Advertisement

12
மனமில்லா வாழ்த்துக்கள்
சாபங்களாகலாம்..
வெறும் வாய் வார்த்தை
சாபங்கள்
என்ன செய்யும்.,
விதி விட்டு வைத்து
விளையாட வைக்கும்.,

             நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சற்று தாமதப்படுத்தி தான் கிளம்பினர்.

        “ஏன்” என்று கேட்டான்.

           நீதா  பெற்றோரும் சரியான நேரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று கணக்கிட்டதாக சொன்னான்.

          நீதா செல்லிலிருந்து அவளது தம்பிக்கு மெசேஜ் செய்ய., அவனும் பிரணவ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக பதில் மெசேஜ் செய்தான்.

        ‘அக்கா நான் கொஞ்ச நேரம் கழிச்சு மெசேஜ் பண்றேன்.,  அப்பா உன்னை திட்டி கிட்டே தான் கார் ஓட்டிட்டு இருக்காரு., நான் பின்னாடி உட்கார்ந்து இருக்கேன்., என்னால மெசேஜ் பண்ண முடியாது’., என்று மெசேஜ் செய்தவன் நல்ல பிள்ளை போல அமர்ந்து கொண்டான்.

       இவர்கள் போய் பிரணவ் வீட்டின் காலிங் பெல்லை அடிக்க திறந்த அம்மாவும் அப்பா., பெரியம்மா பெரியப்பா என ஆளாளுக்கு கத்த துவங்கினர்.,

         பிரணவ் ன்   நண்பன் தான் “ப்ளீஸ் ஒரு நிமிஷம் இருங்க, எதுவா இருந்தாலும் உள்ள கூப்பிட்டு பேசுங்க., இது அப்பார்ட்மெண்ட் இங்க  உள்ளே இருந்து பேசினாலே   வெளியே கிளீனா  கேட்கும்.,  அதனால அவன் உள்ள வரட்டும்., உள்ள வந்ததுக்கப்புறம் பேசுங்க”.. என்று சொன்னான்.,

      அனைவரும் அமைதியாக ஆளுக்கு ஒருபுறமாக  முகத்தை திரும்பிக் கொண்டு நின்றனர்.

          எதுவும் சொல்லாமல் அவளை உள்ளே அழைத்து வரப்போகும் போது நண்பன் மனைவி தான்., ,”ஒரு நிமிஷம் இருங்க நான் ஆரத்தி கரைச்சுட்டு வர்றேன்., அதுக்கப்புறம் உள்ள வாங்க”., என்று சொன்னாள்.,

            முறைப்படி முன் வாசல் வழியே வந்தா.,ஆரத்தி எல்லாம் எடுக்கலாம்., இப்படி தெரியாம கல்யாணம் பண்ணிக்கிற வங்களுக்கு ஆரத்தியே தேவை இல்லை”., என்று பெரியம்மா பேசத் தொடங்கும் போதே

            பெரியப்பா “வாய மூடு” என்று சொன்னார்., “உனக்கு பிடிக்கலைன்னா பேசாத., எனக்கும் தான் பிடிக்கல., நம்ம தான் கிளம்புறோம் ன்னு சொல்லி எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சு..,  கிளம்புவோம்” என்று சொன்னவர்.,

         பிரணவை” பார்த்து நீ இப்படி மூஞ்சில கரியை பூசி இருக்க வேண்டாம்., இதை முதலிலேயே சொல்லி இருக்கணும்”., என்று சொன்னவர்.

             அவன் பாட்டியை திரும்பிப் பார்த்து “எல்லாம் உங்களால தான் மா.,  நீங்க தான் அவன் இஷ்டப்படி எல்லாம் விட்டீங்க.,  இப்ப பாருங்க எங்க வந்து நிக்குது ன்னு,

           என்ன இப்ப நம்ம குடும்பத்துல இதே பொழப்பா போகும்., எல்லாருக்கும் வெளியே தெரிஞ்சா வீட்டில் உள்ள சிறுசுலிருந்து எல்லாருக்கும் தைரியமா போகும், எல்லோரும் என்ன நினைச்சுட்டு இருக்காங்க  ன்னு வீட்டுக்கு போய் எல்லாரையும் விசாரிக்க சொல்லணும்., எல்லாரோட நடவடிக்கையும் எப்படி இருக்குனு பார்க்கனும்.,

             இவன் வெளியே படிச்சிருக்கான்.,  வெளியே வேலைப் பார்த்தான்., இவனுக்கு நல்லது கெட்டது தெரியும்  ன்னு சொல்லி என் வாயை அடச்சிடலாம்., ஆனால் ஊர்ல என்ன சொல்லுவீங்க”., என்று சொல்லி அப்பாவும் பெரியப்பாவும் மாற்றி மாற்றி பேசினர்.

         பாட்டி அமைதியாக அமர்ந்து இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தவர்., அமைதியாக அமர்ந்திருந்தார்.

         அதற்குள் உள்ளே சென்றவள்.,  ஏற்கனவே தேவையான பொருட்களை எடுத்து வந்து இருக்க.,  அவற்றை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து சூடம் ஏற்றி.,ஆரத்தி சுத்தி வீட்டிற்குள் அழைத்தாள்.

          அவர்கள் உள்ளே வர போக., “மறந்திறாம இரண்டும் பேரும் வலது காலை வைத்து உள்ள போங்க” என்று சொல்லி விட்டு அதை கொட்டுவதற்காக சென்றாள்.,

       அவன் நண்பன் கையில் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்க.,  வீட்டிற்குள் வந்தவுடன் நண்பன் தான் லேசாக கதவை சாத்தி வைத்தான்.,

   “உங்க வீட்ல இப்படித்தான் வளர்த்தாங்களா” என்று பிரணவ்  அம்மா கேட்டார்.

       எதுவும் சொல்லாமல் குனிந்தபடி நின்றவளின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் பிரணவ்.,

         “அம்மா என்னையும் அப்படி தான் வளர்த்து இருக்கீங்க., எனக்கு புடிச்சிருக்கு.,  நான் தான் புரோபோஸ் பண்ணேன்”., என்று சொல்லிக் கொண்டிருக்கும்  போதே நீதாவின் அம்மா அப்பா தம்பியோடு வந்து சேர்ந்தனர்.,

        வந்த உடனே  நீதா வின் அப்பா நேராக நீதா வை அடிக்க சென்றார்.,

           நீதாவை இழுத்து தன் முதுகின் பின்னே மறைத்தபடி.,  அவரிடம் நேராக நின்றவன்.,

          ” காலைல கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் அவ உங்களுக்கு பொண்ணு., இப்ப அவ என்னோட ஒய்ஃப்., இவளை அடிக்கிறதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது”., என்று சொன்னான்.

     “ஏண்டி உன்னை எல்லாம் வளர்த்தேன்”., என்று அவள் அம்மா பேசத் தொடங்கும் முன்னே.,

       “நீ வாய மூடு., இப்போ உன்னை தான் அடிக்கணும்., நான் திட்டுறதுக்கு முன்னாடி நீ திட்டி அவளை காப்பாற்றி விடலாம் என்று பார்க்கிறாயா”., என்றவர்.

     “உன்ன தலைமுழுகியாச்சி ன்னு,  நினைச்சுக்கோ எப்படி எல்லாம் உனக்கு பார்த்து பார்த்து செஞ்சதுக்கு தானே இப்படி பண்ணிருக்க” என்று கேட்டார்.

               “ஒரு வாரமா வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிச்ச அப்பவும் சரி., இந்த வாரம் கண்டிப்பா கல்யாணம் பேசியே ஆகணும்.,  மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து பார்க்க வர்றாங்க ன்னு சொல்லும் போது கூட அமைதியா கமுக்கமா இருந்துட்டு., இப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக  தான் இத்தனை நாள் கமுக்கமாக இருந்தியா.,  நல்ல பிள்ளை மாதிரி நடித்து., எல்லாமே நீங்க கரெக்டா பிளான் பண்ணி செய்து இருக்கீங்க.,  உங்கள நம்பியதிற்கு நீங்க எங்க மூஞ்சில தான் கரியைப் பூசிட்டீங்க”. என்று நீதா அப்பா சத்தம் போட்டார்.,

          அந்தப்பக்கம் பிரணவ் ன் அம்மா “நீங்க பொம்பள பிள்ளைய ஒழுங்கா வளர்த்து இருந்தா,  என் பையன் எதுக்கு இப்படி போறான்”., என்று கத்தினாள்.

              “உங்க பையன் தானே வந்து ப்ரொபோஸ் பண்ணதா சொல்லிட்டு இருந்தான்., அப்ப நீங்க தானே ஒழுங்கா வளர்த்து இருக்கணும்” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சண்டை இட்டு கொண்டு இருந்தனர்.

         பிரணவ் வின் நண்பன் தான்.,  “நீங்க ரெண்டு பேரும் சண்டை போடவா கூப்பிட்டாங்க., பேசுறதா இருந்தா பேசுங்க., அவங்களை ஆசிர்வாதம் பண்ணுறது னா பண்ணுங்க”.,  என்று சொன்னான்.

          “எதுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்., எதுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கிறேன்.,  அவன் இஷ்டத்துக்கு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்., அவன் எப்படி போனாலும் எங்களுக்கு அதைப்பற்றி அக்கறை கிடையாது.,  நாங்க கிளம்புறோம்” , என்று சொல்லிவிட்டு பிரணவ் அம்மாவும் பெரியம்மாவும் அவர்களுடைய உடைமைகளை எடுத்து வைத்தபடி  கிளம்ப தயாராகினர்.

             நீதா வின் தம்பி இருவரையும் மாறி மாறி பார்த்தபடி நிற்க.,  நீதாவின் அப்பா தான் “இனிமேல் இவ எக்கேடு கெட்டாலும்., எனக்கும் பிரச்சனை கிடையாது.,  இதோ அவங்க முன்னாடி தான் சொல்லிட்டு போறேன்., எப்படியும் போங்க.,  படிக்க வச்சு உங்களை வளர்த்ததுக்கு.,  எங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துடிங்க.,

    பிள்ளையா உன்னை எல்லாம் பெத்து  நல்லா  பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்தற்கு., பதிலா படிக்க வைக்காம ஊரிலேயே இருக்க வச்சு இருக்கனும்., இல்ல +2 முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி அனுப்பியிருக்கனும்., அப்படி அனுப்பி இருந்தா இந்த லவ்வு எல்லாம் வந்துருக்காது இல்ல”., என்று சொல்லிவிட்டு அவர் மனைவியை பார்த்தவர் “வா”., என்று அதட்டலாக அழைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

       கிளம்புமுன் நீதாவின் அம்மா நீதாவைப் பார்த்த படியே வெளியே சென்றார்., நீதாவின் தம்பி தான் செய்கையில் போன் செய்வதாகச் சொல்லிவிட்டு சென்றான்.

        பெரியப்பா பெரியம்மா அம்மா அப்பா என்று ஆளாளுக்கு திட்டி விட்டு கிளம்ப தொடங்க அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன்.,

     கிளம்பும் நேரம் அருகில் வந்து “டேய் உனக்காக சப்போர்ட் பண்ணி படிப்புக்காக அனுப்பினேன்., உனக்காக சப்போர்ட் பண்ணி வேலைக்காக அனுப்பினேன்., கடைசில நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி., இப்ப எல்லாருமா சேர்ந்து என்னை திட்டுவதற்கு கொண்டு வந்துட்ட.,

        சரி எது எப்படி போனாலும்., உன்னை நம்பி வந்தவளை நல்லபடியா காப்பாத்து”., என்று சொன்னார்.

         தாத்தா நான் அருகிலிருந்து “இத தான் சொன்னேன்., இத தான் சொல்றேன்.,  ஒவ்வொரு தடவையும் நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.., சத்தமே இல்லாமல் இருந்துட்டு அவனுக்கு எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ற மாதிரி பண்றது நீ தான்”.,  என்று பாட்டியை திட்டிக் கொண்டிருந்தார்.

               அதன்பின்பு ஆளாளுக்கு திட்டினாலும் அவனிடம் யாரும் பேசவில்லை.,

     அவன் நண்பனிடம் “நான் பார்த்துப் பார்த்து வளர்த்ததுக்கு என்ன காரியம் பண்ணியிருக்கான் பார்த்தியா..,  இத என்னன்னு சொல்றது., இன்னைக்கு பொண்ணு வீட்ல நாங்க வர்றதா சொல்லி இருந்தோம்., கடைசில மூஞ்சிலே கரியை புசிட்டான்  இல்லை”.,  என்று அப்பாவும் பெரியப்பாவும் மீண்டும் பேச்சை தொடங்கினார்கள்.,

        அப்போதும் யாரும் எதுவும் பேசாமல் இருக்க., நல்ல கல்லுளி மங்கன் மாதிரி இருந்த., அப்பவே யோசித்து இருக்கனும்., அமைதியா இருந்தே கழுத்தை நெறிக்க நினைச்சிட்டு இருந்திருக்க”., என்று கத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

         “இஷ்டத்துக்கு வாழுறதெல்லாம் வாழ்க்கையாடா., இது தான் வாழ்க்கை ன்னு கட்டுப்பாடு வைச்சு வாழுறான் பாரு., அதுக்கு பேரு தான் வாழ்க்கை., நினைத்தபடி எல்லாம் வாழ முடியாது.,  குடும்பம் ன்ற ஒன்னு இல்லாம ரெண்டு பேரும் தனியே வாழ்ந்து கிழிக்கிறத பார்க்க தான் போறீங்க., அதை நாங்க  பாக்க தானே போறோம்”., என்று சொல்லிவிட்டு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன்.,  அமைதியாக அவர்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

             அவர்கள் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம்., அவன் நண்பன் தான் “ஏதோ இந்த அளவுக்காவது பேசுவதோடு  நிறுத்தினாங்களே ன்னு நெனச்சுக்கோ.., எப்படியோ  சாபம் கொடுக்கலை”., என்று சொன்னான்.,

           “இல்லடா ரெண்டு பேருமே மறைமுகமாக சாபம் கொடுத்துட்டு தான் போறாங்க., அவ வீட்ல ஏமாத்திட்ட அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு.,  நீ எப்படி வாழப்போற ன்ற மாதிரி சொல்லிட்டு போறாங்க.,

     அதே மாதிரிதான் எங்க வீட்டிலயும் குடும்பமே இல்லாம ரெண்டு பேரும் எப்படி தனியா வாழப் போறீங்க ன்னு சொல்றாங்க.,  ஆனா எங்கள ஏத்துக்கணும் ன்னு தோன்றவே  இல்ல தானே”., என்று சொன்னான்.

        ” டேய் இந்த அளவுக்கு நிறுத்தினாங்களே ன்னு நினைத்து சந்தோஷப்படு., இதை  விடு”., என்று சொல்லி நண்பன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

        அதை தான் நீதாவும் நினைத்துக் கொண்டிருந்தாள்., ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக ஹாலிலேயே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.,

      இவர்கள் யாரும் பேசும்போதும் ஒரு வார்த்தை கூட வாயை திறந்து பேசவில்லை.,

           பின்பு நண்பன் தான் “ஓகேடா எதையும் போட்டு குழப்பிக்காத நைட் சாப்பாடு வெளியே ஆர்டர் பண்ணிக்கிரியா., இல்ல நான் ஆர்டர் பண்ணிட்டு போகவா”.,  என்று கேட்டான்.,

         “இல்லடா நான் பார்த்துக்கிறேன்”.,  என்று சொன்னான்.

      “ஓகேடா கிளம்புறோம்”., என்று சொல்லி விட்டு அவர்கள் கிளம்பிப் போகும் போது அவன் தான் “கொஞ்ச நேரம் இருங்க டா.,  ஈவினிங் டீ குடிச்சிட்டு போலாம்”.,  என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றான்.

        அனைவருமே மதியம் உணவு உண்டு இருந்ததால் பாத்திரங்களில் இருந்ததை எடுத்து வைத்துவிட்டு அம்மாவும் பெரியம்மாவும் ஏற்கனவே கழுவி வைத்திருந்தார்கள்., அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்தவன் வேண்டாம் அவர்கள் செய்தது எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து கொண்டான்.

         வேலைக்கு எப்பொழுதும் வரும் பெண்மணிக்கு போன் செய்து “ஈவினிங் கொஞ்சம் வந்து கிளின் பண்ணி எல்லாம் கழுவி போட்டுட்டு போங்க” என்று சொன்னான்.

அந்த பெண்மணியும் சரி என்று சொல்லி இருந்தார். ஈவினிங் வேலைக்கு வரும் அம்மா வந்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து., வீட்டையும் சுத்தம் செய்து விட்டு கிளம்பினர்.

         நண்பர்களும் டீ குடித்த பின் அங்கிருந்து கிளம்பினர்., பின்பு நீதா வும் பிரணவ்  மட்டும் இருக்க.,

       பிரணவ்  சோபாவில் சாய்ந்து அவன் அப்படியே தலையை சாய்த்து அமர்ந்திருந்தான்.,  வந்தவன் இதுவரை வேஷ்டி கூட மாற்றாமல் அப்படியே இருந்தான்.,  நீதா வும் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.,

       இருவருக்கும் தெரியும் இது தான் வாழ்க்கை என்று.,  அதே நேரம் நீதா வின்  அலைபேசி அடிக்க எடுக்கும் போதே தம்பி தான் என தெரிந்து எடுத்தாள்.,

             “சொல்லு டா” என்றாள்.

        “அக்கா கல்யாணம் பண்ணிக்க போறனா., என்ட்ட  சொல்லி இருக்கலாம் இல்ல”.,  என்றான்.

          “இல்லடா பண்ணிட்டு சொல்லனும்னு நினைச்சேன்., ஏன்னா உனக்கு எப்படி தெரிஞ்சது ன்னு தெரியாது”., என்று சொன்னவள்.
“நீ என்ட்ட சொன்ன தான் இருந்தாலும் ஒரு சின்ன டவுட் ல தான் பார்த்தேன்., வேற ஒன்னும் இல்ல”.,  என்று சொன்னாள்.

         “சரி நீ ஹேப்பியா இருந்தா ஓகே தான் விடு.,  அப்பாதான் கத்திக்கிட்டே இருக்காரு.,  அம்மாவைத் திட்டிக்கிட்டே இருக்காரு.,  அம்மா தான் காதிலேயே வாங்காத மாதிரி உட்கார்ந்து கிட்டு இருக்காங்க.,  நீ எதைப் பற்றியும் கவலைப்படாத.,  நீ நார்மலா இரு.,  உனக்கு வேற ஏதும் எடுத்துட்டு வரணும் னா சொல்லு., நான் அம்மாட்ட சொல்லி எடுத்து வாங்கிட்டு வரேன்”.,  என்று சொன்னான்.,

      “எதுவும் வேண்டாம்”., என்று சொன்னவள் போனை வைத்து விட்டாள்.

     பிரணவ் கண்ணை திறந்து பார்க்க பிரணவ் இடம் சொன்னாள்.,

                 உன் இஷ்டம் தான் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அவனும் எதுவும் சொல்லவில்லை.,

      இருவர் மட்டும் இருந்த வீட்டில் வீடும் அமைதியாயிருக்க.,  இத்தனை நாள் அலைபாய்ந்த அவர்கள் மனமும் இன்று திருமணத்தினால் அமைதி அடைந்திருந்தது.,

           இதை பெரியவர்கள் புரிந்து கொள்வார்களா என்ற எண்ணத்தோடு தான் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

    நம் உறவுகள் தானே என்று
நம்பிக்கை வைக்காதீர்கள்
சந்தர்ப்பம் கிடைத்தால்
நமக்கு துரோகம் செய்ய
எதிர் பார்த்து கொண்டு
இருப்பார்கள்..!

Advertisement