Advertisement

11

வரமாய் கிடைப்பது
வாழ்க்கை துணை
மட்டுமல்ல…
நல்ல நண்பர்களும்
தான்.,

               இருவரும் கிளம்பி முடித்ததும் நண்பர்களோடு   ஏற்கனவே வெளியே வந்து காத்திருந்தனர்.

                நீதாவும் அப்போது தான் வெளியே வந்தனர்., அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

        அருகிலிருந்த நண்பனும் “டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தான் டா., ஏன்டா இப்படி பாக்குற.,  யாரையோ பாக்குற மாதிரி பார்க்குற”., என்று சொன்னார்.

               தலையை உலுக்கிக் கொண்டவன்., “ச்சே சும்மா தாண்டா., அவளை இந்த மாதிரி பட்டு புடவையில் எல்லாம் பார்த்ததே இல்லை”.,  என்று சொன்னான்.

           அவளும் சிரித்துக் கொண்டே குனிந்து கொண்டாள்., அவன் முதல் முதலாக வேஷ்டியில் இருப்பதை லேசாக நிமிர்ந்து பார்த்தவள் குனிந்து கொண்டாள்.,

          நண்பனின் மனைவி தான்., “சும்மா பாருங்க நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்., பார்த்துக்கோங்க”., என்று சொன்னாள்.

           வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே குனிந்து கொண்டவளை பார்க்கும் போது பிரணவ்., ‘இதுதான் இவளுக்காக எத்தனை திட்டு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்., ஏற்றுக் கொள்ளலாம்’., என்று தோன்ற தொடங்கியிருந்தது.

        வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டு தான் இருக்கும்., நாம் தான் அதில் கிடைக்கும் நல்லவைகளையும் கெட்டவைகளை பிரித்தறிய வேண்டும்.,  அப்படித்தான் போகிறபோக்கில் தனக்கு கிடைத்த வாழ்க்கையும்.,

        தனக்கு கிடைத்த ஒரு நல்ல பெண்ணையும் கைவிட துணியாமல் தான்., பிரணவ் இந்த காதல் திருமணத்தில் குடும்பத்தை விட்டு நண்பர்களோடு இன்று ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்கிறான்.,

        அவனுடைய நேரம் வரவும் நண்பர்கள் புடைசூழ அவள் கழுத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த திருமாங்கல்ய செயினை அணிவித்தான்.,

          அவன் நண்பனும்.,  நண்பன் மனைவியும் சென்று கோயிலில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கி வந்திருந்தனர், அதை சந்தோஷமாக அவள் கழுத்தில் அணிவித்து அதில் சுற்றியிருந்த மஞ்சள் கயிறை அவளது கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு அவளை தன் மனைவியாக., தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.,

            ஏழு வருட காதலுக்கு கிடைத்த பலன் அல்லவா., என்று மனதிற்குள் அவள் நினைத்தாலும் தன் கழுத்தில் விழுந்த பொன் தாலியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண் கலங்கியது., இருந்தாலும் கட்டுப்படுத்தி கொண்டவள்.,

         இதே  இது இரண்டு குடும்பத்தோடு திருமணம் நடந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்தாலும்.,

           வீட்டில் இருப்பவர்கள்  நடந்து கொண்ட  முறைகள் அவர்களை இந்த முடிவிற்கு தள்ளியது என்பதை நினைத்துக் கொண்டவள் அமைதியாகிப் போனாள்.,

          அதன்பிறகு இருவரும் மாலை மாற்றிக் கொண்டு., ரிஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்திட்டு தாங்கள் சட்டப்படியும் வாழ்க்கை துணை ஆகி விட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.,

            அதன்பிறகு இரண்டு தரப்பிலும் நண்பர்கள் குழுக்கள் சாட்சிக் கையெழுத்திட நல்லபடியாக முடிந்தது., அருகிலுள்ள உணவகத்திற்கு செல்லலாம் என்று நினைக்கும் போதே அவன் நண்பனின் மனைவி தான்., “அதெல்லாம் இல்ல.,  வாங்க எங்க வீட்டுக்கு வாங்க., முதல்ல எங்க வீட்டுக்கு போறோம்., எங்க வீட்ல போய் விருந்து சாப்பிட்டு அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு போன் பண்ணி சொன்னா போதும்., இப்பவே போன் பண்ணி சொல்லி பிரச்சனை வேண்டாம்., நீங்க வாங்க”., என்று இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

              அங்கு வீட்டிற்கு சென்றால் ஹோட்டலிலிருந்து தன் நண்பன் உணவை வர வைத்திருத்தான்.

       “டேய் என்னடா இதெல்லாம்”., என்று கேட்டான்.

             கல்யாணம் னாலே சாப்பாடு போடாமலா., கல்யாணத்தில் முக்கியமே சாப்பாடு தான் டா., என்னடா”., என்று பிரெண்ட்ஸ் ஐ பார்த்து கேட்டான்.

        எல்லாரும் “ஆமா” என்று ஒன்று போல கத்தினார்கள்., அதன் பிறகு அவன் வீட்டில் வைத்து உணவை உண்ட பிறகு தான் நீதாவின் அலுவலக தோழியும் கிளம்பினாள்.,

             நீதா அவளிடம் விடுப்பு பற்றி  சொல்ல., “நான் பார்த்துகிறேன்., நீ உன் லைஃபை என்ஜாய் பண்ணு”., என்று சொல்லி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு “அவளை பார்த்துக்கோங்க” என்று பிரணவ் டம் சொல்லி இருவரிடமும் சேர்த்து விடைபெற்றுக் கிளம்பினான்.,

         இருவரும் ஏற்கனவே அணிந்திருந்த உடைகள் ஒரு பையில் இருக்க., அதை அவர்கள் வீட்டில் வைத்து விட்டு இருவரும் சேர்ந்து உணவருந்தி விட்டு அமர்ந்திருந்தனர்.

             “சரி டா மாப்ள., இப்ப வீட்டுக்கு போன் பண்ணி சொல்லு”., என்று சொன்னான்.

                சற்று பதட்டமாக இருந்தாலும்.,  தன்னை அமைதிப்படுத்தி கொண்டு அதன் பிறகே போன் செய்தான்.,

        அவன் போன் முயற்சி செய்யும் போதே நண்பனின் மனைவி நீதாவிடம் பேக்கை கொடுத்தாள்., “என்ன” என்று கேட்டாள்.

           “உனக்கு ரெண்டு செட் சுடிதார்., இரண்டு செட் சாரி எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்., நேத்து உனக்கு கல்யாண பிளவுஸ் தைக்கும் போது.,  இந்த பிளவுசையும் தச்சு வாங்கிட்டேன்.,பின்ன டிரஸ்க்கு எங்க போறது., அத தவிர நைட்டி எல்லாம் இருக்கு., தேவையான எல்லாமே இருக்கு”., என்று சொன்னாள்.

            நீதா “தேங்க்ஸ் என்றாள்”.,

           “தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவியா என்ன.,  நான் டெலிவரி டைம் ல கஷ்டப்படும் போது., இவரு ஊரிலே கிடையாது.,  அந்த நேரத்துல அண்ணா தான் வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க.,  ஏன் நீங்க எங்க வீட்ல இருந்து எல்லாரும் வர்ற வரைக்கும் ஹாஸ்பிடல்ல துணையா இருந்தாங்க.,

          அந்த நேரத்துல அவங்க வந்து யாரோ ஒருத்தரா  நினைக்கலை தானே., அவங்க  வீட்டில் உள்ள ஒருத்தி மாதிரி தானே நினைத்து என்னை டெலிவரிக்கு அட்மிட் பண்ணாங்க., சிசேரியன் போறதுக்கு  முன்பு வீட்டில் உள்ள யாராவது வரணும் சொல்லும் போது கூட இவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு., அண்ணன் ன்னு சொல்லி கையெழுத்து போட்டாங்க., அப்போதெல்லாம் தங்கை ன்னு சொன்னது சும்மாவா”.,என்று சொன்னவள்.

      “அப்புறம் வீட்டு பர்மிஷன் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டோம்., நாத்தனார் கொடுமை எல்லாம் இருக்காது அப்படி எல்லாம் நினைக்க கூடாது.,  நான் இருக்கேன் வருவேன்., அப்பப்ப வந்து கொடுமை படுத்துவேன்”., என்று சொன்னாள்.

             “சொல்லிட்டு தான் எல்லாரும் கொடுமை படுத்துவாங்களா”., என்று கேட்டாள்.

           “நான் சொல்லிட்டு தான் செய்வேன்., எதை செஞ்சாலும் சொல்லுவேன்”., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தாள்.

          அதே நேரம் அவனுக்கு லைன் கிடைக்க இதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தவன்., லைன் கிடைத்தவுடன் வாயில் விரலை வைத்து “சத்தம் போடாதீர்கள்” என்று சொன்னவன்.

          வீட்டிற்கு பேச அவனது அப்பா தான் போனை எடுத்தார்., “என்னடா” என்று கேட்டார்.

         “ஸ்பீக்கரில் போடுங்கப்பா”., என்று சொன்னான்.

         “கிளம்பிட்டோம் டா., நீ கார் அனுப்புறேன்னு சொன்னியே”.,  என்று சொன்னார்.

             “வெயிட் பண்ணுங்க பா., இப்ப நான் வரேன்”.,என்று சொன்னான்.

             “என்னடா திடீர்னு சொல்ற நீ வர்றயா”., என்று கேட்டார்.

        “ஆமாப்பா வர்றேன்., நான் இன்னைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்., ஏழு வருஷமா ஒரு பொண்ண லவ் பண்ணேன்., எப்படி சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தேன்., ஆனா எனக்கு இப்ப வேற வழி தெரியல.,  நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.,  இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வீட்டுக்கு வரேன் பா., போன வச்சிடறேன்”.,  என்று சொன்னான்.

           அவன்  வைக்கப் போகும் போது அப்பா “டேய் நான் சொல்றத கேளு., நீ என்ன காரியம் பண்ணிருக்க”.,  என்று கத்த தொடங்கும் போதே போனை கட் பண்ணிவிட்டான்.,

          சற்று அமைதியானவன்.,  மூச்சுவிடாமல் பேசியதால் மூச்சை இழுத்து விடவும்.,  நண்பனும் நண்பன் மனைவி மட்டுமல்ல.,  நீதாவும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.,

           நண்பன் தான்  “என்னடா இது ஸ்கூல் படிக்கிற பசங்க மாதிரி ஒப்பிக்கிற”.,  என்று கேட்டான்.

               “வீட்ல வேற மாதிரிலாம் சொல்ல முடியாது., இப்படித்தான் சொல்லி ஆகணும்”., என்று சொன்னவன் நீதாவின்  வீட்டிற்கு போன் போட்டான்.,

            நீதா வோ  “நான் வேணா பேசுறேன்” என்று சொன்னாள்.,

               “நீ பேசாம இரு நான் பேசிக்கிறேன்”., என்று சொன்னவன் நீதா வின் அப்பா போனை எடுக்க..,

          “நீதா வோட அம்மா இருக்காங்களா”.,  என்று கேட்டான்.

           நீதா வின் அப்பா “என்ன விஷயம் நீங்க யாரு” என்று கேட்டார்.

          “நான் பிரணவ் நீதா வை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொன்னான்.

            “எனது கல்யாணம் பண்ணிக்கிட்டயா”., என்று அதிர்ந்து போய் கேட்டார்.,

            “ஆமா எனக்கும் நீதாக்கும் காலையில கல்யாணம் ஆயிடுச்சு., எங்க வீட்டு அட்ரஸ் இதுதான்”., என்று சொல்லி அட்ரஸ் சொன்னவன்.,

நீதா அம்மாவையும்.,  தம்பியும் கூடிட்டு வாங்க., நான் இப்ப நீதா வை  கூட்டிட்டு வீட்டுக்கு வர்றேன்”.,  என்று சொன்னான்.,

        “என் பொண்ணை யாரை கேட்டு கல்யாணம் பண்ணின”., என்று கேட்டார்.

        நீதா மேஜர் தான்.,  25 வயசு ஆகுது.,  அவ யாரையும் கேட்க வேண்டாம்.,  நானும் கேட்க அவசியம் இல்லை”.,  என்று சொன்னான்.

           அதற்குள் நீதா வின் அம்மாவை பார்த்து., அப்பா “பொண்ணு என்ன லட்சணத்தில் வளர்த்து வச்சிருக்க பாரு., அவ  ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா”.,  என்று கத்துவது கேட்டது.

       அதற்குள் நீதாவின் தம்பியின் குரல் கேட்டது.,

             “அம்மா என்னம்மா.,  சண்டை”,  என்று கேட்டுக் கொண்டே வந்தான்.,

            நீதாவின் அப்பா “ஏண்டா காலையில நீ தானே ரயில்வே ஸ்டேஷனு ல ஏற்றிவிட்டேன் சொன்ன.,  அப்புறம் எப்படிடா அவனை கல்யாணம் பண்ணிட்டா ன்னு போன் வருது., போய்ப் பார்த்துக்கறேன்” என்று கத்தினார்.

         நீதா ம்மா அவசரமாக.,  “நான் பேசுறேன் அவட்ட” என்று சொன்னார்.,

             “நீ வா உனக்கு தான் முதல்ல இருக்கு., என்ன லட்சணத்தில் பிள்ளைகளை வளர்த்து இருக்க”., என்று கத்திக் கொண்டிருந்தார்.,

                  நீதா தான் அவன் முகத்தை பார்த்தபடி மெதுவாக போனை கட் பண்ண விடாமல் போனை வாங்கி வைத்திருந்தாள்.,

               அங்கு என்ன பேசுகிறார்கள் என்று தெரிய வேண்டுமே என்று., ஆனால் அவன் வாங்கி கட் செய்யவும்.,

         அவன் வீட்டிலிருந்து அழைப்பு வர., போனை எடுத்து என்னவென்றான்.

         “டேய் நாங்க ஊர் கிளம்புறோம்., நீ எப்படியோ எக்கேடும் கெட்டுப்போ”., என்று சொன்னார்.

           நீங்க அங்க  இருக்கீங்க., நான் வந்ததுக்கு அப்புறம் எங்களை ஆசீர்வாதம் பண்ணினாலும் சரி., திட்டினாலும் சரி.,  எதை செய்வதானாலும் செஞ்சுட்டு அதுக்கப்புறம் ஊருக்கு போங்க”., என்று  அவனும் சத்தமாக சொன்னான்.

         அங்கு தாத்தா தான் பாட்டியை திட்டும் சத்தம் கேட்டது., “நீ காலைல அவனுக்கு திருநீறு பூசி விடும் போதே எனக்கு சந்தேகமா இருந்துச்சு.,  அப்போ உனக்கு தெரியும் தானே”., என்று கேட்டார்.

        பாட்டியோ  “எனக்கு எல்லாம் ஒன்னும் தெரியாது” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.,

      வீட்டில் பேசினது அனைவருக்கும் கேட்டாலும் யாரும் எதுவும் சொல்லாமல் கிளம்பத் தொடங்கினர்.,

    அவன் நண்பனும்., நண்பன் மனைவியும் வீடு வரை கூட வந்து விட்டு விட்டு வருவதாக கூடவே கிளம்பினார்கள்.

      நீதாவின் கையை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன்., “என்ன நடந்தாலும்., உனக்கு நான் இருக்கேன்., திட்ட தான் செய்வாங்க., ரெண்டு வீட்டிலேயும் திட்டாம எல்லாம் இருக்கமாட்டாங்க பரவாயில்லைன்னு பொறுத்துக்கோ சரியா”., என்று கையை அழுத்தினான்.

         அவளும் அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு., “தெரியும் அடியே விழுந்தா கூட வாங்கிக்கலாம்”., என்று சொல்லி விட்டு அவன் கையைப் பிடித்தபடியே அங்கிருந்து கிளம்பினாள்.

இன்பத்திலும் சரி துன்பத்திலும்
சரி நாம் நினைவில் கொள்ள
வேண்டியது ஒன்றே ஒன்று
மட்டும் தான்.. இந்த நிமிடம்
நிரந்தரமில்லை இதுவும்
கடந்து போகும்..!

Advertisement