார்க்கிறேன்.,

என் ப்ரெண்டும் இன்னைக்கு விசாரிச்சு சொல்றேன் ன்னு சொல்லி இருக்கான்., ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் உடனே அவங்ககிட்ட பேசி பார்க்கலாம்”., என்று சொன்னான்.

சற்று நேரம் அவளிடம் இருந்து பதில் வராமல் போக “ஏன் என்ன ஆச்சு”., என்று கேட்டான்.

“இல்லை”., என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தவள் கல்யாணம் பண்ணிக்கலாம்., “ஆனா ஆனா” என்று இழுத்தாள்.

“என்ன ஆனா ன்னு இழுத்து சொல்லுற”., என்றான்.

“கொஞ்ச நாள் வீட்டு பர்மிஷன் காக வெயிட் பண்ணலாமா”., என்றாள்.

“வீட்டுல கண்டிப்பா கேட்கனும் னா., சொல்லு இரண்டு பேரும் போராடி வேணா பேசி பார்ப்போம்”., என்று சொன்னான்.

“நீயும் நானும் ஒரு ஹவுஸ் மேட் மாதிரி ஒரே வீட்டில் தங்கிக்கலாம்., அப்புறம் பெர்மிஷன் கேட்டு பார்க்கலாம்., அதுக்கு இடையில நம்ம வீட்டுல ரெண்டு வீட்ல., ஏதாவது ஒரு வீட்டில் நம்மல ஆசிர்வாதம் பண்ணா கூட போதும்”., என்று சொன்னான்.

அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன் “ஓகே ஓகே” என்றான்.

“தப்பா ஏதாவது கேட்டேனா., கோபமா”., என்று கேட்டாள்.

“நானே டென்ஷன் ல இருக்கேன்., என்னென்ன நடக்கப் போகுதோ ன்னு கொஞ்சம் பயந்து போய் இருக்கேன்., ஒரு கோவமும் இல்லை”., என்று சொன்னான்.,

“சரி ஓகே., அப்போ நீ மத்ததெல்லாம் என்ன தேவைப்படும் ன்னு கேட்டு சொல்லு”., என்று சொன்னாள்.,

“டிடெயில்ஸ் கேட்டுட்டு சொல்றேன்., சப்போஸ் உடனே பண்ண முடியாதுன்னா., அவங்க சொல்ற மாதிரி பீப்டீன் டேஸ் வெயிட் பண்ண வேண்டியது இருக்கும்”., என்று சொன்னான்.,

“ஏழு வருஷமா இருந்துட்டோம்., இன்னும் பதினைந்து நாள் தானே”., என்று சொன்னபடி போனை வைத்தாள்.,

நினைப்பதெல்லாம் நடப்பதே கிடையாது என்பது காதல் விஷயத்தில் எத்தனையோ உண்மை.,

நம்பிக்கையை இழந்து எல்லாம்
முடிந்துவிட்டது என்று
எண்ணாமல் இது முடிவு
இல்லை.. ஒரு சிறிய வளைவு
தான் என்றெண்ணி நாம்
முன்னேற வேண்டும்..!

Advertisement