Advertisement

13
மனம் தழுவிய
வாழ்க்கை
வாழ வேண்டும்.,
வெறும் உடல் மட்டும்
கூடும் கூடல்
நிறைவற்று போன
வாழ்க்கையாகி
போகும்.,

                     இருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது.

             நீதா வீட்டிலோ நீதா வின் அப்பா அவள் அம்மாவை திட்டிக் கொண்டே இருந்தார். “நீ பிள்ளை வளர்த்த லட்சணம் இதுதான் பார்த்துக்கோ”., என்று சொல்லி திட்டி கொண்டிருந்தார்.

           வேறுவழி இல்லாமல் அமைதியாக திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார் நீதா வின் அம்மா.

       பிரணவ் வீட்டிலோ அதற்கு நேர்மாறாக திட்டு விழுந்து கொண்டிருந்தது.,  பாட்டியை ஆளாளுக்கு திட்டி தீர்த்தார்கள்., “எல்லாம் உங்களால வந்தது.,  நீங்க அவன படிக்க அனுப்பலைனா., அவன் இப்படி போயிருக்க மாட்டான்., இங்கே படித்து இங்கேயே பிசினஸ் பார்த்துட்டு இருந்திருக்கலாம்.,  எல்லாம் நார்மலா இருந்திருக்கும்.,

            நீங்க தான் படிக்க அனுப்பினிங்க.,  நீங்க தான் வேலை பார்க்கவும் பெர்மிஷன் வாங்கி தந்தீங்க.,  இப்பவும் யாருக்கு தெரியும் நீங்க தான் கல்யாணம் பண்ணி வச்சீங்களோ ன்னு தோணுது.,  அன்னைக்கு திருநீறு எல்லாம் போட்டு அனுப்பினீங்களாம்”., என்று தன் அம்மாக்கள் சொன்னதையே சொல்லி கொண்டிருந்தனர். வீட்டின் பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும்.,

            பாட்டியோ “அவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணா., அதுக்கு நான் என்ன பண்ணுவேன்”., என்று கேட்டார்.

           “இந்த வீட்டிலேயே லவ் பாட்டு அதிகமா பார்க்கிறது நீங்க தான் பாட்டி.,  அப்ப நீங்க தான் இதுக்கு எல்லாம் காரணம்”.,  என்று சொன்னார்கள்.,

         “சொல்லுவீங்க ஏன் சொல்ல மாட்டீங்க., அடுத்து அவனுக்கு நான் தான் பொண்ண பார்த்து., இந்த பொண்ண லவ் பண்ண சொன்னேன்னு சொல்லுவீங்க.,  அதையும் சொல்லுங்க”., என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

          “யாருக்கு தெரியும் பாட்டி., நீங்க அந்த வேலையும் பார்த்து இருக்க மாட்டீங்க ன்னு என்ன நிச்சயம்”., என்று சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்.

           வீட்டின் பேரப்பிள்ளைகளோ “எங்களுக்கு மட்டும் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டாங்க., அப்படி இருக்கணும்., இப்படி வளரணும் சொன்னீங்க, ஆனால் அவனுக்கு மட்டும் எல்லாத்தையும் நடத்த பெர்மிஷன் வாங்கி தந்தீங்க”., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

         பாட்டியோ எதையும் காதில் வாங்காமல் “எப்படியோ எடுத்துக்கோங்க., நான் எந்த தப்பும் பண்ணல ன்னு எனக்கு தெரியும்., அவனுக்கும் தெரியும்., அப்படியே  அவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுல எனக்கு சம்மதம் தான்., என்ட்ட சொல்லியிருந்தா நான் அவன் கூட இருந்து இருப்பேன்., எதுக்கு வந்தேன் ன்னு நினைக்க., உங்க தாத்தாவும்.,  உங்க அப்பாவும் கத்துவாங்க ன்னு தான்  பின்னாடி வந்தேன்., அவன் பண்ணது தப்பு தான் ஆனால் இந்த வீட்டில உள்ளவங்க பண்ணுனது சரியா”., என்று பாட்டி பேசிக்கொண்டிருக்கும் போதே தாத்தாவும்.,

           “நீ அன்னைக்கு திருநீர் வைத்து அனுப்பும் போதே எனக்கு சந்தேகம் வந்துச்சு”., என்று சொன்னார்.

            “ஏன் அப்பவே கேட்க வேண்டியது தானே., விட்டா அன்னைக்கு நான் தான் கல்யாணம் பண்ணி வைச்சேன் ன்னு சொல்லுவீங்க போல”., என்று பாட்டி தாத்தாவிடம் திரும்பி கோபத்தை காட்டியவர்.,

               “ஒரு பிள்ளை நல்லா இருக்குறது பிடிக்காதே”., என்று சொன்னார்.

         “நீங்க தான் பாட்டி எல்லாத்துக்கும் காரணம்”., என்று மற்றவர்களின் அழுத்தமான பேச்சும்., அதே நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்த அவரின் மகளும் “அம்மா நீங்க பண்றது எதுவும் சரியில்லை., இப்படியா பண்ணுவீங்க.,  நம்ம குடும்பம் கௌரவம் பற்றி நீங்க யோசிக்காமல் அவனுக்கு சப்போர்ட் வேற”.,என்று சொல்ல வாயை மூடிக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

       அதன் பிறகு அவர் யாரிடமும் பதில் சொல்லவில்லை., குடும்பம் கௌரவம் என்று பேசத் தொடங்கிய பிறகு., எந்த காலத்தில் இருக்காங்க என்ற எண்ணத்தில் அன்றிலிருந்து அதிகமாக டிவி பார்ப்பதையும் நிறுத்திவிட்டார் பாட்டி..

           இங்கோ இவர்களுக்கு நாட்கள் வேகமாக ஓடுவது போல தான் தெரிந்தது., இருவரும் அவர்கள் பேசியது போல ஒரே வீட்டில் இருப்பவர்கள் ஆகவே இருந்து கொண்டனர்.,

           வார வாரம் அவளை சர்ச்சுக்கு அழைத்துச் செல்வான்.,

            அவன் காரில் வெளியே அமர்ந்திருக்க அவள் மட்டும் எப்பொழுதும் போல அவர்கள் குடும்பம் செல்லும் சர்ச்சுக்கு செல்வது தவறவில்லை.,  அவளைப் பார்த்தவுடன் அவளுடைய அப்பா முகம் திருப்பிக் கொண்டாலும்., அவளுடைய அம்மா பார்த்தும் பார்க்காதது போல இருந்து கொள்வார்.,

          ஆனால் தம்பி மட்டும் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது போன் செய்து பேசிக் கொள்வான்., அவர்களது மனம் மாறாதா அம்மா மட்டுமாவது தன்னோடு பேசி விட மாட்டார்களா என்ற எண்ணத்தோடு தான் நீதா சர்ச்சுக்கு சென்று கொண்டிருந்தாள்.

          அது போல பிரணவ் ம் வீட்டிற்கு போன் செய்வது தவறவில்லை.,  முதல் ஒரு வாரம் பத்து நாட்களில் வீட்டில் யாரும் அவன் எண்ணை பார்த்தால் எடுக்காமல் இருந்தனர்.

               பின்பு பெரியப்பா பிள்ளைகளும்., அவனோடு உடன்பிறந்தவர்களும் அவனிடம் “எப்படி இருக்கிறாய்” என்று கேட்கும் அளவிற்கு பேச தொடங்கினர்.

    வீட்டிலுள்ள அப்பா அம்மா பெரியம்மா பெரியப்பா தாத்தா பாட்டி என்று யாரும் பேசாததால் அவர்கள் பேசும் வரை.,  தங்கள் வாழ்க்கையை தொடங்க கூடாது என்பதில் இருவரும் முடிவாகவும் தெளிவாகவும் இருந்து கொண்டனர்.

         இவற்றையெல்லாம் அவன் நண்பன் அறிந்தாலும்., எதுவும் சொல்லவில்லை இதெல்லாம் அவர்கள் விருப்பம்.,  இதில் எல்லாம் நாம் தலையிடக் கூடாது என்று இருந்துவிட்டான் .

           ஆனாலும் அவனுக்கு ‘இவர்கள் காதலித்த காலத்தில் கட்டுப்பாட்டோடு இருந்தது சரிதான்., ஆனால் இத்தனை வருடம் கழித்து திருமணம் ஆன பிறகு இவர்கள் எப்படி கட்டுப்பாட்டோடு இருக்கிறோம் என்று அவர்கள் வாழ்க்கையை அவர்களே கெடுத்துக் கொள்கிறார்களோ’., என்றும் தோன்றியது.

       கிட்டதட்ட 2 மாதம் கடந்த நிலையில் தான்., அவன் தன் மனைவியோடு இதுபற்றி பேசினான்.

           அவன் மனைவி சத்தம் போட்டால் “என்ன நினைச்சிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்., அப்புறம் எதுக்கு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணாங்க., இதுக்கு வீட்டிலேயே இருந்து இருக்க வேண்டியது தானே.,  அவங்களைப் அவங்க பார்க்க வேண்டாமா”., என்று கேட்டாள்.

       அவனுடைய முடிவையும்., அவளுடைய முடிவையும் சொன்னார்கள்., “வீட்டில் உள்ள பெரியவர்கள் வந்து போகாவிட்டாலும்., அட்லீஸ்ட் பேசினால் கூட போதும் என்று நினைக்கிறார்கள்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

           அவன் மனைவி அவனுக்கு சிறு ஐடியா ஒன்றை சொல்லி கொடுத்தாள்., “முடிந்தளவு அவர்கள் இருவர் வீட்டிலும் அவர்கள் பேச முயற்சிப்பது போல.,  நீங்களும் முடிந்தால் சந்தித்துப் பேச முயற்சி செய்யுங்கள்.,  கூட இருந்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டு அவர்கள் வாழ விடாமல் தனித்தனியே பிரிந்து இருக்கிறார்கள் என்பது., கேட்பதற்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது”., என்று சொன்னாள்.

           “வாழாமல் தான் இருக்காங்க., ஆனா இரண்டும் பயங்கர ரொமன்ஸ் தெரியுமா” என்று இவன் சொன்னான்.

              “உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு., கல்யாணம் முடிச்சு ஒரு பிள்ளையைப் பெத்து வைச்சிட்டு ரொமன்ஸ் பத்தி பேசிட்டு இருக்கீங்க”., என்று அவள் சொன்னாள்.

            “அடியே சமைக்கும் போது ஃபுல்லா அவன் பொண்டாட்டி கிட்ட தான் உட்காந்து பேசிக்கிட்டு இருக்கிறான்., ரெண்டு சேர்ந்து சமைக்கிற கதை எல்லாம் சொல்லுவான் பாத்துக்கோ”., என்று சொல்லும் போதே.,

           “நீங்க தானே சொன்னீங்க., ரெண்டு பேரும் லவ் பண்ணும்போது கட்டுபாட்டுடன் இருந்தாங்கன்னு சொன்னீங்க இல்ல., லவ் பண்ணும்போது பண்ண வேண்டிய ரொமான்ஸ் எல்லாம் இப்ப பண்ணிட்டு இருக்காங்ன்னு நினைங்க. இப்ப அவங்க ரொமன்ஸ் பண்ணிட்டு போகட்டு மே உங்களுக்கு என்ன பொறாமை”.,என்று கேட்டாள்.

          “நமக்கு தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ண கொடுப்பினை இல்லை”., என்று நண்பன் சொன்னான்.

          அருகில் இருந்த மனைவியோ அவன் மண்டையில் வேகமாக ஒரு கொட்டு வைத்து., “ஓ அப்படி வேற நெனப்பு இருக்குதா”., என்று சொன்னவள்., “தொலைத்து விடுவேன் தொலைத்து., ஒழுங்கு மரியாதையா இருக்கணும்”., என்று சொல்லி அவனை மிரட்டி கொண்டிருந்தவள் அவர்கள் வீட்டிற்கு பேச சொல்லவும் தவறவில்லை.

       அதன் பின்பு அவனும் அவர்களோடு பேச முயற்சி செய்து தோல்வியைத் தான் தழுவினான்., இருந்தாலும் தன் நண்பனுக்காக பேச முயற்சி செய்வதில் தவறில்லை என்று நினைத்துக்கொண்டான்.,  ஆனால் அது பற்றி எதையும் பிரணவ் விடம் சொல்லவில்லை..,

பிரணவ் வீட்டிலோ.

           காலை நேரம் காபி போட்டுக் கொண்டிருந்தவளை பிரணவ் பின் புறம் இருந்து அணைத்தபடி அவள் தோளில் தலையை வைத்த படியே., “நீ சீக்கிரம் எழுந்துடீயா” என்று கேட்டான்.

      “இப்ப எதுக்கு இப்படி ஒரு ஹக்”., என்றாள். அவள் தோளில் தலை சாய்த்து இருந்த அவன் முகத்தில் தன் கன்னம் பதித்த படி.,

         “நம்ம லவ் பண்ணும் போது மத்தவங்க மாதிரி இல்லாம ரொம்ப சுத்தமான நல்ல பிள்ளையாக தான் இருந்தோம் இல்லை”., என்றான்.

       “இப்ப அதுல உங்களுக்கு என்ன வருத்தம்” என்று கேட்டாள்.

         அவனும் “இல்ல அப்ப நாம அப்படி இப்படி இருந்திருந்தா., நம்மள தப்பு சொல்வதில் நியாயம் இருக்கு.,  நம்ம ரொம்ப நல்ல புள்ளையா தான் இருந்தோம்.,  இப்பவும் பாரேன் நம்ம கல்யாணம் பண்ணிட்டு கூட ரொம்ப நல்ல புள்ளையா தான் இருக்கிறோம்.,  ஆனால் ஏன் நம்ம பேரன்ஸ் க்கு புரிய மாட்டேங்குது”., என்று கேட்டான்.

         அவனைத் திரும்பிப் பார்த்தவள் “அவங்க பக்கம் உள்ள நியாயத்தை நாம யோசிச்சு பார்க்கணும்., நம்ம பக்கமும்  தப்பு இருக்கு தானே”., என்று சொல்லும் போதே.,

           “நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனது தப்புன்னு சொல்கிறாயா”., என்று கேட்டான்.,

          “லவ் பண்ணி கல்யாணம் பண்றது தப்புன்னு நான் சொல்லல., ஆனா பேரண்ட்ஸோட சின்ன சின்ன உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நாம அப்படி வளர்ந்துட்டோம்.,  நம்ம வளர்ந்த விதம் அவர்களுடைய எதிர்பார்ப்பை அதிகம் ஆகிட்டு., வேற ஒன்னும் இல்ல., நம்ம வளர்ந்த விதத்தில்  நம்ம பேரன்ட்ஸ் நம்மை எதிர்பார்த்ததுட்டாங்க.,  நம்ம சொன்னதை கேட்பாங்க., நம்ம சொன்னதை மட்டும் தான் செய்வாங்கன்னு எதிர்பார்க்கிறாங்க..,  அவ்வளவு தான்., அதே இது நம்ம அவங்க பேச்சைக் கேட்க மாட்டோம்., அப்படின்னு முதலிலேயே தெரிந்திருந்தால் கண்டிப்பா நம்மளை இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.,

          தறு தல இப்படித்தான் இருக்கும் அப்படின்னு நினைச்சுப்பாங்க.,  நம்ம வீட்ல வளர்ந்த விதம் ரொம்ப நல்ல புள்ளையா வளர்ந்திட்டோம்.,  அதனால தான் அவர்களுடைய எதிர்பார்ப்பு அப்படி இருக்கு”., என்று சொன்னாள்.,

              அவர்களிடம் சிறுசிறு உரசல்களும்.,  சிறுசிறு விவாதங்களும் இருந்தாலும்., சிறிய அணைப்பு சிறிய முத்தம் என்று அவர்களது வாழ்க்கையும் போய்க்கொண்டிருந்தது.

               ஆனால் திருமண வாழ்க்கைக்கான மற்ற விஷயங்களில் அடி எடுத்து வைக்காமல் தங்களை தாங்களே கட்டுப்பாட்டோடு வைத்திருந்தனர்.

        காரணம் பெற்றோர்களுக்காக பெற்றோர்களில் யாராவது ஒருவர் இரண்டு குடும்பத்திலும் பேசிவிட்டால் போதும் என்ற எதிர்பார்ப்பை தவிர இருவரிடமும் வேறு எதுவும் இல்லை.,

         அவர்களிடமிருந்து எதுவும் வாங்கிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். அவர்கள் பேசினால் மட்டும் போதும் அவர்களுடைய ஆசிர்வாதம் இருந்தால் போதும் தங்களது வாழ்க்கை நன்றாக இருக்கும்.,

         நிச்சயமாக சாபத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது என்பது இருவரும் பேசி யோசித்து வைத்திருந்தனர்.,

         தங்களது வாழ்க்கை சந்தோஷமாக தொடங்க வேண்டும்., அதே நேரத்தில் தங்களது குடும்பம் மற்றவர் சொன்னது போல உறவுகள் இல்லாமல் வாழ முடியாது.,அந்த உறவுகளுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருவரும் காத்திருக்க தொடங்கியிருந்தனர்.,

           இதை பெற்றவர்கள் புரிந்து கொள்வார்களா என்பதுதான் இப்போது அவர்களுக்கு கேள்விக்குறியாக இருந்தது., அவர்களை சேர்த்து வைத்து விட தான் அவன் நண்பனும் அவர்கள் வீட்டில் பேச வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

கனவுகள் வெற்றி பெற
வேண்டுமானால் முதலில்
உள்ளத்தில் நம்பிக்கையை
விதைக்க வேண்டும்..!

Advertisement