Advertisement

14
காதலில் சுகமும்
உண்டு
வலியும் உண்டு.,
ரணமும் வலியும்
தரும்
அதே காதல் தான்.,
மருந்தும்., சுகமும்
ஆக மாறிப் போகும்.,

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தான்., அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழும்போதே அவளுக்கு மனதில் நம்பிக்கையை இழந்து இருந்தாள்.

         ஏனெனில் திருமணமாகி இந்த மூன்று மாதமும் தொடர்ந்து., அவளும் வாராவாரம் சர்ச்சுக்கு செல்வது தவறவில்லை., அதே நேரம் அவள் தம்பியும் வீட்டில் தன்னை மொத்தமாக வெறுத்து விட்டது போல் பேசுவதை சொல்லி இருந்ததால் தான்., அவளது நம்பிக்கை மொத்தமாக உடைந்திருந்தது.,

           இருவரும் தனித்தனி அறை என்று இருந்தாலும்.,ஏனோ முதல் நாள் பங்க் விட்டு மதியம் வரும் போதே சோர்வாக வந்தவளிடம் பிரணவ் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தான்.,

       அவனுக்கு அன்று வேலை இல்லை அதனால் வீட்டில் இருந்தவன் அவளிடம் கேட்டான்.

     அவளோ தம்பி பேசியதை சொல்லிக் கொண்டிருந்தாள்., “சரி விடு பாத்துக்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

         இவனுமே காலையில் முயற்சி செய்ய வீட்டில் யாருமே பேசவில்லை.,  என்று சோர்வில் இருந்தவன்.,

         “விடு இதுக்கு மேல அதைப் பத்தி பேசாத”., என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்து கொண்டான்.

        ஏனோ அன்று இருவருக்கும் தங்கள் அறையில் படுத்தும் தூக்கம் வராததால் ஹாலில் எழுந்து வந்து அமர்ந்திருந்தாள் நீதா.,

        அதே நேரம் அவனும் தூக்கமின்றி எழுந்துவர ஏற்கனவே ஹாலில் அவள் அமர்ந்திருப்பதை பார்த்தவன்., “என்ன ஆச்சு” என்று கேட்டான்.

               “தூக்கம் வரல.,  ஏத்துக்க மாட்டாங்க இல்ல” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

               “லூசு மாதிரி உளராத பார்ப்போம்., பொறுத்ததே பொறுத்தோம் இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி பார்ப்போமே”., என்று சொன்னான்.,

            “நானும் அதைத்தான் நினைச்சேன் இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்ப்போம்”., என்று சொல்லிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

              அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன் “இன்னைக்கு ஹாலிலே படுத்துறலாமா”., என்று கேட்டான்.,

         “சரி” என்று சொன்னாள். அதன் பிறகு அருகருகே இருந்தாலும் இருவரும் மனதும் ஏனோ குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

    ‘இவ்வளவு தானா தங்கள் வாழ்க்கைச் சாபத்தில் தான் தொடங்க போகிறதா., என்ற பயம் இருந்து கொண்டிருந்தது.,  ஏற்கனவே பேங்கிலுள்ள தோழி நீதாவை திட்டியிருந்தாள்.,

         “ஒரு குழந்தை அப்படின்னு வந்ததுக்கு., அப்புறம் கூட அவங்க உன்னை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கு., நீ ஏன் இப்படி யோசிக்கிற”., என்று சொல்லி சத்தம் போட்டிருந்தாள்.

           அது போலவே பிரணவ் வின் நண்பர்களும் அவனை சத்தம் போட்டிருந்தனர்., அவற்றை யோசித்துக்கொண்டே படுத்திருந்தான்.,

      அவள் தூங்காமல் இருப்பதை பார்த்தவன் அவளை எப்போதும் சமைக்கும் போது தன்னோடு சேர்த்து பிடிப்பது போல பிடித்துக் கொண்டவன்., “அமைதியாக தூங்கு., ரொம்ப யோசிக்காமல் விடு பாத்துக்கலாம்., நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே சர்ச்சுக்கு போகும் போது உங்க வீட்ல ஏதாவது ரெஸ்பான்ஸ் இருக்கா என்னன்னு பார்த்து விடுவோம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

              “சர்ச்சுக்கு போக வேண்டாம் விடுங்க., நாளைக்கு நான் சர்ச்சுக்கு போக போறது இல்ல., கடவுளே இல்லையோன்னு தோணுது”., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

        அவனும் “அப்படி சொல்லாத மதம் விஷயத்தில் எப்படியோ., நமக்கு இரண்டு கடவுள் இருக்குனு நம்பு., நானும் தான் கோயிலுக்கு போறேன்., நீயும்  தினம் பிரேயர் பண்ணுற., 2 சாமில ஏதாவது ஒரு சாமி கூட ஹெல்ப் பண்ணாதா”., என்று அவளை சத்தம் போட்டு அமைதிப்படுத்தி கொண்டிருந்தான்.

           பின்பு அதன் பின்பு எப்போது இருவரும் தூங்கினார்கள் என்று தெரியாது பேசிக்கொண்டே இருந்தவர்கள் அப்படியே தூங்கிப் போயிருந்தனர்.

       காலையில் எழும் போது அவன் அணைப்பில் இருந்தாலும் நிச்சயமாக அதில் காதலை தவிர வேறு ஒன்றுமே இல்லை.,

          ‘காமம் இல்லாத காதல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் காமம் என்பது அவரவர் மனதைப் பொறுத்தது தான்., வெறும் காதலோடும் நிம்மதியாக வாழமுடியும்,  கூடல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை புரிந்து கொண்டவர்களால் உணரமுடியும்., அதை நினைத்தபடி எழுந்தவள் அவள் படுத்திருந்த இடத்தில் இருந்து தலையணை போர்வை எடுத்து வைக்கும் போதே அவனும் எழுந்து விட எழுந்து சோபாவில் படுத்துக்கொண்டான் ,

          பின்பு அவள் அவனுடைய போர்வை தலையணை எடுத்து அறையில் போட்டுவிட்டு எப்போதும் உள்ள வேலைகளை தொடங்கியிருந்தாள்.,

          அவன் வந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்., காலை உணவை மட்டும் தயாரித்து விட்டு மதியம் நிதானமாக செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தாள்.

          அவள் தான் கிளம்பாமல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவனும் “ஏன் நீத்து சர்ச் கிளம்பலையா”., என்று கேட்டான்.

            “பாத்துக்கலாம் இந்த வாரம் போகட்டும்.,அடுத்த வாரம் பார்க்கலாம்”., என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள்.

        “ஏண்டா உடம்பு முடியலையா”., என்று கேட்டான்.

         “அப்படிலாம் இல்ல., இன்னைக்கு போக மனசில்ல அவ்வளவு தான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வீட்டின் காலிங் பெல் அடித்தது.

      திறந்து பார்த்தால் நண்பர்கள் கூட்டம் வந்து நின்றனர்., “ஏய் என்னடா திடீர் சர்ப்ரைஸ்”., என்று கேட்டான்.

     “ஏன் காலைல சாப்பாட்டுக்கே பங்குக்கு வந்துட்டோமே ன்னு கேட்குறீயா”.,  என்றான் ஒரு நண்பன்.

       “அப்படி  எல்லாம் இல்லடா., இப்ப என்ன அஞ்சு நிமிஷத்துல ஹோட்டல் ஆர்டர் போடுறேன்., எங்க வீட்ல உப்புமா தான்”., என்று சொன்னான்.

         “அடப்பாவிகளா., நாங்க வரோம் தெரியுமா., அது தான் செஞ்சீங்களா டா”., என்று நண்பர்கள் கலாய்த்துக் கொண்டு இருந்தனர்.,

        அவனோ சிரித்தபடி “நீங்க எல்லாம் வர்றீங்கன்னு தெரிஞ்சா., பழைய கஞ்சி வைத்து இருப்பேன்”., என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

             நீதாவோ வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு காப்பி கொடுத்து கொண்டிருந்தாள்.,

       “எதுக்கு வந்திருக்கோம் ன்னு சொல்லு பாப்போம்”., என்று நண்பர்கள் அனைவரும் கேட்டனர்.,

          “எதுக்கு ன்னு தெரியலையே”., என்றனர் இருவரும்.

          “ஏய் இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆகி நூறாவது நாள் அதை செலிபிரேட் பண்றதுக்காக நாங்க வந்திருக்கோம்”., என்று சொன்னார்கள்.

      இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.,

       “ஆமா நீங்க ரெண்டு பேரும் இப்படி சிரிச்சிட்டு இருங்க.,  இதெல்லாம் சரிவராது.,  நம்ம செலப்ரேட் பண்றோம்., பிரணவ் முப்பது நாள், அறுபது நாள் பார்ட்டியை தான் கொடுக்கலை.,  இன்னிக்கி கொண்டாடியே ஆகனும்.,  என்று நண்பர்கள் சொன்னார்கள்.

            இருவரும் “சரி கொண்டாலாம் என்ன செய்யணும் சொல்லுங்க.,என்றனர்.

             “எல்லாம் நாங்களே செய்யுறோம்., நீ எங்களை ஏமாத்திருவ., அது தான்  நாங்களே ஆர்டர் போட்டுக்கிறோம்”., என்று சொன்னார்கள்.

               “டேய் இதெல்லாம் அநியாயம்”., என்று சொன்னவன், “இந்தா பிடி” என்று கையில் பணமாகவே திணித்தான்.,

          பின்பு நண்பர்களோ., “சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று சொன்னார்கள்.

        “எங்களை எங்க  கிளம்ப சொல்ற”., என்று கேட்டான்.

         “அதெல்லாம் கிடையாது., நீங்க ரெண்டு பேரும் கிளம்புறீங்க., உன் காரை எடுக்கிற டீசல் ஃபில் பண்ற., அப்படியே ஈசிஆர் ரோட்டில் ஒரு லாங் டிரைவ் போயிட்டு கரெக்டா ஒன் ஓ கிளாக் வீட்ல இருக்கிற மாதிரி வந்து சேருங்க பார்ப்போம்., ம்ம் ம்ம் கிளம்புங்க கிளம்புங்க”., என்று சொல்லி விரட்டினர்.,

        “டேய் என்னடா பண்ணப் போறீங்க”., என்றான் பிரணவ்.

         “அதெல்லாம் சொல்ல முடியாது., நூறாவது நாள் செலிப்ரேஷன் சொல்லிட்டேன்., இதுக்கு மேல க்ளூ எல்லாம் ஒண்ணும் கிடையாது எடத்த காலி பண்ணு”., என்று நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள்.

          இருவரும் குளித்து கிளம்பவும்.,  “சீக்கிரம் சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க”., என்று சொல்லி விரட்டினர்.

           “டேய் மவனே வீட்டில் ஏதாவது பண்ணி வைக்காதீங்க”., என்று பிரணவ் சொன்னான்.

                  “நீதா தான் சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

           பிரணவ் வின் நண்பன் தான் “டேய் உன் வீடு நீட்டா அழகா அப்படியே இருக்கும்., நீ போயிட்டு அப்புறமா வா”., என்று சொன்னான்.

          அவனும் சிரித்துக் கொண்டே வெளியே  கிளம்பி வந்தான். “எங்க போகலாம்”., என்றான்.

       பின்புறம் வந்து கொண்டிருந்த நண்பன் தான் “ஈசிஆர் ரோட்டில் போக சொன்னோம்”., என்று சொன்னான்.

          ” நீ எதுக்குடா பின்னாடியே வர்ற”., என்றான்.,

          “நீ போறியா இல்லையா என்பதை பார்க்க தான் வர்றேன்.,  எடத்த காலி பண்ணு போ போ”., என்று பின்னே வருவதற்கான காரணத்தை விளக்கினான்.,

          “டேய் ஏண்டா இப்படி பண்றீங்க., என்ன ஹன்ரட் டே செலிப்ரேஷனோ., இப்படி ஒரு அனுபவம் எங்களுக்குக் இருக்கும்னு நாங்க நினைக்கலை”., என்றான்.

         “கையில காசு கொடுத்துட்ட தானே எடத்த காலி பண்ணு., நாங்க எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டு கூப்பிட்டதுக்கப்புறம் வந்து சேரு., நாங்க செலிபரேட் பண்றோம்., நைட் வரைக்கும் உங்க வீட்ல தான் டா இன்னைக்கு கொட்டம்.,  நாளைக்கு நீ அனேகமா லீவ் போட வேண்டியது வரும்., அந்த அளவுக்கு கொட்டமடித்துட்டு தான் நாங்க போக போறோம்”., என்று சொன்னான்.

         இருவரும் சந்தோஷமாக கிளம்பினர்., அப்போது நீதா தான் “உங்க பிரெண்ட்ஸ் ட்ட ஏதும் புலம்புனீங்களா., ரொம்ப ஃபீல் பண்ணிங்களா.,  அதனால் தான் அவங்க எல்லாம் கிளம்பி வந்துட்டாங்களா”., என்று கேட்டாள்.,

          “இல்ல அவன் கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்”., என்று சொல்லி திருமணத்திற்கு உதவி செய்த நண்பனை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.,

           “ஒரு வேளை அதனால கூட வந்திருப்பாங்க நீங்க பீல் பண்ண கூடாது என்பதற்காக”.,என்று சொன்னவள்.,

காரில் ஏறி அமர்ந்தவுடன் “சர்ச்சுக்கு போலாமா” என்று அவன் கேட்டான்.,

       “அதெல்லாம் வேண்டாம்., ஈசிஆர் ரோட்டில் விடுங்க”., என்று சொன்னவள்., “ஏதாவது சைடு பீச் போயிட்டு அப்படியே கொஞ்ச நேரத்துல திரும்பி வருவோம்”.,என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

         அவர்களும் சற்று தூரம் சென்று விட்டு பீச்சில் கால் நனைத்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்., சரி திரும்பலாம் என்று நினைக்கும் போதே.,  அவன் நண்பன் போனில் அழைத்தான்.

        “என்னடா” என்று கேட்டான்.,

        “சரி சரி நீங்க ரெண்டு பேரும் பீச்சில் கால் நனைச்சதெல்லாம் போதும்.,திரும்பி வாங்க”., என்று சொன்னான்.

      “ஏண்டா எப்படி தெரியும்., பின்னாடியே யாரையாவது அனுப்புனீயா என்ன”., என்று கேட்டான்.

        “அட அறிவு கெட்டவனே.,  நீ போன் எடுக்கும் போது அலையோட சத்தம் கேட்டுச்சு., அப்பவே நினைச்சேன் பீச்சில் தான் இருப்பீங்கன்னு., ஏன்டா ஈசிஆர் ரோட்டில் எல்லாம் ட்ரைவ் போங்க ன்னு தானே சொன்னாங்க.,  நீ இங்கேயே சுத்திகிட்டு இருக்க”., என்று கேட்டான்.

          சிரித்தபடி  “இங்கதான் இருக்கிறேன் வந்திடறேன்”., என்று சொல்லி கொண்டே கிளம்ப தொடங்கினான். “வரும் போது ஏதும் வாங்கிட்டு வரவா” என்று கேட்டான்.

        “நாங்க எல்லாம் வாங்கியாச்சு., நீ கெளம்பி வா.,  நீ வரதுக்கு என்ன ஒரு ஹாப் அன்ட் ஹவர் ஆகுமா”., என்று கேட்டான்.

         “20 நிமிஷத்துல வந்துருவேன்”., என்றான்.

           “டேய் மெதுவா வா., ஸ்பீடா வந்தனா உன்னை கொன்னே போடுவேன்.,  இருபது நிமிஷம் கழிச்சு தான் வரனும்.,  20 நிமிஷத்துக்கு முன்னாடி வரக்கூடாது”., என்று சொன்னான்.

            சிரித்துக்கொண்டே “லூசு என்ன பண்ணி வச்சிருக்கானோ., இருபது நிமிஷம் கழிச்சு வர சொல்றான்”., என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினான்.

       பிரணவ் வின் முகத்தில் சிரிப்பை பார்த்தவள்.,  அவன் நண்பர்கள் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவளாக அமைதியாக அவனோடு காரில் ஏறினாள்.,  அவனது மகிழ்ச்சி அவளுக்கும் மகிழ்ச்சி ஆகவே தோன்றியது., நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டாள்.,

         தன்  பேங்க் தோழியும் அப்படித்தானே அடிக்கடி அறிவுரை சொல்லிக் கொண்டு.,  தன்னை முகம் வாட விடாமல் பார்த்துக் கொள்வாள் தானே என்று நினைத்துக்கொண்டே அமைதியாக அவனோடு கடல் காற்றை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.,  அவனும் மெதுவாக டிரைவ் செய்து கொண்டிருந்தான்., இருவரும் பேசிக்கொண்டே வந்தனர்., நீண்ட நாளுக்கு பிறகு புது அனுபவமாக தோன்றியது.

நமக்கு நாமே ஆறுதல் கூறும்
மன தைரியம் மற்றும்
நம்பிக்கை இருந்தால்
அனைத்தையும்
கடந்து போகலாம்..!

Advertisement