Advertisement

10

காதல் நோய் தீர
கல்யாணம்
தீர்வாகும்.,
மருந்து கிடைத்த
பின்போ
காதலே மறந்து
போகும்.,

      இவன் வந்து சேரும் போது ஏற்கனவே உள்ள நீதா கிளம்பிக் கொண்டிருந்தாள்.,

           அவன் நண்பன் வெளியே காத்திருந்தான்., அப்பாடி வந்தாச்சா., அவங்க அப்பவே வந்தாச்சு.,  அவங்க பிரண்டு வந்து கூட இருக்காங்க., இதுக்குள்ள கிளம்பி இருப்பாங்க., நீ இந்தப் பக்கம் வா”., என்று ஆண்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றவன்., “கிளம்பு” என்று அவசரப் படுத்த தொடங்கியிருந்தான்.,

          “என்னடா இன்னைக்கு அதிசயமா திருநீர் எல்லாம் பூசி இருக்க”., என்று கேட்டான்.

       “தெரியலடா பாட்டி பிடிச்சு பூசிவிட்டாங்க., பாட்டி மனசுல என்ன நினைச்சாங்க ன்னு தெரியல.,  ஆனா எனக்கு ஒரு டவுட்., பாட்டிக்கு சந்தேகம் வந்து இருக்குமோனு.,

          ஆனால் சந்தேகம் வந்தா இதுக்குள்ள கேட்டிருப்பாங்க., வீட்டில் ஏதாவது சொல்லி இருப்பாங்க.,  யாராவது வாய்திறந்து இருப்பாங்க.,  ஆனா ஒருத்தரும் வாய் திறக்கலை அப்படிங்கும் போது எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு., இருந்தாலும் பார்த்துக்கலாம்., ன்னு சொல்லி கிளம்பி வந்துட்டேன்”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

            “தப்பு டா மகனே., பாட்டி மட்டும் இன்னைக்கு வாய்திறந்து சொல்லி இருந்தா நீ வந்திருக்க முடியாது., ஆனாலும் பாரேன் பிளஸ் பண்ணி அனுப்பி இருக்காங்க”.,  என்று பாட்டியை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

          “எங்க பாட்டி அப்படி சாதாரணமா எல்லாம் எடுக்காத.,  எங்க பாட்டி இருக்க போய் தான் நான் சென்னையில் வந்து படிக்கவே முடிஞ்சிடுச்சு., ஏன் ஐடி கம்பெனியில் வேலை பார்க்க முடிஞ்சுச்சு., இல்லாட்டி ஊர்ல உள்ள காலேஜ்ல படிச்சிட்டு.,

            அங்கேயே பிசினஸ் பாத்துட்டு அப்படியே உட்கார்ந்து இருப்பேன்., இங்க வந்திருக்க மாட்டேன் டா., இன்னைக்கு இங்க வந்து நின்றிருக்க மாட்டேன்”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

          “அப்ப முழுக்க முழு காரணம் பாட்டி தான் ன்னு சொல்லு., பாட்டி பயங்கரமான ஆளுடா., ஏதோ ப்ளான் பண்ணி தான் உன்னை பேக் பண்ணி அனுப்பி இருக்காங்க ன்னு நினைக்கிறேன்”., என்று சொன்னான்.,

             எனக்கு அடிக்கடி தோணும்., பாட்டி மட்டும் அன்னைக்கு அனுப்பலை னா., இன்னைக்கு  நான் அப்படின்னு தோணும்., என் லைஃப்ல வேற மாதிரி மாறி இருக்கும் ன்னு தோன்றும்”., என்று சொன்னான்.

      “அது என்னமோ உண்மைதான் டா.,  ஆனா விதியின் ஒன்னு இருக்கு பாரு.,  என்ன நடக்கனும் ன்னு விதித்திருக்கும்., அதுபடி தான் எல்லாமே நடக்கும்., நீ அப்படி யோசிச்சா உனக்கு இப்படி தான் நடக்கனும்னு இருந்திருக்கு.,

          பாட்டியால தான் உனக்கு எல்லாம் கிடைக்கனும் ன்னு இருந்திருக்கும்னு கூட யோசிச்சி பாரு”., என்று சொன்னான்.,

             “ம்ஹூம்., பாருடா இன்னைக்கு நான் இப்படி போய் நிக்க போறேன்.,  அப்போ பாட்டி தான் சண்டை போடும்”., என்று சொன்னான்.

         “டேய் தப்பாவே யோசிக்காதே., அதுவும் காரண காரியம் இல்லாமல் பாட்டி பண்ண மாட்டாங்க”., என்று நண்பன் சொன்னான்.,

        “உனக்கு தெரியாதுடா., எங்க பாட்டி பயங்கரமான ஆளு.,  பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவாங்க.,  நல்ல  கிள்ளி விட்டுட்டு உக்கார்ந்து வேடிக்கை பார்க்கும் பாரேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

               “சண்டை நடக்கும் நம்பிக்கையில் தான் கல்யாணம் பண்ண வந்து இருக்க அப்படி தானே”., என்று கேட்டான்.,

          “எந்த வீட்டில் தான் லவ் மேரேஜ் பண்ணிட்டு போய் நின்னா ஏத்துக்குவாங்க.,  எல்லா வீட்லையும் சண்டை போட தான் செய்வாங்க.,  என்ன பெருசா போக விடாமல் பார்த்துக் கொண்டாலே தப்பிச்சிரலாம்”.,  என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

                  சற்று நேரம் அமைதியாக கிளம்பிய கொண்டிருந்தவன்., தன் நண்பனை பார்த்து “எங்க வீட்டுல விட., அவங்க வீட்ல பயங்கரமா சண்டை வரும்னு நினைக்கிறேன்.,  என்ன பிரச்சனை வரப் போகுது ன்னு தெரியல.,  பேஸ் பண்ணுவோம் எதிர்பார்த்து தான் இருக்கோம்.,  ரெண்டு பேரும் அவங்க சம்மதத்துக்காக தான் இத்தனை நாள் வெயிட் பண்ணினோம்”.,  என்று சொன்னான்.

              “டேய் இத்தனை நாளில்., ம்ஹூம் இத்தனை வருஷம் சொல்லனும்., கிட்டத்தட்ட ஏழு வருஷமா ரெண்டு பேரும் வெயிட் பண்ணி இருக்கீங்க.,  ஆனா ரெண்டு பேரும் பண்ண தப்பு என்ன தெரியுமா., வீட்ல இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லாதது தான்.,

         அட்லீஸ்ட் கோடு போட்டு காட்டி இருந்தா கூட.,  கொஞ்சம் பிரச்சனை சண்டை., அது இதுன்னு நடந்திருந்தா கூட ஏதோ ரெண்டு பேரும் பிடிவாதமாய் இருக்கீங்கன்னு  கல்யாணம் பேசத்தொடங்கி இருப்பாங்க., ஆனா”., பெருமூச்சு விட்டவன்.,  சரி அந்த பொண்ணு தான் பயந்து போய் இருந்துச்சு., 18 வயசுல நீ ப்ரொபோஸ் பண்ண., இப்ப 25 வயசு ஆயிடுச்சு., அந்த பொண்ணு தான் சொல்லலை.,

           உனக்கு எங்கடா போச்சு அறிவு.,  வயசு தான் முப்பதாக போகுது இல்ல.,  இன்னும் சொல்லாம இருந்தா அது உன் தப்பு.,

      உங்க வீட்ல உனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருந்து கல்யாண பேச்சு எடுத்து இருக்காங்க.,  நீ அப்பவாவது சொல்லி இருக்கனும்., இல்லையா.,

        எனக்கு இப்படி ஒரு பொண்ணு புடிச்சிருக்கு.,  அந்த பொண்ணு வீட்ல வந்து பேசுங்க., ன்னு சொல்லி இருக்கனும் இல்லையா., நீ வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்., எனக்கு தெரியும் அட்லீஸ்ட் உங்க பாட்டி நல்லா பேசுவாங்க.,  நீ சொன்னா அதுக்கு சண்டை போட்டாலும் பெர்மிஷன் வாங்கி கொடுப்பாங்கன்னு உனக்கே தெரியும்., அப்படிப்பட்ட பாட்டி கிட்டே போய் நீ சொல்லி இருக்கலாம் இல்ல.,

       சொல்லி இருந்தேனா அவங்களும் உனக்காக பேசி பர்மிஷன் வாங்கி இருப்பாங்க இல்ல”.,  என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

                 “நான் நீதா காக மட்டும் தான் யோசித்தேன்., அவங்க வீட்ல இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் சொல்ல முடியும்..,

            அவளுக்கு வேலை அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காக வீட்டுல அவ பிடிவாதம் பிடிச்சிருந்தா., வேலை கிடைச்சதும்  குறைந்தது ரெண்டு வருஷம் வேலை பாக்கணும்னு சொல்லி இருந்தா.,

        இந்த நேரத்துல கல்யாணம் அப்படி இப்படி ன்னு பேசினா., வீட்டில் இதுக்குத்தானா அப்படின்னு சொல்லி சண்டை வந்துரும் ன்னு யோசிச்சேன்.,

             சரி அப்ப பண்ணதெல்லாம் பண்ணிட்டோம்., இனிமேல் என்ன பண்ண முடியும் நிதானமா முடிவு பண்ணுவோம்”., என்று சொல்லி கொண்டே இருந்தான்.

                  அப்போது நீதா கிளம்பிக் கொண்டிருந்த அறையில் நீதாவோடு வேலை பார்க்கும் தோழி நீதாவை பார்த்து “ஐயோ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா., உன்னை இதுவரைக்கும்  புடவையில் அதிகமா பார்த்ததில்லை.,  எப்பவாது புடவையில் வந்தாலும் சாதாரணமாக வருவ தெரியவே தெரியாது., ஒரு துளி மேக்கப் இல்லாம வருவ., இப்ப நீ தான் ன்னு கண்டுபிடிக்க முடியல., லேசா மேக்கப் போட்டு இருக்காங்க., நீ எப்பவும் வைக்கிறத விட கொஞ்சம் பெரிய பொட்டு வச்சுருக்காங்க..,  க்யூட்டா இருக்கு”., என்று சொன்னாள்.,

              “நாங்க ஆர் சி கிறிஸ்டின் அதனால பொட்டு வைக்கிற பழக்கம் உண்டு.,  ஆனால் சின்ன வயதில் இருந்து குட்டி பொட்டு வைச்சே பழகிட்டேன்.,

            அப்படி இருந்தால் தான் இவ்வளவு நாள் சின்ன பொட்டு வச்சு இருந்தேன்”., என்று சொன்னாள்.

              “இந்த பெரிய பொட்டுல அழகா இருக்க”., என்று சொன்னாள்.

          சிரித்துக் கொண்டே “இனி மாற்றிக்கிறேன்”., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,

           அவளுக்கு தலை நிறைய பூ வைத்து திருமணபெண் போல அலங்கரிந்து முடித்தனர்.,

        “உங்க கிறிஸ்டின் கல்யாணம் வேற மாதிரி நடக்கும் இல்லை.., நெட் எல்லாம் போட்டு அந்த லுக் வேற மாதிரி இருக்கும் இல்ல”., என்று கேட்டாள்.

         “ஆமா கொண்டை போடுவாங்க.,  இப்படி பின்னி போடமாட்டாங்க.,  கொண்டையை சுத்தி பூ வித்தியாசமா வைப்பாங்க.,  ஆர் சி கிறிஸ்டின்.,சிஎஸ்ஐ கிறிஸ்டின் எல்லாம் கிட்ட தட்ட ஒன்னு போல தான் இருக்கும்.,  ஆனா அவங்க பொட்டு வைக்க மாட்டாங்க.,  நாங்க பொட்டு வைப்போம்.,

           அது மட்டுமில்லாம எங்களில் சிலர் இந்துக்கள் மாதிரி உச்சியில் குங்குமம் கூட வைப்பாங்க., அதை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.,

           அந்த குங்குமம் வச்சு பழகுனவங்க வச்சிப்பாங்க.,  அப்புறம் பெரிய டிஃபரன்ஸ் எல்லாம் கிடையாது., ஆர் சி கிறிஸ்டின் சர்ச் ப்ரேயர் ன்னு இருந்தாலும் யாரையும் நீங்க மதம் மாறனும் ன்னு கட்டாய படுத்த மாட்டோம்., சி எஸ் ஐ வந்து கொஞ்சம் தீவிரமா இருப்பாங்க.,

        நாங்க உருவ வழிபாடு செய்யுறதால எங்களை கிறிஸ்டினே இல்ல ன்னு பேசுறவங்க கூட உண்டு., நீங்க கிட்டத்தட்ட இந்து மாதிரி தான் சொல்லுவாங்க”., என்று விளக்கிக் கொண்டிருந்தாள்.

        அதே நேரம் மேக்கப் முடிக்கவும் மேக்கப் செய்தவர்கள்.,  “இப்போ கண்ணாடில உங்களை பார்த்துக்கோங்க”., என்று சொன்னார்.

      எழும்பி நின்று பார்த்தவளுக்கு தான் தானா என்று எண்ணும் அளவிற்கு சந்தேகம் தோன்றியது.,

        அவள் பேங்க் தோழியோ.,  ஓகே ஓகே நீயே இப்படி ஒரு ரொம்ப நேரமா உன் முகம் தானா ன்னு சந்தேகமா பார்த்தா அவ்வளவு தான்., அவருக்கு டவுட்டே வந்துரும் நீதா தானே ன்னு”., என்று சொல்லி கிண்டல் செய்யவும் சிரித்தபடி அமைதியாக இருந்தாள்.

        அங்கே அவனும் வேஷ்டி கட்டி ரெடியாக “மாப்பிள்ளை வேஷ்டி கட்டின பிறகு மாப்பிள்ளை லுக் வந்துருச்சு போ”., என்று சொன்னான்.

            அவனும் சிரித்தபடி., “வீட்டுல உன் வொய்ப்  கூட்டிட்டு வர்றேன் ன்னு சொன்ன தானே” என்று கேட்டான்.,

             “அடேய்  இப்போ வந்துருவா., குழந்தை ரெடி பண்ணிக்கிட்டு வரணும் இல்ல., உங்களுக்கு என்னப்பா ரெண்டு பேர் மட்டும்.,  நாங்க அப்படியா என் வீட்ல ஒரு பொடிசு வந்து இருக்கு இல்ல., அவனுக்கு கரெக்ட் ஆ சாப்பாடு எல்லாம் வேணும் இல்ல.,  ரெடி பண்ணி எடுத்துட்டு வருவா., நீ உன் வேலையை பாரு”., என்று சொன்னான்.

               “ஆமாடா நீ எதுக்கு அவ ரெடிமேட் பிளவுஸ் எடுக்கனும் ன்னு சொல்லும் போது வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த”., என்று கேட்டான்.

         “அது ஒன்னும் இல்லடா., என் வைஃப் கிட்ட கேட்டேன்.,  அவ தைக்க கொடுக்கலாம் ன்னு சொன்னா.,  அளவு வேண்டும் சொன்னதுக்கு தான் அந்த பொண்ணோட ரெடிமேட் பிளவுஸ் மாடல் மட்டும் ஒன்னு வாங்கி கொடு ன்னு இருந்தேன்”., அதனால தான்  எல்லாத்தையும் வீட்டுக்கே கொண்டு போய்ட்டேன்., நைட்டோட நைட்டா முடிச்சு வாங்கி  கொண்டு வந்து கொடுத்தாச்சி”., என்று சொன்னான்.

             “தேங்க்ஸ் டா”., என்று சொன்னான்.,

           “நீ எதுக்குடா இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்க.,  உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதே நான் தான்., இப்ப வந்திடுவாங்க திட்டு வாங்க போறது நான் தானே., என்ன உங்க வீட்டு ஆட்களும்., அவங்க வீட்டு ஆட்களும் சாபம் கொடுக்காமல் பார்த்துக்கோ”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

             பிரண்ட்ஷிப் எல்லாருக்கும் சரியாக அமைவதில்லை., ஆனால் எனக்கு இது எல்லாமே நல்லபடியா அமைந்திருக்கு.,  வாழ்க்கையும் வரமா அமைஞ்சா அது போதும்”., என்று சொல்லும் போதே

             “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நல்லபடியா அமையும் நம்பு,  அந்த பொண்ணு உனக்காக இத்தனை வருஷம் காத்து இருந்ததே பெரிய விஷயம், நிறைய வீட்ல எல்லாம் இருபத்தி மூணு வயசுல கல்யாணம் பண்ணி விடுவாங்க,  அதுவும் அந்த பொண்ணு வீட்டுல அவளுக்கு பாங்கில் வேலையே வேண்டாம்னு சொன்னவங்க., அந்த பொண்ணோட வேலை பார்க்கணும் ன்ற கட்டாயத்துக்காக விட்டாங்க., அப்பவுமே வேலை கிடைச்சதுல இருந்து அலையன்ஸ் பாக்குறாங்க.,

            உனக்கும் தெரியும்., ஆனால் இந்த பொண்ணு அலையன்ஸ் பேச்சு எடுத்தாலே வேண்டாம் ன்னு தடுத்து நிறுத்தி இருந்தாங்க., ஆனா இந்த தடவை கண்டிப்பா தடுத்து நிறுத்த முடியாது ன்னு உனக்கு தெரிந்ததால் தான் அவசரமாக கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண”., என்று கேட்டான்.

          “ஆமா” என்று சொன்னவன்., தேங்க்ஸ் டா., இது எல்லாம் மறக்கவே முடியாது”.,என்றான்.

          “மறந்தா உன்னை விட்டுட்டு யார் போறேன்னு சொன்னா.,  ஒழுங்கா கல்யாணம் முடிஞ்சு., முப்பதாவது நாள்., 60வது நாள், நூறாவது நாள் ன்னு பார்ட்டி கொடுக்கிற., ஒவ்வொரு தடவையும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் பார்ட்டி தர்ற சும்மா ஜுஜுபி ஹோட்டலில் கொடுத்து ஏமாற்ற நினைத்த மொத்து மொத்துன்னு மொத்திருவோம்.,

        நாங்க எல்லாம் ஒரு ஆள் சம்பளம் தான்டா., உனக்கு என்ன அப்படியா நீ ஐடி சம்பளம்., உன் வொய்ஃப் பேங்க் சம்பளம், அதுனால செமையா பார்ட்டி தர்ற”., என்று சொன்னான்.

           “டேய் இதெல்லாம் நியாயமே இல்லை”., என்று சொன்னான்.,

          “டேய் நான் என்ன., உன்னை ஹனிமூன் கூட்டிட்டு போனா சொன்னேன்.,  ஹோட்டலுக்கு தானே கூப்பிட்டேன்”.,  என்று சொன்னான்.

       “அதுக்கு என்னடா பார்ட்டி வைத்து விடுவோம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

   வலிமை இல்லாதவர்கள்
அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை
வைக்கிறார்கள்.. வலிமை
உள்ளவர்கள் தன் மீது
நம்பிக்கை வைக்கிறார்கள்..!

Advertisement