Advertisement

2

உன்னோடு காதல்
வந்த உவகை
உள்ளம் நிறைந்து
இருந்தாலும்.,
ஏனோ காதல்
போராட்டம் மனம்
வெறுக்க வைக்கிறது.,
காதல் காலம்
கடினமானது.,

அலுவலகத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வேலையே ஓடவில்லை., அவனுடைய கல்லூரி காலத்திற்கே நுழைந்து விட்டது போல தோன்றியது.,

எம்பிஏ கடைசி வருடம் படிக்கும் போது நீதா கல்லூரியில் முதலாமாண்டு வந்து சேர்ந்தாள்.,

பார்த்தவுடனேயே கேரளா என்று சொல்லுமளவிற்கு ஆளை அடையாளம் காணலாம்., அப்படி இருந்தாள்.,

ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் என்பதால் நெற்றியில் சிறிய பொட்டோடு வருவாள்.,

அவள் கிறிஸ்தவ பெண் என்று தெரியாமலேயே அவள் பின்னே அவன் மனம் செல்லத் தொடங்கி விட்டது.,

மதம் என்பது காதலுக்கு இல்லை என்பது அப்போது அவனுக்கு புரிய தான் செய்தது.,

ஆனால் அதை வீட்டிற்கு புரிய வைக்க தான் அவனுக்கு முடியவில்லை., மனம் கவர்ந்தவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டாலும்., நேரில் சொல்லவில்லை.,

இவன் பார்ப்பதை உணர்ந்ததாலோ., என்னவோ அவளும் அவனை திரும்பி பார்க்க தொடங்கியிருந்தாள்., இருவரும் பேசிக் கொள்ளாமலே ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கி இருந்தனர்.,

இது முற்றுப்பெறும் நாளாக அவர்களது கல்லூரி கல்ச்சுரல் பங்ஷன் நடந்தது., அப்போது அவன் அவளிடம் ஜாலியாக கேட்பது போல “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”., என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் தோளை தாண்டிய உயரத்திற்கு இருந்தாள்., அவனும் நல்ல உயரம் தான்., அவனின் தோள் அளவுக்கு இவளும் ஓரளவுக்கு உயரமாக இருந்தாள்.,

நிமிர்ந்து நேராக அவன் கண்ணை பார்த்தவள்., அவன் விளையாட்டிற்கு சொல்கிறானா., நிஜமாக சொல்கிறானா., என்பதை ஆராய்ச்சியாக அவன் கண்ணையே நோக்கினாள்.,

அவன் சிரித்தபடி “கிண்டலுக்கு கேக்கல., நிஜமா கேட்கிறேன்”., என்று சொன்னான்.,

“எனக்கு இப்ப தான் 18 வயசு கம்ப்ளீட் ஆகுது., படிச்சு முடிக்க வேண்டாமா”., என்று கேட்டாள்.,

அவனும் சிரித்துக் கொண்டே “அப்ப ஓகே தானே”., என்று கேட்டாள்.

“நான் எப்ப ஓகே சொன்னேன்”., என்றாள்.,

இப்பொழுது நீதா வோ குழம்பி தான் போனாள்., “அது என்ன ஒருத்தர ஒருத்தர் பார்த்தா காதல் வந்துடுமா”., என்று அவளை அவளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.,

ஏனோ அவளால் அவனை இதுவரை வெறுக்க முடியவில்லை. அவர்கள் பேசாத நாட்கள் எல்லாம் சேர்த்து அதன் பிறகு பேச தொடங்கினர்.,

அவனுடைய படிப்பு முடிந்து வெளியே போனாலும்., எப்படியும் இவளை பார்ப்பதற்கு என்று வாரம் ஒரு முறை கல்லூரிக்கு வந்து விட்டு செல்வான்., இது ஓரளவுக்கு கல்லூரி தோழமைகளுக்கு மட்டும் தெரியும்.,

கல்லூரியில் சந்திக்க முடியவில்லை என்றால் வெளியே உள்ள இடங்களில் எங்காவது பார்த்து பேசிவிட்டு தான் போவான்.,

அதைத்தவிர அலைபேசியில் இருவரும் பேசிக் கொண்டாலும்., அவர்களுக்கான காதல் அழகாக வேரூன்றி வளரத் தொடங்கியது., அப்போதெல்லாம் இருவருக்கும் தங்கள் குடும்பங்களை பற்றிய எண்ணமே மனதில் தோன்றவில்லை.,

அவர்களுடைய எண்ணங்களெல்லாம் திருமணம் செய்தால்., தங்களது வாழ்க்கை எப்படி நேர் செய்ய வேண்டும்., ஒருவேளை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதைப் பற்றிய யோசனையில் இருந்தனர்.,

பிரணவ் ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம் அதனால் அவன் அப்படியே வேலையை தொடர்ந்தான்.,

இவள் படிப்பை பார்ப்பது என் முடிவு செய்து கொண்டனர்., இவளும் கடைசி வருடம் படிக்கும் போதே பேங்க் எக்ஸாம் மற்ற போட்டித்தேர்வுகள் என எழுத தொடங்கியிருந்தாள்.,

முதல் முறை தேர்விலேயே வேலை கிடைத்தது., படிப்பை முடித்து வெளியே வரும் போது தன் வேலையில் சேரும் அளவிற்கு வேலையோடு வெளியே வந்தாள்.,

பின்பு அவளும் வேலையில் சேர்ந்து விட்டாள்.,

இதோ வருடங்கள் கடந்து கொண்டிருக்கிறது., கிட்டத்தட்ட அவள் படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் தாண்டி விட்டது., வீட்டில் மாப்பிள்ளை என்று பேச்சு எடுத்தால் “இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்”., என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.,

ஏதேதோ காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தாள்., வீட்டில் உள்ளவர்களுக்கு சற்று சந்தேகம் வந்தாலும்., இல்லை அவள் அப்படி இல்லை என்பதில் நம்பிக்கையுடன் இருந்தனர்.,

பிரணவ் வீட்டிலும் அப்படித்தான் அவன் எம்பிஏ முடித்து இதோ ஆறு வருடங்கள் கடந்துவிட்டது., வயது முப்பது ஆகப்போகிறது என்று தான் பெண் பார்க்க வீட்டினர் அவசர படுத்திக் கொண்டிருக்கின்றனர்.,

அவர்கள் குடும்பத்தில் எல்லாம் 27 முடிந்து 29-க்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள்., இவன் தான் இதோ அதோ என்று இழுத்தடித்தான்.,

இப்போது முடிவாக திருமணம் என்ற தீர்மானத்தில் அவர்களின் பெற்றவர்கள் இறங்கி இருந்தனர்.,

என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறான்.

நீதா க்கும் வயது 25 தொடங்குவதால்., வீட்டில் மும்முரமாக மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் இறங்கி விட்டார்கள்.,

ஆனால் நீதாவின் தம்பிக்கு மட்டும் சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

அன்று காலை உணவின் போது., வீட்டிலிருந்து போன் வந்தது.,

“பிரணவ் பொண்ணு பார்த்தாச்சு டா., ஜாதகமும் பொருந்தி இருக்கு”., என்று சொன்னவர்.,

இந்த வாரம் குடும்பத்தினர் அனைவரும் சென்னை வருவதாகவும் சொன்னார்., அதுமட்டுமல்லாமல் பொண்ணை பற்றிய விவரங்களைக் கூறினார்., “சென்னையில் தான் அவங்க இருக்காங்க., பொண்ணு பிஇ படிச்சிருக்கு., இந்த வருஷம் படிப்ப முடிச்சிருக்கு., நாங்க கூட எட்டு வயசு வித்தியாசம் அப்படின்னு யோசிச்சோம்.,

ஆனால் அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க., உன் போட்டோ அனுப்பிட்டோம்., பொண்ணு போட்டோ நாங்க தான் வெச்சிருக்கோம்., உன்னோட போன் க்கு அனுப்ப வா”., என்று கேட்டார்.,

“இல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டான்., அவனால் அப்படி ஒரு விஷயத்தை எதிர்கொள்ள கூட முடியவில்லை.,

அவர் போன் வந்து சற்று நேரத்தில் என்ன நீதா போன் வந்தது., “சொல்லுடா நீத்து” என்று சொன்னான்.,

“பிரணவ் வீட்ல அப்பா அலெயன்ஸ் பார்த்து இருக்கேன்னு சொல்றாங்க., இந்த சன்டே சர்ச்சில் வச்சு பொண்ணு பாக்க வராங்க ன்னு சொல்றாங்க., எனக்கு பயமா இருக்கு., இத்தனை நாள் ஏதேதோ சொல்லிட்டேன்., இந்த முறை அம்மா ஒருமாதிரி டவுட் ஆ இருந்தாங்க., நீயேன் எதுக்கெடுத்தாலும் கல்யாணம் வேண்டாம் அப்படின்னு சொல்றே ன்னு கேட்குறாங்க., கொஞ்சம் பயமா இருக்கு”., என்று சொன்னாள்.,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல., டென்ஷன் ஆகாம இரு பார்த்துக்கலாம்., பொண்ணு பார்க்க தானே வர்றாங்க., என்னமோ கல்யாணமே ஆகுற மாதிரி பயப்படுற”., என்று சொன்னான்.

“அப்படி ஒரு நினைப்பு இருக்கா., உன்னை கொன்னுருவேன் பாத்துக்கோ., என்னை ஏமாற்றி கலட்டி விடலாம் நினைச்ச., உன்னை கொன்னுட்டு., நானும் செத்துருவேன்”., என்று சொல்லி மிரட்டினாள்.,

“ஏய் லூசு மாதிரி பேசாதடி., எங்க இருக்க., ரயில்வே ஸ்டேஷன் ல வைச்சிட்டு என்ன பேசுற., பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க”., என்று சொன்னான்.,

“என்னோட இடத்தில் இருந்து பாரு., உனக்கு அப்பதான் தெரியும் என்னோட கஷ்டம்., உனக்கு எப்படி புரியும்., என் மனசுல இருக்க பயமும், டென்ஷனும் எனக்கு தான்”., என்று சொல்லிவிட்டு கோபமாக போனை வைத்துவிட்டாள்.

அதுவே அவனுக்கு மிகவும் வருத்தமாக தான் இருந்தது., ‘ஏன் இப்படி பண்ற யோசிக்க மாட்டாளா’ என்று நினைத்தவருக்கு புரியவில்லை., அவள் இடத்திலிருந்து யோசித்தால் தான் அவளின் வலி என்னவென்று அவனுக்கு புரியும்., அது புரியாத போது என்ன செய்வது.

அவள் வேலை பார்க்கும் இடம் சற்று தள்ளி இருந்தது., அவர்கள் வீட்டிலிருந்து எலக்ட்ரிக் ட்ரெயினில் போய்விட்டு தான் வரவேண்டும்.,

‘சீக்கிரத்தில் அருகில் உள்ள இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்க வேண்டும்’., என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.,

ஆனாலும் ‘இவன் என்ன சொல்வான்., ஒரு வேளை திருமணம் என்று ஏதாவது நடந்தால் இடத்தை அதற்கு தகுந்தாற்போல் யோசிக்க வேண்டும்’., என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.,

‘சில சமயங்களில் ஏண்டா காதலிச்சோம்’., என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இப்பொழுதெல்லாம் மனதின் தவிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.,

‘என்ன வாழ்க்கை இது., ஏன் இப்படி அலைக்கழிக்கிறது’., என்றும் யோசிக்கத் தொடங்கி இருந்தாள்.,

‘தெரியாம லவ் பண்ணி விட்டோமோ’., என்று பீல் பண்ணும் அளவிற்கு தான் இப்போதெல்லாம் அவனுக்கும் இவளுக்கும் சில நேரங்களில் வாக்குவாதங்கள் தோன்றுகிறது.,

இது தான் வாழ்க்கை என்பது இருவருக்கும் புரிந்தாலும்., குடும்பங்கள் முக்கியம் என்ற எண்ணத்தோடு தான் விட்டுக்கொடுத்தும்., விட்டு பிடித்தும் சென்று கொண்டிருக்கிறார்கள்.,

யோசனையோடு பயணத்தில் இருந்தவளுக்கு மனம் அந்த மின்சார ரயிலை விட அதிகமாக படபடத்து ஓடிக்கொண்டிருந்தது.,

‘இதோ இன்று செவ்வாய்க்கிழமை ஆகிவிட்டது., ஞாயிற்றுக்கிழமைக்கு வெகுதூரமில்லை., வீட்டில் ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் பிரணவ் இடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை என்றால்., தான் என்ன செய்ய வேண்டும்., என்ன முடிவு எடுக்க வேண்டும்’., என்று எந்த எண்ணமும் தோன்றாமல் மனம் முழுவதும் வலியோடு இருந்தாள்.,

அவ்வப்போது இவள் படும் பாட்டை பார்த்து தோழிகள் தான்., “தேவையா இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம்”., என்று கேட்பது உண்டு.

இது இவளுக்கும் தோன்றியது., ‘இதெல்லாம் தேவையா’ என்று.,

‘ஒருவேளை சரியான முடிவு எடுக்காவிட்டால்., என்ன செய்வது ஞாயிற்றுக்கிழமை தந்தை பெண் பார்க்க வருபவர்களுக்கு அவர்களுக்கு சாதகமான பதிலை சொல்லி விட்டால்., என்ன செய்வது., எத்தனை ஈஸியாக சொல்லி விட்டான்., பெண் பார்க்க தானே வருகிறார்கள் என்று., தன்னால் அப்படி முடியுமா’., என்ற பதட்டத்தோடு இருந்தவளே., ‘முடியாது இத்தனை நாட்களாக அவன் தான் கணவன் என்று மனதில் நினைத்து விட்டேன்., மதமோ ஜாதியோ பார்த்திருந்தாள் இந்த காதல் வந்து தொலைத்து இருக்காதே.,

அந்த வயதில் எதுவும் தோன்றாமல் அவன் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னவுடனே., பல்லை காட்டிய வெட்கம் கெட்ட மனது தானே இது., இப்பொழுது மட்டும் என்ன வலியும் வேதனையும் அனுபவிக்க தானே வேண்டும்’., என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.,

‘தேவையா உனக்கு என்று அவளுக்கே மனம் கேட்க துவங்கினாலும்., சில நேரங்களில் அவனின் குரலைக் கேட்ட உடனே அத்தனை கோபங்களும் பறந்து விடுகிறது., அப்படி என்றால் அதற்கு பெயர் என்ன’., என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘இதற்கு மேல் யோசிக்காமல் இருக்க வேண்டும்., பாங்க் வேலையில் குளறுபடி செய்து விடுவோம்’., என்ற எண்ணத்தோடு ட்ரெயினில் இருந்து இறங்கி தான் வேலை பார்க்கும் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.,

நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால் ஒருவரின்
ஏமாற்றத்திற்கு முக்கிய
காரணமும் இந்த
நம்பிக்கை தான்..!

Advertisement