Advertisement

15
கரைசேர ஒரு கை
நீட்டினால்.,
நட்பு என்ற ஒற்றை
கரம்.,
ஓராயிரம் கரத்தின்
பலத்தோடு
துணை நிற்கும்.,

            வீட்டினுள் நுழைந்தவர்கள் சற்று நேரம் திகைத்துப் போய் நின்றிருந்தனர்., ஏனெனில் நண்பர்களின் ஏற்பாடு அவர்களை கண்கலங்க செய்தது., வீட்டை பார்ட்டி ஹால் போல் மாற்றியவர்கள்., ஹாலின் ஓரத்தில் சாப்பாடு விதவிதமாக ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்தனர்.,

         இவர்கள்  பார்த்துக்கொண்டிருக்கும் போதே இருவர் கண்ணையும் கட்டினர் நண்பர்கள்.,

          “அதுதான் வீட்டை பார்த்துட்டோமே.,  இன்னும் எதுக்கு டா கண்ணை கட்டுறீங்க”., என்று அவனிடம் கேட்டனர்.

                        “ச்சூ., சத்தம் கேட்க கூடாது”., என்று சொன்னவன் “அப்படியே உட்காருங்க” என்று இருவரையும் உட்கார வைத்தான்.,

          சற்று நேரத்தில் சில பல சத்தமும் சலசலப்பும் ஆக இருந்தது.,சிறிது நேரம் நண்பர்களின் பேச்சு சத்தம் கேட்டது.

           இப்போது கண்ணை திறக்க பார்த்தவர்கள் இருவருக்கும் கண்ணீர் தான் வந்தது., அவன் கையைப் பிடித்தபடி அவன் தோளில் தலையை சாய்த்துக் கொண்டவளுக்கு வீட்டில் நின்றவர்களை பார்க்கும் போது நம்பவே முடியவில்லை.,

           இது நிஜம்தானா என்று தான் முதலில் தோன்றியது., ஏனெனில் அவன் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் முதல் அனைவரும் வந்திருக்க., அவள் வீட்டில் அம்மா அப்பா தம்பி என அனைவரும் அங்கு தான் நின்றிருந்தனர்.,

        அவள் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அவன் தோளில் சாய்ந்து விட.,  அவன் அவளை சேர்த்து பிடித்தபடி கண்கலங்க நின்றான்.

        வீட்டு பெரியவர்கள் தான்., “வந்து ஆசிர்வாதம் வாங்குங்க”., என்றனர்.,

          “இவன் இருக்கானே”., என்று அவன் நண்பனை பார்த்தவர்கள்., பிரணவ் டம் திரும்பி  “உன் பிரண்டு எங்கள பாடா படுத்தி எடுத்துட்டான்.,  ஒரு நாளைக்கு அத்தனை போன் பண்ணுவான்., அது மட்டும் இல்லாம  நீ கூட ஒரு நாளில் ஒரு முறை தான் பேசுவேன்.,  அவன் போன் பண்ணியே எங்களை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்., அவன் டார்ச்சர் தாங்காமல் தான் வந்து நிற்கோம்” என்று ஒருபுறம் மகிழ்வாகவே சொன்னார்கள்.

          வெளியே கோபமாக சொல்வது போல சொன்னாலும்., அவர்கள் பேச்சில் இருந்த மகிழ்வு தெரிந்தது.  அவன் நண்பனை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

          “தேங்க்ஸ்டா மச்சான்”., என்று சொன்னான்.

          “டேய் என்ன கட்டி பிடிக்காத., தங்கச்சி பக்கத்துல இருக்குது”.,என்று சொல்லி அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் முன்பு அமைதியாக நின்றான்.,

         தங்கள் மகனுக்கு நல்ல நட்பு., அன்பான சூழ்நிலைகளும் கிடைத்திருப்பது அவர்களுக்கு மகிழ்வாக இருந்தது.,

        நீதா வின் அம்மாவும் அதையே தான் சொன்னார்., “தினம் எங்களையும் வந்து பார்த்து பேசிக் கொண்டே இருப்பார்., நீ சர்ச்சுக்கு வருவது போல அவரும் வந்து கொண்டு தான் இருந்தார்.,  இத்தனை நாட்களாக நாங்கள் தான் தள்ளி நின்றோம் வேண்டாமென்று.,

      ஆனால் இன்று உன்னை சர்ச்சில் காணவில்லை என்றதும் சற்று பயமாகவும் இருந்தது.,  அதே நேரம் நீ எப்படி இருக்கிற என்று பார்க்க வேண்டும் என்று தான் நெனச்சேன்.,  ஆனா அப்புறம் தான் இந்த தம்பியும் வந்து நீங்க கண்டிப்பா வரணும் னு சொல்லிட்டு போனது ஞாபகம் வரவும் வந்தோம்” என்று சொன்னார்.

      வீட்டின் பெரியவர்கள் தான் அவர்களை கடிந்து கொண்டு இருந்தனர்.,

         ” வீட்டுக்கு தெரியாம லவ் பண்ண தெரியுது.,  வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ண தெரியுது., ஏன் உங்க வாழ்க்கை உங்களுக்கு தொடங்க தெரியாதா., அது மட்டும் நாங்க ஆசிர்வாதம் பண்ணாதான் தொடங்குவேன் ன்னு  என்ன அடம்பிடிக்கிறது” என்று கேட்டனர்.

         பாட்டி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர் “ஏன்டா நானே நீ ஒரு  கொள்ளு பேரப் பிள்ளையை பெற்றுட்டனா., அதை வச்சு உன்னை எப்படியாவது உள்ள கூப்பிடலாம் ன்னு சொல்லி ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தா.,  இவன் வீட்ல ஆசிர்வாதம் வாங்கினா தான் குடும்பம் நடத்துவேன்., ன்னு  பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்திருக்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

         அவனுக்கு தான் வெட்கமாக போய்விட்டது “பாட்டி”., என்றான் சத்தமாக.,

           ” பின்ன என்னடா நானும் எப்படியோ ஒரு கொள்ளுப்பேரன் வந்துட்டான் நியூஸ் வந்துரும்.,  அல்லது உன் பொண்டாட்டி முழுகாம இருக்கா ன்னு சொல்லி நியூஸ் வரும்., அதுக்கு அப்புறமா எல்லாத்தையும் அடிச்சு புடிச்சு  வீட்டுக்கு இழுத்துட்டு வரலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தா.,  உன் பிரண்டு  போன்ல சொல்லுதான்., நீங்க எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணினா  தான் அவன் குடும்பம் நடத்தவே ஆரம்பிப்பான் ன்னு., பிடிவாதமா ரெண்டு பேரும் தனி தனி ரூம்ல இருக்காங்க ன்னு வந்து சொல்லுறான்”., என்று சொன்னார்.

          இருவருக்குமே வெட்கம் வந்து தலை கவிழ்ந்து கொண்டனர்.

            ” எல்லாம் சரிதான்., இன்னும்  மூணு மாசம் டை., உடனே கொள்ளு பேரப்பிள்ளை வேண்டும்” என்று சொன்னார்.

           நண்பனின் மனைவியோ “பாட்டி என்ன பாட்டி இத்தனை பிள்ளை பெற்றுருக்கீங்க.,  இத்தனை பேரப்பிள்ளை பாத்துட்டீங்க., உடனே கொள்ளுப்பேரன் வேணும்னா எப்படி.,  அதெல்லாம் பத்து மாசம் ஆகும்”., என்று சொன்னார்.

             அங்கு மனம் நிறைந்த சிரிப்போடு அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.  பின்பு அவரவர் ஏற்றார் போல பேசி குடும்பங்களை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தனர்.,

        நீதா வின் அப்பாவும் ‘நல்ல குடும்பத்தில் தான் மகள் வாழ போய் இருக்கிறாள் என்ற நிம்மதி இருந்தாலும்., அவரால் ஜாதி மதம் என்ற விஷயத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை., ஆனாலும் எப்பொழுதும் சர்ச்சில் தன் முகம் பார்க்க நிற்கும் மகளை., இன்று மகிழ்வாக பார்ப்பது அவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவே இருந்தது., ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்படியோ அவள் நன்றாக இருக்கட்டும்’ என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்து கொண்டார்.

       அதன் பின்பு நண்பர்கள் அனைவரும் கேக் வெட்டி 100வது நாளை சந்தோஷமாக கொண்டாடி விட்டு., அனைவரோடும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டனர்.

     பின்பு நண்பர்கள் அனைவரும் “நாங்க எல்லாம் வெளிய போறோம்.,
நீங்க பெரியவங்க  எல்லாம் இருக்கீங்களா., எங்க கூட வாரீங்களா”., என்று கேட்டனர்.

       ” நீங்க எல்லாம் போயிட்டு வாங்க பா., நாங்கல்லாம் வீட்டில் இருக்கோம்” என்று சொல்லி பெரியவர்கள் அனுப்பி வைக்க., சிறியவர்கள் அனைவரும் சினிமா பீச் என்று சென்று விட்டு மாலை நேரம் வீடு வந்து சேர்ந்தனர்.,

       அன்று மாலையும் உணவு சமைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு பிரணவ் அனைவரையும் நண்பர்கள் குழுவோடு சேர்த்து சிறந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.,

       அப்போது தான் பாட்டி நீதா விடம் “அவன் அப்படி இருக்கானா., நீயும் அப்படியா., ரெண்டு பேரும் நல்லா சேர்ந்தீங்க ஜோடி.,  சரி இனி மேலாவது ரெண்டு பேரும் நல்ல படியா வாழ்க்கையை தொடங்குங்கள்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

          அதற்குள் நீதா வின் அம்மாவும்., அவனின் அம்மாவும் சேர்ந்து “இத்தனை நாள் காத்து இருந்தது இருந்துட்டாங்க.,  நாங்க நாள் குறிச்சிட்டு வாறோம்” என்று சொன்னார்கள்.

           நண்பர்கள் தான் “போச்சா” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

          “நாள் குறிக்கப் போறீங்களா., இன்னும் எத்தனை நாள் ஆகும்”.,என்று கேட்டனர்.

            “அதுக்கு ஏன்டா நீ அவசரப் படுற., நாள் குறிக்கப் போறது அவனுக்கு தானே., உனக்கு எதுக்கு., நீ எதுக்கு அவசர படுற”.,என்று கேட்டார் பாட்டி.

             நண்பன் மனைவியை அங்கு அத்தனை பேர் இருக்கும் போதே அவனை ஒரு கிள்ளு கிள்ளி., “நீங்க எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க”., என்று சத்தம் போட்டாள்.

       “அது வேற ஒன்னும் இல்ல.,  என் பிரண்டு நல்லா இருக்கணும் இல்ல அதுக்கு தான் கேட்டேன்”.,  என்று சொன்னான்.

         அதெல்லாம் உங்க பிரண்டு இனி மேல் நல்லா தான் இருப்பாங்க., ஏன்னா எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது இனிமேல் நல்லா தான் இருப்பீங்க”.,  என்று சொன்னாள்.

        ” நீ சொன்னா சரி தான்”., என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். அங்கு அவர்களின் சந்தோஷமான கலகலப்பான நிம்மதியான சிரிப்பு., அவர்களது வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்று பறை சாற்றியது.

    மூன்று மாதங்களுக்குப் பிறகு

           பிரணவ் வீட்டில் காலையிலேயே பாட்டியின் அதிகாரம் தூள் பறந்தது.,  “காலையில உன்னை என்ன சொன்னேன்., காபிய கையில் எடுக்கக்கூடாது சொன்னேனா இல்லையா., அந்த ஜூஸ் குடி”., என்று சொல்லி மாதுளம் பழத்தை பிழிந்து வைத்துக் கொண்டிருந்தார்.

        “தாத்தா நீ சும்மா இரு”., என்று சொன்னார்.

       ” உங்களுக்கு எனக்கு தெரியும்., காலையில் மாதுளம் பழம் ஜூஸ் வெறும் வயித்துல குடிச்சா புள்ளதாச்சி பிள்ளைக்கு நல்லது., அதுக்குதான் கொடுத்துட்டு இருக்கேன்”., என்று சொன்னார்.

         பிரணவ் நீதாவிடம் கண்ணை காட்டி “குடி ப்ளீஸ்” என்று சொல்லி கொண்டே இருந்தான்.

              ஏனெனில் அவள் அவளுக்கு நாட்கள் தள்ளிப் போய் இருப்பது தெரிந்த நாளில் இருந்து இங்கே தான் இருக்கிறார் பாட்டி.

            அவளுக்கு வகைவகையாக செய்து கொடுக்கிறேன்.,  நன்றாக கவனிக்கிறேன்., என்று சில உணவு வகைகளை சுத்தமாகத் தவிர்த்து விட்டார்.

        இப்போது அவள் தான் தவித்துப் போனாள்.,  ஆனால் அவர்கள் தன் நல்லதுக்கு தான் சொல்கிறார்கள் என்ற எண்ணத்தோடு கட்டாயப்படுத்தி வாங்கிக் கொள்வாள்.

         பேங்கிற்கு செல்லும் போது மட்டும்தான் காபி குடிக்க முடியும்., ஆனால் அதையும் பேங்கிலுள்ள தோழியை பார்த்து பாட்டி சொல்லி வைத்து விட்டார்., “அதிகமான காபி குடிக்க விடாதே”., என்று அதிலிருந்து அவள் வேறு இவளை ஒரு வழியாக்குகிறாள்.

                       ஏனெனில் டிரான்ஸ்பர் வாங்கி வீட்டின் அருகில் வேலை பார்ப்பதற்காக நீதா வந்துவிட தற்செயலாக.,  அவள் தோழிக்கும் இதே இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் வர இருவரும் சேர்ந்து வந்தார் போல் இங்கு வந்து வேலையில் சேர்ந்து இருந்தனர்.,

        இவளுக்கு இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து 10 நிமிடங்களே பயண நேரம் என்பதால் அவளுக்கும் வசதியாகப் போயிற்று.,

        மதிய சாப்பாடு பாட்டி அவளுக்காக பார்த்து பார்த்து செய்து கொடுத்து விடுவார்.,  அதற்கென்று ஒரு ஆளை வேறு நியமித்து வைத்திருந்தார்.,

         பிரணவ் வை  போட்டு பாடா படுத்தி “அவளுக்கு மத்தியான சாப்பாடு சுடச்சுட தான் கொடுக்கணும்., நல்ல சாப்பாடா தான் கொடுக்கணும்”.,  என்று சொல்லி ஒரு ஆள் ஏற்பாடு செய்ய சொன்னார்.

        அருகில் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனைப் பிடித்து “மதியம் மட்டும் பத்து நிமிஷம் தான் கொண்டு போய் குடுத்திட்டு வா., நான் உனக்கு அதுக்கு தனி சம்பளம் தரேன்” என்று சொல்லி அந்தக் கடையிலும் பேசி ஆளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.

      பாட்டியும் தாத்தாவும் அவளுக்காக அங்கேயே இருந்தனர்.,  நீதாவின் அம்மா அப்பா தம்பி என அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வார்கள்.

       நீதான் அம்மாவும் அவ்வப்போது ஏதாவது சமைத்துக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருப்பார்., அவரும் “பாட்டி சொல்வதை கேளு., அவங்க கரெக்டா தான்  செஞ்சு கொடுப்பாங்க.,  அவங்க கொடுக்கிற படி சாப்பிடு”., என்று சொல்லிவிட்டார்.

         அவள் தான் “ஐயோ என்னால முடியல.,  கொஞ்சம் குறைத்துக்கோங்க பாட்டி., வெயிட் ரொம்ப ஏறிடும் போல”., என்று சொன்னாள்.

              “குழந்தை பிறந்த உடனே அவ்வளவு வேலையும் நீதான் செய்ற ., அதனால ஒடம்பு குறையும்., இப்ப உடம்பு கொஞ்சம் வெயிட் ஏறனும் ஒழுங்கா சாப்பிடு”., என்று சொல்லி அவளுக்கு திணித்துக் கொண்டிருந்தார்.

         காதலில் தவித்து கரை சேர்ந்த காதல்.,
சற்று தத்தளித்தாளும்
உறவுகளோடு சேர்ந்து இருக்கும் போது
அது உன்னதமான காதலாக மாறிவிடுகிறது

          அப்படித்தான் பிரணவ்., நீதா வின் காதலும் நிம்மதியான ஒரு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.,  அவர்களின் நிம்மதி நிச்சயம் அப்படியே இருக்கும்.,  ஏனெனில் ஒருவருக்கு வாழ்க்கை என்பது அவரவர் எண்ணங்களை போல தான் அமைகிறது.,

           உறவுகள் புடைசூழ நல்ல குடும்பத்தில் நல்லபடியாக வாழும் வாழ்க்கை என்பது நிம்மதியும் சந்தோஷத்தையும் பரிசளிக்க கூடிய வாழ்க்கை.,

       குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எங்கும் இல்லை.,  அதில் விட்டுக்கொடுத்து போக கற்றுக் கொண்டால் வாழ்க்கை என்பது வரம் தான்.

                பிரணவ் நீதா குடும்பம் நிச்சயம் நிம்மதியாக வாழும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடை பெறுவோம்.

என்னிடம் இருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்ளுங்கள் என்
நம்பிக்கை மட்டும் எனக்கு
போதும் நான் வெற்றியடைய..!
என்றும் அன்புடன்

                                                                         த.ஆதிபிரபா.

Advertisement